-
Topics
-
Posts
-
விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் ``தன் டி.என்.ஏ தமிழகத்தைச் சேர்ந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்ஸன் 1950-ம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். தற்போது 69 வயதாகிறது. இவரின், விர்ஜின் குழுமம் டெலிகாம், உணவுத்துறை, ஏர்லைன்ஸ், விண்வெளிப் பயணம் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. இந்தியாவில் மும்பை முதல் புனா வரை ஹைப்பர்லூப் திட்டம் அமைக்கப்படவுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிர அரசு புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் திட்டங்களைக் கைவிடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. ஹைபர்லூப் திட்டம் இதைத் தொடர்ந்து, பிரான்ஸன் மகாராஷ்டிரா வந்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயை இன்று அவர் சந்திக்கிறார். ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய பிரான்ஸன், தனக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். அப்போது, ``தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக தன்னுடையை டி.என்.ஏ வைப் பரிசோதித்தபோது இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் 1793- ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது, என்னுடைய மூதாதையர் தமிழகப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். ``இந்தியர்களை நான் சந்திக்கும்போதெல்லாம், `ஒருவேளை நாம் இருவரும் உறவினர்களாக கூட இருப்போம்' என்று விளையாட்டாக கூறுவது உண்டு'' என்றும் பிரான்ஸன் கூறினார். விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் பிரான்ஸனின் மூதாதையர்களில் ஒருவரான ஜான் எட்வர்ட் 1793- ம் ஆண்டு முதன்முறையாக சென்னை வந்துள்ளார். இங்கிருந்து அவரின் குடும்பம் கடலூருக்கு நகர்ந்துள்ளது. இவரின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. https://www.vikatan.com/business/news/virgin-founder-richard-branson-says-about-tamil-nadu-connection?fbclid=IwAR2kB85kfYlnjZXTTed3ZfYJk17xkq00PUK4bldBR4ROuncFmbEJNaoFrmI
-
By ராசவன்னியன் · Posted
நாங்களும் மத்தள விமான நிலையத்தினை வாங்குறதா ஐடியா இல்லை - ராசவன்னியன்! 🤣 தமிழ் நாடு -
ஏற்கனவே பசுமை தானே பாதி லைட் எரியாது. காவாசி லைட் மின்னி மின்னி எரியும்.
-
இந்தியனுக்கு அடி விழுது!
-
நல்லது நடக்கட்டும்
-