Jump to content

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss


Recommended Posts

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா? #BiggBossTamil

 
 

ganja karuppu

100 நாள்கள், 14 பிரபலங்கள், 30 கேமராக்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கமலை வைத்து விஜய் டிவி விளம்பரம் செய்யத் தொடங்கியதில் இருந்து, இந்த ஷோ எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ‘அந்த கலாசாரம் நமக்கு ஒத்து வராது, பின்ன எப்படி இதை தமிழில் எடுக்கமுடியும்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் டிவி தரப்பு, ‘இந்த நிகழ்ச்சி எந்த விதத்திலும் நம் கலாசாரத்திற்கு எதிராக இருக்காது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐடியாவை மட்டும்தான் தமிழுக்கு கொண்டுவருகிறோம்’ என்றார்கள். 

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்த பிக் பாஸ், ஒளிபரப்பு ஆனதில் இருந்தும் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 14 பிரபலங்கள் என்று சொல்லிவிட்டு 15 பிரபலங்களை அழைத்து வந்தது, அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியையும் ஒரு பிரபலமாக அழைத்து வந்தது, ஸ்ரீ - ஜூலி மீம்ஸ், கஞ்சா கருப்பு - பரணி சண்டை என அனைத்துமே வைரல் ஆனது. 

ganja karuppu

100 நாள்களில் 15 நாள்கள் முடித்திருக்கும் நிலையில், இதுவரை 4 நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்ரீ உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும், பரணி போட்டியின் விதிமுறையை மீறியதாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அனுயாவும், கஞ்சா கருப்பு மட்டும்தான் முறையாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சரி, இது எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இனி தெரியாததை சொல்கிறேன். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஸ்ரீ,அனுயா இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றிருக்கும் நிலையில், கஞ்சா கருப்புவை மட்டும் விஜய் டிவியினர் சென்னையிலேயே ரூம் எடுத்து தங்கவைத்துள்ளனர். அது ஏன்? நேற்றைய நிகழ்ச்சி பார்த்த பலருக்கும் இதற்காக விடையை யூகிக்க முடியும்.

போட்டியின் விதிமுறையை மீறியதால் பரணி வெளியேற்றப்படும் விஷயம் 2 நாள்களுக்கு முன்பே பிக் பாஸ் டீமுக்கு தெரியும். அதனால்தான் கஞ்சா கருப்பை சென்னையிலேயே தங்க வைத்துள்ளனர். வாரம் ஒரு நபர் என வெளியேற்றுவது தான் நிகழ்ச்சியின் விதிமுறை. ஆனால், இரண்டு வாரங்களில் 4 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால், கண்டிப்பாக இன்னும் ஆட்கள் இருந்தால்தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதற்காக புதிதாக ஆட்களை எடுக்க முடியாது. அதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்களில் யாரையாவது தான் மறுபடியும் அழைக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், தற்போது வீட்டிற்குள் இருக்கும் 11 நபர்களுக்கும் கஞ்சா கருப்பை பிடித்திருக்கிறது. அவரின் வெளியேற்றம் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்துள்ளது. எனவே, அவர்களின் விருப்பப்படி மீண்டும் கஞ்சா கருப்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அழைக்கப்படலாம். அதுமட்டுமில்லாமல், கஞ்சா கருப்பு வெளியேறும் போது கமலிடம், ’என்னை மறுபடியும் நிகழ்ச்சிக்குள் அனுப்பமுடிந்தால் அனுப்புங்கணே’ என்று சொல்லி விட்டு தான் சென்றார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் கஞ்சா கருப்பு, மக்களின் ஓட்டிங் இல்லாமல் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்கு  ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். 

 

இதை உறுதிசெய்ய விஜய் டிவியினரை தொடர்பு கொண்டபோது, “கஞ்சா கருப்பு மக்களின் ஓட்டுகள் மூலமாகத்தான் ரீ-என்ட்ரி கொடுக்க முடியும். அதுவும் உடனே செய்ய முரியாது, சில வாரங்கள் ஆகலாம்’ என்றனர். விஜய் டிவியினர் ஏற்பாடு செய்து கொடுத்த அறையில்தான் கஞ்சா கருப்பு இன்னும் இருக்கிறாரா என தெரிந்துக்கொள்ள அவரை தொடர்பு கொண்டால், “ஆச்சி இறந்துபோச்சுணே, அதுனால ஊருக்கு வந்திட்டேன்’’ என்றார். இன்னும் சில வாரங்களில் கஞ்சா கருப்பின் ரீ-என்ட்ரிக்காக ஓட்டிங் நடத்தப்பட்டு அவர் பிக் பாஸ் வீட்டிற்கும் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென வெளியேறிய பரணி: எழும் கேள்விகள்!

 

 
baharani9090xx

 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. நன்றி மக்களே என்று விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது. 

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் பரணி அரங்கை விட்டு வெளியேறும் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அவர் வெளியேறும் விதம் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. 

குழுவில் உள்ள அனைவரும் தன்னை ஒதுக்குவதால் பிக் பாஸை விட்டு வெளியேற பரணி முடிவு செய்தார். இதனால் அவர் பிக் பாஸ் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதில் ஏதும் வராததால் அவர் சுவரைத் தாண்டி வெளியேற முடிவெடுத்தார். 

தன்னை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்றும் கேமரா முன்பு மிரட்டினார். ஆனால் பதில் ஏதும் வராததால் மிகவும் கடினப்பட்டுப் பல தடைகளைத் தாண்டி அரங்கை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அதாவது சுவரேறித் தாண்ட முயற்சி செய்தார். மிகவும் உயரமான சுவர் என்பதால் அவரால் அவ்வளவு எளிதில் தாண்டமுடியவில்லை. இதனால் பார்வையாளர்களிடையே பதைபதைப்பு ஏற்பட்டது.

பிக் பாஸ் அரங்கில் இருந்த மற்றவர்கள் யாரும் இதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. டிஆர்பி ரேட்டிங்குக்காக நாடகம் ஆடுகிறார் என்று பரணியை விமரிசனம் செய்து அதே இடத்தில் நகராமல் அமர்ந்திருந்தார்கள். இதனால் நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

பரணியின் இந்த விபரீத முயற்சியில் நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

அவரே சொன்னதுபோல மேலே இருந்து கீழே குதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவருடைய உயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் விஜய் டிவி நிர்வாகம் பரணியின் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்லும் என்று பார்வையாளர்களை எண்ணவைக்கும் அளவுக்கு நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது. 

மேலும் அவர் சுவரைத் தாண்டி வெளியேற முயற்சி செய்ததும் ஆபத்துக்குரியதாக இருந்தது. அவர் கால் இடறி கீழே விழுந்திருந்தால் பலத்த அடி ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் அவருடைய
முயற்சியைத் தடுக்க குழுவினரோ பிக் பாஸ் நிர்வாகமோ முயற்சி செய்யவில்லை. 

தன் பையில் இருந்த மைக்கின் மூலம் பரணி தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால் கடைசியில் அவரைக் கீழே இறங்கும்படி கட்டளையிடப்பட்டது. பிறகு, விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் பரணி. 

இதனால் இக்காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதைனையொட்டி பல கேள்விகள் சமூகவலைத்தளங்களில் எழுப்பப்பட்டன. 

டிஆர்பி ரேட்டிங்குக்காக ஒருவருடைய உயிரிலும் வாழ்க்கையிலும் தொலைக்காட்சிகள் விளையாடக்கூடாது என்பதுதான் சமூகவலைத்தளத்தில் பலருடைய கருத்தாக இருந்தது. தன்னைக் காப்பாற்ற முயற்சி செய்யாதவர்களை விட்டு அவர் வெளியேறியது சரியான முடிவு என்றும் கூறப்பட்டது. 

மேலும் கடந்த வாரத்தின் தலைவியாக இருந்த காயத்ரி ராகுராம், பரணியின் செயலைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் பிக் பாஸ் நிர்வாகத்திடமும் முறையிடவில்லை. மற்ற உறுப்பினர்கள் போல அவரும் அமைதியாகவே இருந்தார். இதனால் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டாலும், சுவற்றில் ஏறும்போதோ, இறங்கும்போதே பரணி கீழே விழுந்திருந்தாலோ அல்லது வேறு ஏதாவது செய்திருந்தாலோ என்ன ஆகியிருக்கும்? அது நிகழ்ச்சியையே பாதித்திருக்குமே என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும் பரணி, நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடித்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் கூறினார். இது பரணி மீது தேவையற்று அவதூறு கூறுவதுபோல உள்ளது. இது தொடர்புடைய காட்சிகள் முன்பு காண்பிக்கப்படாததால் காயத்ரியின் இந்த அச்சம் மேலும் குழப்பத்தையே உண்டுபண்ணியது.

இதுதவிர, பிக் பாஸ் தொடர்புடைய மீம்களில் ஜூலிக்குக் கையில் காயம் ஏற்பட்டது, பரணி சுவரேறிக் குதிப்பது போன்ற காட்சிகள் மற்ற மொழிகளில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளதால், தமிழ் பிக் பாஸில் நடப்பதெல்லாம் முன்பே திட்டமிடப்பட்டு அரங்கேறிய செயலா என்கிற சந்தேகமும் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

வழக்கமாக வார இறுதியில் இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது போல கமலின் இருநாள் நிகழ்ச்சிகள் அமையும். அதேபோல பரணி தொடர்புடைய சர்ச்சைகளுக்கு கமல் வழியாக விஜய் டிவி நிர்வாகம் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/11/bigbosstamil-2735498.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த சர்ச்சை: கமல் விளக்கம்

 
kamalhasanபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர்பாக எழுப்பட்ட சர்ச்சைகள் குறித்து அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கும் நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்து கடுமையான வாத பிரதிவாதங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி கலாசார சீரழிவை ஏற்படுத்துவதாகக்கூறி இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் இன்று காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டுமென அவர்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த நிகழச்சியில் பங்கேற்ற காயத்ரி ரகுராம், மற்றொருவரின் செயல்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, "சேரி பிஹேவியர்" என்று கூறியதும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரையில் ஓர் அமைப்பு புகார் கூறியது.

இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அவரைக் கைது செய்ய வேண்டுமெனப் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேட்டபோது, "சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும். சட்டத்திற்கு நியாயம் உண்டு. சட்டம் என்னைப் பாதுகாக்கும். நீதி மீது நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல்வேறு தொலைக்காட்சிகளில் 11 வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் இந்தி தெரிந்திருந்தால் அது தெரிந்திருக்கும் என்றும் கூறினார். கன்னடத்தில்கூட இந்நிகழ்ச்சி வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முத்தக்காட்சியில் நடித்தபோது

கெட்டுப்போனதா கலாசாரம்?

மேலும் சட்டம் என் கையில் படத்தில் தான் முத்தக் காட்சியில் நடித்தபோது கெட்டுப்போகாத கலாசாரம் தற்போது கெட்டுப்போகாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தன்னுடைய கறுப்புச் சட்டை காரணமாக இருக்கலாம் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

மகள் அக்ஷராவுடன் கமல்ஹாசன் (கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமகள் அக்ஷராவுடன் கமல்ஹாசன் (கோப்புப்படம்)

இம்மாதிரியான பிக் பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு தேவையா என கேள்வி எழுப்பப்பட்டபோது, கிரிக்கெட் எந்த அளவுக்கு தேவையோ அதே அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தேவை என்று குறிப்பிட்டார் கமல்.

சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை தான் காயத்ரி ரகுராமிற்கு சொல்லிக்கொடுத்து, அவர் சொல்லியிருந்தால் தான் அதற்கு பதில் கூறியிருப்பேன் என்றும் கமல் தெரிவித்தார்.

சைவமும் மதமும்

"நீங்கள் சைவமாக இருந்துகொண்டு, இப்படி கோபப்படலாமா?" என்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் கஞ்சா கறுப்புவிடம் கமல் கேட்டது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

"சைவம் என்பது இங்கு மட்டும்தான் மதத்தோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது" என்று கூறினார் கமல்.

 

ஆமிர் கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜயதே போன்ற ஒரு நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கியிருக்கலாமே என்று கேட்டபோது, தன் வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பதாகவும் தன் நற்பணி மன்றங்கள் மூலம் அதைச் செய்து வருவதாகவும் கமல் கூறினார்.

சமூகத்தில் ஜாதி என்று குறிப்பிட்டுப் பேசுவதை நீக்க முடியுமா என்று கேள்வியெழுப்பிய கமல், அப்படி இருக்கும் நிலையில்தான், நிகழ்ச்சிகளில் ஒவ்வாத அம்சங்களில் நீக்க வேண்டுமென நாம் கோருவதாகக் கூறினார்.

விளம்பரம், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதைச் செய்தாலும் அதை தான் விருப்பத்துடனேயே செய்வதாகவும் பணம் வாங்காமல் அதைச் செய்கிறேன் என்று சொன்னால் அரசியல்வாதிகள் பேசுவதைப் போலாகிவிடும் என்றும் கூறினார்.

http://www.bbc.com/tamil/india-40588279

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். 

பிரபலங்கள் என்று போட்டிருக்கினம் ஆனால் எனக்கு உதுல இரண்டு பெயரைத்தான் தெரியும் ,கஞ்சா கறுப்பு,மற்றது நமீதா.....

நான் நினைச்சன் ரம்பா ,மீனா,நயந்தாரா,குஸ்பு வருவினம் என்று ....அட்லிஸ் ஷிறி தேவி:10_wink:

Link to comment
Share on other sites

புத்தன் நல்ல பிள்ளை இவர்களை தெரிந்து இருக்காது.. ஆனால் உந்த jilக்கு தெரிந்து இருக்கும்..tw_blush:

54 minutes ago, putthan said:

 

பிரபலங்கள் என்று போட்டிருக்கினம் ஆனால் எனக்கு உதுல இரண்டு பெயரைத்தான் தெரியும் ,கஞ்சா கறுப்பு,மற்றது நமீதா.....

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நவீனன் said:

புத்தன் நல்ல பிள்ளை இவர்களை தெரிந்து இருக்காது.. ஆனால் உந்த jilக்கு தெரிந்து இருக்கும்..tw_blush:

 

அவன் ஒரு ஊத்தை வாலி(ளி) ....நிச்சயம்  தெரிந்திருக்கும்..:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

 

பிரபலங்கள் என்று போட்டிருக்கினம் ஆனால் எனக்கு உதுல இரண்டு பெயரைத்தான் தெரியும் ,கஞ்சா கறுப்பு,மற்றது நமீதா.....

நான் நினைச்சன் ரம்பா ,மீனா,நயந்தாரா,குஸ்பு வருவினம் என்று ....அட்லிஸ் ஷிறி தேவி:10_wink:

 

சரோஜாதேவி, கேஆர் விஜயா , லட்சுமி எண்டு கொஞ்சப்பேரையும் போட்டிருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்குமெல்லே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சரோஜாதேவி, கேஆர் விஜயா , லட்சுமி எண்டு கொஞ்சப்பேரையும் போட்டிருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்குமெல்லே :cool:

அண்ணோய் அதுகளை ரசிக்க ஏலாது இப்ப...

Link to comment
Share on other sites

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியா வெல்வார்: நடிகர் பரணி கணிப்பு!

 

 
bb_bharani_oviya1

 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. நன்றி மக்களே என்று விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் பரணி வெளியேற்றப்பட்டார். குழுவில் உள்ள அனைவரும் தன்னை ஒதுக்குவதால் பிக் பாஸை விட்டு வெளியேற பரணி முடிவு செய்தார். இதனால் அவர் பிக் பாஸ் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதில் ஏதும் வராததால் அவர் சுவரைத் தாண்டி வெளியேற முடிவெடுத்தார்.

தன்னை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்றும் கேமரா முன்பு மிரட்டினார். ஆனால் பதில் ஏதும் வராததால் மிகவும் கஷ்டப்பட்டுப் பல தடைகளைத் தாண்டி அரங்கை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அதாவது சுவரேறித் தாண்ட முயற்சி செய்தார். மிகவும் உயரமான சுவர் என்பதால் அவரால் அவ்வளவு எளிதில் தாண்டமுடியவில்லை. இதனால் பார்வையாளர்களிடையே பதைபதைப்பு ஏற்பட்டது.

பிக் பாஸ் அரங்கில் இருந்த மற்றவர்கள் யாரும் இதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. டிஆர்பி ரேட்டிங்குக்காக நாடகம் ஆடுகிறார் என்று பரணியை விமரிசனம் செய்து அதே இடத்தில் நகராமல் அமர்ந்திருந்தார்கள். இதனால் நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பரணியின் இந்த விபரீதமுயற்சியால் நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக பரணி, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பரணியை கமல்ஹாசன் நேற்று பேட்டி கண்டார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் வெல்வார் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பரணி, நான் வெளியேறியபோது, பை பரணி என்று சொன்னவரே பிக் பாஸ் வெற்றியாளர் என்றார். இதன் அடிப்படையில் அவர் ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராகக் கணித்துள்ளார். 

இதையடுத்து சமூகவலைத்தளத்தில் பரணிக்கு அதிகப் பாராட்டுகள் குவிந்துள்ளன. ஏற்கெனவே ஓவியாவுக்கு சமூகவலைத்தளங்களில் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் பரணியும் ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசியதால் அவரைப் பாராட்டி மீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

bb_baharani.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/17/bigboss-oviya-bharani-2738962.html

Link to comment
Share on other sites

“கமல் சார் ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை” பிக் பாஸ் பற்றி ஆர்த்தி

 

ஒட்டுமொத்த இந்தியத் தொலைக்காட்சி உலகினையும் கிடுகிடுக்க வைக்கும் ஹிட் ஷோ ‘பிக் பாஸ்’. ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்பது தான் பலரின் ஃபேவரைட் டயலாக்.  பிக் பாஸூக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு என்றாலும், மறுபக்கம் கோடிகளில் லைக்ஸூம் ஓட்டும் குவிகிறது. 

ஆர்த்தி பிக் பாஸ்

கடந்த வாரத்திற்கான நிகழ்சியில் நான்கு பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். ஓவியா, வையாபுரி, ஜூலி மற்றும் ஆர்த்தி. இந்த நான்கு பேரில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்ற பதற்றம் அவர்களுக்கு மட்டுமல்லாமல், டிவி பார்க்கும் ரசிகர்களுக்குமே இருந்தது. இந்நிலையில் அதிக ஓட்டுடன் லீடிங்கில் இருப்பவர் ஓவியா. அந்த அறிவிப்பை கமல் சனிக்கிழமை நிகழ்ச்சியிலேயே சொல்லிவிட்டார்.  வையாபுரி, ஜூலி மற்றும் ஆர்த்தி இந்த மூவரில் யார் வெளியேறப்போகிறார் என்ற ரகசியமும் நேற்று உடைந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அப்பாவின் ஆசைக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், நிச்சயம் நூறு நாள் இருந்து டைட்டிலை வெல்லுவேன் என்றும் கூறியவர் ஆர்த்தி. இருபது நாள்களில் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களுக்கும் நிச்சயம் பெரிய ஏமாற்றம்தான். 

இதுகுறித்து ஆர்த்தியிடம் பேசலாம் என்று அவரை அழைத்தேன். தந்தைக்காகவே ஸ்பெஷல் காலர் டோன் வைத்திருக்கிறார் ஆர்த்தி. 

‘எப்படி இருக்கீங்க?’ என்றதுமே பேசத்தொடங்கிவிட்டார். “சூப்பரா இருக்கேன்” என்றவர் டக்கென்று, “ஆனா, பிக் பாஸ் பத்தி எதுவுமே சொல்லக்கூடாது. என்னைப் பத்திய பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே நீங்க டிவி, ஹாட் ஸ்டாரில் பார்க்குறீங்க. எல்லோருமே நல்லா ட்ரோல் பண்றாங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்லுறது” என்று கேஷூவலாகச் சிரிக்கிறார் ஆர்த்தி. 

“பிக் பாஸூடன் எனக்கு அக்ரீமென்ட் இருக்கு. அதுனால நான் இப்போதைக்கு எதுவுமே பேச முடியாது. வீட்டுக்கு வந்துட்டேன்.  என்னைப் பற்றி மக்களுக்கும் தெரியும். என் புருஷனுக்கும் தெரியும். 10 கொலை பண்ணிட்டு, புழல்ல இருந்துட்டு வந்த மாதிரி நினைக்காதீங்க. டிவி நிகழ்ச்சிக்குத்தான் போனேன்.” ஜாலியாக சிரிக்கிறார் ஆர்த்தி. 

ஆர்த்தி

டிவியில் நாங்க பார்க்காத விஷயம்... கமல் சார் உங்களிடம் சொன்ன விஷயம் ஏதும்? 

“டிவியில் பார்க்காத விஷயத்தைக் கேட்காம இருக்குறதுதானே நல்லது? கமல் சார் எனக்கு ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை. எந்த கவலையும் எனக்கு இல்லை. ஆனால் என்னை வெச்சி ட்வீட்டு, மீம்னு நெட்டுல செய் செய்னு செய்துருக்காங்க. பார்த்தேன். இருந்தாலும் நான் எதுவுமே பேசக்கூடாது. 

உங்களின் அடுத்தகட்ட ப்ளான் என்ன?  

சில படங்கள் கமிட்டாகியிருக்கேன். அவற்றைத் தவிர சில திட்டங்களும் இருக்கு. அடுத்தடுத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து இயங்குவேன்.  சினிமா தவர வேற எங்க போய்ட போறேன்?  விஜய் டிவியிலும் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துப்பேன்.

