Jump to content

எனக்கு ஒரு சந்தேகம்

Recommended Posts

1492ம் ஆண்டுகளில் 3 கப்பல்களில் பயணத்தை தொடங்கியதன் மூலம் உலகம் உருண்டையானது என கொல்ம்பஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது  வரலாறு.  சைவசமயத்திலே நாரதர் விளையாட்டுகளிலே மிக பிரசித்திபெற்ற மாம்பழ கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நிணைக்கிறேன்.நான் ஒரு சைவ அறிஞரோடு பேசியபொழுது இக் கதை கிட்டதட்ட 900 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கத்திலிருந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். இக்கதயை சுருக்கமாக பார்ப்போம், நாரதர் கொண்டு வந்த மாம்பழத்தை பெறுவதில் சிவபெருமானின் பிள்ளைகளான முருகனுக்கும் பிள்ளையாருக்குமிடையில் போட்டி. சிவபெருமான் தலையிட்டு யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிராரோ அவருக்கே மாம்பழம் என நிபந்தனை போடுகிறார். முருகன் தனது மயில் வாகணத்தில் உலகை சுற்ற புறப்பட்டுவிட்டார் பிள்ளையாரோ சிவன் பார்வதியை சுற்றிவிட்டு உலகை சுற்றிவிட்டதாக கூறுகிறார். இதை ஏற்றுக்கொண்ட சிவன் மாம்பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்துவிடுகிறார் அதன் பின் முருகன் சிவனுடன் கோபித்துக்கொண்டு பழணி மலைக்கு சென்று அமர்த்துவிடுகிறார் என்பதுதான் கதை. இந்த கதை பலருக்கு தெரிந்திருந்தாலும் அதில் உள்ள கருத்துக்களை கவணிக்க பலர் தவறிவிடுகிறார்கள்.

1.   சிவபெருமான் இரண்டு பிள்ளைகளுக்கும் உலகத்தை சுற்றி வரும்படி நிபந்தனை போடுவதும் முருகன் தனது மயில் வாகணத்தில் உலகை சுற்ற புறப்படுவதிலிருந்து உலகம் உருண்டை என்பது கொல்ம்பஸ் காலத்துக்கு கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு முன்னமே எமது சமயங்களில் கூறப்பட்டுள்ளது.

2.   பூமியின் பூமத்திய ரேகையிலிருந்து வட துருவம் தென் துருவம் நோக்கி செல்லும் பொழுது பூமியின் சுற்றளவு குறைந்து செல்லும். உதாரணத்துக்கு ஒரு பந்தின் நடு பகுதியிலிருந்து மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி செல்லும்பொழுது சுற்றளவு குறைந்து ஒரு புள்ளியில் முடியும் என்பதை அவதானிக்கலாம். இதன்மூலம் வடதுருவதில் வைத்து சிவனையும் பார்வதியையும் பிள்ளையார் சுற்றியிருந்தால் அது உலகத்தை சுற்றியதாக கருதமுடியும் ஏனென்றால் வடதுருவம் ஒரு புள்ளியில் முடிவடைகின்றது.

3.   பூமத்திய ரேகையிலிருந்து வட துருவம் நோக்கி பார்க்கும் பொழுது வடதுருவம் மேலே அதிதூரம் கூடிய  புள்ளியாக காணப்படும்.இதைத்தான் பிற்காலத்தில் பூமி தட்டை என கருதிய மக்கள் எங்களுக்கு மேலே அதி கூடிய தூரமாக காணப்பட்ட இமயமலை உச்சியில் சிவபெருமான் குடியிருப்பதாக கருதியிருக்கலாம்.

4.   எனது சந்தேகம் கொல்ம்பஸ் காலத்துக்கு முன்னமே எமது மக்களுக்கு உலகம் உருண்டை என்பது தெரிந்திருக்கவேண்டும். மற்றும் மேலே கூறப்பட்டவையில் ஏதாவது தவறு இருந்தால் அறியத்தரவும்.

