• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
நிழலி

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி

Recommended Posts

நகரட்டும் உங்கள் நாட்டுக்கான பயணங்கள் 

அது சரி இந்த  ஜேர்மன் காரர்கள் கொஞ்சம் அப்படித்தான் போல கேட்டிக்கம்பால முதுகில ரெண்டு போடவேணும் நிழலி ( கு.சா, தமிழ் சிறி ) நான் உங்களை சொல்ல வில்லையப்பாtw_blush:tw_blush:

Share this post

Link to post
Share on other sites

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

சென்னையில் விமானம் தரையிறங்கிய உடனே விமானத்தில் இருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்க அவசரப்படத் தொடங்கினர். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவும் அமைதியாகவும் பயணித்த அதே பயணிகள் தான் சென்னையை அடைந்தவுடம் முற்று முழுதாக மாறி ஒருவரையொருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு இறங்கத் தொடங்குகின்றனர். இந்தவகையான முரண்பாடுகளை அடிக்கடி கவனித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்களை தென்னிந்தியவர்கள் மேற்கொள்கின்றனர்.

நானும் மகனும் நிதானமாக இறங்கி விமான நிலைய குடிவரவு பகுதிக்கு செல்லும் போது மிக நீண்ட வரிசை உருவாகியிருந்தது. நேரம் அதிகாலை 1 மணி இருக்கும். வேறு இரு  விமானங்கள் தாமதமாக வந்தமையால் ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிறங்கியதாகவும் அதனால் தான் பெரிய வரிசை என்றும் ஒரு சில பணியாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. சென்னை விமான நிலையம் பற்றிய செய்திகள் கேள்விப்பட்டு இருந்தமையாலும் அதிகாரிகள் மிகவும் அசமந்தமாக நடப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருந்தமையாலும் வரிசை மிக மெதுவாக நகரும் என நினைத்து சலிப்படைய ஆரம்பித்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு மாறாக வரிசை வேகமாக நகரத் தொடங்கி என் முறை வந்தது.

நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார். நான் காட்டியவுடன் அதை சரிபார்த்த பின் நான் multiple entries எடுத்து இருந்தமையால் இங்கிருந்து வேறு எங்கு செல்லப் போகின்றீர்கள் எனக் கேட்க நான் இலங்கைக்கு சென்று விட்டு மீண்டும் வருவேன் என்று கூறினதை ஏற்றுக் கொண்டு கமராவுக்கு முன் என்னை நிற்கச் சொல்லி ஒரு படமும் எடுத்து விட்டு மகனது பாஸ்போர்ட்டினை சரி பார்த்து அவனையும் ஒரு படம் எடுத்து விட்டு புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.

சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் என்று செய்திகளில் சொன்னாலும் அதை ஒரு தரமான விமான நிலையமாக பார்க்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் அழகான பிள்ளையார் சிலைகளும் வேறு சிலைகளும் வைத்து இருந்தனர். சென்னையின் / தமிழ்நாட்டின் தொன்மையை அதன் கலாச்சாரத்தினை பறைசாட்டும் அடையாளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குப்பையாக இல்லாவிடினும் சுத்தமாகவும் இல்லை. நிறைய இடங்கள் வெறுமையாக இருக்கின்றன.

ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. நீண்ட காலத்தின் பின் தமிழ் மண் ஒன்றில் காலை வைக்கின்றேன் என்ற உணர்வே ஒரு வகையான உற்சாகத்தினை தந்தது. அந்த உற்சாகத்தில் duty free shop இற்கு சென்று இரண்டு Glenfiddich Whisky வாங்கிக் கொண்டு (அதற்கு மேல் வாங்க முடியாதாம்) பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு (அவையும் விரைவாக வந்து விட்டன) வெளியே வர என் அக்காவின் குடும்பம் எமக்காக காத்திருந்தனர்.

அக்கா விமானம் தரையிறங்க முதல் ஒரு மணி நேத்துக்கு முன்பாகவே அத்தானுடனும் மகனுடனும் வந்து காத்திருந்தார். ஒன்பது வருடங்களின் பின் முதல் முறையாக அக்காவை சந்திக்கின்றேன். அம்மாவின் இடத்தை சமப்படுத்த மனைவியும் மகளும் எனக்கு வாய்த்திருந்தாலும் அக்காவின் இடம் இன்னும் அக்காவால் மட்டுமே நிரப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரே ஒரு சகோதரம், அதுவும் ஒன்பது வருட பிரிவுக்கு பின் சந்திக்கின்றேன். 7 வயதில் பார்த்த அக்காவின குட்டி மகன்16 வயது நெடு நெடுவென 6 அடிக்கு வளர்ந்து இருக்கும் பெரிய பெடியனாக காணுகின்றேன். அத்தான் இந்த 9 வருடத்தில் இலங்கையை சேர்ந்த கப்பல் போக்குவரத்து கம்பெனியில் regional manager ஆக தன் தொழில் துறையில் வளர்ர்சி அடைந்து நிற்கின்றார் (சென்னையில் தான் அதன் அலுவலகம்).

ஒன்றரை வயதுக்கு பின Skype இன் மூலமாக மட்டுமே பரிச்சயமாக இருந்த அக்காவின் குடும்பத்தினை என் மகன் காணுகின்றான். எப்படியான உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்று தெரியாமல் என் கைகளை இறுக்கிப் பிடிச்சு கொண்டு ஆள் நிற்கின்றான். முற்றிலும் மாறான ஒரு தேசத்தில் தனக்கு பழக்கமில்லாத ஒரு குடும்பத்துடன் எந்தளவுக்கு ஒன்றிப் போவான் என்பது எனக்குள் ஒரு கேள்வியாக எழுந்தது. என் பயணத்திட்டத்தின் படி மூன்றாம் நாள் நான் அவனை சென்னையில் விட்டுவிட்டு இலங்கைக்கு செல்ல வேண்டும். இலங்கையில் எனக்கு எப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருந்தமையால் அவனை கூட்டிக் கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்காது என்பதால் இலங்கைக்கு கூட்டிச் செல்ல நினைக்கவில்லை.

சாமம் மூன்று மணிக்கு அக்காவின் apartment வந்த பின் 4 மணிக்கு படுக்க போய் நல்லா அயர்ந்து நித்திரை கொள்ளும் போது சரியாக 6: 30 இற்கு பெரும் சத்தத்துடன் ஏதோ தொம் என்று விழுகின்றது. என்னவென பார்த்தால் அந்த கட்டிடத்தின் தண்ணீர் தாங்கியில் இருந்து தண்ணீரை கொண்டு வரும் குழாய் உடைந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியிருந்தது.....அதாவது அபார்ட்மென்டுக்கான தண்ணீர் அதை திருத்தும் வரை கிடைக்காது.

