Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 22.3.2017 at 11:54 AM, suvy said:

துருச்சாமி தொடர்கிறது....!

இந்தக் களேபரத்தில் எல்லோரும் இருக்கையில் வீட்டுப் படலையை உதைத்துத் திறந்துகொண்டு பழனி தன் பெஞ்சாதி செண்பகத்தின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு கையில் அவிழும் சாரத்தையும் பற்றிக் கொண்டு உள்ளே வருகிறான். அவன் நல்ல வெறியில் வேறு இருக்கின்றான்.

-----நிறைவெறியில் நிண்ட பழனியும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே இருந்த சனங்களுக்கிடையில் மல்லாந்து விழ குழந்தைகள்  சேம்... சேம் என்று காத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.சுற்றி இருந்த பெண்டுகள் எல்லாம் முகத்தைத் திருப்பி கமுக்கமாய் சிரிக்கினம்.

சாமிக்கு செண்பகம் தன்மேல் சத்தியம் பண்ணுவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று அது சுற்று முற்றும் பார்க்குது. எட்டத்தில் ஒரு சிறு பிள்ளை ஒரு சின்ன பிள்ளையார் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கு. உடனே சாமி அருகில் இருந்த ஒரு பெடிச்சியைக் கூப்பிட்டு காதில் எதோ சொல்ல, அவளும் ஓடிச்சென்று அந்தப் பிள்ளையிடம் இருந்து பிள்ளையாரைப் பிடுங்கிக் கொண்டு வருகிறாள். உடனே அந்தக் குழந்தையும் " என்ர பிள்ளையாரைத் தாடி பூமணி என்று பின்னால காத்திக் கொண்டு ஓடி வருகுது. பூமணி பொம்மையை சாமியிடம் குடுக்க வந்தப்பிள்ளை சாமியின் தண்டத்தைப் பார்த்து கம்மென்று நிக்குது.

சாமி அந்தப் பிள்ளையாரை தன்னருகே வைத்து ஒரு இலையில் சூடத்தை ஏற்றிவிட்டு எழுந்து நிக்குது. நீர் ஒழுக ஈரச்சேலையுடன் அங்கங்கள் எல்லாம் அங்கும் இங்கும் குலுங்க லக லக லக என்று பத்ரகாளிபோல் வந்த செண்பகம் பழனியை முன்னால இழுத்துவிட்டு சொல்கிறாள் " நீதான் என்ர புருஷன். உன்னோடு தவிர வேறு யாரோடும் போகவில்லை" என்று ஆவேசமாய்க் கூறி வலது கையை உயர்த்தி கற்பூரத்தின் மீது ஓங்கியடித்துச் சத்தியம் செய்ய  வெலவெலத்துப் போன துருச்சாமியின் கையில் இருந்த தண்டம் எகிரிப் பிள்ளையார் மேல் விழ மண்ணில் இருந்து வந்த பிள்ளையார் நொறுங்கி மண்குவியலாய்க் கிடக்கிறார்.

------

அட... இந்த முறை,  பழனி....  கோவணம் கட்ட வில்லை. :unsure:
இந்த களேபரத்துக்குள்ளை.... கோவணப் பிரச்சினை, பெரிய  பிரச்சினையாய்  கிடக்குது. :grin: :D:

கதை, நன்றாக போகின்றது சுவியர். தொடர்ந்து அசத்துங்கள்.:)

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 24/03/2017 at 10:01 AM, suvy said:

துருச்சாமி.

சாமியுடன் ஒருநாள். நகைச்சுவை, பாகம் ....2.

வாலிபர் காண்டம்....:    + 18ல் இருந்து 70 வரை.( 70ன் மேல் ஆரோக்கியம் இருக்குதெண்டு ஆட்டம் போடக் கூடாது). 

 வாலிபர் காண்டத்தில் இரண்டு படலங்கள் மட்டுமே உண்டு....!

1)  மதுவின் போதையில் மயங்கும் படலம்.

2)  அந்தரவெளியில் ஆலிங்கணப் படலம்.

நேரம்: 05 : 20. மணி.

வீதியால் நடந்து வந்துகொண்டிருந்த சாமி குடிமனை எல்லைக்கு வந்ததும் திரும்பிப் பார்க்குது. கனபேர் பின்னால வருகினம். அவர்களை பார்த்து சாமி சொல்லுது, இனி மாலை, இரவாகப் போகுது மக்களே ! நான் இனி காடு மலை சுடலைகள் தாண்டிப் போறன். காத்து, கறுப்புகள் வரும், அதனால நீங்கள் சின்னஞ் சிறுசுகள், பிள்ளைத்தாச்சிகள், உடல் பலவீனமானவர்கள் எல்லோரும் அவரவர் வீட்டுக்குப் போங்கோ. மற்றவர்கள் வாங்கோ என்று சொல்லுது.

புகைத்தல் :   புகைத்தல் , புகைவிடும் வாகனங்கள், பிளாஸ்டிக்குகள், குப்பைகள் எரித்தல் என்பன வாயு மண்டலத்தையும், தேக மண்டலத்தையும் பாதிக்கும்....!

மது அருந்துதல் : மாதுக்கு, நாட்டுக்கு, வீட்டுக்கு, ஹார்ட்டுக்கு, ஆட்டுக்கு, கோழிக்கு கேடு.....!

1)  மதுவின் போதையில் மயங்கும் படலம்.

 அப்படியும் அந்தச் சுருட்டுகள் ஒவ்வொன்றும் கன்னா பின்னாவென்று தமன்னா மாதிரி தாறு மாறாய் வீங்கிக் கிடக்கு.....!

புகையில் மிதக்கலாம்....!

 

 

ஐயோ சுவி அண்ணா சிரிச்சு மாளேல்லை. நீங்களும் கசிப்பு கிசிப்பு அடிச்சிட்டுத்தான் கதையை எழுதுறியளோ >???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி .... பாகம் --2 ....தொடர்கிறது.....!

சின்னப்பு அவர்களின் தவத்தைக் கலைக்காமல் கண்ணாலேயே ராசப்புவிடம் அந்த மதுவகைகளை எடுக்கலாமா எனக் கேட்கிறான். ராசப்புவும் ஒரு தலையசைப்பின் மூலம் அனுமதி தந்துவிட்டு சின்னி விரலில் போட்ட மோதிரத்தைத் தடவிக் கொண்டே  கோமளத்தை கொஞ்சிக் கொண்டு கனவுலகில் சஞ்சரிக்கின்றான். சாமியையும் செண்பகம் ஈரச்சேலையுடன் வந்து "கண்ணைத் தொறக்கணும் சாமி, கையைப் பிடிக்கணும் சாமி" ரொம்ப அலைக்கழிக்கிறாள்.சின்னப்புவும் சோமுவும் சப்தமில்லாமல் மிகப் பணிவாக அங்கிருந்த சாராயத்தையும் கசிப்பையும் பங்கிட்டுக் குடிக்கினம். எப்போதும் பெருங்குடி மக்களிடம் ஆரம்பிக்கும்போது அபரிதமான பணிவும் அடக்கமும் இருக்கும்.அதை ஐ.நா சபையிலும் காண முடியாது. சின்னப்புவுக்கு காலையில் கசிப்பைத் தொலைத்ததில் இருந்து சரியான பசி. வாழையிலையில் மிஞ்சி இருந்த கறி, பொரியல் எல்லாத்தையும் குடித்து குடித்து கபளீகரம் செய்கிறான். குடித்து முடித்து இரண்டு போத்தலையும் பத்தைக்குள் எறியும்போது அது அவனது மஞ்சள் பைக்கு மேலால் உருண்டு போகுது.அப்ப சின்னப்பு யோசிக்குது உவன் ராசப்புதான் பையோட கசிப்பு போத்தலையும் தூக்கி கொண்டு வந்திட்டான் போல. உவர் என்ர கசிப்பை எடுத்து எனக்கே தாறார். ம்....! அதற்குள் சோமுவும் அங்கிருந்த சுருட்டில் ஒன்றைப் பற்றவைத்து அது பிடிக்காமல் சின்னப்புவிடம் ரகசியமாய் கஞ்சா என்று சொல்லிக் குடுக்குறான். சின்னப்புவும் அதை வாங்கி ரெண்டு இழுப்பு இழுக்க "கள்ளுக் குடித்த குரங்குக்கு தேளும் கொட்டியதுபோல்"  போதை நன்றாய் ஏறிட்டுது.