இப்படிக்கு

சுகுதர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகுதர்! எங்கடை புராணங்களிலை இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாத்தையும் விளக்கத்தோடை சொல்லித்தான் இருக்கு.....இருந்தாலும் வெள்ளைக்காரன் சொன்னால்த்தான் இந்த உலகமும் சனமும் நம்பும்.முப்பத்து முக்கோடி சூரியதேவர்கள் இருக்கிறார்கள் என்று புராணங்களில் சொல்லிவிட்டார்கள். நாசாவும் நைசாய் இப்பத்தான் ஒரு சூரியன் இல்லை கன சூரியன்கள் இருக்கெண்டு சொல்ல வெளிக்கிடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொள்லையுக்குள் வருவது மாதிரி, 

உலகமும் அப்படித்தான்
நாம் எத்தனையாம் உலகத்தில் வாழ்கின்றோம் என்பது யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் கணிச்சதை இப்பதான் வெள்ளைக்காரனே புரிஞ்சிக்க வெளிக்கிடுறான்  உதாரணமாக நடராசர் நடனமாடும் அந்த நிலயிலான சிலை எங்கேயோ வைத்திருப்பதாக கேள்விப்பட்டேனே அது எங்கே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுகுதர்!

தங்கள் வரவு நல்வரவாகட்ட்டும்!

எமதினத்துக்கு என்று ஒரு தொன்மையான வரலாறும், கலாச்சாரமும், மொழியும் உண்டு!

எனினும்...அது இன்று வந்தவன்..போனவன் எல்லாம் தனது வரலாறு, தனது கலாச்சாரம் என்று சொல்ல வெளிக்கிட்டு...இப்ப நாங்கள் நாறிப்போனது தான் வரலாறு!

நாவாய் என்ற வார்த்தையே ..ராஜராஜன் படை நடத்திய காலத்திலிருந்து ...இன்று நேவி என்று ஆங்கிலேயனால் பயன்படுத்தப் படுகின்றது!

சமுத்திரங்களின் நீரோட்டங்களை அறிந்திருந்தவனுக்கு....உலகம் உருண்டை என்று எப்போது தெரிந்திருக்கும்!

எனினும்...இந்த 'மாம்பழக் கதை' போன்றவை எமது வரலாறல்ல.. எமது கலாச்சாரமும் அல்ல என்பதே எனது பணிவான கருத்து!

யாரோ ஒரு வடக்கன்...லேகியத்தைப் போட்டுவிட்டுப் புலம்பிய கதைகள் தான் அவை!

எம்மை மற்றவர்கள்..தின்றதும்..மென்றதும் போதும்!

இனிமேலாவது எமது உண்மையான வரலாற்றை அறிந்து கொண்டு..எமது வருங்காலத் தலைமுறையைச் செம்மைப்படுத்துவோம்!

எமது கலாச்சாரத்தில்  ஆண் ..பெண் பேதம் இருந்ததில்லை!

சாதி கூட இருந்ததில்லை!

'யாதும் ஊரே...யாவரும் கேளிர்....என்பதே கணியன் பூங்குன்றனாரின் கூற்று!

சாதி எம்மீது புகுத்தப் பட்ட காலத்தில்...அதை எதிர்த்துப் பாடியவர்களில் அவ்வையாரும் ஒருவர்!

சாதி இரண்டொழிய வேறில்லை  சாற்றுங்கால்.........என்று ஆத்திரத்தில் அவர் முழங்கியது தான் எமது வரலாறு!

வள்ளுவனையே பறையன் என ஆர்ப்பரித்தவர்களின் கதை தான்....மாம்பழக் கதை!

பிள்ளையாரின் உண்மையான வரலாறு அறிந்தால்....நீங்கள் சாமியே கும்பிட மாட்டீங்கள்!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

தமிழன் கணிச்சதை இப்பதான் வெள்ளைக்காரனே புரிஞ்சிக்க வெளிக்கிடுறான்  உதாரணமாக நடராசர் நடனமாடும் அந்த நிலயிலான சிலை எங்கேயோ வைத்திருப்பதாக கேள்விப்பட்டேனே அது எங்கே??

தமிழன் கணிச்சு தனக்குள் பதுக்கி வைச்சுக் கொண்டதால்.. வெள்ளைக்காரன் அதனை படிச்சு புரிஞ்சு உலகத்துக்கும் காட்டி.. தன்னை பெரியாள் ஆக்கிட்டான். வல்லரசுகளையும் உருவாக்கிட்டான். மனிதருக்குள்ளையே தனக்கு.. அடிமைகளையும் உருவாக்கிட்டான். 

