• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிழலி

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி

Recommended Posts

முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்:

இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது)

முதல் பயணம்.

2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் எதிராக சுச்சாவிட நினைப்பவர்கள் கூட களையெடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

மாவிலாற்றில் பெருக்கெடுக்கத் தொடங்கிய போர் தமிழர்களின் இரத்தத்தினால் இலங்கையை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது.

விமானத்தில் வைத்தே மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன், இனி இலங்கை பக்கம் 10 வருடமாவது தலை வைத்தும் படுக்க கூடாது என.

இந்த உறுதி 2009 மே மாதத்தின் பின் வாழ்க்கையில் இனி எப்போதுமே இலங்கைக்கு செல்லக் கூடாது என்ற சத்தியமாக மாறி விட்டுருந்தது. எப்படியாவது அம்மாவையும், அக்கா குடும்பத்தினையும் கனடாவுக்கு கொண்டு வந்து விட்டால் போதும் இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று மனசுக்குள் உறுதி எடுத்திருந்தேன். ஒரு வேளை இடையில் அம்மாவுக்கு ஏதும் நடப்பினும் கூட அங்கு போகப் போவதில்லை என முடிவு செய்து இருந்தேன். இதை அம்மாவிடமும் சொல்லி இருந்தேன்.அப்படி போனால் ஒரு போதும் உயிருடன் திரும்ப முடியாது என நான் நினைத்து இருந்ததற்கான காரணங்களும் வலுவானைவையாக இருந்தன.

ஆனால் காலம் எல்லாவற்றையும் அடிச்சு நொறுக்கிக் கொண்டு தான் நினைத்ததையே சாதித்துச் செல்லும் என்பதற்கு இணங்க இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.

ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பும், இலங்கையில் மகிந்தவின் ஆட்சி இல்லாமல் போனதன் பின்னான சூழ்நிலைகளும் என் உறுதிமொழியை இருந்த இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. முன்னர் சாத்தியமாகும் என்று நினைத்த பல விடயங்கள் நிர்மூலமாகிப் போன அதே நேரத்தில் முன்னர் சாத்தியப்படாது என நினைச்ச பல விடயங்கள் நடக்கவும் தொடங்கியிருந்தன.

என்னுடன் உடன் பிறந்த ஒரே உறவான அக்காவை 9 வருடங்களாக நான் சந்திக்கவில்லை என்ற ஏக்கமும் ஒரு புறம் வளர்ந்து இனி பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு என்னக் கொண்டு வந்து விட்டது. அவர் இருப்பது சென்னையில் என்பதால் அங்கு சென்று விட்டு, இடையில் ஒரு வாரம் இலங்கைக்கு செல்வது என முடிவு செய்து இருந்தேன். மொத்தமாக இரண்டு வார லீவில் (17 நாட்கள்) தான் செல்லக் கூடியதாக அலுவலக வேலைகள் நெரித்துக் கொண்டு இருந்தன. ஆக இரண்டு வாரத்தில் ஒரு வாரம் சென்னையில், ஒரு வாரம் இலங்கையில், பயணத்துக்கு மூன்று நாட்கள் என்ற கணக்கில், மகனையும் இணைத்துக் கொண்டு என் பிரயாணத்தினை திட்டமிட்டேன்.

அம்மாவுடன் என் மனைவி கவிதாவும் மகள் இயலினியும் துணையாக கனடாவில் நிற்க நானும் மகனும் செப்ரம்பர் 16 அன்று சென்னையை நோக்கி எங்கள் பயணத்தினை ஆரம்பித்தோம்.

(மிகுதி பிறகு)

------------

தொடர்ச்சிகள்:

சென்னை உங்களை வரவேற்கின்றது

Share this post

Link to post
Share on other sites

ம்... புங்கையூரான் உங்களுக்கும் இப்ப 73 உறுதியாகி விட்டது. பார்க்கலாம் மிச்சம் 27....!  tw_blush:

தொடருங்கள் நிழலி ....!

Share this post

Link to post
Share on other sites

ஆ...ஆ கள்ளச் சத்தியம் பண்றாரு .....??

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கள், நிழலி!

மிகவும் நீண்ட நாட்களின் பின்பு யாழ் களம் தனது இயல்பு நிலைக்குத் திரும்புவது போல ...ஒரு உணர்வு ஏற்படுகின்றது!

வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் என்று கூறுவார்கள்!

எல்லாப் புத்தகங்களையும் போல....சிலரது வாழ்க்கை மர்ம நாவல்களைப் போலவும், சிலரது வாழ்க்கை... கையிலெடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும்...சிலரது வாழ்க்கை...முன்னுரையை மட்டுமே வாசித்து விட்டு மேலே தொடர்ந்து வாசிக்க இயலாதவாறும், சிலரது வாழ்க்கை ஒரு சத்திய சோதனையாகவும் அமைந்து விடுவது உண்டு!