 

அதுமட்டுமல்லாம, பிக் பாஸ் பற்றி நிறைய விஷயங்கள் பேச இருக்கு. ஆனா இந்த 100 நாள் முடியற வரைக்கும் எதுவுமே நான் பேசக்கூடாது. அந்த நிகழ்ச்சி  பற்றி நூறு விஷயங்கள் இருக்கு. நூறு நாள் முடிஞ்சதும் நூறு விஷயங்கள் பகிர்ந்துக்குறேன்.” என்று உற்சாகத்துடன் முடித்தார் ஆர்த்தி.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/95766-actress-arthi-says-about-bigg-boss.html?artfrm=cinema_most_read

Link to comment
Share on other sites

ஓவியாவுக்கு ஓட்டுகள் குவிவதுக்குக் காரணமான உளவியல் இதுதானா ? #BiggBossTamil

சர்ச்சைகள் தாண்டி ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்'. கடந்த மூன்று வாரங்களாக நாளொரு சர்ச்சை, வாரம் ஒரு திருப்பம் என `பிக் பாஸ்' மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே அன்புமணி முதல் சராசரி  மனிதன் வரை மற்றவர்களின் கவன ஈர்ப்புக்கு பிக் பாஸ் பெயரைத்தான் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் மட்டுமே சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி.  டீக்கடைகளில், அலுவலக கேன்டீன்களில், அலுவல்ரீதியான மீட்டிங்குகளில், மால்களில், கடற்கரைகளில், மீம்களில், சமூக வலைதளங்களில் என எல்லா இடங்களிலும் இப்போது `பிக் பாஸ்'தான் பேசுபொருள். இந்த நிகழ்ச்சிகுறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. `பிரபலங்களின் மறுபக்கத்தை, நேரம், இடம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் மனித மனநிலையைப் படம்பிடித்துக் காட்டும் நிகழ்ச்சி இது' எனச் சொல்லப்பட்டாலும், `கலாசாரச் சீரழிவை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் அந்தரங்கங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது' எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்ப்பவர்களும் உண்டு. 

எது சரி, எது தவறு என்ற விவாதத்துக்குச் செல்வதற்கு முன், இப்போதைக்கு இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்க்கும் அநேக மக்களிடையே பேசுபொருளாகியிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மூன்று வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் `பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஐந்து பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் / வெளியேறியிருக்கிறார்கள். கடந்த மூன்று வாரங்களில், ஓவியாவும் ஜூலியும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டியவர்களின் பட்டியலில் இரண்டு முறை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த இரண்டு முறையும் மக்களின் ஓட்டுகளால் இவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக `பிக் பாஸ்'  நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இருமுறையும் ஓவியாவே அதிக ஓட்டுகள் பெற்று காப்பாற்றப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. ஆன்லைனில் விகடன்.காம் நடத்திய சர்வேயில்கூட ஓவியாவுக்கு லைக்ஸ் குவிந்தன. 

`ஓவியா, அழகாக இருக்கிறார்; மழையில் ஆடுகிறார்; கேமரா முன்பு ஏதாவது செய்கை செய்துகொண்டே இருக்கிறார். அதனால்தான் அவருக்கு அதிகம் ஓட்டுகள் வருகின்றனபோல' எனக் கவலைப்படுகிறார் காயத்ரி ரகுராம். ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி ஓவியாவின் பிஹேவியர்தான் அவருக்குப் பெரும் ரசிகப் பட்டாளத்தைத் தந்திருப்பதாகத் தெரிகிறது. 

இதுவரை நடந்த முடிந்த மூன்று வார நிகழ்ச்சிகளில் ஓவியா, மற்றவர்களைவிட எந்த வகையில் அதிகக் கவனம் ஈர்த்திருக்கிறார்? 

1. கடுமையாக எதிர்க்காதே:

தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவதில்லை. நாசூக்காகத் தெரிவித்துவிடுகிறார். `எனக்கு டிஃப்ரென்ட் ஒப்பினியன் இருக்கு' எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். தன் பேச்சை யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லையெனில், அவர்களிடம் மீண்டும் சென்று தன் கருத்துக்கு நியாயம் கற்பிப்பதெல்லாம் கிடையாது. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுகிறார். 

2. எதிராளியை உருவாக்கிக்கொள்ளாதே:

ஓர் இடத்தில் ஒருவன் ஹீரோ ஆக வேண்டுமென்றால், அங்கே வில்லனும் இருக்க வேண்டும். ஓவியா வேண்டுமென்றே யாரையும் எதிராளியாக உருவாக்கிக்கொள்வதில்லை. தன்னை எதிரியாக ஒருவர் கருதினாலும் அதுகுறித்து அவர் அலட்டிக்கொள்வதில்லை; வேண்டுமென்றே யாரிடமும் வம்பிழுப்பதுமில்லை. 

3. பாதிக்கப்பட்டவனிடம் பேசுதல்:

யாரை மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒதுக்குகிறார்களோ, அவர்களிடம் சென்று இவர் மட்டுமே ஏதாவது பேசுகிறார். அதே சமயம் ஒதுக்கப்பட்ட நபரிடம் சென்று அவர்களின் கோபத்தை மேலும் தூண்டிவிடுமாறு எதையும் சொல்வது கிடையாது. அறிவுரைகளையும் அளிப்பது கிடையாது. மற்றவர்களிடம் பழகுவதைப் போன்ற அதே மனநிலையில் பழகுகிறார். தனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதற்காகக் கூட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நபர் நண்பனாகவே இருந்தாலும்கூட, அமைதிகாப்பவர்கள்தான் இங்கே அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யார் பாதிக்கப்பட்டாலும் சகஜமாக ஓவியா பேசுவது மக்களுக்குப் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. `கூட்டத்தில் யாரும் பெரியவர் கிடையாது. எல்லோரும் சமம்தான்' எனக் கருதும் ஒருவராலும் எதற்காகவும் பயப்படாத சுயநலமற்றவர்களால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்பது தெளிவு. 

4. லிவ் த மொமென்ட்:

வீட்டில் அதிகபட்சம் இருக்கப்போவது நூறு நாள்கள். எவ்வளவு நாள்கள் இருக்கிறோமோ அப்போது அங்கே கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறார். `ஊரெல்லாம் மழை பெய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், வீட்டுக்குள் சென்று அடைந்துகொள்கிறார்கள்' என மக்களின் மனநிலை பற்றிச் சொன்னார் கமல்ஹாசன். ஓவியாவோ மழை பெய்தால் அதில் நனைகிறார்; ஆடுகிறார். எந்த நிகழ்வையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அப்போதைய நிமிடத்தை சந்தோஷமாகக்  கழிக்கவே விரும்புகிறார். காதல் வந்தால் பட்டெனச் சொல்லிவிடுகிறார். டாஸ்க் தரப்பட்டாலும் அதையும் மகிழ்ச்சியாகவே செய்கிறார்.

5. புறணி பேசாமை:

எந்தக் காரணத்துக்காகவும் தொடர்ந்து ஒருவரைப் பற்றி புறணி பேசுவதைத் தவிர்த்துவருகிறார் ஓவியா. அதே சமயம் எவரின் மனதையும் காயப்படுத்தும்விதமாகப் பேசுவதையும் தவிர்க்கிறார். எந்தக் காரணத்துக்காகவும் மற்றவர்களைப் பற்றி கீழ்த்தரமாகப் பேசுவது, வன்மத்துடன் பேசுவது போன்றவற்றையும் செய்வதில்லை. 

இதுபோன்ற காரணங்களால், மக்களுக்கு ஓவியாவைப் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் உண்மைத்தன்மை மர்மமாகவே இருக்கும் நிலையில், இப்போதைக்கு ஓவியாவின் இந்த பிஹேவியர் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே கருதவேண்டியதிருக்கிறது. மனித மனம் என்பது அடிக்கடி மாறக்கூடியது. இங்கே நிச்சயம் ஓவியாபோல எல்லாரும் இருக்க முடியாது. ஆனால், அவரைப்போல எல்லோரும் இருக்க விரும்பலாம். யதார்த்தத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கின்றன. யதார்த்தத்தில் நம்மால் நூறு பேரை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது என நன்றாகவே தெரியும். ஆனால், திரையில் நாயகன் நூறு பேரையும் ஒரே சமயத்தில் உரித்துத் தொங்கவிடும்போது விசில் அடித்து வரவேற்கிறோம் அல்லவா! அதே மனநிலைதான் இங்கேயும். 

ஓவியா

ஒரு வீட்டுக்குள் அடைபடும் அனைவரும் எப்படி இருக்கப்போகிறார்கள், எப்படி அடித்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதைத் தொலைக்காட்சி மூலம் காணும் ரசிகர்களுக்கு, ஓவியாவின் கேரக்டர் சர்ப்ரைஸாக இருக்கிறது. ஒருவேளை எல்லோரும் ஓவியா மாதிரியே இருந்திருந்தால், நிகழ்ச்சியை இத்தனை பேர் பார்த்திருப்பார்களா, நிகழ்ச்சி நூறு நாள்கள் சுவாரஸ்யமாகச் செல்லுமா என்பது சந்தேகம்தானே! .

ஆதரவு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த ஒரு புள்ளியில் அணுகும்போது, வழக்கமாக கார்னர் செய்யப்படும் கடைசி நபரிடமும் சகஜமாகப் பழகும் ஓவியாவின் பிஹேவியர் நமக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், நமக்கு கும்பல் மனநிலை இருக்கிறது. இது மிகப்பெரிய முரண் அல்லவா! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித சூழ்நிலையில் ஒவ்வொருவிதமான மனநிலையில் இருப்பார்கள் எனும் யதார்த்தத்தை நாம் கடந்துபோய்விடுகிறோமா?

 

எந்த விஷயத்தையும் கடுமையாக எதிர்க்காமலிருப்பது, எந்த விஷயத்தையும் பற்றியும் ஆழமாக விவாதிக்காமலிருப்பது, எதைப் பற்றியும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது. லிவ் த மொமென்ட் மட்டுமே நல்லது என்பதையெல்லாம் `சரிதானா... தவறுதானா' என அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால், மனிதனுக்கு எண்ணங்கள் என்பது நிமிடத்துக்கு நிமிடம் மாறிவிடும். நம் கேரக்டரைப் பற்றி ஒருநிமிடம்கூட சிந்திக்காத நாம், மற்றவர்கள் கேரக்டர் குறித்து அதிகம் சிந்திக்கிறோம். அவர்களை `நல்லவர்கள்',  `கொஞ்சம் நல்லவர்கள்',  `கெட்டவர்கள்' என எதிலாவது அடக்க முயல்கிறோம். இப்படியான உளவியல்தான் `பிக் பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளின் மாபெரும் வெற்றிக்கு அடிப்படை. 

http://www.vikatan.com/news/cinema/95805-what-is-the-reason-behind-oviya-getting-more-supporters-in-bigboss-tamil.html

Link to comment
Share on other sites

“சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல்லாம் பாத்திருக்கேன். ஜூலி மாதிரி நடிகையைப் பார்த்ததே இல்லை!” - கஞ்சா கருப்பு கலகல!

 

`பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் வெளியேற்றப்பட்டவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் இருக்கும் இவர், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என விசாரித்தேன். செல்லப்பிராணிகளுடன் விளையாட்டு, குடும்பத்தோடு குஷி என செம ஜாலியாக இருக்கும் கஞ்சா கருப்புடன் குட்டி சிட் சாட்! 

கஞ்சா கருப்பு பிக் பாஸ்

``எப்படி இருக்கீங்க?” 

``ரொம்ப நல்லா இருக்கேன். நான் ஊர்ல இல்லாததுனால என் நாய்க்கு உடம்பு சரியில்லாமப்போயிடுச்சு. இப்போதேன் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்து உக்காந்திருக்கேன். நிலத்துல வேலை, குடும்பத்தோடு இருக்கிறதுனு நேரமும் சரியா இருக்கு.”  

`` `பிக் பாஸ்' வீட்டைவிட்டு வந்ததுனால கவலையா இருக்கா?” 