நாங்க இப்பவும் எங்களுக்குள்ள தான்.. நான் பெரிசா.. நீ பெரிசான்னுகிட்டு. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

தமிழன் கணிச்சு தனக்குள் பதுக்கி வைச்சுக் கொண்டதால்.. வெள்ளைக்காரன் அதனை படிச்சு புரிஞ்சு உலகத்துக்கும் காட்டி.. தன்னை பெரியாள் ஆக்கிட்டான். வல்லரசுகளையும் உருவாக்கிட்டான். மனிதருக்குள்ளையே தனக்கு.. அடிமைகளையும் உருவாக்கிட்டான். 

நாங்க இப்பவும் எங்களுக்குள்ள தான்.. நான் பெரிசா.. நீ பெரிசான்னுகிட்டு. tw_blush::rolleyes:

நாங்கள் இன்னும் சாதியைக்கூட தாண்டல அதுக்குள்ள கிடந்து பிரளுகிறோம் என்றால் பாருங்கோவன் நெடுக்கர் சார் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, முனிவர் ஜீ said:

நாங்கள் இன்னும் சாதியைக்கூட தாண்டல அதுக்குள்ள கிடந்து பிரளுகிறோம் என்றால் பாருங்கோவன் நெடுக்கர் சார் :unsure:

சாதி ஒழிப்பும்.. புலி ஒழிப்போட முடிஞ்சிட்டுது. புலி இருக்கேக்க சாதி ஒழிப்பில முண்டி அடிப்பட்டவை எல்லாம்.. இப்ப சாதி பேசுவதில் முண்டி அடிக்கினம். இது தான் தமிழர்கள் பலரின் சுயரூபம். தங்களை விட மற்றவன்.. மாறி முன்னேறி போயிடக் கூடாது. அல்லது புரட்சி செய்து சமூகத்துக்கு வழிகாட்டி.. பெயர் வாங்கிடக் கூடாது. இப்படியாப்பட்டதுகள் உருப்படுங்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாத்தியார் said:

எல்லோரும் சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொள்லையுக்குள் வருவது மாதிரி, 

உலகமும் அப்படித்தான்
நாம் எத்தனையாம் உலகத்தில் வாழ்கின்றோம் என்பது யாருக்காவது தெரியுமா?

Ähnliches Foto 

Ähnliches Foto

இந்த  உலகம் ... பலமுறை உருவாகி, பலமுறை அழிந்துள்ளது  என்றே நினைக்கின்றேன்... வாத்தியார்.
மேலுள்ள படங்களை பார்க்கும் போது... அப்படித்தான் தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

பிள்ளையாரின் உண்மையான வரலாறு அறிந்தால்....நீங்கள் சாமியே கும்பிட மாட்டீங்கள்!:cool:

Bildergebnis für பிள்ளையார் 

புங்கையூரான்.... நான் விரும்பி வணங்கும் கடவுள்  பிள்ளையார்.
அவரை பற்றி... தாறு மாறாக வதந்தி பரப்பினால்... என்னால் தாங்க முடியாது.
ஆனாலும்.... அவரின் உண்மையான வரலாறை,  எங்களுக்கு சொல்லவும். 

"பொய்  சொன்னால்...  சாமி  கண்ணை குத்தும்."  என்று, தெரியும்தானே.....tw_glasses:

Link to comment
Share on other sites

12 hours ago, புங்கையூரன் said:

வணக்கம் சுகுதர்!

தங்கள் வரவு நல்வரவாகட்ட்டும்!

எமதினத்துக்கு என்று ஒரு தொன்மையான வரலாறும், கலாச்சாரமும், மொழியும் உண்டு!

எனினும்...அது இன்று வந்தவன்..போனவன் எல்லாம் தனது வரலாறு, தனது கலாச்சாரம் என்று சொல்ல வெளிக்கிட்டு...இப்ப நாங்கள் நாறிப்போனது தான் வரலாறு!

நாவாய் என்ற வார்த்தையே ..ராஜராஜன் படை நடத்திய காலத்திலிருந்து ...இன்று நேவி என்று ஆங்கிலேயனால் பயன்படுத்தப் படுகின்றது!

