• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • நமது காலண்டரில் ஒவ்வொரு ஆண்டின் 12 மாதங்களில் 30,31 நாட்கள் உள்ளன. ஆனால் இரண்டாம் மாதமாக வரும் பிப்ரவரியில் 28 நாட்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் மாதமாக 29 நாட்களும் வருகிறது. அதற்கான வரலாற்றை பார்ப்போம். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள், 12 மாதங்கள், 52 வாரங்கள் (ஒன்றரை நாள்களும் ) லீப் வருடத்திற்கு 366 நாட்கள் 12 மாதங்கள் 52 வாரங்கள் ( இரண்டு நாட்களும் ) உள்ளன. பழங்கால கிரிகோரிய நாட்காட்டி படி லீப் ஆண்டு என்பது நான்கில் பெருக்கங்களாக வருவபை. 2016,2020, 2024 போன்றவை லீப் ஆண்டாக இருந்து வருகின்றன. இதற்கு கிரிகோரிய ஆண்டின் நெட்டாண்டு என பெயரிட்டுள்ளனர். ஆனால் நான்கின் பெருக்கங்களாக “00”என முடியும் ஆண்டு லீப் ஆண்டாக இருப்பதில்லை. உதாரணத்திற்க்கு  “00” என முடியும் 2000 ஆம் ஆண்டு 29 நாட்கள் கொண்ட லீப் வருடமாக இருந்துள்ளது. ஆனால் 1900 மற்றும் 2100 ஆம் ஆண்டுகள் லீப் ஆண்டாக இருப்பதில்லை. நாம் நம் வாழ்நாளில் அனைத்து லீப் ஆண்டுகளை கடந்திருப்போம் ஆனால் எதிர்காலத்தினர் அவர்கள் வாழ்நாளில் ஒரு லீப் ஆண்டை தவிர்ப்பார்கள். பூமி சூரியனை சுற்றும் கால அவகாசம் 365 நாட்கள் 6 மணி நேரமாகும். இதை வைத்து தான் நமது நாள்காட்டி படி நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியனின் சுற்றுபாதையை அடைய பூமி எடுத்து கொள்ளும் கால அவகாசத்தை விட நமது நாள்காட்டியின் ஆக மொத்த நாட்களில் 6 மணி நேரங்கள் குறைவாக உள்ளது. இதனை சரிசெய்ய கிமு. 42 ஆம் நூற்றாண்டின் ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர் கிரிகோரிய நாட்காட்டி விதிபடி மூன்று வருடங்களிலிருந்து கால் நாட்களை எடுத்து நான்காம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்களாக சேர்த்து லீப் ஆண்டாக கொண்டு வந்தார். உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற இந்த கிரிகோரிய நாள்காட்டி மற்ற நாடுகளுக்கு முரணாகவே அமைந்துள்ளது. கிரிகோரிய நாள்காட்டியில் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி இருந்துள்ளது. மேலும் ஸ்வீடன் நாட்டின் காலண்டரில் பிப்ரவரி 30 ம் தேதி இருந்துள்ளது. பின்னர் அது முதலே கைவிடபட்டு அழிந்துள்ளது. கிரிகோரிய நாள்காட்டி முன் பயன்படுத்திய உமேனியா நாள்காட்டி படி வருடத்திற்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்து வந்துள்ளன. அதன் பின் ஜூலியஸ் சீசரால் அறிமுகபடுத்தபட்ட கிரிகோரிய காலண்டரில் ஆவர் பெயரிலேயே ஜூலை என்று ஏழாவது மாதமாகவும், அவருக்கு பின் வந்த அரசர் அகஸ்டஸ் சீசர் பெயரில் எட்டாவது மாதமாக ஆகஸ்ட் சேர்க்கபட்டு தொடர்ந்து இந்த இரண்டு மாதத்திற்கும் மட்டுமே 31 நாட்களை வைத்துள்ளனர். பூமி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் நேரம் 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடம் , 46 வினாடியாகும். ஆனால் நம் சூரிய நாள்காட்டி படி 365 நாட்கள் உள்ள நிலையில் மீதமுள்ள 5 மணி நேரம் 48 நிமிடம் , 46 வினாடியே தவிர்க்க இயலாது மூன்று ஆண்டுகளிலிருந்து இந்த மணி நேரங்களை சேர்த்து நான்காவது ஆண்டான லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளாக சேர்க்கபட்டுள்ளது. இது போன்று நான்கு ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நாள் சேர்க்கபடுவதால் 100 வருடங்களில் 18 மணி நேரம் 43 வினாடி சேர்க்கபடுகிறது. ஆதலால் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லீப் வருடம் கணக்கில் இருப்பதில்லை. இது மாதிரியான பல எதிர் சீர்த்திருத்தங்கள் கொண்ட இந்த கிரிக்கோ நாட்காட்டியை அறிஞர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/102069/லீப்-நாள்-பிப்ரவரி-29--ன்கிரிகோரியன்-நாட்காட்டிபின்னணி
    • அமெரிக்காவில் நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்து 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இத்தகைய ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வர வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/102070/நியூயார்க்-முழுவதும்-நாளைமுதல்-பிளாஸ்டிக்-பைகள்பயன்படுத்த-தடை    
    • மலேசிய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் புதிய பிரதமராக 72 வயது முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்டு உள்ளார். உலகில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், அண்மையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, பிரதமர் மகாதீர்முகமது , தமது பதவியை ராஜினாமாசெய்திருந்தார். இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட மகாதீர் முகமது , தொடர்ந்து பதவியை தக்க வைக்கவும்,எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பதவியை தட்டிப்பறிக்கவும் கடும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு வந்தனர். மலேசிய அரசியலில், அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை((Muhyiddin Yassin)) புதிய பிரதமராக நியமித்து, அந்நாட்டு மன்னர், அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். இதன்மூலம், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட்டு உள்ளது. மலேசியாவின் புதிய பிரதமராக Muhyiddin Yassin ஞாயிறன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். https://www.polimernews.com/dnews/102082/மலேசியாவின்-புதிய-பிரதமராகமுஹைதீன்-யாசின்-நியமனம்
    • புலத்திலுள்ளவர்களைக் குறிப்பிட்டேன். நாட்டு நிலவரம் உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் நிலைதான். 
    • எனக்கும்  உங்களைப்போல  கனவு  காண ஆசை  தான் ஆனால்  களமோ நிஐமோ  அதுவன்று........