• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • Ads by AdStudio #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2-wrap { width: 728px; position: relative; display: inline-block; max-width: 100%; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 { padding-left: 0; position: absolute; top: 0; right: 0; height: 18px; border-width: 1px 1px 1px 0; background: #f8eded; border-radius: 0 0 0 0; z-index: 2; } #ad_tag_placeholder-sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 { z-index: 1; position: relative; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2:hover { padding-left: 10px; border-radius: 0 0 0 10px; border-width: 1px; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2:hover .text-sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 { display: inline-block !important; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 .text-sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 { padding-right: 1px; display: none; font-size: 9px; line-height: 18px; height: 18px; text-transform: lowercase; color: #000; vertical-align: top; margin: 0; text-decoration: none; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 .icon-sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 { cursor: pointer; display: inline-block; vertical-align: top; height: 17px; width: 17px; text-align: center; } #sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 .icon-sponsoredTexta79a97b399b44f0644434446d51c12f2 svg { margin-top: 1px; width: 15px; height: 15px; fill: #00aecd; vertical-align: top; } பௌசியின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கம்- ஸ்ரீ ல.சு.க. நடவடிக்கை   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) இரவு இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அறிவித்தலை இன்று (22) பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு இணைந்த பௌசி எம்.பி.க்கு எதிராக விசாரணை மேற்கொள்ள ஸ்ரீ ல.சு.க.யினால் நியமிக்கப்பட்ட ஓழுக்காற்றுக் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/192767/
    • ஏப்ரல் 21 தாக்குதல்: மூன்று விடயங்களை முன்னெடுக்க ஜனாதிபதி பேராயரிடம் உறுதி   கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு  சுயாதீன குழு ஒன்றை நியமித்து அதன் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான  சந்திப்பொன்று நேற்று (21) கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராயர் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார். பலியான மக்களுக்கு இதுவரை நீதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என பேராயர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார். பேராயரின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் இடம் பெறாதவாறு தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை நியமித்தல், புலனாய்வுத் துறையை பலப்படுத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நஸ்ட ஈடுகளை உரிய முறையில் கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கப் போவதாகவும் ஜனாதிபதி இதன் போது பேராயரிடம் உறுதியளித்தார். http://www.dailyceylon.com/192769/
    • எம் உற‌வுக‌ளை த‌மிழீழ‌த்தில் இருந்து புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுப்ப‌தை எல்லாரும் நிறுத்தி கொள்ள‌னும் , ஊரில் அவைக்கு ந‌ல்ல‌ தொழில் செய்யும் வ‌ச‌தியை ஏற்ப‌டுத்தி குடுக்க‌னும் , அங்கையே அவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் செய்து பிள்ளைக‌ள் பெத்து எல்லா வ‌ச‌திக‌ளுட‌னும் அவ‌ர்க‌ள் வாழ‌னும் ,  புல‌ம் பெய‌ர் நாட்டில் உள்ள‌ எம் உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளின் ஊரில் உள்ள‌ க‌ஸ்ர‌ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ அள‌வு உத‌வ‌னும் ,  சிங்க‌ள‌வ‌ன் எதை எல்லாம் செய்து சாதிக்க‌ துடிச்சானோ அதை அவ‌ன் ம‌ற்ற‌ நாடுக‌ளின் உத‌வியோடு ச‌ரியாய் செய்து முடிச்சிட்டான் /  வெளி நாட்டு மாப்பிளை என்றால் தான் பொண்ணு குடுப்போம் என்று ஒற்றை காலில் நிக்கும் பொற்றோர்க‌ள் தொட்டு ப‌ல‌ரை ந‌ல்ல‌ அறிவுரை சொல்லி திருத்தி எடுக்க‌னும் , எம் முன்னோர்க‌ள் பாட‌சாலையில் ப‌டிச்ச‌ கால‌த்தில் 1000க்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ப‌டித்தார்க‌ள் , 25வருட‌த்துக்கு முத‌ல் பாட‌சாலையில் நாங்க‌ள் ப‌டிக்கும் போது 600 பிள்ளைக‌ளுக்கு கிட்ட‌ , இப்ப‌ 350க்கு கீழ‌ வ‌ந்திட்டு , இன்னும் கொஞ்ச‌ வ‌ருட‌ம் போனா த‌மிழீழ‌ பாட‌சாலை அனைத்தும் சிங்க‌ள‌ அர‌சாங்கத்தால்  சிங்க‌ள‌வ‌ர் த‌ங்கும் அழ‌கான விடுதிக‌ள் ஆக‌ மாற்றி அமைக்க‌ ப‌டும் , கார‌ண‌ம்  த‌மிழீழ‌த்தில் உள்ள‌ அனைத்து பாட‌சாலையிலும் ப‌டிக்க‌ த‌மிழ் பிள்ளைக‌ள் இல்லை என்ர‌ கார‌ண‌த்தால்  /
    • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
    • சம்பந்தனின் சாணக்கியம்.. சாம்பிராணி..ப்பா. கேட்டுப் பிரமியுங்கள் மக்களே.