Jump to content

வீட்டுக்கு வீடு வாசல் படி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாருங்கோ கெதியா வெளிக்கிடுங்கோ கல்யாணத்துக்கு நேரம் போகிறது நான் என்ன சீலையோ உடுக்கிறதோ இல்ல‌ முகத்துக்கு பெயிண்டா அடிக்கிறது உனக்குத்தான் நேரம் போகும் எனக்கு வேட்டிய சுத்தி கட்டினனா ஒரு சேட்டை போட்டனா வேலை முடிஞ்சுது நீ தான் வெளிக்கிட மூணு மணித்தியாலம் எடுக்கும் இந்த பேச்சுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்ல நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வாரன் புள்ளய பார்த்துக்கங்க சரி நீ கெதியா வா. ம்கும் கெதியா வாரதுகளா என்று ஒரு படத்தை பார்த்து முடிக்கலாம் இவள் வார வரைக்கும் என்று டீவியை தொறந்தால் விஜய் டீவில‌ ஒரு புறோக்கிரம் கோபிநாத் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறார் ஒரு புள்ள கெலிகொப்ட்ர கேட்கிறது இன்னொன்று 50 பவுண் கேட்கிறது இன்னொன்று நல்ல வீடு கேட்கிறது இதுகளை ஏன் பெத்து இருக்கு என்று  மனதுக்கு தோன்றினாலும் தங்கட பெண்பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அனுப்ப வேண்டியது தாய் தகப்பனின் கடமை தானே நாமளும் அப்படித்தானே அப்படித்தானே வாழுறம் என்ற நினைப்பு மனதுக்குள் பிரண்டடித்து ஓடுகிறது.

சரி ஒரு மாதிரியாக காலை ஏழு மணிக்கு போனவள் ஒன்பது மணிக்கு வெளியில் வந்தாள் மகனும் வெளிக்கிட்டு வந்தவன் போற நேரத்தில் கொஞ்சம் நில்லுங்கோ அவங்க நம்ம கல்யாணத்துக்கு எவ்வளவு வச்சி இருக்காங்கோ என்று பார்க்கிறேன் என்று கொப்பியை பிரட்டி ஏதோ கணக்கு வழக்குகள் போல் பிரட்டி பார்த்து காசை என்பலப்புக்குள் வைத்து வரும் போது அம்மா கக்கா வருது என்றான் மகன் நம்ம பையன் ஆச்சே உடனே மனிசி நீங்க தான் கூட்டிக்கொண்டு போங்கோ அப்பனுக்கு மகன் தப்பாம பொரந்திருக்கு என்றாள் மனிசி அவனை கொண்டு இறக்குமதி ஏற்றுமதி வியாபாரம் செய்துவிட்டு  கதவு யன்னல்களை பூட்டி வெளியே வந்து காரில் ஏறினால் கொஞ்சம் பொறுங்கோ என்று சொல்லி விட்டு போய் கதவை இழுத்தும் தள்ளியும் பார்க்கிறாள் மனைவி ஏனென்றால் நான் சரியாக கதவு பூட்டிருக்க மாட்டேனாம்.(இந்த‌ பொம்புளைங்க‌ இப்ப‌டித்தானா??)


ஒரு மாதிரியாக‌ க‌ல்யாண‌ வீட்டை அடைந்து விட்டோம்  அங்கே போன‌போது ந‌ண்ப‌ர்க‌ள் மூவ‌ரைக்காண‌ என‌க்கு ந‌ல்ல‌ ச‌ந்தோஷ‌ம் ஆகா ந‌ம்ம‌ கூட்டாளிக‌ள் வேற‌ வ‌ந்திருக்கிறானுக‌ள் என்ற‌ சிந்த‌னையில் நிற்க‌ ந‌ம்ம‌ வீட்டுக்காரியோ எங்கேயும் போக கூடாது என் ப‌க்க‌த்தில் நிற்க‌ வேணும் என்றாள் நானும் மார்கேட் மாடு போல‌ தலையை ஆட்டிக்கொண்டு இங்க‌ பாருங்க‌ என்ற‌ சாறி மாதிரி யாரும் க‌ட்டியிருக்கிறாங்க‌ளா ?? அதுக்குள்ள‌ கேள்வி இல்லையே இந்த‌ சாறி வாங்குன‌ க‌தை என‌க்கு ம‌ட்டும் தானே தெரியும் என்று பெரு மூச்சை இழுத்து விட்டேன் மூச்சில் ப‌ல‌ க‌டைக‌ள் க‌டைக்கார‌ர்க‌ள் கொந்த‌ளித்த‌து சுறாவளி வ‌ந்து போன‌ நினைவுக‌ளை த‌ர‌ இல்லை யாரிமும் இந்த‌ சாறி இல்லை என்று சொல்ல‌ ஒரு கெத்து ம‌னிசிக்கு