சமுத்திரங்களின் நீரோட்டங்களை அறிந்திருந்தவனுக்கு....உலகம் உருண்டை என்று எப்போது தெரிந்திருக்கும்!

எனினும்...இந்த 'மாம்பழக் கதை' போன்றவை எமது வரலாறல்ல.. எமது கலாச்சாரமும் அல்ல என்பதே எனது பணிவான கருத்து!

யாரோ ஒரு வடக்கன்...லேகியத்தைப் போட்டுவிட்டுப் புலம்பிய கதைகள் தான் அவை!

எம்மை மற்றவர்கள்..தின்றதும்..மென்றதும் போதும்!

இனிமேலாவது எமது உண்மையான வரலாற்றை அறிந்து கொண்டு..எமது வருங்காலத் தலைமுறையைச் செம்மைப்படுத்துவோம்!

எமது கலாச்சாரத்தில்  ஆண் ..பெண் பேதம் இருந்ததில்லை!

சாதி கூட இருந்ததில்லை!

'யாதும் ஊரே...யாவரும் கேளிர்....என்பதே கணியன் பூங்குன்றனாரின் கூற்று!

சாதி எம்மீது புகுத்தப் பட்ட காலத்தில்...அதை எதிர்த்துப் பாடியவர்களில் அவ்வையாரும் ஒருவர்!

சாதி இரண்டொழிய வேறில்லை  சாற்றுங்கால்.........என்று ஆத்திரத்தில் அவர் முழங்கியது தான் எமது வரலாறு!

வள்ளுவனையே பறையன் என ஆர்ப்பரித்தவர்களின் கதை தான்....மாம்பழக் கதை!

பிள்ளையாரின் உண்மையான வரலாறு அறிந்தால்....நீங்கள் சாமியே கும்பிட மாட்டீங்கள்!:cool:

பிள்ளையாரின் உண்மையான வரலாற்றைப்பற்றி ஒரு பந்தி எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் அதைப்பற்றி அறிய ஆவலாக இருக்கிறது.

1 hour ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto 

Ähnliches Foto

இந்த  உலகம் ... பலமுறை உருவாகி, பலமுறை அழிந்துள்ளது  என்றே நினைக்கின்றேன்... வாத்தியார்.
மேலுள்ள படங்களை பார்க்கும் போது... அப்படித்தான் தோன்றுகின்றது. 

நீங்கள் சொல்வது உண்மைதான். உலகம் பல அடுக்குகளை கொண்டது என்பதுதான் உண்மை.

2 hours ago, முனிவர் ஜீ said:

நாங்கள் இன்னும் சாதியைக்கூட தாண்டல அதுக்குள்ள கிடந்து பிரளுகிறோம் என்றால் பாருங்கோவன் நெடுக்கர் சார் :unsure:

நான் எழுதிய பந்திக்கும் நீங்கள் எழுதிய கருத்துக்கும் எது வித சம்பந்தமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமாதேவியார் தனியே கடலில் நீராடும் போது காவலுக்கு உருட்டி வைச்ச சிலையே "பிள்ளையார்":unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

உமாதேவியார் தனியே கடலில் நீராடும் போது காவலுக்கு உருட்டி வைச்ச சிலையே "பிள்ளையார்":unsure::rolleyes:

சும்மா.... சுருக்கமாக, எந்த வித ஆதாரமும் இல்லாமல் சொன்ன படியால்......
ரதிக்கு,  சாமீ... கண்ணை குத்தப் போகுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Suguthar said:

நான் எழுதிய பந்திக்கும் நீங்கள் எழுதிய கருத்துக்கும் எது வித சம்பந்தமும் இல்லை.

நான் அது உங்களுக்கு எழுதியதில்லையே நெடுக்கர் என்பவரினது கருத்தை மேற்கோள் காட்டு எழுதியிருந்தேன் நண்பரே  அதை நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும் :unsure:

Link to comment
Share on other sites

20 hours ago, ரதி said:

உமாதேவியார் தனியே கடலில் நீராடும் போது காவலுக்கு உருட்டி வைச்ச சிலையே "பிள்ளையார்":unsure::rolleyes:

சதாரணமாக அக்காவுக்கு தம்பி காவலுக்கு போவதும் அம்மாவுக்கு மகன் காவலுக்கு போவதும் நமது மரபு, அப்படியிருக்க உமாதேவியாருக்கு மகனாகிய பிள்ளையார் காவல் இருப்பதில் என்ன பிழையிருக்கிறது என புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எனக்கு வடிவாய் ஞாபகமில்லை...புங்கையூரான் தான் இதற்கு வர வேண்டும்.
 
