-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரிப்பு: நேஷன்வையிட் தகவல்! பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரித்துள்ளதாக நேஷன்வையிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. சராசரி மதிப்பு 231,068 பவுண்டுகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட 6.9 சதவீத உயர்வை கண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது. ‘இந்த அதிகரிப்பு ஒரு ஆச்சரியம்’ என்று நேஷன்வைட்டின் ரோபர்ட் கார்ட்னர் கூறினார். ஏனெனில் முத்திரை வரி விடுமுறை முடிவடைவதற்கு முன்பே விலை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடுமுறை மார்ச் 31ஆம் திகதி முடிவடைய உள்ளது, இருப்பினும் அது நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன. முத்திரை வரி விடுமுறை என்பது ஜூலை முதல் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து சொத்து விற்பனையிலும் முதல், 500,000 பவுண்டுகள் வரி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வார வரவு செலவு திட்டத்தில் முத்திரை கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வரலாம். http://athavannews.com/பிரித்தானியாவில்-வீட்டி/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜோ பைடனின் கோரிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். http://athavannews.com/அலெக்ஸி-நவல்னியை-கொலை-செ/ -
By புங்கையூரன் · Posted
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால், அந்த்ப் புண்ணியம் கண்ணனுக்கே...! போற்றுவார் போற்றலும்....தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே....! காண்டீபம் எழுக...! உன் கை வண்ணம் எழுக...! களமெலாம் சிவக்க வாழ்க....!!!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.