இந்நேரம் அங்கு பீடி வலிச்சுக் கொண்டு வையாபுரி வருகிறான். அவனிடம் இருந்து ... ங்கி ... ங்கி ...ஈ ... என்று ஒரு விசித்திரமான சத்தமும் தும்மலுமாய் வருகிறான். ஒரு இருமல் இருமி தொண்டைக்குள் இருக்கும் கோழையை உன்னி இழுத்து எட்டித் துப்பிவிட்டு கூனி நடந்து அருகே வந்து அமர்கிறான். அவனைப் பார்க்க ரொம்ப பாவமாய் இருக்கு. "பாம்பின் கால் பாம்பறியும்" வையாபுரியின் நிலையைப் பார்த்த சாமியும் தனது பையில் இருந்து ஒரு சரையை எடுத்து அவன் முன்னால் போடுது.அதை அவன் ஆவலுடன் எடுத்துக் பிரிக்க அதில் ஒரு மடித்த வாழை இலையில் கரும்பாணியாய் ஒரு வஸ்து இருக்கு. அதைக் கண்டதும் வையாபுரியின் முகம் பிரகாசமாகின்றது.சாமியை நன்றியுடன் பார்த்துவிட்டு அந்தப் பாணியில் சிறிதை கிள்ளி எடுத்து எச்சிலை இடது உள்ளங்கையில் போட்டு அதில் பாணியை உருட்டி, அந்தச் சிறு உருண்டையை  ஆவென்று அண்ணாந்து  வாய்திறந்து நாக்கை மேலே தூக்கி பல்லில் படாமல் அடிநாக்கின்கீழ் பாலன்ஸ் பண்ணி சரியான இடத்தில் வைக்கின்றான். இது நாசா சாட்டிலைட்டை சரியான பாதையில் செலுத்துவதை விட கடினமான விடயம். ஆனாலும் அவர்களின் அடிப்பல்லு அடிப்பிடித்த ஆம்லட் போல் கருத்து இருக்கும். சற்று நேரத்தில் வாயில் உமிழ்நீர் சுரந்து கடைவாய் நிறைந்து உள்ளிறங்க ...ங்...ங்கி ....யும் தும்மலும் நின்று போகுது.

 வையாபுரியின் கண்முன்னே ஒரு புதிய உலகம் விரிகின்றது. வானில் வெண்ணிலா, அதன் முன்னால்  வானவில் போன்ற மேடையில் அழகிய துருக்கிப் பெண்கள் பெல்லி டான்ஸ் ஆடுகின்றார்கள். பின்னணியில் "சமரிக்" இசை மிதமாக ஒலிக்கிறது. பாடலுக்கிடையில் ஒவ்வொரு அழகியும் முன்னே குனிந்து உதடு குவித்து இச்...இச் ...சென்று முத்தம் தர வர, வையாபுரியும் தனது வாயைக் கோணலாக்கி உதட்டைக் குவித்து எம்பி ...எம்பி... அவர்களை முத்தமிட முயற்சிக்குது.சிறிது எட்டி எழும்பினால் அந்த அழகியின் வாயிலும் அபின் ஒழுகியிருக்கும். ஆனாலும் உள்ளுற வையாபுரிக்கு ஒரு பயம் , பையாவை சுன்னத் பண்ணிவிடுவார்கள் என்று. பயபுள்ள இவ்வளவு நாளும் சிவனே என்று தன் பாட்டிலை இருந்தவன். முன்பு இந்தமாதிரி நேரங்களில், இந்தமாதிரி மேடையில இதுவரை திரிஷாதான் வந்து "அப்படிப் போடு போடு , இப்படிப் போடு போடு" என்று போட்டுட்டுப் போறவ. திரிஷா இல்லைன்னா நயன்தாரா வந்து "கோடம்பாக்கம் ஏரியா கூட்டிப் போறேன் வாரியா, குத்தாட்டம் என்னோடு போட ரெடியா" என்று கூட்டிப் போவா. முந்தாநாள் எந்தக் கொட்டிலில யாரோடு குடித்தானோ தெரியாது, அவர்கள் ஆப்பிள் போனில் பெல்லி டான்ஸ் அழகிகளைக் காட்டினார்கள் என்று அதை இப்ப ஆகாசத்துல பார்த்து அலையுறான்.

ஆட்டம் தொடரும்....!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி......எனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும்....தவிடு பொடியாக்கிய படியே....தன் பாட்டில் போய்க்கொண்டிருக்கிறார்!

அவரது விழுப்புண்கள், ஏற்பட்ட விதங்களை வாசித்த பிரமிப்பு இன்னும் அடங்கவேயில்லை!

ஆனால் ஒரே ஒரு குறை.....!

நம்ம சிலுக்கைப் பற்றி...துருச்சாமி ..ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி....பாகம்... 2 ... தொடர்கிறது....! 

இப்ப சின்னப்புவுக்கு நன்றாக போதை ஏறிவிட்டது. காத்தாலை நினைவில் எட்டப் போய் புங்க மரத்துக்கு கிட்டவா நின்று நடிக்கத் தொடங்கி விட்டார். " உவன் சின்ராசிட்ட ஒண்டரைப் போத்தல் கசிப்பு வாங்கி அரைப் போத்தல் அங்க குடிச்சிட்டன், பிறகு ஒரு போத்தலை பைக்குள்ள வைத்துக் கொண்டு மேற்கால இஞ்ச வந்தன், வயித்தைக் கலக்கிச்சுது. அன்னமுன்னாவில பையைக் கொழுவிவிட்டு அங்கால வெளிக்குப் போனன், அப்படியே துரவில  அடிக்கழுவி விட்டு வந்து பார்த்தால் கசிப்போடு பையைக் காணேல்ல. (கடைசியில் ஒரு வரி சேர்க்குது) உவன் ராசப்பு எடுத்துப் போட்டான். என்றபடியே நின்றாடுது. சோமுவும் எழுந்து பின்னால் போகிறான். ராசப்புவும் கஞ்சா போதையில் கோமளத்தை மடியில் இருத்தி முதுகால் பின்னை கழட்ட  முயற்சிக்கிறான். முன்ன பின்ன பழக்கமில்லாததால் பின்னும் கழருதில்லை. புறாக்களும் கொழுத்துக் கிடக்கு.

