Sign in to follow this  
colomban

இயக்கங்கள் & பட்ட பெயர்கள்

Recommended Posts

80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம்.

மோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம்.

இந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்..

TELO - ரயில் பயணங்கள்
ரயில்களில் பயணிக்கும் ஆமிக்காரரை குறி வைத்து நடாத்திய சில தாக்குதல்களை மையமாக வைத்து..,

PLOTE - விடியும் வரை காத்திரு
இயக்களுங்குள் பெரிய இயக்கம், கெரில்லா பாணி தாக்குதல்களில் பெரிதாக ஈடுபடாமல், மக்கள் புரட்சியை ஏற்படுத்தி எல்லா ஆமி காம்பையும் ஓரேயடியா அடித்து நொறுக்கோணும் என்ற சித்தாந்தத்தில் இயங்கியதாக கருதப்பட்ட இயக்கம்..

EPRLF - தூறல் நின்று போச்சு
இராணுவ தளபதி தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காரைநகர் கடற்படை முகாமை தாக்க முயற்சிக்கப்பட்ட தாக்குதலை தவிர வேறெதுவும் பெரிதாக செய்யாத்தால்...
இந்த தாக்குதலில் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி ஷோபா சாவினை தழுவியதாக ஞாபகம், அதை விட இந்த அட்டாக் பற்றி பல பகிடிக்கதைகள் அந்த காலத்தில் உலாவந்தன..

EROS - தூங்காதே தம்பி தூங்காதே
கடும் கொள்கை பிடிப்பும் intellectualismஉம் நிறைந்த இயக்கமாக வெளிப்பட்ட இவையல் ஒன்றுமே செய்யேல.. படித்த பெடியளிற்கு துவக்கு சரிவராது என்று சனம் கதைச்சது..

LTTE - அலைகள் ஓய்வதில்லை
தொடர்ச்சியாக கெரில்லா போர்முறையில் தமிழர் தாயகமெங்கும் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக..
சாவகச்சேரி, கொக்கிளாய், யாழ்ப்பாணம், டொளர் ஃபார்ம், அநுராதபுரம், பூநகரி என நீண்ட பட்டியல்..
இந்த பட்ட பெயரை வைத்து தான் தலைவர் பின்னாட்களில் பிரதான தாக்குதல் நடவடிக்கைகளிற்கு ஓயாத அலைகள் என்று பெயர் வைத்தவர் என்றுகூட ஒரு கதை..

நினைத்து பார்த்தா...
அது ஒரு கனாக்காலம்
நினைத்தாலே இனிக்கும் !
 
kanavuninaivu.blogspot
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஹாஹா.. நானும் தெளிவாகக்  கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂
    • பட்டது + படிச்சது + பிடித்தது - 215                                        1980 ஆரம்ப காலம்.   நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும்.                          இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால்  நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று  கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார்.      அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம்.   ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்).    
    • எதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம். மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும். மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன.  பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது. இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும். இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு. காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது. இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது. இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம்.  இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார். மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified) இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.
    • இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட ஆண்டு 1520. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய  நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக பிரித்து பதவிக்கு வர முனைந்த அவனது மூன்று மகன்மாரால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது.  இடையே வடக்கே மக்கள் வாழாத அல்லது குறைவான மக்களைக் கொண்ட தீவுக்கூடங்களை பிடித்துக் கொண்டனர் போர்த்துக்கேயர். இதனூடாக, தென் இந்திய உதவி தடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ராஜ்யம் மடக்கப்பட, போர்த்துகேயர்களுக்கு இசைந்து போகவேண்டி வர, தமது பொம்மை அரசரை 1520 அளவில் பதவி ஏற வைத்தனர். அந்த அரசரின் பேரன் சங்கிலியன் அரசனாகி  முரண்டு பிடித்த போது, போரிட்டு அவனைக் கொன்று நேரடி ஆளுமைக்கு கொண்டு வந்தனர். சிதைந்த போர்த்துக்கேயர் கோட்டை, நெடுந்தீவு இதேபோலவே கோடடையின் அரசனான (கொல்லப்பட்ட விஜயபாகுவின் ஒரு மகன்) புவனேகபாகுவை மன்னர், அந்தப்புரத்தில் உப்பரிகையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அறிவித்து, (மேலிருந்து ஒரு போர்த்துகேயனால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்பட்ட) பின்னர் அவனது பேரனை, கிறிஸ்தவனாகி பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக. இந்த 2020ம் ஆண்டு, இந்த யாழ்ப்பாணம் ராஜ்யம் தனது சுதந்திரத்தினை பறிகொடுத்த 500 வது வருட நிறைவு.