Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது.

முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள்.

ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன்  எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது.

சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான். இதுவரை அவர்கள் எல்லை தாண்டவில்லையே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்தும் கொண்டாள்.

இவள் பத்து ஆண்டுகளாக முகநூலில் இணைந்திருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் அதில் பதிவுகள் போடத் தொடங்கி. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க, எழும்பியதும் உடனே கை நாடுவது செல்போனைத்தான். முகநூல் சென்று வணக்கம் போட்டு, பதிவு ஒன்று போட்டு, மற்றவரின் பதிவுக்கு லைக் செய்து என ஒரு பத்து நிமிடங்கள் செலவுசெய்த பின்னர் தான் பல்தீட்டவே செல்வது. அவள் பல்தீட்டும்போது கூட டிக் என்று சத்தம் கேட்டால் ஓடிப்போய் பார்க்கவேண்டும் போல் எழும் என்னத்தை அடக்கியபடி தன அலுவல்களை முடிப்பாள்.

காலையில் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளுக்கும் வேலைக்குப் போகும் கணவனுக்கும் தேநீர் உணவு எல்லாம் செய்து கொடுத்து அனுப்பிய பின் சோபாவில் வந்து இருந்தால் முகநூலில் லைக் செய்வது, மற்றவர் எழுதும் கொமன்ற்சுக்கு பதில் எழுதுவது, மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக நேரம் போய்விடும். மதியம் சமைத்துச் சாப்பிட்டு வேறு அலுவல்கள் இருந்தால் செய்துவிட்டு மீண்டும் முகநூலை எட்டிப்பார்த்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து ஒரு தேநீர் குடிக்க கடைக்குட்டி பள்ளியிலிருந்து வந்துவிடும். அதன்பின் கணவன் பிள்ளைகள், இரவுச் சமையல், தொலைகாட்சி என்று சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்த வேளையில் தான் அவளுக்கு முடிந்துபோன ஏழரைச் சனி மீண்டும் தொற்றிக்கொண்டது.

கணவனுக்குப் பணிக்குறைப்பு ஏற்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருக்க அவளுக்கு வந்தது ஆப்பு.

கணவனிடம் சிமாட் போன் இருந்தாலும் அந்தாள் தன் அவசர தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவார். அதனால் முகநூல் பக்கம் எட்டிப் பார்த்ததோ முகநூல் கணக்கோ கூட இல்லை. இவளின் போனில் எல்லாம் இருந்து அடிக்கடி டிங் டிங் சத்தம் கேட்க இவள் போனைத் திறப்பதும் பார்ப்பதும், சிலருக்குப் பதில் எழுதுவதும், தனக்குத்தானே சிரிப்பதும் சந்தேகத்தை உண்டாக்கியதை இவள் அறியவில்லை.

ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது, ரொயிலற்றைக் கழுவு, வீட்டை மப்பண்ணு என்று வேலை ஏவியதில் இவளுக்குக் கடுப்பானது. "நான் என்ன வேலைக்காரியே? எதுக்கு என்னை நெடுக ஏவுறியள்? மனிசரை ஒரு நிமிடம் கூட இருக்க விடாமல் ........

சமைச்சு வைக்கிறன், பாத்திரம் கழுவுறன், உடுப்புகள் எல்லாம் தோய்க்கிறதும் நான்தான். வீடுவாசலை எந்த நேரமும் கூட்டு கூட்டு என்றால் .... இது என்ன ஹோட்டலே பளிச் பளிச் என்று இருக்க" என்று இவள் கத்த, "உனக்கு இப்ப என்னை விட உந்த முகநூல் காறங்கள் பெரிசாப் போட்டாங்களோ? எத்தினை பேர் உங்கை வேலைவெட்டி இல்லாமல் நிக்கிறாங்கள். ஒருத்தனும் வேலைக்குப் போகாமல் நிண்டு கடலை போடுறாங்களோ.".......... இப்பிடி ஒவ்வொருநாளும் கைபட்டால் குற்றம். கால்படால் குற்றம் என்பது போல் ஆனது வாழ்வு.