பயணங்களும்...வாழ்க்கையைப் போன்றவை தான்!

Share this post

Link to post
Share on other sites

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்,  நீண்ட நாட்களின் பின்னர் சுய ஆக்கத்தைப் பார்ப்பது மகிழ்ச்சி. ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. புங்ஸ் மேலே வேறு சத்தியம் செய்து விட்டீர்கள், தவண்டாவது எழுதி முடியுங்கோ, அந்தாள் பாவமப்பா.

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

கிழிஞ்சுது போ.....இண்டைக்கு நானே கிடைச்சன்....சரி நடக்கட்டும்...நடக்கட்டும். :cool:

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

சகாறா... உங்களுக்கெப்படி...?:cool:

அரைச்சாக்கு வெங்காயத்தை...அரை மணித்தியாலத்தில் வெட்டிய காலம் ஒன்று உண்டு...!

அது ஒரு நல்ல ..சமூக நோக்கத்துக்காக...செய்யப்பட்டது!

சரி...சரி....இருந்தாலும் ஒரு  ஆம்பிளைப் பிள்ளையை...அடுப்படிக்குக் கிட்ட வைச்சு இப்படி அசிங்கப் படுத்தக் கூடாது!:11_blush:

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

ம்... புங்கையூரான் உங்களுக்கும் இப்ப 73 உறுதியாகி விட்டது. பார்க்கலாம் மிச்சம் 27....!  tw_blush:

தொடருங்கள் நிழலி ....!

நன்றி சுவி அண்ணா

4 hours ago, யாயினி said:

ஆ...ஆ கள்ளச் சத்தியம் பண்றாரு .....??

ஹிஹி....

4 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள், நிழலி!

மிகவும் நீண்ட நாட்களின் பின்பு யாழ் களம் தனது இயல்பு நிலைக்குத் திரும்புவது போல ...ஒரு உணர்வு ஏற்படுகின்றது!

வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் என்று கூறுவார்கள்!

எல்லாப் புத்தகங்களையும் போல....சிலரது வாழ்க்கை மர்ம நாவல்களைப் போலவும், சிலரது வாழ்க்கை... கையிலெடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும்...சிலரது வாழ்க்கை...முன்னுரையை மட்டுமே வாசித்து விட்டு மேலே தொடர்ந்து வாசிக்க இயலாதவாறும், சிலரது வாழ்க்கை ஒரு சத்திய சோதனையாகவும் அமைந்து விடுவது உண்டு!

பயணங்களும்...வாழ்க்கையைப் போன்றவை தான்!

இந்த திரியை திறந்து இதை எழுத தூண்டியது நெடுக்கரின் பதிவு தான். நெடுக்கர், தான் ஊருக்கு போனதை எழுதினால் நிறையப் பேரின் விமர்சனத்தினை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிந்தும் எழுத துணிந்து எழுதியிருந்தார். சரி பிழைகளுக்கு அப்பால் அவது ஆக்கம் யாழில் தூங்கு நிலையில் இருந்த பலரை எழுப்பியிருக்கு. நெடுக்கருக்கு நன்றி!

பொதுவாக எனக்கு பயணங்கள் செல்லுவதும் வாகனம் செலுத்துவதும் மிகவும் பிடிச்சமான விடயங்கள். கனடாவிற்கு வந்த பின்பு வெளிநாடு செல்லவில்லையாயினும் ஒன்ராரியோ மானிலத்தில் இண்டு இடுக்கு எல்லாம் தேடி தேடி பயணித்துக் கொண்டு இருக்கின்றேன். இனி வெளிநாடுப் பயணங்களும் அதிகம் செய்வேன் என நினைக்கின்றேன்.

3 hours ago, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

இரண்டாம் பயணத்தினை எழுதும் போது கு.சா அண்ணர் மீது ஒரு சத்தியம் செய்து விடுகின்றேன்.

3 hours ago, Thumpalayan said:

வணக்கம்,  நீண்ட நாட்களின் பின்னர் சுய ஆக்கத்தைப் பார்ப்பது மகிழ்ச்சி. ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. புங்ஸ் மேலே வேறு சத்தியம் செய்து விட்டீர்கள், தவண்டாவது எழுதி முடியுங்கோ, அந்தாள் பாவமப்பா.

ஊருக்கு போய் வந்த பின் பதிவு எழுதவில்லையா என தனிமடலில் கேட்டு இருந்தீர்கள். அதன் பிறகு இன்னொரு பயணத்தினையும் செய்து விட்டு வந்தாச்சு....