நான் வந்த அதிஷ்டத்தினை தண்ணீரை நிறுத்தி அபார்ட்மென் கொண்டாடத் தொடங்கியது

(சென்னையை பற்றி அடுத்து எழுதுகின்றேன்)

 • Like 12

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

சென்னையில் விமானம் தரையிறங்கிய உடனே விமானத்தில் இருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்க அவசரப்படத் தொடங்கினர். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவும் அமைதியாகவும் பயணித்த அதே பயணிகள் தான் சென்னையை அடைந்தவுடம் முற்று முழுதாக மாறி ஒருவரையொருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு இறங்கத் தொடங்குகின்றனர். இந்தவகையான முரண்பாடுகளை அடிக்கடி கவனித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்களை தென்னிந்தியவர்கள் மேற்கொள்கின்றனர்.

...

சென்னை அனுபவ குறிப்புகளுக்கு நன்றி நிழலி..!

 • மத்தியக் கிழக்கு நாடுகளின் விமான நிலையத்தில் ஆசிய நாட்டவர் யாராயினும், வாயையும், வாலையும் சுருட்டிக்கொண்டு ஐம்புலன்களையும் அடக்கிகொண்டு விமானமேறும் இவர்கள், தங்கள் நாட்டின் தரையை தொட்டதும் தங்கள் புத்தியை காட்டத்தொடங்கிவிடுவர்..
 • தரையிறங்கும்போது விமான பணிப்பெண் வந்து சொல்லும்போதுதான் இருக்கையின் சாய்வை சரிசெய்வார்கள், விமானத்தின் அறிவிப்புகளை துளியும் சட்டை செய்வதில்லை..
 • ஓடுதளத்தில் தரையிறங்கியதுமே கைப்பேசியை இயக்கத் தொடங்கிவிடுவர்..
 • விமானம் தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்த அடுத்த நொடியே முண்டியடித்து அனைவரும் எழுந்து தலைக்குமேல் இருக்கும் பொதிகளை அடுத்தவர்களின் தலையை பதம் பார்க்கும்வண்ணம் இறக்கி பொதிகளோடு வெளியேறும் கதவுகள் திறக்கும்வரை  கால்கடுக்க நிற்பார்கள்..
 • அதுமட்டுமா, வெளியேறும் வரிசை நகருகையில் ஓரமாக நின்று பேசி முடிக்காமல் உப்புச்சப்பற்ற விசயத்தை கைத்தொலைப்பேசியில் சத்தம்போட்டு பேசிகொண்டே வழியடைத்துக்கொண்டு செல்வதை பார்க்கலாம்..
 • குடியகல்வு சோதனைக்கு முண்டியடித்து நிற்பதும், குடும்பம், பெண்கள் செல்லும் வரிசையில் ஆண்கள் மட்டும் போய் நிற்பதும் இங்கே வழக்கம்..
 • எங்கும் வரிசையை மதிப்பதில்லை..

இன்னும் சின்னச் சின்ன எரிச்சல்கள் இருக்கின்றன.. ஆனால் இவைகளெல்லாம் வெளியே நமக்காக ஆவலோடு காத்திருக்கும் சொந்தங்களை கண்டவுடன் நொடியில் கரைந்துவிடும்..!

4 hours ago, நிழலி said:

.. நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார்..

மெய்யாலுமா? நம்ப முடியவில்லை..! ஒருவேளை நீங்கள் யாழ்களத்தின் 'மட்டு' என அவருக்கும் தெரிந்துவிட்டதோ..? :grin:

நான் சென்று பார்த்த சில நாடுகளில் சிங்கப்பூரைத் தவிர வேறு எங்குமே குடியகல்வு சோதனை அதிகாரிகள், சிரித்த முகத்தோடு பயணிகளை வரவேற்பதை பார்த்ததே இல்லை! :unsure:

துபாய், தோகா, பஹ்ரெய்ன் போன்ற இடங்களில் சுத்தம், உள்ளூர்(Local Arabs) அதிகாரிகள் பேசுவதற்கே நாம் காசு கொடுக்க வேணும்.. அவ்வளவு முக இறுக்கம்..! (பகட்டாய் இருந்தால் போதாது, கனிவும், பணிவும் வேண்டுமென யாரும் இவர்களுக்கு சொல்லவில்லையோ..?)

.

Edited by ராசவன்னியன்
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கள்...

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இடையில் கேள்வி கேட்பது பிடிக்கிறதோ இல்லயோ தெரியல்லை..தொடர் இனிதே முடியட்டும்..

Share this post

Link to post
Share on other sites

சென்னை தண்ணீர் தெளித்து வரவேற்று விட்டது....!

இன்றைய நாளில் பிள்ளைகள் எமது உறவுகள் தெரியாமல் இருந்தாலும் இலகுவாக சேர்ந்து கொள்கின்றார்கள் . அதுக்கு இந்த நவீன தொழில் நுட்பங்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்......! 

நல்லகாலம் மனைவியுடன் வந்திருந்தால் அவளது புன்னகையை கவனிக்க உங்களுக்கு வாய்ப்பு இருந்திருக்காது. காட் இஸ் கிரேட்...!

தொடருங்கள் நிழலி ....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On 5.3.2017 at 5:01 AM, Maruthankerny said:

எனக்கு எல்லாம் ஓகே ஆகத்தான் போனது 
நடை தூரம் கொஞ்சம் அதிகம் அதோடு அந்த முன் 
கேட் (வாசல்) செக்கிங்கில் நிற்கும் ஆட்களின் முகம் சுளிப்புகளும் 
எடுப்புகளும்தான் பிடிக்காதது.

என்னை போன்ற ஏர் லைன்ஸ் பயணிகளுக்கு தூரம் கூடினால் 
சிரமம் ..... நாம் டிக்கெட் வாங்கி வருவதில்லை 
எதில்  சீட் இருக்கிறதோ அதில் புக் பண்ணி சென்றுவிடுவோம்.
ஒரே ஏர்லைன்ஸ் என்றால் பரவாயில்லை ....
ஏர்லைன்ஸ் மாறினால் .... வெளியில் வந்து டிக்கெட் கவுண்டரில்தான் 
எம்மை கொன்பெர்ம் பண்ண வேண்டும் 
அப்போ ஒன்று இரண்டு தடவை வெளியில் வந்து போக நேரும் 
அதோடு ஏர்லைன்ஸ் மாறும்போது டெர்மினலும் மாறும் 
கொஞ்சம் கிட்ட கிட்ட இருந்தால் நல்லம்.