எனக்கு மாமியார் இல்லாத குறையை இந்தாள் தீர்த்துவைக்குது என்று மனதுள் மறுகியவள், இவருக்கு நான் அடிமையே இவர் சொன்ன உடன எல்லாத்தையும் நிப்பாட்ட என்று வீம்பு எழ, "நீங்கள் சொன்ன உடன எல்லாத்தையும் போட்டுட்டு இருக்க நான் சின்னப் பிள்ளை இல்லை. முதல்ல முகநூல் எண்டா என்ன என்று தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதுக்குப் பிறகு கதையுங்கோ" என்றதன் பின்னரும் மனுஷன் மூஞ்சியை நீட்டிக்கொண்டு சாப்பிடாது அடம்பிடிக்க, முதற்தடவையாக என்ன செய்வது என்று தெரியாது கோபம், ஏமாற்றம், பச்சாதாபம் எல்லாம் ஒருங்கே எழ, அடுத்துவந்த நாட்கள் கணவனின் வேலை நாள் ஆதலால் எந்தப் பிரச்சனையும் இன்றி நகர்ந்தாலும் அந்த இடைவெளியில் நாளும் பொழுதும் யோசித்ததில் புதிய வழி ஒன்று அவளுக்குக் கிடைத்தது.

அடுத்தநாள் கணவன் வீடில் நிற்க "வாங்கோ உங்களோடை கதைக்கவேணும்" என்று கூறியபடி கணவன்முன் அமர்ந்தாள்.

இந்தாங்கோ உங்களுக்கு ஒரு முகநூல் கணக்கு திறந்திருக்கிறன். கிட்டத்தட்ட ஒரு இருநூறு பேரையும் அதில இணைச்சிருக்கிறன்.   ஒருமாதம் நான் முகநூல் பக்கமே போகேல்லை. ஐப்பாட்டில என்ர  முகநூல் திறந்தபடியே இருக்கு. என்னட்டை எந்த ஒளிவுமறைவும் இல்லை. எனக்கு என்ர குடுப்பம் முக்கியம். அதேநேரம் என் சுதந்திரமும் எனக்கு முக்கியம்தான். என்னை அடிமை போல் நீங்கள் நடத்த முடியாது. ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது அதுபற்றித் தெரியாமல் கதைக்ககூடாது என்று இவள் முடிக்கும் முன்னரே எனக்கு உது தேவை இல்லை என்றபடி இவள் சொல்வதைக் கேட்காமல் முகத்தைத் திருப்பிய கணவனிடம் "ஒரு மாதம் போகட்டும் அதுக்குப் பிறகு நாங்கள் திரும்பவும் கதைப்பம்" என்று சொல்லிவிட்டுக் குசினிக்குள் செல்ல, அவள் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்து முகநூலைத் திறப்பதை இவள் சிரிப்புடன் பார்த்தாள்.

இப்ப மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு உந்த முகநூலும் கோதாரியும் வேண்டாம் என்று பிறியம்விட்ட மனிசன், காலமை பின்னேரம் என்று அதுக்குள்ளயே கிடப்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக வீட்டில் உள்ளவர்களைக் கணக்கில் எடுக்காமல் இருக்க இன்னும் ஒருவாரம் போகட்டும் என்று இவள் கொடுப்புக்குள் சிரித்தபடி கடந்து செல்கிறாள்.

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமே இன்றைய நாட்களில் பல குடும்பங்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் அங்கலாய்ப்பு இது. சிறு கதையாக வடித்துள்ளீர்கள். பலர் வீட்டில் இதனால் கைத்தொலைபேசிகள் பல உடைவதாகக் கேள்வி... பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள்.

பதிவு நல்லாருக்கு!

இதுக்குத் தான் வடிவான படங்களை...முக நூலில் போடக்கூடாது எண்டு சொல்லுறது!

இது நான் ...யூறோ ரெயினிலை  போகேக்கை எடுத்தது....!

இது நான் பரிசுக்குள்ளை தொலைஞ்சு போன போது எடுத்தது...எண்டால் பாக்கிற சனம் கொஞ்சம் ஆர்வக் கோளாறில ..ஏதும் எழுதும் தானே!

அது சரி...உங்கட ஆள்.....அந்தக்காலத்து மனுஷன் போல கிடக்குது..!

எதுக்கும் மனுசனிலையும் ஒரு கண் வைச்சிருங்கோ!

உலகம் முன்னை மாதிரி இல்லை..!

முகநூலும் அதுவுமா....காலம் கெட்டுப்போய்க் கிடக்கு!:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் பண்டியோடு சேர்ந்து பசுவும் மலம் தின்னுது. 

