-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
இரணைதீவில் கடற்படையினர் தோண்டிய குழியை இன்று மூடினர் அப்பகுதி மக்கள்.! இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கடற்படையினர் தோண்டிய குழியை அங்குள்ள மக்கள் இணைந்து இன்று மூடினர். கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவை அரசு தெரிவு செய்துள்ளமைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினர் அரசின் இந்த முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர். கொரோனாவால் மரணிப்போரின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் அரசின் இனவெறிச் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விமர்சித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு ஏடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது. இது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/03/02/23219/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கையை ஆதரிக்க வேண்டும் - கெஹலியவும் கோரிக்கை.! ஐ.நா. விவகாரத்தில் இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கை தொடர்பான பிரேரணையில் இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அரசால் ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். http://aruvi.com/article/tam/2021/03/02/23223/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்தி தனித்தமிழீழம் உருவாக இடமளிக்க வேண்டாம்! - சரத் வீரசேகர வலியுறுத்து.! பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்தி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அரசு வழங்கக்கூடாது; தனித்தமிழீழம் உருவாக இடமளிக்கக்கூடாது." - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் அதில் தெரிவிக்கப்படும் பரிந்துரைக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். இது ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கும் பணிவான வேண்டுகோள். நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தலொன்று தேவையற்ற விடயம். இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சி இலங்கையில் அவசரப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது என்ற செய்தி வெளியில் வரக்கூடாது. இதைக் கவனத்தில்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அரசு செயற்பட வேண்டும்" - என்றார். http://aruvi.com/article/tam/2021/03/03/23226/
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.