Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோமாளி என சித்தரிக்க சிலர் முயன்றாலும், சிறப்பான பேச்சு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர் அலிகான் நேர்க்காணல்: "தமிழர் ஒருவரைப் பிரதமராக்குவோம்"

கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் மன்சூர்அலிகானுடன் நேர்காணல்

திண்டுக்கல் நடாளுமன்றத் தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' சார்பாக போட்டியிடும் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், பரோட்டா கடையில் பரோட்டா போடுவது, செருப்பு தைப்பது, பெண்களுக்கு காய்கறி நறுக்கி கொடுப்பது என பிரசாரக் களத்தில் வித்தியாசமான வேலைகளை செய்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பிபிசி தமிழுக்காக பிரபுராவ் ஆனந்தன் மன்சூர் அலிகானை பேட்டி கண்டார். இந்த நேர்காணலில் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

கேள்வி: வாக்கு சேகரிக்கும் இடங்களில் நீங்கள் பரோட்டா போடுவதும், செருப்பு தைப்பதும் விளம்பரத்திற்காகவா?

பதில்: இவற்றை நான் விளம்பரத்திற்கு செய்வதாக அனைவராலும் சொல்லபடுகிறது. ஆனால் அது உண்மையல்ல.

கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் மன்சூர்அலிகானுடன் நேர்காணல்படத்தின் காப்புரிமைBBC SPORT

எனக்கு கும்பிட்டு வாக்கு கேட்க தெரியாது. அதற்கு பதிலாக கையை உயர்த்தி, மடக்கி வணக்கம் சொல்லுவது நாம் தமிழர் கட்சியின் வழக்கம். அதுபோல் செய்கிறேன்.

தமிழ் இனத்தை நசுக்கி, வஞ்சித்து, முதுகின் மேல் ஏறி சவாரி செய்வதை இனியும் நாங்கள் அனுமதிக்க போவதில்லை.

காய்கறி விற்பவர்களோடு இணைந்து, அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைப்பதால் அவர்களுடன் பழக முடிவதால் நான் இவ்வாறு மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறேன்.

கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் மன்சூர்அலிகானுடன் நேர்காணல்

கே: திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் என்ன?

ப: இந்த நாடாளுமன்ற தொகுதியில் மக்களின் தேவைகளோ அதிகம். மக்கள் குடிக்க குடிநீர் இல்லாமல் அவதியுறுகின்றனர். எனவே நீர் ஆதாரங்களை உடனடியாக பெருக்க வேண்டும்.

விவசாயத்தை பெறுத்தவரையில் வெளிநாடுகளுக்கு இணையாக அனைத்து வளங்களும் உள்ளன. எனவே அதனை மேம்படுத்த கடுமையாக உழைப்பேன்.

கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் மன்சூர்அலிகானுடன் நேர்காணல்

அதே நேரத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினைபோல் மக்களை போராட விடமாட்டேன். போரட்டத்தில் 13 பேரை சுட்டு கொன்றுவிட்டு முதல்வர் எடப்பாடி அதே பகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார். இது எவ்வளவு பெரிய தவறான செயல்.

முகிலன் நிலை என்ன? தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு கொலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடியாத காங்கிரஸ் மக்களிடம் வாக்கு சேகரிக்கவருகிறது. இது நேர்மையற்ற செயல். தமிழக அரசு நினைத்திருந்தால் அவர்களை விடுதலை செய்துவிட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்க வேண்டும்.

கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் மன்சூர்அலிகானுடன் நேர்காணல்

கே: வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு என்ன செய்வீர்கள்?

ப: தற்சார்பு பெருளாதாரம், நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம். செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா முழுவதிலும் இயற்கை மூலிகைகள் உள்ளன. ஆனால் தற்போதைய நரேந்திர மோதி அரசு அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் ராம்தேவ் போன்றோரின் கார்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருமானம் அடைய உதவி செய்து வருகிறது. எனவே நான் விவசாயிகளை கொண்டு கூட்டுறவு சங்கம் அமைத்து பொது மக்கள் நலம் பெற நடவடிக்கை எடுப்பேன்.

கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் மன்சூர்அலிகானுடன் நேர்காணல்

கே: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள்?

ப: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தன்னலம் இல்லாதவர்கள். ஆகையால் தமிழர் ஒருவரை பிரதமராக பதவியில் அமர வைப்போம். கார்ப்பரேட் நிறுவனங்களை ஒழிப்போம்.

இலங்கை இலங்கை

கே: இந்த தொகுதியில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

ப: மலைகளை அழிப்பது, கனிம வளங்களை கொள்ளையடிப்பது, எட்டு வழிச்சாலை, பன்னிரண்டு வழிச்சாலை ஆகியவைகளை நிறுத்தி, நீர் ஆதாரத்தை பெருக்கி, எட்டு திக்கும் தொழில் வளத்தை பெருக்கினால் நிச்சயம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கவனத்தை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் மன்சூர்அலிகானுடன் நேர்காணல்

கே: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு என்ன பயன்?

