Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை காலையில் நீச்சல் தடாகத்திற்கு செல்வது சுரேஸின் வழக்கம்..தடாகத்திலிருந்து வெளியே வந்து நீச்சல் உடை அழகிகளை ரசித்தபடி உடை மாற்றும் அறைக்கு செல்ல தயாரானான்.

"சுரேஸ்"குரல் வந்த திசை திரும்பி பார்த்தான்

கந்தர் டெனிஸ் விளையாடுற உடுப்போடு கறுத்த கண்ணாடியுணிந்து  அமர்ந்திருந்தார்.

"என்னடா ,எப்ப தொடக்கம் நீச்சலுக்கு வார எல்லா வகை நீச்சலும் இப்ப  பழகிட்டியோ"

"நீச்சலுக்கு வரயில்லை"

"பின்ன என்னத்துக்கு ஐசே தடாகத்துக்கு  வாரீர் சுவிமிங் சூட் போட்ட பெட்டைகளை பார்க்கவே"

"சும்மா போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் லொள்ளுதான், அதுசரி நீங்கள் கறுத்த கண்ணாடி போட்டுங்கொண்டு ரசிக்கிறியள் போலகிடக்கு"

"என்னதான் வயசு போனாலும் உந்த விசயத்தில் மனசு கொஞ்சம் ததும்பத்தான் செய்யுது,மகனும் மருமகளும் வெளியால போயிட்டினம்,அதுதான் நான் உவங்களை கூட்டிக்கொண்டு வந்தனான்"

கந்தரின்ட பேரன் ஒருத்தனுக்கு மூன்று வயதுதான் இருக்கும் கையில் போனை வைச்சு விளையாடிக்கொண்டிருந்தான் மற்றவன் ஆறு வயசிருக்கும்  தடாகத்தில் நீச்சல் பழகிக்கொண்டிருந்தான்.

"‍ஹாய் உங்கன்ட பெயர் என்ன"

திரும்பி ஒரு முழுசு முழுசிப்போட்டு மீண்டும் ஐபோனில் இளையான் கலைத்துகொண்டிருந்தான்.

"நீ என்னடாப்பா ஊர் பெடியளிட்ட கேட்கிறமாதிரி அவனிட்ட தமிழில் கேட்கிறாய் அவங்களுக்கு தமிழ் தெரியாது"

"ஏன் அண்ணே நீங்கள் தமிழ்தானே அவங்களோட தமிழில் கதைக்கலாம் தானே"

"தமிழ் உனக்கு சோறு போடப்போகுதே சும்மா தமிழ் தமிழ் என்று கொண்டு நிற்கிறாய்"

சொல்லி போட்டு தன்னுடைய பேரன்களை பற்றி புகழத்தொடங்கினார்.

"உவன் இருக்கிறானே அண்ணனை வென்டவன் .ஐபொனுக்குள்ள புகுந்து விளையாடுவான்.எனக்கு தெரியாதெல்லாம் அவனுக்கு அத்துப்படி."

"எத்தனை வயசு "

"இப்பதான் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாடினவன்.,காலையிலிருந்து பின்னேரம் வரை உதை வைச்சு நோன்டிகொண்டிருப்பான்  செய்யிற வேலைகள் எல்லாம்  ஆறு வயசு காரங்களின்ட வேலை. மற்ற எங்கன்ட தமிழ்பிள்ளைகளை விட இவன் கெட்டிக்காரன்."

இப்படித்தான் ஒருநாள் தாய் தகப்பனுடன் வந்தவன் ,அவையள் சூவிமிங்பூலில்  இறங்கிட்டினம் இவன் கதிரையிலிருந்து விளையாடிகொண்டிருந்தவன் திடிரென தாய் தகப்பனை பார்த்திருக்கிறான் அவையளை காணவில்லை என்று போட்டு 000 அடிச்சுபோட்டான்,அவையள் திரும்பி வரும்பொழுது பெடியன் லொலிபொப் கையுடன் பொலிஸாருடன் சிரிச்சு கதைச்சு கொடு நிற்கிறான்.

