Jump to content

Recommended Posts


Image result for flooding in sri lanka

சிங்கள நண்பா!
உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!
ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!

உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!
உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!
முடியவில்லை என்னால்;
காரணம் இதே போல ஒரு மாதத்தில்த்தான்
அவற்றை நீ வெட்டிவிட்டாயே!
நீ மறந்திருப்பாய்.
என்னால் மறக்கமுடியவில்லை.
காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!

நினைவிருக்கிறதா உனக்கு..
நீ மறந்திருப்பாய்.
நீ கொலைவெறியோடு விரட்டும் போது;
ஒரு கையில் குழந்தையும்
இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம்.

நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்
உனக்காய் அழமாட்டமா?
ஆனால்;
மன்னித்துவிடு சகோதரா...
இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!

நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய்
நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!

நாளை இந்த வெள்ளம் வற்றி நீ நலம் பெறுவாய்!
உனக்காய் உலகமே வரும்!

குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது;
எனக்காய் யாரும் வரவும் இல்லை
இனியும் வரவும் மாட்டார்கள்.
இனி வரவும் தேவையில்லை!

சிங்கள சகோதரா!
உனக்காக நான் அழுவதற்கு தயார்
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை.

கொத்துக்கொத்தாய்..
பூவும் பிஞ்சுமாய்...
குஞ்சு குருமனாய்...
குடல் கிழிந்து...
சதை கிழிந்து...
வயிறொட்டி...
உயிரற்ற பிண்டங்களையாய்...
உணர்வற்ற பூச்சிகளாய்...

இதே ஒரு மாதத்தில்தான் ....
வானம் அதிர குழறினோம்!!

உண்மையை சொல்லு
உனக்கு கேட்டதா? இல்லையா??

எனக்காய் நீ ஒரு கரம் கூட நீட்டவில்லையே!
எனக்காய் ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லையே!
எனக்காய் ஒரு குரல் கூட தெற்கில் கேட்கவேயில்லையே!!!

உனக்கும் எனக்குமா போர் நடந்தது?
இல்லையே!!!

எதற்காக மெளனமாக இருந்தாய்?
ஏன் திரும்பி நடந்தாய்?

போர்
உங்கள் முன்னால்...
எங்களை;
கடித்துக்குதறி...
கைகளை பின்னே கட்டி..
கறுப்புத்துணியால் கண்களை மூடி..
முதுகில் உதைத்து
பிடரியில் அடித்து...
சப்பித்துப்பி...
தின்று...
கைகழுவிப்போனபோது...
அம்பாந்தோட்டையிலும்...
அழுத்கமவிலும்...
நீங்கள் வெடி கொழுத்தி கொண்டாடிக்கொண்டிருந்தீர்கள்.

பின்னர் ஒரு நாளில்
முட்கம்பி வேலிக்குள்...
நாங்கள் வானம் அதிர..
தொண்டை கிழிய...
குழறிக்கொண்டிருந்தோம்.
நீங்கள் கொழுத்தி கொண்டாடிய "சீனா வெடிகளில்" ...
எங்களின் கூக்குரல்...
உங்களுக்கு கேக்கவேயில்லை!

இன்று 
உனக்காக நான் அழுவதற்கு எனக்கு விருப்பம்.
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை!

போன கிழமைதான்..
நந்திக்கடலோரம்...
நான் என் அண்ணாவுக்காய் அழுதுகொண்டிருந்தேன்.

முள்ளிவாய்க்காலில் தொலைத்த
தன் மகனை ...
தாயொருத்தி தேடிக்கொண்டிருந்தாள்!

நீயோ!
கிளிநொச்சியின் வீதிகளில்
"சிங்கலே" கொடி கட்டுவதிலும்...

யாழில் விகாரைக்கு அடிக்கல் நாட்டுவதிலும் மும்முரமாக இருந்தாய்.

கொழும்பு வீதிகளில்...
வெடி கொழுத்துவதிலும்;

வெற்றிக்கொண்டாட்டங்களில் 
"கிரிபத்" தின்பதிலும்...
ஆரவாரமாய் இருந்தாய்!

நீ மறந்திருப்பாய்.
ஆனால் நான் மறக்கவில்லை.
மறக்கவும் முடியாது!
மறக்கவும் கூடாது!

உனக்காய் நான் அழவும்..
உனக்காய் என் கரம் நீழவும்..
உனக்காய் நான் ஓடிவரவும்...
என்னால் முடியாது.
ஏனெனில்;
என் கால்களை...
என் கைகளை இதே போல ஒரு மாதத்தில்தான் நீ வெட்டி எறிந்தாய்.
நீ மறந்திருப்பாய்..
ஆனால் நான் மறக்கவில்லை!
ஏனெலில் என்னால் நடக்கமுடியவில்லை!

சிங்கள நண்பா!
உனக்காய் நான் அழ விருப்பம்தான்..
என்னிடம் கண்ணீர் இல்லையே!
ஆனால்;
உன் துன்பத்தில் நானும் துணையாக வர
இனியாவது உன் கரங்களை நீட்டு...
காத்திருக்கிறேன்..