``அங்கே இருக்கிறவங்களை நினைச்சாதான் ரொம்பக்  கவலையா இருக்கும். `எல்லோரையும் விட்டுட்டு வந்துட்டோமே!'னு அடிக்கடித் தோணும். ” 

``சரி, யாரை ரொம்ப மிஸ்பண்றீங்க?” 

``சினேகன், காயத்ரினு எல்லோரையும் மிஸ்பண்றேன். குறிப்பா, நமீதாவை ரொம்ப மிஸ்பண்றேன். ஏன்னா, அவங்க நேர்மையான பொண்ணு. எதுன்னாலும் நேரடியா சொல்வாங்க. `ரூல்னா அதுக்கேத்த மாதிரிதான் நடந்துக்கணும்'னு சொல்வாங்க.  வீட்டுல எது நல்லா இருக்கோ, இல்லையோ பாத்ரூமை ரொம்ப சுத்தமா வெச்சிருப்பாங்க.  ஒருகாலத்துல மகாத்மா காந்தியே பாத்ரூம் கழுவிட்டு இருந்திருக்கார். அவருக்கு மனநிலை சரியில்லாமப்போயிடுச்சோனு பலரும் நினைச்சிருக்காங்க. அப்போ, `கழிவறையைச் சுத்தமா வெச்சுக்கிட்டாத்தான் நமக்கு எந்த வியாதியும் வராது’னு சொல்லியிருக்கார் மகாத்மா. அதுமாதிரி நமீதாவிடம் பிடிச்சது நேர்மையும், சுத்தமும்தான். இந்த `பிக் பாஸ்' முடிஞ்சதும் காயத்ரி மாஸ்டர், சினேகன், வையாபுரி, சக்தி, ஆர்த்தி, கணேஷ், ஆரவ் எல்லோரையும் எங்க ஊருக்குக் கூட்டிட்டுப்போய் கிடா வெட்டி விருந்து குடுக்கலாம்னு இருக்கேன். ஆனா ஒரு கண்டிஷன். கிடாயை அறுத்துச் சுத்தப்படுத்திக் குடுத்துடுவோம். அவங்கதான் சமைக்கணும். `பிக் பாஸ்' டீம் சமைக்க, நமீதா சாப்பாடு பரிமாறணும். 11 கிடாயை வெட்டி, ஏழைகளுக்குச் சாப்பாடு  போடணும். அதான் என் ஆசை.  ஏன்னா, பணம் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுனுதான் சொல்வாங்க. ஆனா, சாப்பாடு போட்டா வயிறு நிறைஞ்சு `போதும்'னுதான் சொல்வாங்க. இந்த 100 நாள் முடியட்டும், பெரிய நிகழ்ச்சியா நடத்திருவோம்.”  

`` `பிக் பாஸ்' டைட்டில் யார் ஜெயிப்பானு நினைக்கிறீங்க?” 

``ஜூலிதான் ஜெயிப்பா. பெரிய  நாடகக்காரி ஜூலி. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் எல்லோரையும் பார்த்திருக்கேன். ஆனா, ஜூலி மாதிரி ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை. இருக்கிறவங்களை எல்லோரையும் முட்டாளாக்கி, வெளியே அனுப்பிட்டு, மொத்தப் பரிசையும் தட்டுறதுக்கு வந்திருக்கா ஜூலி”.  

கஞ்சா கருப்பு

`ஆர்த்திக்கும் ஜூலிக்கும் அடிக்கடி சண்டை வர, யார் காரணம்?”

``ஆர்த்தி எத்தனை படங்கள் நடிச்சிருக்காங்க. ரொம்ப சீனியர் நடிகையும்கூட. மனோரமா ஆச்சி, கோவை சரளா வரிசையில் ஆர்த்திதான். நடிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. அவங்களைத் தரக்குறைவா பேசினது தப்பா... தப்பில்லையா? ஆனா, இது மக்களுக்குத் தெரியுதா... தெரியலையான்னு தெரியலையே.” 

``உங்களுக்கு ஓட்டு குறைவா விழக் காரணம் என்னவா இருக்கும்?” 

``நான் மக்களுக்காக, மக்கள் எனக்காகனு இருந்தேன். ஆனா, வெறும் 15 ஆயிரம் ஓட்டுதானே விழுந்திருக்கு. `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வேலை பார்க்கிறவங்களே அவங்க விருப்பப்படி ஓட்டு போட்டுக்கிறாங்களோனு சந்தேகமா இருக்கு.  மறுபடியும், `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குக் கூட்டிட்டுப்போனால், நான் போடுற கண்டிஷனுக்கு பிக் பாஸ் கேட்குமா? முழுக்க முழுக்கக் கெட்டவிஷயத்தை மட்டுமே ஒளிபரப்பிட்டிருக்காங்க. நல்ல விஷயங்களையும் போடுங்கனு பிக் பாஸிடம் சொல்வேன்.”  

``அடுத்து படம் ஏதும் நடிக்கிறீங்களா? ” 

 

`` `வெண்ணிலா கபடிக்குழு-2’, ‘சந்தனத்தேவன்’ அப்புறம் இன்னொரு படம். இன்னும் பேர் வெக்கலை. இந்த மூணு படங்களும் நடிச்சுட்டிருக்கேன். சொந்த விஷயமா ஊருக்கு வந்திருக்கேன். சீக்கிரமே சென்னைக்கு வரணும்.”  

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/95894-actor-ganja-karuppu-interview-about-bigg-boss.html

Link to comment
Share on other sites

பிக் பாஸில் வெல்ல ஓவியாவைத் தவிர வேறு யாருக்குமே அங்கு தகுதியில்லையா?

 

 
big_boss

 

கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே உடனே ஓவியா தான் வின்னர் என்ற ரீதியிலேயே பல பதிவுகளைக் காண நேரிடுகிறது. ஓவியாவுக்கு போட்டியில் ஜெயிக்கப் பல தகுதிகள் இருந்தாலும் அவரிடம் குறைகளும் இல்லாமல் இல்லை. அந்தப் போட்டியின் பங்கேற்பாளர்கள் முன்னமே தெரிவித்திருந்தபடி அந்த பிக் பாஸ் வீட்டின் வேலைகளை ஓவியா சரிவரச் செய்யவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதைப் பலமுறை பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் அந்நிகழ்ச்சியினிடையே தெரிவித்திருக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கி பல வாரங்கள் கடந்த பின்னும் இப்போதும் அவர் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளும் அதே தான். வீட்டில் ஒரு வேலையையும் செய்யத் தனக்கு விருப்பமில்லை. அப்படியே போட்டியின் விதிகளின் படி வேலை செய்ய வேண்டும் என்றாலும், தனக்குத் தோன்றும் போது மட்டுமே செய்வேன். எப்போது வேலை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்போது மட்டுமே செய்வேன். என்பது மாதிரியான ஓவியாவின் பதில்கள் கூட்டுக் குடும்ப மாதிரி அமைப்பான பிக் பாஸில் நிச்சயமாக சண்டைகளை வரவழைக்கும் ஒரு அம்சம் தானே தவிர வேறில்லை. ஓவியாவின் மீது ஆரம்பம் முதலே வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் இதுவே முக்கியமானது. இதை அவர் நிவர்த்தி செய்தாரா? என்றால்? இதுவரை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி சொன்னது போல... ஓவியாவுக்குப் பிற பெண்களைப் பற்றியோ அல்லது ஆண்களைப் பற்றியோ குறை கூறும் மனப்பான்மை இல்லை என்பது அவரது வெற்றிக்கான தகுதிகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவரது வெற்றியை உறுதி செய்தால். பிற நாட்களில் அவர் பிக் பாஸ் குடும்பத்தில் பிறரது வேலையைப் பகிர்ந்து கொள்ள முயலாதது குற்றமே இல்லையென்றாகிறது இல்லையா? நமது குடும்ப அமைப்பில் பல சண்டை, சச்சரவுகளுக்கும் மூல காரணமாக அமைவதில் இந்த வேலைப்பங்கீடும் ஒன்று. இன்றும் கூட்டுக் குடும்ப அமைப்பில் வாழும் பல குடும்பங்களில் அண்ணன், தம்பிகளுக்குள், அவர் தம் மனைவிகளுக்குள் சண்டைகள் வரக் காரணமே குடும்பத்திற்கான வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே காரணம் என்பதால். ஓவியா தன் மீதான அந்தக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்து கொள்ளும் வரை அவரை எப்படி வெற்றியாளருக்கான தகுதி உடையவர் என ஏற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் குடும்பத்தின் சண்டைக்கு மூலகாரணமே இந்த விஷயம் தான் என பிக் பாஸ் குடும்பத்தினர் பல்வேறு சந்தர்பங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் ஓவியா தான் வின்னர் எனும் ரீதியில் அவருக்கான ஆதரவு வலுத்து வருகிறது. ஓவியா ஜெயிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை ஆனால், அவரை விடவும் தகுதி வாய்ந்த நபர் அங்கே பிக் பாஸ் குடும்பத்தில் ஒருவர் கூட இல்லை என்றால் ஓவியாவுக்காக ஓட்டுப் போட்டு எலிமினேஷனில் இருந்து அவரைக் காப்பாற்றியவர்களைத் தவிர வேறு யாருமே பிக் பாஸ் பார்க்கவே இல்லை என்பதாகிறது. ஓட்டுக்களில் விருப்பங்களற்ற பெருவாரியான ஆதரவாளர்களில் பிக் பாஸ் குடும்பத்தின் பிற உறுப்பினர்களான கணேஷ் வெங்கட்ராம், ரைஸா, ஆரவ், சினேகன் உள்ளிட்டோரை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள் என நம்ப மறுக்கக் கூடாது.

இவர்களுக்கெல்லாம் ஓவியாவைப் போல ரசிகர் பட்டாளங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் இவர்கள் பிறருக்கு மன உளைச்சலைத் தரும் அளவுக்கு ஆபத்தில்லாத அணுகுமுறைகள் கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது.

ஒருவர் வேலையே செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டு வேளா வேளைக்கு சாப்பிட மட்டும் செய்வேன் என்பதோ, அல்லது என்னால் இவ்வளவு வேலை தான் செய்ய முடியும், அதையும் நான் விரும்பும் போது மட்டுமே தான் செய்வேன் என்று சட்டம் பேசுவதும் கூட குடும்பத்தின் பிற உறுப்பினர்களை மன உளைச்சலுக்குத் தூண்டும் விஷயம் தான். அதைத் தான் பிக் பாஸ் வீட்டில் ஓவியா இதுவரை செய்து வந்துள்ளார். அதற்காக அவர் மீது குற்றம் சாட்டி அவரைத் தனிமைப்படுத்திய பிற உறுப்பினர்களான காயத்ரி, ஜூலியானா, நமிதாவுக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணி விடத் தேவையில்லை. ஏற்கனவே பேயாடிக் கொண்டிருப்பவர்களுக்கு உடுக்கை அடித்து மேலும் ஆட விட்டது ஓவியாவின் இந்த பொறுப்பற்ற தன்மை தான். 