கந்தரின்ட புளுகுமூட்டைகளை நங்கு அறிந்த சுரேஸ்

"இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டு மாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன்  அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததை பார்த்துவிட்டான் .கன்றாவிகள் என திட்டிப்போட்டு , சீ சீ அதேன்ன கும்பகோணத்தில அம்மணமாக நின்றால் சாமி  கங்காரு நாட்டில் நின்றால் கன்றாவியே... அவன் திறந்தவன்....இவன் துறந்தவன்

 " நமச்சிவாய"

மன அழுத்தம் வந்தால்" நமச்சிவாய,நமச்சிவாய"சொல்லி மனதை சமதானப்படுத்தி கொள்வது சுரேஸின் பழக்கம்.

நமச்சிவாய சொன்னவனுக்கு தனது பாடசாலை ஆசிரியர் கூறிய கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது

சுரேஸ் நீ சொல்லு தோடுடைய செவியன் தேவராம் பாடியது யார்?

"சம்பந்தர் சேர்"

"எத்தனை வயசில பாடினவர்"

"மூன்று வயசில"

"கெட்டிக்காரன்"

"ஏன் அந்த தேவாரத்தை பாடினவர்"

"பெற்றோர்கள் அவரை கரையில் வைத்துவிட்டு நீந்த சென்றுவிட்டார்கள்,அவர்களை காணவில்லை என்று பயந்த சம்பந்தர் சுவாமிகள் அம்மையே அப்பா என்று அபயக்குரல் எழுப்பினார் உடனே உமாபதியாரும் சிவபெருமானும் தோண்றி அவருக்கு பால் கொடுத்து அவரின் அழுகையை நிறுத்தினார்கள்"

உடுப்புக்களை மாற்றி ஈர உடைகளை பையுனுள் வைத்து தோல்பையை எடுத்துகொண்டு கந்தரிடம் சென்றான்.

"அண்ணே நான் வாரன்"

"சுரேஸ்  அவசரமாய் போறியோ"

"இல்லை அண்ணே ஏன் "

"இவனோட கொஞ்ச நேரம் இருக்கிறியோ பெரியவனின் உடுப்பை மாற்றிப்போட்டு ஒடிவாரன்"

"தம்பி இந்த அங்கிளோட இருங்கோ அண்ணாவுக்கு செஞ் பண்ணியிட்டு உடேனே வாரன்" என்று ஆங்கிலத்தில் சொல்ல

பார்த்து மீண்டும் ஒரு முழியள் முழிச்சு போட்டு ஐபோனில் முகத்தை புதைத்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனை பார்த்து ஒரு புன்முறுவலை உதிர்ந்தவன் பக்கத்தில்  இருக்கும்படி தலையால் சைகை காட்டினான்.

தன்னை படம் எடுத்தான் பிறகு சுரேசைக் கேட்காமலயே  அவனையும் படம் எடுத்தான்.சிறிது நேரம் போக விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டான் .சுரேஸ் பயந்து போனான் ,

"வட் கப்பின் வை யு ஆர் லாவிங்"

 ஏன் இவன் சிரிக்கிறான் என்று பதட்டப்படாமல் கேட்ட படியே வந்த கந்தர்"தாங்ஸ் சுரேஸ்" என்றார்.

தமையனிடம் கைதொலைபேசியை காட்டினான் அவனும் கெக்கட்டம் விட்டு சிரிக்க தொடங்கி விட்டான்.

கந்தர் ஆங்கிலத்தில் அவங்களை திட்டிப்போட்டு கைதொலைபேசி வாங்கி பார்த்து சிரித்துவிட்டு  சுரேசிடம் காட்டினார்.

திடுக்கிட்டு விட்டான் அவனது முகம் நரியின் முகமாக மாற்றப்பட்டிருந்தது.

