Jump to content

யாழுக்கான இன்ஸ்ரா (Insta)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for instagram

யாழில் கள உறவுகளால்.. நிறைய படங்கள் இணைக்கப்படுகின்றன. அவை யாழோடு மட்டும் நின்று விடுவதால்.. அவற்றின் சில தாக்கங்கள்.. சமூகத்தை அல்லது உலகை எட்டுவதில்லை. இப்போது சமூக வலையில்.. இன்ஸ்ரகிராம்.. எனும் படப்பகிர்வு.. அப்ஸ் தொழில்நுட்பம் நல்ல பல முயற்சிகளுக்கு உதவி நிற்கிறது. ஏன் வியாபாரங்களின் விளம்பரமாகக் கூட மாறி நிற்கிறது. 

யாழ் இணையத்தில் பகிரப்படும் அல்லது யாழ் இணையத்திற்கான இன்ஸ்ரகிராம்.. கணக்கு ஒன்றினூடு யாழ் உறவுகள் பகிர்ந்து கொள்ளும்.. தனித்தன்மையான படங்களை உலகம் அறியச் செய்வதால்... எமது மக்களின் தேவைகள்.. போராட்டங்கள்.. நியாயங்கள்.. அவலங்கள்.. சீரழிவுகள்.. தனித்துவங்கள்.. விழுமியங்கள்.. இன்னும் இன்னும் உலகின் பல மட்டங்களை சென்றடைய உதவலாம்..!

அவை மாற்றங்களுக்கு.. அழுத்தங்களுக்கு.. சீர்திருத்தங்களுக்கு இட்டுச் செல்ல உதவலாம்.

அந்தப் படங்களை யாழிலும் தெரியப்படுத்த வகை செய்தால்.. இன்னும் நன்றாக இருக்கும்.

https://www.instagram.com/?hl=en

மேலும் இது யாழ் உறவுகளை படங்களால் இணைத்தும் வைத்திருக்க உதவும். இளசுகளையும் உள்ளிளுக்கும். மொழியின்றி.. படங்களால் பேசும் போது.. பல்வேறு மொழி பேசி.. விலகி நிற்கும்.. தமிழ் பரம்பரைகளும் சொந்தங்களும்.. கூடி இணையலாம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.