Jump to content

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பிளைகளுக்கு என்னப்பா ஆயிரம் ஆட்டோகிராப் இருக்கும் அதையெல்லாம் பொம்பிளைகளும் சொல்ல வெளிக்கிட்டால்...டைவர்ஸ் ல தான் வந்து நிற்கும்..!

ஆண்களின் ஆட்டோ கிராப் திறந்த புத்தகம். பெண்களின் ஆட்டோ கிராப் மூடு மந்திரம். அப்பதான் காதலிச்சு காதலிச்சு ஏதாவது போலிக்காரணம் சொல்லி கழற்றிவிட்டிட்டு கலியாணங்களும் கட்டிக்கலாம் இல்லையா. ஆக ஆண்கள் கொஞ்சம் என்றாலும் வெளிப்படையாக இருக்க பெண்கள் ஒளிச்சு வைச்சே போலியாக வாழ விளைகின்றனர் என்றீங்கள்..! மொத்தத்தில் காதலிச்சவன் உட்பட இன்னும் பல ஆண்கள் பெண்களால் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுகின்றனர். அவர்களின் சீரான வாழ்க்கை சிதைத்தொழிக்கப்படுகிறது. அதை எந்தக் குற்ற உணர்வும் இன்றி பெண்கள் செய்கின்றனர். என்பதையே அவர்களின் மூடுமந்திரம் காட்டுகிறது. ஒருவேளை தப்பு செய்யுறவள் தப்புச் செய்தவனைக் கட்டிக் கொண்டால் கணக்கும் கணக்கும் சமனாயிடும் என்றும் பெண்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை...??! :D

பொய்கள் எல்லாம் சேலை கட்டிப் பெண்ணானதோ என்ற வாசகங்கள் ரெம்பவே பெண்களுக்குப் பொருந்திறாப் போல இருக்குது. இங்க கதைக்கிறதுகளை வைச்சுப் பார்க்கேக்க. மொத்தத்தில் அமைதியான் அன்பான சீரான வாழ்வென்பது இன்றைய காலத்தில் முயற்கொம்பு எங்கிறீர்கள்..! :D:D

பச்சைமட்டை அடியென்றால் பல பெண்களை வரிசையில நிற்க வைக்க இடமே இருக்காது. அந்தளவுக்கு கியூ நீண்டிருக்கும்..!

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது பொய்களுக்குப் பின் மறைந்திருப்பார்கள். :D:D:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் சொல்லி ஏன் டைம் யை வேஸ்ட் பண்ணனும்

அதுதானே ஒன்றா இரன்டா எடுத்துச்சொல்ல :P

Link to comment
Share on other sites

எத்தனை வயதை எத்தனை காதல் செய்வது என்பது ஒரு பொருட்டே அல்ல. வயது என்பது மனித அடையாளம். உடல், இயக்கம், மூளை என்பதும் தான் முக்கியமானது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ முடியும் என்றால் வயதில் எதுவும் இல்லை. நம்மட அன்ரன் பாலசிங்கம் ஐயா அடேல் அன்ரிக்கும் இடையில கூட வயசு வித்தியாசம் இருக்கு. அவர்கள் காதலிக்கவில்லையா. வாழவில்லையா.

அரபாத் தனது 68வது வயதில் முதற் திருமணம் செய்து குழந்தை பெறவில்லையா. நம்மட தலைவர் கூட தன்னை விட குறிப்பிடத்தக்க அளவு வயது கூடிய பெண்ணைத்தானே மணம் முடித்தார். மதிவதனி அக்கா வேண்டாம் என்றிட்டாவா...??! எதிர்பார்ப்பில்லாத அன்பிருப்பின் அவை ஒரு விடயமே அல்ல.

மனிதரைத் தவிர எந்த உயிரினமாவது சாட் வயது எழுதி வைச்சு வாழ்க்கை நடத்துதா..?!

