நிழலி

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி

Recommended Posts

ஒரு விருந்தாளியின் பார்வை -1

மனம் முழுசும் மகிழ்வும் நெகிழ்வும் குடி கொண்டு இருந்தன.

அக்காவை பெற்ற தம்பிகளுக்குத்தான் தெரியும் அக்கா என்பது இன்னொரு அம்மா மட்டுமல்ல நல்ல தோழி என்றும். அதே போன்று அக்காவின் கணவர் எனும் உறவு நட்புக்கும் சகோதரருக்கு இடைப்பட்ட மிக உன்னதமான உறவு. அத்தான்மார்களால் வாழ்வு பெற்ற பலர் எம் சமூகத்தில் இருக்கினம்.

ஞாயிறு முடிந்து திங்கள் உதயமாகி விட்டிருந்தது. இன்று அக்காவின் கணவர் நரேஸ் அண்ணாவின் பிறந்த தினம். அவர் பிறந்த தினத்துக்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னதை காப்பாற்றி இருந்தேன். அக்காவின் பிறந்த தினத்துக்கு கூட வராமல் அவரது பிறந்த தினத்துக்கு வந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். நான் அங்கு இருக்கும் வரைக்கும் செலவழித்தது வெறும் 20,000 இந்திய ரூபாய்கள் தான். அதில் 15000 புத்தகங்களுக்காக செலவழித்தது. மிச்ச அனைத்துக்கும் அவர் தான் செலவழித்தது.

பகல் முழுதும் அவர் பிறந்த நாளுக்கான குடும்ப நிகழ்வுகள். நரேஸ் அண்ணா தன் வேலைக்கு லீவு போட்டமையால் அவருடனே முழு நாளும் கழிந்தது

எம்மை முழு நாளும் வெளியே சுற்றிப் பார்க்க அழைத்து செல்லுகின்றார்.

இரவு 9 ம மெரினா கடற்கரை செல்கின்றோம். ஒரு காதல் சோடி இறுக்க அணைத்து உதட்டோடு உதடு சுவைத்து இருந்த காட்சி எனக்கு பல பழைய நினைவுகளை ஒரு வினாடியில் மீட்டிச் செல்கின்றது.

அக்காவுக்கு கொஞ்சம் சங்கடம். என் மகன் இதை பார்க்கின்றானா என. அவன் கடற்கரை மண்ணில் ஓடிச் சென்று கொண்டு இருந்த நண்டு குஞ்சொன்றை பிடிச்சு விளையாடிக் கொண்டு இருந்தான். அக்காவின் மகனுடன் அதற்குள் மிகவும் ஒட்டி இருந்தான்.

மெரினாவின் ஓரங்களை தம் இருப்பிடமாக வரித்துக் கொண்ட வீடற்றவர்கள் மற்றும் யாசகர்கள் தம் இயற்கை உபாதைகளை நடை பாதையிலேயே கழித்து கடற்கரையின் உப்புக்காற்றை மணக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். இதன் மூலம் மோடியின் நாட்டை சுத்தமாக வைத்திருக்க செய்ய முனையும் திட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி கொண்டு இருந்தனர்.

அங்கிருந்து விலகி ஒரு ஐந்து நட்சத்திர விடுதி பக்கம் செல்கின்றோம்.

சென்னையின் இரவு முகம் புலப்படுகின்றது. சிவசேனா மற்றும் கலாச்சார காட்டுமிராண்டிகள் ஒப்புக் கொள்ள மறுக்கும் இன்னொரு முகம்

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் அதன் தெரு முனையிலும் வாராந்தாவிலும் உதட்டில் சாயம் பூசிய அழகிய யுவதிகள் தம் வாடிக்கையாளர்களுக்காக காத்து நிற்கின்றனர்.  மிக அழகிய யுவதிகள். அடுத்த முறை தனிய வந்து ஒரு ஹோட்டலில் தங்கடா என்று என் கள்ள மனம் ஒரு பக்கம் எனக்கு அறிவுரை சொல்லத் தொடங்குகின்றது.

ஒரு இளைஞன் இரு அழகிய பெண்களுடன் BMW இல் வந்து இறங்கி விடுதியின் உள்ளே செல்கின்றான். என் வயிற்றில் இருந்து புகை மூட்டம் கிளம்புகின்ற மாதிரி இருந்தது.

அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் நான் தேடி வந்த ஒரு உணவு வகை இல்லை என்பதால் அங்கிருந்து வெளிக்கிட்டு இரவு 2 மணி வரைக்கும் காரில் சுற்றுகின்றோம்.

நாவல்களிலும் திரைப்படங்களிலும் மட்டுமே அறிந்து கொண்ட அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, கே.கே. நகர், காந்தி சிலை, சிவாஜி கணேசனின் வீடு (ஒரு பெரும் குடியிருப்பு?), T.Nagar என அழைக்கப்படும் கடும் பிசியாக இருக்கும் தியாகராஜர் வீதி என சுற்றுகின்றோம்.

நான் சென்னையை பற்றி எழுத வந்த ஒரு பத்தி எழுத்தாளனோ அல்லது அதன் அரசியலை அறிய வந்த ஒருவனோ அல்ல.

வெறும் விருந்தாளி.

என் பார்வை ஒரு விருந்தாளிக்கான பார்வை.

இரவிலும், பெண்கள் பயமின்றி தெருக்களில் நடந்து வருவதை என்னால் கவனிக்க முடிகின்றது. நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலையான பின் மீடியாக்கள் சென்னையை பற்றி எழுதி சென்னை பற்றி அறியாதவர்களுக்கு ஏற்படுத்திய போலி பிம்பம் என் கண் முன் உடைகின்றது. நான் போன காலம் சுவாதி கொலையாகி ராம்குமாரை சென்னை பொலிசார் தற்கொலை என்ற நாடகமாடி கொலை செய்யாமல் இருந்த இடைப்பட்ட  காலம்.

இரவு வீடு வருகின்றோம். அடுத்த நாள் காலை நான் இலங்கை பயணம்.

