Jump to content

பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்


Recommended Posts

பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்

 

பேஸ்புக் F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் திரையிடப்பட்டன. அதில் மனதில் நினைப்பதை பிழையின்றி டைப் செய்யும் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது.

 
பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்
 
கலிபோர்னியா:
 
பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள்
சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. 
 
இதைத் தொடர்ந்து F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனம் புதிய சாதனங்களை வெளியிட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இத்துடன் சில திட்டங்களுக்கான முன்னோட்ட வீடியோக்களும் திரையிடப்பட்டன. 
 
அவ்வாறு பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த சாதனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,
 
 
 
சரவுண்டு 360 கேமராக்கள்:
 
 
 
201704201100595288_fb%20360%20cam._L_sty
 
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய 360 டிகிரி டெவலப்பர் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. X24 மற்றும் X6 என அழைக்கப்படும் இந்த கேமராக்கள் பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டின் F8 நிகழ்வில் அறிமுகம் செய்த பேஸ்புக் சரவுண்டு 360 மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள்:
 
201704201100595288_fb%20vr%20ar%20glass.
 
ஆகுலஸ் நிறுனத்தின் தலைமை ஆராயாச்சியாளர் மைக்கேல் அப்ராஷ் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள் இடையேயான வித்தியாசம் குறித்து பேசினார். 'முழுமையான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி என்பது ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டையும் இயக்கும் திறன் கொண்டிருக்கும். இது அவ்வப்போது பயன்படுத்தப்படும் சாதாரண ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி போன்று இருக்காது', என அவர் தெரிவித்தார். 
 
இம்மாதிரியான தொழில்நுட்பம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரபலமாகி, வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    
 
பில்டிங் 8:
 
201704201100595288_fb%20dougan._L_styvpf
 
பேஸ்புக்கின் ரெஜினா டௌகன் அந்நிறுவனத்தின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை ஆகும். மனித மூளையில் அனாத்து செயல்களை மேற்கொள்ள உதவும் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிறிய சிப்செட்கள், மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது. 
 
அதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் டைப் செய்வதை விட ஐந்து மடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முதற்கட்டமாக நிமிடத்திற்கு 8 வார்த்தைகளை டைப் செய்ய முடியும் என டௌகன் தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/20110046/1080862/AR-glasses-brain-typing-skin-listening-showcased-at.vpf

Link to comment
Share on other sites

கணினிகளை மூளையால் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் - ஃபேஸ்புக் உருவாக்குகிறது

 
 
''ஒருநாள், வெகுதூரம் அல்ல, எனக்குத் தெரியாத மாண்டரின் மொழியில் கூட யோசித்து, அதை அதே தருணத்தில் உங்களால் ஸ்பானிஷ் மொழியில் உணர முடியும்,'' என்கிறார் டூகன்.படத்தின் காப்புரிமைFACEBOOK Image caption''ஒருநாள், வெகுதூரம் அல்ல, எனக்குத் தெரியாத மாண்டரின் மொழியில் கூட யோசித்து, அதை அதே தருணத்தில் உங்களால் ஸ்பானிஷ் மொழியில் உணர முடியும்,'' என்கிறார் டூகன்.

கணினிகளை நேரடியாக நமது மூளையின் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க முயன்றுவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களை ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தைகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் ''அமைதியான பேச்சு'' என்ற மென்பொருளை உருவாக்கி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆரம்ப நிலையில் உள்ள இந்தத் திட்டத்துக்கு, எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல், மூளை அலைகள் எனப்படும் மூளையில் உள்ள மின் தூண்டுதல்களை கண்டறிய புதிய தொழில்நுட்பம் தேவைப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரெஜினா டூகன், '' இது மக்களின் மூளையில் தோன்றும்

சீரற்ற எண்ணங்களை கண்டுபிடிப்பது தொடர்பானது அல்ல'', என்று தெளிவுபடுத்தினார்.