ந‌ட‌ந்து மேடைக்கு அருகில் செல்ல‌ ஒருவ‌ன் க‌ண்டு விட்டான் (ந‌ண்ப‌ன் ) டேய் ம‌ச்சி எங்க‌டா க‌ண்டு க‌ன‌கால‌ம் ஆச்சி வாவ‌ன் ந‌ம்ம‌ கோப‌னும் ,ந‌ந்த‌னும் நிற்கிறானுக‌ள் பார்த்துட்டு வ‌ருவம் என்றன் காந்த‌ன் ச‌ரி நீ போ நான் வாற‌ன் இல்ல மச்சி நீ வா என்றான்  ச‌ரி நீங்க‌ போயிட்டு குயிக்கா வாங்க‌ என்றாள் மனிசி ச‌ரி நான் வார‌ன் என்று அங்கே போனால் என்ன‌ ம‌ச்சான் நீ உன்ற‌ பொண்ணாட்டி முந்தானையில் தொங்கிற‌ ஓம் டா நீங்க‌ள் இதுவும் சொல்லுவிய‌ள் இன்ன‌மும் சொல்லுவிய‌ள் என்ற‌ நில‌மை அப்ப‌டி என்ன‌ ம‌ச்சான் க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்திருக்க‌ம் சாப்பாட்டு முன் ஏதாவ‌து பார்ப்ப‌மா அப்ப‌தான்டா சாப்பாடு இற‌ங்கும் போங்க‌டா டேய் என்னை தெருவில‌ நிற்க‌ வைக்க‌ போறிய‌ள் என்ன‌ இல்ல‌ ம‌ச்சான் சும்மா பிய‌ர் தானே ச‌ரி பிய‌ர்ம‌ட்டும் தான் என்று போட்டு காரில் போய் பிய‌ரை  வாங்கி அடித்து கொண்டிருக்கும் போது அத‌ற்குள் மிக்ஸ்ஸிங்கை ஒருத்த‌ன் சேர்த்திருக்கிறான் என்று என‌க்கு தெரியாது என்ன‌ ம‌ச்சான் நாலு பிய‌ர் இன்னுமா முடிய‌ல இதோட‌ முடியிது முடியிது  என்று அடிச்சா ந‌ல்லா வெறி யோடு ம‌ண‌ மேடைக்கு வ‌ந்தோம் நாலு பேரும் அவ‌ர் அவ‌ர்க‌ள்   த‌ங்க‌ள் ம‌னைவியிட‌ம் செல்ல‌ என் ம‌னைவிக்கோ நான் அடிச்சுட்டு  வ‌ந்த‌து தெரிய‌ சிரித்து முறைக்கிறாள் (அப்ப‌ என‌க்கு தெரிந்த‌து நாலு நாளைக்கு வெளியில‌ தான் ப‌டுக்கை என்று)

ஒரு மாதிரியாக‌ உடுப்புக‌க‌டையில் வைத்த‌  பொம்மை போல‌ இருந்துக‌ல்யாண‌ நிக‌ழ்வை க‌ண்டு க‌ழித்து விட்டு சாப்பாட்டுக்கு சென்றோம் அப்ப‌டியே அந்த‌ நாலு பேரும் வ‌ந்து அவ‌ர‌வ‌ர் ம‌னிசியுட‌ன்  சாப்பிட்ட‌ பின்பு ம‌ச்சான் நாம் நாலு பேரும் பிர‌ண்டு நாலு பேரும் ஒருமிக்க‌ தான் கிவ்டோ ப‌ரிசோ கொடுக்க‌ வேணும் என்ன‌ ச‌ரி ம‌ச்சான் என்றோம் ஆளாளுக்குள்  ஒரு மாதிரி ப‌ந்தி முடிந்த‌ கையோடு நானும் போய் இவ‌னுக‌ளுக்காய் காத்துக்கொண்டிருக்க‌ ம‌னிசி வேற‌ அடிக்க‌டி பார்வையை திருப்பி கொண்டிருக்க‌ எங்க‌ இவ‌னுக‌ளை காண‌ல‌ என்று தேடிக்கொண்டு வ‌ருவ‌ம் என்று போன‌ போது

