Jump to content

அண்ணே நோட்டீஸ் அண்ணே

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன்.

எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில்  திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண்டே போவார்கள். 

எமது ஒழுங்கைக்குள் ஒலி பெருக்கியில் பாட்டு கேட்டால் ஒன்றில் ஐஸ்பழ வானாக இருக்கும் அல்லது இப்படி ஏதாவது திருவிழா போன்ற கொண்டாட்டம் ஏதாவதாக இருக்கும்.ஆனால் என்ன சத்தம் கேட்டாலும் ஒழங்கையில் உள்ள பெடி பெட்டைகள் எல்லாம் பறந்து வந்து வாசலில் நிற்பார்கள்.பாட்டு சத்தம் எங்கோ கேட்டிருக்கும் ஆனாலும் வாகனம் வந்து சேர இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.சிலவேளை காவல் நின்றால் ஐஸ்பழ வான் தான் வரும்.அவனும் ஓரிரு நிமிடம் நிற்பாட்டி எட்டி பார்த்து கொண்டு நின்றுவிட்டு போவான்.நாங்களும் ஆளை ஆள் பாரத்து கொண்டு நின்றுவிட்டு போவோம்.யாராவது ஐஸ்பழ வான் வந்திருக்கு காசு தாங்கோ என்று கேட்டால் அடியில் அழுகைச் சத்தம் தான் கேட்கும்.பின்னர் சந்திக்கும் போது எப்படி ஐஸ்பழம் என்று கிண்டல் பண்ணுவார்கள்.

இதுவே காரில் ஒலிபெருக்கியுடன் வந்தால் நிச்சயம் ஏதோ ஒரு கூத்தைப் பற்றியதாக தான் இருக்கும்.இப்போ எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.கார் கிட்ட வந்ததும் காருக்கு பின்னால் அண்ணே நோட்டீஸ் அண்ணே என்று கத்திக் கொண்டு எறத்தள ஒரு மைலுக்கு காருக்கு பின்னால் எல்லோரும் ஓட்டம் தான்.அதில் ஒரு ஆள் நின்றால் மற்றவர்களும் படிப்படியாக நின்றுவிடுவார்கள்.கடைசியில் யார் யார் எத்தனை எத்தனை நோட்டீஸ் என்று எண்ணிப் பார்த்து கூடுதல் நோட்டீஸ் எடுத்தவர் மிகவும் சந்தோசமாக ஆகூ என்று கத்திக் குளறுவார்.

இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் எமுது ஊர் திருவிழா என்றால் திருவிழா செய்கிறவர்கள் ஊர்க்காரராக இருக்கும்.ஒரு மாதம் முதலிருந்தே அண்ணை நோட்டீஸ்போட நானும் வாறம் விட்டுட்டுப் போடாதைங்கோ என்று ஒரு மாதிரி காரில் ஏறி நசி பட்டுக் கொண்டிருக்கிறது.இப்போ நம்மைப் போல ஓடி வாறவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் போது சந்தோசம் என்றால் எழுத்தில் வடிக்க முடியாது.அன்று அறிவிப்பு முடிந்து வீடு போகும் போது தான் ஏனடா இந்தக் காரில் ஏறிப் போனேன் என்று பதுங்கி பதுங்கி போவேன்.நினைத்த மாதிரி எனக்காக ஒரு தடி காத்திருக்கும்.

இருந்தாலும் அந்தக் காரில் இருந்த போது அடைந்த சந்தோசத்துடன் பார்க்கும் போது இன்னும் எத்தனை தடவை வேணுமென்றாலும் அடிங்கப்பா என்று சொல்லத் தோன்றும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனிய இரை மீட்டல்..!

நான் சிறுவயதில் பலமுறை எங்கள் கிராமத்து கோவில் விழாக்களுக்கும், 'டெண்ட்' கொட்டாயில் ஓடும் சினிமா படங்களுக்கு அழைப்பு விடுக்கும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியின் பின்னால் பல தெருக்களினூடாக சக தோழர்களோடு அரைக்கால் சட்டையுடன் ஓடியிருக்கிறேன்..! வீட்டில் திட்டும் வாங்கியுள்ளேன்..!!

