• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கலைஞன்

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!

Recommended Posts

செல்வன் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=23194

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை

எனக்கு இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் தமிழ் சீரியல்களைப் பார்த்து அலுத்து விட்டது. இப்போது நாமே ஒரு சீரியலை உருவாக்கினால் என்ன என்ற ஆதங்கம் எனக்குள் வந்துவிட்டது. வழமையாக சீரியல்களில் ஒரு பெண்ணின் வாழ்வைக் கருவாக வைத்தே, ஒரு பெண்ணை மாபெரும் தலைவியாக வைத்தே கதை உருவாக்கப்படும். இதற்காக நான் வித்தியாசமாக ஒரு ஆணை மூலப்பொருளாகக் கொண்டு இந்த சீரியலைப் பண்ணுவதாய் முடிவெடுத்துள்ளேன்.

இந்த சீரியலின் பெயர் "செல்வன்". 1000 எபிசோடுகளாக வெளியிட்டு தமிழ் சீரியல் உலகில் நான் ஒரு பெரிய புள்ளியாக வந்து அதன் பின் ஹொலி வூடுக்கும் செல்ல முடிவெடுத்துள்ளேன்.

எனது சீரியலில் சீரியசாக நடிப்பதற்கு யாழ் களத்தில் இருந்து நடிக, நடிகைகளை எதிர்பார்க்கிறேன்.

எந்த வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பம் என்று கூறி உங்களிற்கு விருப்பமான பாத்திரங்களையும், உங்களுக்கு நடிப்பதற்கு எவ்வளவு பணம் வேண்டும் எனவும் கூறினால் நான் எனது கதையை எழுதத்தொடங்குவதற்கு வசதியாக இருக்கும்.

இதில் முக்கியமாக கதாநாயகன் செல்வனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக்கூடிய மிகச் சிறந்த ஒரு நடிகன் எனக்கு தேவை. இவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்:

1. நல்ல உயரமாகவும், தோற்றத்துடனும் (சரத்குமார் போல்) இருக்க வேண்டும்

2. தற்போது வேலை,வெட்டியின்றி வீட்டில் இருந்து நிறைய சீரியல்களை பார்ப்பவராய் இருக்க வேண்டும்.

3. தொந்தி வயிறு இருக்கக்கூடாது.

4. தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் புலமை பெற்றவராய் இருக்க வேண்டும்.

5. பெண்களுடன் சில்மிசங்கள் செய்பவராய் இருக்கக்கூடாது(உறவினரல்லாத 03 பேர் உறுதிப்படுத்திய நற்சாட்சிப் பத்திரம் தேவை)

6. மிகுதி பின்.

நான் எனது செல்வன் என்ற இந்த சீரியலை வெற்றிகரமாக 1000 எபிசோடுகளுடன் வெளியிட்டு உலகத் தமிழ் மக்களின் மனங்களில் சீரியல் சிங்கன் என்ற பெயருடன் இடம்பிடிப்பதற்கு யாழ் கள நண்பர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், உதவிகளையும் எதிர்பார்க்கின்றேன்.

Edited by கலைஞன்

Share this post

Link to post
Share on other sites

மாப்பு, என்ரை செல்லமெல்லே என்னையும் சேர்க்கிறீரே உம்மடை சீரியல்லை.

நான் என்ரை பேருக்கேத்தாப்போலை சமரசம் செய்து வைக்கிற பாத்திரமேதுமிருந்தா நடிக்கிறன்.

சாசு கீசு வேண்டமாட்டன் சரியே. சீரியல் திறமா வந்தா உம்மடை பேரையும் 2008 நோபல்

பரிசுக்கும் சிபாரிசு பண்ணி வைக்கிறன்

Share this post

Link to post
Share on other sites

நோர்வேஜியன்,

நீங்கள் செல்வன் சீரியலில் பணமும் வாங்காது எரிக் சொல்ஹெம் போல் சமரசம் செய்யும் ஒரு பாத்திரத்தில் நடிக்க முன்வந்தமைக்கு மிகவும் நன்றி!