" வி கான் மொர்ப் யு பேஸ் இன்டு டொன்கி,மங்கி,அன்ட் டொக்"ஹா...ஹா ...என்று சொல்லி விடை பெற்றனர் பசங்களும் கந்தரும்.

"நமச்சிவாய.நமச்சிவாய"

மீண்டும் அவன் மனம் பாடசாலைக்கு சென்றது.

"நரியை பரி ஆக்கியது யார்"

"சிவபெருமான்"

"நமச்சிவாய....நமச்சிவாய"

வைப்பிரேசன் மோட்டிலிருந்த கைத்தொலைபேசி அதிர்ந்தது.

இதுவும் ஒரு அதிசயம் தான் ,பிறமனிதர்களின் தொடுதலின்றி எமது உடம்பை அதிரவைக்கமுடியுதே...எல்லாம் தொழிநுட்பத்தின் உச்சம் தான்.... நினைத்தபடி

‍"‍ஹலோ "

"இன்றைக்கு மாணிக்க வாசகரின்ட குரு பூஜை "

"அதுக்கு நான் என்ன செய்ய "

"நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் வார வழியில சுதாவின்ட வீட்டை போய் அவளின்ட அம்மாவின்ட சீலை ஒன்று தருவா வாங்கி கொண்டு வாங்கோ"

"என்னடி ஆத்த உனக்கு அம்மாவின்ட சீலை கட்டுற வயசு வந்திட்டெ"

"ஐயோ... எங்கன்ட பெரியவளை புட்டுக்கு மண் சுமந்த‌ கதையில் வருகின்ற

 செம்மணச்செல்வியா  வெளிக்கிடித்து பின்னேரம் குரு பூஜைக்கு கூட்டிப்போக வேண்டும் அதுகுத்தான் ."

"சரி வாங்கிகொண்டு வாரன் வைக்கட்டா"

"ஓம் வையுங்கோ"

எல்லோருக்கும் எப்படி பிரம்படி பட்டிருக்கும் ,எப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மெசெஜ் பாஸ் பண்ணப்படிருக்கும்.....அந்த காலத்தில டெக்னோலொஜி இதை விட நல்லா இருந்திருக்குமோ.

இப்ப  ஐடி கார்ட் ,மொபைல் எல்லாத்தையும் கழுத்தில  தொங்கவிடுறமாதிரி அந்த காலத்தில உருத்திராட்சையை தொங்கவிட்டுகொண்டு சனம் திரிஞ்சதுகள் .இந்த உருத்திராட்சைகளுக்கும் இமயமலையிலிருந்த எம்பெருமானுக்கும் வயர்லெஸ்  தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்குமோ.கையில் இரும்பால் செய்த ஆயுதங்கள் ,தலையில் பரபோலிக் அன்டனா....எல்லாம் தொடர்பாடலுக்கு ஏற்றவகையிலிருந்திருக்கு...

"நமச்சிவாய  நமச்சிவாய"

என்ன கோதாரி பிடிச்ச எண்ணங்கள் என்றபடி    சுதாவீட்டுக்கு போய் சேலையை எடுத்துகொண்டு வீடு சென்று அங்கிருந்த சிவாஸை பார்த்தான்.என்ன தீர்த்தமாடப்போறியே வடுவா பயளே என்று கேட்பது போலிருந்தது ...

"‍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, putthan said:

இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டு மாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன்  அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததை பார்த்துவிட்டான் .கன்றாவிகள் என திட்டிப்போட்டு , சீ சீ அதேன்ன கும்பகோணத்தில அம்மணமாக நின்றால் சாமி  கங்காரு நாட்டில் நின்றால் கன்றாவியே... அவன் திறந்தவன்.

புத்து நீச்சல் தாடகத்திற்கு குடும்பமாக போனால் அம்மணமாக நிற்பவர்களால் பெரிய வெட்க கேடாக இருக்கும்.

பெண்களின் உடுப்பு மாற்ற அறையிலும் ஒன்றிரண்டு இப்படி நிற்கும் என மனைவி பிள்ளைகள் சொல்வார்கள்.

