Jump to content

தேவதைகளின் கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

POETRY OF THE ANGELS
தேவதைகளின் கவிதை
.
இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்?
.
ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது.
.
என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்றுக்கொண்டவையே. 
.
இந்தக் கவிதை மட்டுமன்றி என்னுடைய எல்லாக் கவிதைகளிலும் எனது பெயருடன் அன்பளிப்புச் செய்தவர் பெயர் என நான் கண்ட கேட்ட கருதிய அல்லது வாசித்த சித்தம் அழகியரின் பெயரும் எழுதியிருக்கும். எல்லாப் புகழுக்கும் உரியர் என உலகளாவிய என் தோழியரை வாழ்த்திப் பணிகிறேன். 
 .
இன்றைய மது

வ.ஐ.ச.ஜெயபாலன்
*

உலகம்விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு.
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
*
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
நிச்சயம் இல்லை நமக்கு
நாளைய மது அல்லது நாளை.
*
எனக்காக இன்று சூரியனை
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில்
நிலாவுக்காகஓரம்போகிற சூரியனே
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
*
கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
*
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
*
நனைந்த நிலத்தில்
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
*
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.

2004

Link to comment
Share on other sites

நன்றி காவலூர்க் கண்மணி.

காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.

உங்கள் கனவுகள் கனியட்டும். நல்வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.