கீத்திரோ அது இதை விட கொடுமை .....
ரெயின் சுத்தி சுத்தி ஓடும் ..... ரயிலில் ஏறி இறங்கி 
கேட்டுக்கு போக ஒரு மணித்தியாலம் வேண்டும். 

அதைவிட ஏர்போர்ட் டாக்ஸ் (வரி) அதிகம் $180. 

(Frankfurt $49)  

மலிஞ்ச விலையிலை எல்லாம் வேணும்....அதுக்குள்ளை எல்லா வசதியும் இருக்கோணுமெண்டால்.......:grin:

Share this post

Link to post
Share on other sites
On 2017-03-03 at 1:31 AM, Maruthankerny said:

மிக கேவலமான ஏர்போர்ட் என்றால் எனக்கு துபாய்தான் (கஸ்ட்மர் சர்விஸ் ஸிரோ) 

அப்படித்தான் பல தென்னாசியர்கள் சொல்கின்றனர், ஆனால் என்னால் அப்படிச் சொல்ல மனம் இடம்கொடுக்குது இல்லை. எனக்கு 5 வருடங்கள் சோறும் வாழ்வும் வளமும் தந்த விமான சேவையை தன்னகத்தே கொண்ட விமான சேவை என்பதால் ஒரு நன்றிக் கடன்.

On 2017-03-03 at 2:38 AM, சுவைப்பிரியன் said:

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக தொடருவேன்

On 2017-03-04 at 6:27 AM, யாயினி said:

அனேகமாக யேர்மன் ஊடாக பயணிப்பவர்கள் வெயிற்றிங் ரைம் குறைவு என்று சொல்வார்கள்..எதனால் 5 மணி நேர தாமதம்..? 
ஏன் எனில் சிறுவர்களோடு பயணிக்கும் போது நீண்ட நேர காத்திருப்புக்கள் வேணுமா....

நான் பயண திட்டம் போடும் போது ஆகக் குறைந்தது 3 மணி நேர காத்திருப்புமிக்க transit இனைத்தான் நாடுவது அதிகம். காரணம், விமானம்  ஒரு சில மணித்தியாலம் தாமதித்தாலும் transit இல் விமானத்தினை தவற விட சந்தர்ப்பம் குறைவு. அவசர அவசரமாக இறங்கி விழுந்தடித்துக் கொண்டு பரபரக்கத் தேவை இல்லை. அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதை என் இரண்டாம் பயணமே சான்று

On 2017-03-04 at 4:28 PM, ஈழப்பிரியன் said:

நிழலி இனி எந்த விமானநிலையம் போனாலும் நான்தான் யாழ் கள பொறுப்பாளர் என்று சொல்லுங்கள்.விஐபி மரியாதை.

பின்னூட்டத்துக்கும் நக்கலுக்கும் நன்றி

On 2017-03-05 at 0:44 AM, முனிவர் ஜீ said:

நகரட்டும் உங்கள் நாட்டுக்கான பயணங்கள் 

அது சரி இந்த  ஜேர்மன் காரர்கள் கொஞ்சம் அப்படித்தான் போல கேட்டிக்கம்பால முதுகில ரெண்டு போடவேணும் நிழலி ( கு.சா, தமிழ் சிறி ) நான் உங்களை சொல்ல வில்லையப்பாtw_blush:tw_blush:

பின்னூட்டத்துக்கு நன்றி

On 2017-03-05 at 11:02 PM, ராசவன்னியன் said:

மெய்யாலுமா? நம்ப முடியவில்லை..! ஒருவேளை நீங்கள் யாழ்களத்தின் 'மட்டு' என அவருக்கும் தெரிந்துவிட்டதோ..? :grin:

நான் சென்று பார்த்த சில நாடுகளில் சிங்கப்பூரைத் தவிர வேறு எங்குமே குடியகல்வு சோதனை அதிகாரிகள், சிரித்த முகத்தோடு பயணிகளை வரவேற்பதை பார்த்ததே இல்லை! :unsure:

துபாய், தோகா, பஹ்ரெய்ன் போன்ற இடங்களில் சுத்தம், உள்ளூர்(Local Arabs) அதிகாரிகள் பேசுவதற்கே நாம் காசு கொடுக்க வேணும்.. அவ்வளவு முக இறுக்கம்..! (பகட்டாய் இருந்தால் போதாது, கனிவும், பணிவும் வேண்டுமென யாரும் இவர்களுக்கு சொல்லவில்லையோ..?)

.

ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் அமைகின்றன. Frankfurt வளர்ந்த நாட்டு விமான நிலையம் என்பதால் எல்லாம் நல்லா இருக்கும் என்று நினைக்க, நிகழ்ந்த அனைத்து சிரமங்களும் கடும் சலிப்பையும் கோபத்தினையும் தந்தன; சென்னை விமான நிலையம் மோசம் என்ற எதிர்பார்ப்பில் இருக்க நிகழ்ந்த சின்ன சின்ன சந்தோசங்களும் பல மடங்கு மகிழ்வை தந்தன.

மகனுடன் தனியாக பயணித்தமையால் அந்த குடிவரவு அதிகாரிக்கு ஒரு வித ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் சென்னையை விட்டு கனடாவுக்கு பயணித்த போது இருந்த குடிவரவு அதிகாரி காட்டிய அக்கறையும் உரையாடலும் மனசை மகிழ்விக்க செய்தன. அதை பற்றி பின்னர் எழுதுகின்றேன்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 2017-03-06 at 3:14 PM, ரதி said:

தொடருங்கள்...

நன்றி ரதி. ஒரு பதிவை பதிந்தபின் ஒரு சிலரது பின்னூட்டங்களையும் விமர்சனத்தினையும் எதிர்பார்ப்பேன். அதில் உங்களது பின்னூட்டமும் ஒன்று

On 2017-03-07 at 0:25 AM, யாயினி said:

இடையில் கேள்வி கேட்பது பிடிக்கிறதோ இல்லயோ தெரியல்லை..தொடர் இனிதே முடியட்டும்..

கடந்த பதிவை போடும் போது பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நேரம் கிடைக்கவில்லை. முன்னர் அலுவலகத்தில் இருந்து எழுத முடிந்தது; ஆனால் இப்ப முடியாது என்பதால் எழுதக் கிடைக்கும் நேரம் மிகவும் குறைவு. அதனால் தான் கேள்விகளுக்கு பதில் எழுத தாமதம் ஆனது

On 2017-03-07 at 1:57 AM, suvy said:
On 2017-03-07 at 2:09 PM, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் .புங்கை பாவம் பிள்ளை குட்டிக்காறர்tw_blush:

தொடருங்கள் நிழலி ....!  tw_blush:

கண்டிப்பாக தொடருவேன். வெள்ளி அல்லது வார இறுதியில் அதிகமாக படங்களுடன் எழுதுகின்றேன்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. 

தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால்  plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள்.

காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை  நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம்.

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது.

சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம்.

Horn அடிக்காத வாகனங்கள் இல்லை.

கொழும்பில்  Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்...

ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது.

மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்..

என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக.

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது

awbzi8.jpg

258m3o0.jpg

இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது..

நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன்.

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது.

ஒன்ரை மணியளவில், அடுப்பில் இருந்த நண்டுக் கறியின் வாசனை மூக்கைத் துளைக்க, மாட்டு இறைச்சி டெவிலும், கோழிக் கால் பொரியலும், Sausages  அக்கா சமைச்சுத் தர எங்கள் முதல் பார்ட்டி கோலாகலமாக ஆரம்பமானது.

(மிச்சம் பிறகு)

 • Like 15

Share this post

Link to post
Share on other sites
On 6.3.2017 at 0:47 AM, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு------

நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார். நான் காட்டியவுடன் அதை சரிபார்த்த பின் நான் multiple entries எடுத்து இருந்தமையால் இங்கிருந்து வேறு எங்கு செல்லப் போகின்றீர்கள் எனக் கேட்க நான் இலங்கைக்கு சென்று விட்டு மீண்டும் வருவேன் என்று கூறினதை ஏற்றுக் கொண்டு கமராவுக்கு முன் என்னை நிற்கச் சொல்லி ஒரு படமும் எடுத்து விட்டு மகனது பாஸ்போர்ட்டினை சரி பார்த்து அவனையும் ஒரு படம் எடுத்து விட்டு புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.

சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் என்று செய்திகளில் சொன்னாலும் அதை ஒரு தரமான விமான நிலையமாக பார்க்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் அழகான பிள்ளையார் சிலைகளும் வேறு சிலைகளும் வைத்து இருந்தனர். சென்னையின் / தமிழ்நாட்டின் தொன்மையை அதன் கலாச்சாரத்தினை பறைசாட்டும் அடையாளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குப்பையாக இல்லாவிடினும் சுத்தமாகவும் இல்லை. நிறைய இடங்கள் வெறுமையாக இருக்கின்றன.

ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. நீண்ட காலத்தின் பின் தமிழ் மண் ஒன்றில் காலை வைக்கின்றேன் என்ற உணர்வே ஒரு வகையான உற்சாகத்தினை தந்தது.

(சென்னையை பற்றி அடுத்து எழுதுகின்றேன்)

அழகான எழுத்து நடை.  நிழலி.
பல முறை இந்தத் திரிக்குள் வந்து, போனாலும்.... 
ஆற அமர்ந்து....  கருத்து சொல்லாமைக்கு நேரப்பற்றாக்  குறையே காரணம். 

நீல நிறத்தில் மேற்கோள் காட் டப்  பட் ட வரிகளை, உங்கள் எழுத்தில்... வாசித்த போது, பெருமையாக இருந்தது.
ஈழத் தமிழர் இழந்தவற்றை... தமிழகமும் இழக்க மாட் டாது என, நம்பிக்கை இருக்கின்றது.
அதுகும்....  ஜல்லிக்கட்டு மாணவர் எழுச்சியின் பின்.... 
இனி வரும், தமிழக அரசியல் வாதிகள் விழிப்பாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த விடயத்தில்..... நெடுமாறன் ஐயாவின் ஆரம்பமும்,
அதனைத் தொடர்ந்த....   சீமான், வைகோ...  போன்றவர்களுக்கு ..... 
நன்றி.... சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, நிழலி said:

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

awbzi8.jpg

இரண்டு கிழமை சுற்றுலா செல்லும் ஒருவர்.... (அதிலும்... ஒரு கிழமை சிலோன் பக்கம்  போகிறவர்)
அரக்கப் பரக்க  திரியாமல், நண்டு வித்த... பெண்மணி   சுலோச்சனா என்று, பெயரையும் கேட்டுக் கொண்டு வந்ததைப்  பார்த்து, அப்படியே.... ஆடிப் போயிட்டேன். :D:

படத்தில்... பெரு விரலில் மருதாணி பூசிய கை.... சுலோச்சனாவின்,  கை  தானா ?
(கையை... விட, நண்டு பெரிசாயிருக்கு.... ) tw_tounge_xd:

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, நிழலி said:

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. 

தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால்  plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள்.

காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை  நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம்.

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது.

சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம்.

Horn அடிக்காத வாகனங்கள் இல்லை.

கொழும்பில்  Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்...

ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது.

மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்..

என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக.

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது

awbzi8.jpg

258m3o0.jpg

இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது..

நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன்.

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது.

(மிச்சம் பிறகு)

நிழலி வாங்கிய சாமானைப் பார்த்தா ஏதோ அகதி முகாமிலிருந்து போன ஆள் மாதிரியெல்லோ இருக்கு.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, நிழலி said:

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

தொடர் நல்லாயிருக்குது..!

இந்தியாவில நீங்கள் ரவுண்ட் எபவுட்டை சுத்திப் போகத் தேவையில்லை! நேரடியாகவே எக்சிட் எடுக்கலாம் என்று கூறுவார்கள்! போலீஸ்காரர் ஏதாவது கேட்டால் ஒரு பீடிக்கட்டோடு அலுவலை முடிக்கலாம் என்று சொல்லுவார்கள்!

