Jump to content

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.


Recommended Posts

பாக்கிஸ்தான் சகலதுறை ஆட்டக்காரரான அப்துல் ராஸாக் முழங்கால் உபாதை காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு;ளது. அவருக்குப் பதிலாக அஸார் மஹ_மூத் இணைத்துக் கொள்ளப்படுவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜானா

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

ஊக்கமருந்து தன்மையை போக்க அசிவ், அக்தர் லண்டன் பயணம்?

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி விடுதலை பெற்ற அக்தர், அசிவ் ஆகியோர் தங்களின் உடலில் தங்கியுள்ள ஊக்கமருந்து தன்மையை போக்குவதற்கு சிகிச்சை பெற லண்டன் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகக் கிண்ண போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அணித் தலைவர் இன்ஸமாம், அப்ரிடி, அக்தர், அசிவ் ஆகியோர் தவிர ஏனைய அனைவருக்கும் சோதனை முடிந்து விட்டது.

இந்நிலையில் அக்தர், அசிவ் ஆகியோர் ஏற்கனவே ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பதால் தடை செய்யப்பட்ட நன்ட்ரலோன் மருந்தின் பாதிப்பு இன்னும் அவர்களது உடலில் சிறிது இருக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் பாக். கிரிக்கெட் சபை இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறிது காலதாமதம் சோதனை மேற்கொள்ளும் போது அவர்களது உடலில் நன்ட்ரலோனின் தாக்கம் குறைந்து விடும் என்ற நோக்கில் அக்தர், அசிவுக்கு இன்னும் ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில் அக்தர், அசிவ் ஆகியோர் திடீரென லண்டன் பயணமாகியுள்ளனர். இருவரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் அதற்கு சிகிச்சை பெற லண்டன் சென்றிருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊக்கமருந்து உட்கொண்டதில் உடலில் உள்ள தாக்கத்தை குறைக்கும் பொருட்டு சிறப்பு சிகிச்சை பெற இருவரும் லண்டன் சென்றிருப்பதாக பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் அணி வரும் முதலாம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகவுள்ளது.

-Virakesari-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா சீனாவில் இருந்து இலங்கை அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். ஜெயசூரியாவுடன் தொலைபேசியிலும் கதைத்தார். சமய வழிபாட்டின் பிறகு இலங்கை அணியினை கிரிபத் உணவினை உண்டபின்பு இலங்கை அணியினர் லண்டனில் ஊடாக பார்படோஸ்ற்கு பிரயாணம் செய்ய கட்டுனாயக்க விமான நிலையத்துக்கு வந்தனர்.இலங்கை தேசியகீதத்தினை 5ம் வகுப்பு மாணவிகள் பாடிக்கொண்டு ரோசாப்பூக்களை(அதிஸ்டம் கிடைப்பதற்காக) இலங்கை அணியினருக்கு வழங்கினார்கள். இதற்கு முதல் நாள் பிரேமதாச விளையாட்டு அரங்கில் தனியார் வானொலியினரின் அனுசரனையுடன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே இலங்கை துடுப்பாட்ட வீரர்களை ஆதரவாளர்களின் சந்திப்பும் நடைபெற்றது .1லட்சம் பேர்கள் இலங்கை அணிக்கு வாழ்த்தி கையொப்பமிட்ட மிகப்பெரிய துடுப்பாட்ட Bat அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.இலங்கை அணியின் கட்டுனாயக்காவில் இருந்து புறப்படுவதினை ரூபவாகினி தொலைக்காட்சி நேரடி மின்னஞ்சல் ஒளிபரப்புச் செய்தது.இவ் உலகக் கோப்பையில் இலங்கை வெற்றி பெற்றால் அதில் கலந்து கொண்டதற்கு குறைந்தது 2.25 அமெரிக்கா மில்லியன் காசு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இக்காசு தமிழரைக் கொல்வதற்கும் பயன்படுத்தப்படலாம்.