ப: எய்ம்ஸ் மருத்துவமனையால் யாருக்கு பயன்? வட மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்தி அவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படும். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும். சாரயம் விற்று மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் அரசியல்வாதிகளால்தான் தமிழகம் இப்படியுள்ளது.

இலங்கை இலங்கை

கே: தேர்தலையொட்டி தமிழகத்தில் தினமும் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படுகிறது. அது யாருடைய பணம்?

ப: தினமும் கோடிக்கனக்கில் பணம் கைப்பற்றப்படுகிறது. ஆனால் கைப்பற்றப்படும் பணம் அதிமுக தரப்பில் அவர்களின் பணம் கிடையாது என்றும், திமுக தரப்பில் அவர்களின் பணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அப்படி, இந்த பணம் யாருடையதும் இல்லையென்றால் அது என்னுடைய (மன்சூர்அலிகான்) பணம்... அதை என்னிடம் கொடுங்கள் என அவர் நகைச்சுவையுடன் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-47815685

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி பிரச்சனைகளும் தீர்வும் 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ்த்தாயி

யுகசாரதி

நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன்
நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி
ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில்
அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி.

மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை
வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி
பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி
போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி

வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர்
வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி
அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த
அற்பர்களை ஒழித்திடம்மா செந்தமிழ்த்தாயி.

சாதி மதமொழித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் 
சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி 
ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த
அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி.

மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம்
மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி
தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன்
சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி

சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச் 
சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி
பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி
பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி

 

 

எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு
இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி
பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை

பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி.

 

ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க
மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி
வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க
வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி.

நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு 
நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி
சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம
தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி.

கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ
கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி
இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள்
இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு வாங்கி வேண்டுமென்றே சேறடிக்கும் ஊடகம் நியூஸ் 18

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

காசு வாங்கி வேண்டுமென்றே சேறடிக்கும் ஊடகம் நியூஸ் 18

 

தலைவர்களின் தகுதி என்ற பெயரில்சீமான் மேல் ஒரு திட்டமிட்ட சேறடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நேற்று இரவு நியூஸ் 18 போட்டிருந்தது.

இன்று அந்த வீடியோவை நீக்கி விட்டார்கள்.

காரணம் தெரியவில்லை. சட்ட நடவடிக்கைகள் எடுக்க பட்டதோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: 'ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும்' - சீமான்

நாம் தமிழர் கட்சி:

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்த நாம் தமிழர் கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது.

தங்கள் அரசியல் நிலைபாடு, கொள்கைகள், பிற கட்சிகள் மீதான பார்வை, கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான நேர்காணலில் இருந்து.

கேள்வி: 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ஆனால் அதிமுக-வை ஆதரித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதற்கு காரணம் என்ன?

பதில்: 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்தோம். ஒரு போர் தந்திரத்திற்காக அம்மையார் ஜெயலலிதாவை பயன்படுத்தி காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தினோம். இது போர் உத்தி. ஆனால் தற்போது நாங்களே வலிமையுடன் உள்ளோம். எனவே இந்த முறை நாங்கள் தனியாக களம் கண்டு வீழ்த்துவோம்.

கேள்வி: நாம் தமிழர் கட்சி சார்பில் 50 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் அது அரசியல் தந்திரமா?

பதில்: இதில் அரசியல் வியூகம், தந்திரம் என்பது ஒன்றும் இல்லை. இது ஒரு சமூகப் பொறுப்பு; பிறவிக்கடன். பெண்கள் மதிக்காத நாடு பெருமை பெற்றதில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

கேள்வி: வேளாண் துறையை காக்க நாம் தமிழர் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும்?

பதில்: வேளாண் துறையை நவீன மையமாக்க நிச்சயம் செயல்படுவோம். விவசாயத்தை பெருக்குவோம். வேளாண்மையை அரசுப் பணியாக மாற்றி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் வேளாண் விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம்.

கேள்வி: தமிழ் மண்னை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என சீமான் சொல்கிறார். இது ஃபாசிசம் கிடையாதா?

பதில்: இது ஃபாசிசம் கிடையாது. ஒரு தேசிய இன உரிமையை காப்பற்ற வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். மாநிலங்களை பிரித்ததன் நோக்கம் அந்தந்த மொழி பேசும் மக்கள் அந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்பதற்காக. கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் கேரள மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பேட்டியிட முடியுமா? இதே போல் மோதியை வேறு மாநிலத்தில் போட்டியிட செய்ய முடியுமா அது போல் என் இன மக்களை தமிழன் ஆள வேண்டும் என்பது ஃபாசிசம் கிடையாது. அது எங்கள் உரிமை.

