Jump to content

புங்குடுதீவில் அம்பலவாணர் கலையரங்கம் திறப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில்  அம்பலவாணர் கலையரங்கம் திறப்புவிழா அழைப்பிதழ் 

 

image.jpg

17426065_397808600591239_551114105829425

17522901_397808523924580_163525805036466

17523172_397808390591260_274382515812052

 

 

17634370_397808400591259_769208442787419

17760221_397808477257918_741440969163745

 

17795904_397808437257922_888922313081747

17796371_397808330591266_106601595071796

17799204_397808357257930_293223919491214

17799254_397808527257913_359120981570400

 

17800030_397808607257905_495549018323937

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி

 
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன.யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ~ப வடிவில் அமைந்திருக்கும் நலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம்.யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை அம்பலவாணர் தாம்போதி என்று அழைக்கப்படுகிறது.

புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும்.
புங்குடுதீவு மக்களின் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி.ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன.
கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார்இட்டு நீண்டவீதுpயாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது. புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது.மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர்.பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார்.
மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரியதாம்போதியை அமைக்கவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா � புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.

1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார்.
தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரசபிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார்.
புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார்.1922 ஆம் ஆண்டு ~~புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு ~~அகில இலங்கை மகாஜன சேவா சங்கம் என்று பெயர்மாற்றினார்கள்.இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் ~~தாம்போதி அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டுவந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர்.

வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது.1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.
பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.
எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு ஒன்று..... அங்கீகாரம் பெறுகின்றது!

பங்களித்த அனைவருக்கும் வாழ்துக்கள்!

வாழ்க.....வளர்க !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

வரலாறு ஒன்று..... அங்கீகாரம் பெறுகின்றது!

பங்களித்த அனைவருக்கும் வாழ்துக்கள்!

வாழ்க.....வளர்க !

நன்றியண்ணா

France - புங்குடுதீவு மக்கள்  ஒன்றியம் 20 லட்ச ரூபாக்களை  அன்பளிப்பு செய்திருக்கிறது

எல்லாமாக 50 லட்சத்துக்கு மேல் பிரான்சிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது

Link to comment
Share on other sites

19 hours ago, விசுகு said:

வாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி

சில கிழமைகளுக்கு முன்னர் வாணர் வழிவந்த ஒரு அம்மாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்மூலமாகவே இந்த பாலத்தின் சரித்திரத்தை தெரிந்து கொண்டேன். நேரம் கிடைக்கும்போது மேலும் தகவல்கள் அறிந்து இதனை ஒரு கட்டுரையாக எழுத விரும்பினேன். இப்போது அதே விடயம் உங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிவந்தது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சில கிழமைகளுக்கு முன்னர் வாணர் வழிவந்த ஒரு அம்மாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்மூலமாகவே இந்த பாலத்தின் சரித்திரத்தை தெரிந்து கொண்டேன். நேரம் கிடைக்கும்போது மேலும் தகவல்கள் அறிந்து இதனை ஒரு கட்டுரையாக எழுத விரும்பினேன். இப்போது அதே விடயம் உங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிவந்தது சந்தோசம்.

அதுக்காக நீங்கள்  எழுதாமல்  விட்டுவிடாதீர்கள்  ராசா

இந்த பாலத்தை  கட்டி

புங்குடுதீவுக்கு மட்டுமல்ல நயினாதீவு நெடுந்தீவு என பல தீவுகளுக்கும் யாழ்ப்பாணத்துடனான

நிலத்தொடர்பை ஏற்படுத்தி  தந்து தனது சொத்தை எல்லாம் இழந்த வாணரை நாங்கள் 

தேர்தலில் தோற்கடித்த பெருமைக்கும் உரியவர்கள்

அதே நேரம் வாணர் தனது கடைசிக்காலத்தில் வறுமையில் தான் இறந்து போனார்.

இதையும்  எழுதுங்கோ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.