யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Recommended Posts

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல் 
வந்துவிட்டால்.... 
காட்சிகள் தெரிவதில்லை! 
உறங்காத விழிகள் 
எரிகின்ற போதும்.... 
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன் 
 

Share this post


Link to post
Share on other sites

நான் ...............
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்  

Share this post


Link to post
Share on other sites

காலங்கள் மாறினாலும் 
உன் மீது நான் கொண்ட 
காதல் மாறாது.. 
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும் 
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!

&
கவிப்புயல் இனியவன் 

Share this post


Link to post
Share on other sites

ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++ 

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொரு பிறந்த நாள் .....
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!

நீ 
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!

மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!

&
சமுதாய கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

தொழிலாளியை .....

சுரண்டுவதற்கு  அவர்களிடம் ......

சதையில்லை .....

எலும்புகள் தான் மீதியாய் ......

இருக்கின்றன ...........!!!

 

குடிகாரர் மட்டுமல்ல .....

அரசியல் வாதிகளும் ....

உளறுகிறார் ................!!!

 

நீ 

தீக்குச்சி தலைக்கனம் ....

உன்னை சாம்பலாக்கும் ....!!!

 

&

சமுதாய கஸல் கவிதை 

கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

தூய்மையானது உலகில் நட்பு ஒன்றுதான். எங்களை தாங்கிக் கொள்ளும் தோழும் ஏணியும் நட்பு.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனிய பொங்கல் வாழ்த்துகள்
இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்
இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!

இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....
இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...
இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......
இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து......
இல்லறம் நல்லறமாக செழித்திட.......
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!

இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு......
இல்லத்தாரோடும் உறவுகலோடும்.....
இன்முகத்தோடு பொங்கலை உண்டு.....
இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......
இனிய உறவுகளுக்கு  இனியவனின்......
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!!

இரவு பகலாய் வயலில் புரண்டு......
இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....
இன் முகத்தோடு அறுவடை செய்து.....
இவுலகுக்கே உணவு படைக்கும்.....
இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு.....
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! 
 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
--------------

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ 
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

----------

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்
On 1/3/2017 at 8:56 PM, கவிப்புயல் இனியவன் said:

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்

 

Edited by கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++ 

நீ 
நட்புக்காக..... 
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்.... 
படாத பாடு படும் 
மனம் ...!!!

பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

தமிழன் ஜல்லி கட்டுக்காக .......
மட்டும் இங்கு போராடவில்லை ......
தமிழனை ஒரு சில்லியாய் .....
நினைக்காதே என்பதற்கு ........
சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!!

ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......
காளைகள் கூட அடங்காமல் ......
சீறிப்பாய்ந்தன  காளையை .....
அடக்குபவன் சீறிப்பாய் வான் ....
எனபதை மறந்து விடீர்களே .......???

போதும் உங்கள் அடக்குமுறை ......
இதற்கு மேல் அடக்கினால் ......
அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!!
தூபமிடாதீர்கள் இளைஞரின் ......
உணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....
தாங்கவே மாட்டீர்கள் ...............!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 

 

Share this post


Link to post
Share on other sites

அடுக்கு  மொழி பேசி .......
கவிதை எழுதும் நேரம் .....
இதுவல்ல -என்றாலும் .....
அடக்க நினைப்பவனை ....
அடுக்கு மொழியால் .....
சாட்டை அடி அடிக்கவே .....
அடுக்கு மொழியை ......
பயன்படுத்துகிறேன் ......!!!

ஜல்லியாய் பாயும் காளையை ......
கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......
தமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....
என்று தப்பு கணக்கு போடும் .....
சில்லறைகளே - நாம் கல்லறை ....
என்றாலும் நிறைவேறாது .....
உங்கள் எண்ணம் ..............!!!

பாய்ந்து வரும் காளைகள் ......
எங்கள் நெஞ்சின் மேல் .....
பாய் வதில்லை நாங்கள் .....
நெஞ்சுசோடு அணைக்கவே .....
பாய் கின்றான் - அடக்காதீர் ....
அடக்கினால் உங்கள் நெஞ்சின் .....
பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 
 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உணர்வின் வழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் வலி
தெரியுமா....?
பீட்டவுக்கு......!!! 

உணர்வின் மொழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!! 

வழி, வலி, மொழி.....
தெரிந்தான்
இளைஞன்......
திரண்டான்.........
புறப்படான்.......
போராடுகிறான்.....
தமிழன்.................!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

Share this post


Link to post
Share on other sites

கை பேசியில் .....
அரட்டை அடித்த ....
இளைஞன்......
கைபேசி வெளிச்சத்தில் ....
மிரட்டி வருகிறான் 
அடக்கு முறையினரை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில் உள்ள சிக்கல்கள், புறோக்கர் கூறுவது என்ன? என்கிற தலைப்பில் நாம் பிரசுரித்த பிற்பாடு அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த கவிதை இது.

 

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில் உள்ள சிக்கல்கள், புறோக்கர் கூறுவது என்ன? என்கிற தலைப்பில் நாம் பிரசுரித்த பிற்பாடு அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த கவிதை இது.