நாம் தமிழர் கட்சி:

கேள்வி: திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள வட மாநிலத்தை சேர்தவர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து சீமானின் கருத்து என்ன?

பதில்: திட்டமிட்டு வெளி மாநிலத்தவர்களைக் குடியமர்த்தி வருகின்றனர். கேரளாவில் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். ஆனால் தமிழகத்தில் ஒரே மாதத்தில் பெற்றுவிடலாம். இது ஒரு பேராபத்தான போக்கு. தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும். சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கேள்வி:காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் எப்படி பார்க்கிறார்?

பதில்: அது வெறும் வெற்று அறிக்கை. 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தபோது செய்யாத ஒன்றை இப்போது செய்வார்களா? இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் செலுத்தபடும் என்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு வழங்குவார்கள்? வறுமையை முற்றிலும் ஒழிப்பது மட்டுமே ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம்.

கேள்வி: கடந்த ஐந்தாண்டு காலத்தில் பாஜக ஆட்சியின் செயல்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: பாஜகவின் சாதனை என்று எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அதனை பாஜகவினரே ஒப்புக்கொள்கின்றனர். பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கைகள், பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்கவில்லை. அதனை விட்டு விட்டு புல்வாமா தாக்குதலில் அந்நிய நாட்டியிடம் இருந்து இந்தியாவை காப்பற்றி விட்டதாக ஒற்றை விஷயத்தை முன் வைத்து வாக்கு கேட்கிறார்களே தவிர ஐந்தாண்டு சாதனையை முன் நிறுத்தி மக்களை சந்திக்கவில்லை.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

கேள்வி: நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்பேற்றால் கச்சத்தீவு மீட்கப்படுமா?

பதில்: வெளியுறவுக் கொள்கை,பாதுகாப்புக் கொள்ளை, கல்விக் கொள்கை ஆகியவற்றில் இரண்டு கட்சிகளும் (காங்கிரஸ், பாஜக) ஒன்றுதான். காரணம் கட்சத்தீவை மீட்போம் என கடல் தாமரை மாநாடு போட்டதும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கபடும் என அறிவித்தது அனைத்தும் கண் துடைப்பு. என்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் கிடைத்தால் கச்சத்தீவிவை மீட்பது என்பது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. தமிழகத்தில் நடப்பது மத்திய அரசின் அடிமை ஆட்சி. ஆகையால் இவ்வாறான பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதில்லை. திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளும் தமிழர்களுக்கான அரசே கிடையாது.

கேள்வி: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மதவாத அரசியல் செய்கின்றனவா?

பதில்: தமிழகத்தை பொறுத்த அளவில் மதவாதம் மதத்திற்கு எதிர்வாதம் என்ற இரண்டை வைத்து அரசியல் நடத்தி வருகின்றனர். இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்பதே நாம் தமிழரின் நோக்கம். இன்று மதசார்பற்ற கூட்டணியில் உள்ள திமுக ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. எனவே எல்லாமே போலியான எதிர்ப்பு நிலை. கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ராகுலை பிரதமராக வேண்டும் என்கிறார்கள். ஆனால் கேரளாவில் ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகின்றனர். எனவே கொள்கை வாதத்தில் முரணாக உள்ளது.

https://www.bbc.com/tamil/india-47838990

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

``சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா..?” - ராகுல், மோடிக்கு சீமான் கேள்வி

15547189562.gif

 

``காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்த அரசு, நீரையும் சோறையும் பெறுக்குவதற்கு நினைக்கவில்லை. எரிபொருளை சிக்கனம் செய்து சேமிக்க நினைத்த அரசு, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க பிரசவித்த குழந்தைதான் அ.தி.மு.க. ஒன்றுமே இல்லாத கட்சியான பி.ஜே.பி-யை இவர்கள்தான் தமிழகத்திற்கு அழைத்துவந்தனர்" என்று தஞ்சாவூரில் சீமான் தெரிவித்தார்.

சீமான்

தஞ்சாவூரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின்  நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்  கார்த்திக் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற  பிரசார பொதுக் கூட்டத்தில் வாக்குகள் கேட்டுப் பேசினார். அப்போது, ``எத்தனையோ தேர்தல்கள் வந்தாலும் மக்களுக்கு எந்த மாறுதலும் இல்லை. எல்லா கட்சிகளும் பணத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.  நாங்கள் உயர்ந்த கருத்தை வைத்து களம் காணுகிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்தது. அப்போது செய்யாத காங்கிரஸ் இப்போது என்ன செய்யப்போகிறது என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கப்போவதாக ராகுல் காந்தி கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயிகள் ஏழையாகினர்.

