Sign in to follow this  
Innumoruvan

காக்கி நிறத்தில் பாவாடை..

Recommended Posts

கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது.

நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக்கப்பட்டிருப்பதாய் நினைத்துக்கொள்கிறார்களோ என்று நினைக்கத்தோன்றியது காட்சி.

அன்றைய நாள்முழவதும் அழகியல் நிறைந்து கிடந்தது. பொதுவாக நாள் எவ்வாறு ஆரம்பிக்கிறதோ அவ்வாறே நகர்கிறது. மாலை திட்டமேதுமில்லாததால் யூரியூபை நோண்டிக்கொண்டிருந்தேன். ஒரு வித்தியாசமான காணொளி கண்ணில் படப் பார்கத் துவங்கினேன்.

84 வயதில் மரணித்த ஒரு பெண்ணின் உடல் அம்மணமாக மேசையில் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிவர பார்வையாளர்களும் ஒளிப்பதிவுக் கருவிகளும் இருந்தன. இரண்டு மருத்துவர்களும் ஒரு சில மாணவர்களும் இருந்தார்கள். நிகழ்வு ஜேர்மனியில் பதிவாகியிருந்தது. மனித உடலமைப்பு, குறிப்பாக குருதியோட்டத் தொகுதியில் நிகழக்கூடிய பிறழ்வுகள் பற்றியது நிகழ்ச்சி. அதற்காக அந்தப் பெண்ணின் உடல் வெட்டித் திறக்கப்பட இருந்தது.  

சில முகவுரைகளைத் தொடர்ந்து, ஜேர்மனிய மருத்துவர் உடலத்தை அறுக்கத் தொடங்கினார். கழுத்திற்குக் கீழே நெஞ்சுப் பகுதியில் ஆரப்பித்து இடது மார்பகத்தைக் கடந்து சென்று அடிவயிற்றைக் குறுக்கறுத்தது வெட்டுப் பாதை. ஒரு பயணப் பொதியின் சிப்பைத் திறந்து பையைத் திறப்பது போல் கத்தி அந்த உடலத்தின் சிப்பைத் திறந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிற கொழுப்பு வெளியே தெரிந்தது. இறந்த உடலமாதலால் குருதிப்பெருக்கில்லை. மூன்று நான்கு தடவை கத்தி தடத்தில் பயணித்தபின்னர் பயணப்பொதி திறப்பது போல் மருத்துவர் அந்த உடலத்தில் உடம்பின் மூடியினை அவளது இடது மார்பகத்தோடு சேர்த்துத் தூக்கித் திறந்து போட்டார். உள்ளுர நுரையீரல் தொட்டுப் பெருங்குடல் முடிவுவரை அவள் உள்ளுறுப்புக்கள் கிடந்தன.

அன்றைய நாள் முளுவதும் நிறைந்து கிடந்த அழகியலை மறுபடி நினைத்துப் பார்த்தேன். காலையில், காக்கி நிறப் பாவாடை, நீல நிறச் சட்டை, சிற்றருவியெனக் கருங்கேசம், லூயி விற்ரான் பை, தாளத்திற்குத் தப்பாதை நடை, அவளுடன் பேசிவிடத் தோன்றிய எனது உந்துதல். மாலையில், இடது மார்பகம் உள்ளடங்கலாகப் பயணப் பை திறப்பது போல் திறந்து போடப்பட்ட உடலம். இப்போதும் முறுவல். நாளைய காட்சிகளிற்காய்ப் பின் தூக்கம்.
 
 

  • Like 7

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, Innumoruvan said:

மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக்கப்பட்டிருப்பதாய் நினைத்துக்கொள்கிறார்களோ என்று நினைக்கத்தோன்றியது காட்சி.

நிதர்சனமான உண்மை. கணவன் மனைவி உறவுகூட மின்காந்த அலைகளிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் ஏன் காக்கி நிறத்தில் பாவாடை எனத்தலைப்பு வைத்தாரோ என யோசிக்கிறேன். அழகியின் சந்திப்பை காதல் தடுத்துவிட்டதாகக் கூறினாலும், அவரது மனது  அழகியின் சந்திப்பைத் தவிர்த்ததை இறந்த பெண்ணின் திறக்கப்பட்ட உடலைப் பார்த்த பின்னர் சமரசம் செய்ய முயல்வதாகத் தோன்றுகிறது. அதாவது அழகியின் புறம் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டது போலவே  இறந்தவரின் அகம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.  "வெளியால எல்லாம் வித்தியாசம்  எண்டாலும் உள்ளுக்கு எல்லாம் ஒன்றுதான்" - எழுத்தாளரின் மனவோசை இதுவாகத்  இருந்திருக்கும்.

எனது 19ஆவது வயதில், எனது  நண்பனின் தந்தையாரின் உடலை என்பார்ம் செய்ய அருகிலிருந்து உதவினேன். என்பார்ம்  செய்தவருக்கு வெறி. நான் குடிக்கவில்லை. பலநாட்களுக்கு அந்த சம்பவம் என்னுள் உறைத்துக் கொண்டிருந்தது.

