Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

புரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்திய 'குடிமகன்!'


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரை: தான் வாங்கி வந்த புரோட்டா பார்சல் பஸ்ஸோடு போய் விட்டதால் ஆத்திரமடைந்த புரோட்டாக் கடை சப்ளையர், குடிபோதையில், பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அந்த பஸ்ஸை கடத்தி, அதை தாறுமாறாக ஓட்டியதில் ஒரு வீடு இடிந்தது, அதில் இருந்த ஒருவர் காயமடைந்தார்.

மதுரை பாலசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசரடி பகுதியில் புரோட்டாக் கடை ஒன்றில் சப்ளையராக இருக்கிறார். தினமும் வேலை முடிந்த பின்னர் பஸ்சில் வீட்டுக்குத் திரும்புவார். போகும்போது மறக்காமல் குடித்து விடுவார். கையோடு புரோட்டா, பூரியை பார்சல் கட்டி எடுத்துச் செல்வார்.

2 நாட்களுக்கு முன்பும் இதுபோல வேலையை முடித்து விட்டு, புரோட்டா பார்சலுடன், போதையை ஏற்றிக் கொண்டு பஸ் பிடிக்க வந்தார். கூடல் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தபோது தாதகவுண்டன்பட்டிக்குச் செல்லும் கடைசி நகரப் பேருந்து வந்தது.

பஸ்சில் ஏற கூட்டம் அலை மோதியது. இதைப் பார்த்த ராஜேந்திரன், பஸ்சில் அமர்ந்திருந்த ஒருவரிடம் ஜன்னல் வழியாக புரோட்டா பார்சலைக் கொடுத்து, அப்படியே வச்சிருங்கண்ணே, ஏரியா வந்ததும் வாங்கிக்கிறேன் என்று கூறியபடி பஸ் ஏற முயன்றார்.

ஆனால் அவர் ஏறுவதற்குள் பஸ் கிளம்பி விட்டது. இதனால் வெறி கொண்டவர் போலானார் ராஜேந்திரன். ஆசையாக கொண்டு வந்த புரோட்டா பஸ்ஸோடு போய் விட்டதே என்ற ஆத்திரம் அவருக்கு.

எப்படியும் பஸ்ஸைப் பிடித்து விட நினைத்த அவர் அங்கிருந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து பஸ்ஸை விரட்டினார். ஆனால் மதுரை பஸ் டவுன் ஆச்சே!.. ஒரு நிறுத்ததிலும் நிற்காமல் டிரைவர் பஸ்ஸை விரட்டினார்.

இதனால் ராஜேந்திரனின் ஆட்டோ துரத்தல் பலன் அளிக்கவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. எப்படியும் புரோட்டாவைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று முடிவு கட்டிய அவர், இந்தப் பஸ் எப்போது திரும்பி வரும் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், இது தாதகவுண்டன்பட்டி போய் விட்டு வழியில் பெரிய இலந்தைக்குளத்தில் நின்று விடும். அடுத்த நாள் காலைதான் கிளம்பி பெரியார் பேருந்து நிலையம் வரும் என்று கூறியுள்ளனர்.

அப்படியா என்று கேட்ட அவர், தலையில் துண்டைக் கட்டியபடி படு வேகமாக நடக்க ஆரம்பித்தார். பல கிலோமீட்டர் தூரம் நடந்து பெரிய இலந்தைக்குளம் வந்தார். அங்கு, தான் தவற விட்ட பஸ் அமைதியாக நிற்பதைப் பார்த்த அவர் ஆஹா, மாட்டினியா என்று போதையில் மகிழ்ந்தபடி பஸ்சுக்குள் ஏறி புரோட்டா பார்சலை தேடியுள்ளார். ஆனால் இருந்தால்தானே!

புரோட்டாவைக் காணாமல் திடுக்கிட்ட ராஜேந்திரன், டிரைவரும், கண்டக்டரும்தான் இதை சாப்பிட்டிருக்க வேண்டும் என்று நிøனைத்தார். ஆத்திரமடைந்த அவர் இந்தப் பஸ்சை என்ன செய்கிறேன் பார் என்று கூறியபடி பஸ்சைக் கிளப்பினார்.

