Jump to content

கடவுளின் மரண வாக்குமூலம்......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபிக்கபட்ட 
இனமென்று 
தெரிந்திருந்தும்
உன்னை நிமிர்த்திட
நான் துடித்தேன்.

யாருக்கும் கிடைக்காத 
பொக்கிசமாய்
அர்சுனனை மீண்டும் 
உன் குடியில் 
பிறக்கவைத்தேன்!
ஆயிரம் ஆயிரம்
அபிமன்யூக்களை
 உனக்கென்று
கொடுத்து வைத்தேன்!

சதுரங்க ஆட்டத்தின் 
வித்தைகள் தெரிந்தவனை
உன் கூட்டத்தின் 
தளபதியாக்கினேன்!

சுதந்திரத்தின் வாசம் 
புரியட்டும் உனக்கு என்று
பறவைகளை உன்
வாசலுக்கு அனுப்பி 
வைத்தேன்!

நல்ல எண்ணங்கள்
புத்தியில் வரட்டுமென
வாசனை மலர்களை 
உன் வீட்டு வாசலில்
வைத்தேன்!

கிடுகு வேலிக்குள்
சண்டியனாய் நீ 
வளர்ந்தாய்!
வடக்கென்றும்
கிழக்கென்றும்
தீவென்றும்
பிரிவுகள் பல பேசி 
கோமணமும் இல்லாது
அம்மணமாய் 
நீ நின்றாய்!

சாதியென்றும் 
மதமென்றும்
தற்பெருமைகள் பேசி
உனக்கு நீயே
மகுடங்கள் 
சூடிக்கொண்டாய்!

தலையனை சுகமே
பெரிதென 
நீ கிடந்தாய்.
கடவாய் வழிய
படுத்திருத்தல் 
சொர்க்கமென 
நீ  கிடந்தாய்,

அர்சுனர்களின் 
ஆட்டம்
உனக்கு சினத்தை 
தந்தது!

அர்ச்சுனன் வீரம் 
கண்டு
உலமே வியந்து
நின்றது.
உனக்கு மட்டும்
முற்றத்து 
மல்லிக்கையின்
மகத்துவங்கள்
புரியவேயில்லை!

வாழ்வியலின் 
அர்த்தம்
புரியட்டும் என்று 
கல்விதாயை
வரமாய் 
கொடுத்தேன்.

நீ போதை 
தலைக்கேறி
மதம் கொண்டு
திரிந்தாய்!
பிரிவுகள் பல 
சொன்னாய்
அடிமையாய் கிடப்பதே 
சுகமென கிடந்தாய்!

மெத்தப்படித்த 
செருக்கு உனக்கு!
கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாதென 
யாரோ சொன்னது.
நந்திக்கடல் அலையின் 
ஓசையிலும் எனக்கு
நன்றாய் கேட்டது.

உன்னைக் காப்பாற்ற
முடியா விரக்தியில்
நானும் அர்ச்சுனர்களும்
நந்திக் கடலில் 
இறங்கி,
தூர நடந்தோம்...
பெரிய அலையொன்று
எங்களை விழுங்கியது.

அர்ச்சுனர் கூட்டம் 
அமிழும் நிலையிலும்
தாகத்திற்க்கு தமிழீழம்
கேட்டது!
கொடுத்துவிடலாம் என 
ஒரு கணம் நினைத்தேன்!

திரும்பிப் பார்த்தேன்..

நந்திக்கடலின் 
ஆர்பரிப்பில்,
தப்பிய 
தறுதலையொன்று
தலையாட்டியாய் 
மாறி நின்றது!

இன்னொன்று
செத்த பிணங்களை
புணர்ந்து கொண்டது!

இன்னொன்று
வெள்ளைவேட்டிக்
கனவில் 
நாயாய் 
நக்கிநின்றது!

நாசமாய் போகெட்டும்
இந்தக் குடியென
மனமார திட்டிவிட்டு
நந்திக்கடலில்
நானும் இறந்தே 
போனேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Athi30 said:

வாழ்வியலின்

அர்த்தம்

புரியட்டும் என்று 
கல்விதாயை
வரமாய் 
கொடுத்தேன்.

நீ போதை 
தலைக்கேறி
மதம் கொண்டு
திரிந்தாய்!
பிரிவுகள் பல 
சொன்னாய்

அடிமையாய் கிடப்பதே 
சுகமென கிடந்தாய்!

நல்லாயிருக்கு! bouh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Athi30 said:

சபிக்கபட்ட 
இனமென்று 
தெரிந்திருந்தும்
உன்னை நிமிர்த்திட
நான் துடித்தேன்.

யாருக்கும் கிடைக்காத 
பொக்கிசமாய்
அர்சுனனை மீண்டும் 
உன் குடியில் 
பிறக்கவைத்தேன்!
ஆயிரம் ஆயிரம்
அபிமன்யூக்களை
 உனக்கென்று
கொடுத்து வைத்தேன்!

சதுரங்க ஆட்டத்தின் 
வித்தைகள் தெரிந்தவனை
உன் கூட்டத்தின் 
தளபதியாக்கினேன்!

-------

கிடுகு வேலிக்குள்
சண்டியனாய் நீ 
வளர்ந்தாய்!
வடக்கென்றும்
கிழக்கென்றும்
தீவென்றும்
பிரிவுகள் பல பேசி 
கோமணமும் இல்லாது
அம்மணமாய் 
நீ நின்றாய்!

-----

அர்சுனர்களின் 
ஆட்டம்
உனக்கு சினத்தை 
தந்தது!

அர்ச்சுனன் வீரம் 
கண்டு
உலமே வியந்து
நின்றது.
உனக்கு மட்டும்
முற்றத்து 
மல்லிக்கையின்
மகத்துவங்கள்
புரியவேயில்லை!

வாழ்வியலின் 
அர்த்தம்
புரியட்டும் என்று 
கல்விதாயை
வரமாய் 
கொடுத்தேன்.

------

மெத்தப்படித்த 
செருக்கு உனக்கு!
கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாதென 
யாரோ சொன்னது.
நந்திக்கடல் அலையின் 
ஓசையிலும் எனக்கு
நன்றாய் கேட்டது.

உன்னைக் காப்பாற்ற
முடியா விரக்தியில்
நானும் அர்ச்சுனர்களும்
நந்திக் கடலில் 
இறங்கி,
தூர நடந்தோம்...
பெரிய அலையொன்று
எங்களை விழுங்கியது.

அர்ச்சுனர் கூட்டம் 
அமிழும் நிலையிலும்
தாகத்திற்க்கு தமிழீழம்
கேட்டது!
கொடுத்துவிடலாம் என 
ஒரு கணம் நினைத்தேன்!

திரும்பிப் பார்த்தேன்..

நந்திக்கடலின் 
ஆர்பரிப்பில்,
தப்பிய 
தறுதலையொன்று
தலையாட்டியாய் 
மாறி நின்றது!

இன்னொன்று
செத்த பிணங்களை
புணர்ந்து கொண்டது!

இன்னொன்று
வெள்ளைவேட்டிக்
கனவில் 
நாயாய் 
நக்கிநின்றது!

நாசமாய் போகெட்டும்
இந்தக் குடியென
மனமார திட்டிவிட்டு
நந்திக்கடலில்
நானும் இறந்தே 
போனேன்!

ஆதி 30.....
அத்தனையும்.. முத்தான வரிகள்.
அருமையான கவிதைப் பகிர்விற்கு, நன்றி.

Link to comment
Share on other sites

2 hours ago, Athi30 said:

திரும்பிப் பார்த்தேன்..

நந்திக்கடலின் 
ஆர்பரிப்பில்,
தப்பிய 
தறுதலையொன்று
தலையாட்டியாய் 
மாறி நின்றது!

இன்னொன்று
செத்த பிணங்களை
புணர்ந்து கொண்டது!

இன்னொன்று
வெள்ளைவேட்டிக்
கனவில் 
நாயாய் 
நக்கிநின்றது!

நாசமாய் போகெட்டும்
இந்தக் குடியென
மனமார திட்டிவிட்டு
நந்திக்கடலில்
நானும் இறந்தே 
போனேன்!

பிடித்த வரிகள்

தொடருங்கள் நண்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி 30 , அருமையான கவிதை....!

புதிதாய் இணைந்துள்ளீர்கள் போல. வரவேற்கின்றோம் வாழ்த்துக்கள்......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தோழர்களே! தோழிகளே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி30 உங்கள் கவிதையை வாசிக்கும்போது உயிரே தேம்புவதாய் உணர்கிறேன். துயர் விட்டு வெளியே வருவது இயலாதகாரியமாய் முடங்கிப்போகிறேன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வல்வை சகாறா said:

ஆதி30 உங்கள் கவிதையை வாசிக்கும்போது உயிரே தேம்புவதாய் உணர்கிறேன். துயர் விட்டு வெளியே வருவது இயலாதகாரியமாய் முடங்கிப்போகிறேன். :(

உங்கள் வருகைக்கு  நன்றி @வல்வை சாகரா  
     
இத்தனை இழப்பிற்க்குபின்னும் இன்னும் நிமிர்த்த முடியா நாய் வாலாகத்தானே எம் இனம் இருக்கிறது.

எதிரியின் வீரத்தால் வீழ்ந்திருந்தால்  நாங்கள் மனமாறி போயிருக்கலாம்.

எங்கள் கதை அதுவல்லவே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/03/2017 at 2:28 AM, சுவைப்பிரியன் said:

அருமையான கவிதை தொருங்கள்.

 

On 13/03/2017 at 6:01 AM, ஈழப்பிரியன் said:

மீண்டும் சூழ்ச்சி வென்றுவிட்டது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்  நன்றி!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை வரிகள் தமிழினத்தின் இக்கட்டான நிலையை அப்படியே கொண்டுவந்துள்ளது. யானை தனக்குத்தானே படுகுழி தோண்டியது போன்றதுதான் நம் நிலையும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதி!
எமது இனத்தின் ஆதியையும் அந்தத்தையும் மனக்குமுறலுடன் அமைதியாக எழுதியுள்ளீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/03/2017 at 11:42 AM, குமாரசாமி said:

வணக்கம் ஆதி!
எமது இனத்தின் ஆதியையும் அந்தத்தையும் மனக்குமுறலுடன் அமைதியாக எழுதியுள்ளீர்கள்.
 

உங்கள் கருத்துக்களுக்கு  நன்றிகள் பல @ குமாரசாமி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.