இங்கே ஜல்லிக்கட்டு புகழ் வீரத்தமிழச்சி ஜூலியானாவைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பிக் பாஸ் வின்னராக அந்தப் பெண்ணுக்கு 0.000001 % வாய்ப்பிருந்தாலும் அது அந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல அதைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் ரசனைக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக இவருக்கு கிடைத்த மீடியா வெளிச்சத்தில் நிஜமாகவே ஜல்லிக்கட்டுக்காக சத்தமில்லாமல் புரட்சி செய்து வெற்றி கண்ட பலரது முகமும், குரலும் வெளிச்சத்துக்கு வராமலே போனதன் புண்ணியத்தை அந்த ஜூலியானாவே கட்டிக் கொள்ளட்டும்.

அப்புறம் காயத்ரி... டான்ஸ் மாஸ்டர் காயத்ரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தன் சுயரூபத்தை அனைவருக்கும் நீக்கமறக் காட்டி விட்டார். அவருக்கு போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டோ இல்லையோ? ஆனால் வந்த வரை லாபம் தான்! சிலருக்கு தான் எங்கிருந்தாலும் தனக்கென்று ஒரு ஜால்ராப்படை தேவைப்படும். அப்படிப்பட்ட குணாம்சம் காயத்ரியின் நடவடிக்கையில் நன்றாகவே தெரிகிறது. ஜால்ரா சத்தத்தில் உச்சஸ்தாயியில் ஓங்கி ஒலிப்பது சாட்ஷாத் ஜல்லிக்கட்டு ஜூலியானாவின் குரல். அம்மணி இப்படி ஒரு எண்ணத்துடன் தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினார் போலும். 

நமிதா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன் கமலிடம் சொன்னது; ரியல் நமிதா எப்படி என்று தனது ரசிகர்களுக்கு காட்டவே, தான் இந்தப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறினார். இப்போது அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் அல்லாதோருக்கும் ஏன் தமிழ்நாட்டின்... உலகில் எங்கெங்கு ஸ்டார் விஜய் டி.வி யின் பிக் பாஸ் ஒளிபரப்பாகிறதோ அங்கிருப்பவர்கள் அனைவருமே  தெரிந்து கொண்டிருப்பார்கள்... ரியல் நமிதா எப்படி என்று!!!  திரை வேறு... நிஜம் வேறு என்று புரிய வைத்த தைரியமான முயற்சிக்காக நாம் ஒரு வேளை நமிதாவைப் பாராட்டலாம். போட்டியிலிருந்து இரு வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆன பரணியின் மீது தான் வைத்த குற்றச்சாட்டுக்கு நமிதா அளித்த விளக்கம் அவரது சுயநலத்தையும், சந்தர்ப்பவாதத்தையும், பாரபட்ச மனப்பான்மையையும் பிறர் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 

இந்நிகழ்ச்சியை வெறும் பார்வையாளர்கள் கண்ணோட்டத்தில் நடுநிலைத் தன்மையுடன் பார்த்தால் ஓவியாவுக்கு இணையாக போட்டியில் ஜெயிக்கும் வாய்ப்பு கணேஷ் வெங்கட் ராமுக்கும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சில சமயங்களில் வையாபுரியும், நமிதாவும் அவரை சாப்பாட்டு ராமன் என்று விமர்சித்தாலும் கூட கணேஷ்  பிக் பாஸ் குடும்பத்தின் பிற உறுப்பினர்களோடு வந்த நாள் முதல் இன்று வரை நடத்திய பல சம்பாஷனைகளைக் காணும் போது அவரது செயல்பாடுகளில் பெரிதாக எந்தக் குற்றமும் இல்லை. அனைவருடனும் இனிமையாகப் பழக நினைக்கும் முயற்சி, சக நண்பர்களின் மனம் கோணாது வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசும் விதம், பிக் பாஸ் போட்டியின் டாஸ்குகள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் அதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டு தனது பங்களிப்பை வழங்க நினைக்கும் முயற்சிகள் என அனைத்திலும் பார்வையாளர்களால் குறை காண முடியாத நபராகவே கணேஷ் அடையாளம் காணப்படுகிறார். அவரைப் பற்றிய குறையாகப் பெரிது படுத்தப் படும் ஒரு நிகழ்வு; பிக் பாஸ் வீட்டில் பெண்கள் பரணியின் மீது அபாண்டமாகப் பழி சுமத்திய போது உண்மை என்ன என ஆராயாமல் ‘பெண்களின் பாதுகாப்புக்கு நான் கியாரண்டி’ என்று கூறியது மட்டுமே. ஆக வெற்றி வாய்ப்பில் ஓவியாவுக்கும், கணேஷுக்கும் சரி சமமான வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இவ்விருவரிடமும் எத்தனைக்கெத்தனை நிறைகள் இருக்கின்றனவோ அதற்கொப்ப ஒரு சில சின்னச் சின்ன குறைகளும் உள்ளன. 

ஆனால் ஓவியாவுக்கு திரண்டதைப் போல கணேஷுக்கு ரசிகர் பட்டாளமோ, எழுச்சிப் படையோ, பச்சை மண்ணுடா அவன் மாதிரியான ஆதரவாளர்கள் சப்போர்ட்டோ இல்லை. ஏனென்றால் ஓவியா அளவுக்கு இந்நிகழ்ச்சியில் கணேஷ் அடிக்கடி பார்வையாளர்களிடம் பரிதாபத்தைச் சம்பாதிக்கவில்லை என்பதே நிஜம். ஆகவே இன்னமும் சில வாரங்கள் மீதியுள்ள நிலையில் பிக் பாஸில் ஓவியா வென்று விட்டதைப்போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டிருந்தாலும் இன்னமும் போட்டி டிராவில் தான் உள்ளது என்பதே மீதமுள்ள பார்வையாளர்களின் மனநிலை என்றுணர்வோம்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியாக வெளியேறிய நமீதா

விஜய் தொலைக்­காட்­சியில் பர­ப­ரப்­புடன் ஒளி­ப­ரப்­பாகிக் கொண்­டி­ருக்கும் பிக்பொஸ் நிகழ்ச்­சி­யி­லி­ருந்து நமீதா நேற்று முன்தினம் வெளி­யேற்­றப்­பட்டார்.

 

Actress-Namitha

வார இறுதி நிகழ்ச்­சியில் பிக்பொஸ் கம­ல­ஹாசன் கலந்து கொண்டு கடந்த வாரத்தில் நடந்த நிகழ்­வுகள் குறித்து விமர்­சனம் செய்தார். ஓவி­யாவை அடிக்க கை ஓங்­கிய ஷக்­தியை கண்­டித்தார். அதே­போல எதற்­கெ­டுத்­தாலும் அழு­காச்சி வேஷம் போடும் ஜூலிக்கு அறி­வுரை செய்­த­தோடு, அவர் உடல் நலம் குறித்தும் விசா­ரித்தார்.


ஜூலிக்கு உடல் நலம் சரி­யில்­லா­த­போது ஆண்கள் உத­வி­ய­தையும், பெண்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்­த­தையும் கண்­டித்தார். அதே­போல பரணி வெளி­யேற்­றப்­பட்­ட­போது அதற்­காக யாரும் கலங்­க­வில்லை என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டினார்.

 

நிகழ்ச்­சியில் நடத்­தப்­பட்ட நாட­கத்தை பாராட்­டி­யவர். அதில் சிறப்­பாக நடித்­தது வையா­புரி என்றும் நடிக்­கவே தெரி­யா­தவர் ஜூலி என்றும் விமர்­சித்தார்.


எலி­மி­னேஷன் இறுதிச் சுற்றில் கணேஷ் வெங்­கட்­ராமும், நமீ­தாவும் இருந்­தனர். அதில் கணேஷ் வெங்­கட்­ராமை நேயர்கள் அதிக வாக்­க­ளித்து காப்­பாற்­றி­யதால் நமீதா வெளி­யேற்­ற­பட்டார்.


இது­கு­றித்து நமீதா கூறி­ய­தா­வது: நான் மகிழ்ச்­சி­யுடன் வெளி­யே­று­கிறேன். என் வாழ் வின் மறக்க முடி­யாத தரு­ணங்கள் இது. சினேகன் எனக்கு ஒரு அண்­ண­னாக இருந்தார். அவர் அன்பை மறக்க முடி­யாது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவரை என் அண்­ண­னாக தொடர்வேன். சிலர் என்னை புறம்­பே­சி­னார்கள். என் முதுகில் குத்­தி­னார்கள்.

 

அதுவும் எனக்குத் தெரியும். அவற்றை மறக்க முயற்­சிக்­கிறேன். எனது செல்ல நாய்­குட்டி ெசாக்­லெட்டை இத்­தனை நாள் பிரிந்து இருந்­த­தில்லை. இரண்டு நாட்கள் அவ­னுடன் செல­வி­டப்­போ­கிறேன் என்றார்.

http://metronews.lk/?p=10747

Link to comment
Share on other sites

நேற்று ஓவியா செய்தது பழிவாங்கல்!’ என்பவர்கள் இதைக் கொஞ்சம் படிங்க! #BiggBossTamil

 
 

நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் ஓவியா, ‘ஜூலியை ரெட் கார்ப்பெட்டில் வைத்து இழுத்து வேண்டுமென்றே விழ வைத்தார். பழி வாங்கிவிட்டார். ஓவியாவின் குணம் மாறிவிட்டது’ என்றெல்லாம் பேச்சுகளை அங்கங்கே கேட்க முடிகிறது. ஓவியா செய்தது, சரியா தவறா என்பதை நேரடியாகப் பேசாமல்,  ஓவியாவை அப்படிச் செய்ய வைத்தது எது என்பதிலிருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே ஜூலியின் நடவடிக்கைகள் பொதுவாகவே ரசிக்கும்படி இல்லை. ஆரவ்வை ‘டா’ போட்டுப் பேசும், ஓவியாவை ‘நீ வா போ’ என்று பேசும் இவர்தான், ஒருமுறை காயத்ரியிடம், ‘அவ உங்களையும், நமீதா மேடத்தையும் பேர் சொல்லிக் கூப்டறதே எனக்குப் பிடிக்கலைக்கா. அவ யாருக்கா உங்களை அப்படிக் கூப்ட?’ என்றார். காயத்ரி ஓவியாவுடன் இப்போது கொஞ்சம் இணங்கிப் போனாலும், முந்தைய வாரங்களில் ‘அவ யாரு என்னைக் கேட்க’ என்கிற தொனியில்தான் ஓவியாவைப் பற்றிப் பேசினார். ‘நமீதாவுக்கு இருக்கற ஃபேன்ஸ் இவளுக்கு இருக்கா? இவளுக்கு எப்படி இவ்வளவு ஓட்டு விழும்? என்னமோ நடக்குது’ என்று பிக் பாஸையே சந்தேகமாய்த்தான் பேசிக் கொண்டிருந்தார். நமீதாவையும் தன்னையும் விட, (காயத்ரி நினைக்கிற புகழ் விஷயத்தில்) ஓவியா கம்மிதானே என்று நினைக்கிற இவர், ஜூலி ஓவியாவைப் பற்றிப் புறம் பேசும்போதும், ‘அவ இவ’ என்று சொல்லும்போதும் ‘என்ன இருந்தாலும் உன்னை விட  ஓவியா  ஃபேமஸ்’ என்று சொல்லவில்லை. ஆக, தனக்கு வந்தால் ரத்தம் கான்செப்டில்தான் ஓவியாவை ஹேண்டில் செய்து கொண்டிருந்தனர்  காயத்ரியும், ஜுலியும், ரைசாவும், நமீதாவும்.  