வாற வருடம்
முள்ளிவாய்க்காலில்
என்னோடு "தீப்பந்தம்"
ஏத்தவருவாய் என
நம்பி...
ஆரியகுளத்து புத்தனிடம் 
உனக்காய் வேண்டுகிறேன்.

என்னைக்காப்பாற்றாத போதிமரத்தான் உன்னைக்காப்பாற்றக்கூடும்!!

அன்புடன்
#தமிழ்ப்பொடியன்
27/05/2017

குறிப்பு: எனக்கு சிங்களத்தில் எழுத தெரியாது. முடிந்தால் யாராவது சிங்களத்தில் மொழிபெயர்த்து அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.

My dear Sinhalese Friend!

I want to cry for you.
But I have no tears to shed!

I could have extended my hands 
to save you ..
I could have rushed to save you 
But I couldn't,

I couldn't come to save you as it is in this month you severed my legs 
You may have forgotten.

But I couldn't 
Because I can't walk anymore!

Do you remember my friend?
You may have forgotten 
When you were pursuing us with murderous intent.
We were running with an infant in one hand and a puppy in another.

We cried for our puppy.
Wouldn't we cry for you my friend?
However,
Forgive me my friend 
We don't have any more tears to shed !

You are swaying in water, but
We swayed in tears my friend.

Tomorrow the floods will recede and you shall recover, 
The whole world will come to your aid!

When we were bleeding to death in "Mullivaikal",
No one came to our rescue.
They won't come anymore.
We don't need them either!

My dear Sinhalese Friend!
I want to cry for you...
But I have no tears to shed.

We lost thousands of our 
Young and old...
Babies and infants, 
Torn intestinal and 
Bleeding wounds...
Starved stomachs...
Lifeless bodies ...
We are Senseless insects!
We are cursed slaughters!

It is in this month 
Our cries shaking the skies!

Be honest my dear friend
Didn't you hear our pleas?

There was no arm...
extended towards me!
No tear shed for me !
No voice raised for me!
from South.

Was the war between you and me?
No it wasn't.

Why were you silent my friend?
Why did you walk away?

When War
Teared...
Handcuffed...
Blindfolded...
Kicked and 
Destroyed us...
Right in front of 
your eyes!
You were lightening fire crackers in 
"Hambantota" and "Aluthgama"
Celebrating its victory !!

Days later 
We were lamenting
Behind barbed wires ...
You couldn't hear our lament.
In the midst of the sound from fire crackers!!

My dear Sinhalese Friend!
I want to cry for you...
But I have no tears to shed!

Last week
In "Mullivaikal"
I was mourning my Brother,
Who died in this shores.

A mother was 
Searching for her son...
She lost in the "Mullivaikal" coast.

However you were busy
Raising the "Singha le" flags
in the street of "Killinochi"!
And...
Laying foundation for a "vihara" in jaffna !

You were celebrating the victory 
By lightening crackers 
And eating "kiri buth" in the streets of Colombo!

You may have forgotten.
But I haven't.
I shouldn't forget,
I can't forget either !!

I can't cry for you 
I can't extend my arm to help you
I can't rush to be with you.
Because;
It is in this month 
You severed my legs!
It is in this month 
You severed my hands !

You may have forgotten.
But I haven't.
Because I can't walk !

My dear Sinhalese friend!
I want to cry for you ...
But I have no tears left !

However,
I am waiting for you 
to extend your arm towards me,
So that I can solace you in future!

I hope and pray to the Lord Buddha!
Next year 
 you will 
Join me in lightening 
 a flame of remembrance 
In "Mullivaikal".

Again i pray to the Lord Buddha !
Who failed to save me
May rescue you !!!

Your dearest;
Tamilfriend.
(Vimale)

 

 


https://www.facebook.com/podiyanpage/

 

 

 

 

 



"சிங்கள நண்பா” எனும் கவிதைக்கு பலவிதமான கருத்துக்கள் எல்லா ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படுவதை காணமுடிகிறது.

முதலில் அதை எழுதியவன் என்ற அடிப்படியில் ஒரு சில கருத்துக்களை பகிரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

இது வெறும் தன்னினலை விளக்கமோ அல்லது நியாயப்படுத்தலோ அல்ல என்பதை முதலில் பதிவு செய்கிறேன்.

இந்த கவிதை எழுதியதன் முதல் நோக்கம் என்னை நான் பிரபலப்படுத்துவதோ அல்லது முகப்புத்தகத்தில் அதிக விருப்புகளையும் பகிர்வுகளையும் பெறுவது அல்ல.

மேலும் முகம் தெரியாமல் என்னை ஒழித்து “புனைபெயரில்” எழுதப்பட்ட கவிதையும் அல்ல.

ஒரு சாதாரண தமிழனாக முப்பது வருட வலிகளை அனுபவித்தவனாக ,எனக்குள் ஆறாத வடுக்களாக இருக்கும் வலிகளை மொழிபெயர்த்துள்ளேன்.