புரோக்கரும், யாழ்ப்பாண மாப்பிள்ளையும் உரையாடுவதாக இக்கவிதை அமைந்து உள்ளது.

யாழ்ப்பாண மாப்பிள்ளையின் கொழுப்பையும், எதிர்பார்ப்புகளையும் நக்கலாகவும், கிண்டலாகவும் வெளிப்படுத்தி உள்ளது.

வாரும் அண்ண வாரும் வாரும்

வார்த்தை ஜாலம் நூறும் கூறும்

ஆருக் கிந்த கிழடும் வேணும்

ஆட்டக் காரி போலும் போலும்

தென்ம ராட்சி பெண்கள் என்ன

தெய்வம் என்றோ எண்ணு கின்றீர்

என்னை பார்த்து வேணாம் எண்ட

எந்த பொண்ணு அண்ண உண்டு

பொண்ணும் கொஞ்சம் கற்ற தால

பொட்டி பாம்போ என்றும் ஐயம்

பண்ணும் கற்றாள் என்றே சொன்னீர்

பட்டம் கிட்டம் உண்டோ அண்ண

இந்த கால பெண்க ளுக்குள்

இன்னும் காதல் இல்லை என்றால்

சிந்திக் கத்தான் வேணும்அண்ண

செக்ஸில் ஏதும் வீக்கும் உண்டோ

அண்ணா பொண்ண பார்த்து டாக்டர்

அச்சா என்று கூற வேண்டும்

நண்பர் பொண்ண பார்த்து அண்ண

நக்மா என்று ஏங்க வேண்டும்

ஊருக் குள்ள கூட அண்ண

நூறு இலட்சம் தேறும் தேறும்

நீரும் கொஞ்சம் கூட்டி போடும்

நீட்டி போட்டா நல்லம் ஆகும்.

http://newtamils.com/

 

Share this post


Link to post
Share on other sites

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ 
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய் 
********
தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல் 
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல் 
********
தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Share this post


Link to post
Share on other sites

சொப்புக்குள் வண்ண வண்ண முத்துக்கள் கொட்டியிருப்பது போல் கவிதைகள் ஒவ்வொன்றும்  முத்து முத்தாய் இருக்கு....! tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாருக்கு யார்....
என்பதை இறைவன்....
சொல்லியிருந்தால்...
உன்னை நான்.....
விலக்கிஇருப்பேன் ....!!!

*****
அழகை.... 
நேசித்தவன் அறிவை... 
இழக்கிறான்......
பணத்தை .....
நேசித்தவன் பாசத்தை ....
இழக்கிறான்.....
குணத்தை 
நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!!

******

சின்ன சின்ன கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 

8 minutes ago, suvy said:

சொப்புக்குள் வண்ண வண்ண முத்துக்கள் கொட்டியிருப்பது போல் கவிதைகள் ஒவ்வொன்றும்  முத்து முத்தாய் இருக்கு....! tw_blush:

மிக்க நன்றி நன்றி 

Share this post


Link to post
Share on other sites

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!!

*******

எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்.....
கடல் கரைக்கு தெரியும் அலையின்.....
அன்பும் அரவணைப்பும் .....!!!

*******

சிந்திக்க சில வரிகள் 
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!

கவிப்பேரரசு வைரமுத்து, படம்: ப.சரவணகுமார்

 

p34aa.jpgவாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

p34.jpg

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

p6aa7.jpgசதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்

http://www.vikatan.com/juniorvikatan

Share this post


Link to post
Share on other sites

Image may contain: aeroplane and sky

பொழுது மங்கும் வேளையதில்

நீண்ட பறப்பில் இருந்த வான்பறவை

இலக்கில் இறங்கி ஓய்வெடுக்க..

நானும் காலாற இறங்கி அமர முதல்...

நீண்ட கியூவில் காத்துக்கிடப்பு.

 

உலகமெல்லாம்.. சுத்தி அடிச்ச போதும்

கண்டிராத கோலம்..

அந்த மண்ணில் மட்டும்

காக்கிகளும் பச்சைகளும் நீலங்களும்

சிவிலியன்கள் மத்தியில்

நல்லாட்சி என்றாங்கள்

இருந்தும்..

இன்னும் போர் ஓயவில்லை...?!

 

பண்பாட்டுக் குறைவோ

அதிகாரத் திமிரோ

தமிழன் என்ற முத்திரையோ..

இன்னும் அங்கு கெடுபிடிதான்..

மிரட்டல்களுக்கும் தட்டிப்பறிப்புகளுக்கும்

குறைச்சலில்லை. 

 

தெரிந்த சிங்களத்தைப் பேசி 

நானும்

சிங்களவனாகிக் காட்ட...

என் கொச்சைச் சிங்களம்

ராக்சி ரைவர்.. நீ தமிழா.. முஸ்லிமா

கேட்க வைச்சதில் வியப்புமில்லை.

Image may contain: sky, tree, outdoor, nature and water

 

எல்லாம் கடந்து

ஏசிக்கு மயங்கி இன்ரசிர்ரி ஏறி

இடிமுழக்க இழுவைகளோடு போய்

வடக்கே என்

ஊரை அடைகையில்..