நம்ம சாள்ஸ் டயானா தம்பதிகள் கூட 13 வயது வித்தியாசம். அவர்கள் சந்தோசகாக வாழ்வில்லையா. இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் திருமணத்துக்குப் பின்னான காதல்களால் தொடர்புகளால் வந்தவை. அதை அவர்கள் தவித்திருந்தால் இன்று உலகம் போற்றும் தம்பதியராய் வாழ்ந்திருப்பர். கோல்டன் பிறவுன் தம்பதிகள் அப்படி. இப்படிப் பல்லாயிரம் தம்பதியைக் காட்டலாம். அது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால் உங்களின் கருத்தை அடுத்தவருக்கு சொல்லி அவர்கள் அதனால் குழம்பும் நிலை இருந்தால் அப்படிப்பட்ட போலி மனிதர்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தால் அன்பான உள்ளங்கள் சிதைவடைவதும் அவர்கள் வாழ்வு சீரழிவதும் தவிர்க்கப்படும் அல்லவா.

20 வயது கூடிய பெண்களைக் கூட ஆண்கள் காதலிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அந்தக் காதல் காமத்துக்கு அப்பாலும் அன்பாலானதாக இருக்கலாம். சிலர் காதலைத் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப குறுகிய வட்டத்துக்குள் வைத்து அடுத்தவர் வாழ்க்கையை நாசம் பண்ணுகின்றனர். அதிலும் காதலென்று செய்யாமல் இருப்பதே சிறந்தது என்பதே எமது கருத்து. அதற்காக பெரியார் போல 76 வயதில் 16 வயதைத் திருமணம் செய்வது சரியென்ற முடியாது. அதிலும் பெரியார் ஏற்கனவே திருமணமானவர்.

வயசு காசு வேலை தகுதி படிப்பு பெயர் சாதி மதம் இனம் நாடு விசா சீதனம் சாட் எல்லாம் பார்ப்பதானால் அது காதல் அல்ல. திருமணச் சந்தைக்கு போகாமல் காதல் என்ற பெயரில் ஆட் பிடித்தல் என்பதாக இருக்கலாம். திருமணச் சந்தையில் பார்க்கப்படும் மேற்கூறிய நிலைகளால் பாதிக்கப்படக் கூடியவர்கள் காதல் என்ற பெயரில் ஆட்தேர்வு செய்வது வழமை. அவற்றைக் காதல் என்பதா கலி என்பதா..??! அவரவருக்கே வெளிச்சம். ஆனால் இப்போ எல்லாம் பெற்றோர் நண்பிகள் நண்பர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் சந்தோசமாக இருப்பதே பிடிக்காமல் இடையில் புகுந்து இப்படியான தங்களின் சிந்தனைகளை விதைத்து பலவீனமான காதலர்களைப் பிரிக்கின்றனர். அண்மையில் கூட தங்களின் தகுதிக்கு ஆண் சரியில்லை என்று தங்களின் மகளின் காதலை முறித்து அப்பெண்ணை வேறுநாட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஒரு பெற்றோர். அந்தப் பெற்றோருக்கு ஐடியாக் கொடுத்ததே குறித்த பெண்ணின் நண்பி. இப்படியும் நட்புக்கள் அமைந்தால் பலவீனமானவர்களின் காதல்கள் சிதறுறுவது தவிர்க்க்க முடியாதது. உண்மையில் அவற்றைக் காதல் என்று ஏற்க முடியுமா என்பதே கேள்வி..??!

அடுத்தவர் பிறைவேசியில் தலையிட நமக்கு உரிமையில்லை. அவர்கள் புகையிரத்ததில் கொஞ்சக் கூடாது என்பது சட்டமல்ல. அப்படி ஒரு சட்டமிருந்து மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் கொஞ்சட்டன் நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்திட்டுப் போறது. அதைக் காவி நீங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி உங்கள் பலவீனங்களை அடுத்தவருக்கு கடத்துகிறீர்கள் என்பதுதான் பொருள். :D:D:D

நான் இப்ப என்ன சொன்னென்? எதுக்கு இவ்வளவு பெரிய துள்ளல்?நான் வயது வித்தியாசத்தில் காதலிப்பது தவறு என்று சொல்லவில்லையே..முக்கியமான இரு விடய்ங்கள்

love and compatibility இருவருக்கும் இடையில் இருந்தால் ok..

