Jump to content

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று


Recommended Posts

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

p1-d476c7bb73d60c413316a30506bcfa136d6b021a.jpg

 

கொழும்பு, கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்தப் பெரு­விழாவின் கொடி­யேற்றம் இன்று 3 ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 6 மணிக்கு நடை­பெறும் திருப்­ப­லியின் பின்னர் இடம்­பெ­ற­வுள்­ளது.

நவநாள் வழி­பா­டுகள் மாலை 6 மணிக்கு தமிழ், சிங்­கள மொழி­களில் நடை­பெறும். எதிர்­வரும் 12 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நற்­க­ருணை பெரு­விழா மாலை 7 மணிக்கு கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது.

13 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை திரு­விழா திருப்­ப­லிகள் அதி­காலை 4 மணிக்கு தமிழ் மொழியில் ஆலய பங்­குத்­தந்தை தலை­மை­யிலும், அதி­காலை 5 மணிக்கு சிங்­கள மொழியில் கொழும்பு மறை­ மாவட்ட பொரு­ளாளர் தலை­மை­யிலும், காலை 6 மணிக்கு தமிழ் மொழியில் அருட்­தந்தை ஆனந்த பெர்­னாண்­டோ­புள்ளே தலை­மை­யிலும், சிங்­கள மொழியில் காலை 7 மணிக்கு புதி­தாக குருப்­பட்டம் பெற்ற புதிய குருக்கள் தலை­மை­யிலும் ஒப்­புக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

திரு­விழா சிறப்புத் திருப்­ப­லிகள் காலை 8 மணிக்கு கொழும்பு மறை­மா­வட்ட துணை ஆயர் இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­டகை தலை­மையில் தமிழ் மொழி­யிலும், காலை 10 மணிக்கு மறை­ மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்­டகை தலை­மையில் சிங்­கள மொழி­யிலும், நண்­பகல் 12 மணிக்கு இலங்­கைக்­கான வத்­திக்கான் தூதுவர் பேராயர் பியார் நியுக்யென் வான் டொட் ஆண்­டகை தலை­மையில் ஆங்­கில மொழி­யிலும் நடை­பெற­வுள்­ளன.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு புனி­தரின் திருச்­சொ­ரூப பவனி ஆல­யத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மாகும். பவனியின் இறுதியில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர் வழங்கப்படும்.        

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-03#page-1

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்.....!  tw_blush:

Link to post
Share on other sites

 

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 பகிர்வுக்கு நன்றி 

Link to post
Share on other sites
 • 2 weeks later...

மனி­த­னாக பிறந்து செபத்­தாலும் தவத்­தாலும் இறை நிலைக்கு உயர்த்­தப்­பட்ட புனித அந்­தோ­னியார் - இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா 

 

 

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்­த­லத்தின் இறு­திநாள் உற்­சவம் இன்று நடை­பெ­று­கி­றது. ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்கள் இன, மத பேத­மின்றி இத்­தி­ருத்­த­லத்­துக்கு வந்து தமது கோரிக்­கை­க­ளையும் பக்­தி­யையும் வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள். பலர் புனித அந்­தோ­னி­யா­ரைப்­பற்­றிய பூரண விப­ரத்தை அறிய ஆவ­லா­யுள்­ளனர்.

anth.jpg

போர்த்­துக்­கல்லில் வசித்­து­வந்த பெரும் செல்­வந்­த­ரான மார்டின் வின்­சன்ரே  டீ புளோஸ் என்­ப­வ­ருக்கும் திரேசா பயஸ் தவரே என்­ப­வ­ருக்கும் குழந்­தை­யாகப் பிறந்­த­வரே அந்­தோ­னி­யா­ராவார்.

அந்­தோ­னி­யாரின் பெற்­றோரும் உற­வி­னரும் செல்­வந்­தர்­க­ளாக விளங்­கி­யதால் அந்­தோ­னி­யாரை நன்கு படிப்­பித்து பெரிய உயர் தொழிலில் அமர்த்த வேண்டும் என்­பது அவர்­க­ளது விருப்­ப­மாக இருந்­தது. ஆயினும் அந்­தோ­னியார் மறைக்­கல்­வி­யையே விரும்பிப் படித்தார்.