சலப்பை நிறைந்திட்டுது. சாமி எழுந்து சற்று தள்ளி இருந்த பத்தைக்குள் சிறுநீர் கழிக்க ஒதுங்குது. அங்கே  அடுத்த பக்கத்தில் ஒரு ஆணும் பெண்ணும் குசு குசு வென்று கதைக்கினம்.சாமி சத்தமில்லாமல் குந்தி இருக்கு.

பெண்: இஞ்ச பாருங்கோ என்னால அந்தச் சுடலைப் பக்கமெல்லாம் வரமுடியாது.நீங்கள் என்ர புருசன், நான் உங்கட பெண்டில். சும்மா கதைக்கக் கூட கள்ளப் புருசன் பெண்டாட்டி போல வரவேண்டிக் கிடக்கு. 

ஆண் : என்னடி மோகனா இப்படிச் சொல்லுறாய். என்ர அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியும்தானே. அதுக்கு வயதும் போட்டுது.என்னை யாரும் ஏமாத்தக் கூடாது என்று பாக்குது.

மோகனா: நாங்கள் உன்னை எங்க ஏமாத்தினனாங்கள் மாறன். நீயும் விசர்க்கதை கதைக்காத.

மாறன் : நீங்கள் சொன்னதுபோல அந்த சங்கிலியும் காசு ஆயிரமும் தரவில்லைத்தானே. அதுதான் அம்மாவுக்கு கோவம்.

மோகனா: நாங்கள் ஒன்றும் ஏமாத்த நினைக்கேல்ல. எதிர்பாராமல் ஐயா செத்துப்போக இருந்த காசெல்லாம் செலவாயிட்டுது.கொம்மாவுக்கும் தெரியும்தானே.

மாறன்: அந்தக் கோதாரி கிடக்கட்டும், நீ இரவைக்கு கருப்புசாமி கோயில் துரவடிக்கு  வாரியோ இல்லையோ சொல்லு. நீ வாறதெண்டால் நானும் தோட்டத்தால நேராய் அங்கு வாறன்.

மோகனா யோசித்து விட்டு (அவளுக்கும் ஆசையாய் இருக்கு. அவனின் வேர்வை வாசம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்)சரி வாறன் இண்டைக்குத்தான் கடைசியும் முதலும் சொல்லிப்போட்டன் கண்டியோ....!

பின் சிறிது நேரம் அங்கு பேச்சில்லை அவளை இழுத்தணைத்து முத்தமிடும் சத்தம். அவள் வாயிலிருந்து ஊறித் தெறித்து அவன் முகத்தில் சிந்தும் நீர்... ம்மா ...ம்ம் மா....பாலோடு தேன் கலந்ததுபோல் பிசு பிசுவென்று உருசையாய் இருக்கு அவனுக்கு.

பின் விடு என்னை என்று அவள் எழுந்து சீலையால் வாயைத் துடைத்துக் கொண்டு போகிறாள். அவனும் சயிக்கிளை எடுத்துக் கொண்டு உதட்டை நாக்கால் நக்கிக் கொண்டு எதிர் திசையில் போகிறான்.

 சாமியும் எழுந்து மரத்தடிக்கு வர பியர் டின்னால் அடிவாங்கிய பூனையொன்று வந்து காலடியில் நிக்குது. தலையால பியர் ஒழுகுது. சாமி அதை எடுத்துக்கொண்டு தனது துண்டால் அதைத் துடைத்துக் கொண்டு மரத்தடிக்கு வந்து ரெண்டு கறித்துண்டு அதுக்கு போட்டுவிட்டு பூனையிடம், மேனகா காந்தியோ,திரிஷாவோ யாழ்ப்பாணம் வந்தால் மறக்காமல் போய் சொல்லு என்ன என்று சொல்லுது.

ராசப்புவும் எழுந்து சிதறிக் கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தி சுருட்டுகளை சாமியிடம் நீட்ட சாமியும் ரெண்டை எடுத்துக் கொண்டு மிச்சத்தை அவனிடமே குடுக்குது. அவனும் தனது பையில் இருந்து ஒரு அரைப் போத்தல் சாராயம் எடுத்து சாமியின் பையில் வைக்கிறான்.சாமிக்கு வச்ச மிச்ச சாராயத்தை சின்னப்புவும் சோமுவும் குடித்து விட்டார்கள்.அதுதான் நன்றியோடு அவன் அதை பையில் வைக்கிறான்.சாமியும் ஒன்றும் சொல்ல வில்லை. பிறகு ராசப்பு சாமியிடம் இவன் வையாபுரியைப் பார் சாமி எலும்பிறானில்லை.நல்ல ஏத்தத்தில இருக்கிறார். இங்க தனியாய் விட்டுட்டு போகவும் பயமாய்க் கிடக்குஇரவு பூச்சி  கீச்சி கடித்துப் போடும் என்கிறான். 

 சாமியும் அங்க கிடந்த அபின் சாரையை எடுத்து அவன் பொக்கட்டில் வைத்து விட்டு அவனைப் பார்க்குது. அவனோ ஆகாயத்தைப் பார்த்து எம்பி எம்பிக் கொண்டிருக்கிறான்.சாமி அவனைப் பாக்குது, ஆகாசத்தைப் பாக்குது,  பெரிய வட்டமாய் நிலா அமுதைப் பொழியுது. ஆகாசத்தைப் பாக்குது அவனைப் பாக்குது. அங்கு இன்னும் பெல்லி டான்ஸ் நடக்குது உடனே அவன் முகத்தின் முன்னே ஒரு சொடக்கு போடுது. அடுத்தநொடி அங்கே காட்சி மாறுது. அந்த மேடை ஐ.நா மேடையாய் மாறுது. ஐஸ்வர்யா துர்காவாய் காலைத் தூக்கி தாண்டவம் ஆடுகின்றா. சூலத்தால் எட்டி எட்டி அவனைக் குத்துகின்றா, கன்னத்தில் இரு கையாளும் மாறி மாறி அடிக்கின்றா, பின் அப்படியே அகலக் கால் பரப்பி நின்று குனிந்து இரு கைகளாலும் அலேக்காய் அவனைத் தூக்க, வையாபுரிக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு போதையும் கெட்டு எழுந்து பாதையில் நடந்து போகிறான். பக்கத்தில் ராசப்புவும் தள்ளாடித் தள்ளாடி சயிக்கிளை எடுத்துக் கொண்டு போக சாமி கேட்குது, ராசப்பு கருப்பு சாமி கோயில் எங்கிருக்கெண்டு. ராசப்புவும் அதை எஞ்சாமி கேட்கிறே, இந்த நேரத்தில அங்க போகாத.பகலிலேயே அங்கு போகப் பயப்பிடுவினம். அதோ அந்த மணல் மேட்டைத்  தாண்டினால் கோயிலும் மடமும் துரவும் கிணறும் இருக்கு. இரவு சங்கிலிக் கருப்பு வேற காவலுக்கு கிளம்பிடும். அது பொல்லாதது.என்று சொல்லிப் போட்டு போறான்.