இப்போ எல்லோர் வீடுகளிலும் எத்தனை பேர் இருந்தாலும் ஆளுக்கொரு மூலையில் கைத்தொலைபேசியுடன் இருப்பதைக் காணலாம்.

பாராட்டுக்கள் சுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கள யதார்த்தத்தை அப்பட்டமாய் போட்டுடைத்துள்ளீர்கள்.... நல்லாய் இருக்கு....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தற்போதைய நடை முறையை கூறிய விதம் நன்று 

Link to comment
Share on other sites

விசுவாமித்திரர் மன்னிப்பாராக.

சில நாட்களின் முன்னர் நம்ம கள உறவுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எந்த நேரமும் தொலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தார். முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழில் பார்த்ததைவிட மொபைலில் பார்த்ததுதான் அதிகம்.

அட பாவி - உதை மூடிற்று வெளியில பாரப்பா என்றேன். 

அடுத்து ஒரு படம் எடுப்பார் + பகிருவார் + கொமெண்ட்ஸை எனக்கு காட்டுவார் + கடுப்பேத்துவார்.

இப்படியே போனபோது என்னிடமும் ஒரு கேள்வி கேட்டார்.
"உங்களுக்கு இப்படி செய்திகள் வருவதில்லையா உங்களின் மொபைலில்?"

இல்லை அப்பன் எனது மொபைலில் மூஞ்சி புத்தகம் + டுவீட்டர் + யாழ் + மெயில் இணைப்பதில்லை. அது வீட்டில் இருக்கும்போது மட்டுமே பார்ப்பன் வெளியே இயற்கையை ரசிப்பேன் என்றேன். என்ன நினைத்தாரோ, என் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு மறுபடியும் மொபைலை நோண்டினார்.

இதற்கு நம்ம தலை மோகனும் விதிவிலக்கில்லை - யாழ் தனிமடலினூடாக ஒரு விடயத்தை சொல்லிவிட்டு பதில் வருமென்று காத்திருந்து...  பின்னர் நேரில் தொலைபேசினார்.:grin:

எதுவும் அளவுடன் இருந்தால் அமிர்தமே!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

இதில தான் கேள் பிரண்டு இல்லையென்று போய் அதில இருக்கும் மொக்கை கவிதைகளூக்கும் கதைகளுகளும் லைக்கையும் கொமண்டையு ம் போட்டு பிகர உசார் பண்ணலாம் என்று பார்த்தால் போட்டுக்கொடுக்குறீர்களே ந்ல்லா வருவியள் 

இதுல எனக்கு வெளி நாடுகளில் இருந்து தமிழில் ரைப்பண்ணிகொடுக்க முடியுமா என்று நல்ல பெண் நண்பிகள் கிடைத்து விட்டார்கள்  பெண்கள் நம் கண்கள் எப்புடி  போற்றுவோம் போற்றுவோம் என்று கலைஞன் பாடுன பாடல் தான் ஞாபகம் வருது ஹாஹாஹாtw_blush:tw_blush:

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன்  எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது.

சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன்

இந்த டீமை எங்கேயோ பார்த்தமா கிடக்கு அக்கா அவன்ங்களா இவங்க‌:rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

3 minutes ago, முனிவர் ஜீ said:

பிகர உசார் பண்ணலாம் என்று பார்த்தால் போட்டுக்கொடுக்குறீர்களே

வேறு ஒரு திரியில் விசுவாமித்திரரும் சிஷ்சைகளும் கடற்கரையில் சல்லாபம் என்றுவேற படம் போட்டு இருக்கிறேனே - பாக்கலியா?:grin:

அனுமதி தந்தது நீங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

யோவ் ஏன்யா ஏன் நல்லா வருவியள் :2_grimacing:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை வழங்கிய உறவுகள் ஆதவன், ஜீவன்சிவா, யாயினி,புங்கை, நேசன், கண்மணியக்கா,நிலாமதி அக்கா,ஈழப்பிரியன், வல்வை சகாரா,முனிவர்,நவீனன்,குமாரசாமி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

22 hours ago, வல்வை சகாறா said:

சுமே இன்றைய நாட்களில் பல குடும்பங்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் அங்கலாய்ப்பு இது. சிறு கதையாக வடித்துள்ளீர்கள். பலர் வீட்டில் இதனால் கைத்தொலைபேசிகள் பல உடைவதாகக் கேள்வி... பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

நன்றி சகாரா. எங்கட வீட்டில இன்னும் உடையேல்லை.