ஜூலி பிக் பாஸ்


சினேகனை ஒரு நல்ல தலைவராக எண்ணி, ஜுலியிடம் ஆறுதல் சொல்லும் ‘அந்த குறும்பட’ எபிசோடில் ‘சினேகன் இருக்கார், ஆரவ் இருக்கான்’ என்று நம்பிக்கையாகவே சொல்லிக் கொண்டிருந்தார் ஓவியா. இப்போதும். ஆனால் சிநேகன், எல்லாவற்றையும் சக்தி, காயத்ரியிடம் ஒப்புவித்து அவர்களிடம் இணக்கமாக இருப்பதையே முதல் கடமையாக எண்ணிக் கொண்டிருக்கிறார். ‘ஏய் வா போனு நீங்க பேசறது பிடிக்கலை’ என்று ரைசா சினேகனிடம் தனிப்பட்ட முறையில் சொன்னதைக் கூட, ஒரு புகார்போல ‘அவ என்கிட்ட அப்படிச் சொன்னா தெரியுமா?’ என்று ஸ்கூல் பையன் கணக்காக சொல்லிக் கொண்டிருந்தார். ஆக அவருக்கும் சக்தி, காயத்ரி என்கிற வட்டம் முக்கியம். 

ஆரவ், ஆரம்ப ஓவியா நெருக்கம் தாண்டி சினேகன் கோஷ்டியிடம் ‘ஓவியா என்கிட்ட அப்படிச் சொன்னா இப்படிச் சொன்னா..’ என்று பேசிக் கொண்டிருந்தார். மூன்று வாரங்களுக்கு முன் ஆளுக்கொரு கேள்வியாய் கமல் கேட்டபோது ‘ஆரவ்.. உங்கள் நண்பரைப் பத்தி வெளில புறம் பேசிருக்கீங்களா?’ என்ற கேள்வி ஆரவ்வுக்கு வந்தது. அப்போது சுதாரித்தவர், அதன்பின் ஓவியாவைப் புரிந்து கொண்டார்.  

வையாபுரி ஓரளவு சூழல்களையும் மனிதர்களையும் புரிந்து கொண்டவராக இருக்கிறார். இந்த பஞ்சாயத்துகளிலெல்லாம் அவர் கலந்து கொள்வதில்லை. செல்ஃபி டாஸ்கில் ‘ஆர்யா மாதிரி ஆகலாம்னா.. ஆரவ் மாதிரி கூட ஆகமுடியாது’ என்றெல்லாம் டைமிங்கில் ரைமிங்காகப் பேசியவரும் அவரே. ஆனால் சக்தியை பிக்பாஸ் தேர்வு செய்தது ஏனென்று தெரியவில்லை. அதைவிடுவோம்.

நேற்றைக்கு பிக் பாஸ் ஜூலியிடம் நடுவர் பொறுப்பைக் கொடுத்ததும், எல்லார் முகமும் மாறியதை கவனித்திருக்கலாம். அவரவர் பங்குங்கு மறைமுகமாக ஆளாளுக்கு அவரை ஓட்டி எடுத்தனர். ‘சொல்லுங்க மேடம்ம்ம்.. ஜூஸ் குடிங்க மேடம்ம்ம்ம்ம்’ என்று ஆரவ் செய்தது ஒருபுறம். ‘கொம்பு முளைச்சிருச்சா’ என்று எல்லாம் முடிந்த பின் காயத்ரி கேட்டது ஒருபுறம். வையாபுரியும் நக்கலாகப் பேசினார். சக்தி மொத்த முகபாவத்திலும் ஜூலி மீது வெறுப்பாகத்தான் இருந்தார். ஆனால் அவர் கார்ப்பெட்டில் உட்கார்ந்திருக்கும்போது தூக்கிக் கொண்டுபோய் விட்டது ‘டேமேஜ் கண்ட்ரோல்’. ஏற்கனவே ஓவியாவிடம் கை ஓங்கிய டேமேஜை, இதில் சரி செய்ய முயன்றிருக்கிறார். காயத்ரியும் அப்படித்தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற மாதிரிதான்.

நடுவர் என்று சொல்லப்பட்ட நொடி முதல் ஜூலியிடம் நடை, உடை, பாவனைகளில் மாற்றம் வந்துவிட்டது. சமைக்கும்போது வெவ்வேறு அணிகளில் இருந்த ஓவியாவும், ஆரவ்வும் பேசிக்கொண்டதை ஜூலி ரசிக்கவில்லை. ‘டிஸ்டர்ப் பண்றீங்க’ என்று சொல்ல, ஓவியா ஆரவ்விடம் ‘நான் உங்களுக்கு டிஸ்டர்பா? ப்ளஸ்ஸிங்தானே?’ என்று கேட்டார். ஆரவ் ‘ஆமாம்’ என்று சொல்ல, ஜூலிக்கு அப்போதே ‘வெச்சுக்கறேன் உன்னை’ என்று தோன்றியிருக்க வேண்டும். கற்பனைதான். ஆனால் பின் அவர் நடவடிக்கைகள் அதை உறுதி செய்தன.

அதன்பிறகு நடுவராக அமர்ந்து ஜூலி ஜட்ஜ் செய்ததெல்லாம்.... ‘இந்த விஜய் டிவி யார் யாரையெல்லாம் ஜட்ஜ் ஆக்குமோ’ என்றுதான் நினைக்க வைத்தது. பார்வையாளர்களுக்கும், பிக் பாஸ் இன் மேட்ஸுக்குமே அதுதான் எண்ண ஓட்டமாக இருந்திருக்கும். சினேகன் டீமை தோற்க வைத்தார். அவர் அணியில் கணேஷ், வையாபுரி, ஓவியா. 

டாஸ்க் படி, ஜூலிக்கு ஒருவர் மசாஜ் செய்ய வேண்டும், ஒருவர் நடக்கும் இடங்களில் எல்லாம் ரெட் கார்ப்பெட் விரிக்க வேண்டும், ஒருவர் கேட்டதெல்லாம் சமைக்க வேண்டும். ஒருவர் நிழலாக இருக்க வேண்டும். 

’திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் லாபம் லாபம்’ என்று நமீதா, காயத்ரியுடன் ஜூலி பாடித் தொந்தரவு செய்த அந்த நள்ளிரவில் ஓவியா ஆண்கள் பெட்ரூமில் போய்ப் படுத்துக்கொண்டார். ‘என்னக்கா ஓவியா ஆம்பளைக ரூம்ல போய் தூங்கிட்டாக்கா.. அய்யோ படுத்துட்டாக்கா.. எனக்கு கோவம் வருதுக்கா..’ என்றெல்லாம் அங்கலாய்த்த ஜூலி, தனக்கு மசாஜ் செய்ய  கணேஷைத் தேர்ந்தெடுக்கிறார். அதுவும் ‘நான் நல்லா மசாஜ் செய்வேன்’ என்று ஓவியா சொன்ன பின்னும். அதை ஓவியா சொல்லும்போது எந்த வன்மமுமோ, பழிவாங்கலுமோ தெரியவில்லை. 

நிழலாக வையாபுரி என்றவர். ‘சும்மா வந்தா போதும்.. வயசுல பெரியவர்’ என்கிறார். சமைக்க சினேகனைத் தேர்ந்தெடுக்கிறார். ரெட் கார்ப்பெட் விரிக்க ஓவியா. இதில் ஓவியாவைத் தவிர வேறு யாருமே எதும் செய்ய வேண்டாம் என்பது எல்லாருக்குமே அப்பட்டமாகத் தெரிந்தது . நிழலாக தேர்ந்தெடுத்த வையாபுரி, காயத்ரி ஓவியாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சீனிலேயே இல்லை. 

நியாயமாக ரெட் கார்ப்பெட்டுக்குத்தான் கணேஷைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அப்படி நிற்க வைத்து ஓவியாவால் இழுக்க முடியாது என்று தெரிந்தும், ‘ஓவியாவுக்கு கெட்ட பெயர் வரவேண்டும், அவள் என் அடிமை’ என்கிற ஜூலியின் எண்ணம் அப்பட்டமாகத் தெரிந்தது. அங்கே தன் சுயமரியாதைக்கு இழுக்கு வந்துவிட்டதை உணர்கிறார் ஓவியா.

அப்போது முடிவெடுக்கிறார். ‘இனி போனாலும் பரவாயில்லை. இதற்கொரு முடிவு கட்ட வேண்டும்’ என்று. அதைத்தான் செய்கிறார். அப்போது ஜூலி என்ன செய்திருக்க வேண்டும்?

சக்திக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள்; திருடனாக. ஒருகட்டத்தில்  ‘என்னால முடியாது’ என்று டாஸ்கை மறந்து சரண்டர் ஆகிறார். ரைசாவுக்கு நீச்சல் குளத்தில் குளித்தெழுந்து, 10 முறை எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டபோது சின்ன பிக் பாஸ் ஆரவ் ‘குறைச்சுக்கலாமா பிக் பாஸ்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஜூலி வெளியே தனிமையாக அமர வைக்கப்பட்டபோது கூட ‘இதெல்லாம் வேணாமே.. பாவம்’ என்றார் ஆரவ்.  

அப்படி ஜுலி, டாஸ்கை விட்டுவிட்டு, ‘போதும் ஓவியா.. கொஞ்சம் காலை கீழ வெச்சுக்கறேன். என்ன இப்போ’ என்று ஓவியாவிடம் அன்பைக் காட்டியிருக்கலாம். அதற்கு முன்பும் பலமுறை ஜூலி தன்னைக் காயப்படுத்தியபோதும் தனியாக அவரிடம் சமாதானமாகப் போக முயன்றவர்தான் ஓவியா. ‘ஜூலிகிட்ட பேச மாட்டில்ல?’ என்று ஒரு முறை ஆரவ் கேட்டபோதுகூட ‘எனக்கென்ன நான் பேசுவேன்’ என்று பகை மறந்து பேசிக் கொண்டிருந்தவர்தான் ஓவியா. நீச்சல் குளத்தினருகே நடக்கும்போது கல்லில் கால் பட்டுவிட ‘ஸாரி’ என்று திரும்பி கல்லைப் பார்த்துச் சொன்ன ஓவியாவுக்கு மனிதர்களிடம் அன்பு காட்டுவதென்பது அலாதியானது. குத்துப்பாட்டுக்கெல்லாம் ஆடுபவர் ஒரு மென்சோகப் பாடலுக்கு பொசுக்கென்று அழுகிறார். அவரிடம் இந்த டாஸ்கைக் கொடுத்து தன் ஆணவத்தைக் காட்டினால், என்ன நடக்குமோ அதுதான் நேற்று நடந்தது. 

ஓவியா பிக் பாஸ்

 

அதைத்தான் சினேகனிடமும், ஆரவ்விடமும் உடைந்து புலம்பினார். ‘எனக்குன்னு செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லையா?’ என்று கேட்டார். மற்ற யாராக இருந்தாலும் அப்போதைக்கு ரெட் கார்ப்பெட் இழுத்து டாஸ்கை முடித்து பிறகு கூட்டாக அமர்ந்து ‘என்னை அந்த வேலை செய்யச் சொல்லிட்டா பாரு’ என்று புலம்பிக் கொண்டிருந்திருப்பார்கள். ஓவியா அப்படி இல்லை. எப்போதுமே யாரால் பிரச்னையோ அவரிடமே பேசுவதுதான் அவரது பழக்கம். அதைத்தான் அங்கே காட்டித் தீர்த்துக் கொண்டார். 