இந்த கவிதையை எழுதும் போது ஒரு சிங்கள சகோதரனின் கைகளுக்காவது போய்ச்சேராதா என்ற ஆதங்கத்துடன் தான் எழுதினேன்.

ஆனால் இந்தக்கவிதை சிங்களத்திலும் 
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கையின் சிங்கள ஊடகங்களில் வந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

காரணம் சிங்கள ஊடகங்கள் எப்போதும் எங்களின் வலிகளை எப்போதுமே மொழிபெயர்த்தது இல்லை.

 

ஆனால் இன்று இந்த கவிதையை அவர்கள் பிரசுரித்துள்ளார்கள்
என்பது என்னைப்பொறுத்தவரையில் ஆச்சரியமாகவே உள்ளது.

சரி கவிதையின் உள்ளடக்கத்துக்கு வாறன்.

கவிதையின் எந்த ஒரு இடத்திலும் காழ்ப்புணர்ச்சியை அல்லது பழிவாங்கலை தூண்டும் சொற்களை நான் கவனமாக தவிர்த்திருக்கிறேன்.

ஒரு கவிஞனுக்கு நியாயமாக வரும் “ அறச்சீற்றத்தை” மென்மையான வார்த்தைகளால் சொல்வது மிக மிக கடினம்.

அப்பிடி இருந்தும் என்னால் ஒரு சில இடங்களில் மறைமுகமாக “ நியாயமான கோபத்தை” என்னால் அடக்கிவைக்க முடியாமல் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

கடந்த காலத்தில் குறிப்பாக 2009 களின் பிறகு “ தமிழர்களின் தீராத சோகம் , வலிகள்” என்பவற்றை தென்னிலங்கை சமூகம் புரிந்துகொள்ளவேயில்லை
எனும் கோபம் எனக்குள் இருக்கிறது.

ஒரு இனம் அழிக்கப்பட்டு போரின் வடுக்களை சுமந்து நாளாந்தம் கண்ணீர் சிந்திநிற்கிறது.

போரை நடத்தியது அரசின் ராணுவ எந்திரங்களாக இருந்தபோதும் போரின் பின்னரான காலப்பகுதிகளில் சாதாரண 
தென்னிலங்கை மக்கள் “தமிழர்களின் வலிகளை”மனதார புரிந்துகொள்ளவேயில்லை.

ஆகக்குறைந்தது புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்ற கசப்பான உண்மையை ;
நாம் கண்ணுக்கு முன்னே நடந்த
“மே மாத போர்வெற்றிக்கொண்டாட்டங்கள்”
கன்னத்தில் அறைந்து சொல்கின்றன.

2009 களின் பின் தமிழர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அவலத்திலும் தென்னிலங்கை சமூகம் பாராமுகமாகவே இருந்தது. இருக்கிறது.

உதாரணத்துக்கு பல விடயங்களை சுட்டிக்காட்டலாம்.
2009 இல் எத்தனையோ தமிழர்கள் முள்வேலிக்குள் அனுபவித்த “ கொடுமைகளைகளை” “ மிகப்பெரிய அவலங்களை” யாரும் கண்டுகொள்ளவேயில்லை.

மழைவெள்ளத்தில் தடுப்பு முகாம்களில் எத்தனையோ மக்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவித்தார்கள். அப்போது யாரும் வரவும் இல்லை. 
உதவிக்கரம் நீட்டவும் இல்லை.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதே போல ஒரு வெள்ள அனர்த்தம் வன்னியில் வந்தது. அப்போது கூட தென்னிலங்கையின் பெரும்பாலான மக்கள் 
கண்டுகொள்ளவேயில்லை.
கண்ணீர் சிந்தவும் இல்லை. 
உதவிக்கரம் நீட்டவும் இல்லை.

ஒரு சிலர் செய்தார்கள். அதை மறக்கமுடியாது.

போரின் பின்னர் கண்ணுக்கு முன்னே சரணடைந்த பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

ஆயிரம் ஆயிரம் தாய்மார்கள் நாள்தோறும் கண்ணீரோடு
கதறிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த வாரத்தோடு சுமார் 100 நாட்கள் அவர்கள் வெயிலிலும் மழையிலும் காய்ந்து கண்ணீரோடு
வீதியோரங்களில் கேப்பாரற்ற அனாதைகளாக இருக்கிறார்கள்.

எம்மினத்தவர்களே அவர்களின் வலிகளை புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு அப்பால் 
லச்சக்கணக்காக நாள் தோறும் “புதினம்” பார்க்க வடக்குக்கு வரும் 
தென்னிலங்கை சமூகம் இந்த அவலத்தை ஒரு நிமிடம் கூட நின்று பார்க்கத்தவறிவிட்டது.

போர் வெற்றிகளை கொண்டாடும் இடங்களில் குதுகலித்து மகிழ்ந்துவிட்டு போகும் அவர்கள் அதற்கு அப்பால் ஆயிரம் ஆயிரம் சக மனித உயிர்கள்
காவுகொள்ளப்பட்ட இடத்தில்
ஒரு துளி கண்ணீர் சிந்துவதற்கோ அல்லது அந்த இடத்தில் நின்று ஒரு நிமிடம் மனம் வருந்துவதற்கோ தயாராகவில்லை.

