Sign in to follow this  
putthan

ஊர்க்காவலன்

Recommended Posts

கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே  இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட  சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி  சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும்  என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை.Image result for அன்னதானம் images

சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக்கத்து கிராமத்து பெடியள் எமது ஏரியா பெண்களை பார்க்க வந்தால் அவர்களின் பருமனை பார்த்து  அவர்களை வெருட்டி திருப்பி அனுப்புதல் போன்ற செயல்களை பொது நோக்குடன்  செய்வது எங்களது வழக்கம்.

முற்போக்கு இலக்கிய ஆர்வாளர்கள் கூட்டம் ஆறு மணிக்கு நடை பெறுவதாக இணையத்தளத்தில் விளம்பரத்தை பார்த்த நான் ஐந்தரைமணிக்கு மண்டப வாசலில் போய் நின்றேன். இலவச அனுமதி என்றபடியால் அதிக சனம் வரும் என்று எதிர் பார்த்தேன் ஆனால் எதிர் பார்த்தபடி ஆர்வாளர்கள் சமுகமளிக்கவில்லை.    பி.எம் .டபிள்யு  காரிலிருந்து நஷனல் போட்டு குறுந்தாடியுடன் ஐம்பத்தைந்து வயதுமதிக்க தக்க ஒருத்தர் இறங்கி வந்தார்.அதே நடை, எங்கயோ பார்த்த முகம் கையில் ஒரு தொகுதி புத்தகத்துடன் மண்டபத்தினுள் நுழைந்தார்.

பாடசாலையில் பின்வாங்கிலிருந்த பழக்கதோசம் இங்கும் மண்டபங்களில் பின் வரிசையை நோக்கி எனது கால்கள் என்னை அழைத்து இருத்திவிடும்.ஆறரை மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.குறுந்தாடி வைத்தவருடன் இன்னும் சிலர் மேடையில் அமர்ந்திருந்தனர்.ஏற்பாட்டாளர்கள் ஒவ்வோருத்தரையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள்..பொன்னாடை போடவில்லை மகிழ்ச்சியாக இருந்தது.

எனது தவிப்புக்கு விடை கிடைக்கும் தருணம் வந்தது அதாவது  தாடியை அறிமுகம் செய்யும் நேரம்.மெல்பேர்னிலிருந்து வந்திருக்கும் முற்போக்கு எழுத்தாளர்,புரட்சிகர சிந்தனையாளர் சி.  என்று அவரை அறிமுகம் செய்து வைத்தார்.நினைவில் யார் என்று இன்னும் வரவில்லை.எல்லொரும் கை தட்டினார்கள் நானும் கைதட்டினேன்.

கைதட்டாவிடில் அறிவிப்பாளர்கள் இப்பொழுதெல்லாம் "எங்கே உங்கள் பலத்த கரகோசம்"எனகேட்டு வாங்குகிறார்கள்.

என்னுடைய கிறுக்கலுக்கு பச்சை புள்ளிகளும் பாரட்டுகளும் கிடைக்கும் பொழுது ஏற்படும் மன சந்தோசம் போன்று ஒவ்வோரு மேடை பேச்சாளர்களுக்கும்  ஏற்படுவதில் தப்பில்லை என்று நினைத்து மீண்டும் ஒரு பலத்த கைதட்டலுடன் விசிலும் அடித்தேன்.

மைக்கை வாங்கிய சி.தா,தோழர்களே வணக்கம் ,என்னை இன்று தோழர் .பா அவர்கள் தனது  "சிறகொடிந்த காகம்" என்ற புத்த வெளியீட்டுக்கு தலமை தாங்கும்படி கேட்டுக்கொண்டதற்கமைய நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன் நிற்கின்றேன்..பா எனக்கு சிறு வயது முதலே தெரியும் பல களம் கண்ட போராளி ,நானும் அவனும் வன்னிகாடுகளில் அலைந்த நாட்களை எழுத வரிகள் இல்லை.

எங்கயோ கேட்ட  பரீட்சையமான  குரல் யாராக இருக்கும்?மனது விடை காணதுடித்தது.