Look Mr.Nedukks.. நான் யாருடய்ய பிரைவசியிலும் தலயிடுவதில்லை. :angry: .எங்களுக்கும் மனேர்ஸ் தெரியும்..நான் அவர் சொல்வதை தான் கேட்பனே தவிர நாங்களா எந்த அட்வைஸுக்கும் போவதில்லை..எனது நண்பிக்கு அவரை ப்டித்திருகிறது,,.காதலிக்கவா வேண்டாமா என்டு பரிசீலிச்சுகொண்டிருகிறா,,..யா

Link to comment
Share on other sites

<<<,

நீங்கள் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போகின்றேன். ஆனால் ஒரு வேளை கல்யாணத்தின் பின் ஏமாற்றிய காதலனை சந்திக்க நேரும் பட்சத்தில்!!...என்ன நடக்கும் யோசிச்சு ப் பாருங்கோ...விபரமா சொல்லாட்டிலும் ஓரளவுக்கு ச்ச் சும்மா சமாளிச்சு வைக்கிறது நல்லம் பாருங்கோ!!...ஆனால் காதல் என்று சொல்லி ஏமாத்துறவைக்கு பச்சை மட்டையால வெளுக்க வேணும்..!

<<<

ஆம்பிளைகளுக்கு என்னப்பா ஆயிரம் ஆட்டோகிராப் இருக்கும் அதையெல்லாம் பொம்பிளைகளும் சொல்ல வெளிக்கிட்டால்...டைவர்ஸ் ல தான் வந்து நிற்கும்!!...

அது தானே சொன்னன்..எப்படி எமது கணவரின் முதலும், கடைசியுமான பெண்ணாக நாம் இருக்க விரும்புகிறோமோ, அது போல் எமது வாழ்க்கையிலும் அவர் தான் கடைசியும் முதலுமான ஆணாக இருக்கவேண்டும்..அப்படி இருக்கும் போது, ஏமாற்றிய காதலன் எங்கேயிருந்து வருவார்?..இது எல்லாத்தயும் விட சிறந்தவழி, தனியாக இருப்பது..யாருக்கும் பயப்படதேவயில்லை... :P

Link to comment
Share on other sites

அப்படியென்றால் ஆண்கள் எல்லாம் 45 வயது தாண்டிய பெண்களை டிவேர்ஸ் செய்யலாம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். காரணம் பெண்கள் 45 வயதிலேயே உடற்தொழில் முதுமை அடைகின்றனர். ஆண்கள் அப்படியன்று. எதை வைச்சு ஓல்ட் என்பதை விளக்குவீர்களா..??! :D:D

20 வயது கூடிய பெண்ணைக் கூட திருமணம் செய்கின்றனர் ஆண்கள். ஓல்ட் என்று நீங்கள் குறிப்பிடுவதன் அர்த்தத்தை விளக்கினால் அப்படிப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவும் அல்லவா..??! :lol::D:lol:

என்னதான் அன்பிருந்தாலும் இருவரின் செயற்படுகள் சிந்தனைகள் கருத்துக்களில் வேறுபாடு இருக்கும் எண்டு நினைக்குறன். ஆனால் வயது கூடியவரை செய்யக்கூடாது எண்டு சொல்ல இல்லை அது அவரவர் விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப என்ன சொன்னென்? எதுக்கு இவ்வளவு பெரிய துள்ளல்?நான் வயது வித்தியாசத்தில் காதலிப்பது தவறு என்று சொல்லவில்லையே..முக்கியமான இரு விடய்ங்கள்

love and compatibility இருவருக்கும் இடையில் இருந்தால் ok..