அக்கா நான் அடுத்த நாள் இவன் தனிய கொழும்புக்கு போகின்றானே.... என்ற பயத்தில் படுத்த இரவு

எனக்கு ஏதும் நடந்தால் மகன் மித்தா கனடாவுக்கு தனிய செல்ல கஷ்டப்படுவானோ என யோசித்துக் கொண்டே படுத்த இரவு

மனைவி கனடாவில் இருந்து கொண்டு அடிக்கொரு தரம் இது பற்றி குறும் செய்தி அனுப்பிக் கொண்டு இருந்த இரவு

இரவு விடிகின்றது

காலை 11:30 இற்கு சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏறி கொழும்பை 12:30 இற்கு அடைகின்றேன்.

(மிச்சம் பிறகு)

 • Like 5

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிழலி,
உங்கள் பயணக் கட்டுரையின் முதல் பகுதி அவசர அவசரமாக வாசித்ததால் உடனே பின்னூட்டம் இட முடியவில்லை. இப்போது மறுபடியும் ஆற அமர்ந்து அனுபவித்து வாசிக்கின்றேன்.
பயணக் கட்டுரைக்கான இயல்பான தொனியோடு சுவாரஸ்யமாக, அதே நேரம் குறும்பாகவும் இருக்கின்றது உங்கள் எழுத்து நடை. பாராட்டுக்கள் !!
மிகுதி பாகங்களையும் உடனே வசித்துவிட வேண்டும் என்ற ஆவலும் உடன் வருகின்றது.

"... திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது"
அருமை.... எனக்கும் கூட தமிழக அன்பர்களை காணும் போது இயல்பாக அவர்கள் மேல் ஒரு பிரியம் ஏற்படுவதை உணர்வேன்.

அது சரி இந்த நண்டு கடல் நண்டா? அல்லது காட்டு நண்டா?  நீலக் கால் நண்டா? U 5 நண்டா?

தண்ணியிலே இருந்த எந்த ஒரு எவிடேன்ஸுமே இல்லையே  பாஸ்!!!

"சிலர் சூப்பர் பிகருகள்....." நீங்கள் "கிளிக்கின" படங்களையும் போட்டு கொஞ்சம் வெளாவாரியா விபரிக்கலாமே தல.. I am waiting...:104_point_left:

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Sasi_varnam said:

இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறீங்களே, சசி !

அரியாலை, புங்கங்குளம் பக்கத்திலை இருந்தனீங்கள் எண்டு நம்பவே முடியாமல் கிடக்கு!

இதற்குப் பெயர் ' பெரு நண்டு"

அநேகமாகக் கண்ணா மரங்கள் வளரும் பகுதிகளில் வேர்களுக்குக்கிடையேயும், பாறைகளுக்கு அடியிலும் வசிக்கும்!

கண்ணாமரம் என்றால் என்ன என்று கேட்கக் கூடாது!

பொல்லாத கோபம் வரும்!:112_lips:

Share this post

Link to post
Share on other sites

இடைச் செருகல்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 45 முறையாவது விமானப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் இது வரைக்கும்  Sri Lankan airlines இல் பயணித்தது இல்லை. நான் பயணித்த 45 தடவையும் 2009 முன்

இது 46 ஆவது முறை. Sri Lankan airlines  இல்

அந்த பெண்ணை ஏன் எனத் தெரியவில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகின்றது. மிக அழகிய air hostessத

வெளிர் நிற வயிறும் அதற்கு மேலாக கண்களை செலுத்தும் போது இலங்கை விமான சேவைக்குரிய பிளவுசும் .....அதற்குள் அகப்பட மறுத்து திமிரும் மார்புகளும்.

ஒரு போதும் அவரை மீண்டும் சந்திக்க முடியாது என நான் நினைத்து இருந்தேன்

ஆனால் பின்னர் சந்திக்க முடிந்தது

இடைச் செருகல் இத்துடன் முடிவடையலாம்

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, புங்கையூரன் said:

இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறீங்களே, சசி !

அரியாலை, புங்கங்குளம் பக்கத்திலை இருந்தனீங்கள் எண்டு நம்பவே முடியாமல் கிடக்கு!

இதற்குப் பெயர் ' பெரு நண்டு"

அநேகமாகக் கண்ணா மரங்கள் வளரும் பகுதிகளில் வேர்களுக்குக்கிடையேயும், பாறைகளுக்கு அடியிலும் வசிக்கும்!

கண்ணாமரம் என்றால் என்ன என்று கேட்கக் கூடாது!

பொல்லாத கோபம் வரும்!:112_lips:

அட நீங்க வேற புங்கை...
நண்டு, மணல் , சமுத்திரம், இது தான் நான் அறிந்தது.
வயலிலும் கூட சிறு நண்டுகள் பார்த்ததுண்டு சிங்களத்தில் "கக்கொட்டோ" என்று சொல்வார்கள்.
தவிர எனக்கு நண்டு, கணவாய், றால், லாப்ஸ்டர் ...இப்படியானவற்றை பார்த்தால் உடனே ஒரு பயம் தான் வரும்...காரணம் அவற்றிட்கு இருக்கும் "டெண்டாகில்ஸ்" இதை தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
வீட்டிலும் மனைவி பிள்ளைகள் சாப்பிடுவது கிடையாது.
பொதுவாக மரக்கறி, கோழி, ஆடு, ஒரு சில மீன் வகைகள்.
அது சரி அது என்ன கண்ணா மரம் ? சில நேரங்களில் அதன் பெயரே தெரியாமல் தெரிந்திருக்கும்.
அரியாலையில் நான் அதிகம் கண்டது, விலா மரம், நாவல் மரம், கொட்டங்காய்,அரை  பூவரசு, முள்ளு முருங்கை ...

அரியாலையில் எங்கள் வீடு பேய்ச்சி அம்மன் கோவிலுக்கு அருகில்..
நான் 8 ஆம் வகுப்புவரை முகம்மது நபிகள் "சல்லல்லாஹு வாலஹி வஸல்லம்" புராணத்தை கண்டியில் படித்தவன்.

அதனாலோ என்னவோ நம் மண் சார்ந்த இப்படியான நிறைய விஷயங்கள் தெரியாது புங்கை.