சாமி நடந்து வர புங்கை மரத்தடியில் சின்னப்பு நடித்துக் கொண்டிருக்கு, சோமு அவனோடு போராடிக் கொண்டிருக்கு. இவனைப் பார் சாமி வாறானில்லை. சாமியும் பையில் இருந்து ஒரு தேசிக்காய் எடுத்து சோமுவிடம் குடுக்குது. சோமுவும் அதைப் பிய்த்து சின்னப்புவின் உச்சியில் வைத்து தேய்க்கிறான். சாமி நிலவைப் பார்த்த படி நடக்குது. மோகனா எப்படி இருப்பாள். "நிலா அது வானத்து மேலே" குயிலி போல் இருப்பாளோ, சி ச் சி ... செண்பகம்தான் அந்தமாதிரி இருக்கிறாள். இவள் எப்படி இருப்பாள். என்ன அது... ம் மா.....ம்...மா என்றாளே, அப்ப அவள் போலத்தான் இருப்பாள். "நேத்து ராத்திரி ம்மா" சிலுக்கு போல்தான் இருப்பாள். அடுத்த நொடி மோகனா அவர் மனதில் சிட்டுக் குருவிபோல் சிறகடித்து வர, சிலுக்கு இடுப்பில் சம்மனமிட்டுக் கொண்டு வருகிறாள்....!

மோகனம் பாடும்.....!

 

 

Link to comment
Share on other sites

On 26.3.2017 at 4:48 PM, suvy said:

குருவிடம் பாடம் கேட்கும் சீடன் போல் அந்தக் காட்சி இருக்கு. இப்ப சாமியும் அந்தச்சுருட்டை இடது கையில் நடுவிரலுக்கும்  மோதிரவிரலுக்கும் நடுவில் வைத்து வலது கையால் பொத்தி ஆள்காட்டிவிரலும் பெருவிரலும் குழாய் போல் இருக்க அதில் இதழ் பதித்து மூக்கால் முழுக்காற்றையும் வெளியேற்றி வாயால் உள்ளிழுக்குது. இப்படியாக முதல் இழுவையில் நுரையீரல் நிரம்ப ரெண்டாவதில் முகம் உப்ப மூன்றாவதில் காரம் உச்சியில் அடிக்குது

சொந்த அனுபவம் போலவே இருக்குதே சுவியர் ... :grin:

On 26.3.2017 at 5:09 PM, நவீனன் said:

உண்மையை சொன்னால் இந்த  துருச்சாமி  சுவிசாமி  கதையை  வாசிக்க தொடங்கவே இல்லை. 

அடபாவி, வாசிக்காமலா இத்தனை பச்சையும் போட்டீங்கள் / இனி வாசித்தப்புறம் என்ன பண்ணுவீங்கள்  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

மோகனா யோசித்து விட்டு (அவளுக்கும் ஆசையாய் இருக்கு. அவனின் வேர்வை வாசம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்)சரி வாறன் இண்டைக்குத்தான் கடைசியும் முதலும் சொல்லிப்போட்டன் கண்டியோ....!

பின் சிறிது நேரம் அங்கு பேச்சில்லை அவளை இழுத்தணைத்து முத்தமிடும் சத்தம். அவள் வாயிலிருந்து ஊறித் தெறித்து அவன் முகத்தில் சிந்தும் நீர்... ம்மா ...ம்ம் மா....பாலோடு தேன் கலந்ததுபோல் பிசு பிசுவென்று உருசையாய் இருக்கு அவனுக்கு.

பின் விடு என்னை என்று அவள் எழுந்து சீலையால் வாயைத் துடைத்துக் கொண்டு போகிறாள். அவனும் சயிக்கிளை எடுத்துக் கொண்டு உதட்டை நாக்கால் நக்கிக் கொண்டு எதிர் திசையில் போகிறான்.

பொதுவாக பெண்களில் குற்றச் சாட்டு என்னவென்றால்

கட்டிப் பிடித்தால் விடுங்கோ விடுங்கோ என்று முணு முணுப்பார்களே தவிர பிடியில் இருந்து தப்ப முயற்சிக்கவே மாட்டார்கள் என்று.

3 hours ago, ஜீவன் சிவா said:

 

அடபாவி, வாசிக்காமலா இத்தனை பச்சையும் போட்டீங்கள் / இனி வாசித்தப்புறம் என்ன பண்ணுவீங்கள்  :grin:

யாழிலே ரொம்பவும் பிசியான ஆள். அதால தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் துருச்சாமியால யாழில உள்ள ஆண் உறுப்பினர்கள் எல்லோரும் ஏகாந்த உலகத்திற்குப் போய் இருக்கிறார்களாம். ஐயா சுவியரே நகைச்சுவை பதிவென்றாலும் அதற்கும் அப்பால் போதை... பேதை என்று சமூகவெளியில் கடாசிக் கிடக்கும் பலதையும் எழுத்தில் குவிக்கிறீர்கள். வாசிக்கும்போது குபீர் என்று சிரிக்கவைக்கும் கதையோட்டத்தின் பின்னால் ஆற அமர சிந்திக்கும்போது சந்தர்ப்பங்களும், சபலங்களும், நிலையற்ற தன்மையும் கொண்ட ஸ்திரமற்ற வாழ்வின் ஓட்டத்தையும் பார்க்கமுடிகிறது. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும். வெகுளித்தனத்தில் உறவின் தன்மைகள் விரிசல்படுவதும், கள்ளத்தனங்கள் குடிகொள்வதும் என்று இந்தத் துருச்சாமியுடன் பயணிக்கும்போது அறியக்கூடியதாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் ஏமாற்றும்  உலகின் நியங்களின் தரிசனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவர சுவி அண்ணாவின் பதிவை எட்டிப் பாக்கவே பயமாய் இருக்கு. குமர்ப் பிள்ளையளும் நடமாடிற இடம் அண்ணா. பாத்து எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரவர சுவி அண்ணாவின் பதிவை எட்டிப் பாக்கவே பயமாய் இருக்கு. குமர்ப் பிள்ளையளும் நடமாடிற இடம் அண்ணா. பாத்து எழுதுங்கோ.

அந்தக் குமர்ப்பிள்ளையளுக்காகத்தானே சுவியர் disclaimer போட்டிருக்கின்றார். கவனிக்கவில்லையா.

 

அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ,,,ஐயோ.....ஐயோ..!

கடைசி வரியை வாசிக்கிற போதே....வயித்துக்குள்ளை வண்ணாத்திப் பூச்சி பறக்கிற மாதிரிக் கிடக்குது!

உடம்பெல்லாம் புல்லரிச்சு....ஓய்ஞ்சு போற மாதிரி...ஒரு பீலிங்!

சிலுக்கு பெயரை...எங்கையாவது பாத்தால்...எப்பவுமே...இப்படித்தான்!

நன்றி.....சுவியர்!

46788-647x450.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியின்ர படத்தில சிலுக்கும் பிரசன்னமாகிற்றா  இனி  துருச்சாமி  வெற்றிப்படம்தான். கதை நகைச்சுவையுடன் நன்றாக நகர்கிறது. தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

அந்தக் குமர்ப்பிள்ளையளுக்காகத்தானே சுவியர் disclaimer போட்டிருக்கின்றார். கவனிக்கவில்லையா.

 

அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது

அட இப்பிடி ஒண்டு போட்டிருக்கா என்ன. பாக்கவே இல்லையே.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி ....பாகம்...2....தொடர்கின்றது.....!

நேரம் இரவு 08 : 00 மணி....!

2)  அந்தர வெளியில் ஆலிங்கணப் படலம்....! 