பிள்ளையார் சிவன்,உமைக்கு பிறந்தவர் இல்லை. உமை தனியே குளிப்பதற்காக  களி மண்ணை சிலையாக்கி காவலுக்கு விட்டு ஒருத்தரையும் வராமல் பார்க்க சொல்லிட்டு போனதாகவும் அந்த நேரத்தில் சிவன்  உமையோடு சேர்ந்து நீரார உள்ளே போக முயல அதைப் பிள்ளையார் தடுக்க சிவன் சாபம் குடுக்க என்டு கதை எங்கேயோ போகுது...

யாராவது விசயம் தெரிந்தவர்கள் அடிக்க வரேக்கு முதல் நான் எஸ்கேப்:mellow:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2017 at 4:08 AM, Suguthar said:

பிள்ளையாரின் உண்மையான வரலாற்றைப்பற்றி ஒரு பந்தி எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் அதைப்பற்றி அறிய ஆவலாக இருக்கிறது.

வணக்கம் சுகுதர்!

உண்மை, பொய் என்று எதையும் வரையறுத்துக் கூற முடியாத படி..எமது வரலாறு மற்றைய இனங்களால் தின்று ஜீரணிக்கப்பட்டு விட்டது!

மிஞ்சியதைக் கடல் கோள்களும், கறையான்களும் தின்றுவிட்டன!

கடலினுள் புதைந்திருப்பதையும்...நிலத்துள் புதைந்திருப்பதையும்...தொட்டுக்கூடப் பார்க்க விடாத படி...சில அரசுகளே சட்டங்கள் இயற்றியுள்ளன!

அந்தச் சிவனே வந்து கேட்டால் தான்....திருமுறைகளைத் தருவோம் என்று ஆர்ப்பரித்த தில்லை வாழ் அந்தணர்களிடமிருந்து..மிகவும் சொற்பமானவையே சேக்கிழாரால் தொகுக்கப் பட்டவை!

அகத்திய முனியின் வருகையே...எமது வரலாற்று அஸ்தமனத்தின் ஆரம்பம் எனக்கருதுகின்றேன்!

நிற்க, கணபதியை வணங்குபவர்கள்..காணபத்தியம் என்ற மதத்தைச் சேர்ந்தவர்கள்!

சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், சௌமாரம், காபாலம், கௌரம் என்ற பல மதங்களின் கலவையே இந்து மதம்!

அழிந்து போகும் நிலையிலிருந்த பல மதங்கள்...இந்து மதம் என்ற கவசத்துக்குள் புகுந்து தம்மைக் காத்துக் கொண்டன!

சாக்தமும், காணபத்தியமும் இவற்றில் முக்கியமானவை!

இரண்டுமே தாந்திரீக மதங்கள்! காளியோ அல்லது கணபதியோ நாங்கள் நினைப்பது போல சாத்வீகமான மதங்களாக இருந்ததில்லை!

விநாயகரின் வடிவமொன்றின் பெயர் கபால விநாயகர்! விநாயகர் ஒரு போர்க்கடவுளாக இருந்திருக்கும் சாத்தியங்களே அதிகமாக உண்டு!

மகாபாரதம் எழுதுவதற்காக அவர் தந்ததை உடைத்தார் என்பது ஒரு புனை கதை!

அவரது தந்தம்....போர்க்களமொன்ரில் உடைந்திருக்கலாம்!

சுருக்கமாக...சேரன் செங்குட்டுவன், ராஜேந்திர சோழன் போன்றவர்கள் வடக்கே சென்று வரும்போது....கனக விஜயர் தலையில் கல்லேற்றியதையும், கங்கை நீரைக் கொண்டுவந்ததையும் சொல்லும் வரலாறு..அங்கிருந்த பிள்ளையார் சிலை ஒன்றையும் காவிக் கொண்டு வந்ததையும் சொல்ல மறந்து விட்டது தற்செயலானது அல்ல ! அல்லது சொல்லப்பட்டவைகள் மறைக்கப்பட்டு விட்டன!