ஆகவேஇ பெற்­றோரின் விருப்பம் நிறை­வே­றாமல் போகப்­போ­கி­றது என்­பதை பெற்றோர் உணர்ந்­த­ன­ரா­யினும் தனது மகன் இறை­வனின் தொண்­ட­னாகப் போகிறார் என்­பதால் மன ஆறு­த­ல­டைந்­தனர்.

அந்­தோ­னியார் தனது 15ஆவது வயதில் தனது செல்வ குடும்­பத்தில் இருந்து பிரிந்து துற­விகள் தங்கும் மடத்­திற்கு சென்று தங்கத் தொடங்­கினார். மடத்தில் தங்­கிய அந்­தோ­னியார் தனது இரு­பத்­தைந்தாம் வயதில் குருப்­பட்­டத்தை பெற்றார்.

ஆரம்­பத்தில் அகஸ்­தீ­னியர் மடத்தில் தங்கி­யி­ருந்த புனிதர் பின்னர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். பின்னர் தனது பெயரான பேடினட் என்­பதை மாற்றி அந்தோனி என வைத்­துக்­கொண்டார். அவரால் வைக்­கப்­பட்ட பெயரே இன்றும் நிலைத்து இருக்­கி­றது. பேடினட் அந்­தோனி என மாறினார். நாம் அந்­தோ­னியார் என கௌர­வ­மாக அழைப்­பது அப்­பெ­ய­ரை­யே­யாகும்.

 

அந்­தோ­னியார் நீண்­ட­கா­லப்­பணி பாதுவா திருத்­த­லத்­துடன் தொடர்­பு­பட்டது. இத்­தி­ருத்­த­லத்தின் உட்­ப­கு­தியின் ஒரு பகு­தியில் அந்­தோ­னி­யாரின் தேவா­லயம் உண்டு. ஒன்­பது மாபிள்களாலான சுவரைக் கொண்ட இத்­தே­வா­ல­யத்தில் அந்­தோ­னி­யாரின் புது­மைகள் சில அம்­மாபிள்­களில் எடுத்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

இங்கு அந்­தோ­னி­யாரின் திரு­நாக்கு உடலின் வேறு சில பகு­திகள் ( THE TREASURY CHAPEL OF THE RELICS) என்ற பகு­தியில் வைக்­கப்­பட்­டுள்­ளன. அவரது மேலங்­கியும் பாது­காப்­பான கண்­ணாடி பெட்­டிக்குள் வைக்­கப்­பட்­டுள்­ளது. பாக்­கி­ய­வான்கள் பலர் இவற்றைத் தரி­சித்துச் செல்­கின்­றனர்.

பாதுவா புனித தேவா­ல­யத்தில் இருந்து அந்­தோ­னி­யாரின் உடலின் பாகங்கள் சில கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் திருத்­த­லத்தின் 175ஆவது வருட ஜுபிலி விழாவின் போது இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்டு இத்­தி­ருத்­த­லத்தில் இன்றும் தரி­ச­னத்­திற்­காக வைக்­கப்­பட்­டுள்­ளது.

உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் இப்­பு­னி­தரின் உறுப்­புக்­களை  வணங்­கவும் அவரை அடக்கம் செய்த பெட்­டியை தொடவும் புனி­தரின் பாதம் பட்ட ஆல­யத்தை விழுந்து கும்­பி­டவும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாக்­கி­ய­வான்கள் இங்கு வந்த வண்­ணமே இருக்­கின்­றனர்.

இறந்தும் இற­வாமல் என்றும் வாழும் புனித அந்­தோ­னியார் ஜெபத்தால் இறை­வனை அடை­யலாம் என்­பதை நிஜ­வாழ்க்­கையில் காட்­டி­ய­வ­ரா­கிறார்.