வாலிபர், வயோதிபர், ஒருதாரம், இருதாரம்,பலதாரம், வைப்பு, சொப்பு,கீப்பு, எல்லோரும் அமைதியாய் வரவும்.(வயோதிபர்களுக்கு வயாகரா இலவசம்).

பால்போல் நிலவு, அமுதை பொழிகிறது. மனங்களில் மனோரஞ்சித அலை வீசுகிறது.சாமியும் அங்கு ஓடிய வாய்க்காலில் கால் கை கழுவிவிட்டு விபூதி அணிந்து, மேலெங்கும் பூசி சங்கிலிக் கருப்பன் சாமி கோவில் சந்திக்கு வந்திட்டுது.கோயில் சிறிது தூரம் உள்ளே இருக்குது. கோயிலில் மொட்டைக் கோபுரமும் நிலவொளியில் பிரகாசமாய் தெரியுது. அங்கிருந்த கல்லில் சூடம் ஏற்றி, ஒரு தேங்காய் அடித்து, விட்டு ஒரு சுருட்டையும், ராசப்பு கொடுத்த சாராய போத்தலையும் அருகே வைத்து வணங்கி விட்டு சாமி கோயில் வாசலுக்கு போய் பார்க்குது. அங்கு பல சிற்பங்கள் தத்ரூபமான வேளை பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. பாசி பிடித்திருக்கின்றன. நடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம், திருமால் தங்கையின் கை பிடித்துக் கொடுக்க  பெருமான் கைத்தலம் பற்றும் காட்சி. வலது பக்கம் முருகப் பெருமான் கோவணத்துடன் தண்டு கொண்டு நிக்க பாட்டி பக்கத்தில், அடுத்து தெய்வேந்திரன் இரு தேவமகளிரை இரு தொடைகளிலும் இருத்தி இடையை வளைத்து அணைத்துக் கொண்டு. இடது பக்கம் குறுமுனியும் கமண்டலத்தை கவிழ்க்கும் காகமாய் கணபதியும்.அடுத்து நரசிங்கமூர்த்தி மடியில்  ஸ்ரீ தேவி இருக்க கீழே கும்பிட்ட நிலையில் பிரகலாதன். அடுத்து குருந்த நிழலில் தட்ஷணா மூர்த்தியும் சீடர்களாக சனகாதி முனிவர்கள். அடுத்து  சந்திரனும் ரோகிணியும் சல்லாபித்த நிலையில். எல்லாம் கதை சொல்லும் சிற்பங்கள். அவற்றை வடித்த சிற்பிகளை வியந்து போற்றியபடி சாமி துரவுக்கு நடந்து போகின்றது.

இதே நேரம் ஊருக்குள் மோகனா தனியாக வந்து கொண்டிருக்கிறாள். தன் விட்டு வாசலில் நின்று மல்லிகை மொட்டுக்களில் மாலை கட்டிக் கொண்டிருந்த செண்பகம் மோகனாவைக் கண்டு எதிரே வருகிறாள். 

செண்பகம்: ஏண்டி மோகனா இந்நேரம் எங்கேடி போகிறாய்.

மோகனா: இல்லை அக்கா அது (மாறன்) மடத்தடிக்கு வரச்சொல்லி அடம்பிடிக்குது, வீட்டில கிழவியும் நாங்கள் எங்கு போனாலும் கண் கொத்திப் பாம்பாய் பின்னாலேயே வருகுது.அதுதான் அம்மாவீட்ட போட்டு வாறன் எண்டு மாமிட்ட சொல்லிப் போட்டு கோயிலடிக்கு போறன். 

செண்பகம்: எடியே உனக்கென்ன விசரே இந்த நேரத்தில அங்கெல்லாம் போகாத.

மோகனா: நான் இப்ப என்னக்கா செய்யிறது. அது அங்க நம்பி வருமே. பிறகு என்னோட கதைக்காது.

செண்பகம்: வேணுமெண்டால் நானும் வாறன். அந்த மடையனிட்ட சொல்லி கூட்டி வருவம். நீங்கள் என்ர வீட்டில இருந்து கதைச்சுட்டுப் போங்கோ.

மோகனா: பழனி அத்தான் உங்க இல்லையே.

செண்பகம்: இல்லை, மதியம் போட்ட போடில  நல்லா ஏத்திட்டு தோட்டத்து காவல் கொட்டிலுக்கு போட்டார்.

மோகனா : அப்பா கொஞ்சம் பொறக்கா, நான் அம்மா வீட்டுக்கு போய் கருப்புக்கு கற்பூரமும் நெருப்புப் பேட்டியும் எடுத்து வாறன்.

செண்பகம்: இந்தா, கிட்ட வாடி என்று தன் கையில் இருந்த மல்லிகைச் சரத்தில் பாதியை நகத்தால் கிள்ளி அவள் பின்னலில் செருகி விட்டு மீதியை தன் தலையிலும் சூடிவிட்டு நான் மெதுவாய் போகிறன், நீ கெதியாய் வா என்று சொல்லிக் கொண்டு மடத்துப் பக்கம் போகிறாள்.

அங்கு வந்த செண்பகம் துரவின் சரிவில் கையூன்றி தேவதை போல் அமர்ந்திருக்கின்றாள். துரவின் சலனமற்ற பளிங்கு நீரில் மேலே வெண்ணிலாவும் கீழே மல்லிகை பூச்சூடிய கூந்தலுடன் செண்பகமும் பிரதிபலிக்கின்றன. அதில் தெரிந்த தன் பிம்பத்தில் லயித்திருக்கின்றாள். ஆளரவம் கேட்டு பற்றைக்குள் இருந்த முயல்கள் பாய்ந்தோடுகின்றன. சில சிக்குப் பட்டு நிக்கின்றன. அருகிலே பெரிய பெரிய புளி,இலுப்பை,ஓரிரு வாழைகள் என்று மரங்கள் இருக்கின்றன. மரத்தில் இருந்த சில குரங்குகள் கிளை விட்டு கிளைதாவி கீரீச்சிட்டு பின் அமைதியாகின்றன. சற்று தள்ளி கோயில் காளையுடன் சில பசுக்கள் படுத்துக் கிடந்து இரை மீட்டுக் கொண்டிருக்கின்றன.ஆங்காங்கே சிறு சிறு ஆமணக்கு, ஈச்சை போன்ற பத்தைகள், கடாத்திய முட்டிகள். மரங்களின் அடர்த்தியால் முகங்கள் தெரியாத இருட்டு அந்தத் துரவடியில் அப்பிக் கிடக்கு.

கோவிலடியால் வந்த சாமியும் துரவின் சரிவில் ஒரு பெண்ணுருவம் இருக்கக் கண்டு தூளிப்பையையும், தண்டத்தையும்,கமண்டலத்தையும் அருகே சத்தமில்லாமல் வைத்து விட்டு மெதுவாய்  அவள் தோளை பிடித்து அணைத்துத் தன்பக்கம் திருப்ப அவளும் நிலமையுணர்ந்து மாறன் நான் செண்ப....என்று சொல்லும் முன் அவள் செவ்விதழ்களை அந்த முரட்டிதழ் முடி விடுகின்றது.நறுமணமான விபூதியின் வாசம் அவள் மேனியை மேகமாய் மூட அவன் கைகளில் கசங்கும் மல்லிகை வாசம் காமத்தை தூண்டி விடுகின்றது. 