38 minutes ago, நிழலி said:

இடைச் செருகல்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 45 முறையாவது விமானப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் இது வரைக்கும்  Sri Lankan airlines இல் பயணித்தது இல்லை. நான் பயணித்த 45 தடவையும் 2009 முன்

இது 46 ஆவது முறை. Sri Lankan airlines  இல்

அந்த பெண்ணை ஏன் எனத் தெரியவில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகின்றது. மிக அழகிய air hostessத

வெளிர் நிற வயிறும் அதற்கு மேலாக கண்களை செலுத்தும் போது இலங்கை விமான சேவைக்குரிய பிளவுசும் .....அதற்குள் அகப்பட மறுத்து திமிரும் மார்புகளும்.

ஒரு போதும் அவரை மீண்டும் சந்திக்க முடியாது என நான் நினைத்து இருந்தேன்

ஆனால் பின்னர் சந்திக்க முடிந்தது

இடைச் செருகல் இத்துடன் முடிவடையலாம்

அடப்பாவி "மறுத்தது ....நிமிர்ந்தது" "உருண்டது", "திளைத்தது" ...இப்படியெல்லாம் "கூர்ந்து" அவதானித்தீர்களோ? பாவம் அந்த பிள்ளை...
சரி, சரி ஆத்திர அவசரத்துக்கு நம்பரை கிம்பரை வாங்கி வச்சீங்களா?
இதை ஒரு தனி கதையாக எழுதலாமே...

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, Sasi_varnam said:

அட நீங்க வேற புங்கை...
நண்டு, மணல் , சமுத்திரம், இது தான் நான் அறிந்தது.
வயலிலும் கூட சிறு நண்டுகள் பார்த்ததுண்டு சிங்களத்தில் "கக்கொட்டோ" என்று சொல்வார்கள்.
தவிர எனக்கு நண்டு, கணவாய், றால், லாப்ஸ்டர் ...இப்படியானவற்றை பார்த்தால் உடனே ஒரு பயம் தான் வரும்...காரணம் அவற்றிட்கு இருக்கும் "டெண்டாகில்ஸ்" இதை தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
வீட்டிலும் மனைவி பிள்ளைகள் சாப்பிடுவது கிடையாது.
பொதுவாக மரக்கறி, கோழி, ஆடு, ஒரு சில மீன் வகைகள்.
அது சரி அது என்ன கண்ணா மரம் ? சில நேரங்களில் அதன் பெயரே தெரியாமல் தெரிந்திருக்கும்.
அரியாலையில் நான் அதிகம் கண்டது, விலா மரம், நாவல் மரம், கொட்டங்காய்,அரை  பூவரசு, முள்ளு முருங்கை ...

அரியாலையில் எங்கள் வீடு பேய்ச்சி அம்மன் கோவிலுக்கு அருகில்..
நான் 8 ஆம் வகுப்புவரை முகம்மது நபிகள் "சல்லல்லாஹு வாலஹி வஸல்லம்" புராணத்தை கண்டியில் படித்தவன்.

அதனாலோ என்னவோ நம் மண் சார்ந்த இப்படியான நிறைய விஷயங்கள் தெரியாது புங்கை.

Mangrove.jpg

மேலேயுள்ள படம் தான் ஆங்கிலத்தில்....Mangrove tree.. எனவும் தமிழில் 'கண்ணா' என்றும் அழைக்கப்படும் மரமாகும்!

பண்ணைப்பாலத்தடி, மற்றும் கண்ணாத் தீவு, கல்பிட்டி போன்ற இடங்களில் அதிகம் வளரும்!

மரத்திலிருந்து விழுகின்ற இதன் காய் (முருங்கைக்காய் போல நீளமாக இருக்கும்)...அப்படியே ஒரு அம்பைப் போல ஈர நிலத்தில்...மரத்திலிருந்து விழும் போதே...ஊன்றப்பட வேண்டும்! பின்னர் அதிலிருந்து கன்று முளைக்கும்! இரு கற்களுக்கிடையில் ஒரு கன்று முளைப்பதைப் பாருங்கள்!

அத்துடன் இதன் வேர்கள் சதுப்பு நிலங்களுக்குள் புதைந்து இருப்பதால்.. இவற்றின் வேர்கள் நிலத்தில் மேல் வளரும்! அந்த வேர்களால் மரம் சுவாசிப்பதாகச் சொல்லுவார்கள்! இவ் வேர்கள் சுவாசிக்கும் வேர்கள் என அழைக்கப் படும்!

அவுஸ்திரேலியாவின் பிரபலமான 'பராமண்டி' என்னும் மீனினமும் இந்த வேர்களுக்கிடையே தான் வாழும்!

இங்கும் பெரு நண்டு...அதிகம் பிடிக்கப்படுகின்றது!

இந்த நண்டு வகையை நீண்ட நாட்களுக்கு....நீருக்கு வெளியே...உயிருடன் வைத்திருக்க முடியும்!

இதை ஆங்கலத்தில்.. mud crab  என அழைப்பார்கள்!

உங்களுக்காக ஒரு படம்.! ( நீங்கள் பயப்பிடுகின்ற ஆம்பிளைச் சிங்கம் என்ற படியால்) நண்டைக் கட்டி வைத்திருக்கிறேன்!:11_blush:

mud-crab-showing-eyes-claws-mouth-live.j

 • Like 7

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, நிழலி said:

இடைச் செருகல்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 45 முறையாவது விமானப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் இது வரைக்கும்  Sri Lankan airlines இல் பயணித்தது இல்லை. நான் பயணித்த 45 தடவையும் 2009 முன்

இது 46 ஆவது முறை. Sri Lankan airlines  இல்

அந்த பெண்ணை ஏன் எனத் தெரியவில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகின்றது. மிக அழகிய air hostessத

வெளிர் நிற வயிறும் அதற்கு மேலாக கண்களை செலுத்தும் போது இலங்கை விமான சேவைக்குரிய பிளவுசும் .....அதற்குள் அகப்பட மறுத்து திமிரும் மார்புகளும்.