2 hours ago, குமாரசாமி said:

கிழிஞ்சுது போ.....இண்டைக்கு நானே கிடைச்சன்....சரி நடக்கட்டும்...நடக்கட்டும். :cool:

அடுத்த சத்தியம் உங்கள் மீதுதான்

Share this post

Link to post
Share on other sites

சென்னை உங்களை மிக அன்புடன் வரவேற்கின்றது

ரொரன்டோவில் இருந்து Frankfurt பின் அங்கு இருந்து சென்னை செல்லும் விதமாக பயண ஏற்பாடுகள்.  ரொரன்டோவின் விமானத்தில் ஏறியாச்சு. மகன் மித்தா (மிதுனன்)  இரண்டு வயதில் தான் இறுதியாக விமானத்தில் பயணம் செய்து இருந்தமையால் கடும் குஷியில் இருந்தான். மூவர் இருக்கும் வரிசையில் நான் நடுவில், மகன் யன்னலோரம், எனக்கருகில் ஒரு சேர்பிய (Serbian) பெண்மணி. அவ் சேர்பிய பெண்ணுக்கு ஒரு 65 வயது இருக்கும். அவருக்கு அருகில் இருக்க வேண்டி வந்ததையிட்டு மனசில் 'பக்கத்து சீட்டில பாட்டி உக்காந்தா ...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது.

பொதுவாக விமானத்தில் ஏறினால் சாப்பாடு வரும் போதே வைன் அல்லது விஸ்கி கேட்டு அடித்து விட்டு 3 மணி நேரமாவது தூங்கி எழுந்து பின் சினிமா படம் பார்க்கும் பழக்கம் எனக்கு. ஆனால் மகனுடன் போவதால் ஒன்றும் குடிக்க விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் பெண்மணி இரண்டு தரம் ரெட் வைன் அடிக்கும் போது என் வயிற்றில் புகை எழுந்ததை மகன் காணவில்லை. சரி நித்திரை வரவில்லை என்று ஒரு ஆங்கிலப் படத்தை போட்டால் 20 நிமிடங்களில் அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

போனது Air Canada.. ஓரளவுக்கு வசதி எனிலும் கிட்டத்தட்ட பென்சன் வயது உள்ள பணியாளர்களும் அவர்களின் சலிப்பான சேவையும் பழைய விமானமும் என்று சலிப்பை கொடுத்தன

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து விமானம் ஏறி, சென்னை விமான நிலையத்தினை வந்தடைகின்றோம்.

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, நிழலி said:

 அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

சரி சரி நம்பீட்டம். பச்சைத் தண்ணி  படாமல் போய்ச் சேர்ந்ததை நம்பினாலும் உதை நம்பிறது கஷ்டமாச்சே!

37 minutes ago, நிழலி said:

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

என்னப்பா ஜெர்மன்காரர் தான் வந்து விளங்கப்படுத்தனும். சிட்னி/மெல்பேர்ன்/பிரிஸ்பேனில் fountain நானறிந்தவரை இல்லை ஆனால் கடைகளும் vending மெஷின்களும் தாராளமாக உள்ளன.

37 minutes ago, நிழலி said:

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

ஆகா நல்ல விஷயம், விமான நிலையத்தில மலசல கூடம் போகவேண்டிய தேவை வந்ததா?

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

சென்னை உங்களை மிக அன்புடன் வரவேற்கின்றது

ரொரன்டோவில் இருந்து Frankfurt பின் அங்கு இருந்து சென்னை செல்லும் விதமாக பயண ஏற்பாடுகள்.  ரொரன்டோவின் விமானத்தில் ஏறியாச்சு. மகன் மித்தா (மிதுனன்)  இரண்டு வயதில் தான் இறுதியாக விமானத்தில் பயணம் செய்து இருந்தமையால் கடும் குஷியில் இருந்தான். மூவர் இருக்கும் வரிசையில் நான் நடுவில், மகன் யன்னலோரம், எனக்கருகில் ஒரு சேர்பிய (Serbian) பெண்மணி. அவ் சேர்பிய பெண்ணுக்கு ஒரு 65 வயது இருக்கும். அவருக்கு அருகில் இருக்க வேண்டி வந்ததையிட்டு மனசில் 'பக்கத்து சீட்டில பாட்டி உக்காந்தா ...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது.

பொதுவாக விமானத்தில் ஏறினால் சாப்பாடு வரும் போதே வைன் அல்லது விஸ்கி கேட்டு அடித்து விட்டு 3 மணி நேரமாவது தூங்கி எழுந்து பின் சினிமா படம் பார்க்கும் பழக்கம் எனக்கு. ஆனால் மகனுடன் போவதால் ஒன்றும் குடிக்க விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் பெண்மணி இரண்டு தரம் ரெட் வைன் அடிக்கும் போது என் வயிற்றில் புகை எழுந்ததை மகன் காணவில்லை. சரி நித்திரை வரவில்லை என்று ஒரு ஆங்கிலப் படத்தை போட்டால் 20 நிமிடங்களில் அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

போனது Air Canada.. ஓரளவுக்கு வசதி எனிலும் கிட்டத்தட்ட பென்சன் வயது உள்ள பணியாளர்களும் அவர்களின் சலிப்பான சேவையும் பழைய விமானமும் என்று சலிப்பை கொடுத்தன

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து விமானம் ஏறி, சென்னை விமான நிலையத்தினை வந்தடைகின்றோம்.