செண்பகத்தின் நினைவுகள் சுழல்கின்றன... பகலில் பஞ்சாயத்தில் முகத்தில் அடித்த விபூதி மணமாய்க்  கிடக்கு. அப்படியெனில் அவரா இவர்.... ம்... அவன்தான் இவன். அட துர்ச்சாமியே, பொறு உன்னை என்ன செய்கிறேன் பார் என்று நினைக்க உடல் அவன் கையில் துவளுது. முயல்மீது பாயும் புலி போல் அவன் பற்றிக் கொள்கிறான். பெண்மை விழித்துக் கொள்கிறது.அந்தர வெளித்திரையில் நீயா நானா ஆரம்பமாகுது.துகில் விலகிய நகில்கள் மீது நகங்கள் கோலமிட வான்முகிலில் நிலவு ஒளியுது. பற்றைக்குள் சிக்கியிருந்த முயல்களும் விடுபட்டு தெறித்தோடுகின்றன. மந்திகள் கிரீச்சிட்டு  கிளைதாவ மாடுகள் தலையசைக்கின்றன. " கருவண்டு காலமறியாது மலர்மொட்டைக் கடித்து கால்களால் இதழ் பிரித்து மகரந்தம் சிதைத்து மது குடித்துப் பறக்கும். தேன்வண்டு உரிய காலத்தில் இதழ் நீக்கி மகரந்தத்தில் நடந்து மலருக்கு வலிக்காமல் தேன் உறிஞ்சிச் செல்லும்" 

இது கருவண்டு. அவள் தனது முழுப்பலத்தையும் முழங்காலில் சற்று சரிந்து அவன் விலாவில் இடிக்க சாமி நிலைகுலைந்து பிடி தளர்ந்து சரிகின்றது. சந்தற்பத்தைப் பயன்படுத்தி அவள் எழுந்து ஓட, அவனும் ஓடிப்போய் ஆடையைப் பிடித்திழுக்க, அவள் நிராயுதபாணியாய் நிலவாடை உடுத்தி கிணத்துத் தொட்டிக்குள் இறங்கி விடுகிறாள். அவளை அலேக்காய் தூக்கி சலவைக் கல்லில் விடுகிறான். அதுவே அரியாசனமாக அவள் மரகத வீணையாய் கொலுவிருக்கிறாள். எங்கிருந்தோ வந்த கூகை  வாழைமரப் பொந்தில் இருக்கும் கிளியைப் பிடித்து கூறிய நகங்களால் கிழிக்க கிளி கத்துகிறது. அப்படியே அவன் முகத்தை இழுத்து முழு நிலவுக்குள் புதைக்கிறது. முத்து முத்தாய் வியர்வை.மூச்சு முட்டுகின்றது. காற்றுக்கு இதயம் ஏங்குகிறது. ஒரு துளி காற்று தா உனக்கு உயிர் தருகின்றேன்  என்று எச்சரிக்கின்றது. பல்தடம் பதித்து துள்ளி எழுகின்றான். நரம்பறுந்த  வீணை ஆரோகணத்தில் "ம்மா" என்று அபஸ்சுரம் எழுப்ப நாண் அறுந்த வில்லாய் வீணை நிமிர தேர்ந்த மியூசியன் கையில் மோர்சங்கில் மோகனம் தவளுது. பெரிய மரங்கள் புயலில் முறிந்து விழும், ஆற்றோர நாணல் புயலோ,மழையோ, காட்டாறோ எல்லாத்துக்கும் ஈடு குடுத்து வளைந்து குனிந்து மீன்டும் நிமிர்ந்து நிக்கும்.  நழுவிய மேனி மேகலையாக  அரியாசனம் அதிருகின்றது.

ஆட்டுக்குட்டி போல் அவளை அள்ளி எடுத்து மார்போடணைத்து துரவுக்கு நடக்கின்றான். அவள் திமிரவில்லை நெஞ்சுடன் ஒட்டிக் கொள்கிறாள். பாதிக் கூந்தல் அவன் தோளில் சரிய மீதிக் கூந்தல் அவள் முதுகில் வழிகிறது. கன்னத்துடன் கன்னம் இழைத்து காதோரம் மென்கடி கடித்து கேட்கிறாள். இன்னுமா...!  ம்...., தொண்டை காய்ந்து குரல் கமறிக் கிடக்கு. இதுவரை நடந்தது...! அது அறிமுகம்....!  இனி....!  அரங்கேற்றம். அங்கே அவளது ஆடையில் அப்படியே சரிகிறான். விரலால் மார்பில் கோலமிட்டபடி நழுவுகிறாள். 

வேய்ங்குழல் ஓசை அந்தக் கானகமெங்கும் தவழ்ந்து ஆச்சியர் குடிலை நிறைக்கின்றது. அத்தனை கோபியரும் செய்த வேலைகளை அப்படியே விட்டு விட்டு யமுனைத் துறைக்கு ஓடி வருகிறார்கள். தயிர் கடைந்தவர்கள் முகங்களில் தயிர் அப்பிக் கிடக்கிறது. பாதி ரவிக்கை போட்டவள் பாதி மார்பு குலுங்க வருகிறாள். ஒருத்தி ஒட்டியாணத்தை கழுத்திலும் ஆரத்தை இடையிலும் அணிந்திருக்கிறாள். யாரும் யாரையும் பார்க்கவில்லை. அலங்கோலமாய் ஓடி வருகிறார்கள்.அதுவே அலங்காரமாய்...!  பாகவதத்தின் பத்தாம் காண்டம் யுகம் கடந்து விரிகின்றது. மாயக்கண்ணன் கோபியர் ஆடைகள் மீது நின்று குழலூதுகின்றான். யமுனை நதிக்குள் நின்று கண்ணா! எங்கள் ஆடைகளைத் தா, தா கண்ணா. உங்களுக்கு என்ன வேண்டும்.என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகின்றேன்.கிருஷ்ணன் சொல்லுகின்றான்.  அனுச்சனமும் உன்னோடு பிரியாத தேக சுகம் வேண்டும். காமசுகம் வேண்டும் என்ற ஒன்றையே வேண்டுகின்றார்கள். நிர்வாணமாய் நின்றவர்கள் பரிநிர்வாணத்தை  யாசிக்கின்றார்கள். அங்கனமே ஆகட்டும். அத்தனை கோபியருக்கும் அத்தனை கண்ணகளாய்  நின்று ஆலிங்கணம் புரிகின்றான். வானில் பவுர்ணமி நிலவு. ஆகாயத்தில் தேவர்கள், அருகே பசுக் கூட்டம், தருக்களில் மந்திகள். எல்லோரும் கண்டு களிக்க, ஜீவாத்மாக்கள் பரமாத்மாவிடம் ஐக்கியமாகி யமுனைத் துறையில் ரஸக்கிரீடை நடக்கின்றது. ராஸலீலை தொடர்கின்றது....!