செல்வனுக்கும் அவனது பரம எதிரிக்கும் நண்பனாக இருந்து இருவரையும் சமரசம் செய்து வைக்கும் ஒரு பாத்திரத்தை உங்களுக்கு தருகின்றேன். உங்களின் இந்த பாத்திரம் ஏறக்குறைய ஆனந்தம் எனும் சீரியலில் வரும் ஆர்.கே எனும் கெளரவமான மனிதரின் பாத்திரத்திற்கு ஒப்பானது. எனவே ஆனந்தம் தொடரை கவனமாகப் பார்த்து, அதில் ஆர்.கே எவ்வாறு நடிக்கின்றார் என்பதை உன்னிப்பாகக் கவனித்து பயிற்சி எடுக்கவும்.

இங்கு நான் கொஞ்சம் வித்தியாசமாக எனது கற்பனையை ஓட்டியுள்ளேன். அதாவது செல்வன் எனும் கதாநாயகன் ஆனந்தம் சீரியலில் வரும் சாந்தியின் கரக்டரை ஒத்த ஆண்பாத்திரம். அவனது எதிரி அதே தொடரில் வரும் அபிராமி போன்ற கரக்டரை ஒத்த ஆண்பாத்திரம்.

இந்த செல்வன் சீரியலில் நான் செய்யப்போகும் புதுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் இருந்து ரிலீசாகும் பல்வேறு சீரியல் தொடர்களை ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பிணைந்து, அதில் வரும் பாத்திரங்களை ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றி புதுமைகள் செய்து இதுவரை ஒருவரும் செய்திராதபடி வித்தியாசமான ஒரு கதையைத் தரப்போகின்றேன்.

கீழேயுள்ள படத்தில் உள்ள ஆண்தான் ஆர்.கே

tamilserialsgm7.jpg

குறிப்பு: ஆனந்தம் தொடரை சன் ரீவியில் சட்டலைட் ஊடாக பார்க்க முடியும். உங்களிடம் பார்ப்பதற்கு வசதி இல்லை என்றால் இதற்காக உங்கள் வீட்டிற்கு இலவசமாக சன் ரீவி சட்டலைட் கனக்சனை விரைவில் நான் எடுத்துத் தருவேன் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.(செல்வன் தொடரில் உங்கள் பாத்திரத்தின் வேலை முடிந்ததும் சட்டலைட் கனக்சன் கட் செய்யப்படும் என்பதையும் மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்)

Share this post

Link to post
Share on other sites

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

Share this post

Link to post
Share on other sites

மாப்பிள்ளை,

பேசாமல் உங்கள் தொடருக்கு மாப்பிள்ளை என்று பெயர் மாற்றம் செய்துவிடுங்கள். நீங்களே கதாநாயகனாகவும் நடிக்கலாம்.

பெயருக்கும் கதைக்கும் (கதை இருந்தால்) சம்பந்தம் உள்ளதா என்பது முக்கியமில்லை, 1000 எபிசோட்டுகள் ஓடவேண்டும்.

நடிக்க சான்ஸ் கேட்டு வருபவர்களை அப்பப்போது கண்ட கண்ட இடத்தில் சொருவி விடலாம்.

Share this post

Link to post
Share on other sites

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

உங்களுக்கு காதல் பித்தன் பாத்திரத்தில் நடிக்க விருப்பமா? அசின் என்ன, அசினை விட அழகான பல கல்லூரிப் பெண்களை ராக்கிங் என்ற பெயரில் ஜொள்ளுகள் பல செய்து துன்புருத்தி கடைசியில் யூனிவர்சிட்டிக்கு புதிய மாணவியாக வரும் கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியை காதலித்து பின் சீரியலின் இடைப்பகுதியில் காதல் நோய் முற்றி மனநோயாளியாகி பின் சீரியலின் முடிவில் கடவுள் கிருபையால் குணமாகி செல்வியையே மணம் முடிக்கும் காதல் பித்தன் பாத்திரத்தை உங்களுக்கு தருகின்றேன். செல்வன் சீரியலில் உங்கள் பெயர் விது அல்ல, அழகான தேவாதாஸ் எனும் பெயரை உங்களுக்கு சூட்டுகின்றேன். சீரியலில் உங்களை எல்லாரும் செல்லமாக தேவ், தேவ் என்று கூப்பிடுவார்கள்!