ஒரு போதும் அவரை மீண்டும் சந்திக்க முடியாது என நான் நினைத்து இருந்தேன்

ஆனால் பின்னர் சந்திக்க முடிந்தது

இடைச் செருகல் இத்துடன் முடிவடையலாம்

புஷ்பா தங்கதுரையின் கதைகளில் போல் இடையிடையே இந்த ஊருகாய் இருக்க வேண்டும். "இடை‍‍" செருகலில், இடையில் சோருகி இருக்கும் சேலையில் இருந்து எல்லாம் நன்கு அவாதனிக்கப்பட்டுள்ளது. விபரிக்கும் விதத்தை வாசித்து எனக்கும் எல்லாம் திமிரத்தொடங்கி விட்டது.

நன்றாயிருக்கின்றது தொடருங்கள்.
 
Share this post

Link to post
Share on other sites
9 hours ago, புங்கையூரன் said:

Mangrove.jpg

மேலேயுள்ள படம் தான் ஆங்கிலத்தில்....Mangrove tree.. எனவும் தமிழில் 'கண்ணா' என்றும் அழைக்கப்படும் மரமாகும்!

பண்ணைப்பாலத்தடி, மற்றும் கண்ணாத் தீவு, கல்பிட்டி போன்ற இடங்களில் அதிகம் வளரும்!

மரத்திலிருந்து விழுகின்ற இதன் காய் (முருங்கைக்காய் போல நீளமாக இருக்கும்)...அப்படியே ஒரு அம்பைப் போல ஈர நிலத்தில்...மரத்திலிருந்து விழும் போதே...ஊன்றப்பட வேண்டும்! பின்னர் அதிலிருந்து கன்று முளைக்கும்! இரு கற்களுக்கிடையில் ஒரு கன்று முளைப்பதைப் பாருங்கள்!

அத்துடன் இதன் வேர்கள் சதுப்பு நிலங்களுக்குள் புதைந்து இருப்பதால்.. இவற்றின் வேர்கள் நிலத்தில் மேல் வளரும்! அந்த வேர்களால் மரம் சுவாசிப்பதாகச் சொல்லுவார்கள்! இவ் வேர்கள் சுவாசிக்கும் வேர்கள் என அழைக்கப் படும்!

அவுஸ்திரேலியாவின் பிரபலமான 'பராமண்டி' என்னும் மீனினமும் இந்த வேர்களுக்கிடையே தான் வாழும்!

இங்கும் பெரு நண்டு...அதிகம் பிடிக்கப்படுகின்றது!

இந்த நண்டு வகையை நீண்ட நாட்களுக்கு....நீருக்கு வெளியே...உயிருடன் வைத்திருக்க முடியும்!

இதை ஆங்கலத்தில்.. mud crab  என அழைப்பார்கள்!

உங்களுக்காக ஒரு படம்.! ( நீங்கள் பயப்பிடுகின்ற ஆம்பிளைச் சிங்கம் என்ற படியால்) நண்டைக் கட்டி வைத்திருக்கிறேன்!:11_blush:

mud-crab-showing-eyes-claws-mouth-live.j

அருமையான விளக்கங்கள் புங்கை 
உங்களை வைத்தே ஒரு 
கற்றுக்கொண்டால் குற்றமில்லை பகுதி ஆரம்பிக்கலாம்.
 
Share this post

Link to post
Share on other sites
Quote

இரவு 9 ம மெரினா கடற்கரை செல்கின்றோம். ஒரு காதல் சோடி இறுக்க அணைத்து உதட்டோடு உதடு சுவைத்து இருந்த காட்சி எனக்கு பல பழைய நினைவுகளை ஒரு வினாடியில் மீட்டிச் செல்கின்றது.

தமிழ்நாட்டில் கலாச்சாரக் காவலர்கள் இல்லையா??

Share this post

Link to post
Share on other sites
On ‎15‎/‎03‎/‎2017 at 1:18 PM, நிழலி said:

மெரினாவின் ஓரங்களை தம் இருப்பிடமாக வரித்துக் கொண்ட வீடற்றவர்கள் மற்றும் யாசகர்கள் தம் இயற்கை உபாதைகளை நடை பாதையிலேயே கழித்து கடற்கரையின் உப்புக்காற்றை மணக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். இதன் மூலம் மோடியின் நாட்டை சுத்தமாக வைத்திருக்க செய்ய முனையும் திட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி கொண்டு இருந்தனர்.

சென்னை சென்று வந்த பலரும் "மூத்திர நாத்தம்" தாங்க முடியாது   என்று கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அத்துடன் அதிகாலைகளில் வீதி ஓரங்களிலும் பலர் மலங் கழிப்பதாகவும் கூறுவார்களால். தேர்தல் நேரங்களில் இலவச தொலைக்காட்சி, கிரைண்டர் கொடுப்பதை விடுத்து ஒவ்வொரு கட்சியும் வீட்டுக்கொரு கக்கூஸ் கட்டிக் கொடுத்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்!

On ‎15‎/‎03‎/‎2017 at 1:18 PM, நிழலி said:

சென்னையின் இரவு முகம் புலப்படுகின்றது. சிவசேனா மற்றும் கலாச்சார காட்டுமிராண்டிகள் ஒப்புக் கொள்ள மறுக்கும் இன்னொரு முகம்

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் அதன் தெரு முனையிலும் வாராந்தாவிலும் உதட்டில் சாயம் பூசிய அழகிய யுவதிகள் தம் வாடிக்கையாளர்களுக்காக காத்து நிற்கின்றனர்.  மிக அழகிய யுவதிகள். அடுத்த முறை தனிய வந்து ஒரு ஹோட்டலில் தங்கடா என்று என் கள்ள மனம் ஒரு பக்கம் எனக்கு அறிவுரை சொல்லத் தொடங்குகின்றது.

ஒரு இளைஞன் இரு அழகிய பெண்களுடன் BMW இல் வந்து இறங்கி விடுதியின் உள்ளே செல்கின்றான். என் வயிற்றில் இருந்து புகை மூட்டம் கிளம்புகின்ற மாதிரி இருந்தது.