தட்டுத் தடுமாறு பஸ்சை ஸ்டார்ட் செய்து விட்ட அவர் வேகமாக ஓட்டத் தொடங்கினார். பஸ் சப்தம் கேட்டு, அருகே தூங்கிக் கொண்டிருந்த டிரைவரும், கண்டக்டரும் வேகமாக ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் பஸ்சை ஓட்டத் தொடங்கிய ராஜேந்திரன் வேகமாக ஓட்டினார். ஆனால் ஓட்டத் தெ>யாததால், அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி பஸ்ஸை நிறுத்தினார். இதில் அந்த வீட்டின் ஒரு பகுதி உடைந்தது. தூங்கிக் கொண்டிருந்த துரைசாமி என்பவரும் அவரது குடும்பத்தினரும் லேசான காயமடைந்தனர்.

அப்போதுதான் ராஜேந்திரனுக்கு போதை தணிந்துள்ளது. என்ன நடந்தது என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்துள்ளார். பயம் நெஞ்சைக் கவ்வவே, வடிவேலு மாதிரி மிரண்டார்.

ஆஹா, தப்பு பண்ணிட்டோமோ என்று பயந்தபடி அங்கிருந்து ஓட முயன்றார்.

ஆனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து ராஜேந்திரனை வளைத்துப் பிடித்து ஆளுக்கு நாலு சாத்து சாத்தி அலங்காநல்லூர் போலீஸில் ஒப்படைத்தனர். சப்இன்ஸ்பெக்டர் வசந்தி ராஜேந்திரனைக் கைது செய்தார்.

காயமடைந்த துரைசாமியை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேந்திரன் செய்த ரவுசால், பெரிய இலந்தைக்குளமே பேஜாராகிப் போனது!

http://thatstamil.oneindia.in/news/2007/02/17/parota.html

சின்னப்பு,கு.சா,டண் எல்லோருக்கும் உங்கள் சக குடி மகன் செய்த சேட்டை சந்தோசத்தை தருமே :icon_idea::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் சிங்கன் புரோட்டாவை பிளைட்டுக்குள் தவறவிடவில்லை..

அதுசரி பஸ் றைவர் பஸ் திறப்பை பஸ்ஸிலை விட்டுட்டா நித்திரை கொண்டார்?? எங்கேயோ இடிக்கிறமாதிரி இல்லை?? :icon_idea::lol:

பி.கு: (புத்திசாலித்தனமான கேள்வியை டன் கேட்டுட்டாரே எண்டு எவரும் என்னை வாழ்த்தி தனி மடல் போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்) :angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனிமடல் என்ன தனிமடல் டன் ஒரு மாலையே போடலாம் . இப்படியெல்லாம் யோசிக்க உங்களால தான் முடியும் :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமடல் என்ன தனிமடல் டன் ஒரு மாலையே போடலாம் . இப்படியெல்லாம் யோசிக்க உங்களால தான் முடியும் :icon_idea:

சீ போங்க கறூப்ஸ்,, ரொம்பத்தான் என்னை புகழூறீங்க,, சரியான குறும்பு.. :angry: :angry: :angry: :angry: :angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீ போங்க கறூப்ஸ்,, ரொம்பத்தான் என்னை புகழூறீங்க,, சரியான குறும்பு.. :angry: :angry: :angry: :angry: :angry:

நல்லாத்தான் வழியிறீங்க :icon_idea::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் ஒரு பரோட்டா பாசலுக்காக இப்படி யாரும் செய்வார்களா? அனேகமா இது கு.சா தாத்தா இல்ல்லாட்டி டன் தாத்தாவா தான் இருக்கும், இவ்வளவு அறிவு பூர்வமா சிந்திக்க!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முயற்ச்சி திருவினையாக்கும். என்ன இது தெருவினையாப்போச்சு :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேளை நம்ம ஆதிவாசியாக இருக்குமோ சஜீவன் :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.