Jump to content

சிங்கள நாளேடுகளின் செய்திகள்


Recommended Posts

புலிகளின் குண்டு வெடித்ததில் பயிற்சி முகாம் புலித் தலைவரே பலி

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தொப்பிகல காட்டுப் பகுதியில் அமைந்துள்ள பிரதான புலிகள் இயக்க முகாம் ஒன்றில் கடந்த 11 ஆம் திகதி நிகழ்ந்த பாரிய குண்டு வெடிப்பின் போது அதில் சிக்குண்டு அந்த முகாமின் தலைவர் எனக் கருதப்படும் பிரதேசத் தலைவரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரை விட முகாமிலிருந்த முன்னணி புலிகள் இயக்க உறுப்பினர்கள் நான்கு பேரும் இந்தக் குண்டு வெடிப்பின் போது ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருபது புலிகள் இயக்கத்தினரும் இதில் படுகாயங்களுக்குள்ளாகினர்.இந

Link to comment
Share on other sites

பிரபாகரன் தப்பியோடத் தயாராவதை கருணா உறுதிப்படுத்துவதாக தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் நாட்டிலிருந்து தப்பியோடத் தயாராவது பற்றிய தகவல்களை முன்னர் அந்த இயக்கத்தில் கிழக்கு மாகாணத்துக்கு தலைமைப் பொறுப்பாக இருந்து பின்னர் பிரிந்து சென்றவரும் தற்போது மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பு என்ற அரசியல் கட்சியை அமைத்து கிழக்கில் புலிகள் இயக்கத்தினருக்கு எதிரான தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருபவருமான கருணா உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முப்படையினரும் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து படுதோல்வியடைந்து இயக்கத்தின் கிழக்கில் தனது கட்டுப்பாட்டிலிருந்த பெரும் நிலப்பரப்பை இழந்திருக்கும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவ்வாறே படையினர் வடக்கில் மேற்கொள்ளவிருக்கும் உத்தேச தாக்குதல்களில் வடக்கிலும் படுதோல்வியடைந்து வடக்கு பிரதேசங்களை படையினரிடம் இழந்துவிடக் கூடும் என்ற பீதி காரணமாகத் தான் பதுங்கி வாழும் காட்டுப் பிரதேசத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு இரகசியமாக தப்பியோடுவதற்காக திட்டமிட்டிருப்பது பற்றி பாதுகாப்புத் துறை புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவல்கள் வதந்தி போலன்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாகவே புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது.

இவ்வாறு பிரபாகரனின் தப்பியோடும் இரகசியத் திட்டம் பற்றி மேலும் புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப பிரபாகரன் வட ஆபிரிக்கப் பிராந்தியத்திலுள்ள எரித்திரியா நாட்டுக்கே தப்பியோட இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளை அவருடைய சர்வதேச சகாக்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்களில் புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளிலிருந்து யுத்த ஆயுதங்கள், உபகரணங்களைக் கொள்வனவு செய்து புலிகளின் பிரதேசங்களுக்கு அனுப்பி வரும் சர்வதேச செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவரும் வெளிநாடுகளில் நடமாடுபவருமான குமார் பத்மநாதன் எனப்படும் பிரபல புலிகள் இயக்க பிரமுகரே இவ்வாறு பிரபாகரன் தப்பியோடி வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார். மேலும் இது சம்பந்தமாக அண்மையில் வட ஆபிரிக்க நாடாகிய எரித்திரியாவுக்கு சென்றதாகவும் இதனால் பிரபாகரன் வெகுவிரைவில் எரித்திரியாவுக்கு தப்பியோடக் கூடும் என்று நம்பப்படுவதாகவும் குறித்த புலனாய்வு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரபாகரனின் முன்னாள் நெருங்கிய சகாவாக இருந்த கருணாவும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருப்பதாகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எரித்திரியா நாடு ஆபிரிக்கா கண்டத்தின் வட பகுதியில் செங்கடல் பிரதேசத்துக்கு அருகில் ஆகும். எரித்திரியா எல்லையை அண்டிய நாடுகளாக எத்தியோப்பியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

மேற்படி புலிகள் இயக்கத்தின் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளராகச் செயற்பட்டு வரும் குமார் பத்மநாதன் இவ்வாறு எரித்திரியாவுக்குச் சென்று பிரபாகரனை அங்கு தஞ்சம் அடையச் செய்வதற்காக அந்த நாட்டு அதிகாரிகளுடன் ஏற்பாடுகளைச் செய்யச் சென்ற தனது பயணத்தின் போது முதலில் எரித்திரியாவை அண்டியுள்ள சோமாலியா நாட்டுக்கும் சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியா சென்ற பத்மநாதன் அங்கு செயற்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களையும் சந்தித்து பிரபாகரனைப் பாதுகாப்பாக எரித்திரியா கொண்டு செல்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள இந்த நிலையில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மிக விரைவில் நாட்டிலிருந்து தப்பியோடக் கூடும் எனவும் இதற்காக அவர் தனது அதிநம்பிக்கைக்குரிய சகாக்களின் பாதுகாப்புடன் உயர் குதிரை வலுவான நான்கு என்ஜின்கள் பொருத்தப்பட்ட படகு ஒன்றின் மூலம் வடக்கு கடலோரப் பிரதேசம் ஒன்றிலிருந்து புறப்பட்டு பெருங்கடல் பகுதியை அடைந்து அங்கு முன்னேற்பாட்டின் படி ஏற்கனவே, கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பல் ஒன்றில் ஏறி எரித்திரியாவுக்கு தப்பியோடத் திட்டமிட்டிருப்பதாகவும் குறித்த புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்கம் உட்பட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளைப் பற்றிய ஆய்வாளரும் பிரபல விமர்சகருமான பேராசிரியர் றொஹான் குணரத்ன அவருடைய புத்தகங்களில் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இவ்வாறே 1985 ஆம் ஆண்டிலும் புலிகள் இயக்கத் தலைவர் தனது இக்கட்டான கால கட்டத்தில் சிங்கப்பூருக்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-லங்காதீப: 12.02.2007

http://www.thinakkural.com/news/2007/2/17/...s_page21483.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.