ஆனால் ஒரு நிபந்தனை: பல அழகிய பெண்களுடன் ஜொள்ளு விட்டு பழகும் பாத்திரத்தை உங்களுக்கு நான் தருவதால் செல்வன் சீரியலில் நீங்கள் நடிப்பதற்காக மேலதிகமாக உங்களிற்கு நான் பணம் ஒன்றும் கூலியாகத் தர முடியாது.

எனக்கு மூளை கழன்றுள்ளது உண்மை தான். ஆனால் நானே கதை எழுதி, டைரக்ட் பண்ணி, தயாரிக்கும் இந்த செல்வன் சீரியலில் நானே கதாநாயகனாகவும் நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் மூளை கழறவில்லை. :lol:

முக்கிய அறிவிப்பு: எனது சீரியலில் நடிப்பதற்கு முன்வரும் முதல் ஐம்பது நடிக, நடிகைகளிற்கு சன் டீவி யை சட்டலைட் மூலம் மூன்று மாதங்களிற்கு இலவசமாகப் பார்த்து மகிழ்வதற்கு ஒழுங்குகள் செய்துதரப்படும்!

Share this post

Link to post
Share on other sites

தம்பி மாப்பு!

ஆதிக்கும் நீண்ட நாளா... பெரிய ஆசை......

சிரிக்கக் கூடாது ஹீரோவா அசத்தத்தான்..... ஒருதரும் சந்தர்ப்பம் தரமாட்டேங்கிறாங்க.

தேவர் பிலிம்ஸ் காரங்க மட்டும் வாய்ப்புத் தாறதா சொல்லியிருக்காங்க. அடேய் மாப்பு! ஆதிக்கு செல்வன் பாத்திரத்தைத் தந்து பாரப்பு. பின்னாடி நீ எங்கேயோ போயிடுவியப்பா! :D:lol:

Share this post

Link to post
Share on other sites

கம்பனியின் பெயரையும் "மாப்ஸ் சினி ஆர்ட்ஸ்" என்று வைச்சால் தூள் கிளப்பும். பொதுச் சேவையிலை எனக்கு கொஞ்சம் ஈடுபாடு இருக்குத்தான் பாப்பம் இதையும் எப்படிச் சமாளிக்கப்போறனெண்டு. இரக்கமே இல்லாத சரியான கறார் ஆள்போல தெரியுது. எண்டாலும் வெல்லுவம் சரியே. ஒரு 18 வயது இளந்தாரிப் பொடியனுக்கு ஒரு பாத்திரம் இருந்தா அதை எனக்குத் தந்தா என்ன?

Share this post

Link to post
Share on other sites

QUOTE(விது @ Feb 15 2007, 11:24 AM)

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

உங்களுக்கு காதல் பித்தன் பாத்திரத்தில் நடிக்க விருப்பமா? அசின் என்ன, அசினை விட அழகான பல கல்லூரிப் பெண்களை ராக்கிங் என்ற பெயரில் ஜொள்ளுகள் பல செய்து துன்புருத்தி கடைசியில் யூனிவர்சிட்டிக்கு புதிய மாணவியாக வரும் கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியை காதலித்து பின் சீரியலின் இடைப்பகுதியில் காதல் நோய் முற்றி மனநோயாளியாகி பின் சீரியலின் முடிவில் கடவுள் கிருபையால் குணமாகி செல்வியையே மணம் முடிக்கும் காதல் பித்தன் பாத்திரத்தை உங்களுக்கு தருகின்றேன். செல்வன் சீரியலில் உங்கள் பெயர் விது அல்ல, அழகான தேவாதாஸ் எனும் பெயரை உங்களுக்கு சூட்டுகின்றேன். சீரியலில் உங்களை எல்லாரும் செல்லமாக தேவ், தேவ் என்று கூப்பிடுவார்கள்!

ஆனால் ஒரு நிபந்தனை: பல அழகிய பெண்களுடன் ஜொள்ளு விட்டு பழகும் பாத்திரத்தை உங்களுக்கு நான் தருவதால் செல்வன் சீரியலில் நீங்கள் நடிப்பதற்காக மேலதிகமாக உங்களிற்கு நான் பணம் ஒன்றும் கூலியாகத் தர முடியாது.