ஓம் நமசிவாய.

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டு மாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன்  அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததை பார்த்துவிட்டான் .

29 minutes ago, ஈழப்பிரியன் said:

புத்து நீச்சல் தாடகத்திற்கு குடும்பமாக போனால் அம்மணமாக நிற்பவர்களால் பெரிய வெட்க கேடாக இருக்கும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஸ்ட்மாதான் இருக்கும் - அப்புறம் பழகிடும்
நிர்வாண உலகில் டவலுடன் நிண்டால்தான் அதிசயம். அதையும் கழட்டி போட்டு உடை மாத்தி பாருங்கோ - ஒரு நாயும் திரும்பி பாக்காது.

புத்தனுக்கு //:grin:

Bilderesultat for chivas regal 25

நாளைக்குத்தான் உடைக்கணும் - கண்டிப்பா சொல்லிப் போட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசபதிக்கும் நீச்சல் குளத்துக்கும் கனக்சன் சூப்பர்ப் .... இதில்தான் ஒரிஜினல் புத்தனைக் காணக் கூடியதாய் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் கலக்கீட்டீகள்...கதை அந்தமாதிரி......tw_thumbsup:

1 hour ago, ஈழப்பிரியன் said:

புத்து நீச்சல் தாடகத்திற்கு குடும்பமாக போனால் அம்மணமாக நிற்பவர்களால் பெரிய வெட்க கேடாக இருக்கும்.

பெண்களின் உடுப்பு மாற்ற அறையிலும் ஒன்றிரண்டு இப்படி நிற்கும் என மனைவி பிள்ளைகள் சொல்வார்கள்.

ஓம் நமசிவாய.

உது வெள்ளைக்கார நாடுகளிலை நோர்மல் தானே......இப்ப எங்கடை கனசனமே திருந்தீட்டினம் ஐ மீன் அம்மணமாய் நிப்பினம் நீங்கள் என்னடாவெண்டால் இப்பவும் ஒல்லாந்தர் காலத்திலையே நிக்கிறீங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எல்லோருக்கும் எப்படி பிரம்படி பட்டிருக்கும் ,எப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மெசெஜ் பாஸ் பண்ணப்படிருக்கும்.....அந்த காலத்தில டெக்னோலொஜி இதை விட நல்லா இருந்திருக்குமோ

இங்க தான் நிற்கிறார் புத்தன் 
கலக்கலான கதை சூப்ப்ர் தொடரட்டும் tw_blush:

1 minute ago, குமாரசாமி said:

புத்தன் கலக்கீட்டீகள்...கதை அந்தமாதிரி......tw_thumbsup:

உது வெள்ளைக்கார நாடுகளிலை நோர்மல் தானே......இப்ப எங்கடை கனசனமே திருந்தீட்டினம் ஐ மீன் அம்மணமாய் நிப்பினம் நீங்கள் என்னடாவெண்டால் இப்பவும் ஒல்லாந்தர் காலத்திலையே நிக்கிறீங்கள்.:grin:

கன கண் கொள்ளா காட்சிகள் பார்த்திருப்பியள் போல் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் மன அழுத்தம் வந்தால் உடம்புக்கு ஆகாது என்று சுரேஸுக்கு சொல்லிவைக்கவேண்டும்.

மேற்கு நாடுகளில் கடற்கரைகளில் வெளிநாட்டவர்கள் வந்து விடுப்புப் பார்ப்பதால் உள்ளூர் வெள்ளைகள் எல்லாம் இப்ப சூரியக்குளியல்களில் கவனமாகத்தான் இருக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை இல்லையாம்.நாளை விடியும் தானே.மற்றும் படி வழமை மாதிரி பின்னீட்ங்கள்.