Look Mr.Nedukks.. நான் யாருடய்ய பிரைவசியிலும் தலயிடுவதில்லை. :angry: .எங்களுக்கும் மனேர்ஸ் தெரியும்..நான் அவர் சொல்வதை தான் கேட்பனே தவிர நாங்களா எந்த அட்வைஸுக்கும் போவதில்லை..எனது நண்பிக்கு அவரை ப்டித்திருகிறது,,.காதலிக்கவா வேண்டாமா என்டு பரிசீலிச்சுகொண்டிருகிறா,,..யா

Link to comment
Share on other sites

மூக்ஸ் எனக்கு ரொம்ப அதிகமாக தெரியுது. 10 வயது கோட எண்டாலே ஏதோ சரியான ஓல்ட் மாதிரி பீலிங் இதுக்கை 20 வயது எண்டால் எனக்கு தாத்தா மாதிரி பீலிங் தான் வரும் :D:D

இப்பவெல்லாம் வயது ஒரு பிரச்சனையே இல்லையக்கா...ஆணால் ஒன்டு..எங்களை விட ஆண்கள் வயது ஆக அதிகமாக இருந்தால் கொஞ்சம் கூடவே கொன்ரோல் பண்ணபார்ப்பார்க'ல் என்று நினைகிறேன்...சும்மாவே இவர்களின் இம்சை தாங்க முடியாது..இதில வயது வேற ரொம்பவே அதுகம் என்றால் எம் பாடு அதோ கதி தான்....எதுக்கெடுத்தாலும் அட்வைஸ் என்ற பெயரில் பிளேட் போட தொடங்குவார்கள்..

Link to comment
Share on other sites

கலோ நெடுக்ஸ் அவர்கள் தங்கள் குட்டு வெளிப்பட்டுமோ அல்லது சுயநலத்துலோ சொல்லாமல் விடுவது

பெண்கள் காதலித்தே இருப்பர். பழைய நினைவுகளைக் கொல்ல முனைந்து கொண்டிருப்பர். ஆண்களுக்கு முன் தங்கள் குட்டு வெளிப்பட்டால் தங்கள் வாழ்வு கெட்டிடுமோ என்ற சந்தேகம் மற்றும் சுயநலம் முன்னோக்கிப் பாய்ந்திருக்கும். மறைத்திருப்பார்கள்... அல்லது பொய்களுக்குப் பின் மறைந்திருப்பார்கள். :D:D:D

இல்லை. பெண்கள் எப்பவும் பிரச்சினைகளை தங்களுக்குள்ளேயே வைச்சு தாங்களே தீர்க்கப் பார்ப்பார்கள். தேவை இல்லாமால் பிரச்சினை பண்ண மாட்டார்கள். ஒரு விடயத்தால பிரச்சினை வரும் எண்டு தெரிந்தால் அதனை தவிர்க்கவே விரும்புவார்கள். அதனால்த்தான் தேவை இல்லாத பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே அதனையும் தவிர்த்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுதரப்பின் புரிந்துனர்வைப் பொறுத்தது.சொல்வதும் விடுவதும். :P

Link to comment
Share on other sites

இப்பவெல்லாம் வயது ஒரு பிரச்சனையே இல்லையக்கா...ஆணால் ஒன்டு..எங்களை விட ஆண்கள் வயது ஆக அதிகமாக இருந்தால் கொஞ்சம் கூடவே கொன்ரோல் பண்ணபார்ப்பார்க'ல் என்று நினைகிறேன்...சும்மாவே இவர்களின் இம்சை தாங்க முடியாது..இதில வயது வேற ரொம்பவே அதுகம் என்றால் எம் பாடு அதோ கதி தான்....எதுக்கெடுத்தாலும் அட்வைஸ் என்ற பெயரில் பிளேட் போட தொடங்குவார்கள்..