    எமது போராட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் எகாதிபத்தியவாதிகளும் அவர்களின் அருவருடிகளான எம் இன முதலாளிகளும் தான், சிங்கள  மக்களில் பெரும்பான்மையினர் நல்லவர் அவர்களை கெடுப்பது எகாதிபத்தியவாதிகளின் கைக்கூலிகள்.உண்மையை சொல்லப்போனால் இன்று முள்ளிவாய்காலில் நடந்த சம்பவத்திற்காக அதிகமான சிங்களவர் கண்ணீர் சிந்துகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தவில்லை ஒரு இயக்கம்தான் போராடியது. மக்கள் போராடியிருந்தால் அதுவும்  சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடியிருந்தால் நாம் இன்று விடுதலை அடைந்திருப்போம்.

பழக்கப்பட்ட அதே கருத்து அடே உவன் எங்கன்ட "கருத்து கந்தசாமி"

சி.தாமோதரம் போல கிடக்கு இருந்தாலும் பக்கத்திலிருந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள அவரை பார்த்தேன்.அவரை சிட்னியில் கண்டிருக்கிறேன் ஆனால் ஒருநாளும் கதைக்கவில்லை.ஒரு புன்முறுவலைபோட்டு

"உங்களுக்கு உவரை தெரியுமோ"

"இவரின்ட பெயர் தாமோதரம் தானே ஊர் மானிப்பாய் "

"ஓம் அவரும் நானும் பேரதேனியாவில் ஒன்றாக படித்தனாங்கள்"

இடைவேளை அறிவித்தார்கள் இருவரும் தேனீர் அருந்தியபடியே

சி.தாவைப்பற்றிய விடுப்புக்களை பகிர்ந்து கொண்டோம்.

"வன்னி காட்டுக்குள் நின்ற போராளி என்று சொல்லுறார் பிறகு எப்படி பேரதேனியாவில் படிச்சிருப்பார்"

"தம்பி ஒரு மாதம் காடுகளில் திரிஞ்சு போட்டு போராளி என்று சொல்ல ஏழுமோ , உமக்கும் ஆளை தெரியும்போல கிடக்கு"

ஓமோம்,என்னை விட இரண்டு மூன்று வயசு அதிகம் எங்கன்ட ஊர் கோவில் மண்டபங்களில் ஒன்று கூடியிருக்கும் பொழுது அரசியல் கருத்துக்களை சொல்லிகொண்டிருப்பார்.மக்களை பாதுகாக்க மக்கள் போராட்டம் வெடிக்க வேணும் என்பார் .நாங்கள் கோவிலில் நின்றால் ஏனடா கோவிலில் நின்று நேரத்தை வீணடிக்கிறியள் மக்களை திரட்டி மக்கள் போராட்டத்தை முன்னேடுப்போம் என்று ஒரே சொற்பொழிவாக இருக்கும்.பிறகு கொஞ்ச நாட்களாக ஆளை காணவில்லை .பெடியங்கள் சொன்னார்கள் தாமு இயக்கத்தில சேர்ந்திட்டான்  என்று.அதற்கு பிறகு இப்பதான் முதல் முறையாக ஆளை பார்க்கிறேன்."

"பொலிஸ் தேடுது என்று காட்டுவழியாக கண்டி வந்து அண்ணனுடனிருந்து /எல் பாஸ் பண்ணி பெர்தேனியாவில் படிச்சவன்,அங்கயும் சிங்களவருடன் ஆள் நல்ல ஒட்டு,நாடகம் ,கதை ,கவிதைஎன்று எல்லாத்துக்கும் முன்னுக்கு நிற்பான்"

அக்கம்பக்கம் திரும்பி பார்த்துவிட்டு காதருகே வந்து

"காய்க்கு ஒரு சிங்கள படுவும் இருந்தது"

"அந்த படுவைத் தான் கட்டியிருக்கிறாரா"

"என்ன தம்பி விசர் கதை கதைக்கிறீர் கொழுத்த சீதனத்துடன் கொழும்பு பெட்டையை கட்டினவன்" 

"கொழும்பு என்றால் சிங்களபிள்ளையையா?"

"சீ சீ எங்கன்ட யாழ்ப்பாணத்து பிள்ளை கொழும்பில செட்டில், தகப்பன் கஸ்டம்ஸில் வேலை பார்த்தவர்."