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

எயர் கனடா என்றால் ...... நீங்கள் லூப்தான்சா ஆட்கள் உடனேயே பிரச்சனைகளை 
முடித்து கொள்ளலாம் .... அவர்களது சேவை பரவாயில்லை. 
எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .... எனக்கு தெரியாது என்ற வார்த்தைகள் குறைவு 
எப்படியாவது கண்டு பிடித்து சொல்லுவார்கள்.

எனது பொதி  ஒன்று தொலைந்துவிட்டது .... நான் இத்தாலி மிலன் போக இருந்தேன் 
பிளைட்  கான்செல் .... நான் வேறு ஒரு பிளைட் எடுத்து சுவிஸ் சூரிச் சென்றுவிடடேன்.
சூரிச்சில் லுப்தான்சா கவுண்டரில் சென்று கேட்டேன் ..இப்போதும் அங்கு இருப்பதாக சொன்னார்.
வேண்டுமென்றால் நாளை இங்கு எடுத்து தருவதாக சொன்னார்.நான் இங்கு இருக்க மாட்டேன் என்று சொல்ல அப்போ யூ ஸ் அனுப்புவதாக சொன்னார் ....... நான் நம்பவில்லை 2 கிழமையில் நான் வேலையால் வரும்போது 
பாக் வீட்டு வாசலில் இருக்கிறது. 

ஏர்போர்ட் உண்மையான போலீஸ் காரர்களும்  ஓகே (இமிகிரேஷன் + கஸ்டம்)
செகுருட்டி ஒரு பிரைவேட் கொம்பனி என்று எண்ணுகிறேன் ... அவர்கள் கொஞ்சம் 
நெருடலாகத்தான் இருக்கிறார்கள் காரணம் புரியவில்லை. அதில் சிலர் வெளிநாட்டவர் 
துருக்கி போல இருக்கிறது ... அவர்கள் எடுப்பு பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. 
ஒருவரின் கேள்விகள் கொஞ்சம் தேவை இல்லாதவையாக இருந்தது .... போடா மூதேவி என்று 
மனத்திட்குள் திட்டி கொண்டு வந்துவிடடேன்.

மிக கேவலமான ஏர்போர்ட் என்றால் எனக்கு துபாய்தான் (கஸ்ட்மர் சர்விஸ் ஸிரோ) 

Harold Kierstead (Botswana) 28th December 2016

I flew into Frankfurt airport with a 5 month old baby. The baby change rooms were well organized and clean. The only issue I have is there was no place to clean baby bottles and to get clean hot water to make baby milk. I asked the cleaners, no help. I asked in the shops, no help. I asked the VIP lounges, no help. Absolutely horrible. No one even wanted to help. Only at the police station did a kind officer give me a cup of hot water. On our trip to Canada I flew through 3 other airports, at every place people were kind and went out of their way to help a little baby with just hot water to wash the bottles and make fresh milk.

Umesh Gupta (India) 2nd January 2017

At gate C14-C16 Frankfurt airport there was no water on tap. Security wants you to dump the bottle which you are carrying. In such cases, airport should provide water on tap. I had to purchase a half litre bottle, for $5 USD, which translates to INR 700 for one litre of water. The shops was happily collecting $5 USD against an item of Euro 3.67. - There was no other option except this single café/bar. We also found that temperature was low in the waiting halls outside the gates. Some more heating (for sub-zero temperature outside), would have helped. We have decided to avoid Frankfurt Airport

J Sch (Denmark) 7th October 2016

I have been to quite a few airports in my life and I have to say that Frankfurt was by far the worst one. The staff working there ordered everyone around like they where in the military. Not a single smile or nice tone of voice - I mean every single person there had that attitude. I understand that they are very busy and have to deal with a huge amount of people every day, but how come other airports manage to be friendly? It is definitely possible to give instructions - especially at the security points - without being rude. Also the food selection was very limited in parts of the airport.

Share this post

Link to post
Share on other sites

பயணக் கட்டுரை என்றால் எனக்கும் படிக்கப் பிடிக்கும்  தொடருங்கள்

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, நிழலி said:

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

"பயணக் கட்டுரைகள்"  இனிமையானவை நிழலி. அதிலும்... நம்மவர்கள் எழுதும் போது, 
நாம்.. எதிர் பார்ப்பதை எழுதுவார்கள் என்பதால், வாசிக்கும்.... எமக்கும், சுவராசியமாக  இருக்கும்.  :)

Bildergebnis für drink water fountain  gif

கனடாவில்  உள்ளது போல்.... இங்கு விமான நிலையத்தில் மட்டுமல்ல உள்ளூரில்  கூட,  குடிதண்ணீர்  ஊற்றுக்கள்  இல்லை.  உங்களுக்கு... நயாகரா நீர் வீழ்ச்சி இருக்கு, என்ற படியால்... தண்ணீரை இலவசமாக கொடுக்கின்றார்கள். (இங்கு.... பியரும், தண்ணீரும்  கிட்டத்தட்ட   ஒரே விலை.)  