அது சரி.....உங்களுக்கு உள்ளது..குடலா அல்லது கடலா?:mellow:

Share this post

Link to post
Share on other sites

உது எல்லாத்தையும் ஒன்றாய் சாப்பிட்டு வயித்தால அடிக்கேல்லையோ?...காசை எடுத்து விசுக்கினால் நண்டு விற்கிற அம்மாவில் இருந்து எல்லோரும் அன்பாத் தான் கதைப்பினம்<_<

Share this post

Link to post
Share on other sites
On 6.3.2017 at 0:47 AM, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

வெளியே வர என் அக்காவின் குடும்பம் எமக்காக காத்திருந்தனர்.அக்கா விமானம் தரையிறங்க முதல் ஒரு மணி நேத்துக்கு முன்பாகவே அத்தானுடனும் மகனுடனும் வந்து காத்திருந்தார். ஒன்பது வருடங்களின் பின் முதல் முறையாக அக்காவை சந்திக்கின்றேன். அம்மாவின் இடத்தை சமப்படுத்த மனைவியும் மகளும் எனக்கு வாய்த்திருந்தாலும் அக்காவின் இடம் இன்னும் அக்காவால் மட்டுமே நிரப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரே ஒரு சகோதரம், அதுவும் ஒன்பது வருட பிரிவுக்கு பின் சந்திக்கின்றேன்.

கனத்த வரிகள் காலம் எல்லாவற்றையும் விழுங்கிச் செல்கிறது. தேசத்தை மட்டுமா(?) பிரிந்தோம்......

தொடருங்கள் ..............

முன்பு மணியனின்(?)பயணக்கட்டுரைகளை அப்பப்போ வாசிப்பதுண்டு.
 நிழலியவர்களின் அனுபவப்பதிவு எங்களையும் அதனுள்ளே அழைத்துச்செல்கிறார். கூடப்பயணிப்போம். 
நன்றி. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Quote

ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் அமைகின்றன. Frankfurt வளர்ந்த நாட்டு விமான நிலையம் என்பதால் எல்லாம் நல்லா இருக்கும் என்று நினைக்க, நிகழ்ந்த அனைத்து சிரமங்களும் கடும் சலிப்பையும் கோபத்தினையும் தந்தன; சென்னை விமான நிலையம் மோசம் என்ற எதிர்பார்ப்பில் இருக்க நிகழ்ந்த சின்ன சின்ன சந்தோசங்களும் பல மடங்கு மகிழ்வை தந்தன.

மகனுடன் தனியாக பயணித்தமையால் அந்த குடிவரவு அதிகாரிக்கு ஒரு வித ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் சென்னையை விட்டு கனடாவுக்கு பயணித்த போது இருந்த குடிவரவு அதிகாரி காட்டிய அக்கறையும் உரையாடலும் மனசை மகிழ்விக்க செய்தன. அதை பற்றி பின்னர் எழுதுகின்றேன்

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கள் 

Share this post

Link to post
Share on other sites
On 11/03/2017 at 1:44 AM, குமாரசாமி said:

On 2017-03-10 at 2:19 PM, தமிழ் சிறி said:

அழகான எழுத்து நடை.  நிழலி.
பல முறை இந்தத் திரிக்குள் வந்து, போனாலும்.... 
ஆற அமர்ந்து....  கருத்து சொல்லாமைக்கு நேரப்பற்றாக்  குறையே காரணம். 

நீல நிறத்தில் மேற்கோள் காட் டப்  பட் ட வரிகளை, உங்கள் எழுத்தில்... வாசித்த போது, பெருமையாக இருந்தது.
ஈழத் தமிழர் இழந்தவற்றை... தமிழகமும் இழக்க மாட் டாது என, நம்பிக்கை இருக்கின்றது.
அதுகும்....  ஜல்லிக்கட்டு மாணவர் எழுச்சியின் பின்.... 
இனி வரும், தமிழக அரசியல் வாதிகள் விழிப்பாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த விடயத்தில்..... நெடுமாறன் ஐயாவின் ஆரம்பமும்,
அதனைத் தொடர்ந்த....   சீமான், வைகோ...  போன்றவர்களுக்கு ..... 
நன்றி.... சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

ஆற அமர்ந்து வாசிச்சு கருத்தெழுதியமைக்கு நன்றி தமிழ்சிறி. தமிழகத்தில் சில விடயங்கள் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும் என விதி இருக்கு என நினைக்கின்றேன். உதாரணமாக கடைப் பெயர்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என்பது தமிழக அல்லது மாநகர சட்டம் என நினைக்கின்றேன். ராஜவன்னியன் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள் எழுதவும்.

நெடுமாறன், சீமான், வைகோ போன்றவர்கள் மீதான என் பார்வை வேறு

On 2017-03-10 at 2:39 PM, தமிழ் சிறி said:

இரண்டு கிழமை சுற்றுலா செல்லும் ஒருவர்.... (அதிலும்... ஒரு கிழமை சிலோன் பக்கம்  போகிறவர்)
அரக்கப் பரக்க  திரியாமல், நண்டு வித்த... பெண்மணி   சுலோச்சனா என்று, பெயரையும் கேட்டுக் கொண்டு வந்ததைப்  பார்த்து, அப்படியே.... ஆடிப் போயிட்டேன். :D:

படத்தில்... பெரு விரலில் மருதாணி பூசிய கை.... சுலோச்சனாவின்,  கை  தானா ?
(கையை... விட, நண்டு பெரிசாயிருக்கு.... ) tw_tounge_xd:

சுலோச்சனா என்ற பெயரை கேட்டவுடனேயே மனசில் அந்தப் பெயர் பச்சக் என்று ஒட்டிவிட்டது. அத்துடன் அவரிடம் என் அக்கா அடிக்கடி மீன் வாங்குவதால் மிகவும் ஈடுபாட்டுடன் உரையாடியதும் பிடிச்சு இருந்தது. அவருக்கு ஒரு 50 வயது இருக்கும் என நினைக்கின்றேன். முகம் முழுதும் மகிழ்வுடன் இருந்தார். சுலோச்சனாவின் படமும் என்னிடம் உள்ளது.அவரது அனுமதி இன்றி பிரசுரிப்பது தவறு என்பதால் அதை இங்கு இணைக்கவில்லை,

On 2017-03-10 at 3:17 PM, ஈழப்பிரியன் said:

நிழலி வாங்கிய சாமானைப் பார்த்தா ஏதோ அகதி முகாமிலிருந்து போன ஆள் மாதிரியெல்லோ இருக்கு.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

On 2017-03-10 at 3:28 PM, புங்கையூரன் said:

அது சரி.....உங்களுக்கு உள்ளது..குடலா அல்லது கடலா?:mellow:

ஹிஹி இந்தக் குடல் இதுவரைக்கும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தான் இருக்கு. மற்றது, இவற்றில் சில ஒரு வாரத்துக்கு என்று வாங்கியவை (நண்டைத் தவிர)

Share this post

Link to post
Share on other sites
On 2017-03-10 at 3:38 PM, ரதி said:

உது எல்லாத்தையும் ஒன்றாய் சாப்பிட்டு வயித்தால அடிக்கேல்லையோ?...காசை எடுத்து விசுக்கினால் நண்டு விற்கிற அம்மாவில் இருந்து எல்லோரும் அன்பாத் தான் கதைப்பினம்<_<

பொதுவாக எனக்கு என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளும். அத்துடன் இதுகள் எல்லாம் போய் வயிற்றை ஒரு வழி பண்ணாமல் இருக்கத்தான் விஸ்கி அடிப்பது.