21 hours ago, புங்கையூரன் said:

பதிவு நல்லாருக்கு!

இதுக்குத் தான் வடிவான படங்களை...முக நூலில் போடக்கூடாது எண்டு சொல்லுறது!

இது நான் ...யூறோ ரெயினிலை  போகேக்கை எடுத்தது....!

இது நான் பரிசுக்குள்ளை தொலைஞ்சு போன போது எடுத்தது...எண்டால் பாக்கிற சனம் கொஞ்சம் ஆர்வக் கோளாறில ..ஏதும் எழுதும் தானே!

அது சரி...உங்கட ஆள்.....அந்தக்காலத்து மனுஷன் போல கிடக்குது..!

எதுக்கும் மனுசனிலையும் ஒரு கண் வைச்சிருங்கோ!

உலகம் முன்னை மாதிரி இல்லை..!

முகநூலும் அதுவுமா....காலம் கெட்டுப்போய்க் கிடக்கு!:unsure:

மனிசன் கண்டிப்பாச் சொல்லீற்றார் தனிப்படம் போட்டால் முகநூல் தடை எண்டு.tw_dissapointed_relieved:

21 hours ago, ஈழப்பிரியன் said:

ம் பண்டியோடு சேர்ந்து பசுவும் மலம் தின்னுது. 

இப்போ எல்லோர் வீடுகளிலும் எத்தனை பேர் இருந்தாலும் ஆளுக்கொரு மூலையில் கைத்தொலைபேசியுடன் இருப்பதைக் காணலாம்.

பாராட்டுக்கள் சுமே.

ஏன் பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் tw_blush: நன்றி சுவைப்பிரியன்.

21 hours ago, suvy said:

இன்றைய கள யதார்த்தத்தை அப்பட்டமாய் போட்டுடைத்துள்ளீர்கள்.... நல்லாய் இருக்கு....! tw_blush:

நன்றி சுவி அண்ணா

18 hours ago, நிலாமதி said:

 தற்போதைய நடை முறையை கூறிய விதம் நன்று 

நன்றி அக்கா

11 hours ago, ஜீவன் சிவா said:

விசுவாமித்திரர் மன்னிப்பாராக.

சில நாட்களின் முன்னர் நம்ம கள உறவுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எந்த நேரமும் தொலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தார். முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழில் பார்த்ததைவிட மொபைலில் பார்த்ததுதான் அதிகம்.

அட பாவி - உதை மூடிற்று வெளியில பாரப்பா என்றேன். 

அடுத்து ஒரு படம் எடுப்பார் + பகிருவார் + கொமெண்ட்ஸை எனக்கு காட்டுவார் + கடுப்பேத்துவார்.

இப்படியே போனபோது என்னிடமும் ஒரு கேள்வி கேட்டார்.
"உங்களுக்கு இப்படி செய்திகள் வருவதில்லையா உங்களின் மொபைலில்?"

இல்லை அப்பன் எனது மொபைலில் மூஞ்சி புத்தகம் + டுவீட்டர் + யாழ் + மெயில் இணைப்பதில்லை. அது வீட்டில் இருக்கும்போது மட்டுமே பார்ப்பன் வெளியே இயற்கையை ரசிப்பேன் என்றேன். என்ன நினைத்தாரோ, என் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு மறுபடியும் மொபைலை நோண்டினார்.

இதற்கு நம்ம தலை மோகனும் விதிவிலக்கில்லை - யாழ் தனிமடலினூடாக ஒரு விடயத்தை சொல்லிவிட்டு பதில் வருமென்று காத்திருந்து...  பின்னர் நேரில் தொலைபேசினார்.:grin:

எதுவும் அளவுடன் இருந்தால் அமிர்தமே!
 
உண்மைதான். இப்ப நான் கொஞ்சம் வெளியில வந்திட்டன். முந்தி மாதிரிப் பழிகிடக்கிறேல்லை.

2 hours ago, முனிவர் ஜீ said:

இதில தான் கேள் பிரண்டு இல்லையென்று போய் அதில இருக்கும் மொக்கை கவிதைகளூக்கும் கதைகளுகளும் லைக்கையும் கொமண்டையு ம் போட்டு பிகர உசார் பண்ணலாம் என்று பார்த்தால் போட்டுக்கொடுக்குறீர்களே ந்ல்லா வருவியள் 

இதுல எனக்கு வெளி நாடுகளில் இருந்து தமிழில் ரைப்பண்ணிகொடுக்க முடியுமா என்று நல்ல பெண் நண்பிகள் கிடைத்து விட்டார்கள்  பெண்கள் நம் கண்கள் எப்புடி  போற்றுவோம் போற்றுவோம் என்று கலைஞன் பாடுன பாடல் தான் ஞாபகம் வருது ஹாஹாஹாtw_blush:tw_blush:

இந்த டீமை எங்கேயோ பார்த்தமா கிடக்கு அக்கா அவன்ங்களா இவங்க‌:rolleyes:tw_blush:

இப்பதான் வரிசையா கனபெடிச்சியள் வந்து எழுதினமே உங்கள் பதிவில. இன்னுமா உசார்பண்ணவில்லை. நீங்கள் வேஸ்ட்.

உப்பிடி டீம் எத்தனையோ இருக்கு. ஆராய் எண்டு சொல்ல??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் தெரியாதவர்களை நண்பர்களாகச் சேர்ப்பதில்லை எனும் பொலிஸியுடன் இருப்பதாலும், இலக்கியம் பேசுகின்றோம், அரசியல் பேசுகின்றோம் என்று சொறிந்துகொண்டு இருப்பவர்களின் பக்கமே போகாமல் இருப்பதாலும், பிடிக்காத பதிவுகளைப் போடுபவர்களை உடனடியாகவே unfollow செய்வதாலும், எதற்கும், எவருக்கும் அடிமையாக இல்லாமல் இருப்பதாலும் முகநூலூடாக இன்னமும் ஒரு பிரச்சினையும் வரவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முகநூல் ஆரம்பத்தில் புலம்பெயர் உறவுகளுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தாலும் தற்போது அந்தபக்கம் போவதுக்கே யோசிக்க வேண்டி உள்ளது ஒரு சாமி படத்தை அனுப்பிவிட்டு பார்த்தவுடன் பகிரவும் நல்லசெய்தி வரும் இல்லயென்றால் கஷ்ட்டம் வந்து நூடில்ஸ் ஆவிர்கள் ,வருடக்கனகான முத்தின கான்சருக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு ,எகிப்திய பிரமிட்டை கட்டினவன் தமிழர்களே ஒரு சில குறிபிட்ட செய்திகள் முகநூல் தொடக்க காலத்தில் உலாவியவை இன்றும் திரும்ப திரும்ப வருவது போன்ற முட்டாள்தனமும் ,பாமரத்தனமும் நிறைந்த ஒன்றாய் மாறி உள்ளது இதைவிட நம்ம தமிழ் குடும்பம் ஒன்று  கல்யாணம் காதுகுத்து என்று வெளிக்கிட்டால் முதல் வேலை வீட்டை விட்டு இறங்கும்போது காரில் ஏறியபடி போட்டோ எடுத்து mukanoolil  போட்டுவிட்டு தான் காரில் சாவியை போடும் பாமரகேசுகள் பின்னாலே கள்ளன் போய் வீட்டில் சுவர் மணிக்கூடு வரை ஆறுதலாக இருந்து கழட்டி எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் இப்போது முகநூல் உபத்திரவ பக்கமா மாறி விட்டுது நிறைய சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அடிமைகளாய் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கு மட்டும்தான்.

7 hours ago, பெருமாள் said:

இந்த முகநூல் ஆரம்பத்தில் புலம்பெயர் உறவுகளுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தாலும் தற்போது அந்தபக்கம் போவதுக்கே யோசிக்க வேண்டி உள்ளது ஒரு சாமி படத்தை அனுப்பிவிட்டு பார்த்தவுடன் பகிரவும் நல்லசெய்தி வரும் இல்லயென்றால் கஷ்ட்டம் வந்து நூடில்ஸ் ஆவிர்கள் ,வருடக்கனகான முத்தின கான்சருக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு ,எகிப்திய பிரமிட்டை கட்டினவன் தமிழர்களே ஒரு சில குறிபிட்ட செய்திகள் முகநூல் தொடக்க காலத்தில் உலாவியவை இன்றும் திரும்ப திரும்ப வருவது போன்ற முட்டாள்தனமும் ,பாமரத்தனமும் நிறைந்த ஒன்றாய் மாறி உள்ளது இதைவிட நம்ம தமிழ் குடும்பம் ஒன்று  கல்யாணம் காதுகுத்து என்று வெளிக்கிட்டால் முதல் வேலை வீட்டை விட்டு இறங்கும்போது காரில் ஏறியபடி போட்டோ எடுத்து mukanoolil  போட்டுவிட்டு தான் காரில் சாவியை போடும் பாமரகேசுகள் பின்னாலே கள்ளன் போய் வீட்டில் சுவர் மணிக்கூடு வரை ஆறுதலாக இருந்து கழட்டி எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் இப்போது முகநூல் உபத்திரவ பக்கமா மாறி விட்டுது நிறைய சொல்லலாம்.

நீங்கள் சொல்வது உண்மைதான் பெருமாள். சாமிப் படத்தைப் போடுறவையை நானுமுடன நிப்பாட்டிப் போடுறது. வீட்டில் உள்ளவைஎல்லாரின் பிறந்தநாள் நண்பர்கள் பிறந்தநாள் படிப்பிச்ச வாத்க்குப் பிறந்தநாள் என்று போடதிவுகளிலும் லைக் போடுவதும் இல்லை வாசிப்பதும் இல்லை.

6 hours ago, நந்தன் said:

நல்லா இருந்திச்சு  உங்க பதிவு 

அப்பிடிங்களா ?? காரணமே இல்லாமல் ப்ளாக் செய்யிறவையையும் நாங்கள் கணக்கில் எடுக்கிரேல்லை. tw_blush:

On 19/03/2017 at 9:47 PM, புங்கையூரன் said:

எதுக்கும் மனுசனிலையும் ஒரு கண் வைச்சிருங்கோ!

உலகம் முன்னை மாதிரி இல்லை..!

முகநூலும் அதுவுமா....காலம் கெட்டுப்போய்க் கிடக்கு!:unsure:

நல்ல கதை. அதை நீங்கள் சொல்லவே வேண்டாம். கவனிக்காத மாதிரி எல்லாம் பாத்துக்கொண்டு இருப்பம்.:14_relaxed:

Link to comment
Share on other sites

முகநூல் மற்றும் சோசியல் மீடியாவால் சில கலியாணங்களும் கைகூடி இருக்குது அதே நேரம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும் வந்துகொண்டு இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பதான் வரிசையா கனபெடிச்சியள் வந்து எழுதினமே உங்கள் பதிவில. இன்னுமா உசார்பண்ணவில்லை. நீங்கள் வேஸ்ட்.

உப்பிடி டீம் எத்தனையோ இருக்கு. ஆராய் எண்டு சொல்ல??

ம்கும் முகத்தையே காட்டுறாங்கள் இல்லை இதுக்குள்ள எப்படி ம்கும்  ஆனால் அந்த டீமை உங்க முகநூலில் பார்த்து இருக்கனே அதான் தீடீர் நினைவு வந்தது 

அவர்கள் கருத்து, பகிடியும் மட்டுமே ஆனால் யாரென்று தெரியாது சத்தியமா சொல்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சுமே அக்கா..உண்மையைச் சொல்லப் போனால் அமைதியாக அடக்கமாக இருக்கும் யாருக்குமே முகப் புத்தகம் ஒத்து வராத இடம். நிறையவே ஆடம்பரமாக வாழ விருப்பப்படுகிறவர்களுக்கு ஏற்ற இடம்.நேரத்துக்கு நேரம் தங்களை மாற்றிக் கொள்பவர்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் தங்கள் படங்களை போட்டு ரசிப்பவர்களுக்கே ஏற்ற இடம்..தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கேக் வெட்டுவதிலிருந்து  ஒன்றும் மிச்சமில்லை.கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளாக நானும் முகப் புத்தகம் வைத்திருக்கிறேன் அதனால் இன்றுவரை நிறைய மனதளவில் உடைஞ்சிருக்கிறேன்..