Edited by Thumpalayan
எழுத்துப் பிழை

Share this post


Link to post
Share on other sites

ஒரு கதைக்கு சொல்லுவோம்....அந்த அழகி மீண்டும் வந்து முத்தம் கொடுத்து உணர்ச்சியை தூண்டியிருந்தால் அகம் மறந்து புறம் கிளர்த்தெழுந்திருக்கும்....என நான் நினைக்கிறேன்...

20 hours ago, Innumoruvan said:

அவளுடன் பேசிவிடத் தோன்றிய எனது உந்துதல். மாலையில், இடது மார்பகம் உள்ளடங்கலாகப் பயணப் பை திறப்பது போல் திறந்து போடப்பட்ட உடலம். இப்போதும் முறுவல். நாளைய காட்சிகளிற்காய்ப் பின் தூக்கம்.

 

Share this post


Link to post
Share on other sites

கனதியான நினைவலைகளை கிளறும் நளினமான கதை ....!

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, putthan said:

ஒரு கதைக்கு சொல்லுவோம்....அந்த அழகி மீண்டும் வந்து முத்தம் கொடுத்து உணர்ச்சியை தூண்டியிருந்தால் அகம் மறந்து புறம் கிளர்த்தெழுந்திருக்கும்....என நான் நினைக்கிறேன்...

 

இதுக்கு நான் லைக்கு போட்டே ஆகவேண்டும் 

புத்தரே உணர்ச்சி என்பது ஒரு போதைதான்  இன்றையோட  இந்த குடியை விட வேண்டும் என்று சொன்னவர்கள் (சிலர் ) விட்டதாக  சரித்திரம் இல்லை  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

அனைவரது கருத்திற்கும் மிக்க நன்றி.

தும்பளையான். உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். காக்கி நிறத்தில் பாவாடை என்று தலைப்பிட்டமைக்கு ஒரு காரணம் முதற்பந்தியில் சொல்லப்பட்ட வெளிப்படையான காரணம். மற்றையது, மனவமைப்பின் மீதான நையாண்டி.

எதேச்சையாக கையில் கிடைத்த ஒரு புத்தகம் ஒரு புதிய முனை விசாரணைகளைக் கிழறிக்கொண்டிருப்பதால், இதுவும் இதற்கு முந்தைய பதிவும் அப்புத்தகத்தின் தாக்கத்தில் தான் இருக்கின்றன.

சில நாட்களிற்கு முன்னர் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன். அவரிற்குக் கைகள் இல்லை. விரல்கள முளங்கையிற்கும் தோளிற்கும் இடைப்பட்ட பகுதியில் முளைத்திருந்தன. அவையும் சூம்பிப்போயிருந்தன. ஆனால் நான் பார்த்தபோது அந்தப் பெண், பிளக்பெரியில் அலுவலக மின்னஞ்சல் அவசரமாக அனுப்பிக் கொண்டிருந்தாள். எனது மனதின் கணிப்பீட்டில் அவளது கைகளை மடக்கினால் அவை பிளக்பெரியினை பிடிக்கும் அளவிற்குக் நீளமுடியாத குள்ளமாகவே தோன்றின. ஆனால் என் கண்முன்னே அந்தக் கணிப்பிற்கு முரணாக அவள் இயங்கிக் கொண்டிருந்தாள். அவளது கையின் தன்மை எனக்குள் மறைந்து போய் ஒரு சக மனிசி தோன்றினாள். இவ்வாறே அதை அடுத்த சில நாட்களில் ஒரு ட்;டுவோபிசம்(குள்ளன்) பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன். எமது மனதின் தன்னிச்சையான கணிப்பீடுகளைத் தாண்டுகையில் அவனுள்ளும் அவனது வயதின் முதிர்ச்சிக்கேற்ற மனிதன். குள்ளன் எனது மனதில் மறைந்து போய் ஒரு சக மனிதன் தோன்றினான். ஆனால் பெரும்பான்மை மணித்துளிகள் மனதின் கற்பிதங்களிற்குள் சிறைப்பட்டே கிடக்கின்றன.

இந்தக் கதை அகம் புறம் என்பதாகவோ, உள்ளிற்குள் எல்லாம் ஒன்று என்ற சமரசமாகவோ எனக்குள் எழவில்லை. மாறாக, மனதின் கற்பிதங்களிற்கு மேலான தளம் என்ற வகையில் தோன்றியது. நான் குறிப்பிட்ட காணொளியில் அந்த 84 வயது உடலத்தின் முகத்தை மறைத்திருந்தார்கள், அதன் காரணம் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக என்றார்கள். முகம் மட்டுமே எமது அடையாளமா? அடையாளங்கள் சார்ந்து fragmented realities create பண்ணிக்கொண்டு யானை பார்த்த குரடர்களாக வாழ்வு நகர்கிறது.

Share this post


Link to post
Share on other sites

அழகுப் பெண்களை பார்ப்பதும் பேச முயற்சிப்பதும் ஆண்களுக்கு எப்போதும் விருப்பமானதுதான். ஆனால் இதயம் படத்தில் வந்த முரளியின் காரக்டர் மாதிரி இல்லாமல் இருக்கவேண்டும்.

உடலை அறுப்பதை காணொளியில் பார்த்து அறிவை வளர்க்கும் பக்குவம் இன்னமும் வரவில்லை. உயிரல்லாத உடல் வெறும் காற்றுப்போன பையாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லை?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this