மண்டே இப்பிடி எண்டால் வீகெண்ட் எப்பிடி இருக்கும்.

On ‎15‎/‎03‎/‎2017 at 1:18 PM, நிழலி said:

அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் நான் தேடி வந்த ஒரு உணவு வகை இல்லை என்பதால் அங்கிருந்து வெளிக்கிட்டு இரவு 2 மணி வரைக்கும் காரில் சுற்றுகின்றோம்.

அவிச்ச ஆமை முட்டையையா தேடி அலைஞ்சியள்? கனடாவில் இருந்து போய் சென்னையில சாமம் ரெண்டு மணிவரைக்கும் தேடி அலைஞ்ச சாப்பாட்டு வகை என்ன எண்டு தெரியாட்டிக்கு மண்டை வெடிச்சிடும் பாஸ்!

கட்டுநாயக்காவில கட்டி வச்சிட்டாங்களா?? மிகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, Thumpalayan said:

அவிச்ச ஆமை முட்டையையா தேடி அலைஞ்சியள்? கனடாவில் இருந்து போய் சென்னையில சாமம் ரெண்டு மணிவரைக்கும் தேடி அலைஞ்ச சாப்பாட்டு வகை என்ன எண்டு தெரியாட்டிக்கு மண்டை வெடிச்சிடும் பாஸ்!

கட்டுநாயக்காவில கட்டி வச்சிட்டாங்களா?? மிகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வேற ஒண்டும் வித்தியாசமாய் இருக்காது!

கணவாய்க் கருவாட்டுக் கறியாய் தான் இருக்கும்! 

ஆராவது...ஐந்து நட்சத்திர ஓட்டல்ல...இதையெல்லாம் விப்பாங்களா?

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, புங்கையூரன் said:

வேற ஒண்டும் வித்தியாசமாய் இருக்காது!

கணவாய்க் கருவாட்டுக் கறியாய் தான் இருக்கும்! 

ஆராவது...ஐந்து நட்சத்திர ஓட்டல்ல...இதையெல்லாம் விப்பாங்களா?

கனடாவில் கணவாய்க் கருவாடு இருக்கெண்டு சொன்ன ஞாபகம்.

உது வேற எதோ வில்லங்கமான சாமான் போலாகி கிடக்கு. மனிசன் அடுத்தநாள் பயணம் இருந்தும் 2 மணிவரைக்கும் அத்தானோட அலைஞ்சிருக்கு எண்டா....

Share this post

Link to post
Share on other sites

செதில்வறை தேடிக்கொண்டு  திரியிறார். அத்தானும் விஷயம் விளங்காமல் அவருடன் அலையுறார்....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On March 15, 2017 at 9:25 AM, Sasi_varnam said:

அருமையான விளக்கங்கள் புங்கை 
உங்களை வைத்தே ஒரு 
கற்றுக்கொண்டால் குற்றமில்லை பகுதி ஆரம்பிக்கலாம்.
 
உண்மை சசியண்ணா ...நானும் புங்கையண்ணாவின் ஆக்கங்கள் நிறைய வரனும் என்று விருப்பபடுகிறேன்.கவனத்தில் எடுப்பார் என்று நம்புவோமாக.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Thumpalayan said:

அவிச்ச ஆமை முட்டையையா தேடி அலைஞ்சியள்? கனடாவில் இருந்து போய் சென்னையில சாமம் ரெண்டு மணிவரைக்கும் தேடி அலைஞ்ச சாப்பாட்டு வகை என்ன எண்டு தெரியாட்டிக்கு மண்டை வெடிச்சிடும் பாஸ்!

காக்கா இறைச்சி தேடிப் போயிருப்பார்.:unsure:

Share this post

Link to post
Share on other sites

வெட்டுக்கிளி மகா ரசிகன் என்று தெரியும் காலம் ஆளை மாத்தியிருக்கும் என்று நினைத்தேன் ஊகூம் கொஞ்சமாவது திருந்தினதா தெரியேல்லை.... இந்தக் கவிதாப் பொண்ணுக்கு சரியாகக் கடிவாளம் போடத் தெரியலை<_<

Share this post

Link to post
Share on other sites

இலங்கை விமான நிலையமும் நானும்

இலங்கைக்கு பயணம் செய்ய முடிவெடுத்த பின் என் இலங்கைப் பயணம் பற்றி கனடிய அரசுக்கு உரிய முறையில் அறிவிக்க வேண்டும் என திட்டமிட்டு, கனடாவில் இருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்துக்கு என் பயண திட்ட விபரங்களை ஈமெயிலில்  அனுப்பி இருந்தேன். அத்துடன் Registration of Canadians abroad தளத்துக்குச் சென்று (https://travel.gc.ca/travelling/registration) அங்கும் முழு விபரங்களையும் கொடுத்து இருந்தேன்.

கனடா என்று இல்லை, எந்த நாட்டிலிருந்து நீங்கள் வேறு எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டாலும் இப்படியான சில விடயங்களை செய்வது நல்லது. அதுவும் இலங்கை / இந்தியா போன்ற நாடுகளுக்கு ரகசியமாக செல்வதை விட அறிவித்து விட்டு செல்வது பாதுகாப்பானது என நம்புகின்றேன். என் முகநூலிலும் பயண விடயங்களை தொடர்ச்சியாக பதிந்து கொண்டே வந்தனான். அதாவது 'இங்க பார் நான் ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் ஒழிச்சு வரவில்லை... அறிவித்து விட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தான் வாரன்' என்று காட்ட.

*********************************** ******************************************* *******************************

விமானத்தை விட்டு இறங்குகின்றேன்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டில், இலவசக் கல்வியினூடாக எனக்கு கல்வி புகட்டிய நாட்டில், முதல் முத்தத்தில் இருந்து, முதல் காதல் வரைக்கும் நான் பயின்ற நாட்டில், தொழில் பயிற்சியில் இருந்து முதல் பத்து வருடங்கள் எனக்கு வேலை வாய்ப்பு தந்து வளர்த்து விட்ட நாட்டில்,  எண்ணற்ற நண்பர்களையும் தோழிகளையும் வரமாக நான் பெற்றநாட்டில், அச்சம் கொள்ள வேண்டிய நேரங்களிலும் பயமற்று வாழக் கற்றுத் தந்த நாட்டில், உரிமைக்காக உரத்து குரல் கொடு என்று காட்டித் தந்த நாட்டில்,

என் தாய் நாட்டில் காலடி வைக்கின்றேன்.