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் என்பது தமிழர்களை பொறுத்த வரை “ வலி சுமந்த கறுப்பு மாதம்”. 
அந்த மாதம் முழுவதும் எல்லாவீடுகளிலும் “ஒப்பாரிச்சத்தம்” மட்டுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது. 
ஆனால் தெற்கில் அந்த மாதம் “ போர் வெற்றி மாதமாக” குதுகலத்துடனும் வெற்றிக்கொண்டாட்டங்களுடனும் கடந்து போகின்றன.

ஒரு இனம் அழிக்கப்பட்டதை ... அழிந்துபோனதை அதே மண்ணில் வாழும் இன்னொரு இனம் மகிழ்ச்சியாய் கொண்டாடி மகிழ்வதை
“மனிதாபிமான இதயம்” கொண்ட
எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘எனக்காக நீ அழுதால் மட்டுமே நான் உனக்காக அழுவேன்” என்ற நியாயமற்ற கோரிக்கையை நான் எந்த இடத்திலும் கவிதையில் குறிப்பிடவில்லை.
“ உனக்காக அழுவதற்கு எனக்கு விருப்பம்தான் ஆனால் கண்ணீர் என்னிடம் கைவசம் இல்லை சகோதரா” என்றே ஒன்றுக்கு மூன்றுமுறை தெளிவாக
குறிப்பிட்டுள்ளேன்.
இதில் எங்கே “ காழ்ப்புணர்ச்சி” இருக்கிறது?
இதில் எங்கே “ இனத்துவேசம்” இருக்கிறது?
இதில் எங்கே “ பழிவாங்கும் உணர்ச்சி” இருக்கிறது? எனக்கு புரியவேயில்லை.

“உனக்காக என் கரங்களை நீட்டுகிறேன். இறுக்கிப்பிடித்துக்கொள்”
“உனக்காக புத்தனிடம் வேண்டுகிறேன்” என கவிதையை முடித்திருக்கிறேன்.
இதில் எங்கே “ இனத்துவேசம், காழ்ப்புணர்வு, பழிவாங்கும் உணர்ச்சி” இருக்கிறது? எனக்கு இன்னும் புரியவேயில்லை.

ஒருவனின் வலிகளில் இன்பம் காணும் ஈனப்பிறவிகளா நாங்கள்?
அல்லது சகமனிதன் சாவில் சந்தோசம் கொள்ளும் “உணர்வற்ற கல் நெஞ்சக்காரர்களா?” தமிழர்கள்!
எனக்குப்புரியவேயில்லை.

போன கிழமை மே 18 அன்று “கிளிநொச்சியில் வெடிகொழுத்தி கொண்டாடினாய்!” 
“சிங்க லே” என்ற தனிச்சிங்கள கொடிகளை கிளிநொச்சி வீதிகளில் ஏற்றி குதூகலித்தாய்.
“புதிய விகாரைகளை” அமைப்பதிலும் அதை கொண்டாடுவதிலும் மும்முரமாக நின்றாயே சிங்கள சகோதரா?
ஏன் என் வலிகளை உணர மறந்தாய்? 
ஏன் இப்படி நியாயமற்று நடந்தாய்? என கேள்வி கேட்பதிலும் என்ன பிழை என எனக்கு தெரியவில்லை.

“வெள்ள அனர்த்தத்தால் சனம் செத்துக்கொண்டிருக்கும் போது” இப்படி கேட்பது பிழை என ஒரு சிலர் ஆதங்கப்பட்டார்கள்.

நான் அவர்களிடம் கேட்கிறேன்?
“வெடி கொழுத்தி போர் வெற்றியை கொண்டாடும் தருணத்தில்” அவர்களுக்கு இந்த கவிதையை எழுதினால் கேட்டிருக்குமா?

8ஆண்டுகளாக எத்தனை பேர் கண்ணீர் வடித்து கதறி அழுகிறோம் முள்ளிவாய்க்காலில்...
எங்களின் அவலக்குரல் கேட்டதா அவர்களுக்கு?

போர் முடிந்து 8 ஆண்டுகளில் இன்றுவரை ஒரு சிங்கள சகோதரன்.... அல்லது தென்னிலங்கை சமூகத்தில் ஒரு அரசியல் பிரதிநிதி 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வந்து
மனதார எங்களின் அழுகுரல்களை கேட்டிருப்பார்களா? இல்லையே ஏன்???

ஏன் கனக்க?
2009 இல் போர் தின்ற மக்கள் அதன் பிறகு எத்தனை “அவலங்களை” சந்தித்து இருப்பார்கள். ஒரு உதவிக்கரமாவது தென்னிலங்கையில் இருந்து
எமக்காக நீட்டப்பட்டதா?
இல்லையே ஏன்???