இங்கும் அதே நிலவு, ஆகாயத்தில் விண்மீன்கள், அதே பூமி, மரங்களில் குரங்குகள், பக்கத்தில் பசுக்கள். காலங்கள்தான் மாறிவிட்டன. காட்சிகள் மாறவில்லை. சகல அங்கங்களும் சதுரங்கம் ஆடுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திலும்  ஜெயம் அவளுக்கே. தாயக்காய்களை  உருட்டுவது அவனாயினும் அவளே சகுனியாகிறாள்.வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கின்றாள். முனிவன் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். இழப்பதற்கு நாடில்லை, வீடில்லை, நால்வகைச்சேனை இல்லை, நான்குசோதரர் இல்லை, நாணமிக்க மனையாளும் இல்லை அதனால் தோல்வி சுகமாகின்றது. மனசு வலிக்கவில்லை மென்மேலும் தோல்வியடைய மனம் ஏங்குகின்றது. விதி மீறல்களே இங்கு விதியாகின்றது.விசில் ஊத நடுவரும் இல்லை. கஜுவேரா சிற்பங்கள் கலவியில் திளைக்கின்றன. காமசூத்திரத்தின் ஏடுகள் பக்கம் பக்கமாய் புரள்கின்றன. "கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி வெறும் கதலித் தண்டைப் பிளந்து தவித்து தடுமாறுகின்றது. பெருந் துன்பம் போன்ற பேரின்பம்.

அவளின் அலைபாய்ந்து கைகளில் பையில் இருந்த தண்டம் கிடைக்க பற்றி இழுக்கிறாள். தண்டத்துடன் கமண்டலமும் கவிழ்ந்து கள்ளு  இருவர் உடலிலும் ஓடி வியர்வையுடன் கலக்கின்றது. கமண்டலம் எகிறி கள்ளை கொட்டிக் கொண்டு நீர்க்கரையில் சேர்கின்றது. ஆலைக்குள் போன கரும்பு சாறு தொலைத்து சக்கையாய் வெளியேறுகின்றது. பெருமூச்செறிய இருவர் உடலும் விலகிக் கிடக்கின்றன. அந்த நிமிஷம் அவளுக்கு ஏதாவது தர வேணும்போல சாமிக்குத் தோணுது. பையைத் துழாவி காப்பை எடுத்து அவள் கைகளில் போட்டு விடுகுது. இது எதுவும் அவள் தேகத்தில் உறைக்கவில்லை.சாமி எழுந்து தனது பொருட்களைச் சேகரித்த படி சொல்லுது, "மோகனா இங்கு நடந்தவைகளை கெட்ட கணவாய் நினைத்து மறந்து விடு. நான் உனக்கு பணமும் நகையும் தாறன் உன்ர மாமியிடம் குடுத்து சந்தோசமாய் வாழ்ந்துகொள். பொறு வாறன் என்று சொல்லிப் போட்டு கமண்டலத்தை எடுக்கவும் கைகால் கழுவவும் துரவுக்குள் இறங்குது.

செண்பகம் எழுந்து வாயில கையை வைத்து "அட  கிராதகா, துஷ்டசாமியே  இவ்வளவு நேரமும் அவளை நினைத்துக் கொண்டா உரலை இடித்தாய்" இரு வாறன் உனக்கு இனித்தான் இருக்குது அபிஷேகம் என்று புறுபுறுத்துக் கொண்டு ஆடைகளை பொறுக்கிக் கொண்டு கிணத்தடிக்குப் போகிறாள். மாறனோ, மோகனாவோ வந்துடப் போகினம் என்ற அவசரம் அவள் செய்கையில் தெரிகிறது.

கை கால் கழுவி வரட்டும். என்ன நடக்குது பார்க்கலாம்....! 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹாஹாஹஹா   சுவி அண்ணை இனி பெடிச்சிகள் யாரும் உந்தப்பக்கம் வரமாடினும் tw_blush:

சிறந்த எழுத்துப்பதிவு  ஒரு மொழி பழகும் போது அதன் கெட்ட வார்த்தைகள்  முதலில் அறிவோம் அது போல்  வார்த்தைகளால் விளையாடியுள்ளீர்கள் மிகுதி மிகுதி :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

துருச்சாமி ....பாகம்...2....தொடர்கின்றது.....!

 

வாலிபர், வயோதிபர், ஒருதாரம், இருதாரம்,பலதாரம், வைப்பு, சொப்பு,கீப்பு, எல்லோரும் அமைதியாய் வரவும்.(வயோதிபர்களுக்கு வயாகரா இலவசம்).

உதெல்லாம்  இப்பத்தைய பயலுகளுக்கு அண்ணா

நீங்க  எழுதும்போதே எமக்கு அது தேவையில்லை என்று  நினைத்திருப்பீர்கள்

தொடருங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் படம் பார்க்கும்போது ஒவ்வொரு ஃபிரேமாகப் நிறுத்தி நிறுத்திப் பார்ப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் இந்த கதை எங்காவது பார்த்து எழுதுகிறீர்களா இல்லை நீங்களாகவே எழுதுகிறீர்களா?
ஒரே தலையைச் சுற்றுது.பசு மாதிரி இருந்த சுவி இப்போ புலியாக பாய்கிறாரே?எங்கேயோ போயிட்டீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சுவியர் இந்த கதை எங்காவது பார்த்து எழுதுகிறீர்களா இல்லை நீங்களாகவே எழுதுகிறீர்களா?
ஒரே தலையைச் சுற்றுது.பசு மாதிரி இருந்த சுவி இப்போ புலியாக பாய்கிறாரே?எங்கேயோ போயிட்டீங்க.

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே சுவியவர்களே!

சிரிசிரிஎன்று சிரித்து வயிற்று நோவந்திட்டுது. தொடருங்கள். உண்மையிலே ஒரு சிறந்த நகைச்சுவையோடு நடைமுறை சார்ந்த ஏமாறும் மக்கள் என்று பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தடவித் தழுவிச்........................... செல்கிறீர்கள். வளர்க!
nTBMGXayc.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

 

ஹாஹாஹாஹஹா   சுவி அண்ணை இனி பெடிச்சிகள் யாரும் உந்தப்பக்கம் வரமாடினும் tw_blush:

 

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

இங்கும் அதே நிலவு, ஆகாயத்தில் விண்மீன்கள், அதே பூமி, மரங்களில் குரங்குகள், பக்கத்தில் பசுக்கள். காலங்கள்தான் மாறிவிட்டன. காட்சிகள் மாறவில்லை. சகல அங்கங்களும் சதுரங்கம் ஆடுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திலும்  ஜெயம் அவளுக்கே. தாயக்காய்களை  உருட்டுவது அவனாயினும் அவளே சகுனியாகிறாள்.வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கின்றாள். முனிவன் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். இழப்பதற்கு நாடில்லை, வீடில்லை, நால்வகைச்சேனை இல்லை, நான்குசோதரர் இல்லை, நாணமிக்க மனையாளும் இல்லை அதனால் தோல்வி சுகமாகின்றது. மனசு வலிக்கவில்லை மென்மேலும் தோல்வியடைய மனம் ஏங்குகின்றது. விதி மீறல்களே இங்கு விதியாகின்றது.விசில் ஊத நடுவரும் இல்லை. கஜுவேரா சிற்பங்கள் கலவியில் திளைக்கின்றன. காமசூத்திரத்தின் ஏடுகள் பக்கம் பக்கமாய் புரள்கின்றன. "கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி வெறும் கதலித் தண்டைப் பிளந்து தவித்து தடுமாறுகின்றது. பெருந் துன்பம் போன்ற பேரின்பம்.

சுவியர்....உவமான, உவமேய விசயங்களில்.....கம்பன் கூட ...உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்!

இப்போது ..கதையை மேலோட்டமாக் மேய்வதில்லை!