Link to comment
Share on other sites

புத்தனின் வழமையான கிறுக்கல்..tw_blush:

"தமிழ் உனக்கு சோறு போடப்போகுதே சும்மா தமிழ் தமிழ் என்று கொண்டு நிற்கிறாய்"

இது நான்  அதிகம் கேள்விப்பட்ட வசனம்..:rolleyes:

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

புத்தன் கலக்கீட்டீகள்...கதை அந்தமாதிரி......tw_thumbsup:

உது வெள்ளைக்கார நாடுகளிலை நோர்மல் தானே......இப்ப எங்கடை கனசனமே திருந்தீட்டினம் ஐ மீன் அம்மணமாய் நிப்பினம் நீங்கள் என்னடாவெண்டால் இப்பவும் ஒல்லாந்தர் காலத்திலையே நிக்கிறீங்கள்.:grin:

உடம்பைப் பிடித்துவிடும் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடிந்ததும் அங்குள்ள தடாகத்தில் நீந்தவிடுவார்கள். இளம் பெண்பிரசுகளும் அம்மணமாக நீச்சல். எனக்குக் கூச்சம் வந்து நானும் கழற்றிவிட்டேன். கறுவல் ஒருவன் தடாகத்தில் புகுந்ததை அறிந்த தாயொருவர் பதட்டத்துடன் ஓடி வந்தார். கோவணமும் அற்ற பழனியாண்டவராக நான் கொடுத்த காட்சியால் அவர் ஆறுதல் அடைந்து அமைதியடைந்ததைக் கண்டேன். (இது கற்பனை அல்ல உண்மை.)  

Bildergebnis für Swimming Simily

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

கன கண் கொள்ளா காட்சிகள் பார்த்திருப்பியள் போல் :unsure:

என்னத்தை புதிசாய் பார்க்க இருக்கு ராசா....

முன்ன பின்ன பெரிசு சின்னன் வித்தியாசம் அவ்வளவுதான்....

இன மத பேதமின்றி ஆடி அடங்கும் இடத்தின் உருவம் ஒன்றுமட்டுமே....tw_blush:

எல்லாம் மனம்தான் ராசா....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக் கடிச்சு...மாட்டைக் கடிச்சு ....இப்ப ஆண்டவனையே கடிக்கிற காலத்தில.....தொழில் நுட்பம் வளர்ந்து போய் இருக்கு!

எனக்கும் ஸ்விமமிங்க் போக ஆசை தான் புத்தன்!

ஒரு நாள் பிளாக் ரவுணுக்குக் கிட்டவுள்ள ஸ்விம்மிங்  பூலுக்குப் போய்...குளிக்கிற அறைக்கு முன்னால வரிசையில காத்திருக்க..., அறையுக்குள்ள அப்ப தான் குளிச்சு முடிஞ்ச ஒரு சீக்கியப் பொம்பிளை வெளியால வந்தது!

பாத் ரூம் முழுக்க ஒரே சக்கை வாசம்!

இந்த வெள்ளையள் என்ன மாதிரி....அந்த வாசத்தைச் சுவாசிக்கிரான்களோ எண்டு தான் நினைக்கத் தோன்றியது!

கதை சுப்பர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, putthan said:

"இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டு மாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன்  அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததை பார்த்துவிட்டான் .கன்றாவிகள் என திட்டிப்போட்டு , சீ சீ அதேன்ன கும்பகோணத்தில அம்மணமாக நின்றால் சாமி  கங்காரு நாட்டில் நின்றால் கன்றாவியே... அவன் திறந்தவன்....இவன் துறந்தவன்

 " நமச்சிவாய"

மன அழுத்தம் வந்தால்" நமச்சிவாய,நமச்சிவாய"சொல்லி மனதை சமதானப்படுத்தி கொள்வது சுரேஸின் பழக்கம்.

நமச்சிவாய சொன்னவனுக்கு தனது பாடசாலை ஆசிரியர் கூறிய கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது

சுரேஸ் நீ சொல்லு தோடுடைய செவியன் தேவராம் பாடியது யார்?

"சம்பந்தர் சேர்"

 ------எல்லோருக்கும் எப்படி பிரம்படி பட்டிருக்கும் ,எப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மெசெஜ் பாஸ் பண்ணப்படிருக்கும்.....அந்த காலத்தில டெக்னோலொஜி இதை விட நல்லா இருந்திருக்குமோ.