அதுதான் மூக்ஸ் நானும் நினைக்குறன். :lol::lol::D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் அன்பிருந்தாலும் இருவரின் செயற்படுகள் சிந்தனைகள் கருத்துக்களில் வேறுபாடு இருக்கும் எண்டு நினைக்குறன். ஆனால் வயது கூடியவரை செய்யக்கூடாது எண்டு சொல்ல இல்லை அது அவரவர் விருப்பம்

சில வீடுகளின் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் 15 வருடம் வேறுபாடிருக்கும். ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த இடவெளிகள் இருந்ததில்லை. பல வீடுகளில் இருப்பதும் இல்லை.

அப்பா அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி. அவர்களுக்கிடையில் எப்படி புரிந்துணர்வு ஏற்படுகிறது. எல்லா வீட்டிலும் பிள்ளைகள் அப்பா அம்மாவோடு சண்டை பிடிக்குதுகளா முரன்படுகுதுகளா..?!

நீங்கள் அடுத்தவரின் மீது செலுத்தும் கவனம் அக்கறை ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஈடுபாடு என்பனவற்றின் அடிப்படையில் தான் இடைவெளி கூடுவதும் குறைவதும் இருக்கிறது.

70 வயது பேராசிரியரிடம் 20 வயது மாணவன் கல்வி கற்கிறான். அங்கு கூட புரிந்துணர்வு இருக்கின்ற போது ஏன் வாழ்வில் இருக்க முடியாது. ஆக புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடுதான் புரிந்துணர்வைத் தருகிறதே தவிர வயதல்ல. ஒரே வயதினர் கூட புரிந்துணர முற்படாமல் வேறு வேறு திசையில் பயணிக்க முயலின் புரிந்துணர்வு என்பதற்கு வாய்ப்பே இல்லை. அதுதான் யதார்த்தம் இதற்குள் வயதை கொண்டு வருவது பலவீனமான நிலை..எனலாம்..! :P :D

Link to comment
Share on other sites

கீழ்வரும் நபர்களின் வயது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டால்தான் இனி நான் இந்த வாக்கெடுப்பு விமர்சனத்தில் கலந்து கொள்வேன்:

1. நெடுக்கு :D

2. மூக்கி :D

3. ரசிகை :D

4. சஜீவன் :lol:

5. தமிழ்தங்கை :lol:

6. மாணிவாசகன் :lol:

7. சாத்திரி :lol:

8. கிருபன்ஸ் :o

9. தூயவன் :o

10. சினேகிதி :)

Link to comment
Share on other sites

:D என்ன இந்த களத்துக்கே தெரியும் இரசிகைட வயசு உங்களுக்குத் தெரியாதா மாப்பிளை???

நெடுக்ஸ் அண்ணன் தங்ககை அம்மா அப்பா உறவு வேறு கணவன் மனைவிக்குள்ள உறவு வேறு இதை இரண்டையும் போட்டுக் குழப்பாதீங்க. ஆனால் நீங்க சொன்ன மாதிரி நல்ல புரிந்துணர்வு இருந்தால் வயது ஒரு பிரச்சினை இல்லை.

Link to comment
Share on other sites

வவுனியாவில ஆமி முன்னேறிற்றானாம் எண்ட பதட்டத்திலை பாஸ்ர்ரா 4 இழுவை இழுத்துப் போட்டு பாத்தா திருமணத்துக்கு முன் காதல் கூட திருமலையில் தாக்குதல் எண்டு தெரியுது.

சா இப்பவே இந்த சுத்து சுத்துதே சுத்தி வளைச்சு அடிச்சு முடியும் மட்டும் என்னெண்டு ஸ்ரிங்கரை பிடிக்கிறது :D

Link to comment
Share on other sites

ஏன் மாப்பிளைக்கு மிச்சாக்கள் எல்லாற்ற வயசும் தெரியுமோ?