அப்படியிருக்கும் போது; இப்போது எனக்கு வரும் கோபம் அல்லது கவலை நியாயமானதா? இல்லையா?
அதுசரி எல்லாம் இருக்கட்டும். என்னதான் நாங்கள் கோபப்பட்டாலும் வடக்கில் இருந்து உதவிகள் இப்போது தென்னிலங்கை மக்களின் 
அவலத்தை துடைக்க நீள்கிறதா? இல்லையா?
இதிலிருந்தே புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் எவ்வளவு பெரிய “உயிர்நேய வாதிகள்” என்று.

மேலும்; 
இந்தக்கவிதையில் “இனத்துவேசம்” “காழ்ப்புணர்வு” “ பழிவாங்கும் உணர்ச்சி” ஒரு இடத்தில் கூட இருந்திருந்தாலும்
இலங்கையின் சிங்கள ஊடகங்களோ அல்லது ஆங்கில ஊடகங்களோ
இதை வெளியிட்டிருக்காது. அவர்கள் இந்த கவிதையை “திறந்த மனதோடும் ” பார்க்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.


பல்கலைக்கழக சிங்கள மாணவ சகோதரன் ஒருவன் இந்த கவிதைக்கு பதில் எழுதும் போது “ நானும் என் நண்பர்களும் அடுத்த வருடம் நடக்கும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்து உங்களின் துன்பத்தில் பங்குகொள்ள ஆயத்தமாய் இருக்கிறேன்” என்று சொல்லும் போதுதான் 
நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று முழுமையாக உணர்ந்தேன்.

 

மற்றப்படி இந்த கவிதை சிங்களவர்களை நோக்கி...
“ இரங்கி கையேந்தி நிற்கிறது”
“நல்லிணக்கமும் மண்ணாங்கட்டியும்”
“சிங்களவன் திருந்தான்”
“சாகட்டும் விடுங்கோ”
போன்ற கடுமையான விமர்சனங்களுக்குக்கும் அதைப்போன்ற பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பாளி அல்ல!

 

நன்றி
#தமிழ்ப்பொடியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொடியன்

துப்பாக்கியால் மட்டமல்ல

பேனாவாலும் சுடலாம்

என்பதை நிருபித்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் பொடி ,

நான் இங்கும் இதற்கு முன் முகநூலிலும் உங்கள் கவிதையை வாசித்தேன். எந்த இடத்திலும் இனத்துவேசமோ அல்லது காழ்ப்புணர்வோ இருப்பதாக தோன்றவில்லை. எங்கள் துயரையும் பாரேன்டா எனும் ஏக்கமும்  எம் இழப்பின்  வலியை அவர்கள் உணரவே இல்லை என்ற ஆதங்கமும் தான் தொக்கி நிற்கின்றன.

கவிதை சொல்ல வேண்டியதை சொல்லி விட்டது. கவிதையில் நீங்கள் சொல்ல வேண்டியதையும் சொல்லிகே கொண்டு இருக்கின்றது .  விமர்சனங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதிக் கொண்டு இருப்பது கால விரயம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது  எழுதி புரிய வைக்க முடியும் என்று சொல்கிறீர்கள்.

இதே போல ஒரு வருடம் சமாதான கால ப்பகுதியென நினைக்கிறேன் விடுதலைப்புலிகளால்  நிவாரணங்கள் பெறப்பட்டு பின்பு அங்கே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அது சிங்கள மக்களுக்காக அப்போதும் எப்போதும் தலைவர்ர் கூட சிங்கள  மக்களை வெறுத்த தில்லை வெறுத்தது  ஆட்சிக்கு வந்த பேரினவாதிகளை தங்களின் இருப்புக்களூக்காக ஒட்டு மொத்த தமிழர்களை , தமிழர் தலைமைகளை  அயல்நாடுகளுக்கும்  ,சொந்த நாட்டு மக்களுக்கும் அவர்களை எதிரியாக காண்பித்தது தங்களை சிங்கள மக்களின் நன் மதிப்பை பெறவும் தமிழர் மீது விரோத போக்கை கடை பிடிக்கவும் செய்தது .

அந்த உதவிகள் திரும்பி  தமிழ் மக்களின் கரங்களில் சுனாமி அனர்த்தத்தின் போது மீண்டும் கிடைத்தது  அது கிழக்கு  மக்களுக்கு அதிகம் கிடைத்தது  அம்பாறையில் சொந்த வீடுகளை கொடுத்து விட்டு  அவர்களும் பாடசாலைகளில் தங்கி இருந்தார்கள்  சகலருக்கும் சாப்பாடு சமைத்துக்கொடுத்து  சொந்த உறவுகள் போல  அந்த மாதம் முழுவதும் பார்த்து வந்தார்கள்  போர் மீண்டும் சூழ ஆரம்பித்து விட  தமிழர்கள்  கொத்து கொத்தாக கிழக்கிலும் வடக்கிலும் கொல்லுப்படும் போது அது  அவர்களுக்கு பூரணமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை  அதை சிங்கள அரசாங்கம் நன்றாக கையாண்டது அப்போது சொல்லப்பட்டது போர் முடிகிறது இன்னும் சில வாரங்கள் தேவை அப்போது சிங்கள மக்களிம் மனநிலையானது இந்த நாட்டில்  போர் முடிவுக்கு வந்து ஒரு சமாதானம் முற்று முழுதாக  நிலவாதா என்ற ஏக்கவும் தான் (கிழக்கை பிடித்தது அவர்களுக்கு  பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது அப்படியே வடக்கையும் பிடித்து விடலாம்  என்ற நம்பிக்கை )