என்னது பா பா பாழம் தின்ன யாராவது காசு கேட்பானா ஆனா அசின் மட்டும் மறந்திட வேண்டாம்[/u]

Edited by விது

Share this post

Link to post
Share on other sites

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

ரொம்பத்தான் ஓவர் இது.

Share this post

Link to post
Share on other sites

தம்பி மாப்பு!

ஆதிக்கும் நீண்ட நாளா... பெரிய ஆசை......

சிரிக்கக் கூடாது ஹீரோவா அசத்தத்தான்..... ஒருதரும் சந்தர்ப்பம் தரமாட்டேங்கிறாங்க.

தேவர் பிலிம்ஸ் காரங்க மட்டும் வாய்ப்புத் தாறதா சொல்லியிருக்காங்க. அடேய் மாப்பு! ஆதிக்கு செல்வன் பாத்திரத்தைத் தந்து பாரப்பு. பின்னாடி நீ எங்கேயோ போயிடுவியப்பா! :D:lol:

நான் ஆரம்பத்தில் கூறுயுள்ள 05 அம்சங்களும் உங்களுக்கு இருக்குமாயிருந்தால் நிச்சயமாக செல்வன் தொடரில் உங்களைக் கதாநாயகன் செல்வனின் பாத்திரத்தில் போட முடியும். ஆனால் ஒரு நிபந்தனை, செல்வன் சீரியல் மூலம் நீங்கள் பிரபலமாகி விட்டால் முதலில் எனது 1000 எபிசோடுகளையும் முடித்து தந்த பின்னரே தமிழ் சினிமாப்படங்கள் மற்றும் ஹொலிவூட் படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுக்க முடியும். எனது Contract ஐ Breach பண்ணினால் உங்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பேன்!

கம்பனியின் பெயரையும் "மாப்ஸ் சினி ஆர்ட்ஸ்" என்று வைச்சால் தூள் கிளப்பும். பொதுச் சேவையிலை எனக்கு கொஞ்சம் ஈடுபாடு இருக்குத்தான் பாப்பம் இதையும் எப்படிச் சமாளிக்கப்போறனெண்டு. இரக்கமே இல்லாத சரியான கறார் ஆள்போல தெரியுது. எண்டாலும் வெல்லுவம் சரியே. ஒரு 18 வயது இளந்தாரிப் பொடியனுக்கு ஒரு பாத்திரம் இருந்தா அதை எனக்குத் தந்தா என்ன?

சரி அப்ப உங்களுக்கு அந்த சமரசம் செய்யும் பெரியவரின் பாத்திரம் பிடிக்கவில்லையென்றால் அவரது மகனாக நடிக்கும் 18 வயது பையனின் பாத்திரத்தை தருகின்றேன்.

இந்த கம்பனியின் பெயரை "மாப்ஸ் சினி ஆர்ட்ஸ்" என்று வைத்தால் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. பிறகு நம்மட ஆட்கள் கலியாணம் செய்து வைக்கும் புரோக்கர் கம்பனி என நினைக்கத் தொடங்கி விடுவார்கள். இந்த சீரியலில் நடிப்பவர்கள், மற்றும் வியாபாரப் பங்காளிகள் - Business Partners (விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்) யாழ் கள நண்பர்களாக இருப்பதால் இந்தக் கம்பனிக்கு யாழ் சினி ஆர்ட்ஸ் என பெயர் வைக்கலாம்!

QUOTE(விது @ Feb 15 2007, 11:24 AM)

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

என்னது பா பா பாழம் தின்ன யாராவது காசு கேட்பானா ஆனா அசின் மட்டும் மறந்திட வேண்டாம்

என்னையா குழப்புறீங்கள்? சின்னப் பாத்திரம் தான் செய்வீங்கள் என்று சொல்கின்றீர்கள், பிறகு எப்படி அசினுடன் உங்களைச் சேர்த்து நடிக்க வைக்க முடியும்? சீரியலில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நீங்கள் நடிப்பீர்களானால், நான் உடனேயே அசினுடன் MSNல் சட் பண்னி அல்லது ஈ மெயில் அனுப்பி அல்லது போன் பண்ணி கால் சீட் கேட்க முடியும்.

