Jump to content

ஆடம்பரம் வேண்டாம்!தொண்டர்களுக்கு ஜெ!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே கிடையாது. ஒவ்வொரு நாளும் செய்யும் பணியை மேலும் சிறப்பாக செய்யக் கற்றுக் கொண்டால் நம்முடைய வளர்ச்சியை, வெற்றியை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தனது பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன் பிறப்புகளே. உலகில் வாழும் அத்தனை பேரையும் கட்டிப் போடுவது ஈடு இல்லாத அன்பு தான். தங்களிடம் உள்ள ஈடற்ற அன்பை, பாசத்தை, பற்றை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதன் மூலம் நம்முடைய இதயம் விரிவடைகிறது. அதன் மூலமே நற்பண்புகள் அழகாகப் பிரகாசிக்கின்றன.

அந்த வகையில் என்னுடைய பிறந்த நாளன்று என் மீது உள்ள அன்பின் மிகுதியால் எனக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். என்னுடைய பிறந்த நாள் நிகழச்சிகளாக, கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் எவ்வித ஆடம்பரமும் இன்றி, எந்த வீண் செலவுகளையும் செய்யாமல், அவரவர் சக்திக்கு உட்பட்ட வகையில் ஏழைக்களுக்கு அன்னதானம் வழங்கினால், அவர்களுக்கு தேவைப்படுகின்ற உதவிகளைச் செய்தால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை நம்முடைய வாழக்கையின் குறிக்கோள் ஆக்கிக் கொண்டால், ஏழை எளியோர் என்கிற சமூகம் காப்பாற்றப்படும். பின்னர் நாளடைவில் ஏழை, எளியோர் என்கிற சமுதாயமே இல்லாத அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

அதற்கான அஸ்திவாரத்தைத் தந்தவர்கள் நம்முடைய இயக்கத் தொண்டர்கள் தான் என்பதை நாடே அறிந்து, கழகத் தொண்டர்களின் வரலாற்றுப் பணிகளை எண்ணி பெருமை பொங்க தலைமுறை தலைமுறையாக அப்பணி போற்றப்படும்.

மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரகளில் தொடங்கி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குக்கிராமம் வரை அனைத்து இடங்களிலும் அதிமுக கொடிக் கம்பங்களுக்கு புதுவண்ணம் பூசி புதுப்பிக்கப்பட வேண்டும். அவை இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்கள் வைக்க வேண்டும்.

என்னுடைய பிறந்த நாளன்று அதிமுக வெற்றிப் பதாகை கொடிக் கம்பங்களில் பட்டொளி வீசி கம்பீரமாக எட்டுத்திக்கும் பறக்க விடப்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதன் மூலம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்ட கனவையும், லட்சியத்தையும், நம்முடைய நம்பிக்கையையும், கண்ணியத்தையும், தனித் தன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக நம் உயிருக்கு நிகரான அக்கொடி, புரட்சித் தலைவர் தந்த அண்ணா கொடி நம்முடைய வெற்றியை பறைசாற்றிக் கொண்டே பறந்து கொண்டு இருக்கும்.

அத்தோடு அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும், அனைத்து நகரங்களிலும், அனைத்து பேரூராட்சிகளிலும் அதிமுக அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை சொந்தக் கட்டிடத்தில் திறக்கப்பட வேண்டும்.

அதற்கான முயற்சிகள் எனது 59வது பிறந்த நாளன்று தொடங்கப்பட்டு, அடுத்த 2008ம் ஆண்டில் என்னுடைய 60ம் பிறந்த நாள் வருவதற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் கழக அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற தேனினும் இனிப்பான செய்தி என் காதுகளில் வந்து சேர வேண்டும்.

கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஆற்றுகின்ற இது போன்ற பணிகள் தான் கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கு மனதளவில் திருப்தியும், பெருமகிழச்சியும் அளிக்கக் கூடியவையாகும். அதுவே நீங்கள் எனக்கு வழங்குகின்ற முழுமையான மன நிறைவை அளிக்க கூடிய பிறந்த நாள் பரிசாகும்.

கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் மக்கள் தொண்டே நமக்கு தலையாய பணியாகும். ஆகவே அத்தொண்டையும், கழகப் பணியையும் நீங்கள் சலியாது ஆற்றுவதன் மூலம் நம் கழகத்துக்கு வலுவையும், பெருமையையும் தேடித் தருகிறீர்கள்.

முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே கிடையாது. ஒவ்வொரு நாளும் செய்யும் பணியை மேலும் சிறப்பாக செய்யக் கற்றுக் கொண்டால் நம்முடைய வளர்ச்சியை, வெற்றியை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது.

இந்த ஆண்டு கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் யாரும் என்னை பிறந்த நாள் அன்று நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/02...ayalalitha.html

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என் பிறந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம்- உதவி செய்யுங்கள் ஜெயலலிதா அறிக்கை

சென்னை, பிப். 20-

20ms04ur0.jpg

அவர் வெளி யிட்ட அறிக்கை வருமாறு:-

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத் தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனது அருமைக் கழக உடன்பிறப்புகளே!

உலகில் வாழும் அத்தனை பேரையும் கட்டிப் போடுவது ஈடு இல்லாத அன்பு தான்! தங்களிடம் உள்ள ஈடற்ற அன்பை, பாசத்தை, பற்றை மற்றவர்களிடம் வெளிப் படுத்துவதன் மூலம் நம்முடைய இதயம் விரிவடைகிறது. அதன் மூலமே நற்பண்புகள் அழகாகப் பிரகாசிக்கின்றன.

அந்த வகையில், என்னு டைய பிறந்த நாளன்று என் மீது உள்ள அன்பின் மிகுதியால் எனக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள்.

என்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளாக, கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் எவ் வித ஆடம்பரமும் இன்றி, எந்த வீண் செலவுகளையும் செய்யாமல், அவரவர் சக் திக்கு உட்பட்ட வகையில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், அவர்களுக்கு தேவைப்படுகின்ற உதவி களைச் செய்தால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

"நம் கடன் பணி செய்து கிடப்பதே'' என்பதை நம் முடைய வாழ்க்கையின் குறிக் கோள் ஆக்கிக் கொண்டால், ஏழை எளியோர் என்கிற சமூகம் காப்பாற்றப்படும். பின்னர் நாளடைவில் ஏழை, எளியோர் என்கிற சமுதாயமே இல்லாத அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதற்கான அஸ்திவாரத்தைத் தந்தவர்கள் நம்முடைய இயக் கத் தொண்டர்கள் தான் என்பதை நாடே அறிந்து, கழகத் தொண்டர்களின் வரலாற்றுப் பணிகளை எண்ணி பெருமை பொங்க தலைமுறை தலைமுறையாக அப்பணி போற்றப்படும்.

மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள், அவற்றிற்கு உட்பட்ட பகுதி கள், அவற்றிற்கு உட்பட்ட வட்டங்கள்; நகரங்கள், நகரங்களில் உள்ள வார்டு கள்; பேரூராட்சிகள், பேரூராட் சிகளுக்கு உட்பட்ட வார்டுகள்; ஒன்றிய தலைமை இடங்கள், ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்கள், கிராமங்களில் உள்ள குக்கிராமங்கள்- இப் படி மாவட்டத் தலைநகரங் கள் தொடங்கி, தமிழகத் தில் உள்ள ஒவ்வொரு குக்கி ராமம் வரை அனைத்து இடங் களிலும், அ.தி.மு.க. கொடிக் கம்பங்களுக்கு புது வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட வேண்டும். அவை இல்லாத இடங்களில் புதிய கொடிக்கம்பங்கள் வைக்கப்பட வேண்டும்.

என்னுடைய பிறந்த நாளன்று, அ.தி.மு.க. வெற் றிப்பதாகை கொடிக் கம்பங் களில் பட்டொளி வீசி கம்பீர மாக எட்டுத் திக்கும் பறக்க விடப்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

அதன் மூலம் இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள் கண்ட கன வையும், லட்சியத்தையும், அடையாளத்தையும், நம் முடைய நம்பிக்கையையும், கண்ணியத்தையும், தனித் தன்மையையும் வெளிப் படுத் தும் விதமாக நம் உயிருக்கு நிகரான அக்கொடி, புரட்சித் தலைவர் தந்த அண்ணா கொடி நம்முடைய வெற்றியை பறைசாற்றிக் கொண்டே பறந்து கொண்டு இருக்கும்.

அத்தோடு அனைத்து மாவட்டத் தலைமை இடங் களிலும், அனைத்து நகரங் களிலும், அனைத்து ஒன்றியத் தலைமை இடங்களிலும், அனைத்து பேரூராட்சிகளிலும், அ.தி.மு.க. அலுவலகங்கள் ஏற் படுத்தப் பட்டு அவை சொந்தக் கட்டிடத்தில் திறக்கப்பட வேண்டும்.

அதற்கான முயற்சிகள் எனது 59-வது பிறந்த நாளன்று தொடங்கப்பட்டு, அடுத்த 2008-ஆம் ஆண்டில் என்னுடைய 60-ம் பிறந்த நாள் வருவதற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் கழக அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற தேனினும் இனிப்பான செய்தி என் காதுகளில் வந்து சேர வேண்டும்.

கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஆற்றுகின்ற இது போன்ற பணிகள் தான் கழ கப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கு மனதளவில் திருப்தியும், பெருமகிழ்ச்சியும் அளிக்கக் கூடியவையாகும். அதுவே நீங்கள் எனக்கு வழங்குகின்ற முழுமையான மன நிறைவை அளிக்கக் கூடிய பிறந்த நாள் பரிசாகும்.

கழகம் ஆட்சியில் இருந் தாலும், இல்லாவிட்டாலும், என்றும் மக்கள் தொண்டே நமக்கு தலையாய பணியாகும். ஆகவே, அத்தொண்டையும், கழகப் பணியையும் நீங்கள் சலியாது ஆற்றுவதன் மூலம், நம் கழகத்துக்கு வலுவையும், பெருமையையும் தேடித் தரு கிறீர்கள்.

முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே கிடையாது. ஒவ் வொரு நாளும் செய்யும் பணியை மேலும் சிறப்பாக செய்யக் கற்றுக் கொண்டால், நம்முடைய வளர்ச்சியை,

நம்முடைய வெற்றிகளை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அவ்வெற்றிகள் நமக்காகவே காத்திருக்கின் றன.

இந்த ஆண்டு கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் யாரும் என்னை பிறந்த நாள் அன்று நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை நமதே!

அண்ணா நாமம் வாழ்க!

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!

இவ்வாறு அறிக்கை கூறப் பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளாக, கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் எவ் வித ஆடம்பரமும் இன்றி, எந்த வீண் செலவுகளையும் செய்யாமல், அவரவர் சக் திக்கு உட்பட்ட வகையில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், அவர்களுக்கு தேவைப்படுகின்ற உதவி களைச் செய்தால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

வளர்ப்பு மகனின் கல்யாணச் செலவும், மக்கள் குடுத்த வரிப்பணத்தினை சுருட்டினதும் தான் யாபகத்துக்கு வருகிறது

Link to post
Share on other sites

அதான் ஜெயா டீவி பார்க்கிறோமில்ல! ஜெயா டீவியில் சுருட்டும் பணத்தின் ஒரு பகுதியை அன்னதானத்திற்கு பாவிக்கலாமே?

காசு அனுப்புவதற்கு ஜெயா அம்மாவின் வங்கிக்கணக்கு இலக்கத்தை கூறவில்லையே? அல்லது ஜெயா அம்மாவிற்கு உண்டியலில் பணம் அனுப்புவதற்கு அவவின் வீட்டு விலாசமாவது தரமுடியுமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எளிமையை பற்றி கதைக்கும் ஆளை பாருங்க நூற்றுக்கணக்கில் செருப்பு வச்சிருந்தவரல்லா இவர்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானும் செல்வன் சீரியலில் நடித்து புகழ் சேர்த்தா பிறகு இப்படி தான் அறிக்கையெல்லாம் விடுவேன்..யாரும் கண்டு கொள்ள கூடாது! :rolleyes: :P

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.