சென்னை மக்கள் அன்பானவர்கள் என்று சொல்லியமைக்கு இது மட்டும் காரணம் அல்ல. வேறு மூன்று சம்பவங்கள் இடம்பெற்றன. இறுதியாக நடந்தமைக்கு ஒரு வேளை வேறு காரணம் இருப்பினும் மிச்ச இரண்டும் அப்படி அல்ல. அவை மூன்றையும் தொடரில் எழுதுவேன்.

On 2017-03-10 at 4:23 PM, nochchi said:

கனத்த வரிகள் காலம் எல்லாவற்றையும் விழுங்கிச் செல்கிறது. தேசத்தை மட்டுமா(?) பிரிந்தோம்......

தொடருங்கள் ..............

முன்பு மணியனின்(?)பயணக்கட்டுரைகளை அப்பப்போ வாசிப்பதுண்டு.
 நிழலியவர்களின் அனுபவப்பதிவு எங்களையும் அதனுள்ளே அழைத்துச்செல்கிறார். கூடப்பயணிப்போம். 
நன்றி. 

நானும் சிறு வயதில் இதயம் பேசுகின்றது எனும் சஞ்சிகையில் வந்த மணியனின் ஒன்று இரண்டு பயணக் கட்டுரைகளை வாசித்து இருக்கின்றேன். அதில் ஒன்று சிறிமாவோ வை இலங்கை வந்து சந்தித்தது.

தொடர்ந்து வாசித்து கருத்துகளை எழுதுங்கள். பின்னூட்டங்கள் தான் எழுத உத்வேகத்தினை கொடுப்பவை

On 2017-03-10 at 7:44 PM, குமாரசாமி said:

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

என்னுடைய பதிலுக்கும் உங்கள் பதிலுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கு என புரியவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி

On 2017-03-13 at 3:00 PM, kkaran said:

தொடருங்கள் 

வருகைக்கு நன்றி. அடிக்கடி உங்களை இங்கு காண முடியுது இல்லை. தொடர்ந்து வாசித்து கருத்து எழுதுங்கள் கரன்

Share this post

Link to post
Share on other sites

சரி அலட்டலை விட்டிட்டு  கதையை தொடருங்கோ 

12 minutes ago, நிழலி said:

பொதுவாக எனக்கு என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளும்.

என்ர மனுசியும் , இது என்ன சாரப்பாம்பின்ர  குடலோ எண்டு தான் கேக்கிறாரா (அது பிறப்பில வந்தது . நான் என்ன செய்ய  எத போட்டாலும் செமிக்குது )

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, நிழலி said:

என்னுடைய பதிலுக்கும் உங்கள் பதிலுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கு என புரியவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி

எதற்கும் நீங்கள் இந்த திரியில் எழுதியவற்றை திரும்ப வாசித்து பாருங்கள்.

எங்கோ ஒரு இடத்தில் நான் எழுதியதின் தொடர்பு இருக்கும்.tw_blush:

அது சரி தொடர்பில்லாத பின்னோட்டங்களுக்கு எதற்காக நன்றி:)

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

... தமிழகத்தில் சில விடயங்கள் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும் என விதி இருக்கு என நினைக்கின்றேன். உதாரணமாக கடைப் பெயர்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என்பது தமிழக அல்லது மாநகர சட்டம் என நினைக்கின்றேன். ராஜவன்னியன் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள் எழுதவும்.

இது உண்மைதான்..

தமிழகத்திலுள்ள அனைத்து வணிக,கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் இருக்கவேண்டுமென அரசு உத்தரவு பல வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது.. தமிழுக்கு முக்கியத்துவம் கட்டாயம், அடுத்து ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும்,விரும்பினால் பிற மொழிகளில் அடுத்ததாகவும் இருக்கவேண்டுமென விதி நடைமுறையில் இன்றும் உள்ளது.. சில பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விதியை கடைப்பிடிக்க தவறிய நிகழ்வுகளும் உண்டு..