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதை இங்கே  சொல்லலாம். ஆனால் ஓவியா சாது அல்ல. தேவையானபோது அறச்சீற்றம் கொள்பவர்தான். எல்லாம் அவருக்குத் தெரிகிறது. வெளியில் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்பதை சரிவர கணிக்கிறார். அதைப் பிறர்க்குச் சொன்னால் அவர்களும் கேட்பதில்லை. காயத்ரியே இப்போதுவரை ஓவியா தன் முன் அழுதது தனக்கான வெற்றி என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். ‘என்னால நீங்க வெளில கெட்ட பேர் வாங்கிக்கறீங்க’ என்று காயத்ரிக்காகத்தான் அவர் அழுதார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. காயத்ரி, ஓவியாவுடன் இணக்கமாகப் போனதை ஜூலியால் ஏற்க முடியவில்லை. ஓவியாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் எண்ணத்திலேயே நேற்றைய ஜட்ஜ் பதவியின்போது நடந்து கொண்டார் என்று சொல்லலாம்.

ஓவியாவைக் கிண்டல் செய்ய ‘எவண்டி உன்னைப் பெத்தான்’-ஐ ஞாபகமாகப் பாடும் ஜூலிக்கு  ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என்ற பாடல் வரியும் ஞாபகம் இருந்திருந்தால், நேற்றைக்கு இத்தனை களேபரங்கள் நடந்திருக்காது. ஓவியா செய்தது பழிவாங்கல் அல்ல. பாடம். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/97263-do-you-think-what-oviya-did-on-28-july-episode-of-bigg-boss-tamil-is-revenge-on-julie.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் வீட்டிற்கு பல்லக்கில் வந்த பிந்து மாதவி.. கட்டிப் பிடித்து வாழ்த்து சொன்ன ஓவியா

 
 

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி வந்து சேர்ந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிய போட்டியாளர் வருவார் என ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. புதிய வரவு யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் மேலோங்கி இருந்தது.

 
Big Boss new contestant is Bindhu Madhavi

ஆனால், புதிய போட்டியாளர் பிந்து மாதவியாக இருக்கும் என்று நெட்சன்கள் கணித்திருந்த நிலையில், இன்று பிந்து மாதவி ஆராவாரமாக பல்லக்கில் வந்து பிக் பாஸ் வீட்டில் இறங்கினார்.

பிக் பாஸ் வீட்டிற்குப் போவதற்கு முன், நடிகர் கமல், பிந்து மாதவியிடம், வெளியே நடந்த விஷயங்கள் குறித்து எதுவும் உள்ளே பேசக் கூடாது என்று கண்டிஷன் போட்டார். யாரிடம் எதுவும் சொல்லமாட்டேன் என்று உறுதி கூறி உள்ளே சென்றிருக்கிறார் பிந்து மாதவி.

பல்லக்கில் இருந்து இறங்கிய உடன் அனைவரும் அவரை வரவேற்றனர். காயத்திரி, ஜூலி, ஓவியா உள்ளிட்டவர்களைக் கட்டி அணைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பிந்து மாதவி இதே மகிழ்ச்சியோடு பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பாரா? அல்லது அங்கு எழும் பிரச்சனையில் பிய்த்து பிடுங்கிக் கொண்டு வெளியே ஓடி வந்துவிடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/big-boss-new-contestant-is-bindhu-madhavi-291298.html

Link to comment
Share on other sites

ஓவியா எனக்குச் சவாலாக இருப்பார்: பிந்து மாதவி ஒப்புதல்!

 

 
bb_bindumadhavi871

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி அறிமுகம் ஆகியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஏன் என கமலிடம் பிந்து மாதவி உரையாடியபோது கூறியதாவது:

உலகம் முழுக்க இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். நானும் தினமும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துவருகிறேன். ஒரு ரசிகராக ரசித்துப் பார்த்துள்ளேன். இருநாள்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுத்தபிறகு... இப்போது குழப்பமாக உள்ளது. 

நான் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒருவாரம் தான் பார்த்தேன். ஆனால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைத்தான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒருநாள் கூடத் தவறவிட்டதில்லை. 

நான் கடந்த இரு வருடங்களாகச் சொந்தக் காரணங்களுக்காகப் படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில்தான் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். அந்தப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதனால் இப்போது உள்ள ஓய்வு நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களுடன் நெருக்கமாகலாம் என்பதற்காகக் கலந்துகொண்டுள்ளேன். 

ஜெயிப்பதற்கான உத்தி எதுவும் என்னிடம் இல்லை. எல்லோரிடமும் சாதாரணமாகப் பழகப் போகிறேன். நான் எல்லோரையும் டிவியிலேயே பார்த்துவிட்டேன். ஒருவர் மட்டும் தவறு செய்கிறார் என்று சொல்லமுடியாது. போட்டியாளர்களில், ஓவியா எனக்குச் சவாலாக இருப்பார் என நினைக்கிறேன். இந்தக் குடும்பத்திலுள்ள யாரைப் பார்த்தும் எனக்குப் பயமில்லை. திறந்த மனதுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ரசிகர்கள் ஏற்கெனவே அவர்கள் மனத்தில் சிலருக்கு இடம்கொடுத்துவிட்டார்கள். நான் வெளியாள். எனவே இதை என்னுடைய பலவீனமாகத் தற்போது நினைக்கிறேன் என்றார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/31/bigbosstamil_oviya_bindumadhavi-2747168.html

Link to comment
Share on other sites

’’பிந்து மாதவி மட்டுமல்ல... இன்னும் சில பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வராங்க..!’’ - ஷாக் கொடுக்கும் விஜய் டி.வி

 

ரசிகர்களின் பல்ஸை அறிந்து அதற்கேற்ப புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டி.வி, இந்தியில் ஹிட் அடித்த மற்றும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தமிழில் வழங்கி வருகிறது. 15 பிரபலங்கள், நூறு நாள்கள் தங்களை சுற்றியுள்ள கேமராக்கள் முன்னிலையில் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்க வேண்டும். யார் 'பிக் பாஸ்' தரும் சவால்களை சமாளித்து, ரசிகர்களின் ஓட்டுகளையும் பெற்று 'பிக் பாஸ்' டைட்டிலை வெல்லப்போகிறார் என்பதை தெரிந்துக் கொள்ள நாம் இன்னும் 60 நாள்களுக்கு மேல் 'பிக் பாஸ்' வீட்டை ஃபாலோ பண்ண வேண்டும்.

bigg boss



'பிக் பாஸ்' வீட்டிலிருந்து இதுவரை ஶ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி, நமிதா என ஆறு பேர் வெளியேறியுள்ளனர். மீதமிருக்கும் ஒன்பது பேரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் ஆவலாக இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் திடீரென்று என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி. இவரது என்ட்ரி சக போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

போட்டியில் பதினைந்து பிரபலங்கள்தானே, எப்படி பிந்துமாதவி சக போட்டியாளராக விஜய் டி.வி-யால் அறிவிக்கப்பட்டார். பிந்துமாதவி வருகைப் பற்றி கமலும் நிகழ்ச்சியின் போது விளக்கம் அளிக்கவில்லை. இதுபற்றி விஜய் டி.வி தரப்பை தொடர்புகொண்டோம்.

bindhu maadhavi

 



'' விஜய் டி.வியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துயுள்ளது.  நூறு சதவீதம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடப்பது எல்லாம் உண்மைதான். சிலர் நினைப்பது போல் ஸ்க்ரிப்ட் எல்லாம் இல்லை. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ரசிகர்கள்  யார் வெற்றியாளராக வரவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றியடைவார். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சியில் நடிகை பிந்துமாதவி என்ட்ரி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரின் என்ட்ரி விஜய் டி.வியால் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்தி 'பிக் பாஸ்'  நிகழ்ச்சியிலும் ஒரு குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு சில பிரபலங்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதே போல்தான் தமிழிலும் நடக்கிறது. இன்னும் சில பிரபலங்கள் தமிழ் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களாக என்ட்ரி கொடுப்பார்கள். அவர்கள் யார் யார் என்பது ரசிகர்களுக்கு பெரிய சஸ்பென்ஸாகயிருக்கும். நிகழ்ச்சி தொடக்கத்தில் இதையெல்லாம் சொல்லிவிட்டால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது என்பதால்தான் மற்ற பிரபலங்களின் என்ட்ரி பற்றி சொல்லவில்லை. 

வெளியிலிருந்து செல்லும் பிரபலங்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் பல்ஸ் தெரியும். இதனால் புதியதாக 'பிக் பாஸ்' வீட்டில் களம் இறங்குபவர்களுக்கு ப்ளஸ் அண்ட் மைனஸ் இரண்டும் உண்டு.  வரும் வாரங்களில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு இன்னும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கும்'' என கூறி முடித்தார்கள்.

http://www.vikatan.com/news/cinema/97438-more-celebrities-to-join-bigg-boss-house-reveals-vijay-tv.html

Link to comment
Share on other sites

ஓவியாவுக்கு நெருக்கடி? முதல் நாளிலேயே இந்திய அளவில் டிரெண்டிங் ஆன பிந்து ஆர்மி!

 

 
bb_bindu89xx

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிவருகின்றன. 

தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி அறிமுகம் ஆகியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் - ஜூலி vs ஓவியா என்றொரு போட்டி நடைபெற்று வருகிற சூழலில், பிந்து மாதவி யாருக்கு ஆதரவாக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.

பிந்து மாதவி திடீரென நிகழ்ச்சிக்குள் நுழைந்திருப்பது சமூகவலைத்தளத்திலும் பலவிதமான ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஓவியா ஆர்மி என்றொரு ரசிகர் படை இயங்கி வருகிற வேளையில் பிந்து ஆர்மி என்றொரு புதிய ரசிகர் படையும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து பிந்து மாதவி குறித்துப் பதிவுகள் எழுதியதால் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் டாப் 10-ல் டிரெண்டிங்கில் பிந்து ஆர்மி ஹேஷ்டேக் இடம்பிடித்தது. 

இதனால் வரும்நாள்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா vs பிந்து மாதவி போட்டி உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

bb_5.jpg

bb3.jpg

bb_2.jpg

bb_1.jpg

bb_6.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/31/bigbosstamil_oviya_bindumadhavi-2747153.html

Link to comment
Share on other sites

''ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..!'' - விமல்

 
 

"நமிதாவை நடுங்கச் செய்த நாட்டாமையே...ஆர்த்தியை அரைவிட்ட ஆளுமையே...காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே...பரணிக்கு பாய் சொன்ன பாசமே...தங்கத் தலைவி ஓவியா பிக் பாஸ் டைட்டில் பெற வாழ்த்துகள்" என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் புதுக்கோட்டையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அங்கு மட்டுமல்ல தமிழ்க் குரலின் ஒட்டுமொத்த ஒலியையும் ஒற்றை நிகழ்ச்சியில் தன்வசப்படுத்திய பிக் பாஸ் அழகி ஓவியா. அடுத்த சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக நின்றால் கூட வெற்றி வாக்கை மக்கள் அள்ளித்தெளிப்பார்கள் என்பதில் தொடங்கி அகில இந்திய ஓவியா பேரவை தொடங்குவது வரைக்கும் எங்குப் பார்த்தாலும் ஓவியா மயம்தான். ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட்டராக மாறியதோடு மட்டுமல்லாமல், கல்லூரிப் பெண்களும் ஓவியாவைப் போல் அனைத்துக்கும் 'டேக் இட் லைட்' பாலிசியை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் ஓவியா ஆர்மி வெற்றியின் வேற லெவல்.