அவற்றை புன்முறுவலோடு இப்பதிவை வாசித்ததும் நினைத்துப் பார்க்கிறேன்.. நகர வாழ்க்கையில் இழந்தது அதிகம்தான்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பதிவைப் படித்ததும் நான் இப்பவும் சினிமா தியேட்டர் வானுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருப்பது போல் இருக்கு ....!  tw_blush:

ஆனால் இதுக்கெல்லாம் வீட்டில் திட்டோ , சாத்தோ கிடையாது ....! காரணம் 8 / 10 தியேடடார்களில் இருந்து இரண்டு நாளைக்கொரு வான் எண்டாலும் மாலையில் வந்து கொண்டே இருக்கும்....! tw_blush: 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

வன்னியர் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நிச்சயம் இதை அனுபவித்திருப்பர்.நன்றி

9 hours ago, suvy said:

உங்களின் பதிவைப் படித்ததும் நான் இப்பவும் சினிமா தியேட்டர் வானுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருப்பது போல் இருக்கு ....!  tw_blush:

ஆனால் இதுக்கெல்லாம் வீட்டில் திட்டோ , சாத்தோ கிடையாது ....! காரணம் 8 / 10 தியேடடார்களில் இருந்து இரண்டு நாளைக்கொரு வான் எண்டாலும் மாலையில் வந்து கொண்டே இருக்கும்....! tw_blush: 

சுவி பின்னால் ஓடியதற்காக அடிவிழலை.விடியவில் இருந்து காரில் சுத்தினா விடுவாங்களா என்ன?நன்றி

9 hours ago, nunavilan said:

இனிய பகிர்வுக்கு நன்றி, பிரியன் அண்ணா.

வரவுக்கு நன்றி நுணா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமை... ஈழப் பிரியன்,
உங்களது பதிவு... எனக்கு  8 - 13 வயதில் இருந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது.
முன்பு... இப்படியான ஒலிபெருக்கி சத்தம் கேட்கும் போது, 
அந்தத் வீதியில் உள்ள அத்தனை வீட்டு  சிறுவர்களுமே,  வெளியே வந்து...
அவர்கள் கொடுக்கும் நோட்டீசை  வாங்க, அந்தக் காரின் பின்னால் கன தூரம் ஓடுவதும்,
நோட்டீஸ்  கிடைக்காதவன், அழுவதும்... மறக்க முடியாத நினைவுகள். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை அதை இழந்தோம் இதை இழந்தோம் என்பதை விட முக்கால் வாசி வாழ்கையை இழந்து விட்டோம் என்று தான் சொல்ல முடியும்.மற்றது அந்த நோடிசை கசக்கிப் போட்டுத்தான் எறிவார்கள்.அல்லது காற்றில்
பறந்து விடும்.:unsure:நன்றி ஈழப்பிரியன் பழசை கிளறியதற்க்கு.tw_blush:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சிறி கிராமங்களில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் இப்படியான அனுபவம் கிடைத்திருக்கும்.நீங்கள் சொன்ன அதே வயது காலில் செருப்பும் இல்லாமல் புழுதியை கிளப்பிக் கொண்டு ஓடும் காருக்கு பின்னால் இப்போதும் நினைக்க கால் கூசுது.

3 hours ago, சுவைப்பிரியன் said:

என்னைப் பொறுத்த வரை அதை இழந்தோம் இதை இழந்தோம் என்பதை விட முக்கால் வாசி வாழ்கையை இழந்து விட்டோம் என்று தான் சொல்ல முடியும்.மற்றது அந்த நோடிசை கசக்கிப் போட்டுத்தான் எறிவார்கள்.அல்லது காற்றில்
பறந்து விடும்.:unsure:நன்றி ஈழப்பிரியன் பழசை கிளறியதற்க்கு.tw_blush:

சுவைப்பிரியன் நீங்கள் ஐஸ் குச்சியைப் பற்றி எழுதிய போது தான் பழைய நினைவுகளை கிழறி விட நோட்டீஸ் ஞாபகம் வந்து எழுதினேன்.நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்! நல்லதொரு அனுபகிர்வு.tw_thumbsup:
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இசைக்கச்சேரிக்கு நோட்டீஸ் ஒட்டினது இப்பவும் கண்ணுக்கை நிக்கிது. தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு நோட்டீஸ் பொறுக்கி ஒட்டினது வேறை விசயம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்...!

ஒரே வார்த்தையில் சொல்வதானால்....பின்னீட்டீங்கள்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமை ,ஈழப்பிரியன்

எங்கள் காலத்தில்  எல்லாம்  மாறிவிட்டது .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஈழப்பிரியன்! நல்லதொரு அனுபகிர்வு.tw_thumbsup:
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இசைக்கச்சேரிக்கு நோட்டீஸ் ஒட்டினது இப்பவும் கண்ணுக்கை நிக்கிது. தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு நோட்டீஸ் பொறுக்கி ஒட்டினது வேறை விசயம்.

நன்றி சகோதரம். இப்படி சின்ன சின்னதாக எம்மை அறியாமல் சந்தோசமாக வாழ்ந்த காலங்கள்.

1 hour ago, புங்கையூரன் said:

ஈழப்பிரியன்...!

ஒரே வார்த்தையில் சொல்வதானால்....பின்னீட்டீங்கள்!

