• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • அடுத்த தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை!         by : Jeyachandran Vithushan சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர். சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையினை எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள. ஒருவர் சிறையில் இருப்பதால் அவருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகில் உள்ள பல நாடுகளில், கைதிகளுக்கும் தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதேபோன்ற முறையை இலங்கையிலும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் தற்போது இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் உள்ளனர் என்றும் அவர்களில் பலருக்கு வாக்குரிமை உள்ளதாகவும் குறித்த இரு அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. http://athavannews.com/voting-rights-sought-for-prisoners-at-next-election/
    • நானும் ஒரு தீவிரவாதிதான்- சீமான்   by : Yuganthini மக்களிடத்தில் முக்கியமான கருத்தை அல்லது கொள்கையை கொண்டு சேர்ப்பதால் நானுமொரு தீவிரவாதிதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் சீமான் மேலும் கூறியுள்ளதாவது, “ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுகிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் திட்டத்துக்கு  மக்கள் கருத்து தேவையில்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் அவர்தான். காங்கிரஸ் ஆட்சியின் போது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்ட போது தி.மு.க.ஆதரவு தெரிவித்தது. பா.ஜ.க.வுக்கு எதிரானது தி.மு.க.என இன்னும் மக்கள் நம்பி கொண்டுள்ளனர். மேலும் பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் நாங்கள், எங்கள் கருத்தை கொள்கையை தீவிரமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கிறோம். இதனால் நானுமொரு தீவிரவாதிதான்” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நானும்-ஒரு-தீவிரவாதிதான்/
    • இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருக்கக் கூடாது: சித்தார்த்தன்   by : Dhackshala புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசாங்கத்தில் நாம் எதிர்பார்த்ததை போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தேர்தலை மையப்படுத்தியோ அல்லது தேர்தலிற்கு பின்னரோ மாற்றங்கள் ஏற்படலாம். ஜனாதிபதி கோட்டாவை பொறுத்தவரை மாற்றங்கள் ஏற்படும் என்று கருதாவிட்டாலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது குற்றச்செயல்கள் கூடுதலாக இருக்கின்றன. எனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்ற அபிப்பிராயம் சில மக்கள் மத்தியிலே இருக்கிறது. பொதுவாக இது ஒரு இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும். மக்களின் பாதுகாப்பு என்பது முக்கிய விடயம். அது பொலிஸ் துறையின் கண்காணிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என மேலும் தெரிவித்தார். http://athavannews.com/இராணுவ-சோதனைச்-சாவடிகள்/
    • பரபரப்பான சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: சொந்த மண்ணில் தொடரை இழந்தது நியூஸிலாந்து!   by : Anojkiyan நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது ரோஹித் சர்மா 65 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 27 ஓட்டங்களையும், சிவம் டுபே 3 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 38 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேலும், மனீஷ் பாண்டே 14 ஓட்டங்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ஹமீஷ் பென்னட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் ஓட்ட இலக்கு சமநிலைப் பெற்றதால் சுப்பர் வழங்கப்பட்டது. இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், மார்டின் கப்டில் 31 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 14 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் 9 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 5 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்தியா அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி, யுஸ்Nவுந்திர சஹால் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். வெற்றியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 18 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, வெற்றி இலக்கை கடந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக 65 ஓட்டங்களையும், சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. http://athavannews.com/பரபரப்பான-சுப்பர்-ஓவரில்/