இப்படி பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சுபவர்களை சும்மா விட்டால் நிகழ்ச்சி ஒரு நிலையில் மட்டும் வளர்ந்து கொண்டே போகும். அதாவது, தராசின் ஒருபக்கத்தில் ஓவியாக்கான மாஸ் மற்றும் வெயிட்டேஜ் மட்டும்  கூடிக்கொண்டே போகும். அது நாளடைவில் ரசிகர்களுக்கு சலிப்புணர்வைக் கூட்டலாம். ஒரு சிறிய தவறு ஓவியாவின் பக்கம் நிகழ்ந்தாலும் கூட அதை பெரிதுபடுத்தி விடுகின்றனர் நெட்டிசன்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிக் பாஸ் வீட்டில் ஓவியா முதன் முறையாக அழுததை அனைத்து மட்டங்களிலும் வெவ்வேறு நிலையில் பார்த்ததுதான். இப்படி ஓவியாவுக்கு நிகழும் சிறு சிறு மாறுதல்களைக் கூட அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கும் நெட்டிசன்களுக்கு புதிய தீனி  போடவே பிந்துவை உள்ளே சேர்த்துள்ளனர். இதை 'Retaining Situational Equilibrium' என்றும் உளவியல் ரீதியாகக் கூறலாம். அதாவது சூழலுக்கு ஏற்றாற்போல் சமநிலையைக் கொண்டுவருவது.

ஓவியா

இதனடிப்படையில், 15 பேரில் 6 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 9 பேர் மட்டுமுள்ள நிலையில், 34வது  நாளன்று புது போட்டியாளரைக் களமிறக்கியுள்ளது பிக் பாஸ். கமல் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் அனைவைரையும் 'வாவ்' போடா வைத்த ரகம்.

'தெலுங்கில் பிக் பாஸ் நடந்தாலும் தமிழ் பிக் பாஸ்தான் எனக்குப் பிடிக்கும்" என்றும் ’வீட்டுக்குள் நுழைந்தவுடன் உங்களுக்கு யார் போட்டியாளராக இருப்பார்’ என்றும் கமல் கேட்டதுக்கு, "கண்டிப்பாக எல்லாருக்கும் தெரியும்; ஓவியாதான் எனக்கு போட்டி" என்று மிக இயல்பாக பதிலளித்துள்ளார். 

பிந்து மாதவி பிக் பாஸ்

மேலும், இதுகுறித்து பிந்து மாதவி மற்றும் ஓவியாவின் ஜோடியாக திரைப்படங்களில் நடித்து இருவரிடமும் நட்பு பாராட்டி வரும் நடிகர் விமலிடம் சில கேள்விகளைக் கேட்டோம். இவர் ஓவியாவுடன் களவாணி, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு போன்ற படங்களிலும் பிந்து மாதவியுடன் தேசிங்கு ராஜா, கேடி பில்லா  கில்லாடி ரங்கா  போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

பிந்து மாதவி-விமல்-ஓவியா

"பிக் பாஸ் தொடர்ந்து பாக்குறீங்களா? அதைப் பற்றி உங்களோட கருத்து..."

"நான் தொடர்ந்து பார்க்க ட்ரை பண்றேன். பெரும்பாலும் எல்லா எபிஸோடுகளையும் பார்த்துருவேன். ஷூட்டிங் இருக்குற சமயங்களில் மட்டும் மிஸ் பண்றதுண்டு. இருந்தாலும் ஓவியாவுக்காக நெட்டுல பாத்துருவேன். ஆனா, அந்தக் கண்ணீர் விட்ட எபிஸோடை மட்டும் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். இப்போவாரைக்கும் பார்க்க முடியல. மத்த சீரியலோட ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிக் பாஸ் நல்ல நிகழ்ச்சிதான். அதனால தானே மக்களும் அதிகமா விரும்புறாங்க...பார்க்குறாங்க..."

"ஓவியாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமா இருக்குறதைப் பத்தி என்ன நெனைக்குறீங்க?"

"மக்கள் நெனைக்குறது கரெக்ட்தான். அவங்க உண்மையா இருக்கறதுனாலதான் உண்மையான அன்பும் கிடைக்குது. அதுமட்டுமல்லாம, களவாணி படத்தோட பாதிப்பும் லேசா இருக்குதுன்னு நினைக்குறேன். ஓவியா இப்போ மட்டுமில்ல அந்தப் படத்துல கியூட் ஸ்கூல் பொண்ணா நடிச்சதுல இருந்தே மக்கள் மனசை கவந்துட்டாங்கனுதான் சொல்லணும். ஏன்னா அந்தப் படம் கிராமத்துப் பக்கம் நல்ல வரவேற்பை அள்ளுச்சு. தவிர  அவங்க வீட்டுக்குள்ள சும்மா இருக்காம ஏதாவது ‘துறு துறு'னு செஞ்சுக்கிட்டே இருக்குறது பார்குறவங்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கு. அது ரசிக்குற மாதிரியும் இருக்கு. அதனால எல்லாரும் ஓவியாவை அவங்க வீட்டுப் பொண்ணா நெனைக்கிறது எனக்கும் சந்தோசம்தான்."  

ஓவியா

"நீங்க செட்டுல பார்த்த ஓவியாவுக்கு இப்போ வீட்டுல பார்க்குற ஓவியாவுக்கு ஏதாச்சும் வித்தியாசம் இருக்கா?"

"வித்தியாசமா...நோ சான்ஸ்...ரெண்டு ஓவியாவும் ஒரே மாதிரிதான். என்னைப் பொறுத்தவரை அவங்க நேரத்துக்கு நேரம் மாறுகிற ஆளு இல்லன்னு நெனைக்குறேன். அவங்க தன்னோட துக்கத்தைக் கூட யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க. அவங்க அம்மா இறந்த விஷயமே எனக்கு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரியும். தன்னை சுத்தி இருக்குறவங்களை சந்தோஷமா வச்சுக்கணும்னு அவங்க எப்பயும் நெனக்கிறது உண்டு. செட்டுல எப்படி ஓவியாவை  பார்த்தேனோ, 90% அப்படியேதான் இருக்காங்க. மீதி என்ன அந்த 10% மாற்றம்னு உடனே யோசிக்காதீங்க. அது அந்தப் படத்துக்காக அவங்க கொடுக்குற கேரக்டர் சேன்ஜ் ஓவர்."

"ஓவியா-பிந்து மாதவி ரெண்டு பேரும்  எப்படி...'

'ரெண்டு பேருமே அச்சு அசலா ஒரே மாதிரி கேரக்டர்தான். ரொம்ப பொறுமையா இருப்பாங்க. சூழ்நிலையை நல்லா அலசி ஆராய்ந்து அதுக்கேத்த மாதிரி நடந்துக்குற பக்குவம் ரெண்டு பேருக்குமே உண்டு. ஷூட்டிங் ஸ்பாட்ல கூட ரொம்ப சகஜமா பழகுவாங்க. எல்லாரையும் ஈர்க்குற மாதிரி துறு துறு கேரக்டர்ஸ். செம்ம ஜாலி பர்சனாலிட்டீஸ்."

"சரி...அப்போ ரெண்டு பேரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள எப்படி இருப்பாங்கனு நெனைக்குறீங்க?"

"பிக் பாஸ் சரியாத்தான் பிந்துவை களம் இறக்கியிருக்காரு. ரெண்டு பேருக்குமே போட்டிகள் வரலாம். ஆனா, எதையுமே கூலா ஹேண்டில் பண்ற ஆளுங்க அவங்க. சொல்லப் போனா பிந்துவும்- ஓவியாவும் வேற வேற இல்ல. ஆனா, பிந்துவுக்கு ஏற்கெனவே உள்ள நடந்த பல விஷயங்கள் தெரியும். பிக் பாஸ் வீட்டை அவங்க ஒரு பார்வையாளரா நல்லா அலசி ஆராய்ந்துருப்பாங்க. ஓவியாவை இந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். அதனால, பிந்து சூழ்நிலை தெரிஞ்சு நடிக்கப் போறாங்களா, இல்ல உண்மையா இருக்கப் போறாங்களான்னு பொறுத்திருந்துப் பார்க்கலாம்." 

ஓவியா-பிந்து மாதவி

"உங்களைப் பொறுத்தவரை யாரு வெற்றிவாகை சூடுவாங்க..."

'ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது'ன்றதோட எதுவுமே நிரந்தரமும்  கிடையாது'ன்றதையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க. அதுதான் உண்மையும் கூட. நாளைக்கு நிலவரம் என்னன்னு நமக்கே தெரியாது. ஸோ, யாரு ஜெயிப்பாங்கன்னு நான் ஒருபோதும் கணிக்க மாட்டேன்."

"உங்க ஓட்டு யாருக்கு பாஸ்..."

"இப்போதைக்கு என்னோட ஆதரவு ஓவியாவுக்குத்தான். இது அவங்க என்னோட நட்பு'ன்றதுக்காக சொல்லல, எல்லாமே அவங்களோட கேரக்டருக்குக் கிடைத்த அங்கீகாரம்னுதான் சொல்லணும். பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டுக்குள்ள எப்படி இருக்குறாங்கனு பார்த்துட்டு அவங்களுக்கும் என்னோட ஆதரவைத் தெரிவிப்பேன். ஏன்னா ரெண்டு பேருமே ஒரே மாதிரி தானே."

"பிக் பாஸுக்கு உங்களை கூப்பிட்டா போவீங்களா?"

 

"எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராம சும்மா இருந்தா போவேன். அதுமட்டும் இல்லாம இத்தனை நாள் ஒரு வீட்டுக்குள்ள இருக்குறது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும்.  நான் கூத்துப்பட்டறைல  கொஞ்ச காலம் ட்ரைனிங்ல இருந்தேன். அங்கேயும் இப்படித்தான் 15 பேரோட சேர்ந்து பயணிச்சது ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துச்சு. கதையைக் கேட்கும் போது நீங்க இந்த கேரக்டராவே மாறணும்னு  சொல்லிக்கொடுத்து நடிப்புத் திறனை வளர்த்தாங்க. அதே மாதிரிதான் பிக் பாஸ்லையும்'கேரக்டர் கேமெல்லாம் வைக்குறாங்க. அதைப் பார்க்கும் போது ...ச்சா..நம்ம இதை எப்பவோ பண்ணிட்டோமே'ன்னு நெனச்சுக்குவேன். ஸோ, அப்படி ஒரு வாய்ப்பு வந்தா பார்ப்போம்" என்று முடித்தார் விமல். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/97551-bindhu-madhavi-will-beat-oviya-in-only-one-aspect-says-actor-vimal.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.