Link to comment
Share on other sites

மகிந்தா சீனாவில் இருந்து இலங்கை அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். ஜெயசூரியாவுடன் தொலைபேசியிலும் கதைத்தார். சமய வழிபாட்டின் பிறகு இலங்கை அணியினை கிரிபத் உணவினை உண்டபின்பு இலங்கை அணியினர் லண்டனில் ஊடாக பார்படோஸ்ற்கு பிரயாணம் செய்ய கட்டுனாயக்க விமான நிலையத்துக்கு வந்தனர்.இலங்கை தேசியகீதத்தினை 5ம் வகுப்பு மாணவிகள் பாடிக்கொண்டு ரோசாப்பூக்களை(அதிஸ்டம் கிடைப்பதற்காக) இலங்கை அணியினருக்கு வழங்கினார்கள். இதற்கு முதல் நாள் பிரேமதாச விளையாட்டு அரங்கில் தனியார் வானொலியினரின் அனுசரனையுடன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே இலங்கை துடுப்பாட்ட வீரர்களை ஆதரவாளர்களின் சந்திப்பும் நடைபெற்றது .1லட்சம் பேர்கள் இலங்கை அணிக்கு வாழ்த்தி கையொப்பமிட்ட மிகப்பெரிய துடுப்பாட்ட Bat அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.இலங்கை அணியின் கட்டுனாயக்காவில் இருந்து புறப்படுவதினை ரூபவாகினி தொலைக்காட்சி நேரடி மின்னஞ்சல் ஒளிபரப்புச் செய்தது.இவ் உலகக் கோப்பையில் இலங்கை வெற்றி பெற்றால் அதில் கலந்து கொண்டதற்கு குறைந்தது 2.25 அமெரிக்கா மில்லியன் காசு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இக்காசு தமிழரைக் கொல்வதற்கும் பயன்படுத்தப்படலாம்.

விளையாட்டு வீரர்களின் மனதைக் குழப்பியடிப்பது இந்த அரசியல்வாதிகளே! சிறீ லங்காவின் மானம் காற்றில் போகிறது. நீயாவது மானத்தை கொஞ்சம் காப்பாற்று என்று மகிந்து ஜெயசூரியாவுக்கு சொல்லியிருக்குமாக்கும்! இந்த போட்டியுடன் நீ ஓய்வு பெறுகிறாய், ஓய்வு பெற்ற கையோடு எனது சிந்தனையில் கலந்துவிடு என்றும் மகிந்து கேட்டிருக்கும்!

Link to comment
Share on other sites

எம் அணிக்கு சவாலாய் விளங்குவது நான்கு அணிகளே. அதில் சிரிலங்கா அணியே அதிக அளவில் தம்மை மிரட்டுவதாக அவுஸ்திரேலியாவின் மைக் ஹஸி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்கா,பாகிஸ்தான், நியூசிலாந்து,சிரிலாங்கா ஆகிய அணிகளே தமக்கு சவாலக விளங்குவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இரு முறை (1999, 2003) உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா இம் முறையும் அதை கைப்பற்றி ஹட்ரிக் படைக்கும் என கிரிக்கட் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் முன்னனி வீரர்களின் காயம் அத்துடன் தொடர் தோல்விகள் அணியை தடுமாற வைத்திருக்கின்றது.

ஜானா

Link to comment
Share on other sites

எம் அணிக்கு சவாலாய் விளங்குவது நான்கு அணிகளே. அதில் சிரிலங்கா அணியே அதிக அளவில் தம்மை மிரட்டுவதாக அவுஸ்திரேலியாவின் மைக் ஹஸி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்கா,பாகிஸ்தான், நியூசிலாந்து,சிரிலாங்கா ஆகிய அணிகளே தமக்கு சவாலக விளங்குவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இரு முறை (1999, 2003) உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா இம் முறையும் அதை கைப்பற்றி ஹட்ரிக் படைக்கும் என கிரிக்கட் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் முன்னனி வீரர்களின் காயம் அத்துடன் தொடர் தோல்விகள் அணியை தடுமாற வைத்திருக்கின்றது.

ஜானா

கங்காருக் கொடி சிங்கக்கொடிக்கு பயப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது!

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி நேற்று மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம்.

-Verakesari-

Link to comment
Share on other sites

இலங்கை அணி கால் இறுதி ஆட்டம் வரை போவதே சந்தேகம் தான் பிறகு எப்படி வெற்றி கிண்ணத்தை கொண்டுவரப்போகினம். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி இந்த மச்சை எல்லாம் எப்படி நான் நேரடி ஒளிபரப்பில் பார்ப்பது?