சிறு பிள்ளைகளுடனான  விமானப்  பயணத்தில், தங்கி நிற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பது முன்பே தெரிந்திருந்தால்...  சிறுவர்களுக்கு, முன்பு பறந்து கொண்டிருந்த விமானத்தில் வைத்தே..... அதனை சொல்லி, அதற்கு ஆயத்தப் படுத்துவது நல்லது.   

ஜேர்மன் நாட்டில், ஃபிராங்போட்  சர்வதேச விமான நிலையம் என்றாலும், முக்கிய வழிகாட்டுதல்கள்... ஜேர்மன்/ ஆங்கில வழிகாட்டுதல்களில் நிச்சயம் இருக்கின்றது. அதனை கவனிக்காதது உங்கள் தவறு..  நீங்கள் கேட்ட  பணியாளர்,  ஜேர்மன்காரன் என்று,  எப்படி.. உறுதியான முடிவுக்கு, வந்தீர்கள்?  விமான நிலையத்தில் உலாவும்,  வெள்ளைக்காரன் எல்லாம்... ஜேர்மன்காரன் அல்ல.  

அகன்ற... ஐரோப்பிய நாட்டில்,   பல ஆங்கிலம் தெரிந்த வெள்ளைகளை, மலிவான சம்பளத்தில் வேலைக்கு எடுக்கும் வசதி இருக்கும் போது,  (குடி வரவு, குடி அகல்வு தவிர)    ஒரிஜினல் ஜேர்மன்  இந்த வேலைக்கு, வர மாட்டான். பாகிஸ்தான் காரனையே.....  வெள்ளைக்காரன் என்று, நம்பிய இனம், எம் இனம்.  :)

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, Maruthankerny said:

------

ஏர்போர்ட் உண்மையான போலீஸ் காரர்களும்  ஓகே (இமிகிரேஷன் + கஸ்டம்)
செகுருட்டி ஒரு பிரைவேட் கொம்பனி என்று எண்ணுகிறேன் ... அவர்கள் கொஞ்சம் 
நெருடலாகத்தான் இருக்கிறார்கள் காரணம் புரியவில்லை. அதில் சிலர் வெளிநாட்டவர் 
துருக்கி போல இருக்கிறது ... அவர்கள் எடுப்பு பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. 
ஒருவரின் கேள்விகள் கொஞ்சம் தேவை இல்லாதவையாக இருந்தது .... போடா மூதேவி என்று 
மனத்திட்குள் திட்டி கொண்டு வந்துவிடடேன்.

துருக்கிக்  காரனை கண்டு பிடிப்பது, சுலபம். மருது.
கமக் கட்டுக்குள்.... புதிய  "வில்கின்சன்" பிளேடை வைத்துக் கொண்டு நடப்பது மாதிரி, நடந்து  நாடகம்  போடுவார்கள்.  
நாம்...  சற்று அவதானமாக இருந்து, குரலை உயர்த்தி கதைத்தால்... பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்கள். (ஆனால்... இதனை, விமான நிலையத்தில், செய்வது சரியாக இருக்காது. ) :)
.......
துருக்கிக்காரனை...  சமாளிப்பது, எப்படி? என்ற தலைப்பில்... ஒரு சொந்த ஆக்கம் போடலாம் என்ற அளவுக்கு, கனக்க விடயங்கள் உள்ளது. நேர காலம் கிடைத்தால்... அதனை பகிர எண்ணியுள்ளேன்.  :D:

Share this post

Link to post
Share on other sites

நான் யெர்மனி 'மன்கெய்ம்' வந்தபொழுது தங்கியிருந்த ஓட்டலிலிருந்து குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு செல்ல டாக்ஸியை பிடித்து ஏறி உட்கார்ந்ததும், உரையாடலில் அந்த ஓட்டுனர் தான் துருக்கியை சார்த்தவர் எனக் கூறினார். ஓட்டலிலிருந்து வழக்கமாக அந்த தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார்.. கட்டணமும் வழக்கத்தைவிட அதிகமாக ஏறத் துவங்கியது..

'ஆகா.. சென்னை ஆட்டோக்காரர்களின் வித்தையை இங்கேயும் காட்டத் தொடங்கிவிட்டார்களா..?' என சந்தேகப்பட்டு, "ஏன் மாற்று வழியில் செல்கிறீர்கள்..?" என வினவினேன்..

