Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

17883823_10155197244671950_7121940480000

ஈஸ்டர் கவிதை

பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப
பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய்
ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன்
இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய்

நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால்
நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர்
வீணே வழிதவறிச் சென்றிடாமலே - எந்தன்
வௌ்ளாட்டு மந்தைக்குள்ளே வந்திணைகுவீர்

செய்திட்ட பாவெமெ்ல்லாம் கொண்டுவருவீர் - எந்தன்
சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர்
உய்ய மனந்திரும்பி வாருமன்பரே - நான்
உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன்

பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப்
பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர்
தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய
ஜீவன் உமக்குண்டு நீள் புவியிலே

ஆக்கினையை உங்களுக்காய் அனுபவிப்பேன் - செய்யும்
ஆட்களுக்கும் மன்னிப்பைப் பெற்றுக் கொடுப்பேன்
தூக்கிச் சிலுவையிலே தொங்க வைத்தாலும் - அந்தத்
துயர் பொறுப்பேன் உமக்காய் உயிர் துறப்பேன்

தட்டத் திறக்குமந்த அருட்கதவு - அங்கு
தாழ்பணிந்து கேட்பவர்க்கு இல்லை மறுப்பு
எட்டுத் திசையும் தேடும் இன்னலங்கில்லை - எங்கள்
இதயத்துள் உள்ள அதற் கீடிணையில்லை.

என்றுரைத்த இயேசு சுதன் ஆக்கினையினால் - ஏலே
ஏலே லாமாசபக் தானி எனவே
தன்துயரம் தாங்காமல் பரிதவித்தான் - அவன்
தவிப்பினில் பங்கெடுத்துத் துயர் பகிர்வோம்

இன்று சுதன் பட்டதுயர் நினைவில் வைத்தே - அதை
ஈஸ்டர் என இவ்வுலகம் அனுஷ்டிக்குதாம்
அன்று மனிதர் புரிந்த பாவமனைத்தும் - தாங்கி
அற்புதனின் அன்புலகில் நிலைநிற்குதாம்.

(ஏலே
ஏலே லாமாசபக் தானி - இறைவா இறைவா என்னையேன் படைத்தாய்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் அழக்கான வரிகள் தொடரட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்ட்டர் திருநாளில் அற்புதமான கவிதை கரு ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for images easter eggsஈஸ்டர் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für easter gif

ஈஸ்டர் கவிதை ஆக்கத்தினை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு, நன்றி கரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை விரும்பிக் கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி.  கவிதைக்கான எனது அடிக்குறிப்பில் ஒரு சிறு திருத்தம் -(ஏலே
ஏலே லாமாசபக் தானி - இறைவா இறைவா என்னையேன் கைவிட்டாய்).

Link to comment
Share on other sites

கவிதையும் காலமறிந்து எழுதினால் புவியில் வாழும்.

சுதன் பட்டதுயரை இவ்வுலகம் அனுட்டிக்கும் நாளில் அற்புதமான கவிதை, கருவே.... ! :100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.