மற்றவர்களை பற்றி யோசிப்பதைவிட்டு உங்களது வயசை முதலில் கூறுங்கள். உங்கள் பெயரும் Top 10ல் இருக்கிறது, வடிவாகப் பாருங்கள்! :D

:D என்ன இந்த களத்துக்கே தெரியும் இரசிகைட வயசு உங்களுக்குத் தெரியாதா மாப்பிளை???

யாழ் களத்தில் உள்ள உந்த கள்ள Profileகளையெல்லாம் நம்ப முடியாது.

உங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசன்ஸ் அத்தாட்சி ஒட்டப்பட வேண்டும் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன போயிட்டு வாறதுக்குள்ள இத்தனை பேர் எழுதிட்டாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழ்வரும் நபர்களின் வயது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டால்தான் இனி நான் இந்த வாக்கெடுப்பு விமர்சனத்தில் கலந்து கொள்வேன்:

1. நெடுக்கு :D

2. மூக்கி :D

3. ரசிகை :D

4. சஜீவன் :lol:

5. தமிழ்தங்கை :lol:

6. மாணிவாசகன் :lol:

7. சாத்திரி :lol:

8. கிருபன்ஸ் :o

9. தூயவன் :o

10. சினேகிதி :)

நெடுக்ஸ்- 95 ஆண்டுகள். திருமணம் செய்து 82 வயதில் பாட்டி இருக்காங்க. :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் உள்ள உந்த கள்ள Profileகளையெல்லாம் நம்ப முடியாது.

உங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசன்ஸ் அத்தாட்சி ஒட்டப்பட வேண்டும் :angry:

அசைலம் அடிக்க ஒரு வயது கள்ள விசா எடுக்க ஒரு வயது இப்படி பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களும் அதற்கேற்ப பாஸ்போட்டுக்களும் அதற்கேற்ப றைவிங் லைசன்சுகளும் ஏன் இயற்பெயர்களுமே மாறியுள்ள காலத்தில் எலும்புகளை எடுத்து C14 ரெஸ்ட் செய்து பார்த்துத்தான் சொல்லனுங்கோ வயசு.

மது, புகை, அதீத பாலியல் ,மன அழுத்தமுள்ளவங்களுக்கும் பெண்களுக்கும் வயசை விட அதிகம் முதிர்ச்சி இயல்பானது. காரணம் சில உடலிரசாயனங்களும் மாற்றங்களும்..! சோ எதைச் சார் எவிடன்ஸ் என்று இப்ப நம்ப முடியும் சொல்லுங்க..! :D

காலம் கலி மித்திட்டுது. நம்ம காலம் போல இல்ல இது. 95 வருச கால வாழ்வில பாட்டியைக் கோவிச்சதில்ல. பாட்டி மட்டும் கோவிப்பா. ஆனால் அடக்கி ஆழ நினைச்சதில்ல. இது கலியாணம் கட்ட முதலே ஏன் காதலிக்க முதலே கட்டுப்படுத்துவானோ.. புதிசா வாறவன் பழைய காதலைக் கண்டுபிடிச்சிட்டால் சிக்கலே என்று சிந்திக்கிற கூட்டத்துக்கு எப்படிங்க அன்பின் வழி காதல் வரும். மனசு சுத்தமா அமைதியா இருக்கும். இதுகள் மொத்தமும் வேஸ்ட் பேர்வழி. :lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில ஆமி முன்னேறிற்றானாம் எண்ட பதட்டத்திலை பாஸ்ர்ரா 4 இழுவை இழுத்துப் போட்டு பாத்தா திருமணத்துக்கு முன் காதல் கூட திருமலையில் தாக்குதல் எண்டு தெரியுது.

