Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

காரசாரமான குற்றச்சாட்டுக்களும் பதில்களும் (காணொளி)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இவ்வார மின்னல் நிகழ்ச்சியில்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்ட மின்னல் நிகழ்சி உங்களுக்காக

 

http://www.tamilkingdom.com/2017/04/456_18.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன்
   ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
   அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

   கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பங்கேற்பதை ஊக்குவித்துவந்தார். அந்தக் காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான பரப்பை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்த புலம்பெயர் இளைய தமிழ்ச் செயற்பாட்டாளரே கம்சி. இன அழிப்புப் போர் நடந்தபோது பொதுவெளியில் போராட்டங்களில் இவர் பங்குபற்றியதும், பகிரங்கமாகக் குரல்கொடுத்ததும், செய்திகளைத் துல்லியமாகப் பின்பற்றியவர்களுக்குத் தெரியும்.
   ஆனால், இவரது அரசியல் வாழ்க்கை பின்னர் ஒரு திசைதிருப்பத்தைக் கண்டிருக்கிறது. பலரும் இந்தத் திருப்பத்தை காணத் தவறிவிட்டனர். இந்தத் திருப்பத்தின் பின்னர் தற்போது இவர் ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து, தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்..
   கம்சி சிலவருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன போன்றவர்களைச் சந்தித்துவிட்டு விடுதலைப் புலிகளை விமர்சித்தது மட்டுமல்ல, தற்போது இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதியையும் அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டுவருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
   ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியில் பெண்களுக்குச் சமபங்கு கொடுக்கவில்லை என்று தவறான காரணத்தைத் தேடிப்பிடித்துக் கூறியிருந்தார். இதனால், உலகளாவிய தமிழர் சமூகத்திடம் இருந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஏனெனில், பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் பல வேலைத் திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குபற்றியதைச் சர்வதேசமே அறியும். அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் அரசியற்குழுவின் வெளிநாட்டுப் பயணங்களிலும் சந்திப்புகளிலும் பெண்கள் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்கள் என்பது நான் மட்டுமல்ல முழு உலகுமே அறிந்த உண்மை.
   2011ம் ஆண்டுக்குப் பிறகு, நோர்வேயில் தமிழர் ஆதரவுக்கு அப்பால் அரசியலுக்கு வரக்கூடிய ஓர் அரசியல்வாதியாக இவர் உருவெடுத்திருக்கிறார். ஒஸ்லோ நகரின் துணைமேயராக இருந்த இவர் தற்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியே நோர்வேயின் ஆளும் தரப்பாக தற்போது அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
   எரிக் சொல்கைம் முன்னர் சொல்லிவந்ததற்கும் கம்சி தற்போது சொல்லத் தலைப்பட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக, கடுமையான அதிருப்தியை அவருக்கும், அவர் சார்ந்த தமிழர் குழாத்தினர் எவரும் இருந்தால் அவர்களுக்கும், பதிவுசெய்யவேண்டிய கடமை ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக எனக்கு இருக்கிறது.
   தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