நன்றி புங்கை.

6 minutes ago, நந்தன் said:

அருமை ,ஈழப்பிரியன்

எங்கள் காலத்தில்  எல்லாம்  மாறிவிட்டது .

நன்றி நந்தன் இப்போ ஊரில் செத்தவீட்டுக்கு தான் ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி அறிவிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனிய நினைவுகளை மீட்டும் பதிவுக்கு நன்றி. நாங்க பெண் குட்டிகள் .

அண்ணா மாருக்குப்பின்னால் ஓடுவது .பறந்து வருவதை ..பொறுக்குவது tw_blush:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பால்ய நினைவுகள்..!

blogger-image--569123928.jpg

இப்படித்தான் இருந்தது எங்கள் கிராமத்தில் 'டூரிங் டாக்கீஸ்'..!

18FL_HUGHES_1602111g.jpg

ஆற்று மணல் குவியலே எங்கள் இருக்கை.!

பண்டிகை நாட்களில் இருபுறமும் தடிப்பான துணிகளால் மூடிவிட்டு பகல் காட்சியும் நடைபெறும்!!

image.jpg

சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டி..! சிவாஜி, எம்ஜியார் படங்களென்றால்

இந்த மாட்டுவண்டி, வண்ண வண்ண பேப்பர், ஜரிகை அலங்காரத்தால் கவர்ந்திழுக்கும்!!

Veerapuram.jpg

அன்று திரையிடும் சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டியின் பின்னால்

இப்படித்தான் நாங்களும் பால்ய வயதில் மகிழ்ச்சியுடன் ஓடினோம்..!

(சகோதரி நிலாமதி சொன்னபடியே பெண்குட்டிகள் பின்னாடி ஓடி வருவதை, இங்கேயும் காணலாம் :))

.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ராசவன்னியன் said:

Veerapuram.jpg

அன்று திரையிடும் சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டியின் பின்னால்

இப்படித்தான் நாங்களும் பால்ய வயதில் மகிழ்ச்சியுடன் ஓடினோம்..!

(சகோதரி நிலாமதி சொன்னபடியே பெண்குட்டிகள் பின்னாடி ஓடி வருவதை, இங்கேயும் காணலாம் :))

.

ஈழப்பிரியனின்... பதிவுக்கு ஏற்ற, அருமையான படம் ராஜவன்னியன். :101_point_up:
அந்தப் படமே... ஆயிரம் கதை சொல்கின்றது. :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனின்... பதிவுக்கு ஏற்ற, அருமையான படம் ராஜவன்னியன். :101_point_up:
அந்தப் படமே... ஆயிரம் கதை சொல்கின்றது. :)

உண்மைதான் தமிழ் சிறி..! :)

காலை அலுவலகம் வந்ததும் 'இந்த திரிக்கு ஏற்ற படங்களை தேடியெடுத்துப் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே..!' என எண்ணி இணையத்தில் துழாவினேன்..

நான் எதிர்பார்த்த மாதிரியே சில படங்கள் சிக்கின.. அதில் இந்த சிறுவர்களின் மகிழ்ச்சி படம் என்னை வெகுவாக கவர்ந்தது..அதிலும் அந்த அரக்குக் கலர் ட்ரவுசரும், சிகப்பு நிற சட்டையும் அணிந்திருக்கும் சிறுவனின் உற்சாகக் களிப்பிலான முகபாவனை, எம் பாலர் பருவத்தை அப்படியே மீட்டெடுத்து பிரதிபலிக்கிறது.

நன்றி..!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிலாமதி said:

இனிய நினைவுகளை மீட்டும் பதிவுக்கு நன்றி. நாங்க பெண் குட்டிகள் .

அண்ணா மாருக்குப்பின்னால் ஓடுவது .பறந்து வருவதை ..பொறுக்குவது tw_blush:

எழுதும் போதே என்னைப் போல் பலருக்கும் இப்படியான அனுபவம் கிடைத்திருக்கும் என்ற எண்ணத்துடனே எழுதினேன்.

16 hours ago, ராசவன்னியன் said:

பால்ய நினைவுகள்..!

blogger-image--569123928.jpg

இப்படித்தான் இருந்தது எங்கள் கிராமத்தில் 'டூரிங் டாக்கீஸ்'..!

18FL_HUGHES_1602111g.jpg

ஆற்று மணல் குவியலே எங்கள் இருக்கை.!

பண்டிகை நாட்களில் இருபுறமும் தடிப்பான துணிகளால் மூடிவிட்டு பகல் காட்சியும் நடைபெறும்!!

image.jpg

சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டி..! சிவாஜி, எம்ஜியார் படங்களென்றால்

இந்த மாட்டுவண்டி, வண்ண வண்ண பேப்பர், ஜரிகை அலங்காரத்தால் கவர்ந்திழுக்கும்!!