அதற்கு அவர், "நீங்கள் கூறும் வழியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் இவ்வழியே வந்தேன், பயபடாதீர்கள்..!" எனக் கூறினார்.. கட்டணம் சற்றே அதிகமாகவே இருந்தது.. வேறு வழியின்றி 'அப்பாடா ஒரு வழியாக தொழிற்சாலைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தோமே!' என நிம்மதியடைந்தேன்..ஏமாற்றப்பட்டோமா என தெரியவில்லை!

ஆனால் மறுநாள் முதற்கொண்டு அங்கே இருந்த நாட்கள் வரை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில்தான் சென்றேன்..

புது இடத்தில் அவதானமாக இருப்பது நன்றே..!

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, நிழலி said:

சென்னை உங்களை மிக அன்புடன் வரவேற்கின்றது

ரொரன்டோவில் இருந்து Frankfurt பின் அங்கு இருந்து சென்னை செல்லும் விதமாக பயண ஏற்பாடுகள்.  ரொரன்டோவின் விமானத்தில் ஏறியாச்சு. மகன் மித்தா (மிதுனன்)  இரண்டு வயதில் தான் இறுதியாக விமானத்தில் பயணம் செய்து இருந்தமையால் கடும் குஷியில் இருந்தான். மூவர் இருக்கும் வரிசையில் நான் நடுவில், மகன் யன்னலோரம், எனக்கருகில் ஒரு சேர்பிய (Serbian) பெண்மணி. அவ் சேர்பிய பெண்ணுக்கு ஒரு 65 வயது இருக்கும். அவருக்கு அருகில் இருக்க வேண்டி வந்ததையிட்டு மனசில் 'பக்கத்து சீட்டில பாட்டி உக்காந்தா ...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது.

பொதுவாக விமானத்தில் ஏறினால் சாப்பாடு வரும் போதே வைன் அல்லது விஸ்கி கேட்டு அடித்து விட்டு 3 மணி நேரமாவது தூங்கி எழுந்து பின் சினிமா படம் பார்க்கும் பழக்கம் எனக்கு. ஆனால் மகனுடன் போவதால் ஒன்றும் குடிக்க விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் பெண்மணி இரண்டு தரம் ரெட் வைன் அடிக்கும் போது என் வயிற்றில் புகை எழுந்ததை மகன் காணவில்லை. சரி நித்திரை வரவில்லை என்று ஒரு ஆங்கிலப் படத்தை போட்டால் 20 நிமிடங்களில் அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

போனது Air Canada.. ஓரளவுக்கு வசதி எனிலும் கிட்டத்தட்ட பென்சன் வயது உள்ள பணியாளர்களும் அவர்களின் சலிப்பான சேவையும் பழைய விமானமும் என்று சலிப்பை கொடுத்தன

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து விமானம் ஏறி, சென்னை விமான நிலையத்தினை வந்தடைகின்றோம்.

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

இவர் ஒரு புகைச்சல்/ எரிச்சல்காரன் எண்டு நான் முதலே மட்டுப்புடிச்சிட்டன்.:grin:
முதலாவது எல்லா விசயத்துக்கும் இவர் சின்ன பாலகனோடை வெளிக்கிட்டது  பெரிய இடைஞ்சலாய் போச்சுது.:(
வைன் விஸ்கி அடிக்கேலாமல் போச்சுது.:(
ரிவியிலை வெள்ளைக்காரி சட்டை களட்டினதை ஒழுங்காய் கண்குளிர காணேலாமல் போச்சுது.:(
அந்த ரென்சனிலை ஒட்டுமொத்த பிராங்பெட் எயாப்போர்ட்/ஜேர்மன் சனம் எல்லாம் தலைகீழாய் தெரியுதாக்கும்.tw_blush:
மூலைக்கு மூலை சின்னச்சின்ன கடையள் எல்லாம் இருக்கே! ஏதோ பாலைவனத்திலை நிண்ட மாதிரியெல்லே கதை போகுது...
அதோடை automated beverage system   எல்லாத்திலையும் பாசை மாத்தி வாசிக்கக்கூடிய வசதியெல்லாம் இருக்கே ராசா...

தண்ணீர் வசதியும் மொழிவசதியும் புன்னைகையும்   இல்லாத ஒரு விமானநிலையம் எப்படி சர்வதேச விமானநிலைய தரத்திற்கு உயரும்/உயர்ந்தது.?:cool:

நிழலி மட்டும் இல்லை பலரும் குறை சொல்கிறார்கள் 
நான் மூன்று ரெவியூ இணைத்திருக்கிறேன் வாசியுங்கள் 

டெர்மினல் .... கேட் இலக்கம் போன்றவை கொஞ்சம் குழப்பமாகத்தான் 
எனக்கும் முதலில் இருந்தது .... பின்பு ஒரு ரவுண்ட் அடித்தவுடன் விளங்கி விட்டது.
நடக்கும் தூரம் ரொம்ப பெரிது ..... கார் வாடகைக்கு எடுத்தால் 1 கி மீ நடக்கவேண்டும் 
காரை சென்று அடைய..... எனக்கு ஓகே இதுவே இரண்டு மூன்று பொதிகளுடன் 
பெண்கள் வந்தால் ? எப்படி இருக்கும். 

பாரிஸ் ஏர்போர்ட்டும் கேட் முறைமைமை எனக்கு முதலில் விளங்கவில்லை 
இப்போ பார்த்தால் ..... அதுதான் மிகவும் எளிதான வழிமுறை. 

லூவ்தான்சா சேவை ரொம்ப அருமை ...
பிள்ளைகள் எல்லாம் அழகான புன்னகையுடன் 
கேட்க்கும் உதவிகளை செய்து தருவார்கள் 

Share this post

Link to post
Share on other sites

அனேகமாக யேர்மன் ஊடாக பயணிப்பவர்கள் வெயிற்றிங் ரைம் குறைவு என்று சொல்வார்கள்..எதனால் 5 மணி நேர தாமதம்..? 
ஏன் எனில் சிறுவர்களோடு பயணிக்கும் போது நீண்ட நேர காத்திருப்புக்கள் வேணுமா....

Share this post

Link to post
Share on other sites
On 2017-03-03 at 2:30 PM, தமிழ் சிறி said:

கனடாவில்  உள்ளது போல்.... இங்கு விமான நிலையத்தில் மட்டுமல்ல உள்ளூரில்  கூட,  குடிதண்ணீர்  ஊற்றுக்கள்  இல்லை.  உங்களுக்கு... நயாகரா நீர் வீழ்ச்சி இருக்கு, என்ற படியால்... தண்ணீரை இலவசமாக கொடுக்கின்றார்கள். (இங்கு.... பியரும், தண்ணீரும்  கிட்டத்தட்ட   ஒரே விலை.)  

சிறு பிள்ளைகளுடனான  விமானப்  பயணத்தில், தங்கி நிற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பது முன்பே தெரிந்திருந்தால்...  சிறுவர்களுக்கு, முன்பு பறந்து கொண்டிருந்த விமானத்தில் வைத்தே..... அதனை சொல்லி, அதற்கு ஆயத்தப் படுத்துவது நல்லது.   

ஜேர்மன் நாட்டில், ஃபிராங்போட்  சர்வதேச விமான நிலையம் என்றாலும், முக்கிய வழிகாட்டுதல்கள்... ஜேர்மன்/ ஆங்கில வழிகாட்டுதல்களில் நிச்சயம் இருக்கின்றது. அதனை கவனிக்காதது உங்கள் தவறு..  நீங்கள் கேட்ட  பணியாளர்,  ஜேர்மன்காரன் என்று,  எப்படி.. உறுதியான முடிவுக்கு, வந்தீர்கள்?  விமான நிலையத்தில் உலாவும்,  வெள்ளைக்காரன் எல்லாம்... ஜேர்மன்காரன் அல்ல.  

அகன்ற... ஐரோப்பிய நாட்டில்,   பல ஆங்கிலம் தெரிந்த வெள்ளைகளை, மலிவான சம்பளத்தில் வேலைக்கு எடுக்கும் வசதி இருக்கும் போது,  (குடி வரவு, குடி அகல்வு தவிர)    ஒரிஜினல் ஜேர்மன்  இந்த வேலைக்கு, வர மாட்டான். பாகிஸ்தான் காரனையே.....  வெள்ளைக்காரன் என்று, நம்பிய இனம், எம் இனம்.  :)

Frankfurt இல் நான் விசாரித்த பணியாளர் தென்னாசியாவை சேர்ந்தவர்; அநேகமாக பாகிஸ்தானியராக இருக்க வேண்டும். நான் காத்திருந்தது எந்த terminal என்பது மறந்து போயிட்டுது. ஆனால் அது புது டெர்மினல் என்றும் இன்னும் கடைகள் அதிகமாக வரவில்லை என்றும் அந்த பணியாளர் சொன்னார். McDonalds இற்கு போவது என்றால் அங்குள்ள train எடுத்து அடுத்த Terminal செல்ல வேண்டும் என்றார். இடையில் Boarding gate அருகில் ஒரு சில duty free shops சும் ஒரு Coffee shop பும் இருந்தது. Boarding gate இற்கும் நான் வந்து இறங்கிய gate இற்கும் இடையில் கிட்டத்தட்ட இருபது நிமிட நேர நடை. இடையில் தான் தண்ணீர் குடிக்க முயன்றது. பின் Duty Free போய் வாங்கி குடிச்சம்.

விமான நிலைய அறிவித்தல்களில் இருந்து வழிமுறைகள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இருந்தன. ஆனால் Vending machine முற்று முழுதும் ஜேர்மன் மொழியில் தான்.