Link to comment
Share on other sites

இந்திய அணி சூழ்நிலைக்கேற்ப விளையாட வேண்டுமென்பதால் உலகக் கிண்ணத்திலும் சோதனை முயற்சிகள் தொடரும் -சப்பல் கூறுகிறார்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். ஆதலால் வழக்கமான சோதனை முயற்சி தொடரலாம் என்று அணிப் பயிற்சியாளர் கிரேக் சப்பல் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் 13 ஆம் திகதி தொடங்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று புதன்கிழமை இரவு அந்நாட்டுக்கு புறப்பட்டது.

அதற்கு முன் பி.சி.சி.ஐ. தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்து பெற இந்திய அணி மும்பை சென்றது.

கப்டன் டிராவிட், பயிற்சியாளர் கிரேக் சப்பல் ஆகியோர் அப்போது செய்தியாளர்களிடம் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் சப்பல் கூறியதாவது;

"உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி பல்வேறு நாடுகளுடன் விளையாடவிருக்கிறது. அதனால், அனைத்து சூழ்நிலைக்கும் ஏற்ப தங்களை மாற்றி விளையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்போட்டியில் வலிமையான அணிகளுடன் விளையாடும் போது நெருக்கடிகள் ஏற்படலாம். அப்போது அனுபவத்தை பொறுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள். முக்கியமான கட்டத்தில் சிறப்பாக செயல்படக் கூடிய அளவில் அணியில் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.

அணியில் உள்ள சில வீரர்களுக்கு ஏற்கனவே, மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடிய அனுபவமுள்ளது. உடல் தகுதியுடன் அனைத்து வீரர்களும் உள்ளனர். அதனால், வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்" என்றார்.

இங்கு டிராவிட் கூறுகையில்;

"அனைத்து போட்டியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தால், முடிவுகள் நமக்கு சாதகமாகவே இருக்கும். ஆட்டத்தின் முத ல் 15 ஓவர்களும் கடைசி 10 ஓவர்களும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் முக்கியமானவை.

ஆட்டத்தின் மத்திய ஓவர்களில் தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை, விக்கெட் ஆகியவற்றை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும்.

காயத்திலிருந்து முனாப் பட்டேல் குணமாகி அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்த ஸ்ரீசாந்த், அனுபவம் வாய்ந்த அகார்கர், சஹீர்கான் ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதாக"வும் தெரிவித்தார்.

உலகக் கிண்ணத்தை வெல்லும் ஆர்வம் இந்திய அணிக்கு அறவே இல்லை -கபில் குற்றச்சாட்டு

இந்திய அணிக்கு உலகக் கிண்ணத்தை வெல்லும் ஆர்வம் இல்லையென இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கபில்தேவ் நிருபர்களிடம் கூறியதாவது;

"இந்தத் தடவை நடக்கும் உலகக் கிண்ணப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் எனக் கருதுகிறேன். பல வலுவான அணிகள் இதில் மோதுகின்றன.

இந்திய அணியை பொறுத்தவரை உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு இன்னும் சரியான ஆர்வம் காட்டவில்லை. உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று எனது மனது விரும்புகிறது. ஆனால், அணி நிலைமையை பார்க்கும் போது அது சாத்தியப்படும் வாய்ப்பில்லையென்றே தெரிவதாகவும் கபில்தேவ் கூறினார்.

மேற்கிந்தியக் கப்டன் லாரா இது பற்றி கூறும்போது" மேற்கிந்திய அணி வலுவாக உள்ளது. சொந்த மண்ணில் நாங்கள் இதற்கு முன் அதிகம் சாதித்தது இல்லை. ஆனால் நிச்சயம் இந்த தடவை சாதிப்போம். உலகக் கிண்ணத்தை வெல்வோம்" என்றார். பாகிஸ்தான் கப்டன் இன்சமாம், அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறினார்.

உலகக் கிண்ணப் போட்டி தொடங்கும் முன்னரே சூடுபிடித்துவிட்டது சூதாட்டம்; 1000 தரகர்கள் களத்தில்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 வாரங்களே இருக்கின்றன. ஆனால், கிரிக்கெட் சூதாட்டம் முன் கூட்டியே தொடங்கிவிட்டது.

ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் அணி எது, காலிறுதிக்கு போவது யார், அரை இறுதிக்கு போவது யார், இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும், தொடக்க வீரர்களாக இறக்கப்படுவது யார், கடைசி 5 ஓவர்களில் எத்தனை ஓட்டங்கள் எடுப்பார்கள், என பல விதங்களில் பந்தயம் கட்டி சூதாட்டம் நடத்துகிறார்கள்.

இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகக் கிண்ணப் போட்டியை ஒட்டி சூதாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 1000 தரகர்கள் களத்தில் குதித்துள்ளனர். இவர்கள் இந்தியா மட்டும் அல்ல பாகிஸ்தான், டுபாய், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடு ஆகியவற்றிலும் தொடர்புகளை ஏற்படுத்தி சூதாட்டம் நடத்துகிறார்கள்.

இப்போதே 60 ஆயிரம் கோடி ரூபாவுக்கு சூதாட்டப் பணம் புரண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது 180 ஆயிரம் கோடி ரூபா வரை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் நிதியைவிட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற கணிப்பில் அவுஸ்திரேலியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2 ஆவது இடத்தை தென் ஆபிரிக்கா பிடித்துள்ளது. மேற்கிந்தியா 3 ஆவது இடத்தையும் இலங்கை 4 ஆவது இடத்தையும் இந்தியா 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் இடத்தைப் பிடிக்கும் அணி மீது பணம் கட்டினால் குறைவான பரிசுத் தொகையே கிடைக்கும். வலிமை குறைந்த அணி மீது பணம் கட்டினால் அதிக பரிசை அள்ளலாம்.

இப்போதுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி மீது 2 ரூபாவைக் கட்டி அந்த அணி வென்றால் 5 ரூபா 20 சதம் கிடைக்கும். தென் ஆபிரிக்காவுக்கு 8 ரூபா 80 சதமும் மேற்கிந்தியாவுக்கு 8 ரூபா 50 சதமும் இலங்கைக்கு 19 ரூபா 20 சதமும் இங்கிலாந்துக்கு 20 ரூபாவும் நியூஸிலாந்துக்கு 20 ரூபா 50 சதமும் பாகிஸ்தானுக்கு 13 ரூபாவும் கிடைக்கும்.

பங்களாதேஷ், அயர்லாந்து, கனடா, கென்யா அணிகள் மீது கட்டினால் பணத்தை அள்ளிவிடலாம். இந்த அணிகளுக்கு 1400 ரூபா முதல் 3,000 ரூபாவரை நிர்ணயம் செய்துள்ளனர்.

அதாவது, இந்திய அணி வெற்றிபெறும் என்று 2 இலட்ச ரூபா பந்தயம் கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இந்தியா வென்றால் 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா கிடைக்கும். தோற்றால் 2 இலட்ச ரூபாவும் பறிபோய்விடும்.

முதல் சுற்று, போட்டியில் இருந்தே சூதாட்டம் தொடங்கி விடுகிறது. முதல் சுற்றில் மட்டும் 8 ஆயிரம் கோடி ரூபாவிலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா வரை பணம் புரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால் இறுதியில் 6 ஆயிரம் கோடி ரூபாவும், அரை இறுதியில் ஒவ்வொரு போட்டிக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாவும், இறுதி போட்டிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாவும் புரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்யா உங்க வீட்டு டிவி முன்னாடி உக்கந்துதான் பாக்க்கிறது :rolleyes::rolleyes::unsure: :P :P :P :unsure::o:o

முடியாதே அண்ணாச்சி இந்தாலியில் கிரீக் கேட்(cricket) ஒளிபரப்புவது இல்லையே :unsure:

Link to comment
Share on other sites

அப்ப உங்களுக்கு ஒரு மாஸ்ரர் ஐடியா தாறன் மேற்கிந்திய தீவுகளுக்கு போங்கள் எல்லா போட்டிகளையும் நேரடியாக பார்க்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் அணியிலிருந்து அக்தர், ஆசிஃப் நீக்கம்!

உலகக் கோப்பை போட்டிகளுக்கு புறப்பட இருந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோயப் அக்தரும், மொஹம்மது ஆசிஃபும் நீக்கப்பட்டுள்ளனர்!