அந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் ஒப்பிட்டு எழுதிய  கதைக்கு...
மெருகு சேர்க்கும் வகையில், வரும் நகைச்சுவைகள்... மிக அழகு புத்தன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்னத்தை புதிசாய் பார்க்க இருக்கு ராசா....

முன்ன பின்ன பெரிசு சின்னன் வித்தியாசம் அவ்வளவுதான்....

இன மத பேதமின்றி ஆடி அடங்கும் இடத்தின் உருவம் ஒன்றுமட்டுமே....tw_blush:

எல்லாம் மனம்தான் ராசா....:cool:

ரசனைக்காரர் ஐயா நீங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/04/2017 at 11:36 PM, ஈழப்பிரியன் said:

புத்து நீச்சல் தாடகத்திற்கு குடும்பமாக போனால் அம்மணமாக நிற்பவர்களால் பெரிய வெட்க கேடாக இருக்கும்.

பெண்களின் உடுப்பு மாற்ற அறையிலும் ஒன்றிரண்டு இப்படி நிற்கும் என மனைவி பிள்ளைகள் சொல்வார்கள்.

ஓம் நமசிவாய.

எங்களுக்கு ஒரு மாதிரியிருக்கும் ஆனால் அவையளுக்கு அது ...சகயம் .....எங்கனட அடுத்த பரம்பரைக்கும் இது சகயம்...... ஓம் நவச்சிவாய....

On 07/04/2017 at 0:12 AM, ஜீவன் சிவா said:

ஆரம்பத்தில் கொஞ்சம் கஸ்ட்மாதான் இருக்கும் - அப்புறம் பழகிடும்
நிர்வாண உலகில் டவலுடன் நிண்டால்தான் அதிசயம். அதையும் கழட்டி போட்டு உடை மாத்தி பாருங்கோ - ஒரு நாயும் திரும்பி பாக்காது.

புத்தனுக்கு //:grin:

Bilderesultat for chivas regal 25

நாளைக்குத்தான் உடைக்கணும் - கண்டிப்பா சொல்லிப் போட்டேன்.

நன்றிகள் ....சிவாஸ் ரீகளுக்கு ...டபில் பிளக் இரண்டு கிளாஸ்  உள்ள போய்விட்டது ...ஒம் நமசிவாய .....

இன்று சிட்னி முருகன் தீர்த்த திருவிழா.....எல்லாம் அவன் செயல்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/04/2017 at 0:32 AM, suvy said:

கைலாசபதிக்கும் நீச்சல் குளத்துக்கும் கனக்சன் சூப்பர்ப் .... இதில்தான் ஒரிஜினல் புத்தனைக் காணக் கூடியதாய் இருக்கு....!  tw_blush:

ஒறிகினல் புத்தன் மலை நான் மடு......உருத்திராச்சையில் சிறு சிறு மலை முகடுகள் உண்டு ,எவ் எம் கொனக்சன் இலகுவாக‌ இருக்கும்:10_wink:...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/04/2017 at 0:48 AM, குமாரசாமி said:

புத்தன் கலக்கீட்டீகள்...கதை அந்தமாதிரி......tw_thumbsup:

உது வெள்ளைக்கார நாடுகளிலை நோர்மல் தானே......இப்ப எங்கடை கனசனமே திருந்தீட்டினம் ஐ மீன் அம்மணமாய் நிப்பினம் நீங்கள் என்னடாவெண்டால் இப்பவும் ஒல்லாந்தர் காலத்திலையே நிக்கிறீங்கள்.:grin:

அவையளுக்கு நோர்மல் ஆனால் எங்களுக்கு புல்லரிப்பல்ல.....:10_wink:

On 07/04/2017 at 0:49 AM, முனிவர் ஜீ said:

இங்க தான் நிற்கிறார் புத்தன் 
கலக்கலான கதை சூப்ப்ர் தொடரட்டும் tw_blush:

கன கண் கொள்ளா காட்சிகள் பார்த்திருப்பியள் போல் :unsure:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

On 07/04/2017 at 0:58 AM, கிருபன் said:

சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் மன அழுத்தம் வந்தால் உடம்புக்கு ஆகாது என்று சுரேஸுக்கு சொல்லிவைக்கவேண்டும்.