சா இப்பவே இந்த சுத்து சுத்துதே சுத்தி வளைச்சு அடிச்சு முடியும் மட்டும் என்னெண்டு ஸ்ரிங்கரை பிடிக்கிறது :D

சனம் பெப் 22 வரை எதிர்பார்த்து ஏமாந்திட்டம் என்றுதானே இப்ப செய்த காதல்களும் போர் நிறுத்த ஒப்பந்தம் போல சிக்கலில மாட்டி விட்டிடுமோ என்று யோசிச்சு தலைப்புப் போட்டு கிளியர் பண்ணக் கருத்தாடுதுகள். எப்படி வருங்காலத்தில ஒருத்தனை இல்ல இன்னும் பலரை ஏமாத்திறது. பிடிபடாம ஏமாத்திறது. என்று திட்டம் போடினம். அதுதான் வெற்றி பெறல்ல. வாழ்க்கையாவது ஏதோ அதிகளின்ர குள்ளப் புத்திக்கு ஏற்றாப் போல அமையட்டும் விடுங்களன். அதுக்குள்ளையும் ஸ்ரிங்கர் சாம் என்றால் சனம் திரும்பக் குழம்பிடப் போகுது. :lol::D:D

Link to comment
Share on other sites

யாழ் கள Profile களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது!

1. நெடுக்கு Unknown

2. குறுக்கு Unknown

3. ரசிகை 06 :D:D:D

4. சினேகிதி 09 மாதங்கள் :lol::lol:

5. கிருபன்ஸ் Unknown

6. மணிவாசகன் Unknown

7. சஜீவன் Unknown

8. மூக்கி Unknown

9. தூயவன் 22 :P

10. கறுப்பி Unknown

11. தூயா Unknown

12. நிதர்சன் Unknown

13. அரவிந்தன் Unknown

14. அருவி Unknown

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள Profile களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது!

1. நெடுக்கு Unknown

2. குறுக்கு Unknown

3. ரசிகை 06 :D:D:lol:

4. சினேகிதி 09 மாதங்கள் :lol::lol:

5. கிருபன்ஸ் Unknown

6. மணிவாசகன் Unknown

7. சஜீவன் Unknown

8. மூக்கி Unknown

9. தூயவன் 22 :P

10. கறுப்பி Unknown

11. தூயா Unknown

12. நிதர்சன் Unknown

13. அரவிந்தன் Unknown

14. அருவி Unknown

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்தபோது நானும் ஊரில் இருந்தேன்.. ஆனால் ஒருநாளும் அடி வாங்கவுமில்லை.. சுற்றிவளைப்பில் கைது செய்யப்படவுமில்லை.. இதை வைத்து என் வயதை உங்கள் அறிவாற்றல் மூலம் ஊகித்துக் கொள்ளுங்கள் B) ;) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்தபோது நானும் ஊரில் இருந்தேன்.. ஆனால் ஒருநாளும் அடி வாங்கவுமில்லை.. சுற்றிவளைப்பில் கைது செய்யப்படவுமில்லை.. இதை வைத்து என் வயதை உங்கள் அறிவாற்றல் மூலம் ஊகித்துக் கொள்ளுங்கள் B) ;) :D

அட அப்பவே ஈ என் டி எல் எவ் இல சேர்ந்தாச்சா. இப்பதானே புரியுது ஏன் தான் அடுத்தவையைப் பார்த்து மாற்றுக் குழு துரோகி என்று பட்டம் கொடுக்கிறதுக்கு அவசரப்படுறனீங்கள் என்று..! :D:D

32?

சாட்டோடு சாட்டாய் வயதை குறைத்து சொல்வது போல் இருக்கிறது. யாரையாவது இன்னொரு முறை காதலிக்கும் அல்லது கலியாணம் செய்யும் நோக்கம் இருக்கிறதோ? :o:):D

அட அப்பவே ஈ என் டி எல் எவ் இல சேர்ந்தாச்சா. இப்பதானே புரியுது ஏன் தான் அடுத்தவையைப் பார்த்து மாற்றுக் குழு துரோகி என்று பட்டம் கொடுக்கிறதுக்கு அவசரப்படுறனீங்கள் என்று..! :D:D

:D:D:lol::lol::lol::lol::o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.