ஆக்குலஸ் மெய்நிகர் கருவிகள் இந்த மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன.படத்தின் காப்புரிமைREUTERS Image captionஆக்குலஸ் மெய்நிகர் கருவிகள் இந்த மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அவர் மேலும் கூறுகையில், ''உங்களுடைய மூளையில் தோன்றும் ஏரளாமான எண்ணங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள நீங்கள் முடிவு செய்யலாம்'' என்று கூறினார்.

''அந்த வார்த்தைகளின் பொருள் குறித்து அறிவது பற்றி நாங்கள் பேசவில்லை.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் 8 ஆம் கட்டடம் எனப்படும் ஃபேஸ்புக்கின் வன்பொருள் ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவராக இருப்பவர் டூகன். இலக்கை அடையும் விதமாக வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் உருவாக்கும் நோக்கில் 60க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களை இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

''நம் மூளைகள் ஒவ்வொரு விநாடிக்கும் சுமார் நான்கு உயர் வரையறைக் காட்சி அமைப்பு கொண்ட திரைப்படங்களை இணையத்தில் ஒளிபரப்பும் அளவிற்கு போதிய தரவுகளை உருவாக்குகின்றன'', என்று மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார்.

''தற்போது ஒரு கைப்பேசி மூலம் நீங்கள் தட்டச்சு செய்வதைவிட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் மூளையிலிருந்து நீங்கள் வைத்திருக்கும் கணினியில் தட்டச்சு செய்யும் அமைப்பு முறையை உருவாக்க நாங்கள் முயன்று வருகின்றோம்``, என்றார் அவர்.

மார்க் சக்கர்பெர்க்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநம் மூளைகள் ஒவ்வொரு விநாடிக்கும் சுமார் நான்கு உயர் வரையறைக் காட்சி அமைப்பு கொண்ட திரைப்படங்களை இணையத்தில் ஒளிபரப்பும் அளவிற்கு போதிய தரவுகளை உருவாக்குகின்றன : மார்க் சக்கர்பெர்க்

''இறுதியாக, இதை, உடலில் அணிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை போன்று நாங்கள் மாற்ற விரும்புகிறோம். அப்போதுதான் போதுமான அளவில் அதை உற்பத்தி செய்ய முடியும்``, என்றார் சக்கர்பர்க்.

மக்கள் தோல் மூலம் சப்தங்களை கேட்க அனுமதிக்கும் தொழில்நுட்பம் சான் ஜோஸில் நடைபெற்ற நிறுவனத்தின் மேம்பாட்டாளர் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பிற தொழில்நுட்பங்களில் ஒன்று.

பிரெய்ல் முறை போன்றதான இந்த தொழில்நுட்பம், தோலில் உள்ள அழுத்தப்புள்ளிகள் மூலம் தகவல்களை அனுப்புகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தற்போதுள்ள சாத்தியமான தொழில்நுட்பங்களை காட்டிலும் பலமடங்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் முன்னேறியுள்ள ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி திட்டமிடுகிறது.படத்தின் காப்புரிமைREUTERS Image captionஃபேஸ்புக் நிறுவனம் தற்போதுள்ள சாத்தியமான தொழில்நுட்பங்களை காட்டிலும் பலமடங்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் முன்னேறியுள்ள ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி திட்டமிடுகிறது.

''ஒருநாள், வெகுதூரம் அல்ல, எனக்குத் தெரியாத மாண்டரின் மொழியில் கூட யோசித்து, அதை அதே தருணத்தில் உங்களால் ஸ்பானிஷ் மொழியில் உணர முடியும்,'' என்கிறார் டூகன்.

இந்த அறிவிப்புகளால், ஃபேஸ்புக் நிறுவனம் தற்போதுள்ள சாத்தியமான தொழில்நுட்பங்களை காட்டிலும் பலமடங்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் முன்னேறியுள்ள ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி திட்டமிடுகிறது.

http://www.bbc.com/tamil/india-39656327

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.