இது பற்றிய செய்தி இங்கே

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • 'தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு' என்ற திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். நன்றி.
  • படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'நச்சுத்தன்மையுள்ள ஆண்மை' (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம். பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது 'வோக் கேபிடலிசம்' (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல. 1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்தூரம் செல்லவேண்டிய நிலைமையில் இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்க பிரச்சாரகர் எலிசபெத் கேடி ஸ்டான்ட்டன் என்பவர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மகளிர் உரிமை மாநாட்டில் பேசி சர்ச்சையை உருவாக்கினார். அது ரொம்ப பெரிய ஆசை என்று அவருடைய ஆதரவாளர்களே கூட கருதினர். இதற்கிடையில் பாஸ்டன் நகரில், திரையில் வெற்றி பெற முடியாத ஒரு நடிகர் ஒரு கண்டுபிடிப்பாளராக தன் அதிர்ஷ்டத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஒரு பட்டறை ஷோரூமில் சிறிய இடத்தை அவர் வாடகைக்கு எடுத்திருந்தார். மரத்தில் எழுத்துகளை செதுக்குவதற்கு தனது மெஷினை விற்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆனால், மரத்தில் எழுத்துருக்களை செதுக்குவது அப்போது வழக்கொழியத் தொடங்கிவிட்டது. அந்த இயந்திரம் நுட்பமான தொழில்நுட்பம் கொண்டது. ஆனால் அதை வாங்க யாரும் விரும்பவில்லை. நம்பிக்கை இழந்திருந்த அவரை, விற்க முடியாமல் கிடந்த தையல் மெசின்களை பார்க்கும் படி அந்த பட்டறையின் உரிமையாளர் அழைத்தார். அது சரியாக விற்கவில்லை. பல தசாப்தங்களாக பலர் முயற்சி செய்தும், அந்த மெஷினை விற்பனைக்கு ஏற்ற அளவில் யாராலும் தயாரிக்க முடியவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐசக் மெரிட் சிங்கர் வாய்ப்பு தெளிவாக இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு அதிக சம்பளம் தர வேண்டியிராத காலம் அது - நியூயார்க் ஹெரால்டு பின்வருமாறு கூறியிருந்தது: ``தங்கள் வேலைக்கு மிகக் குறைந்த அளவு ஊதியம் தரப்படும் வேறு பெண் தொழிலாளர்கள் இல்லை அல்லது கடினமாக உழைக்கும் வேறு பெண்களை பார்த்திருக்க முடியாது'' என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால், துணி தைக்க அதிக நேரம் தேவைப்பட்டது - ஒரு சட்டை தைக்க 14 மணி நேரம் ஆனது. எனவே வேகமாக துணி தைக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற தேவை அப்போது இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு மட்டும் தான் அந்தச் சிரமம் என்றில்லை: பெரும்பாலான மனைவியரும், மகள்களும் துணி தைக்க வேண்டும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. சமகால எழுத்தாளர் சாரா ஹாலே கூறியுள்ளபடி, அந்த ``ஒருபோதும் முடிவுறாத - எப்போதும் தொடக்கமாகவே உள்ள'' அந்த வேலையானது பலரையும் ``சர்வகாலமும் துயரத்திலேயே இருக்கும் நபர்களாக'' ஆக்குவதாக இருந்தது. பாஸ்டன் தொழிலகத்தில், கண்டுபிடிப்பாளர் அந்த மெஷினைப் பார்த்து சொன்னார்: ``பெண்களை அமைதியாக வைத்திருக்கும் ஒரே விஷயத்தையும் மாற்றிவிட நீங்கள் விரும்புகிறீர்கள்'' என்று கூறினார். திரையில் தோற்றுப் போய், கண்டுபிடிப்பாளராக மாறிய அந்த நபர் ஐசக் மெர்ரிட் சிங்கர். பகட்டாக உடுத்தக் கூடிய, கவர்ச்சியுள்ள மற்றும் தாராள சிந்தனை உள்ளவராகவும், அதேசமயம் கடுமையானவராகவும் இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுதல் சிங்கர் தையல் மிஷின் 1851 பேடண்ட் உரிமை பெற்றது திருத்த முடியாத அளவுக்கு, நிறைய பெண்களுடன் காதல் கொண்டவராக இருந்த அவர் குறைந்தது 22 குழந்தைகளுக்குத் தந்தையானார். பல ஆண்டுகளாக அவர் மூன்று குடும்பங்களைப் பராமரித்து வந்தார். மூன்று பேருக்குமே, மற்ற இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் இன்னொருவரையும் அவர் திருமணம் செய்து கொள்வார். அவர் தன்னை அடித்தார் என்று யாராவது ஒரு பெண் புகார் சொல்வார். அவருடைய நடத்தை சில பெண்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றாலும், இயல்பாக சிங்கர் மகளிர் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய ரூத் பிரான்டன், ``பெண்ணிய இயக்கத்துக்கு உறுதியாக முதுகெலும்பை உருவாக்கிய மனிதர்'' என்று அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தையல் மெஷினுக்கான அடிப்படையான மாதிரியை சிங்கர் உருவாக்கினார். ``ஊடூசி வட்டமான பாதையில் அசைவதற்குப் பதிலாக, அது நேர்க்கோட்டில் முன்னும் பின்னும் செல்லும் வகையில் வடிவமைக்க விரும்புகிறேன். ஊசியின் பட்டை, வளைவான ஊசியை கிடைமட்டமாக நகர்த்துவதற்குப் பதிலாக, நேரான ஒரு ஊசி மேலும் கீழும் செல்வது போல உருவாக்க விரும்புகிறேன்'' என்று தொழிலகத்தின் உரிமையாளரிடம் அவர் கூறினார். சிங்கர் தனது மெஷின்களுக்கு காப்புரிமை பெற்று, விற்பனை செய்யத் தொடங்கினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது: முதலாவது வடிவமைப்பு நன்கு செயல்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஒரு சட்டையைத் தைக்க முடிந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிங்கர் மிஷின் விளம்பரம் - 1900 துரதிருஷ்டவசமாக, மற்ற கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மற்ற கருவிகளையும் அது சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. பள்ளம் உள்ள, கண் போன்ற துளையுள்ள ஊசி, முடிச்சு போடும் தையல், துணியை உள்ளே தள்ளுவதற்கான நுட்பம் கொண்டவை என பல அப்போது பயன்பாட்டில் இருந்தன. 1850களின் ``தையல் மெஷின் போர்'' நடந்த காலத்தில், தையல் மெசின் தயாரிப்பாளர்கள், தங்கள் மெசின்களை விற்பதைவிட பிற தயாரிப்பாளர்கள் மீது காப்புரிமை மீறியதாக வழக்குப் போடுவதில்தான் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் ஒரு வழக்குரைஞர் அவர்களை ஒன்று சேர்த்தார். ஒரு நல்ல தையல் மெஷினை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நான்கு தரப்பினரிடம் இருந்தன. அவற்றுக்கு லைசென்ஸ் வாங்கி, ஒன்றாக பயன்படுத்தி ஏன் தைக்கக் கூடாது என யோசித்தார். சட்டப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தையல் மெஷின் மார்க்கெட் சூடு பிடித்தது - அதில் சிங்கர் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியாளர்களைவிட