இது உன் தாய் நாடு அல்ல, எங்காவது ஓடிப் போ அல்லது செத்து போ என்று பெரும்பான்மை சிங்கள அரசு மூர்க்கமாக மோதித் தள்ளினாலும் இல்லை, இதற்குள் தான் என் தாய் நாடும் உள்ளது என நாமும் மூர்க்கமாக மோதிக் கொண்ட நாட்டில் காலடி வைக்கின்றேன்.

தமிழன் என்ற காரணம் ஒன்றே போதும் படுகொலை ஆகவும் காணாமல் போக்கடிப்படவும்  என பயங்கரங்கள் மலிந்து போய் இருந்த காலத்திலும் பூக்களையும் ரசிக்க கற்றுத் தந்த நாட்டில் காலடி வைக்கின்றேன்.

அடர்ந்த காட்டில் நெடுதுயர்ந்து வீசிய பெரும் சுடர் ஒன்று அணைந்து போய்விட்ட காலமொன்றில் நான் இலங்கையில் காலடி வைக்கின்றேன்.

அதுவரைக்கும் ஒரு சின்ன பதட்டம் மனசுக்குள் ஓடிக்கொண்டு தான் இருந்தது. ஆனால் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைச்சவுடன் அது ஓடிப் போய் விடுகின்றது. 

என்னுடன் விமானத்தில் பயணித்தவர்களில் அநேகர் கட்டார் செல்வதற்காக அடுத்த விமானத்தினை பிடிக்க செல்கின்றனர்.

நான் இலங்கை குடிவரவு பிரிவுக்கு Embargo form இனை நிரப்பிய செல்கின்றேன். என்னுடன் சேர்த்து ஆக 10 பேர் தான் நிற்கின்றோம். ஒரு சின்ன வரிசை.

என் முறை வருகின்றது. குடிவரவு அதிகாரி என்ற மனிதன் என் கடவுச் சீட்டை வாங்கிக் கொள்கின்றார். அம் மனிதனின் முகத்தில் இலேசாக நக்கலும் ஏளனமும் குடிபெயர்கின்றது என தோன்றுகின்றது.நேற்று அடிச்ச தண்ணி இன்றும் முகத்தில் தெரிகின்றது. இயலாதவர்களிடம் வெருட்டி  கொள்ளை அடிச்சே வயிறு வளர்த்த கூட்டம் இது. தருணம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் இவர்கள்.

எப்ப இலங்கையை விட்டு வெளியேறினாய் -ஆங்கிலத்தில் கேட்கின்றார்

நான் சரியாக எப்ப வெளியேறினான் என்பதை திகதி / நேரம் வாரியாக சிங்களத்தில் பதில் சொல்கின்றேன்

ஏன் இடையில் ஒருக்காலும் வரவில்லை - சிங்களத்தில் அவர்

'இவ்வளவு நாளும் வர எனக்கு பிடிக்கவில்லை'

என் முகத்தை பார்த்து விட்டு 'கப்பலிலால போனாய்'  என நக்கலும் ஏளனமுமாக கேட்கின்றார்

'உன் சிஸ்டத்தில் அப்படியா என் விபரத்தினை காட்டுகின்றது - அதில் எல்லாம் தெளிவாக இருக்கின்றது தானே.வாசித்துப் பார்."  என அதே நக்கலுடன் நானும் பதில் சொல்கின்றேன்.

வரும் போதே முடிவெடுத்து விட்டுத்தான் வந்து இருந்தேன். ஒன்றில் என்னை உள்ளே விடாமல் திருப்பி அனுப்புவார்கள்,  அல்லது அனுமதிப்பார்கள். இந்த இரண்டில் ஒன்றைத்தான் அவர்களால் செய்ய முடியும். கனடிய பிரஜை என்பதுடன், கைது செய்து உள்ளே அனுப்பக் கூடிய எந்த காரணங்களையும் நான் காவவில்லை. அப்படியே கைது செய்வினும் சட்ட உதவிகளை உடனடியாக பெறக்கூடியதாகவே சென்று இருந்தேன். என் மடியில் கனம் இப்ப இருக்கவில்லை. இருந்த கனத்தை காலம் கரைத்து விட்டது.

இலங்கை பாஸ்போர்ட்டை அங்குள்ள இலங்கை தூதுவரலாயத்தில் கொடுத்து விட்டாயா எனக் கேட்டார்

"ஓம் எப்பவோ கொடுத்து விட்டேன்" என்றேன்.

இதுக்கு மேல் அவர் எதுவும் கேக்கவும் இல்லை, முகத்தை பார்க்கவும் இல்லை. கடவுச் சீட்டை தருகின்றார். சிங்களத்தில் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நகர்கின்றேன்.

குடிவரவுப் பகுதி கடந்து Duty Free பக்கம் வருகின்றேன்.Hennessy Brandy இரண்டு வாங்கினால் மூன்றாவது இலவசம் என்கின்றனர். ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர் ஒன்றுதான் வாங்கலாமாம்.

"நான் ஒன்பது வருடங்களின் பின் வாரன் மச்சான்....நீயே யோசிச்சு பார்.. ஒரு போத்தல் குடிக்க காணுமோ..." என சிங்களத்தில் அங்கு நின்றவனிடம் கேக்கின்றேன்.

அவன் சிரித்துக் கொண்டு "சரி சரி கொண்டு போ...ஆனால் கஸ்டம்ஸ் பக்கம் இதை காட்டாதே'  என்று அனுப்பி வைக்கின்றான்.

இலங்கை விமான நிலையம் இந்த 9 வருடங்களில் நிறைய மாறி இருக்கின்றது. முன்னை விட நன்றாக இருக்கின்றது. சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. பணியாளர்களும் மிகவும் நட்புடன் பழகுகின்றனர். இன்னும் பல மாற்றங்கள் தேவையாகவும் இருக்கின்றன. Professional look இன்னும் முழுமையாக வரவில்லை.