இப்­பு­னி­தரின் ஆல­யமே இன்று கொச்­சிக்­க­டையில் அமைந்­துள்­ளது. ஆரம்­பத்தில் களி மண்ணால் ஆரம்­பிக்­கப்­பட்ட மேற்­படி தேவா­லயம் இன்று வான­ளாவி நிற்­கி­றது. தினந்­தோறும் மக்கள் இங்கு இனஇ மத­பே­த­மின்றி வணங்­கிச்­செல்­கின்­றனர். நாட்டின் முதற் பிரஜை முதல் சகல பிர­சை­களும் வணங்­கு­கின்ற தேவா­லயம் இது­வாகும். இத்­தே­வா­லயம் கொழும்பு கொச்­சிக்­க­டையில் அமைந்­தி­ருப்­பது நாம் செய்த பாக்­கி­ய­மாகும்.

ஒரு குறுகிய வாழ்நாளில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து தனது செபத்தால் பல புதுமைகள் செய்த புனித அந்தோனியார் 36ஆவது வயதில் இறந்தார் எனப்படுகிறது.

1231ஆம் ஆண்டு  ஜுன் மாதம் 13ஆம் திகதி இறந்தார். அந்தோனியார் இறக்கும் போது கூட எனது இறைவனைக் காண்கிறேன் “ I see my Lord” என்று அருகில் இருந்தவர்களுக்குக் கூறிக்கொண்டே பாதுவாவுக்கு அருகில் உள்ள இடத்தில் இறந்தார்.

 

சட்­டத்­த­ரணி கே.ஜீ. ஜோன்

http://www.virakesari.lk/article/20836

Link to post
Share on other sites
திருச்சொரூப பவனி...
 

image_5dcfeb80a2.jpgimage_baa6092bfc.jpgimage_06539dd837.jpgimage_c33dd8ced9.jpgகொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  திருச்சொரூப பவனி, இன்று நடைபெற்றது. (விஷான்)

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/திருச்சொரூப-பவனி/46-198537

Link to post
Share on other sites
 • 11 months later...

கொழும்பு, கொச்­சிக்க­டை­ பு­னித அந்­தோ­னியார் திருத்தல திருவிழா ஆரம்பம்

 

கொழும்பு, கொச்­சிக்க­டை­ பு­னித  அந்­தோ­னியார் திருத்தலத்தில் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமானது.  

k01.jpg


k02.jpg


k03.jpg


k05.jpg

http://www.virakesari.lk/article/34358

Link to post
Share on other sites

 