Edited by மாப்பிளை

Share this post

Link to post
Share on other sites

சரி சரி..என்னையும் சேருங்கோ..ஆனால் சில கன்டிஷன்ஸ் இருக்கு...

காதல் பித்தன் பாத்திரம்மெனக்குத்தான் இதைப்பிடுங்க கனபோர் உங்க பம்மிறமாதிக்கிடக்குது....

சீச்சீ நீங்கள் பயப்படத்தேவையில்லை. காதல் பித்தன் பாத்திரத்தை உங்களிடம் இருந்து பிடுங்கி வேறு ஒருவருக்கு கொடுக்கும் துரோகங்களையெல்லாம் நான் செய்ய மாட்டேன். சிம்புவின் படங்களைப் பார்த்து உடனடியாகவே பயிற்சியில் ஈடுபடத்தொடங்குங்கள். லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணெ என்ற பாடலிற்கு நடனமாடிப் பழகுங்கள்! உங்களை செல்வன் சீரியலில் அறிமுகப்படுத்தும் போது உங்களின் முதற்காட்சியாக இதுதான் வருகிறது!

simbugallery1vt9.jpg

Share this post

Link to post
Share on other sites

சரி சரி..என்னையும் சேருங்கோ..ஆனால் சில கன்டிஷன்ஸ் இருக்கு...
மூக்கி,

நீங்கள் செல்வன் சீரியலில் நடிக்க முன்வந்தது மிகவும் சந்தோசம். ஆனால் உங்கள் கன்டிசனுகள் என்னவென்று விளக்கமாகச் சொல்லிவிடுங்கள். ஐயா நெடுக்கும் செல்வன் சீரியலில் நடிக்கவரக்கூடாது என்பதா உங்கள் கன்டிசன்? தற்செயலாக அவரும் ஆசைப்பட்டு நடிக்க முன்வந்தால் அவரை உங்கள் எதிரியாக நடிக்க வைப்பது உங்களுக்கு ஓகேயா? பிறகு சூட்டிங்கில் இருவரும் சண்டைபிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது இப்பவே சொல்லிப்போட்டன்! :D:D:D

Share this post

Link to post
Share on other sites

அடங்கொக்கா மக்கா.. மாப்பிளை..!

நான் இசை அமைக்கிறன். ஓப்பிணிங் சோங் ஒண்டு போட்டு அசத்துவம்.

செல்வன்.. செல்வன்.. செல்வன்.....

பல்லவி:

ஒட்டிக்கிச்சு ஒட்டிக்கிச்சு உன்னுடைய தோசை

சட்டி முதல் சட்னி வரை உன்னுடைய தேவை

உனக்கில்லை தோசை இன்னிக்கு..

ஓஹோ..ஓ.. மொள்ளமாறி செல்வன்

ஓஹோ..ஓ.. முடிச்சவிக்கி செல்வன்

கொஞ்சம் நீ கேணப்பயல்.. கொஞ்சம் நீ கோணல்பயல்

அங்கே உன் தோசையும் கரியாச்சு

கொஞ்சம் அதைக் கையில் கிள்ளி நித்தம் அடை வாயில் தள்ளி

பல்லை நீ தேய்த்திட வா.......

(ஜதி போடவும்.)

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் ஏதாவது நல்ல கதாபாத்திரமாய் பார்த்து தாங்கப்பா :D

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் ஏதாவது நல்ல கதாபாத்திரமாய் பார்த்து தாங்கப்பா :D

ஈழவன் செல்வன் சீரியலில் நடிப்பதற்கு ஒரு இளம்வயதான புலனாய்வு பொலிஸ் அதிகாரியாக(வெளிநாட்டு அதிகாரி, சிறீ லங்கா நாட்டு அதிகாரி அல்ல) நடிக்கும் பாத்திரம் ஒன்று உள்ளது. இதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும். செல்வன் தொடரில் உங்கள் பாத்திரத்தின் வேலையெல்லாம் காதல்பித்தனாக செல்வன் தொடரில் நடிக்கும் ஒரு அப்பாவியை புலனாய்வு செய்து துன்புருத்துவதுதான். நீங்கள் அந்தக் காதல்பித்தனே செல்வனின் தங்கை செல்வியை ஒருதலையாகக் காதலித்தவனை கொலைசெய்துவிட்டதாகச் சந்தேகிக்கின்றீர்கள். ஆனால் சீரியலில் முடிவில் தான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கின்றீர்கள். இப்படி கதை போகிறது....நிறைய அக்சன் மூவ்ஸ், பரபரப்புக்கள் எல்லாம் பாத்திரத்தில் உள்ளது. இப்பொழுதே உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆயத்தமாகுங்கள்! :D

