Jump to content

 தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

   தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை

தன் முதற் பேறாய் என்னைக்  கருவுற்ற வேளை
உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை
மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது
பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது

காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து
அயலவர்க்கு அடையாளம் காட்டியது
முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது
மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது

முருங்கைக் கீரை சத்துணவானது
எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது
இளம் வெந்நீர்க் குளியலில்  உடல் சிலிர்க்கையில்
 குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது

என் தந்தை என்னே தாய்மை என்றார்
எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் 
நாட்கள் எண்ணும் வேளை தன்னில்
இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க 

அரசினர் வைத்திய சாலைக்கு அவசரமாய்
கார் பிடித்து ஓடினாள் .வேளை வந்ததென்று
மருத்துவிச்சி உதவியுடன்  வெளி உலகம் கண்ட போது 
 அதிர்ச்சியில் ஓலமிட்டு சிங்க குட்டியாய் வெளிவந்தேன்  


என் முகம் கண்ட பாட்டி ..என் குல விளக்கு என்றாள்
சாண் பிள்ளையானாலும்  ஆண்  பிள்ளை என்றார் அப்பா
உற்றாரும் உறவும் கூடி ஆராரோ  பாட்டுப் பாடி ..
அம்மாவின் அமுதம் அடிக்கடி  சுவைத்து

மெதுவாய் கண் விழித்து அம்மா மார் தடவ
அன்போடு ஊட்டினாள் ..தன் ரத்தம் பாலாக 
மாந்தம் வருமென்று மாம் பழம் விலக்கி 
ஒவ்வாத உணவுகளை  ஓரமாய்  வைத்தாள்

பாற் பல்லு  முளைத்தும் குறும்பன் நான்
குறும்பு செய்ய   வேப்பெண்ணையால் ...தடை யிடடாள் 
.பல் வேறு உணவுகளும் பழக்கிய பின்
தவனம் தீரவில்லை உறங்க  அணைக்கையிலே

பால் குடி மறக்க வைக்க பாட்டி  துணை வந்தாள் ...
அன்றைய என் தாய் எங்கே .  அவசர உலகில்
நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர
பாடுகிறது பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் ....


குறிப்பு....

                 .மாந்தம் ..(ஒருவகை  வயிற் றோட்டம்)
                 மருத்துவிச்சி ....மருத்துவமாது 
                  தவனம் ஒருவகை  தாகம் 
             
         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மையின் உருவகத்தை தத்ரூபமாய் தந்துள்ளீர்கள் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை என்பது இறைவன் படைப்பில் இணையற்ற செல்வம். அது வார்த்தைகளுள் அடங்காத ஓர் வரம். நிலாமதி உங்கள் கவிதையில் தாய்மையின் பெரும்பேறை தத்ரூபமாக எடுத்து கூறியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி இது உங்கள் அனுபவமா?

பத்து மாதத்தையும் சுருங்க சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா சூப்பர் அக்கா  பத்து மாதம் படாத பாடு படும் தாயின் நிலை புறண்டு படுக்க ............ நித்திரை தொலைத்த நாட் கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் எல்லா இடங்களிலும் தன்னால் எப்போதும் இருக்க முடியாது என்பதனால் தாயைப் படைத்தான் என்று கூறுகின்றார்கள்!

உங்கள் கவிதை ஒரு தாயின் அனுபவத்தை...அழகாகச் சொல்லிச் செல்கின்றது!

வாழ்த்துக்கள்...நிலாக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிலாமதி said:

-----பால் குடி மறக்க வைக்க பாட்டி  துணை வந்தாள் ...
அன்றைய என் தாய் எங்கே .  அவசர உலகில்
நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர
பாடுகிறது பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் ....      

பெண்... தாய்மை அடைந்ததை, கேள்விப் பட்ட உடனேயே....
உற்றார், உறவினர், அயலவர், நண்பர்  என்று ஒரு பெரும்  கூட்டமே  மகிழ்ச்சியில் கொண்டாடிய காலத்தையும்,
இப்போது... உள்ள காலத்தையும் நினைக்க, வரும் தலை முறை பலவற்றை மெல்ல இழந்து கொண்டு வருவதை நினைக்க கவலை ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மையை பற்றிய‌ அருமையான கவிதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எல்லாவற்றிற்கும் மேலானவள் தாய்தான்  
அனைத்து வலிகளையும் சுமப்பவளும்  தாய்தான்
ஆழமான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பாராட்டிய    கருத்து பகிர்ந்த   விருப்பு புள்ளியிடட   அனைவருக்கும் என் நன்றிகள் !!!

Link to comment
Share on other sites

நிலா மதி அக்கா அருமையான கவிதை உங்களுக்கு எனது பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.