Jump to content

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்: புதன்கிழமை தொடங்குகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலம், புதன்கிழமை (மார்ச் 1) சாம்பல் புதன் தினத்துடன்  தொடங்குகிறது.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூரும் வகையில் இந்தத் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சாம்பல் புதன் நாளில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும்  நடத்தப்படுகின்றன. தவக்கால நாள்களில், கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல், ஜெபம், தவம், தர்மம் ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகளும் எளிமையாக நடத்தப்படுகின்றன. மேலும், ஆலயங்களிலும், வீடுகளிலும் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


மாவட்டத்தில் கோட்டாறு மறைமாவட்டத்துக்குள்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள், சிஎஸ்ஐ திருச்சபை ஆலயங்கள், சீரோ மலபார் திருச்சபை ஆலயங்கள், மலங்கரை திருச்சபை ஆலயங்கள், மார் தோமா திருச்சபை ஆலயங்கள், ரட்சணிய சேனை ஆலயங்கள் உள்ளிட்டவற்றில் சாம்பல் புதன் வழிபாடுகள் நடைபெறுகின்றன

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, colomban said:

ஜெபம், தவம், தர்மம் ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர்.

 

42 minutes ago, colomban said:

. தவக்கால நாள்களில், கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல்,

ஆடம்பரம் தான் மனிதனின் இலக்கு  ....இதில் இந்து ,இஸ்லாம்,கிறிஸ்தவம்,பெளத்தம் ......வேறுபாடில்லை...

Link to comment
Share on other sites

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் .......

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.