   ஜி. எஸ். பி. பிளஸ் போன்ற சலுகைகளை ஐரோப்பா இலங்கை அரசுக்கு வழங்குவது சரியல்ல, இலங்கை அரசு மீது புறக்கணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்திவரும் இந்தக் காலத்தில், கம்சி இலங்கை அரசுமீது புறக்கணிப்புகளை நோர்வே மேற்கொள்ளக்கூடாது என்பதைத் தனது கருத்தாகவும் தனது அரசியற் கட்சியின் கருத்தாகவும் முன்வைத்து வருகிறார். இதையே நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கையாகவும் இவர் எதிர்பார்க்கிறார்.
   அதேவேளை இலங்கைத் தீவில் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது எதிர்கால நல்லிணக்கத்துக்கு நல்லது என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்தையும் முன்வைத்திருக்கிறார். ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக, இன அழிப்புக்கு உட்பட்ட ஈழத்தமிழரின் புலம் பெயர் முனைப்பின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்த இவர், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை யைக் கோருவதற்குப் பதிலாக, இங்கே நடைபெற்ற போரை விசாரிக்கவேண்டும், போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று ஐ. நா. மட்டுப்படுத்தி முன்வைக்கும் கருத்து நிலையை மட்டுமே தானும் முன்வைக்கிறார்.
   இந்த அடிப்படையில் மட்டுமே இவர் சர்வதேச விசாரணை நல்லதென்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறாரே அன்றி, இத்தீவில் நடைபெற்றது இன அழிப்பு, அதற்கும் மேலாக, இன அழிப்புப் போராக அது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் சார்பாக 2009 இல் தான் எடுத்திருந்த கருத்துநிலையில் மடைமாற்றம் கண்டு தற்போது பின்னடித்திருக்கிறார். அதாவது ஈழத்தமிழரின் கோரிக்கைக்குப் பதிலாக, சர்வதேசம் மட்டுப்படுத்தி முன்வைக்கும் இணக்க அரசியலுக்கே இவர் குரல்கொடுக்கிறார்.
   புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக, அதுவும் ஈழத்தமிழர் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட இவர், ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிலைப்பாட்டை முன்னெடுக்காதுவிட்டாலும், எதிர்மறையான கருத்தியலை ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்காது விட்டாலே போதுமானது.
   குறிப்பாக, சிறீலங்கர்களாக ஒருங்கிணையுங்கள் என்று அவர் எம்மைப்பார்த்துச் சொல்லத் தலைப் பட்டிருக்கிறார். இலங்கை அரசோடு பேசவும் தயார் என்று இவர் சொன்னதாக சில செய்திகள் ஊடகங் களிலும் வெளியாகியுள்ளன. இந்த வார்த்தையை வேறு சில புலம்பெயர் அமைப்புகளும் சொல்வதாக சர்வதேச சக்திகள் ஊக்குவித்துவருவதும் தெரிகிறது.
   ஈழத்தமிழர்கள் ஒரு மக்களாகத் திரட்சியடைந்தவர்கள். ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்பவர்கள். முதுகெலும்பு முறிக்கப்பட்டாலும் எமது தேசியத் தன்மையை உடைய விடமாட்டோம் என்ற அரசியலை ஜனநாயக வழியில், சர்வதேச நீதிகோரி முன்னெடுத்துவருபவர்கள். அவர்களின் வாரிசாக கம்சி மாறவேண்டும். அதற்கு அவருக்கு அறிவு தேவையென்றால் அதை வழங்க ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக நான் தயாராக உள்ளேன்.
   இந்த நேரத்தில் தான், நோர்வேயின் தற்போதைய பெண் பிரதமரான ஆர்ணா சூல்பேர்க்கிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வலது சாரிக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டை இதுவரை முன்னெடுத்துவந்திருக்கிறார். ஆனால், ஆட்சிக்கு வரவுள்ள தொழிலாளர் கட்சி, தான் எடுத்திருக்கவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக ஓர் இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு குந்தகமான காரணி இருப்பதாக எனக்குப் படுகிறது.
   அப்படி ஏதாயினும் இருக்கிறதா என்பதை நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர் அரசியல் அமைப்புகள், அவர்களது ஊடகங்கள், ஆராய்ந்து விரைவாகத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கிறேன்.
   இந்த அடிப்படையில், பெண் அரசியல் ஆர்வத்தோடும் ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமெடுத்து கம்சியின் மடைமாற்றம் கண்ட அரசியற் பின்னணி குறித்து நான் ஓர் ஆய்வை மேற் கொண்டுவருகிறேன். அதிலே கிடைக்கும் தரவுகளை அனைவருக்கும் பொது விளக்கத்திற்காக முன்வைக்கவும் தயாராக இருக்கிறேன்.
    
   https://thinakkural.lk/article/143011
    
  • By sudaravan
   வரும்  பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும்   கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என   தமிழகத்தில் இருந்து உணர்ச்சி பாவலர் - காசி ஆனந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   http://www.pathivu.com/news/42250/57//d,article_full.aspx
  • By Manivasahan
   https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xft1/v/t42.1790-2/11251030_10206451996852519_18423848_n.mp4?efg=eyJybHIiOjQyOCwicmxhIjoxMTg1fQ%3D%3D&rl=428&vabr=238&oh=57fcf0a54d1e9b4d2acb6beb4389ec28&oe=55CA17C3
    
    
   "இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?".
   என்று கேட்டிருக்கிறாராம் மாவை.
   இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவில் உல்லாசச் சற்றுலா சென்றிருந்த மாவை சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு அப்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்ன என்பதோ மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தம்மர்ல இயன்றதைச் செய்து கொண்டிருந்தவர்கள் யாரோடு பேசினார்கள் என்ன பேசினார்கள் என்பதோ தெரிந்திருக்க நியாயமில்லை தான்.
   இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் ஊடக மையத்தில வைத்து மிக விளக்கமான ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.
   6 வருடங்களாக நித்திரையில் இருந்து விட்டு இப்போது தான் முழித்து மாவை கேள்வி கேக்கிறார். ஆராவது அந்த உடன்படிக்கையை அல்லது அந்தப் பேச்சில் என்ன பேசப்பட்டது என்பதை சொல்லி விடுங்கோ அப்பா..
  • By sudaravan
   தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென  வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

   தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன். அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வாக்களிக்க வேண்டும்.

   யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

   அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

   நீண்ட நெடிய போரில் என்னைப் போல இழப்புகளுக்கு முகம் கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன். அது மட்டுமல்ல, எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.பதிவு இணைய செய்தி

   மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும் இறுதிக்கணம் வரை சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்தசுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்(க)ப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.பதிவு இணைய செய்தி

   போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும், அந்தப் போரின் முடிவின் இறுதிக் கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக் கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார். அவருக்கு நடந்தது என்ன, எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இன அழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன் வைத்தேன்.பதிவு இணைய செய்தி

   உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், வடமாகாண சபை சார்பாகவும் முதன் முதலில் ஐ.நா மனித உரிமைசபையில் நேரடியாக இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான்கோரும் வரைவேறு எந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை உறுப்பினரோஅங்கு கலந்து கொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.பதிவு இணைய செய்தி

   என்னைக் கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரக் கூடாது என்று திரு.சுமந்திரன் அவர்கள் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன்.

   இன அழிப்புப் போரின் தாக்கத்தை நேரடியாகத் தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம் திறந்து பேசும் வாய்ப்புக்கள் உருவாகின.பதிவு இணைய செய்தி

   ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது என்னிடம் ஒரு நாட்டின் பிரதிநிதி திரு.சுமந்திரன் அவர்கள் இன அழிப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.

   உங்களைப் போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டு இன அழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள்.

   மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அண்ணையும் ஜெனிவாவில் இதேவிதமான கோரிக்கையை நேரடியாக கலந்து கொண்டு முன் வைத்தார்.

   உண்மையில், மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சிவாஜி அண்ணையையும் என்னையும் போன்ற சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம். எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பதத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒருவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சர்வதேச சக்திகளுக்கு நாம் தெளிவாக அந்த விடயத்தை எடுத்துச் சொல்லி விட்டோம்.பதிவு இணைய செய்தி

   ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி

   முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக்கூடாக, மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவிய ஒரு தீர்மானத்தை, வடமாகாணசபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி

   எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமானநிலை இருக்கிறது. ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன் செயலாளர் பான்கிமூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சில சக்திகள் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளகவிசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக, எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும், யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது.

   அதே போல எமக்குள் இருந்து எந்தக் குரல், எந்தக் கோரிக்கை ஒலிக்கக் கூடாது என்பதும் முக்கியமாகிறது.

   இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராது. வித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைச் செலுத்த வேண்டாம். அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்கயாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள்.

   வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தக்கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கைத் தயவு செய்து செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.பதிவு இணைய செய்தி

   இன அழிப்பில் ஆகுதியாக்காப்பட்ட எமது ஆன்மாக்களின் குரலாக நான் இதை வேண்டுகிறேன்.

   முதலமைச்சர் அவர்கள் கூட, நடுநிலை நின்று, ஆனால் பூடகமாக யாரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். நான் அதைக் கொஞ்சம் விளக்கமாகவே இப்போது சொல்லியிருக்கிறேன்.பதிவு இணைய செய்தி

   இலங்கைப் பாராளுமன்றின் கதிரைகளை யார் நிரப்பினாலும் பரவாயில்லை ஆனால், தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணையை சில சிக்கலான சக்திகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து குழி தோண்டிப் புதைப்பவர்களை மக்கள் ஆணை பெற்றவர்களாகத் தயவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டாம்.

   இறுதியாக நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

   நான் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்ற விரும்பினேன். இதற்கான காரணம் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே.

   பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து இன அழிப்புப் போருக்கு ஊடாக தமது வாழ்வைத் தொடரும் எமது உறவுகளுக்கு தன்மானத்துடனான, நீதியான வாழ்வையும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது.