கொழும்பு, கொச்­சிக்க­டை­ பு­னித அந்­தோ­னியார் திருத்தல கொடியேற்றம் - 2018

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நான் சிறுவர்களைக் கடத்துவதாகக் கூறுவது புலிகளாலும், புலம்பெயர் தமிழராலும் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் : கருணா  கருணாவின் கூற்றுப்படி அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் 16 அலுவலகங்களை நடத்தி வருகிறது. உங்களின் அரசியல் அலுவலகங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "எமது அரசியல் அலுவலகங்களுக்குள் எவரும் வரலாம், நாம் எதனையும் மறைக்கவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நிகரான வெளிப்படைத் தன்மையினை நாம் எமது அரசியல் அலுவலகங்களில் பேணிவருகிறோம். எனது அலுவலகங்களில் 20 வயதிற்குக் குறைந்த எவரையும் நாம் கொண்டிருக்கவில்லையென்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எவரும் எமது அலுவலகத்தினை வந்து பார்வையிட முடியும்" என்று அவர் பதிலளித்தார். ஆனால், உங்களின் அமைப்பு பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, "இது புலிகளாலும், அவர்களுக்குச் சார்பான புலம்பெயர் தமிழர்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரமாகும், இதில் உண்மையெதுவுமில்லை" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். ஐ நா வின் சிறுவர் நலன்களுக்கான விசேட தூதர் அலன் ரொக் கருணா குழுமீது முன்வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த கருணா, "நிச்சயமாக அலன் ரொக் புலிகளின் பின்புலத்துடன் தான் அரசுக்கும் தனக்கும் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார். "புலிகள் போலியான குடும்பங்களைத் தயார் செய்து அலன் ரொக்கின் முன்னால் கடத்தப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் என்று நாடகமாட வைத்திருக்கின்றனர். அலன் ரொக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவையுமே அவரிடம் இல்லை. அவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது இதுபற்றி தெளிவாக அவருக்கு விளக்கியிருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்துடனான தனது உரையாடல் நடைபெற்று 5 நாட்களின் பின்னர் யுத்தங்களில் இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்கள் நலன் தொடர்பான ஐ நா வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் கருணா பேசியிருந்தார். இந்த பிரதிநிதியால் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் சிறுவர்களைப் பாவிக்கும் அமைப்புக்களின் பட்டியலில் கருணாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுபற்றிப் பேசவே கருணா ராதிகாவுடன் தொடர்புகொண்டிருந்தார். ஐ நா வின் அறிக்கைப்படி கருணா தான் சிறுவர்களை இணைப்பதைக் கைவிடுவதாகவும், யுனிசெப் அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறுவர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்  ஒத்துக்கொண்டிருந்தார். சிறுவர் நலன் பேணுதல் தொடர்பாக யுனிசெப் அமைப்பிற்கும் தனது குழுவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி பின்வரும் விடயங்களைத் தான் செய்யவிருப்பதாக கருணா ஒத்துக்கொண்டிருந்தார். 1. கருணா குழுவின் அனைத்துத் தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சிறுவர்களை இணைப்பதோ, யுத்தத்தில் ஈடுபடுத்துவதோ அனுமதிக்கப்பட முடியாது என்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது. 2. சிறுவர் நலன் தொடர்பான பயிற்சிகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவின் பொறுப்பாளர்களுக்கு அளிப்பது. 3. யுனிசெப் மற்றும் ஏனைய மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களிடமே கையளிப்பது. 4. தனது முகாம்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை யுனிசெப் அமைப்பிற்கு வழங்கி எத்தருணத்திலும் தனது அமைப்பில் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லையென்பதனை உறுதிசெய்தல். கருணாவின் இந்த அறிக்கையினை வரவேற்ற ராதிகா குமாரசாமி, சிறுவர்கள் இலங்கையில் ஆயுதக் குழுக்களால் போரில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக இது காணப்படுவதாகக் கூறியிருந்தார். "களத்தில் இந்த முயற்சிகள் நண்மைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா, புலிகளிடமிருந்து இம்மாதிரியான ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி தனது ராணுவ அமைப்பிற்கான கட்டுப்பாடுகளை கருணா யுனிசெப் அமைப்பிடம் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் தனது அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும், இணையவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பிறப்பு அத்தாட்சிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டு, சுய விருப்பத்துடனேயே இணைகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.  இந்தச் சட்டங்களை மீறும் தளபதிகளுக்கு முகாமில் சமையலில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதே ஆவணத்தில் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்பின் உறுப்பினர்களை  பொலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களை இழிவுபடுத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் காலத்திலேயே கருணா குழு புதிதாக குறைந்தது 21 சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது. 
  • இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நேற்றைய தினம் 1038 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 140 இலட்சத்து 74 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 124  இலட்சத்து 29 ஆயிரத்து 564 பேர் குணமடைந் துள்ளனர், 14 இலட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     Thinakkural.lk <p>இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 […]</p>
  • 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மீண்டும் ஆரம்பம் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றைய முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   Thinakkural.lk <p>புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் […]</p> இதுவரையில் 18 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் சுமார் 75 சதவீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு அடுத்த சில நாட்களில் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்   இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது, கடந்த 4 நாள்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை, இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 9,10ஆம் திகதிகளில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவும் சுற்றுலா செல்வோர் அதிவேக நெடுங்சாலைகiளைப் பயன்படுத்தியமையாலேயே இந்த வருமானம் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.  Tamilmirror Online || 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்  
  • மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்...   ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... (adaderana.lk)    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.