எனக்கு தண்ணீர் கிடைக்காத விடயத்தினை விட அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியமும் கெடுபிடிகளும் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் திமிர்தனமும் தான் வெறுப்பை கொடுத்தன. அதிக பயணிகளை ஒவ்வொரு வினாடியும் சமாளிக்கும் பணியில் கிடைத்த சலிப்பாகவும் அது இருக்கலாம். அல்லது இயலபாக இருக்கும் நிறவெறியாகவும் இருக்கலாம். அல்லது German என்பதால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற எனது எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites

நிழலி இனி எந்த விமானநிலையம் போனாலும் நான்தான் யாழ் கள பொறுப்பாளர் என்று சொல்லுங்கள்.விஐபி மரியாதை.

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, Maruthankerny said:

நிழலி மட்டும் இல்லை பலரும் குறை சொல்கிறார்கள் 
நான் மூன்று ரெவியூ இணைத்திருக்கிறேன் வாசியுங்கள் 

டெர்மினல் .... கேட் இலக்கம் போன்றவை கொஞ்சம் குழப்பமாகத்தான் 
எனக்கும் முதலில் இருந்தது .... பின்பு ஒரு ரவுண்ட் அடித்தவுடன் விளங்கி விட்டது.
நடக்கும் தூரம் ரொம்ப பெரிது ..... கார் வாடகைக்கு எடுத்தால் 1 கி மீ நடக்கவேண்டும் 
காரை சென்று அடைய..... எனக்கு ஓகே இதுவே இரண்டு மூன்று பொதிகளுடன் 
பெண்கள் வந்தால் ? எப்படி இருக்கும். 

பாரிஸ் ஏர்போர்ட்டும் கேட் முறைமைமை எனக்கு முதலில் விளங்கவில்லை 
இப்போ பார்த்தால் ..... அதுதான் மிகவும் எளிதான வழிமுறை. 

லூவ்தான்சா சேவை ரொம்ப அருமை ...
பிள்ளைகள் எல்லாம் அழகான புன்னகையுடன் 
கேட்க்கும் உதவிகளை செய்து தருவார்கள் 

இப்பவும் றாத்தல் அவுன்சு எண்டு மினைக்கெடுற அமெரிக்க கண்டத்துக்கு டிக்கி...டிக்கிற்ரால் வலு கஸ்டம்தான்...... 

அது சரி ஏன் நீங்கள் எல்லாரும் றோயல் ஹீத்திரோ எயாப்போட்டிலை டச் பண்ணி அங்காலை ஏசியன் கன்றிக்கு ஃபிளை பண்ணக்கூடாது?

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

இப்பவும் றாத்தல் அவுன்சு எண்டு மினைக்கெடுற அமெரிக்க கண்டத்துக்கு டிக்கி...டிக்கிற்ரால் வலு கஸ்டம்தான்...... 

அது சரி ஏன் நீங்கள் எல்லாரும் றோயல் ஹீத்திரோ எயாப்போட்டிலை டச் பண்ணி அங்காலை ஏசியன் கன்றிக்கு ஃபிளை பண்ணக்கூடாது?

எனக்கு எல்லாம் ஓகே ஆகத்தான் போனது 
நடை தூரம் கொஞ்சம் அதிகம் அதோடு அந்த முன் 
கேட் (வாசல்) செக்கிங்கில் நிற்கும் ஆட்களின் முகம் சுளிப்புகளும் 
எடுப்புகளும்தான் பிடிக்காதது.

என்னை போன்ற ஏர் லைன்ஸ் பயணிகளுக்கு தூரம் கூடினால் 
சிரமம் ..... நாம் டிக்கெட் வாங்கி வருவதில்லை 
எதில்  சீட் இருக்கிறதோ அதில் புக் பண்ணி சென்றுவிடுவோம்.
ஒரே ஏர்லைன்ஸ் என்றால் பரவாயில்லை ....
ஏர்லைன்ஸ் மாறினால் .... வெளியில் வந்து டிக்கெட் கவுண்டரில்தான் 
எம்மை கொன்பெர்ம் பண்ண வேண்டும் 
அப்போ ஒன்று இரண்டு தடவை வெளியில் வந்து போக நேரும் 
அதோடு ஏர்லைன்ஸ் மாறும்போது டெர்மினலும் மாறும் 
கொஞ்சம் கிட்ட கிட்ட இருந்தால் நல்லம்.

கீத்திரோ அது இதை விட கொடுமை .....
ரெயின் சுத்தி சுத்தி ஓடும் ..... ரயிலில் ஏறி இறங்கி 
கேட்டுக்கு போக ஒரு மணித்தியாலம் வேண்டும். 

அதைவிட ஏர்போர்ட் டாக்ஸ் (வரி) அதிகம் $180. 

(Frankfurt $49)  

Share this post

Link to post
Share on other sites