இது தான் பிள்ளையார் தெற்குக்கு வந்த வரலாறு!

பின்னர் நடந்ததெல்லாம்..நமது முருகன்....எவ்வாறு இந்திரனுக்கு மருமகனாக ஆக்கப்பட்டானோ...நமது சிவன்...எவ்வாறு உருத்திரனாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுச் சுடலையில் ஆட வைக்கப்பட்டானோ....அவ்வாறே பிள்ளையாரும் சிவனுக்கும், உமைக்கும் மகனாக ஆக்கப் பட்டார்!

எமது தற்போதைய ஆதாரங்கள் அனைத்தும்...திருமுறைகள் உட்பட...கிறிஸ்துவுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவையே!

திருக்குறளிலோ...அல்லது புறநானூறு, அகநானூறு போன்றவற்றிலோ கந்தனுமில்லை, பிள்ளையாருமில்லை ஏன் உமாதேவி கூட இல்லை!

சிவன் கூட....இறை என்ற பெயரிலேயே விழிக்கப் படுகின்றார்!

எனினும்...பிள்ளையார் எமது கலாச்சாரத்தில்...நன்றாகக் காலூன்றி விட்டார்! அதனால் தான் அடுத்த தலை முறையாவது ..இந்த மாயைகளிலிருந்து வெளிவர வேண்டும் என்று குறிப்பிட்டேன்!

உங்களிடம் சில கேள்விகள்?

சேலை, வேட்டி என்பவை தமிழரது கலாச்சாரம் என்று நம்புகின்றீர்களா?

குங்குமம் வைப்பது எமது கலாச்சாரமா?

எமது திருமணங்களுக்குச் சாட்சியாக நாம் அழைக்கும் வசிட்டன், அருந்ததி, இந்திரன் , அக்கினி, சோமன் போன்றவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் எம்மவர்களா?

இந்த அருவருக்கும் அர்த்தம் தருகின்ற திருமணச் சடங்கின் போது சொல்லப்படும் மந்திரங்களை...எமது அடுத்த சந்ததிகளும் தொடர வேண்டுமா?

faddcb7d6e8a3931b06f5b70724431ce.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உங்களிடம் சில கேள்விகள்?

சேலை, வேட்டி என்பவை தமிழரது கலாச்சாரம் என்று நம்புகின்றீர்களா?

குங்குமம் வைப்பது எமது கலாச்சாரமா?

எமது திருமணங்களுக்குச் சாட்சியாக நாம் அழைக்கும் வசிட்டன், அருந்ததி, இந்திரன் , அக்கினி, சோமன் போன்றவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் எம்மவர்களா?

இந்த அருவருக்கும் அர்த்தம் தருகின்ற திருமணச் சடங்கின் போது சொல்லப்படும் மந்திரங்களை...எமது அடுத்த சந்ததிகளும் தொடர வேண்டுமா?

என்ன புங்கையர்? நீங்கள் போற போக்கை பார்த்தால் தமிழனுக்கு கோவணம் கூட மிஞ்சாது போலை கிடக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்ன புங்கையர்? நீங்கள் போற போக்கை பார்த்தால் தமிழனுக்கு கோவணம் கூட மிஞ்சாது போலை கிடக்கு?

வேட்டியும், சேலையும் எங்கட தான்....!

சும்மா ஒரு விவாதத்துக்குக்காகத் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

வேட்டியும், சேலையும் எங்கட தான்....!

சும்மா ஒரு விவாதத்துக்குக்காகத் தான்!

ரவிக்கை யாருடையது .....டச்சுக்காரன் அறிமுகப்படுத்தினது என அன்மையில் ஒருத்தர் சிட்னி  மேடையில் கூறினார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கண் முன்னாலயே சாய்பாபா எம்  மக்களின் பூஜைஅறையில் முக்கிய சாமியாகி விட்டார்....சாய் பாபாவுக்கு வன்னியிலயே பல கோவில்கள்(சாய் சென்ரர்கள்) கட்டப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ அ. வரதபண்டிதர் இயற்றிய பிள்ளையார் கதை. இவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்தவர். இக் கதையை திரு வரதபண்டிதர் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிச் சைவமக்களுக்கு அளித்தார்கள் என்று திரு மு.கணபதிப்பிள்ளை அவர்கள் (மறவன்புலவு, சாவகச்சேரி) பதிப்புரையில் கூறியுள்ளார்கள். நேரமில்லாதவர்கள் இந்த வீடியோவை 10 ல் இருந்து 13 நிமிடம்வரை பார்க்கலாம். ஈழத்தில் அநேகமாக எல்லாக் கோவில்களிலும் பிள்ளையார் கதை தொடங்கி 21 நாட்கள் இந்தப் பாடலைத்தான் படிப்பார்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

நீங்கள் தந்த விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஆனாலும் தலை சுற்றுகிறது. நான் அறிய முன்பு ஆங்கில மாதம் ஏப்பிரல் 14 தமிழர்கள் வருடப்பிறப்பும் 13ம் தேதி வருடப்பிறப்புக்கு முந்தய நாள் (Prior to New year) என இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தது. இன்று  ஏப்பிரல் 13 சிங்கள புது வருடப்பிறப்பாகமாற்றம் பெற்றுவிட்டது. இது  நாங்களறிய சொற்ப காலத்த்க்குள் நடந்தேறியுள்ளது. அப்படியிருக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலங்களில் நடைபெற்ற சம்பவங்களோ கதைகளோ நினைத்து பார்க்கமுடியாதளவுக்கு மாற்றம் பெற்று இருக்கும் என்பதை நாங்கள் கவணத்தில் கொள்ளவேண்டும்.இக் கதைகள் எல்லாம் உண்மையா பொய்யா என் ஆராய்வதைவிட ஏதாவது நல்ல விடயங்கள் உள்ளனவா என நோக்கவேண்டும் அத்துடன் அவற்றை பின்பற்றுவதால் சமுதாயத்துக்கு ஏதாவது தீமையுண்டா என்பதையும் ஆராயவேண்டும். சமயங்களில் சொல்லப்பட்ட பல விடயங்கள் இன்று விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுவருகின்றன, அப்படியிருக்க அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவது தவறு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.இறை பயமும் சமுதாய பயமும் இல்லாததனால்தான் இன்றைய சமுதாயம் சீரழிந்து கொண்டு செல்கிறது,அதனால்தான் பாலியல் , இல்ஞ்சம்,கொலை குற்றசாட்டுகளில் கைது செய்யபடுபவர்கள் தொலைகாட்சிகளில் பெருமையாக கையசைத்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎/‎05‎/‎2017 at 9:24 PM, ரதி said:
எனக்கு வடிவாய் ஞாபகமில்லை...புங்கையூரான் தான் இதற்கு வர வேண்டும்.
 
பிள்ளையார் சிவன்,உமைக்கு பிறந்தவர் இல்லை. உமை தனியே குளிப்பதற்காக  களி மண்ணை சிலையாக்கி காவலுக்கு விட்டு ஒருத்தரையும் வராமல் பார்க்க சொல்லிட்டு போனதாகவும் அந்த நேரத்தில் சிவன்  உமையோடு சேர்ந்து நீரார உள்ளே போக முயல அதைப் பிள்ளையார் தடுக்க சிவன் சாபம் குடுக்க என்டு கதை எங்கேயோ போகுது...

யாராவது விசயம் தெரிந்தவர்கள் அடிக்க வரேக்கு முதல் நான் எஸ்கேப்:mellow:
 
என்ட கருத்துத் தொடர்பாக புங்கையின் கருத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்tw_confounded:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.5.2017 at 4:55 PM, Suguthar said:

இறை பயமும் சமுதாய பயமும் இல்லாததனால்தான் இன்றைய சமுதாயம் சீரழிந்து கொண்டு செல்கிறது,அதனால்தான் பாலியல் , இல்ஞ்சம்,கொலை குற்றசாட்டுகளில் கைது செய்யபடுபவர்கள் தொலைகாட்சிகளில் பெருமையாக கையசைத்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது, 

உங்கள் கருத்துதான் எனது கருத்தும்.......tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.