ஒருத்த‌ன் ம‌ட்டையாகி இருந்தான் இன்னொருத்த‌ன் வாத்றூமை க‌ழுவிக்கொண்டிருந்தான் அவனும் ம‌னைவியும் அடியும் விழுற‌ ச‌த்த‌ம் கேட்குது ஆஹா ந‌ம்ம‌ளை  போல‌வும் ஒரு  அடிமையோ என‌ எட்டிப்பார்க்க‌ அவ‌ன்ற‌ ம‌னிசி என்னைக் க‌ண்டு விட‌  சாப்பாடு ச‌ரி இல்லை போல‌ அவ‌ருக்கு ச‌த்தி எடுக்கிற‌து என்றால் எடுக்காதா பின்ன (என‌து உள் ம‌ன‌து சொல்ல‌) அதை க‌ல‌ந்த‌ காந்த‌ன் ம‌ட்டும் ந‌ல்ல‌ பிள்ளை போல‌ வ‌ந்தான் டேய் என்ன‌த்த‌டா க‌ல‌ந்த‌ அதுவா ம‌ச்சி அதோட‌ கொஞ்ச‌ம்  வேற‌ ச‌ர‌க்கையும் க‌ல‌ந்த‌ன் என்றான் ஏண்டா அங்கே பாரு ஒருத்த‌னால‌ இய‌லா இன்னொருத்த‌ன் அங்க‌ ச‌த்தி எடுத்துக்கொண்டிருக்கிறான் அவ‌னுக‌ள்  கிட‌க்குறானுக‌ள் நீ வா கிவ்டை கொடுத்துட்டு போவோம் என்றான் ச‌ரியாடா இது. வேற‌ ஒரு இட‌த்துல‌ சேர்ந்து இன்னொருக்கா அடிச்சா ச‌ரியாகிடும் வா என்றான் ச‌ரி நேர‌ம் வேற‌ போக‌ கிவ்டை கொடுத்த் விட்டு நானும் ம‌னிசியும் வீட்ட‌ போய் இற‌ங்க‌ ம‌னிசி சொன்னாள் ஏங்க‌ அந்த‌ பொண்ணும்  பெரிசா வடிவில்லை ஆழும் கொஞ்சம் கொட்டான் , சாப்பாடும் ச‌ரி இல்லை மேக்க‌ப் வேற‌ ஓவ‌ர் என்ன‌ ( ந‌ம்ம‌ளுக்கு எத்த‌னை பேர் சொல்லியிருப்பார்க‌ளோ ம‌ன‌துக்குள் ஓடுகிற‌து )வீட்டுக்கு வீடு வாச‌ல் ப‌டிடி க‌த‌வை திற‌டி என்று போய் ப‌டுத்து உற‌ங்கி விட்டேன் .

 

ஒரு கல்யாண வீட்டில் நடந்த சம்பவம் நகைச்சுவை கதையாக‌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அப்பனுக்கு மகன் தப்பாம பொரந்திருக்கு

அடிக்கடி காதில் விழும்,

என்ன டீசன்டாக "அப்பாக்கு" என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு. கலியாண வீட்டுக்குப் போனாலும் ந்ண்பர்களுடன் சேர்ந்து பக்கத்தில உள் "பப்" புக்கு போய் தாலிகட்ட முன்னர் மண்டபத்திற்குப் போவது ஒரு பழக்கமாகத்தான் இருக்கு.. கலந்து மட்டையாக்கிற நண்பர்களுடன் இப்போதெல்லாம் கூட்டு வைப்பதில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில அடிக்கடி திருமண வீடுகளில் தானே நட்புக்களையும் சந்திக்கிறீங்கள் முனி.அதுவும் ஒரு பழக்க தோசம் தான்.?மற்றப்படி இந்த எக்ஸ்பிறஸ் எழுத்திற்கு அடிக்கடி நிறுத்த புள்ளி போட்டால் நன்று.குறையாக சொல்லவில்லை.மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