ஷோயப் அக்தர் முழங்காலில் காயமுற்றிருப்பதாகவும், மொஹம்மது ஆசிஃப் முழங்கை முட்டையில் காயமுற்றிருப்பதாகவும், எனவே முழு உடல் தகுதி பெறாத அவர்கள் இருவரும் அணியில் இருந்து நீக்கப்படுவதாக பாகிஸ்தான் அணியின் பேச்சாளர் மிர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஷோயப் அக்தரையும், ஆசிஃபையும் சோதித்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், இவர்களுக்கு பதிலாக மொஹம்மது சமியும், யாசிர் அராஃபட்டும் அணியில் சேர்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒப்புதலை கோரப் போவதாக மிர் தெரிவித்துள்ளாh.

இவர்கள் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காயம் காரணம் அல்லவென்றும், அவர்களிடம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர்கள் இருவரும் தகுதிபெறாததே காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அப்துல் ரசாக் காயமுற்றதால் அவருக்கு பதிலாக அசார் மாமூதை சேர்ப்பதற்கு ஐ.சி.சி. ஒப்புதலை எதிர்நோக்கியுள்ள நிலையில், தற்பொழுது மேலும் 2 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

Arya Posted Yesterday, 05:12 PM

முடியாதே அண்ணாச்சி இந்தாலியில் கிரீக் கேட்(cricket) ஒளிபரப்புவது இல்லையே

யாழ்வினோ Posted Yesterday, 06:06 PM

அப்ப உங்களுக்கு ஒரு மாஸ்ரர் ஐடியா தாறன் மேற்கிந்திய தீவுகளுக்கு போங்கள் எல்லா போட்டிகளையும் நேரடியாக பார்க்கலாம்.

அத விட சூப்பர் ஐடியா இருக்கு, இலங்கைக்குப் போங்க, பொலிஸ் நிலையதில எல்லாம் டிவி வச்சு கிரிக்கட் பார்ப்பாங்கள்....... :P :P :P :lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அப்படியானால் பாகிஸ்தானை லோக்கல் டீமுகலெல்லாம் இந்த உலக கோப்பையில் இலகுவாக தோற்கடிக்கப் போகிறார்கள் என்று சொல்லுங்கோ! இவ்வளவு காலமும் உலகக் கோப்பை விளையாடப் போன பாகிஸ்தான் டீமுகளில் இதுவே மோசமான டீம் எனக் கூறமுடியுமா? :lol:

Link to comment
Share on other sites

கிரிக்கட்டில் எதுவும் நடக்கலாம், உ+ம்; 96இல் இலஙகை அணி சாம்பியன் ஆனது, கிரிக்கல்டில் கணக்கே இல்லாத அணியான கென்ய அணி 2003ல் அரைஇறுதி வரை சென்றமை,

Link to comment
Share on other sites

என்னுடைய ஊகம் 13 ஆம் திகதி நடைபெறும் ஆரம்ப நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் முறையா வாங்கிக் கட்டும். :lol:

Link to comment
Share on other sites

மாப்ஸ் யாழ்வினோ பாக்கிஸ்தானை குறைத்த மதிப்பிடாதீர்கள். கடைசி மூச்சுவரை போராடி விட்டுத்தான் வீழ்வார்கள். அணியில் முக்கிய ஆட்டக்காரரில்லாத விடத்தும். அவர்கள் கடைசி வரை போராடத் தான் போகின்றார்கள். புதிய ஆட்டக்காரர்கள் மற்ற அணிகளின் வயிற்றைக் கலக்கினாலும் ஆச்சரியமில்லை. ஆயினும் இறுதிச் சுற்று வரை செல்வது கடினம்.

ஜானா

Link to comment
Share on other sites

தற்போதைய நிலையில் இந்தி அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அன்று சச்சினும் டிராவியும் ஆட்டமிழந்தால் மற்றவர்கள் நடுக்கத்துடனே மட்டை எடுத்துக் கொண்டு களத்தினுள் நுழைவார்கள். ஆனால் இன்று நடு மற்றும் பின் வரிசை ஆட்டக்காரர்களும் அச்சமின்றி விளையாடுகின்றார்கள். உ+ம் : கார்த்திக் டோனி போன்றவர்கள். சச்சினை நம்பாதவர்கள் இன்று டோனியை நம்புகின்றார்கள். கடந்த போட்டிகளில் டோனியின் அசத்தல் ஆட்டம் நன்றாக இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