யார் வரவேற்பாரோ

என்றிருக்க..

என் நேரம்

அங்கும் காக்கிகளும் பச்சைகளும் நீலங்களும்...

அவர் தம் கண்கள்

ஊருடுவிய பார்வைகளில்..

உலகோடு சேர்ந்தடிச்ச

வெற்றியின் வெறித்தனம் குறையவில்லை.

 

எல்லாம் போக

ஆட்டோவில் ஏறி

ஒரு உல்லாச உலா வருவம் என்றால்...

நாலு சந்திக்கொரு அலங்காரம்.

என்னடா சங்கதி என்று

எட்டிப்பார்த்தால்..

தமிழனை வெட்டி விழுத்தி கண்ட

வெற்றிப்பிரதாபங்கள் பிரதிபலித்தன.

யாரை நோவது தெரியவில்லை.!

 

ஊர் உள்ள போய்

வீட்டை காணியை பார்த்தால்..

அண்டை அயல் எல்லாம் மாறிக் கிடக்கு.

ஏட்டிக்குப் போட்டியாய் வாழ்ந்த அயல்வீடு

தரை மட்டமாய்க்கிடக்கு.

எல்லைக்கும் கதியாலுக்கும் சண்டை போட

அங்க எதுவும் இல்லை.

Image may contain: bird, plant, outdoor and nature

 

இரைக்கு ஏங்கும் நாரைகளும் கொக்குகளும் 

இப்ப குளம் குட்டை தேடுவதில்லை

வெற்றுக் காணிகளுக்குள்

இரை தேடுகின்றன.

அவைக்கும் இசைவாக்கத்தில்

குறைவில்லை...

தமிழர்களைப் போல

ஒட்டாத போதும் ஒட்டி வாழினம். 

எங்கும் ஒரு ஏக்கம்

மண்ணோடு கலந்து விட்டது

மக்கள் மனங்களில் பட்டு

கண்களில் தெறிப்பதில் குறைவேயில்லை. 

 

Image may contain: plant, flower, outdoor and nature

இருந்தாலும்..

தெற்கில் இல்லா வசதிகளோடு

தொடரூந்து நிலைகள் வடக்கில்..

மேற்குக்கு இணையாக

வசதிகளோடு வடக்கு..

இப்படி கண்டதில்

மனங்களில் ஒரு மாற்றம்.

அன்றாட தேவைகளுக்காக ஓடும் நிலையில்...

அரசியல் தேவைகள்

அருகிவிட்ட சிந்தனைகள்.

அடக்க வந்தவர்கள் கச்சிதமாய்

செய்து வரும் காரியங்கள்

மக்கள் தம் இசைவாக்கத்தில் பிரதிபலிக்க

தவறவேயில்லை. 

 

வாய்கள் மூடினாலும்

மனதுகள் மூடவில்லை.

கோலங்கள் மாறினாலும்

ஏக்கங்கள் மாறவில்லை. 

உள்ளே அடங்கிக் கிடக்கும் வேட்கைகளோடு

மக்கள்..

உச்ச இசைவாக்கம் தேடி.

நல்லிணக்கம்.. நல்லெண்ணம்.. சக வாழ்வு

கட்டாயக் கொட்டிலுக்குள்

மக்கள்..!

ஏக்கங்கங்களின் உறைவிடமாய்

என் சொந்த மண்..!

இன்று.!!

மக்கள் அரசியல் ஆசைகளில்

தேனும் பாலும் ஓடுவதாய்

மட்டும் தெரியவேயில்லை..!!!

Edited by nedukkalapoovan
  • Like 6

Share this post


Link to post
Share on other sites

 படங்களுக்கும் உள்ளதைச்சொல்லும் அழகான கவி வரிகளுக்கும் பாராட்ட்டுக்கள் !

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நிலாமதி said:

 படங்களுக்கும் உள்ளதைச்சொல்லும் அழகான கவி வரிகளுக்கும் பாராட்ட்டுக்கள் !

ஊர் வந்து போயிருக்கு போல் குருவி 

நல்லது அப்பப்ப வந்து போங்க ஏங்கி நிற்கும் வரிகளில் தெரிகிறது   வலிகள்  

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

 

இருந்தாலும்..

தெற்கில் இல்லா வசதிகளோடு

தொடரூந்து நிலைகள் வடக்கில்..

மேற்குக்கு இணையாக

வசதிகளோடு வடக்கு..

இப்படி கண்டதில்

மனங்களில் ஒரு மாற்றம்.

அன்றாட தேவைகளுக்காக ஓடும் நிலையில்...

அரசியல் தேவைகள்

அருகிவிட்ட சிந்தனைகள்.

அடக்க வந்தவர்கள் கச்சிதமாய்

செய்து வரும் காரியங்கள்

மக்கள் தம் இசைவாக்கத்தில் பிரதிபலிக்க

தவறவேயில்லை. 

------

ஏக்கங்கங்களின் உறைவிடமாய்

என் சொந்த மண்..!

இன்று.!!

ஏக்கங்களை.... பகிர்ந்த விதம் அழகு, நெடுக்ஸ்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு