Jump to content

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.


  

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

"சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.

எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!

மூக்கியின் இந்த ஒரு கருத்தோடு உடன்படுகின்றோம். காரணம் பல கனவுகளோடு வாழும் ஆண்களிலும் காதல் என்று தன் வாழ்க்கையில் முதல் தெரிவாக வருபவரோடு மட்டுமே பல நினைவுகளால் மனதளவில் வாழ்ந்திடுவர்.(ஒரு தலையாய் நினைப்பதையோ, எட்ட இருந்து ஒருவரின் நடத்தையை அழகைக் கண்டு அவர் மீது இன்னொருவர் தான் மட்டும் காதலிப்பதையோ காதல் என்ற முடியாது. இருவரும் உடன்பட்டுக் காதலித்தலைப் பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம்.) அந்த வாழ்க்கை நிலைக்காத போது நிச்சயம் அங்கு மனதில் வடுக்கள் சுமையாக இருக்கும். சொன்னால் என்ன சொல்லவிட்டால் என்ன.. அது தொடரும். அழிக்க முடியாத நினைவு வடுக்கள். அழிக்க முடியும் என்பது சுத்தப் பொய். மறைக்க முனையலாம்.

மனதில் சங்கடமில்லா வாழ்வுக்கு ஒரே காதல் ஒருவனோடு ஒருத்தி என்ற நிலையே வலுவானது நீடித்தது. அவர் நல்லவராய் இருந்து கெட்டவராய்க் கூட மாறலாம். ஆனால் புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கான அடிப்படை இருக்குமானால் முதல் தேர்வையே தக்க வைத்து வாழ்ந்து கொள்வதே மன மகிழ்வானது. விட்டுக் கொடுப்புக்கள் காத்திருப்புக்கள் கூட சுகமானது. ஆனால் மனதில் முன்னொருத்தன் அல்லது முன்னொருத்தி என்ற நினைவோடு ( அதை அழிக்க முடியும் என்பது சுத்தப் பொய்) வாழ்வது மனதில் ஏதோ ஒரு கட்டத்தில் தான் செய்த தவறை உறுத்தும். அதை தவறு செய்பவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.

வீட்டில் ஒரு பொய் சொல்வதே மனதை உறுத்தும் போது இவை... எப்படி அமையும்..!

நமக்கென்ன வந்திச்சப்பா. தவறு செய்யாதவன் அடுத்தவரின் தவறுக்காக தான் வருந்தவும் மாட்டான்..! ஆனால் தவறு செய்கிறார்கள் என்று மட்டும் உணர்ந்து கொள்வான். உலக அனுபவத்தில் உணர்ந்ததைச் சொல்கிறோம். நாமா தவறு செய்யப் போவதில்லை. எம்மால் அடுத்தவருக்கு உறுத்தலை வழங்கப்போவதில்லை. இந்த நிலையை ஒவ்வொருவரும் எடுக்கும் போது முதல் தேர்வே வெற்றிதான். விட்டுக் கொடுக்கவும் புரிந்துணரவும் பக்குவம் இருக்க வேண்டும். இன்றேல் எந்தத் தேர்வும் சரிவராது. சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன..!!! :D:D:icon_idea:

Link to comment
Share on other sites

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

இதை ஏன் யாரோ ஒருவருக்கௌ செய்வதாக நினைகிறிங்க? :icon_idea: உங்கள் பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், உங்களுக்கு மனைவிக்கு அடிமையாக இருப்பதா? உங்கள் மனைவியை நீங்க ஊர் சுற்றி காட்டாவிட்டால், அப்ப ஆர் காட்டுறது?..பக்கத்துவீட்டு காரனை கடன் வாங்கி கொண்டு போகலாமா? நண்பர்களுடன் போனலும் குற்றம் சொல்வீர்கள்..உங்களுக்கு பாத்ரூம் கழுவுவதில் என்ன பிரச்சனை?னீங்களும் தானே அதை உபயோக படுத்துவீங்க? கடைக்கு போய் சாமான் வாங்கிவந்தால் தேய்ந்து போய்டுவீங்களா?.. சமைத்து வைத்தால் வாய் நிறைய கொட்டிக்க தெரியுது தானே? சாமான் வாங்க்கினால் அவமானமோ?..வந்திட்டாங்கையா பேசுறதுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணங்கட்டிய புதுமனிசியுடன் நீங்கள், வாங்கள் என்று கதைத்தால் கடைசியில் பிள்ளையை குளிப்பாட்டுதல், இரவில் பிள்ளைக்கு பால் பருக்குதல், பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், குசினியில் சமைத்தல், இரைச்சி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீட்டுக்கு கூவர் பிடித்தல், கக்கூசு கழுவுதல், புல்லு வெட்டுதல், உடுப்பு தோய்த்தல், கடைக்கு போய் சாமான் சக்கட்டை வாங்கி வருதல், மனிசியை காரில் ஏத்தி ஊரைச் சுற்றிக்காட்டுதல் என்று வாழ்க்கையில் மனிசிக்கு அடிமையாகி 24 மணி நேரமும் சேவகம் செய்யவேண்டி வந்துவிடும். இதற்கு உதாரணமாக யாழ் களத்திலேயே பல அடிமை மைந்தர்கள் இருக்கிறார்கள்.

எமது செல்வன் சீரியல் பாவப்பட்ட ஆண்களின் கண்ணீர்க்கதையைக் கூறும் ஒரு காவியம். இங்கு நிச்சயமாக கந்தப்பு, சின்னப்பு, முகத்தார் போன்றோர் வாழ்வில் படும் கஸ்டங்களை படம்பிடித்துக் காட்டப்படும். இத்தொடரை ஆண்கள் தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் இரு விழிகளாலும் கண்ணீர் மல்கப்பார்த்து ஆதரவு தருவார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது. செல்வன் தொடரின் உத்தியோக பூர்வ அனுசரனையாளர்களில் ஒருவரான உங்களிற்கு இப்படி சந்தேகம் வரலாமா?

ஆண்களின் கண் 1% அழுகிறது என்றால் மனசு 100% அழுகிறது என்று அர்த்தம். பெண்களின் கண் 100% அழுகிறது என்றால் மனசு வெறும் 1% மட்டுமே அழுகிறது. பெண்கள் அடுத்தவரின் துன்பத்தை நினைந்து அழுவதில்லை. தங்களின் நிலையை எண்ணி அழுவதே அதிகம். அதனால் தான் கண் மட்டும் அழுகிறது. மனதல்ல..! இந்த அடிப்படையைப் புரிஞ்சு கொள்ளனும் எல்லா ஆண்களும். அப்ப தான் தங்களின் சுயநிலையை தக்க வைக்கவும் முயல்வர். அன்பு என்பதை ஆண் மட்டும் பகர வேண்டும் என்பதல்ல. பெண்ணும் ஆண் மீது காட்ட வேண்டும். அன்புக்கு முன் தலை வணங்குங்கள். கால் தடவ வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்களும் சரி ஆண்களின் அன்புக்கு தலை வணங்குங்கள். முடிவில்லா பதில் அன்பு காட்டுங்கள். ஏற்றத்தாழ்வற்ற நிலையை உணர்வீர்கள். :D:D:icon_idea:

Link to comment
Share on other sites

இதை ஏன் யாரோ ஒருவருக்கௌ செய்வதாக நினைகிறிங்க? :icon_idea: உங்கள் பிள்ளையை தொய்யா கொள்ள வைத்தல், உங்களுக்கு மனைவிக்கு அடிமையாக இருப்பதா? உங்கள் மனைவியை நீங்க ஊர் சுற்றி காட்டாவிட்டால், அப்ப ஆர் காட்டுறது?..பக்கத்துவீட்டு காரனை கடன் வாங்கி கொண்டு போகலாமா? நண்பர்களுடன் போனலும் குற்றம் சொல்வீர்கள்..உங்களுக்கு பாத்ரூம் கழுவுவதில் என்ன பிரச்சனை?னீங்களும் தானே அதை உபயோக படுத்துவீங்க? கடைக்கு போய் சாமான் வாங்கிவந்தால் தேய்ந்து போய்டுவீங்களா?.. சமைத்து வைத்தால் வாய் நிறைய கொட்டிக்க தெரியுது தானே? சாமான் வாங்க்கினால் அவமானமோ?..வந்திட்டாங்கையா பேசுறதுக்கு!

இவற்றை செய்வதில் நமக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. இவற்றில் 50% ஐ மனைவி பொறுப்பேற்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் எனக்கு நெருக்கமான ஆண்மக்கள் 75% ற்கும் மேற்பட்ட சுமையை காவுகின்றார்கள். இதுதான் நம்மட பிரச்சனை பாருங்கோ! :D:D:D

வந்திட்டாங்கையா பேசுறதுக்கு! வவ்! வவ் வவ் வவ்! வவ்! வவ் வவ் வவ்!

Link to comment
Share on other sites

ஆண்களின் கண் 1% அழுகிறது என்றால் மனசு 100% அழுகிறது என்று அர்த்தம். பெண்களின் கண் 100% அழுகிறது என்றால் மனசு வெறும் 1% மட்டுமே அழுகிறது. பெண்கள் அடுத்தவரின் துன்பத்தை நினைந்து அழுவதில்லை. தங்களின் நிலையை எண்ணி அழுவதே அதிகம். அதனால் தான் கண் மட்டும் அழுகிறது. மனதல்ல..! இந்த அடிப்படையைப் புரிஞ்சு கொள்ளனும் எல்லா ஆண்களும். அப்ப தான் தங்களின் சுயநிலையை தக்க வைக்கவும் முயல்வர். அன்பு என்பதை ஆண் மட்டும் பகர வேண்டும் என்பதல்ல. பெண்ணும் ஆண் மீது காட்ட வேண்டும். அன்புக்கு முன் தலை வணங்குங்கள். கால் தடவ வேண்டும் என்பது அவசியமில்லை. பெண்களும் சரி ஆண்களின் அன்புக்கு தலை வணங்குங்கள். முடிவில்லா பதில் அன்பு காட்டுங்கள். ஏற்றத்தாழ்வற்ற நிலையை உணர்வீர்கள். :D:D:icon_idea:

அப்படியா?.. :D எல்லொரும் இவரின் அட்வைசை கேடு இதையே பின் பற்றுங்கள்..வாழ்வு நன்றாக இருக்கும்...இவருக்கு இன்று எமது யாழ்கள சார்பில் குடும்பநல வைத்தியர் என்ற பட்டத்தை அழிக்கின்றேன் :D ..எல்லோரும் இனி டொக்டர் நெடுக்ஸ் என்டு தான் கூப்பிடவேண்டும்..உங்கள் குடுபங்களில் பிரச்சனை வந்தால், இவரை நாடவும்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?.. :D எல்லொரும் இவரின் அட்வைசை கேடு இதையே பின் பற்றுங்கள்..வாழ்வு நன்றாக இருக்கும்...இவருக்கு இன்று எமது யாழ்கள சார்பில் குடும்பநல வைத்தியர் என்ற பட்டத்தை அழிக்கின்றேன் :icon_idea: ..எல்லோரும் இனி டொக்டர் நெடுக்ஸ் என்டு தான் கூப்பிடவேண்டும்..உங்கள் குடுபங்களில் பிரச்சனை வந்தால், இவரை நாடவும்.. :P

உங்கள் பட்டத்தை சமருக்கு கடற்கரையில் ஏற்ற முடியாததால் நமக்கு வேணாம். அம்மா அப்பா பெரிய பட்டத்தோட மாப்பிள்ளையே வாங்கித் தருவாங்க. நமக்கல்ல உங்களுக்கு. இதை அவருக்கு கொடுங்கோ. மேலும் மகிழ்வார். :D:D

அடுத்தவர் குடும்பங்களுக்கு அட்வைஸ் கெல்ப் பண்ணுற சாமியார் வேலையெல்லாம் நமக்குக் கிடையாது. நம்ப பாடே நாய் படாப்பாடா இருக்கு இதுக்குள்ள அடுத்தவர் குடும்பத்தை எங்க தலைல கட்ட நினைக்கிறது பெண்களின் கீழ்நிலைச் சிந்தனை. அந்தந்த குடும்பங்களின் பிரச்சனையை அந்தந்த ஆண்களும் பெண்களும் பேசிப் புரிந்து தீர்த்துக்கங்க. அடுத்தவர் முன்னிலைக்கு உங்க பிரச்சனையைக் கொண்டு போக இடமளிக்கிறது உங்களுக்கே அவமானம். ஆளுமையற்ற நிலை. கொண்டு போக அட்வைஸ் பண்ணுவதும் கேவல நிலை. மூக்கி மேம் எப்பவுமே 3ம் நிலை அட்வைஸ்தான் தருவாங்க. கண்டுக்காதேங்க. :D:D

Link to comment
Share on other sites

அது எந்த கடையில் விக்குது?..என்ன ரேட் போகுது? ... :P

உங்கள் பட்டத்தை சமருக்கு கடற்கரையில் ஏற்ற முடியாததால் நமக்கு வேணாம். அம்மா அப்பா பெரிய பட்டத்தோட மாப்பிள்ளையே வாங்கித் தருவாங்க. நமக்கல்ல உங்களுக்கு. இதை அவருக்கு கொடுங்கோ. மேலும் மகிழ்வார். :icon_idea::D

ஆமா நீங்க பெரிசா கதயெல்லாம் விடுவீங்க? நீங்க அடுத்தவருக்கு சொல்வதை நீங்க பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை ஏன் நாய் படா பாடு படுது?..அது சரி நாயை ஏன் இங்க இழுகிறிங்க? நானும் தான் நாய் வைத்திருகிறேன்..அவா நல்லா தானே இருகிருகிறா..அப்புறமா எதற்க்கு கண்டதுக்கு எல்லாம் அவர்களை உதாரணதுக்கு இழுகிறிங்க? :P

அடுத்தவர் குடும்பங்களுக்கு அட்வைஸ் கெல்ப் பண்ணுற சாமியார் வேலையெல்லாம் நமக்குக் கிடையாது. நம்ப பாடே நாய் படாப்பாடா இருக்கு இதுக்குள்ள அடுத்தவர் குடும்பத்தை எங்க தலைல கட்ட நினைக்கிறது பெண்களின் கீழ்நிலைச் சிந்தனை. அந்தந்த குடும்பங்களின் பிரச்சனையை அந்தந்த ஆண்களும் பெண்களும் பேசிப் புரிந்து தீர்த்துக்கங்க. அடுத்தவர் முன்னிலைக்கு உங்க பிரச்சனையைக் கொண்டு போக இடமளிக்கிறது உங்களுக்கே அவமானம். ஆளுமையற்ற நிலை. கொண்டு போக அட்வைஸ் பண்ணுவதும் கேவல நிலை. மூக்கி மேம் எப்பவுமே 3ம் நிலை அட்வைஸ்தான் தருவாங்க. கண்டுக்காதேங்க. :D:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்னுடைய காதல் கதைகளைச் சொல்ல வெளிக்கிட ஆரம்பத்தில ஆர்வமாக் கேட்டவ.. பிறகு என்ர கதையளின்ர எண்ணிக்கையைப் பாத்து தனக்கு போரடிக்குது எண்டு வேண்டாமெண்டிட்டா..

எல்லாக்கதையளும் ஒரே கதையையும் ஒரே முடிவையும் கொண்டிருந்தால் கேட்கிறவைக்கும் அலுப்பு வரும் தானே..?

எனக்கு நெடுக்கிடம் ஒரு கேள்வி

கணவனோ மனைவியோ இறந்த பின் மறுதிருமணம் பற்றி என்ன நினைக்கிறார் அவர். அவர் கருத்துப்படி உடன்கட்டையேற வேண்டுமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எந்த கடையில் விக்குது?..என்ன ரேட் போகுது? ... :P
உங்கட அப்பா அம்மாவைக் கேளுங்கோ சொல்லுவினம். நமக்குத் தெரியல்ல. நமக்கு உந்த ஆகாயத்தில பறக்கிற பட்டம் மட்டும் தான் தெரியும். மிச்சமெல்லாம் எமக்கு கிட்ட வரவே வராது. :D:icon_idea:

ஆமா நீங்க பெரிசா கதயெல்லாம் விடுவீங்க? நீங்க அடுத்தவருக்கு சொல்வதை நீங்க பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை ஏன் நாய் படா பாடு படுது?

கதை விடுறவங்களுக்கு கதை விட்டுத்தானே ஆகனும். எல்லாருல்லும் நல்லவங்களா இருந்திட்டா ஏமாளியா ஆக்கிடுறாங்க. ஏமாற்றிடுவாங்க. உலகத்தைப் பெண்கள் நீங்க அப்படி மாத்திப் போட்டிங்க.

..அது சரி நாயை ஏன் இங்க இழுகிறிங்க? நானும் தான் நாய் வைத்திருகிறேன்..அவா நல்லா தானே இருகிருகிறா..அப்புறமா எதற்க்கு கண்டதுக்கு எல்லாம் அவர்களை உதாரணதுக்கு இழுகிறிங்க? :P

நாய் வாய் பேசாது என்பதால்தான் கூட வைச்சிருக்கிறீங்க. அது வாயைத் திறந்து பேசிறதா இருந்து பெண் என்றாலும் அடிச்சு விரட்டி இருப்பீங்க. உங்களைப் பற்றி சொல்லாது என்ற துணிவில...நாயோட அலையுறீங்க. அவனவன் தன்னிலையை வெளில சொல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க. அதுதான் ஆண்களின் வீட்டுச் சுமைகள் கூட வெளில வராமல் தடுக்கப்படுகுதே..! அது போதாதா. பெண்களின் கொடூர மனநிலையைக் காட்ட. நாயாம் நாய். அது உங்களோட என்ன பாடு படுகுதோ பாவம். அதைப் பார்த்துத்தானே நாமே நாய் படாப்பாடு என்றம். :D:D

Link to comment
Share on other sites

உங்கட அப்பா அம்மாவைக் கேளுங்கோ சொல்லுவினம். நமக்குத் தெரியல்ல. நமக்கு உந்த ஆகாயத்தில பறக்கிற பட்டம் மட்டும் தான் தெரியும். மிச்சமெல்லாம் எமக்கு கிட்ட வரவே வராது. :D:icon_idea:

கதை விடுறவங்களுக்கு கதை விட்டுத்தானே ஆகனும். எல்லாருல்லும் நல்லவங்களா இருந்திட்டா ஏமாளியா ஆக்கிடுறாங்க. ஏமாற்றிடுவாங்க. உலகத்தைப் பெண்கள் நீங்க அப்படி மாத்திப் போட்டிங்க.

நாய் வாய் பேசாது என்பதால்தான் கூட வைச்சிருக்கிறீங்க. அது வாயைத் திறந்து பேசிறதா இருந்து பெண் என்றாலும் அடிச்சு விரட்டி இருப்பீங்க. உங்களைப் பற்றி சொல்லாது என்ற துணிவில...நாயோட அலையுறீங்க. அவனவன் தன்னிலையை வெளில சொல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க. அதுதான் ஆண்களின் வீட்டுச் சுமைகள் கூட வெளில வராமல் தடுக்கப்படுகுதே..! அது போதாதா. பெண்களின் கொடூர மனநிலையைக் காட்ட. நாயாம் நாய். அது உங்களோட என்ன பாடு படுகுதோ பாவம். அதைப் பார்த்துத்தானே நாமே நாய் படாப்பாடு என்றம். :D:D

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

நான் இங்கு சில வயதான தம்பதிகள், ட்ரய்னில் சில்மிஷம் பண்ணுவதை பார்த்திருகிறேன்..உண்மையாகவே கல்யாணம் செய்தவர்கள், ஏன் பப்ளிக்கில் இப்படி செய்யவேண்டும்?..கெட்டதுகளை பார்க்க கூடது என்று தான் நினைப்பேன்..இருந்தாலும் சில நேரங்களில் இதுகளின் இம்சை தாங்க முடிவதில்லை...

Link to comment
Share on other sites

எங்களிடம் கேட்பதன் முன் ரசிகை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்றால் திருமணத்திற்கு முன் உள்ள உங்கள் காதலை உங்கள் வருங்காலக் கணவருக்கு ரசிகை நீங்கள் சொல்வீர்களா? அவரிடமும் அவர் யாரையாவது காதலிதுள்ளாரா என்று கேட்பீர்களா?

"

எனக்கு இப்படியான ஒரு சிக்கலான நிலமை வரலை இருந்தாலும் எனது கருத்தை சொல்லுறன். என்னைப் பொறுத்தவரை இந்த விசயம் நமக்கு அமையற துணையைப் பொறுத்தது.. கல்யாணம் ஆன முதல் நாளே சொல்வது நான் நினைக்கிறன் மிகப்பெரிய முட்டாள்தனம் என்று. அதே மாதிரி ஒருவாரத்தில் சொல்வது ஓரளவிற்கு முட்டாள்தனம். ஒருவருடத்திற்கு பின் நம் துணையைப் பற்றி நம்மால் தீர்மானிக்க முடியும்.. இந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம் எண்டு நினைக்கிறன். ஏனெனின் அந்தக் காலப்பகுதியில் நீங்கள் அவவையோ அல்லது அவரையோ புரிந்துகொள்ளுவீர்கள் அதே மாதிரி அவரோ அவவோ உங்களைப் புரிந்து கொள்ளுவா/ வார். ஆனால் நன்றாக சிந்தியுங்கள். வள்ளுவர் சொல்லி இருக்கிறார் "பொய்மையும் வாய்மை எனப்படும் அது நன்மை பயக்குமெனின். " உங்கள் துணையைப் பற்றி உங்களுக்குத்தான் தெரியும். அவவின் அவரின் குணத்துக்கு ஏற்ப நடவுங்க.

ரசி அக்கா இப்ப நீங்கள் காதலிக்கிறீங்கிளா இல்லாட்டிக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கிளா?

இரண்டும் இல்லைத்தாயே எல்லாம் ஒரு ஜென்ரல் நொளேட்ஜுக்கு கேட்டனப்பா. :D

சொல்வேன், அப்படி சொல்வதில் சிக்கல் வருமாகவிருப்பின் தொடரும் வாழ்வே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. பருவ வயதிலே யார்மீதாவது காதலோ அல்லது ஈர்ப்போ இல்லாது இருந்தார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது.... :P

ஆகா நம்ம அருவியா?? அப்ப யாழ்ல அரவாசி பேர் மாட்டுப்பட்டுடாங்க போல :D:D:lol:

Link to comment
Share on other sites

"நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுறிங்கள்??? உங்கட அம்மா அப்பா நல்ல வார்த்தைகள் சொல்வதை சொல்லித்தரலையோ" இப்படி அவங்க கேட்டால்/? ;)

செல்வன் 1000 நாள் ஓடணுமா? வேணாமா? :P

அப்படி போடுங்கோ தூயா? ஆமா நீங்கள் சொல்லுவீங்களா இல்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னுடைய காதல் கதைகளைச் சொல்ல வெளிக்கிட ஆரம்பத்தில ஆர்வமாக் கேட்டவ.. பிறகு என்ர கதையளின்ர எண்ணிக்கையைப் பாத்து தனக்கு போரடிக்குது எண்டு வேண்டாமெண்டிட்டா..

எல்லாக்கதையளும் ஒரே கதையையும் ஒரே முடிவையும் கொண்டிருந்தால் கேட்கிறவைக்கும் அலுப்பு வரும் தானே..?

என்னப்பா! காதல் ஒருக்கால் தான் வரும். ஒரு தடவை தான் வரும். புனிதமானது என்று என்றால் சொல்கின்றார்கள். உங்களின் நிலமையைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே!

ஆகா நம்ம அருவியா?? அப்ப யாழ்ல அரவாசி பேர் மாட்டுப்பட்டுடாங்க போல

என்ன அருவியைப் பார்த்தால் போச்சிக் பையன் போலவா கிடக்குது? உருவத்தை வைத்து ஆளை எடை போடாதீர்கள். :angry: :angry:

Link to comment
Share on other sites

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

மூக்ஸ் எனக்கு ரொம்ப அதிகமாக தெரியுது. 10 வயது கோட எண்டாலே ஏதோ சரியான ஓல்ட் மாதிரி பீலிங் இதுக்கை 20 வயது எண்டால் எனக்கு தாத்தா மாதிரி பீலிங் தான் வரும் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன்பு காதல் இருந்தால் தவறில்லை..எதிர்ப்பால் மீதான ஈர்ப்பு (சிலருக்கு ஒத்தபால் மீதும் இருக்கலாம், சபேசன் வேறு "அவளும் அவளும்" என்று கதை வேறு எழுதியுள்ளார்) பதின்ம வயதில் பலருக்கு வருவது இயல்பு.. எனினும் இதில் பல முதிராக் காதலாகவே இருக்கும்.. சிலர் "உனக்கு நான்; எனக்கு நீ" என்று ஆழமான காதலில் வீழ்வதும் உண்டு.. இப்படியான காதல் வயப்படுவோர் காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள் காரணமாகவோ, குடும்பச் சூழல் காரணமாகவோ, அல்லது அவர்களயும் மீறிய வேறு காரணங்களாலோ திருமணத்தில் சேராமால் போகக்கூடும்.. காலப்போக்கில் வேறு ஒருவருடன் காதல் வரச் சாத்தியம் உண்டு (சாத்தியமில்லாதவர்கள் என்போர் மனவலிமையற்றோர் என்பது எனது தனிப்பட்ட கருத்து), அல்லது பேச்சுத் திருமணத்தில் சங்கமமாகவும் சாத்தியம் உண்டு. எப்படியோ திருமண பந்தத்தில் ஒன்றிணைவோர் தமக்குள் இரசியங்களை வைத்திருப்பதை விட பக்குவான நேரத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்வதே நல்லது.. பிறர் சொல்லித் தெரிவதைவிட (அதற்கு எமது சமூகத்தில் பலர் உள்ளனர்), தாமாகவே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் சகல விடயங்களையும் பகிர்வதுதான் தம்பதிகளின் வாழ்வுக்கு நல்லது..

அதற்காக 14 வயதில் பலரை சைக்கிளால் வெட்டி விழுத்தியதை எல்லாம் போய்ச் சொல்லிக் கொண்டிருந்தால் கேட்பவர்களை சலிக்கச் செய்யத்தான் முடியும்.. B)

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

நானும் என்ரை பழைய காதலுகளை முனிசிட்டை சொன்னன் (ஒண்டா இரண்டா அது கனக்க) மனிசி இப்ப எதுக்கெடுத்தாலும் உடம்பிலை உசார் இருக்கேக்கை ஊர் மேஞ்சிட்டு இப்ப கடைசி காலத்திலை என்னை செய்து களுத்தறுக்கிறாய் எல்லாம் என்ரை விதி எண்டு தொடங்கும் அதுக்கு பிறகு நான் தயாராய் வைச்சிருக்கிற பஞ்சை காதுக்கை வைச்சுடுவன் பிறகென்ன ஜாலிதான் :D:D:D

Link to comment
Share on other sites

ரசிகையின்ரை வீட்டுக்குள்ளை பூந்து புதுக் கேள்வி கேக்கிறதுக்கு சண்டைக்கு வாறாவோ தெரியேல்லை.

ஆனால் இதுவும் இந்த விசயத்தோடை சம்பந்தப்பட்டது என்பதனால் இதற்குள் சேர்க்கிறேன். காதலர் தினத்தன்று சில வானொலிகளும் தொலைக்காட்சிகளும் உங்களுடைய பழைய காதலைப் பற்றிச் சொல்லுங்கள், முதல் காதலைப் பற்றிச் சொல்லுங்கள் என்றெல்லாம் நிகழ்ச்சி வைத்தார்கள்.

ஆனால் அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள் ஆண்களாகவே இருந்தார்கள். காதல் தொடங்கியது பற்றி, பிரியவேண்டி ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றி, இன்னும் இடைக்கிடையே அவளின் ஞாபகம் வருவது பற்றியெல்லாம் பிளந்து தள்ளினார்கள். என்னுடைய கேள்வி வழமையாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பெருமளவில் கலந்து கொள்பவர்கள் பெண்கள் என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து பெண்கள் ஏன் கருத்துச் சொல்லவில்லை?

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நாய் என்னை விட சந்தோசமா தான் இருக்கு..சில நேரங்களில் அதை பார்த்து நான் பொறாமை படுவது உண்டு..

சரி விடயதுக்கு வருவோம்..

எனது நண்பி ஒருவர், தன்னை விட 20 வயதுக்கு மேல்பட்ட ஒருவரை விருபுகிறார், ..அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை..அவர் வெளிநாட்டவர் என்பதால்..ஆனால், எனக்கு கொஞ்சம் அதிசயமாக இருகிறது...இது சரியா தப்பா? காதலுக்கு, கண்,வயது ஒன்றும் இல்லையா?

நான் இங்கு சில வயதான தம்பதிகள், ட்ரய்னில் சில்மிஷம் பண்ணுவதை பார்த்திருகிறேன்..உண்மையாகவே கல்யாணம் செய்தவர்கள், ஏன் பப்ளிக்கில் இப்படி செய்யவேண்டும்?..கெட்டதுகளை பார்க்க கூடது என்று தான் நினைப்பேன்..இருந்தாலும் சில நேரங்களில் இதுகளின் இம்சை தாங்க முடிவதில்லை...

எத்தனை வயதை எத்தனை காதல் செய்வது என்பது ஒரு பொருட்டே அல்ல. வயது என்பது மனித அடையாளம். உடல், இயக்கம், மூளை என்பதும் தான் முக்கியமானது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ முடியும் என்றால் வயதில் எதுவும் இல்லை. நம்மட அன்ரன் பாலசிங்கம் ஐயா அடேல் அன்ரிக்கும் இடையில கூட வயசு வித்தியாசம் இருக்கு. அவர்கள் காதலிக்கவில்லையா. வாழவில்லையா.

அரபாத் தனது 68வது வயதில் முதற் திருமணம் செய்து குழந்தை பெறவில்லையா. நம்மட தலைவர் கூட தன்னை விட குறிப்பிடத்தக்க அளவு வயது கூடிய பெண்ணைத்தானே மணம் முடித்தார். மதிவதனி அக்கா வேண்டாம் என்றிட்டாவா...??! எதிர்பார்ப்பில்லாத அன்பிருப்பின் அவை ஒரு விடயமே அல்ல.

மனிதரைத் தவிர எந்த உயிரினமாவது சாட் வயது எழுதி வைச்சு வாழ்க்கை நடத்துதா..?!

நம்ம சாள்ஸ் டயானா தம்பதிகள் கூட 13 வயது வித்தியாசம். அவர்கள் சந்தோசகாக வாழ்வில்லையா. இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் திருமணத்துக்குப் பின்னான காதல்களால் தொடர்புகளால் வந்தவை. அதை அவர்கள் தவித்திருந்தால் இன்று உலகம் போற்றும் தம்பதியராய் வாழ்ந்திருப்பர். கோல்டன் பிறவுன் தம்பதிகள் அப்படி. இப்படிப் பல்லாயிரம் தம்பதியைக் காட்டலாம். அது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால் உங்களின் கருத்தை அடுத்தவருக்கு சொல்லி அவர்கள் அதனால் குழம்பும் நிலை இருந்தால் அப்படிப்பட்ட போலி மனிதர்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தால் அன்பான உள்ளங்கள் சிதைவடைவதும் அவர்கள் வாழ்வு சீரழிவதும் தவிர்க்கப்படும் அல்லவா.

20 வயது கூடிய பெண்களைக் கூட ஆண்கள் காதலிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அந்தக் காதல் காமத்துக்கு அப்பாலும் அன்பாலானதாக இருக்கலாம். சிலர் காதலைத் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப குறுகிய வட்டத்துக்குள் வைத்து அடுத்தவர் வாழ்க்கையை நாசம் பண்ணுகின்றனர். அதிலும் காதலென்று செய்யாமல் இருப்பதே சிறந்தது என்பதே எமது கருத்து. அதற்காக பெரியார் போல 76 வயதில் 16 வயதைத் திருமணம் செய்வது சரியென்ற முடியாது. அதிலும் பெரியார் ஏற்கனவே திருமணமானவர்.

வயசு காசு வேலை தகுதி படிப்பு பெயர் சாதி மதம் இனம் நாடு விசா சீதனம் சாட் எல்லாம் பார்ப்பதானால் அது காதல் அல்ல. திருமணச் சந்தைக்கு போகாமல் காதல் என்ற பெயரில் ஆட் பிடித்தல் என்பதாக இருக்கலாம். திருமணச் சந்தையில் பார்க்கப்படும் மேற்கூறிய நிலைகளால் பாதிக்கப்படக் கூடியவர்கள் காதல் என்ற பெயரில் ஆட்தேர்வு செய்வது வழமை. அவற்றைக் காதல் என்பதா கலி என்பதா..??! அவரவருக்கே வெளிச்சம். ஆனால் இப்போ எல்லாம் பெற்றோர் நண்பிகள் நண்பர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் சந்தோசமாக இருப்பதே பிடிக்காமல் இடையில் புகுந்து இப்படியான தங்களின் சிந்தனைகளை விதைத்து பலவீனமான காதலர்களைப் பிரிக்கின்றனர். அண்மையில் கூட தங்களின் தகுதிக்கு ஆண் சரியில்லை என்று தங்களின் மகளின் காதலை முறித்து அப்பெண்ணை வேறுநாட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஒரு பெற்றோர். அந்தப் பெற்றோருக்கு ஐடியாக் கொடுத்ததே குறித்த பெண்ணின் நண்பி. இப்படியும் நட்புக்கள் அமைந்தால் பலவீனமானவர்களின் காதல்கள் சிதறுறுவது தவிர்க்க்க முடியாதது. உண்மையில் அவற்றைக் காதல் என்று ஏற்க முடியுமா என்பதே கேள்வி..??!

அடுத்தவர் பிறைவேசியில் தலையிட நமக்கு உரிமையில்லை. அவர்கள் புகையிரத்ததில் கொஞ்சக் கூடாது என்பது சட்டமல்ல. அப்படி ஒரு சட்டமிருந்து மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் கொஞ்சட்டன் நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்திட்டுப் போறது. அதைக் காவி நீங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி உங்கள் பலவீனங்களை அடுத்தவருக்கு கடத்துகிறீர்கள் என்பதுதான் பொருள். :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூக்ஸ் எனக்கு ரொம்ப அதிகமாக தெரியுது. 10 வயது கோட எண்டாலே ஏதோ சரியான ஓல்ட் மாதிரி பீலிங் இதுக்கை 20 வயது எண்டால் எனக்கு தாத்தா மாதிரி பீலிங் தான் வரும் :lol::lol:

அப்படியென்றால் ஆண்கள் எல்லாம் 45 வயது தாண்டிய பெண்களை டிவேர்ஸ் செய்யலாம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். காரணம் பெண்கள் 45 வயதிலேயே உடற்தொழில் முதுமை அடைகின்றனர். ஆண்கள் அப்படியன்று. எதை வைச்சு ஓல்ட் என்பதை விளக்குவீர்களா..??! :D:D

20 வயது கூடிய பெண்ணைக் கூட திருமணம் செய்கின்றனர் ஆண்கள். ஓல்ட் என்று நீங்கள் குறிப்பிடுவதன் அர்த்தத்தை விளக்கினால் அப்படிப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவும் அல்லவா..??! :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது பொய்களுக்குப் பின் மறைந்திருப்பார்கள். :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!
<<<,

நீங்கள் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போகின்றேன். ஆனால் ஒரு வேளை கல்யாணத்தின் பின் ஏமாற்றிய காதலனை சந்திக்க நேரும் பட்சத்தில்!!...என்ன நடக்கும் யோசிச்சு ப் பாருங்கோ...விபரமா சொல்லாட்டிலும் ஓரளவுக்கு ச்ச் சும்மா சமாளிச்சு வைக்கிறது நல்லம் பாருங்கோ!!...ஆனால் காதல் என்று சொல்லி ஏமாத்துறவைக்கு பச்சை மட்டையால வெளுக்க வேணும்..!

பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது மறைந்திருப்பார்கள். :D:D:D

<<<

ஆம்பிளைகளுக்கு என்னப்பா ஆயிரம் ஆட்டோகிராப் இருக்கும் அதையெல்லாம் பொம்பிளைகளும் சொல்ல வெளிக்கிட்டால்...டைவர்ஸ் ல தான் வந்து நிற்கும்!!...

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் என்னுடைய கருத்து என்னவென்றால் இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

காரணம் ஆரம்பத்தில் நான் பெருந்தன்மையானவன் it's OK என்று பேசிக் கொண்டாலும் காலப் போக்கிலே வேறு ஒரு பிரச்சினை வருகின்ற போது இதனைச் சொல்லிப் புண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய வயதில் (பாடசாலை நாட்களில்) தோன்றுவதெல்லாம் காதல் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. திரைப்படங்களையும் பிறவையும் பார்த்து காதலிப்பது கட்டாயக் கடமை என்றெண்ணித் தோன்றுகின்ற அந்த ஈர்ப்பு வெறும் இனக்கவர்ச்சியே.அது வெறும் இனக் கவர்ச்சியே.

எனவே இதைப் பற்றியெல்லாம் பேசி (குறிப்பாகப் பெண்கள்)வீணான சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

அங்கிள் நீங்கள் சொல்லுற மாதிரி நடந்து அப்புறம் வேற ஒரு சந்தர்ப்பத்துல அவக்கோ அவருக்கோ தெரிய வந்து உதை ஏன் என்ன்ட்டை முதலே சொல்ல இல்லை என்டு கேட்டால் என்ன செய்யுறது??

நானும் என்ரை பழைய காதலுகளை முனிசிட்டை சொன்னன் (ஒண்டா இரண்டா அது கனக்க) மனிசி இப்ப எதுக்கெடுத்தாலும் உடம்பிலை உசார் இருக்கேக்கை ஊர் மேஞ்சிட்டு இப்ப கடைசி காலத்திலை என்னை செய்து களுத்தறுக்கிறாய் எல்லாம் என்ரை விதி எண்டு தொடங்கும் அதுக்கு பிறகு நான் தயாராய் வைச்சிருக்கிற பஞ்சை காதுக்கை வைச்சுடுவன் பிறகென்ன ஜாலிதான் :D:D:D

ஆகா அப்ப சாத்து பெரிய கீரோ போல :lol:

1. பெண்கள் காதலித்திருக்கவில்லையா?

2. அவர்கள் பழைய நினைவுகளை முழுமையாக மறந்து விட்டார்களா?

3. தங்கள் காதலைப் பற்றிப் பேசுவதை ஆண்களால் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?

ம்ம் பொதுவா ஆண்களுக்குத்தான் உப்படி நிறைய காதல்கள் இருக்கிறது. பெண்களுக்கு குறைவுதான். அதோடை அவை உதைச்சொல்லப்போய் ஏன் தேவை இல்லாத பிரச்சினைகள் எண்டு நினைச்சு இருப்பினம். அப்புறம் பழசை ஏன் கிளறுவான் எண்டு பேசாமல் விட்டு இருப்பினம் எண்டு நினைக்குறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.