யாருக்கும் பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொள்ள மாட்டேன்..யாரு எப்படி பழகுவார்கள் எப்படி எல்லாம் தண்டிக்கப்படுவோம் என்று தெரியாது...முகப் புத்தகம் எல்லாவிதமாகவும் தண்டனைகளை தந்த இடம்..இன்று எவ்வளவுக்கு மற்றவர்களிடமிருந்து விலகி வாழ முடியுமோ அந்தளவுக்கு விலகிக் கொள்கிறேன்.'நான் ஆண் என்ன செய்தாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ...'நீ பெண் அடங்கி அடிமாடாய் தான் வாழனும் என்று சொல்லி அடிமைப்படுத்தும் உலகம்.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  நாளாக அந்தப்பக்கம்  காணவில்லை

இது தான்  சங்கதியோ?

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் சுயநல பிரபலமாகும் நோக்கோடு..

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

நன்றி  அனுபவப்பதிவுக்கும் நேரத்துக்கும் சுமே

Link to comment
Share on other sites

On ‎19‎.‎03‎.‎2017 at 7:18 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது,

நல்லதொரு பதிவு சுமேரியர் அவர்களே !

அனுப்புறான் என்ற சொல்லில் வரும் "ன்" னுக்கு பதிலாக "ள்" என்று போட்டுப் பார்த்தேன்.!!!! :shocked:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கொஞ்ச  நாளாக அந்தப்பக்கம்  காணவில்லை

இது தான்  சங்கதியோ?

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் சுயநல பிரபலமாகும் நோக்கோடு..

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

நன்றி  அனுபவப்பதிவுக்கும் நேரத்துக்கும் சுமே

யாருக்கும் எப்போதும் எதுவும் ஏற்படலாம்... முகப்புத்தகம் என்பது சாப்பிட்டு குடித்துப் பார்த்து பழகும் இடம் இல்லை.றைற்.உங்களுக்கு ஒன்றும் ஏற்படாதவகையில் சந்தோசபட்டுக் கொள்ளுங்கள்..நீங்களும் எங்கள் வயதுகளை கடந்து தான் போனனீங்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, விசுகு said:

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் 

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

4 hours ago, யாயினி said:

உங்களுக்கு ஒன்றும் ஏற்படாதவகையில் சந்தோசபட்டுக் கொள்ளுங்கள்..நீங்களும் எங்கள் வயதுகளை கடந்து தான் போனனீங்கள்.

நானும் 2009 இலிருந்து மூஞ்சி புத்தகத்தில் உலாவுறேன் - இதுவரை 76 நண்பர்களை மட்டுமே இணைத்துள்ளேன். எதையுமே ஷேர் பண்ணுவதில்லை. சொந்த ஆக்கங்களை தவிர வேறு பகிர்வதில்லை. அரட்டை அடிப்பதில்லை. தொலைபேசியில் facebook ஐ இணைப்பதில்லை - அதனால் எந்த நேரமும் மொபைலை தோண்டவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

களிமண் பானையாவதும், சட்டியாவதும் குயவனின் கையில்தான் - அதற்கு களிமண்ணை குறை சொல்வது நியாயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Surveyor said:

முகநூல் மற்றும் சோசியல் மீடியாவால் சில கலியாணங்களும் கைகூடி இருக்குது அதே நேரம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும் வந்துகொண்டு இருக்குது.

இந்தக்காலத்தில் தவிர்கவே முடியாத ஒரு பிரச்சனையாக முகநூல் மாறிக்கொண்டே இருக்கு.

19 hours ago, முனிவர் ஜீ said:

ம்கும் முகத்தையே காட்டுறாங்கள் இல்லை இதுக்குள்ள எப்படி ம்கும்  ஆனால் அந்த டீமை உங்க முகநூலில் பார்த்து இருக்கனே அதான் தீடீர் நினைவு வந்தது 

அவர்கள் கருத்து, பகிடியும் மட்டுமே ஆனால் யாரென்று தெரியாது சத்தியமா சொல்கிறேன் 

நீங்கள் ஒழுங்காக்டலை போட ஆரிட்டையன் பழகவேணும்.

9 hours ago, Paanch said:

நல்லதொரு பதிவு சுமேரியர் அவர்களே !

அனுப்புறான் என்ற சொல்லில் வரும் "ன்" னுக்கு பதிலாக "ள்" என்று போட்டுப் பார்த்தேன்.!!!! :shocked:  

அதுவும் கனக்க நடக்குதுதான்.