சி.தாவை சூழ பலர் நின்றனர் .என்னுடன் கதைத்துகொண்டிருந்தவரும்  அவரை சந்திப்பதற்கு செல்ல தயாரானார்

"வாருமன் சி.தாவுடன் கதைப்போம்"

"இல்லை நீங்கள் போங்கள் நான் வெளிகிடப்போறன்"

"இனி எப்ப சந்திக்கலாம்"

"அடுத்த கிழமை சிட்னிமுருகன் கோவிலில் சொற்பொழிவு இருக்கு தாயகத்திலிருந்து சொற்செல்வர் வந்திருக்கிறார்"

"அப்ப அங்க சந்திப்போம் நான் வாரன்"

பெடியளுடன் ஊர் சுற்றும் காலத்தில் ஒரு நாள் சுதுமலை , இனுவில் மருதனாமடம் வரை சென்று திரும்பிகொண்டிருக்கும் பொழுது எங்களது சைக்கிள்களுக்கு  பின்னால் "சி 90" கொன்டா மொட்டர் சைக்கிள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்னாள் நாங்கள் நிறுத்தியவுடன் அவரும் முன்னுக்கு வந்து மொட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

Image result for images of honda c90 motorbike

என்னை கண்டவுடன்

" நீங்களா"

"ஒமோம் எப்படியிருக்கிறீங்கள்"

"நல்லாயிருக்கிறன் ,தோட்டத்தில் நின்றனான் சைக்கிளில் குறுப்பா உங்கன்ட கோஸ்டியை அந்த பக்கம் கண்டனான் அதுதான் யார் என்று பார்க்க வந்தனான்,இப்ப யார் யார் என்றில்லை ஊருக்குள்ள வந்து போறாங்கள்"

"அண்ணவின்டகடிதம் வந்ததோ"

"ஒம் வந்தது அடுத்த மாதம் வாரார்"

"அண்ணர் வந்த பிறகு சந்திப்போம்"

விடை பெற்று மீண்டும் பெடியளுடன் சைக்கிள் சவாரி தொடங்க

"யாரடா மச்சான் உந்த ஊர்க்காவலன்"

"உவரின்ட அண்ணர் என்னுடைய அண்ணருடன் சவுதியில் வேலை செய்கிறார் அந்த பழக்கம்"

. "நீ இல்லாட்டி எங்களுக்கு இருட்டடி விழுந்திருக்கு ஊர்காவலனிடமிருந்து"

என்ற பெடியளின் நக்கலுடன்

ஒருத்தரிடமும் இருட்டடி வாங்காமல் வீடு வந்து சேர்ந்தோம்.

கார் பார்க்  பி.எம்.டபிள்யூ,பேண்ஸ்,டோயொட்டா,வொல்வொ என்று நிறைந்திருந்தது.எனது காருக்கு இடத்தை தேடி பார்க் பண்ணிபோட்டு மண்டபத்தினுள் சென்றேன்.கார்பார்க்கை போன்று மண்டபமும் நிறைவாகவே காணப்பட்டது.

கடந்த கிழமை அறிமுகமான தோழர் கூட்டதினுள் இருக்கின்றாரோ என பார்த்தேன்.மக்கள் கூட்டத்தினுள் அவரை காண்பது கடினமாக இருந்தது.

பலத்தகரகோசத்துடன் சொற்செல்வர் தனது உரையை தொடங்கினார்.புலம்பெயர்ந்த மக்களை புகழ்ந்து பாராட்டி பேசினார்.மனசு சந்தோசமடைந்தது.வழமையாக புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் அல்லது உங்களால்தான் நாட்டில பட்டினி என்று கூறும் சில புரட்சியாளர்களின் குற்றைச்சாட்டை கேட்டு பழகிய மனசுக்கு பெரியவரின் பாராட்டு மகிழ்ச்சியை தந்தது.  எமது குழந்தைகளின் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை மிகவும் பாராட்டினார்.தாயக மக்களுக்கு சிவனின் பெயரால் பல உதவிகளை தனிமனிதானாக நின்று எனைய தனிநபர்களின் பணபங்களிப்புடன் அவர் செய்யும் செயல்களை கேட்ட பொழுது எங்களது புரட்சிகளும் சித்தாதங்களும் ஏட்டு சுரக்கை என்பது  வெள்ளிடைமடை.

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதை தாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர் ஒர் இனத்தின் காவலன்.

கோவில்கள் ஏன் என்று இளம்வயதில் கேட்ட கேள்விக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமாக விடை புரிகின்றது.

Edited by putthan
 • Like 13

Share this post

Link to post
Share on other sites

புத்தனின் கிறுக்கல்...வழமை போல இல்லாது...சீரியசான விசயத்தை தொட்டுச் செல்கின்றது!

நான் அடிக்கடி நினைப்பது போல..எம்மைக் கொன்றவர்களை விடவும்...எம்மை மென்றவர்களும், தின்றவர்களும் தான் அதிகம்!

ஈர மூஞ்சியைக் காவிக்கொண்டு....எம்மிடம் வந்தவர்கள்...இன்று எமது மூஞ்சிகளை ஈரமாக்கி விட்டு..நன்றாக வாழ்கின்றார்கள்!

தாமோதரம் போன்றவர்கள்...முதலாவது வகையைச் சேர்ந்தவர்கள்! எமது துயரங்களைத் தங்கள் முதாலீடாக்கிக் கொண்டவர்கள்!

ஊர்க்காவலன் போன்றவர்கள் இன்னொரு வகை!

இவர்கள் போன்ற சிலரால் தான் ....இன்னும் எமது மண்ணில்..கொஞ்சமாவது மிஞ்சியிருக்கின்றது!

புத்தனின் கோவில் பற்றிய புரிதல் உண்மை தான் எனினும்.....கோவில்கள் எம்மவரின் மனச்சாட்சிகள் அவர்களை நோக்கியே காறித் துப்பாமல் வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றே நான் நினைக்கிறேன்!

தொடர்ந்தும்  எழுதுங்கள்...புத்ஸ்..!

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய கிறுக்கல் இந்த தடவை "பாகுபலி" போன்று சுப்பர்கிட் ஆகவில்லையே  என் மனம்தளர்ந்தேன் இருந்தும் எனது வழ்மையான ஆசானின் கருத்து என்னை உற்சாகமடைய செய்துள்ளது....நன்றிகள் புங்கையுரான்...

1 hour ago, புங்கையூரன் said:

4 hours ago, putthan said:

என்னுடைய கிறுக்கல் இந்த தடவை "பாகுபலி" போன்று சுப்பர்கிட் ஆகவில்லையே  என் மனம்தளர்ந்தேன்

ஹிட் இல்லாத படமும் ஓடும் அதற்கான யுக்திகளை பாவிக்க வேண்டும்:11_blush:

மக்களை போராட்டத்தில் தள்ளிவிட்டுத் தப்பிப்பவர்கள் தான் தாடிக்காரர்கள்.

உண்மையான இனப்பற்றுள்ளவர்கள்  போராட முடியாவிட்டாலும்
அதற்கான சூழ்நிலையைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

காலத்தின் கட்டாயம்  வரும்போது போராட்டம் தானாகவே வெடிக்கும்

அதுவரை தாடிக்காரர்கள் மக்களைக் குழப்பிக் கொண்டேயிருப்பார்கள்
ஊர்க்காவலர்கள் போன்றவர்களால் ஒரு இனமே காக்கப்படுகின்றது 

  தொடர்ந்தும்  எழுதுங்கள்   

On 26.5.2017 at 0:56 PM, putthan said:

.

கோவில்கள் ஏன் என்று இளம்வயதில் கேட்ட கேள்விக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமாக விடை புரிகின்றது.

கோவில் திருவிழாவை வைத்து அந்த ஊரின் மக்களின் ஒற்றுமையை காணலாம் என்பார்கள் அந்தக்காலத்தில் ......

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதைதாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர்ஒர் இனத்தின் காவலன்.

ஊர்காவலன் போன்ற சிலரின் செயல்கள் ஊரில் மட்டுமல்ல அவர்கள் செல்லும்  இடமெங்கும் பொதுப்பணியாகத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கும். நாம்தான் கவனிக்கத் தவறி விடுகின்றோம்....! 

மேலும் கோவில்கள் வெறுமனே வணக்கத்தலங்கள் மட்டுமல்ல பல நண்பர்கள், உறவுகளை சில நிமிடங்களாவது சந்தித்து உறவாடும் இடம் பல தெருவிலும் இருக்கும் பேரிளம் பெண்கள் தமது நன்மை தீமை சுமைகளை பகிர்ந்து பரிமாறும் இடம். ....!

நல்லதொரு பகிர்வு புத்தன்....!  tw_blush:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

புத்து வழமைக்கு மாறாக பலரையும் சிந்திக்க வைக்கக் கூடியவாறு எழுதியிருக்கிறீர்கள்.ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்களால் உதவி செய்ய மனமிருந்தும் பலர் பின்னடிக்கிறார்கள்.

பொதுநலத்தில் தான் சுயநலம்
சுயநலத்தில்த் தான் பொதுநலம்

எப்போதாவது உங்கள் படம் ஓடலையா?

கவலையே விடுங்கள்.தலைப்பில் சின்னதாக

வயது வந்தவர்கள் மட்டும் என்று போட்டுவிட்டால் ஓகோ என்று பிச்சுக் கொண்டு ஓடும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 26.5.2017 at 0:56 PM, putthan said:

கைதட்டாவிடில் அறிவிப்பாளர்கள் இப்பொழுதெல்லாம் "எங்கே உங்கள் பலத்த கரகோசம்"எனகேட்டு வாங்குகிறார்கள்.

-----மைக்கை வாங்கிய சி.தா,தோழர்களே வணக்கம் ,என்னை இன்று தோழர் .பா அவர்கள் தனது  "சிறகொடிந்த காகம்" என்ற புத்த வெளியீட்டுக்கு தலமை தாங்கும்படி கேட்டுக்கொண்டதற்கமைய நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன் நிற்கின்றேன்..பா எனக்கு சிறு வயது முதலே தெரியும் பல களம் கண்ட போராளி ,நானும் அவனும் வன்னிகாடுகளில் அலைந்த நாட்களை எழுத வரிகள் இல்லை.

எங்கயோ கேட்ட  பரீட்சையமான  குரல் யாராக இருக்கும்?மனது விடை காணதுடித்தது.

    எமது போராட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் எகாதிபத்தியவாதிகளும் அவர்களின் அருவருடிகளான எம் இன முதலாளிகளும் தான், சிங்கள  மக்களில் பெரும்பான்மையினர் நல்லவர் அவர்களை கெடுப்பது எகாதிபத்தியவாதிகளின் கைக்கூலிகள்.உண்மையை சொல்லப்போனால் இன்று முள்ளிவாய்காலில் நடந்த சம்பவத்திற்காக அதிகமான சிங்களவர் கண்ணீர் சிந்துகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தவில்லை ஒரு இயக்கம்தான் போராடியது. மக்கள் போராடியிருந்தால் அதுவும்  சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடியிருந்தால் நாம் இன்று விடுதலை அடைந்திருப்போம்.

பழக்கப்பட்ட அதே கருத்து அடே உவன் எங்கன்ட "கருத்து கந்தசாமி"

-----"வன்னி காட்டுக்குள் நின்ற போராளி என்று சொல்லுறார் பிறகு எப்படி பேரதேனியாவில் படிச்சிருப்பார்"

"தம்பி ஒரு மாதம் காடுகளில் திரிஞ்சு போட்டு போராளி என்று சொல்ல ஏழுமோ , உமக்கும் ஆளை தெரியும்போல கிடக்கு"

-----பலத்தகரகோசத்துடன் சொற்செல்வர் தனது உரையை தொடங்கினார்.புலம்பெயர்ந்த மக்களை புகழ்ந்து பாராட்டி பேசினார்.மனசு சந்தோசமடைந்தது.வழமையாக புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் அல்லது உங்களால்தான் நாட்டில பட்டினி என்று கூறும் சில புரட்சியாளர்களின் குற்றைச்சாட்டை கேட்டு பழகிய மனசுக்கு பெரியவரின் பாராட்டு மகிழ்ச்சியை தந்தது.  எமது குழந்தைகளின் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை மிகவும் பாராட்டினார்.தாயக மக்களுக்கு சிவனின் பெயரால் பல உதவிகளை தனிமனிதானாக நின்று எனைய தனிநபர்களின் பணபங்களிப்புடன் அவர் செய்யும் செயல்களை கேட்ட பொழுது எங்களது புரட்சிகளும் சித்தாதங்களும் ஏட்டு சுரக்கை என்பது  வெள்ளிடைமடை.

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதை தாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர் ஒர் இனத்தின் காவலன்.

கோவில்கள் ஏன் என்று இளம்வயதில் கேட்ட கேள்விக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமாக விடை புரிகின்றது.