மேற்கு நாடுகளில் கடற்கரைகளில் வெளிநாட்டவர்கள் வந்து விடுப்புப் பார்ப்பதால் உள்ளூர் வெள்ளைகள் எல்லாம் இப்ப சூரியக்குளியல்களில் கவனமாகத்தான் இருக்கின்றார்கள்?

சுரேஸுக்கு வயசு போகபோக சின்ன விசயத்துக்கு எல்லாம் மனழுத்தம் வருகின்றது போல தெரிகின்றது...

On 07/04/2017 at 4:57 AM, சுவைப்பிரியன் said:

பச்சை இல்லையாம்.நாளை விடியும் தானே.மற்றும் படி வழமை மாதிரி பின்னீட்ங்கள்.

நன்றிகள் சுவைப்பிரியன் உங்கள் போண்றோரின் ஊக்கங்கள் தான் எங்களை கிறுக்க வைக்கின்றது

On 07/04/2017 at 5:17 AM, நவீனன் said:

புத்தனின் வழமையான கிறுக்கல்..tw_blush:

"தமிழ் உனக்கு சோறு போடப்போகுதே சும்மா தமிழ் தமிழ் என்று கொண்டு நிற்கிறாய்"

இது நான்  அதிகம் கேள்விப்பட்ட வசனம்..:rolleyes:

நன்றிகள் நவீனன் ...வருகைக்கும்  கருத்து பகிர்வுக்கும்...

On 07/04/2017 at 5:53 AM, Paanch said:

உடம்பைப் பிடித்துவிடும் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடிந்ததும் அங்குள்ள தடாகத்தில் நீந்தவிடுவார்கள். இளம் பெண்பிரசுகளும் அம்மணமாக நீச்சல். எனக்குக் கூச்சம் வந்து நானும் கழற்றிவிட்டேன். கறுவல் ஒருவன் தடாகத்தில் புகுந்ததை அறிந்த தாயொருவர் பதட்டத்துடன் ஓடி வந்தார். கோவணமும் அற்ற பழனியாண்டவராக நான் கொடுத்த காட்சியால் அவர் ஆறுதல் அடைந்து அமைதியடைந்ததைக் கண்டேன். (இது கற்பனை அல்ல உண்மை.)  

Bildergebnis für Swimming Simily

அதுக்கும் ஒரு கட்ஸ் வேணும்....வாழ்த்துக்கள் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/04/2017 at 8:26 AM, புங்கையூரன் said:

.., அறையுக்குள்ள அப்ப தான் குளிச்சு முடிஞ்ச ஒரு சீக்கியப் பொம்பிளை வெளியால வந்தது!

பாத் ரூம் முழுக்க ஒரே சக்கை வாசம்!

அது சரி நீங்கள் ஏன் பொம்பிளைகளின் பாத்ரூம் பக்கம் போனனீங்கள் ......வன்மையாக கண்ணடிக்கிறேன்...:10_wink:

On 07/04/2017 at 1:18 PM, தமிழ் சிறி said:

அந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் ஒப்பிட்டு எழுதிய  கதைக்கு...
மெருகு சேர்க்கும் வகையில், வரும் நகைச்சுவைகள்... மிக அழகு புத்தன். :grin:

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் பாராட்டுக்கும்.....உங்கள் போன்றோரின் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பேன்....

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

ஓம் நவச்சிவாய

அப்பு என்ன திடிரென்று நமச்சிவாய சொல்லுறீயள் இவ்வளவு நாளும் எங்க போய்யிருந்தீர்கள்.....ஒம் நமச்சிவாய‌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.