அவருடைய தொழிற்சாலைகள் எப்படி வித்தியாசமாக இருந்தன என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனிப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, மாற்றிக் கொள்ளக் கூடிய பாகங்களைக் கொண்டதாக இருந்த ``அமெரிக்க முறையிலான'' மெஷின் என்ற வகையில் மற்றவர்கள் தயாரித்தனர். அப்போதும் இந்த நடைமுறைக்கு சிங்கர் மாறுவற்கு தாமதமானது. கைகளால் தயாரிக்கப்பட்ட பாகங்களையும், கடைகளில் வாங்கப்பட்ட போல்ட், நட்களையும் கொண்டு அவருடைய மெஷின்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் சிங்கரும், அவருடைய வர்த்தக பங்காளர் எட்வர்ட் கிளார்க்கும் வேறொரு வழியில் முன்னோடிகளாக இருந்தனர். சந்தைப்படுத்துதலில் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர். தையல் மெஷின்கள் விலை அதிகமாக இருந்தது. சராசரி குடும்பம் பல மாதங்கள் சேமித்தால் தான் அதை வாங்க முடியும் என்றிருந்தது. மெஷின்களை தவணை கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை கிளார்க் முன்மொழிந்தார். குடும்பத்தினர் மாதம் சில டாலர்கள் வாடகைக்கு அந்த மெஷின்களை எடுத்துக் கொள்ளலாம். வாடகையாக அவர்கள் செலுத்திய பணம், மெஷினின் விலையை எட்டிவிட்டால், அந்த மெசின் அவருக்குச் சொந்தமாகிவிடும். முந்தைய ஆண்டுகளில் இருந்த மெதுவாக தைக்கும், அதிகம் நம்பியிருக்க முடியாத மெஷின்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு இது உதவிகரமாக இருந்தது. சிங்கர் நிறுவனத்தின் ஏஜென்ட்களும் அதற்கேற்ப பணியாற்றினர். மெஷினை வாங்கும் போது, அதை பொருத்திக் கொடுப்பதுடன், அது நன்கு செயல்படுகிறதா என பார்ப்பதற்கு அவ்வப்போது சென்று வந்தனர். அப்போதும் சந்தைப்படுத்தலில் ஒரு பிரச்சினை இருந்தது. பெண்ணின வெறுப்பு என்ற ரூபத்தில் பிரச்சினை வந்தது. "தையல் மெசினை திருமணம் செய்ய முடியும்போது..." இதற்கு இரண்டு கார்ட்டூன்களை ஸ்டான்டன் உருவாக்கினார். ஒரு தையல் மெசினை உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஏன் ``தையல் மெசினை'' வாங்குகிறீர்கள் என்று ஓர் ஆண் கேட்பது போல ஒரு கார்ட்டூன் இருந்தது. பெண்கள் தங்களது ``அறிவை வளர்த்துக் கொள்ள'' கூடுதல் நேரம் கிடைக்கும் என்று விற்பனையாளர் சொல்வது போல இன்னொரு கார்ட்டூன் இருந்தது. அதில் சொல்ல வந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட்டது. விலை உயர்ந்த இந்த மெஷின்களை பெண்களால் இயக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. தன் சொந்த வாழ்க்கையில் பெண்களை எந்த அளவுக்கு மரியாதைக் குறைவாக நடத்தியிருந்தாலும், இந்த மெஷினை பெண்கள் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிப்பதில் தான் அவருடைய வியாபாரம் சார்ந்திருந்தது. நியூயார்க் பிராட்வே பகுதியில் ஒரு கடையை அவர் வாடகைக்கு எடுத்து, இந்த மெசின்களை எப்படி பயன்படுத்துவது என்று காட்டுவதற்காக சில இளம் பெண்களை பணிக்கு அமர்த்தினார். அங்கு நல்ல கூட்டம் கூடியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption1907 எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படம் முடிவெடுக்கும் நபர்களாக பெண்கள் உருவாகலாம் என்பதாக சிங்கரின் விளம்பரங்கள் இருந்தன. ``தயாரிப்பாளரால் நேரடியாக குடும்பத்தின் பெண்களுக்கு விற்கப்படுகிறது'' என்று விளம்பரம் செய்தார். பெண்கள் நிதி சுதந்திரம் பெற ஆசைப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை அது உருவாக்கியது. ``நல்ல பெண் தையல் தொழிலாளி ஆண்டுக்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்க முடியும்'' என்று விளம்பரம் செய்தார். 1860 ஆம் ஆண்டு வாக்கில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படி புகழ்ந்தது: வேறு எந்த கண்டுபிடிப்பும் நமது தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு ``இவ்வளவு பெரிய விடுதலையை'' அளிக்கவில்லை என்று எழுதியது. தையல் பெண்மணிகள், ``குறைவான உழைப்பில், நல்ல வருமானத்தை'' ஈட்டத் தொடங்கினர். அப்போதும், "ஆணின் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு'' என்று கூறி, தி டைம்ஸ் பத்திரிகை பாலின பெருமை பேசியது. ஒரு பெண்மணியை நாம் கேட்டால் தெரிந்துவிடும். 1860ல் வெளியான Godey's Lady's Book and Magazine-ல் சாரா ஹாலே இப்படி கூறியுள்ளார்: ``ஊசியுடன் வாழ்ந்த பெண்மணி, இரவில் ஓய்வெடுக்க முடிகிறது. குடும்ப வேலைகளை கவனிக்கவும், மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடவும் பகல் பொழுதில் பெண்ணுக்கு நேரம் கிடைக்கிறது. இது உலகிற்கு பெரிய லாபம் இல்லையா?'' என்று அவர் கூறியுள்ளார். வோக் கேபிடலிசம் என்னும் 'முற்போக்கு முதலாளித்துவம்' பற்றி இன்றைய காலக்கட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிக அளவில் பீர் மற்றும் ரேஸர்களை விற்பவையாக அவை உள்ளன, சரிதானா? சில்லரை வருமானங்களில் தாம் அக்கறை காட்டுவதாக சிங்கர் கூறினார். மிக உயர்வான சுய அக்கறையுள்ள உந்துதல்களால் சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு அவர் நிரூபணமாக இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-51125872
  • "இந்தியர்கள் மீது நேசம், கீதையின் பெயரால் பதவியேற்பு" : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் படத்தின் காப்புரிமைTWITTER/BOBBLACKMAN கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு. சரி யார் இந்த பாப் ப்ளாக்மேன்? பாப் ப்ளாக்மேன் இந்திய அரசுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரோ ஈஸ்ட் பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை பூர்வீகமாக இல்லாத போதும் அங்கு நின்று வென்றார் பாப் ப்ளாக்மேன். ஹவுஸ் ஆஃப் காமான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினராக பகவத்கீதை மற்றும் பைபிள் மீது உறுதிமொழி எடுத்துப் பதவியேற்றவர் பாப் ப்ளாக்மேன். தனது ட்விட்டரின் முகப்பு படமாக இந்திய பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படத்தையே பாப் ப்ளாக்மேன் வைத்துள்ளார். 'பாரத் மாதா கி ஜே' பத்ம ஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த விருது பிரிட்டனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்ஹிந்த் மற்றும் பாரத மாதா கி ஜே என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி உள்ளார். https://www.bbc.com/tamil/global-51255035  
  • சோதனை செய்ற ஆட்களை வைரஸ் பீடிக்க கடவது.