அருமை புத்தன்.... பலரின் போலி முகங்களை, அழகாக உங்கள் எடுத்து நடையில் எழுதியுள்ளீர்கள். :)

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 2017-5-29 at 9:51 PM, வாத்தியார் said:

ஹிட் இல்லாத படமும் ஓடும் அதற்கான யுக்திகளை பாவிக்க வேண்டும்:11_blush:

மக்களை போராட்டத்தில் தள்ளிவிட்டுத் தப்பிப்பவர்கள் தான் தாடிக்காரர்கள்.

உண்மையான இனப்பற்றுள்ளவர்கள்  போராட முடியாவிட்டாலும்
அதற்கான சூழ்நிலையைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

காலத்தின் கட்டாயம்  வரும்போது போராட்டம் தானாகவே வெடிக்கும்

அதுவரை தாடிக்காரர்கள் மக்களைக் குழப்பிக் கொண்டேயிருப்பார்கள்
ஊர்க்காவலர்கள் போன்றவர்களால் ஒரு இனமே காக்கப்படுகின்றது 

  தொடர்ந்தும்  எழுதுங்கள்   

கோவில் திருவிழாவை வைத்து அந்த ஊரின் மக்களின் ஒற்றுமையை காணலாம் என்பார்கள் அந்தக்காலத்தில் ......

உந்த தாடிக்காரார் சைக்கிள் கப்பில் மீண்டும் கிளர்தெழுகின்றனர் போல தெரிகின்றனர்...எது எப்படியோ தாடிக்காராரில் வேலையில்லை.....

On 2017-5-29 at 9:51 PM, வாத்தியார் said:

ஹிட் இல்லாத படமும் ஓடும் அதற்கான யுக்திகளை பாவிக்க வேண்டும்:11_blush:

மக்களை போராட்டத்தில் தள்ளிவிட்டுத் தப்பிப்பவர்கள் தான் தாடிக்காரர்கள்.

உண்மையான இனப்பற்றுள்ளவர்கள்  போராட முடியாவிட்டாலும்
அதற்கான சூழ்நிலையைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

காலத்தின் கட்டாயம்  வரும்போது போராட்டம் தானாகவே வெடிக்கும்

அதுவரை தாடிக்காரர்கள் மக்களைக் குழப்பிக் கொண்டேயிருப்பார்கள்
ஊர்க்காவலர்கள் போன்றவர்களால் ஒரு இனமே காக்கப்படுகின்றது 

  தொடர்ந்தும்  எழுதுங்கள்   

கோவில் திருவிழாவை வைத்து அந்த ஊரின் மக்களின் ஒற்றுமையை காணலாம் என்பார்கள் அந்தக்காலத்தில் ......

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் வாத்தியார் ....இந்த தாடியின் பயணம் தொடரும்.....

On 2017-5-30 at 3:00 AM, suvy said:

இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதைதாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர்ஒர் இனத்தின் காவலன்.

ஊர்காவலன் போன்ற சிலரின் செயல்கள் ஊரில் மட்டுமல்ல அவர்கள் செல்லும்  இடமெங்கும் பொதுப்பணியாகத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கும். நாம்தான் கவனிக்கத் தவறி விடுகின்றோம்....! 

மேலும் கோவில்கள் வெறுமனே வணக்கத்தலங்கள் மட்டுமல்ல பல நண்பர்கள், உறவுகளை சில நிமிடங்களாவது சந்தித்து உறவாடும் இடம் பல தெருவிலும் இருக்கும் பேரிளம் பெண்கள் தமது நன்மை தீமை சுமைகளை பகிர்ந்து பரிமாறும் இடம். ....!

நல்லதொரு பகிர்வு புத்தன்....!  tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் சுவி ....உங்களது ஆதரவும் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்துகின்றது

On 2017-5-30 at 3:58 AM, ஈழப்பிரியன் said:

புத்து வழமைக்கு மாறாக பலரையும் சிந்திக்க வைக்கக் கூடியவாறு எழுதியிருக்கிறீர்கள்.ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்களால் உதவி செய்ய மனமிருந்தும் பலர் பின்னடிக்கிறார்கள்.

பொதுநலத்தில் தான் சுயநலம்
சுயநலத்தில்த் தான் பொதுநலம்

எப்போதாவது உங்கள் படம் ஓடலையா?