இதே மழை மாரி காலத்தில் வடக்கு கிழக்கில் வரலாம்  அதனால் சிங்கள மக்கள் உதவி செய்வார்களா  இல்லையா என்று  தெரியாது ஆனால் அரசாங்கம் தான் உதவி செய்ய வேண்டும் இன்று வெளிநாடுகள் நிவாரணம் , உதவிகள் என்பன அள்ளிகொடுக்கின்றது வலி ஒன்றுதான் அது ஏற்படும் இடத்தை பொறுத்தே  விருப்பு வெறுப்பு ஏற்படுகிறது  ( மனிதனுக்கு )  

நான் கூட உதவி தொகை  என்னால் முடிந்தது  வழங்க முயற்ச்சிகிறேன் இன்னும் மனம் இடம் கொடுக்க வில்லை ஆனால் கொடுத்து விடுவேன்  என்ற எண்ணம் இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்பொடியன் இங்கு புலம்புவதை பார்த்தால் தமிழர்கள் பட்ட துன்பம் எல்லாம் சிங்களவர்கள் வந்ததைபோலவும் சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் போலவும் இருக்கின்றது. தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு, தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு, சகதமிழர்களை அரவணத்து செல்லாமல், மேலும் இன்றுவரை கஸ்டப்படும் முன்னாள் போராளிகளுக்கு உதவாமால் பினாமி பெயரில் சொத்துக்ளை அனுபவித்து உல்லாசமாக வாழுகின்றார்கள். 

பல சிங்கள உடகவியாளர்களே போர்குற்றங்களை வெளிக்கொண்டுவர முன்னின்று உழைத்தார்கள். இன்றும் பல சிங்கள உடகவியளாளர்களுக்கு நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கின்றது.

எய் ஏக்க அமத்தக வுனே தமுசலாட‌ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

 

 

எய் ஏக்க அமத்தக வுனே தமுசலாட‌ ?

ஏக்க அப்பே தன்னவா அய்யே...மெ தெமிழு கொள்ள கியன அனித் மினிசுட்ட .....

Link to comment
Share on other sites

On 1.6.2017 at 8:18 PM, colomban said:

தமிழ்பொடியன் இங்கு புலம்புவதை பார்த்தால் தமிழர்கள் பட்ட துன்பம் எல்லாம் சிங்களவர்கள் வந்ததைபோலவும் சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் போலவும் இருக்கின்றது. தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு, தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு, சகதமிழர்களை அரவணத்து செல்லாமல், மேலும் இன்றுவரை கஸ்டப்படும் முன்னாள் போராளிகளுக்கு உதவாமால் பினாமி பெயரில் சொத்துக்ளை அனுபவித்து உல்லாசமாக வாழுகின்றார்கள். 

பல சிங்கள உடகவியாளர்களே போர்குற்றங்களை வெளிக்கொண்டுவர முன்னின்று உழைத்தார்கள். இன்றும் பல சிங்கள உடகவியளாளர்களுக்கு நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கின்றது.

எய் ஏக்க அமத்தக வுனே தமுசலாட‌ ?

இங்கு சிங்களவர்கள் கெட்டவர்கள் என்று கவிதையில் எங்கும் கூறபபடவில்லை கொழும்பான். தமிழ் பையன் தெளிவாக அதை விளங்கபடுததிய பின்பும் உங்களுக்கு கவிதை விளங்கவில்லையா?  தோல்வியடைந்த இனம் தானே என்பதனால்  நீங்கள் தமிழரை அடிக்கடி திட்டுகிறீர்கள் கேலி பேசுகின்றீர்கள். தமிழர்கள் பெருமையாக வாழ்ந்த காலததில் சுனாமியை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பது உங்களுககு தெரியாததல்ல. உலகில் யாருடைய உதவியும் இலலாமல் தமிழர்களின் மீட்பு படை எவ்வாறு சிறபபாக பணியாறறியது என்பதை எதிரிகளே ஏற்று கொண்டதை தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். மேலும் சிங்கள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வன்னியில் இருந்து நிவாரண பொருட்களுடன் சிங்கள மககளிடம் விடுதலை புலிகளின்   படையினர் சென்று சிங்கள மககளுக்கு  தங்களுககு ஞாபகபடுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

On 6/2/2017 at 4:18 AM, colomban said:

தமிழ்பொடியன் இங்கு புலம்புவதை பார்த்தால் தமிழர்கள் பட்ட துன்பம் எல்லாம் சிங்களவர்கள் வந்ததைபோலவும் சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் போலவும் இருக்கின்றது. தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு, தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு, சகதமிழர்களை அரவணத்து செல்லாமல், மேலும் இன்றுவரை கஸ்டப்படும் முன்னாள் போராளிகளுக்கு உதவாமால் பினாமி பெயரில் சொத்துக்ளை அனுபவித்து உல்லாசமாக வாழுகின்றார்கள். 

பல சிங்கள உடகவியாளர்களே போர்குற்றங்களை வெளிக்கொண்டுவர முன்னின்று உழைத்தார்கள். இன்றும் பல சிங்கள உடகவியளாளர்களுக்கு நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கின்றது.

எய் ஏக்க அமத்தக வுனே தமுசலாட‌ ?

ஐயே!
கவதாவத் மங் அமத்தக்கறண்ட பா! 

இந்த கவிதை என்பது “ வலி சுமந்த மே மாதத்தில்” போர்வெற்றி கழியாட்டங்களில் கிளிநொச்சியில் குதுகலித்த ஒரு சிங்கள நண்பனை நோக்கி எழுதப்பட்டது.

நீங்கள் சொன்ன விடயங்களை உள்ளடக்கி ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்.

1 hour ago, trinco said:

இங்கு சிங்களவர்கள் கெட்டவர்கள் என்று கவிதையில் எங்கும் கூறபபடவில்லை கொழும்பான். தமிழ் பையன் தெளிவாக அதை விளங்கபடுததிய பின்பும் உங்களுக்கு கவிதை விளங்கவில்லையா?  தோல்வியடைந்த இனம் தானே என்பதனால்  நீங்கள் தமிழரை அடிக்கடி திட்டுகிறீர்கள் கேலி பேசுகின்றீர்கள். தமிழர்கள் பெருமையாக வாழ்ந்த காலததில் சுனாமியை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பது உங்களுககு தெரியாததல்ல. உலகில் யாருடைய உதவியும் இலலாமல் தமிழர்களின் மீட்பு படை எவ்வாறு சிறபபாக பணியாறறியது என்பதை எதிரிகளே ஏற்று கொண்டதை தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். மேலும் சிங்கள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வன்னியில் இருந்து நிவாரண பொருட்களுடன் சிங்கள மககளிடம் விடுதலை புலிகளின்   படையினர் சென்று சிங்கள மககளுக்கு  தங்களுககு ஞாபகபடுத்துகிறேன்.

புரிதலுக்கு நன்றி சகோதரா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் அடிமனதில் ஆழமாகப் படர்ந்திருக்கும் வலிகளின் வெளிப்பாடு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 6/1/2017 at 2:18 PM, colomban said:

தமிழ்பொடியன் இங்கு புலம்புவதை பார்த்தால் தமிழர்கள் பட்ட துன்பம் எல்லாம் சிங்களவர்கள் வந்ததைபோலவும் சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் போலவும் இருக்கின்றது. தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு, தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு, சகதமிழர்களை அரவணத்து செல்லாமல், மேலும் இன்றுவரை கஸ்டப்படும் முன்னாள் போராளிகளுக்கு உதவாமால் பினாமி பெயரில் சொத்துக்ளை அனுபவித்து உல்லாசமாக வாழுகின்றார்கள். 

பல சிங்கள உடகவியாளர்களே போர்குற்றங்களை வெளிக்கொண்டுவர முன்னின்று உழைத்தார்கள். இன்றும் பல சிங்கள உடகவியளாளர்களுக்கு நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கின்றது.

எய் ஏக்க அமத்தக வுனே தமுசலாட‌ ?

18814021_379840149084346_613979309833111

 

18835773_379840165751011_518133247032845

 

சிங்கள காடையர்களால் , இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு சொல்லணா துன்பங்களை கொடுத்து வரும் போது அவர்களின் நடவடிக்கைகளை கண்டும் காணாது போல் இருக்கும் சிங்களவர்களும் அதற்கு உடந்தையானவர்களே.

යෞ ඇරේ හවින්ග් දිෆ්ෆිචුල්ට්ය් ටො උන්දෙර්ස්ටන්ඩ් ටමිල්ස් ප්රෝබ්ලෙම් .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான சிங்கள மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப்பூடாகவர அதனை இணைத்தேன். ஆனால் நீக்கப்பட்டள்ளது. ஏனென்றுபுரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

இதற்கான சிங்கள மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப்பூடாகவர அதனை இணைத்தேன். ஆனால் நீக்கப்பட்டள்ளது. ஏனென்றுபுரியவில்லை.