Veerapuram.jpg

அன்று திரையிடும் சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டியின் பின்னால்

இப்படித்தான் நாங்களும் பால்ய வயதில் மகிழ்ச்சியுடன் ஓடினோம்..!

(சகோதரி நிலாமதி சொன்னபடியே பெண்குட்டிகள் பின்னாடி ஓடி வருவதை, இங்கேயும் காணலாம் :))

.

வன்னியர் அருமையான படங்களுக்கு ரொம்பவும் நன்றி.பச்சை இல்லை.நாளை.

15 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனின்... பதிவுக்கு ஏற்ற, அருமையான படம் ராஜவன்னியன். :101_point_up:
அந்தப் படமே... ஆயிரம் கதை சொல்கின்றது. :)

சிறி இதிலே பையன்கள் சேர்ட்டு போட்டிருக்கிறார்கள்.நாங்கள் அதுவும் போடமாட்டோம்.

Link to comment
Share on other sites

நீங்கள் எலோரும் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து உள்ளீர்கள்...எனக்கு என்டால tw_astonished:ப்படிஒரு அனுபவமும் இல்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் எலோரும் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து உள்ளீர்கள்...எனக்கு என்டால tw_astonished:ப்படிஒரு அனுபவமும் இல்லை

ரதி உங்களுக்கு மட்டுமல்ல 75 க்கு பின் பிறந்த எவருமே இப்படியானவற்றை அனுபவித்திருக்க மாட்டார்கள்.இனிமேலும் இப்படி வாழ்க்கை இலங்கையில் வரவே வராது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமும் பச்சையும் தந்து ஆதரவளித்த உறவுகளுக்க மனமார்ந்த நன்றி.

விசேடமாக படங்களை தேடியெடுத்து இணைத்த ராஜவன்னியனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8.3.2017 at 0:10 PM, சுவைப்பிரியன் said:

அந்த நோடிசை கசக்கிப் போட்டுத்தான் எறிவார்கள்.அல்லது காற்றில்
பறந்து விடும்.:unsure:நன்றி ஈழப்பிரியன் பழசை கிளறியதற்க்கு.tw_blush:

கசக்கி எறியும் நோட்டீஸ் காற்றில் பறக்காது
ஆனாலும் கசக்காமல் கத்தையாக எறிந்து காற்றில் பறக்கும்  நோட்டிஸ்களைப் பாய்ந்து பாய்ந்து பிடிப்பதில் இருக்கும் சந்தோசம் அந்தமாதிரி  இருக்கும்tw_blush:

நோட்டீஸ் அந்த மாதிரி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாத்தியார் said:

கசக்கி எறியும் நோட்டீஸ் காற்றில் பறக்காது
ஆனாலும் கசக்காமல் கத்தையாக எறிந்து காற்றில் பறக்கும்  நோட்டிஸ்களைப் பாய்ந்து பாய்ந்து பிடிப்பதில் இருக்கும் சந்தோசம் அந்தமாதிரி  இருக்கும்tw_blush:

நோட்டீஸ் அந்த மாதிரி ஈழப்பிரியன்

அப்போ நீங்களும் அனுபவிச்சிருக்கிறீங்க.

நன்றி வாத்தியார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/03/2017 at 2:00 AM, ஈழப்பிரியன் said:

ரதி உங்களுக்கு மட்டுமல்ல 75 க்கு பின் பிறந்த எவருமே இப்படியானவற்றை அனுபவித்திருக்க மாட்டார்கள்.இனிமேலும் இப்படி வாழ்க்கை இலங்கையில் வரவே வராது.

அப்ப ரதி 75 இக்கு பிறகு பிறந்தவர் என்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

அப்ப ரதி 75 இக்கு பிறகு பிறந்தவர் என்கிறீர்களா? 

எனது எண்ணம் சரி என்றே எண்ணுகிறேன்.அப்படி இல்லாவிட்டால் நகர வாசியாக இருக்க வேண்டும்.

நீங்க தானே நேரே பார்த்த ஆளாச்சே சொல்லுங்க மீரா நான் எழுதியது சரியா பிழையா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த நோட்டிஸ் பற்றிய பதிவு  என்னையுமிழுத்து  விட்டது அந்த நாட் களில் பல இயகங்கள் நோட்டிஸ் போடும் வெளிச்ச வீடு , தொடக்கம் வீணை வரைக்கும் கிழக்கில் கணக்கு செய்வதற்கு அதன் பின் பக்கம் நன்றாக உதவியது எனக்கு  காரணம் செய்ய கொப்பிகள் , இல்லை  என்னைப்பிரட்டி எடுத்த வரலாறு அந்த நாளில்  கலவரம் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.