கவலையே விடுங்கள்.தலைப்பில் சின்னதாக

வயது வந்தவர்கள் மட்டும் என்று போட்டுவிட்டால் ஓகோ என்று பிச்சுக் கொண்டு ஓடும்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ஈழப்பிரியன் எனதுஅடுத்த படம் வயது வந்தவர்களுக்கு  மட்டுமே ......உங்களது ஆதரவும் கருத்து பகிர்வும் என்னை மீண்டும் கிருக்க தூண்டும் ....

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கோத்தாபயவின் பிரஜாவுரிமை விவகாரம்: விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்யுமாறு கோரி, காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் தேநுவர ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் கடந்த 4 ஆம் திகதி குறித்த மனு நிராகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து தாம் கோரியிருந்த கட்டளையை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.  https://www.virakesari.lk/article/68902
  • பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/68903
  • (நா.தனுஜா) சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று வடமாகாண தமிழ் மக்களுக்கு சுமந்திரன் கூறியதாக நாட்டின் இரு பிரதான சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இன்று செய்தியொன்று வெளியாகியிருந்து. அவ்விரு பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன், 'ஏற்கனவே இத்தகைய செய்தியை தனியார் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த நிலையில் நான் அதனை மறுத்திருந்தேன். அதன் பின்னரும் இவ்விரு ஊடகங்களும் இந்தப் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன' என்று பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான வர்ணகுலசூரிய மற்றும் அத்துகோரள ஆகியோரும் குறித்த இரு பத்திரிகைகளின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் வெளியிட்டனர். ஏற்கனவே ஊடகமொன்றினால் தான் கூறியதாக வெளியிடப்பட்ட செய்திக்கு சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அச்செய்தியை வெளியிடுவதென்பது ஊடக தர்மத்திற்குப் புறம்பானது மாத்திரமன்றி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களையும் மீறுவதாகவே அமைந்துள்ளது. மக்களின் அனுதாப வாக்குகளைத் திரட்டிக்கொள்வதற்காக பொதுஜன பெரமுனவினால் ஒருபுறம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, மறுபுறம் எதிரணி வேட்பாளருக்கு சேறுபூசும் நோக்கில் அவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு இச் செய்தி சிறந்த உதாரணமாகும். இவற்றுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாஸ அவருடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். https://www.virakesari.lk/article/68904
  • இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்க நகரங்களுக்கு கரை ஒதுங்குவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.  உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் பருவநிலை மாறுபாடும், கழிவுகள் மேலாண்மையும் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக Electronics கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், பெரிய நாடுகள் அவற்றின் மின்னணு கழிவுகளை அவ்வப்போது கடலில் கொட்டி விடுவதாக செய்திகள் அவ்வப்போது வருவதை பார்க்கலாம். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நியூயார்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது- இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு எதையும் செய்யவில்லை. இந்த நாடுகளில் வெளியாகும் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுகின்றன. அவை மிதந்து மிதந்து அமெரிக்க நகரங்களுக்கு வந்து விடுகின்றன. பருவ நிலை மாற்றம் என்பது மிகப்பெரும் சவால். இதனை எதிர்கொள்ள பல வழிகளை கையாண்டு வருகிறோம். இது தொடர்பாக பாரிசில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக இருந்தது. அதனை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால் ஒரு சில ஆண்டுகளில் நம்முடைய தொழில்களை  மூடிவிட்டு போவதுதான் முடிவாக இருக்கும்.  பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஏராளமான அமெரிக்கர்களின் வேலையை பறித்துள்ளது. சுற்றுச் சூழலை நாசம் செய்பவர்களை  பாதுகாக்கும் கருவியாக இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2030-ம் ஆண்டு வரைக்கும் சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ரஷ்யாவை 1990-ம் ஆண்டுகளுக்கு கொண்டு சென்று விடும்.  ஒப்பந்தப்படி இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு நாம் பண உதவி செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் நாமே வளர்ந்து வடும் நாடுதான் என்று நான் கூறுவேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார். 2015-ல் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி  இந்தியா உள்பட 188 நாடுகள் உலக வெப்பமயமாதலை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதாக கூறி அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எதிர்வரும் 2020 நவம்பர் 4-ம்தேதிக்குள் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக வெளியேறி விடும்.  https://www.ndtv.com/tamil/donald-trump-says-garbage-dropped-by-china-india-russia-into-sea-floats-into-los-angeles-2131930?pfrom=home-topscroll