   எனது குரலுக்குச் செவிசாய்க்கும் நட்பு உள்ளங்களை சர்வதேசப் பரப்பில் எனது கடந்த இரண்டு வருட அரசியல் வாழ்வில் நான் கண்டது எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

   நான் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக இருந்தவாறு எனது அரசியல் பணியை மேற்கொண்டிருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

   நான் எனது கட்சியை விட்டும், கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ, சுயேட்சையாக நிற்பதற்கோ ஒரு துளியும் திட்டமிட்டு இருக்கவில்லை.பதிவு இணைய செய்தி

   சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன். ஆனால், அந்த அழுத்தமும் பலனளிக்கவில்லை. என்னில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் இங்கு சொல்கிறேன்.பதிவு இணைய செய்தி

   தற்போது இருக்கும் சூழலில், இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறைவேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ்மக்களின் அபிலாசைகளைக்காக குரல் கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக்கட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்.பதிவு இணைய செய்தி

   ஆனால், சர்வதேச அரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம் கட்டும் பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு என்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி.

   மிகுதி மக்களான உங்கள் கைகளில் உள்ளது. என்றுள்ளது.
    
   http://www.pathivu.com/news/42040/57//d,article_full.aspx
  • By sudaravan
   இரு தேசம் ஒரு நாடு என்பது எமது நிலைப்பாடு இல்லை. அது மக்களின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடு. காலம் காலமாக ஏமாற்றப்படும் நிலையினை மக்கள் புரிந்துகொள்வதோடு மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை  யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
   அங்கு உரையாற்றிய கஜேந்திரகுமார் தமிழ் அரசியல் மாற்றம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும். இல்லையேல் எமது பிரச்சனைக்கு தீர்வு எட்டமுடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் புள்ளடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களின் புள்ளடியின் முக்கியத்துவத்தை நாம் இதன் மூலம் உணரவேண்டும். எமது இந்த புள்ளடி மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்றால் ஏன் தீர்வைப்பெறமுடியாது. ஆகவே எமது பிரச்சினைக்கு தீர்வை நாம் எட்டமுடியும். அதற்கு சரியான பாதையினை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்றும் கஜேந்திரகுமார்; மேலும் தெரிவித்தார்.
   இதனிடையே சிலர் தற்போது திம்பு பேச்சுவார்த்தை எனும் பேரில் மக்களிடம் வருகின்றார்கள். மக்கள் இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்.கூட்டமைப்பினை பொறுத்த வரை அங்கு ஒருசிலர் எடுப்பதே முடிவு. அவர்கள் தான் கட்சியின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள். அவர்கள் எடுப்ப தனை மற்றைய பங்காளிக்கட்சிகளால் மாற்றக்கூட முடியாது.மக்களை மீண்டுமொரு முறை ஏமாற்றும் வேலையென அவர் மேலும் சுட்டிக்காட்டினார். http://www.pathivu.com/news/41781/57//d,article_full.aspx
 • Topics

 • Posts

  • சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்.. இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்பதால் நான் நினைப்பதை எழுத முடியுமா தெரியவில்லை, ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.  
  • எனக்கெண்டா இந்தம்மாவை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள் போலுள்ளது. முதலாவது, ஒரு பதவியிலிருக்கும் பெண் முதல்வர், சிறை போவது இந்தியாவுக்கே அவமானம். இரண்டாவது, அம்மா..... எடப்பாடி போன்ற கொலைப் பின்புலம் இருந்தவர்களை அருகில் வைத்திருந்ததுடன், அவர்களை அவ்வப்போது அவமதித்தும் வந்துள்ளார். அம்மாவை கிளப்பினால், கொத்துச்சாவி நம் கையில் என்றும் நிணைத்திருக்கலாம்.
  • இன்னமும் இது தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.. சுற்றுபுற சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பான ACF (Australian Conservation Foundation) Suttor ஆற்றிலிருந்து இந்த coal mineற்கு தண்ணீர் எடுப்பது சம்பந்தமான வழக்கில் வெற்றி பெற்றுள்ளது. Traditional owners வழக்கிலும் பிரச்சனைகள்..  இவருடைய இந்த Carmichael coal mine பற்றிய விபரங்களை அறியும் பொழுது, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு செய்யும் செயல்களை பார்க்கும் பொழுது ஆபத்தான ஒருவர் என்பது தெரிகிறது..    @குமாரசாமிஇவரை ஏன் நெடுந்தீவிற்கு எல்லாம் போகசொல்கிறீர்கள்.. இருப்பதையும் அழிப்பதற்காகவா? 
  • இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்   நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரை குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டது என்று வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன     ஆர்யன் கானை பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, போதை விருந்து நடந்ததாக சொல்லப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. தவிர்க்க இயலா பல்வேறு சந்தேகங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை. பா.ஜ.க. அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/State/2021/10/27052437/Will-Shah-Rukh-Khan-target-his-son-Aryan-Khan-in-a.vpf
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.