92890500rd1.jpg

Share this post

Link to post
Share on other sites

சீச்சீ நீங்கள் பயப்படத்தேவையில்லை. காதல் பித்தன் பாத்திரத்தை உங்களிடம் இருந்து பிடுங்கி வேறு ஒருவருக்கு கொடுக்கும் துரோகங்களையெல்லாம் நான் செய்ய மாட்டேன். சிம்புவின் படங்களைப் பார்த்து உடனடியாகவே பயிற்சியில் ஈடுபடத்தொடங்குங்கள். லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணெ என்ற பாடலிற்கு நடனமாடிப் பழகுங்கள்! உங்களை செல்வன் சீரியலில் அறிமுகப்படுத்தும் போது உங்களின் முதற்காட்சியாக இதுதான் வருகிறது!

simbugallery1vt9.jpg

என்னது.......சிம்புவைபோலவா அப்ப நயன்தாரறா.................................

Share this post

Link to post
Share on other sites

அதுக்கென்ன கலக்கிட்டா போச்சுது

Share this post

Link to post
Share on other sites

அடங்கொக்கா மக்கா.. மாப்பிளை..!

நான் இசை அமைக்கிறன். ஓப்பிணிங் சோங் ஒண்டு போட்டு அசத்துவம்.

செல்வன்.. செல்வன்.. செல்வன்.....

பல்லவி:

ஒட்டிக்கிச்சு ஒட்டிக்கிச்சு உன்னுடைய தோசை

சட்டி முதல் சட்னி வரை உன்னுடைய தேவை

உனக்கில்லை தோசை இன்னிக்கு..

ஓஹோ..ஓ.. மொள்ளமாறி செல்வன்

ஓஹோ..ஓ.. முடிச்சவிக்கி செல்வன்

கொஞ்சம் நீ கேணப்பயல்.. கொஞ்சம் நீ கோணல்பயல்

அங்கே உன் தோசையும் கரியாச்சு

கொஞ்சம் அதைக் கையில் கிள்ளி நித்தம் அடை வாயில் தள்ளி

பல்லை நீ தேய்த்திட வா.......

(ஜதி போடவும்.)

இதுவரை செல்வனில் கதாநாயகனாக நடித்து உலகப் புகழ் பெறுவதற்கு நம்மட ஆதிதான் முன்வந்துள்ளார். ஆதியும் பார்த்து ஓகே பண்ணிவிட்டால் உங்கள் பாட்டை டைட்டில் சோங்காக போடலாம். ஆனால் பாட்டின் மியூசிக் தமிழ் ரப் இசையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன். கீழுள்ள பாடலைப் போன்ற தமிழ் ரப் இசையை இப்பாடலுக்கு அமைத்தால் எப்படி இருக்கும் என கேட்டுவிட்டு கூறுங்கள். பாட்டை நான் தான் படிப்பேன்.

Share this post

Link to post
Share on other sites

என்னது.......சிம்புவைபோலவா அப்ப நயன்தாரறா.................................

அடக் கடவுளே! செல்வன் சீரியலின் சூட்டிங் தொடங்கு முன்பே எனக்கு சோதனை தொடங்கிவிட்டதே! செல்வன் சிரீயலில் காதல் பித்தனாக நடிக்க வேண்டியவர் நிஜ வாழ்க்கையில் கூட காதல் பித்தனாக இருக்கிறாரே! இவரை நான் எப்படி 1000 எபிசோடுகள் முடியும்வரை சமாளிக்கப் போகின்றேன்? கடவுளே என்னைக் காப்பாற்று! :D:D:o

Share this post

Link to post
Share on other sites

மயானகாண்டம்,நல்லதங்காள்,அடங்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this