-
Topics
-
Posts
-
இது சம்பந்தமான முகநூல் பதிவொன்று : Shanmugarasa Vadivelu ஜேர்மனி சென்றிருந்தபோது இந்த காற்றாலை மையத்தை கண்டேன். இதுகுறித்து ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்ட விடயங்களை பதிவின் இடையில் கூறுகிறேன். யாழ்ப்பாணத்தில் காற்றாலை மையம் (Wind Farm) அமைக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக அறிகிறேன். அந்த மக்கள் வேண்டுமென்றே திசைதிருப்பப்படுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. காற்றாலை மையம் எமது சூழலுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அந்த மக்கள் விளங்கிக்கொண்டால் இதற்கான எதிர்வினையை கைவிடுவர். காற்றாலை மையத்தால் சூழலுக்கு அபாயகரமான பாதிப்புக்கள் ஏற்படுமா? இல்லை. சிலர் காற்றின் போக்கு திசைதிருப்பப்பட்டு மழைவீழ்ச்சி குன்றும் என்றும் குறித்த பகுதியில் பறவைகள் அழிவடையும் என்றும் தமக்குத்தெரிந்த விஞ்ஞான விளக்கங்களை அடித்துவிடுகிறார்கள். இது உண்மையல்ல. ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து போலாந்துக்குச் செல்லும் சாலையோர வயல்வெளியொன்றில் பல காற்றாலைக் கம்பங்கள் நிறுவப்பட்டு சிறகுகள் சுழன்றுகொண்டிருந்தன. ஒரு புறநகர் பகுதியில் அமைந்திருந்தது அந்த காற்றாலை மையம். "ஜேர்மனியின் மின்னுற்பத்தியில் காற்றாலைகளின் பங்களிப்பு என்ன?" என்று அவரிடம் கேட்டிருந்தேன். கொஞ்சம் உற்சாகமாக கூறினார், "ஆம், இது எமது நாட்டின் சுத்தமான சக்தி (Clean Energy) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் மலிவானது. அத்துடன் எரிபொருள் செலவுகள் இல்லாத ஒரு தற்சார்பு உற்பத்திப்பண்பைக் கொண்டது. ஜேர்மனி இவ்வாறான தற்சார்பு உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பாதையிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறது." "சரி சூழல் சார்ந்த பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லையா?" என்று கேட்டேன். "சூழல் சார்ந்து பாரதூரமான பிரச்சினைகள் எதுவுமில்லை. இங்கு சில போராட்டக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் என்று பார்த்தால், எரிச்சலூட்டும் இரைச்சல், சூரிய வெளிச்சத்தை மறைக்கும் காற்றாலைக் கம்பங்களினதும் சிறகுகளினதும் நிழல் மற்றும் பறவைகளுக்கும் வௌவால்களுக்கும் ஆபத்தை விளைவிக்கவல்ல காற்றாடிச் சிறகுகள் என்பனதான். இவை ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஏற்கத்தக்க காரணங்கள் இல்லை. ஆனால், மக்கள் குடியிருப்புக்களிலிருந்து சுமார் 1000மீட்டர்களாவது தள்ளி காற்றாலைக் கம்பங்களை நிறுவவேண்டுமென ஜேர்மன் அரசு நிபந்தனை விதிக்கவுள்ளது. தற்போது சுமார் 38% மின்சாரத் தேவை காற்றாலை மற்றும் சூரியக்கலம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களினாலேயே நிரப்பப்படுகிறது. இதனை இனிவரும் காலங்களில் அறுபது வீதத்துக்கும் மேல் அதிகரிப்பதே அரசின் இலக்காக உள்ளது" என்றார். "சரி, இரைச்சல் ஏன் மக்களை எரிச்சலூட்டுகிறது? நிழலுக்கு ஏன் பயப்படுகிறார்கள்?" "காற்றாடிகள் சாதாரணமாக சுழலும்போது இரைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் பலத்த காற்று வீசும்போது இரைச்சல் பயங்கரமாய் இருக்கும். இது ஒரு சாதாரண விமானம் அருகாக செல்வதுபோல இருக்கும். அருகிலே இருப்பவர்களுக்கு எரிச்சல் வரும்தானே? (சிரிக்கிறார்) நிழலுக்கு பயப்படுகிறார்கள். மிக உயரமான கம்பங்கள் மிகவும் அகலமானவை. இவை ஒரு வீட்டையே மாதக்கணக்கில் வெய்யில் படாமல் மறைக்கவல்லவை. இங்கு குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம்தான் மக்களின் வாழ்வியல் தேவை. கொந்தளிப்பார்கள்தானே? (மீண்டும் சிரிப்பு) என்னவோ, உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு உலைகள், அனல்மின் நிலையங்கள், எரிசக்தி மையங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் இவை ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவை இல்லை." என்றார். அப்போதுதான் நினைத்தேன், ஜேர்மனியிடம் இந்த வல்லரசுகள் கற்பதற்கு நிறைய உள்ளன என்பதை. யாழ்ப்பாணத்தில் காற்றாலை அமைக்கப்படுவதன் சாதக பாதகங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். இதுதொடர்பில் நண்பர்களின் கருத்துக்களையும் இங்கு எதிர்பார்க்கிறேன்.
-
எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார் ? அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:- சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும். ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும். நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள். இவ்வாறு வீடியோவில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார். இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறியதாவது:- இராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/71000
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 பேர் பிரிட்டன் தேர்தலில் வெற்றி பிரிட்டன் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் வெற்றியை பதிவு செய்துள்ளனர். உள்துறை அமைச்சராக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். கருவூல தலைமைச் செயலராக இருந்த, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றிபெற்றுள்ளார். சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா வெற்றிபெற்றுள்ளார். சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ் ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் வெற்றிபெற்றுள்ளனர். https://www.polimernews.com/dnews/92684/இந்திய-வம்சாவளியை-சேர்ந்த-14பேர்-பிரிட்டன்-தேர்தலில்வெற்றி
-
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலிஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக அவரை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான விசாரணைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. குறித்த கண்டன அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் ஊழல் செய்யும் அதிகாரிகள் தங்களது ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவரும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது ஊழல்கள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் உடனடியாக இதுபோன்ற ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் ஊழல் செய்யும் அரச அதிகாரிகள் தங்களது ஊழல்களை மறைப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். இது குறித்து புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல உள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டன அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/70973
-