 வெளியே வந்து 200 டொலர்களை அங்குள்ள Money Exchange இல் மாற்றுகின்றேன். இது ஒரு மிகப் பெரிய கொள்ளை என்று பிறகு வெள்ளவத்தையில் டொலர் மாற்றும் போதுதான் புரிந்தது. வெறும் 101 இற்கு அங்கு மாற்றி தந்தார்கள். (வெள்ளவத்தையில், பிரசன்னாவில் 109 ரூபா)

அங்குள்ள Taxi service இல் போய் கார் ஒன்றை பிடிச்சுக் கொண்டு கொழும்பை நோக்கி விரைகின்றேன். கொழும்பு வரும் வரைக்கும் யுத்தத்தின் பின்னரான அரசியல், மகிந்தவின் பின்னரான நிலமை என்பனவற்றை Taxi ட்ரைவருடன் கதைத்துக் கொண்டே வருகின்றேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த மனுசனும் கதைத்து கொண்டு வருகின்றார். நான் கொழும்பில் நிற்கும் நாட்கள் முழுதும் கண்ணில் படும் அனைத்து சிங்கள தமிழ் ஆட்களுடன் அரசியல் கதைக்காமல் விடவில்லை. பல நாட்களின் பின் கதைப்பினும் சிங்களம் ஓரளவுக்கேனும் சரளமாக கதைக்கவும் முடிகின்றது.

கொழும்பில் வந்து Juliana hotel இல் தங்குகின்றேன். இந்த வரியை வாசிச்சவுடன் தும்பளையான் கொடுப்பிற்குள் சிரிப்பது கேக்கின்றது.

 • Like 9

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

கொழும்பில் வந்து Juliana hotel இல் தங்குகின்றேன். இந்த வரியை வாசிச்சவுடன் தும்பளையான் கொடுப்பிற்குள் சிரிப்பது கேக்கின்றது.

ஐயோ அங்க மட்டும் கேட்டிச்சா. நல்ல சைனீஸ், கொரியன் அயிட்டங்கள் வச்சிருப்பாங்களே (சாப்பாட்டை சொன்னனப்பா). 

மற்றது மூண்டு பிரண்டிப் போத்தலோட போனதால பாறுக்குப் போயிருக்க மாட்டியள் - சரியான குட்டி பார், விலையும் யானை விலை.

அந்த எயர் கொஸ்டசிண்ட  வெளிர் வயிறையும் திமிரும் மார்பயும் வாசிச்சுப்போட்டு பயபுள்ளைங்க மார்க்கமா அலையிறாங்க பாஸ். இன்னொரு இடைச்செருகல் போட்டால் குறைஞ்சே போவியள்?

Share this post

Link to post
Share on other sites

நிழலி தயவு செய்து மடியில் கனம் இல்லை என்று கூறாதீர்கள். உங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டே பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். சிங்களத்தில் கதைப்பதும் சிறு உதவியே.

"Juliana hotel" ஒரு மார்க்கமான இடத்தில் தான் தங்கியிருக்கிறீர்கள். இப்பவும் "அப்படி" நடக்கிறதா? 

Share this post

Link to post
Share on other sites

அனுபவப் பகிர்வு நன்றாக உள்ளது...நிழலி!

நானும் பல தடவைகள் போய் வருகின்றேன்! போர் நடந்த காலங்களிலும்..கட்டாயமாகப் போயே ஆக வேண்டுமென்ற நிலையிலும் போய் வந்திருக்கிறேன்! ஆனால்..எப்போதும்.. பொம்பிளையள் உள்ள பக்கம் தான் போறது வழக்கம்! இப்படியான பிரச்சனைகள் வரவில்லை! ஒரே ஒரு முறை மட்டும் ஒரு ஆண் உத்தியோகத்தரிடம் போக வேண்டி ஏற்பட்டது! எனது கடவுச் சீட்டில் 'பிறந்த இடம்' மாத்தளை என்று பதியப்பட்டிருந்தது! நான் சிங்களவனா, தமிழனா என்று அனுமானிக்க முடியாமல் உள்ளதாக மேலதிகாரிக்குச் சிங்களத்தில் கூறுவது எனக்குப் புரிந்தது! மேலதிகாரியும்...சரி..சரி..ஆளை விடு..என்று கூறுவதும் கேட்டது! ஒரு கருவாட்டுப் பார்வையுடன் விசாவைக் குத்தித் தந்தார்கள்!

சில வேளைகளில் ..எந்த நாட்டுக் கடவுச் சீட்டு என்று பார்த்து அலுப்புக் குடுக்கிறார்களோ தெரியாது!
அனேகமாக..ஆங்கிலத்தில் தான் உரையாடலை முடித்துக் கொள்வதுண்டு!

சிங்களம் ஓரளவுக்குக் கதைக்கத் தெரியும் எனினும்...எவருடனும்க வலிந்து கதைக்க விரும்புவதில்லை!

Share this post

Link to post
Share on other sites

நிழலி இப்போது கொழும்பில் ரைக்சி ஆட்டே பிடிப்பதை விட ஊபர் (UBER) பிடிப்பது லாபம் சேவையும் நன்று என்று கூறுகிறார்கள்.இதன் அனுபவம் ஏதாவது?

Share this post

Link to post
Share on other sites
On ‎3‎/‎14‎/‎2017 at 10:34 PM, Sasi_varnam said:

"சிலர் சூப்பர் பிகருகள்....." நீங்கள் "கிளிக்கின" படங்களையும் போட்டு கொஞ்சம் வெளாவாரியா விபரிக்கலாமே தல.. I am waiting...:104_point_left:

அப்படி எடுத்த படம் எல்லாம் என் பார்வைக்கு மட்டும்தான் (அது சரி ...அந்த பிலிப்பினோ வின் படங்கள் இன்னும் உங்களிடம் இருக்கா ?)