இல்ல‌ ம‌ச்சான் சும்மா பிய‌ர் தானே ச‌ரி பிய‌ர்ம‌ட்டும் தான் என்று போட்டு காரில் போய் பிய‌ரை  வாங்கி அடித்து கொண்டிருக்கும் போது அத‌ற்குள் மிக்ஸ்ஸிங்கை ஒருத்த‌ன் சேர்த்திருக்கிறான் என்று என‌க்கு தெரியாது என்ன‌ ம‌ச்சான் நாலு பிய‌ர் இன்னுமா முடிய‌ல இதோட‌ முடியிது முடியிது  என்று அடிச்சா ந‌ல்லா வெறி யோடு ம‌ண‌ மேடைக்கு வ‌ந்தோம்

ஆட்களுக்கு தெரியாமல்,  மிக்சிங் கலக்குறவங்களை... கூட்டு சேர்க்கப் படாது.
உதாலை கன  பின் விளைவுகள்... பல இடங்களில் ஏற்பட்டிருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

அடிக்கடி காதில் விழும்,

என்ன டீசன்டாக "அப்பாக்கு" என்று 

ஹாஹா நான் சும்ம கற்பனைக்கு அள்ளி விட்டது மீரா ஆனால் அப்ப இந்த வார்த்தையை கேட்டு  இருக்கிறன் tw_blush:

20 hours ago, கிருபன் said:

கதை நல்லாயிருக்கு. கலியாண வீட்டுக்குப் போனாலும் ந்ண்பர்களுடன் சேர்ந்து பக்கத்தில உள் "பப்" புக்கு போய் தாலிகட்ட முன்னர் மண்டபத்திற்குப் போவது ஒரு பழக்கமாகத்தான் இருக்கு.. கலந்து மட்டையாக்கிற நண்பர்களுடன் இப்போதெல்லாம் கூட்டு வைப்பதில்லை!!

அதென்னவோ உன்மைதான் போல் கிடக்கிறது கல்யாண வீட்டில் சில நண்பர்கள் சேர்ந்த்தால் கொண்டாட்டம் தான் நன்றி உங்கள் கருத்திற்கு கிருபன் அண்ண

புது பழக்கம் அதனால் மட்டையாவது சிலரின்  வழமை  

18 hours ago, யாயினி said:

ஊரில அடிக்கடி திருமண வீடுகளில் தானே நட்புக்களையும் சந்திக்கிறீங்கள் முனி.அதுவும் ஒரு பழக்க தோசம் தான்.?மற்றப்படி இந்த எக்ஸ்பிறஸ் எழுத்திற்கு அடிக்கடி நிறுத்த புள்ளி போட்டால் நன்று.குறையாக சொல்லவில்லை.மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.?

என்ன செய்யுற இவனுகளை சமாளிச்சு போக வேண்டியதா இருக்கிறது நான்  அவனுகளுக்கு சம்பல் தான் கன இடங்களில்  நினைப்பேன் முற்றுப்புள்ளி இட வேண்டும் என்று ஆனால் மறந்து போய் விடுவேன் ஒரு முசுப்பாத்திக்கு எழுதியது யாயினி  நன்றி

13 hours ago, தமிழ் சிறி said:

ஆட்களுக்கு தெரியாமல்,  மிக்சிங் கலக்குறவங்களை... கூட்டு சேர்க்கப் படாது.
உதாலை கன  பின் விளைவுகள்... பல இடங்களில் ஏற்பட்டிருக்கு. :grin:

ஓம் சிறி அண்ணை நானே கன பேரை அள்ளிக்கொண்டு அவங்க  வீட்டில ஏச்சு வேண்டி இறக்கியிருக்கிறேன் நான் இது வரைக்கும் குடித்தது இல்லை பாருங்கோ இவனுகளா ஆவங்க மனிசிமாருட்ட எனக்கு கெட்ட பேரு  ஏதோ நான் ஊத்திக்கொடுக்கிற மாதிரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசை யாரைத் தான் விட்டது. பாத்திட்டால் சோலி முடிந்தது.
    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.