ஆற அமர அமர்ந்து ....ஒவ்வொரு வரியையும்..உள்வாங்கிய படியே.....வாசித்து அனுபவிக்கிறேன்!

தொடர்ந்தும்..வீணையை...மீட்டுங்கள்!

கண்களை மூடிய படியே...நாங்களும் அந்த நாதத்தின் சுகத்தில் திளைப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

?

tw_blush:tw_blush:tw_blush:tw_blush:நீங்கள் நம்ம இனம் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருச்சாமி ....பாகம்...2....தொடர்கின்றது.....!

மோகனா வீட்டில் இருந்து கற்பூரமும்,தேங்காயும், தீப்பெட்டியும் எடுத்துக் கொண்டு வேகமாய் நடந்து வருகிறாள். வழியில் கசிப்பு,சாராயம் விக்கும் சின்ராசு தனது ஒற்றைத் திருக்கண் மாட்டு வண்டிலுக்கு அடியில் லாந்தர் விளக்கை ஏற்றி கொழுவி விட்டு மாட்டை  நுகத்தடியில் பூட்டுகின்றான். பழகிய மாடு என்ற படியால் அது நன்றாக ஒத்துழைக்குது. அந்த மாடு கன்றாக புத்தளத்தில்  மரைக்காயரிடம் இருந்தது. அவர் அதற்கு பிறை வடிவில் குறி சுட்டிருந்தார். பின் அந்த மாட்டை வாங்கிய யோசேப்பு  அருகிலே சிலுவை குறியிட்டு  தாது வண்டிலுக்கு பழக்கியிருந்தார். அதன்பின் சின்ராசு அந்த வண்டிலையும் மாட்டையும்  விலைக்கு வாங்கி இருந்தான். அதில் தனது உரிமையை நிலை நாட்ட மாட்டின் மறுபக்க முதுகில் ஒரு சூலத்தை சூடு வைத்து இருக்கின்றான். " அத்தனை மதச்சின்னங்களும் மாட்டின் முதுகில ... ஆனால் மாட்டுக்கு ஏது மதம். மனிதனுக்கு பிடித்திருக்கு". அந்த வண்டில் அவன் தொழிலுக்கு மிகவும் உபயோகமாய் இருக்கு. அவன் வண்டியில் தூங்கினால் கூட அந்த மாடு அந்தந்த நேரத்துக்கு அந்தந்த இடத்துக்கு போய் நிக்கும் சின்ராசு வியாபாரத்தைக் கவனிப்பான். இப்ப மடத்துக்கு போய் மாட்டை அவிட்டுக் கட்டிப் போட்டு படுத்தால் விடிய வியாபாரம் ஜோராய் நடக்கும். மோகனா அவனைக் கடந்து கோயிலுக்கு போகிறாள். 

வேகமாய் வந்த மோகனா கருப்புசாமி கோவில் சந்தியில் இருந்த கல்லில் கற்பூரம் ஏத்தி தேங்காய் உடைத்து விட்டு வேண்டுகிறாள் " கருப்புசாமி  நீதான் எனக்கு ஒரு வழி காட்டனும். அது பாவம் அல்லாடுது, எனக்கும் அதோட சேர்ந்திருக்க ஆசைதான். இந்த மாமியும் விடாமல் குறுக்க நிக்குது.எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டு. நான் உனக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கிறன்" என்று உள்ளமுருக வேண்டிக் கொண்டு செண்பகத்தைப் பார்க்க துரவுக்கு ஓடி வருகிறாள். அப்போது சாமி முகம் கழுவி திருநீறு பூசிக்கொண்டு மேலே ஏறி வருது. அங்கு நின்ற மோகனாவின் உருவத்தைப் பார்த்து அட வலு கெதியாய் வந்திட்டாய், இந்தா இதை வைத்துக் கொன்டு சந்தோசமாய் இரு என்று ஒரு சரையை அவள் கையில் வைக்குது. அதில் பணமும் நகையும் இருக்குது. மோகனாவும் இந்தச் சாமி இஞ்ச எப்படி வந்தது என்று யோசிக்கிறாள். ஆனால் கைகள் தன்னிச்சையாய் சாமியைக் கும்பிடுகின்றன.  கிணத்தடியில் கைகால் கழுவிய செண்பகம் அப்போதுதான் தன் கையில் அந்த வளையளைப் பார்க்கிறாள். முகத்தில் ஒரு புன்சிரிப்பு தோன்றுது. அட துஷ்டா...! இன்னும் தேகத்தில் ஆனந்த அலைகளின் அதிர்வுகள்....! மனமும் உடலும் இணைந்து ஒரு செயலைச் செய்யும்போது அங்கு தப்புகள் தள்ளி நிக்கின்றன. அப்படியே ஒய்யாரமாய் நடந்து வந்தவள். அங்கு சாமியும் மோகனாவும் கதைப்பதை பார்த்து அங்கேயே நிக்கிறாள். சாமியும் ஷேமமாய் இரு என்று ஆசிர்வதித்து விட்டு இருட்டில் நடந்து மறைகின்றது. 

சாமி போனதும் ஓடிவந்த செண்பகம் மோகனாவின் கையைப் பிடித்து வாடி இனி இங்கு நிக்க வேண்டாம். அவன் வார நேரம் வரட்டும் என்று இழுத்துக் கொடு பாதையில் இறங்கி நடக்கிறாள். அப்போது மோகனா அவளிடம் அக்கா இந்த கருப்புசாமி ரொம்ப புதுமையானது. பர்வதம் மாமி வீட்ட காலையில் வந்த சாமி கூட ஒரு சித்தர் அக்கா. என்னெண்டு சொல்லுறாய்.  இப்பதான் நான் கருப்புக்கு கற்பூரம் கொளுத்தி வேண்டுதல் வைத்திட்டு வந்தன். உடனே கருப்பு சொல்லி இருக்கும் போல, அந்தச் சாமி என் முன்னால வந்து பணமும் நகையும் தந்திட்டு உடனே மறைஞ்சிட்டுது. நீ பார்த்தியா எனக் கேட்கிறாள். 

செண்பகம் : பார்க்கிறதெங்க நான் படுத்திட்டன் என்கிறாள்.

மோகனா : தூங்கிட்டாய் போல,  அக்கா அந்தச் சித்தரிடம் எவ்வளவு சக்தி இருக்கு தெரியுமா...!

செண்பகம்: ம்... நான் பாக்காத சக்தியா ! அவன் ஒரு ஏத்தனடி.

மோகனா: அப்படிச் சொல்லாத அக்கா, என் வாழ்வில் விளக்கேற்றிய தெய்வம் அவர்.

செண்பகம்: ஓம்... நீ மட்டும் தனியா வந்திருந்தால் விளக்கென்ன வளைகாப்பே நடந்திருக்கும்.

மோகனா: என்னக்கா சொல்லுறாய்.

செண்பகம் : இல்லை பிள்ளை வாரமும் தந்திருப்பார் என்று சொல்லுறன்.

மோகனா: (அப்பாவியாய்) ஓம் என்ன  நானும் கேட்க மறந்திட்டன். 

செண்பகத்துக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கதைத்தபடியே இருவரும் நடந்து செல்கின்றனர். வெகு தூரத்தில் சின்ராசின்  வண்டில் அசைந்து அசைந்து வந்து கொண்டிருக்கு....!

லாந்தரின் வெளிச்சம் தெரியுது....!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரைட் ரைட் போகலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.