post-2709-1172847804_thumb.jpg

ஜானா

Link to comment
Share on other sites

மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானங்களில் விளையாடுவது என்றாலே இந்தியா வீரர்களுக்கு வயிற்றைக் கலக்கும். கடந்த உலக கிண்ணத்துக்கு பின்னர் இரண்டு தடவைகள் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி இரண்டு தடவைகளும் படுதோல்வியுடன் தான் நாடு திரும்பினார்கள் என்பதை எல்லாரும் மறந்திட்டீங்க போல இருக்கு. யாரு அவர் டொனியோ?? அவர் அவங்கட நாட்டு மைதானங்களில் மட்டும் தான் ஓவ் சைட்டால வாற பந்துகளை எல்லாம் மடக்கி லெக் சைட்டால சிக்ஸசர் அடிக்க முடியும் மற்றைய நாட்டு மைதான்களில் உதெல்லாம் வாய்க்காது. உதாரணம் கடைசியாக நடை பெற்ற தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது அவர் என்னத்தை சாதித்தார்???? :rolleyes::rolleyes:

பொன்டிங்கும் கில்கிறிஸ்ற்றும் அடிக்கப் போற சிக்சர்கள் ஸ்ரேடியத்துக்கு மேலால போகும் பொறுத்திருந்து பாருங்கோ. :):)

Link to comment
Share on other sites

மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானங்களில் விளையாடுவது என்றாலே இந்தியா வீரர்களுக்கு வயிற்றைக் கலக்கும். கடந்த உலக கிண்ணத்துக்கு பின்னர் இரண்டு தடவைகள் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி இரண்டு தடவைகளும் படுதோல்வியுடன் தான் நாடு திரும்பினார்கள் என்பதை எல்லாரும் மறந்திட்டீங்க போல இருக்கு. யாரு அவர் டொனியோ?? அவர் அவங்கட நாட்டு மைதானங்களில் மட்டும் தான் ஓவ் சைட்டால வாற பந்துகளை எல்லாம் மடக்கி லெக் சைட்டால சிக்ஸசர் அடிக்க முடியும் மற்றைய நாட்டு மைதான்களில் உதெல்லாம் வாய்க்காது. உதாரணம் கடைசியாக நடை பெற்ற தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது அவர் என்னத்தை சாதித்தார்???? :rolleyes::blink:

பொன்டிங்கும் கில்கிறிஸ்ற்றும் அடிக்கப் போற சிக்சர்கள் ஸ்ரேடியத்துக்கு மேலால போகும் பொறுத்திருந்து பாருங்கோ. :lol::lol:

வினோக்கு பந்து பொறுக்குற ஐடியா இருக்குப் போலயிருக்கு...... :o

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கிருக்கிறதென்கிறார் அர்ஜுனா

உலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கப்டன் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அர்ஜுன ரணதுங்க நிருபர்களிடம் கூறியதாவது;

"உலகக் கிண்ணத்தை இலங்கை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. ஆனால், இப்போதைய நிலையை பார்க்கும் போது இந்தியா தான் அதனைக் கைப்பற்றும் என்று நம்புகிறேன்.

இப்போது அந்த அணி எல்லா நிலையிலும் வலுவாக இருக்கிறது. அதாவது சரியான திசையில் இந்திய அணி பயணத்தை தொடங்கியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் அணியாக அது இருக்கும்.

கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிவரை வந்தது. ஆனால், அந்தப் போட்டியில் சில தவறுகளை செய்ததால் வெற்றி பெறவில்லை. ஆனால், இப்போது அவுஸ்திரேலிய அணி பின்னடைவில் உள்ளது. எனவே, ஆசிய அணியில் ஒன்றுதான் இதனை கைப்பற்றும் என எதிர்பார்க்கிறேன்.

பாகிஸ்தான் அணி கூட வலுவாகவே இருக்கிறது. அவுஸ்திரேலிய வீரர்கள் நாங்கள் தான் சிறந்த அணி என்று சொல்லலாம். ஆனால், கடந்த சில வாரங்களாக அவர்களின் ஆட்டத்திறன் பின்தங்கி காணப்படுகிறது. அவர்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள்" என்றார்.

உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கிருக்கிறதென்கிறார் அர்ஜுனா

உலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கப்டன் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அர்ஜுன ரணதுங்க நிருபர்களிடம் கூறியதாவது;

"உலகக் கிண்ணத்தை இலங்கை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. ஆனால், இப்போதைய நிலையை பார்க்கும் போது இந்தியா தான் அதனைக் கைப்பற்றும் என்று நம்புகிறேன்.

இப்போது அந்த அணி எல்லா நிலையிலும் வலுவாக இருக்கிறது. அதாவது சரியான திசையில் இந்திய அணி பயணத்தை தொடங்கியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் அணியாக அது இருக்கும்.

கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிவரை வந்தது. ஆனால், அந்தப் போட்டியில் சில தவறுகளை செய்ததால் வெற்றி பெறவில்லை. ஆனால், இப்போது அவுஸ்திரேலிய அணி பின்னடைவில் உள்ளது. எனவே, ஆசிய அணியில் ஒன்றுதான் இதனை கைப்பற்றும் என எதிர்பார்க்கிறேன்.

பாகிஸ்தான் அணி கூட வலுவாகவே இருக்கிறது. அவுஸ்திரேலிய வீரர்கள் நாங்கள் தான் சிறந்த அணி என்று சொல்லலாம். ஆனால், கடந்த சில வாரங்களாக அவர்களின் ஆட்டத்திறன் பின்தங்கி காணப்படுகிறது. அவர்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள்" என்றார்.

Link to comment
Share on other sites

உலகக் கிண்ண வரவேற்பு பாடலை ஐ.சி.சி. புதன்கிழமை வெளியிட்டது

மேற்கிந்தியத்தீவுகளில் இம்மாதம் 13 ஆம் திகதி தொடங்கவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வரவேற்புப் பாடலை புதன்கிழமை வெளியிட்டது ஐ.சி.சி.

இப்பாடலை கரீபியர்கள் (மேற்கிந்தியர்கள்) அவர்கள் நாட்டுக்கே உரித்தான இசையில் பாடி வரவேற்றுள்ளனர்.

"தி கேம் ஒவ் யுனிற்ரி" என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை ஜமேக்காவைச் சேர்ந்த ஷாஜி, பார்படோசை சேர்ந்த ருப்பி, ரினிடாட்டைச் சேர்ந்த பே-அன்-யான்ஸ் ஆகியோர் பாடி இசை அமைத்துள்ளனர்.

பலமாதங்கள் கடினமாக உழைத்து அனைவருக்கும், புரியும் வண்ணம் ஆங்கிலத்திலும், கரீபியன் மொழியிலும் பாடியுள்ளனர்.

"இந்தப் பாடல் இன்னும் 2 வாரங்களில் உலகில் உள்ள இலட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உதட்டிலும் உச்சரிக்கப்படும் என்று நம்பிக்கையுள்ளது. இந்தப் பாடலை கேட்ட பின் உலகில் கரிபீயர்கள் தான் இசையில் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும்" என்றார் பாடலை இசையமைத்தவர்.

Link to comment
Share on other sites

இது எப்படி? உலகக் கோப்பையை விட இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் போல் இருக்கிறதே?

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry165596

யாழ் களத்திலும் ஒரு கீரிக்கட்டு அணியை உருவாக்கினால் என்ன?

ஆனால் நான் தான் கப்படனாகவும், ஓபினிங் போலராகவும், ஓபினிங் பட்ஸ்மனாகவும் இருப்பேன்!

விக்கெட்டு கீப்பராக ஆதியைத்தான் போடுவேன்!

சின்னப் பெடியங்கள்தான் ஒடிஒடி பீல்ட் பண்ண வேண்டும்.

me - bowler

aathi - keeper

jana - Third man

yarlvino - longoff

prasanna - deep fine leg

sajeevan - silly mid off

sundal - silly mid on

eelavan - gully

vithu - extra cover

thuuyavan - deep square leg

vinith - mid on

எப்படி நம்ம பீல்டிங் செட்டிங்? ஒரு பய பவுண்டரியோ அல்லது சிக்ஸோ அடிக்க விடமாட்டன்! சிங்கில்ஸ் ஆக ஓட்டங்களை ஓடி ஓடி பொறுக்க வேண்டியத்தான்! எதிரணிக்கு வேறு வழியில்லை! :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.