On ‎3‎/‎14‎/‎2017 at 10:40 PM, புங்கையூரன் said:

அநேகமாகக் கண்ணா மரங்கள் வளரும் பகுதிகளில் வேர்களுக்குக்கிடையேயும், பாறைகளுக்கு அடியிலும் வசிக்கும்!

கடலை ஒட்டிய சதுப்பு நிலங்களிலும் ஏரிகளின் சதுப்பு நிலங்களிலும் கூட இவை வாழும் என கேள்விப்பட்டுள்ளேன். நான் சாப்பிட்ட  நண்டுகள் கூவத்தில் பிடித்து இருப்பார்களா என்ற ஒரு கேள்வி மனசுக்குள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

எனக்கு சின்ன வயது இருக்கும் போது  என் அப்பாவின்  மட்டக்களப்பினைச் சேர்ந்த நண்பர் ஒருவர் குருணாகலுக்கு வரும் போது யினில் பல சட்டிகளில் உயிருடன் வைச்சு பெரும் கால் நண்டுகள் கொண்டு வந்து தர, அதை இரவில் வீட்டை வைத்து இருக்கும் போது எப்படியோ சட்டிகளில் இருந்து தப்பி வீடு முழுக்க வலம் வர அதை பிடிக்கப்பட்ட பாடு இன்னும் நினைவில் இருக்கு

On ‎3‎/‎15‎/‎2017 at 3:25 AM, colomban said:

புஷ்பா தங்கதுரையின் கதைகளில் போல் இடையிடையே இந்த ஊருகாய் இருக்க வேண்டும். "இடை‍‍" செருகலில், இடையில் சோருகி இருக்கும் சேலையில் இருந்து எல்லாம் நன்கு அவாதனிக்கப்பட்டுள்ளது. விபரிக்கும் விதத்தை வாசித்து எனக்கும் எல்லாம் திமிரத்தொடங்கி விட்டது.

நன்றாயிருக்கின்றது தொடருங்கள்.
 
பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி

On ‎3‎/‎15‎/‎2017 at 3:13 PM, கிருபன் said:

தமிழ்நாட்டில் கலாச்சாரக் காவலர்கள் இல்லையா??

இரு காதலர்கள் உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கலாச்சார காவலர்களா இல்லை காட்டுமிராண்டிகளா?
காசு இருப்பவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு கூட்டிக் கொண்டு சென்று முத்தமிடுகின்றனர். இல்லாதவர் கடலலையினை ரசிச்சுக் கொண்டு இதழ் தேனை பருகிகுகின்றனர்!

Share this post

Link to post
Share on other sites
On ‎3‎/‎17‎/‎2017 at 0:20 AM, Thumpalayan said:

அவிச்ச ஆமை முட்டையையா தேடி அலைஞ்சியள்? கனடாவில் இருந்து போய் சென்னையில சாமம் ரெண்டு மணிவரைக்கும் தேடி அலைஞ்ச சாப்பாட்டு வகை என்ன எண்டு தெரியாட்டிக்கு மண்டை வெடிச்சிடும் பாஸ்!

கட்டுநாயக்காவில கட்டி வச்சிட்டாங்களா?? மிகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மலேசிய / இந்தோனேசிய உணவு வகையான nasi goreng இனை தேடி அலைஞ்சன். கிடைக்கவில்லை. தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி பொஸ்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • எங்களை திட்டுமிட்டு ஓரம் கட்டிவிட்டார்கள்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், ஆறு தமிழ்க் கட்சிகளுடன், வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் இன்று கையெழுத்திட்டன. இன்று ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், இன்று மாலை 6.30 மணியளவில் பொது இணக்கப்பாட்டு ஆவணம் ஒன்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர், ஒப்பமிட்டனர். எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் கையொப்பம் இடவில்லை. இதில் இருந்து வெளிநடப்புச் செய்தது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர், ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது. எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர். நான் மக்களுக்கு எச்சரிக்கிறேன். இந்த ஐந்து கட்சிகளையும் நம்பி வரப்போகும் தேர்தலில் முடிவெடுத்தால், இனத்திற்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை மட்டுமல்ல, அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்களையும் நாம் இழக்க நேரிடும். போலி ஒற்றுமையைக் காட்டி பதவிகளை பெற்று, மக்களை ஏமாற்ற நாங்கள் தயாரில்லை. சிங்கள கட்சிகளும், சிங்கள பேரினவாத தரப்புக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கத் தயாராக இருந்த மரியாதையைக் கூட, இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய முன்னணிக்குத் தரவில்லை என்றார். இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் ஆறு தமிழ்க் கட்சிகளுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள் இணைந்து, பேச்சுக்களை நடத்தி வந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/politics/01/228548?ref=home-top-trending  
  • கிழக்கி னை பொறுத்தவரைக்கும் பல வாக்குகள் கோத்தாவிற்கு காரணம் அரசியல் வங்குரோந்து தமிழ் தேசிய கூட்ட,மைப்பின் 
  • இந்திய தமிழர்களுக்கு தமிழ் நாடு இருக்கிறது இலங்கை தமிழர்களுக்கு ??? புரிந்து கொண்டாலும் லேட்டாக புரிந்து கொண்டீர்கள் போல தோன்றுகிறது 
  • ஐந்து கட்சிகளை பொது இணக்கப்பாட்டில் இணைத்த வடகிழக்கு பல்கலை மாணவர்கள்! அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன? இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும்“ என்று ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது உடன்பாட்டின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட் பொது உடன்பாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டிருந்தனர். ஐந்து தமிழ்க்கட்சிகளும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம் வருமாறு: இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் எமது நிலைப்பாட்டுக்கு அமைவாக, நடந்து முடிந்த யுத்தத்தின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வை சாத்தியமான வழிகளில் காண முடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்கு கீழ் காணப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம். புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரசபடைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். வடக்கிற்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகாரசபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில திட்டமிட்டு; மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டு தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். வடக்கு – கிழக்கிற்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தை சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செயயப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும். மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்றுள்ளது. ***** https://www.tamilwin.com/politics/01/228565?ref=home-feed  
  • நன்றி நன்றி நன்றி அண்ணா