உங்களின் இணைப்பு நீக்கப்படவில்லை அடுத்த லிங்கில் இருந்கின்றது 

 

தமிழ் பொடியன் யாழில் இருக்கிறார் என்று அந்த கவிதையை இணைக்கும்போது தெரியாது எமது வலிகளை நேரத்துக்கு தகுந்த போல் யாருமே  பிழை கூற முடியாத அளவுக்கு வன்மை படைத்தது இப்படியானவர்களை ஊக்குவிப்பதில் நாம் பின்நிற்க்க கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாய் இருக்குது...வன்னியில் யுத்தம் நடக்கும் போது வட கிழக்கிலும்,கொழும்பிலும் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தமிழர்களுக்காக கவிதை ஒன்றும் எழுதவில்லையா தமிழ்பெடியன்?...அவர்களது உணர்வும் தட்டி எழுப்பப் பட வேண்டும் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

கவிதை நல்லாய் இருக்குது...வன்னியில் யுத்தம் நடக்கும் போது வட கிழக்கிலும்,கொழும்பிலும் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தமிழர்களுக்காக கவிதை ஒன்றும் எழுதவில்லையா தமிழ்பெடியன்?...அவர்களது உணர்வும் தட்டி எழுப்பப் பட வேண்டும் அல்லவா?

அதுசரி நீங்கள் சொல்லுறதைப்பார்த்தால் வடகிழக்கு , கொழும்பில் உள்ள மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பினால் உடனே போர் நிறுத்தப்படிருக்குமா ரதி ?? 

அதே கேள்வி மாறி வீழ்ந்தால் என்னமாதி உங்கள் நிலை லண்டனில் மற்ற ஏனைய மொத்த நாடுகளிலும் உள்ள மக்கள்  ஏன் அங்க கொடியை தூக்கி ஓடி ஆடி திரிஞ்சத விட இங்க வந்து போராடி இருக்கலாமே என்று  ஒரு கேள்வ்வி கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவியள் ? சும்மா ஒரு கேள்வி தான் பாருங்க:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனி ஒருவன் said:

அதுசரி நீங்கள் சொல்லுறதைப்பார்த்தால் வடகிழக்கு , கொழும்பில் உள்ள மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பினால் உடனே போர் நிறுத்தப்படிருக்குமா ரதி ?? 

அதே கேள்வி மாறி வீழ்ந்தால் என்னமாதி உங்கள் நிலை லண்டனில் மற்ற ஏனைய மொத்த நாடுகளிலும் உள்ள மக்கள்  ஏன் அங்க கொடியை தூக்கி ஓடி ஆடி திரிஞ்சத விட இங்க வந்து போராடி இருக்கலாமே என்று  ஒரு கேள்வ்வி கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவியள் ? சும்மா ஒரு கேள்வி தான் பாருங்க:rolleyes:

அட்லீஸ்ட் லண்டனில் இருக்கிற மக்கள் போரை நிப்பாட்ட தங்களால் இயன்ற அளவு போராடினார்கள்...அங்குள்ளவர்கள் மாதிரி வீட்டுக்குள்ள இருந்து கொண்டு ரீரியல் பார்த்துக் கொண்டு இருக்கேல்லtw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அட்லீஸ்ட் லண்டனில் இருக்கிற மக்கள் போரை நிப்பாட்ட தங்களால் இயன்ற அளவு போராடினார்கள்...அங்குள்ளவர்கள் மாதிரி வீட்டுக்குள்ள இருந்து கொண்டு ரீரியல் பார்த்துக் கொண்டு இருக்கேல்லtw_angry:

வெளியே வந்து போர் பற்றி பேசினால் தூக்கிட்டு போகும் போது எப்படிங்க வடகிழக்கில் , கொழும்பில் பேச முடியும் ??  (இலங்கையில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

வெளியே வந்து போர் பற்றி பேசினால் தூக்கிட்டு போகும் போது எப்படிங்க வடகிழக்கில் , கொழும்பில் பேச முடியும் ??  (இலங்கையில்)

அதெல்லாம் சும்மா சாட்டு முனி ...இது பற்றி எல்லாம் அந்த நேரமே கணக்க எழுதியாயிற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அதெல்லாம் சும்மா சாட்டு முனி ...இது பற்றி எல்லாம் அந்த நேரமே கணக்க எழுதியாயிற்று.

இருக்கலாம் அப்படி இல்லாமலும் இருக்கலாம் தற்போது சுய நலமே காண முடிகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியே அரசுக்கெதிராக போராடி இருந்தால் தான் பிரச்சனை...யுத்தத்தை நிப்பாட்ட புலிக்கு எதிராகவும் போராடி இருக்கலாம்...மக்கள் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது.ஆனால் மக்கள் எழவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

புலிக்கு எதிராகவும் போராடி இருக்கலாம்...மக்கள் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது.ஆனால் மக்கள் எழவில்லை

புலிக்கு எதிராக போராடியிருந்தால்  இந்த மக்கள் இன்னும் பாதிப்புத்தான் அடைந்திருப்பார்கள்  இன்னும் ஒதுக்கப்பட்டிருப்பார்கள்  அது யாரால் என நீங்கள் சொல்லுங்கள்  பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வடகிழக்கில் அல்லது கொழும்பில் ஏதாவது செய்ய முடியுமா ? யார் காரண கர்த்தாவோ விபத்தில் இல்லை வெள்ளைவானில் அல்லது நாலாம் மாடியில் வைத்து அந்த எழுச்சி முறியடிக்கப்படும் இங்கு ரதி விளக்கம் கூடினவ என்ற என் நம்பிக்கைக்கு மாறாக கருத்துக்கள் வருது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.