13 hours ago, யாயினி said:

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சுமே அக்கா..உண்மையைச் சொல்லப் போனால் அமைதியாக அடக்கமாக இருக்கும் யாருக்குமே முகப் புத்தகம் ஒத்து வராத இடம். நிறையவே ஆடம்பரமாக வாழ விருப்பப்படுகிறவர்களுக்கு ஏற்ற இடம்.நேரத்துக்கு நேரம் தங்களை மாற்றிக் கொள்பவர்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் தங்கள் படங்களை போட்டு ரசிப்பவர்களுக்கே ஏற்ற இடம்..தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கேக் வெட்டுவதிலிருந்து  ஒன்றும் மிச்சமில்லை.கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளாக நானும் முகப் புத்தகம் வைத்திருக்கிறேன் அதனால் இன்றுவரை நிறைய மனதளவில் உடைஞ்சிருக்கிறேன்..

யாருக்கும் பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொள்ள மாட்டேன்..யாரு எப்படி பழகுவார்கள் எப்படி எல்லாம் தண்டிக்கப்படுவோம் என்று தெரியாது...முகப் புத்தகம் எல்லாவிதமாகவும் தண்டனைகளை தந்த இடம்..இன்று எவ்வளவுக்கு மற்றவர்களிடமிருந்து விலகி வாழ முடியுமோ அந்தளவுக்கு விலகிக் கொள்கிறேன்.'நான் ஆண் என்ன செய்தாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ...'நீ பெண் அடங்கி அடிமாடாய் தான் வாழனும் என்று சொல்லி அடிமைப்படுத்தும் உலகம்.'

நீங்கள் கூறுவது உண்மைதான். இதுவொரு மாயக்கண்ணாடி. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் உடைவதுமட்டுமன்றி எமக்கே காயங்களை ஏற்படுத்திவிடும்.

11 hours ago, விசுகு said:

கொஞ்ச  நாளாக அந்தப்பக்கம்  காணவில்லை

இது தான்  சங்கதியோ?

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் சுயநல பிரபலமாகும் நோக்கோடு..

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

நன்றி  அனுபவப்பதிவுக்கும் நேரத்துக்கும் சுமே

கருத்துக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டுக்கு முன் பின் மருந்து குளிசை போட மறந்தாலும் மறப்பினம் ஆனால் உந்த சொசல் மீடியா விடுப்பை  பார்க்க மறக்கமாட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

நானும் 2009 இலிருந்து மூஞ்சி புத்தகத்தில் உலாவுறேன் - இதுவரை 76 நண்பர்களை மட்டுமே இணைத்துள்ளேன். எதையுமே ஷேர் பண்ணுவதில்லை. சொந்த ஆக்கங்களை தவிர வேறு பகிர்வதில்லை. அரட்டை அடிப்பதில்லை. தொலைபேசியில் facebook ஐ இணைப்பதில்லை - அதனால் எந்த நேரமும் மொபைலை தோண்டவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

களிமண் பானையாவதும், சட்டியாவதும் குயவனின் கையில்தான் - அதற்கு களிமண்ணை குறை சொல்வது நியாயமில்லை.

ஜீவன் சிவா நீங்கள் கூறுவது முகநூலுக்குப் பொருந்தாது. ஏனெனில் ஒரு மனிதனும் சடப்பொருளும் என்பது கையாள்வதற்கு இலகுவானது. முகநூல் விதவித மனிதர்கள், ஆயிரம் விடயங்கள், உணர்வுகள்,மனம் என எத்தனையோ விடயங்களுடன் பின்னிப்பிணைந்த நூலிழை. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் இருக்கும். அதிலும் பெண்களுக்கு பல தடைதாண்டல்.

3 minutes ago, putthan said:

சாப்பாட்டுக்கு முன் பின் மருந்து குளிசை போட மறந்தாலும் மறப்பினம் ஆனால் உந்த சொசல் மீடியா விடுப்பை  பார்க்க மறக்கமாட்டினம்

ஆனாலும் எல்லாக் காலகட்டத்திலும் ஒன்றுபோல் இருக்காது புத்தன். ஒரு எல்லைக்குமேல் சலிப்புத்தான் மிஞ்சுவது.வேலை வெட்டி இல்லாதவைதான் தொடர்ந்தும் அதற்குள் கிடப்பது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.