 

பிரசார கூட்டம்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 6,000 போடப்போவதாக மோடி கூறுகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 100 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இவர்களை ஒரு முறைகூட மோடி பார்க்கவில்லை. கோரிக்கை என்னவென்று கேட்கவில்லை. 6,000 ரூபாயை முன்பே கொடுத்திருந்தால், அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைந்திருக்கும். இப்போது, வாக்கைப் பெறுவதற்காகப் பணம் கொடுக்கின்றனர். இது நல்ல திட்டமல்ல, நயவஞ்சகத் திட்டம்.
50 ஆண்டு கால சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க முடியாத நிலையில் ராகுல் காந்தி உள்ளார். இதேபோல, ஐந்தாண்டு கால சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் மோடி இருக்கிறார். காசு கொடுத்து வாக்கு கேட்கும் கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வரும்.

கஜா புயலில் நான்கு மாவட்டம் பாதி அழிஞ்சுபோச்சு. மரங்கள் மட்டும் முறிந்து விழவில்லை மனமும் முறிந்துவிட்டது .உலகுக்குகே சோறுபோட்ட விவசாயிகள், ஒரு வேளை சோற்றுக்கு கையேந்தி  நிற்கிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். புயலினால் 89 பேர் இறந்தனர். வாழ்வாதாரத்தை இழந்து தவித்த விவசாயிகளுக்கு மோடி ஒரு வார்த்தைகூட ஆறுதல் கூறவில்லை. ஏன் ராகுலும் ஆறுதல் வார்த்தை கூறவில்லை. இப்போது, வாக்கு கேட்பதற்கு  அடிக்கடி வருகின்றனர். ஐந்து ஆண்டு சாதானைகளில் ஒன்றைச் சொல்லி வாக்கு கேட்க முடியுமா மிஸ்டர் மோடி.

பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் ராகுல் காந்திக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை. இருவரும் ஏமாற்றுபவர்கள்தான். இந்த நாட்டின் பாதுகாப்பில்கூட தற்சார்பு இல்லை.போர் விமானம் உட்பட  ஒவ்வொரு கருவியும் வெளிநாட்டிலிருந்துதான் வாங்குகின்றனர். இதனால், வாங்கி வாழ்கிற வாட்ச் மேன்கள் இவர்கள். இந்தியாவை ஒரு சந்தையாக்கிவிட்டனர். வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து தொழில் தொடங்குபவர்கள் வியாபாரம் முடிந்தவுடன், ஓடிவிடுகின்றனர். ஒரு வாடகைத் தாயைப் போலவே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை உள்ளது. இதனால், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

 

 

சீமான்

எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கோர்டுக்கு சென்றது நாம் தமிழர்தான். இப்போது அந்தத் திட்டத்தை  ரத்துசெய்துள்ளது நீதிமன்றம் அதை நாங்கள் செய்தோம் என இன்று பலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்த அரசு, நீரையும் சோறையும் பெறுக்குவதற்கு நினைக்கவில்லை. எரிபொருளை சேமிக்க நினைத்த அரசு, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க பிரசவித்த குழந்தைதான் அ.தி.மு.க. ஒன்றுமே இல்லாத கட்சியான பி.ஜே.பி-யை இவர்கள்தான் தமிழகத்திற்கு அழைத்துவந்தனர். இப்போது, பி.ஜே.பி-யை எதிர்க்கிறார் ஸ்டாலின். பி.ஜே.பி போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கூட்டணி கட்சிக்குக் கொடுத்துவிட்டது தி.மு.க.

ராகுல் காந்தி ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பேசும்போது, மீத்தேன் திட்டத்திற்கு நாங்கள் கையெழுத்திடச் சொல்லவில்லை; தி.மு.க தான் கையெழுத்திட்டது என்றார். இவர்கள்,  நாங்கள் ஆய்விற்குத்தான் ஒப்புதல் தந்தோம் என மக்கள் போராட்டத்திற்குப் பிறகு சொன்னார்கள். பா.ஜ.க வரக் கூடாது. ஆனால், பா.ஜ.க-வுக்கு மாற்று காங்கிரஸ் கிடையாது. சிஸ்டத்திற்குள் வேலை செய்ய வந்தவர்கள் நாங்கள் இல்லை. கொள்கையையே மாற்ற வந்தவர்கள். நாம் தமிழர் கட்சியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்தால், கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்றார்.

https://www.vikatan.com/news/politics/154578-election-compaign-of-seeman-thanjavur.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடுப்பில் செருகிய புடவை.. ஏற்றி வாரிய கொண்டை.. கையில் துடைப்பக்கட்டை.. யார் இந்த பிரகலதா!

praglatha2323-1554786961.jpg

சென்னை: காலில் செருப்பு இல்லை.. தலையில் கொண்டை.. புடவையை வாரி இடுப்பில் செருகி கொண்டு கையில் ஒரு துடப்பக்கட்டையை எடுத்து பெருக்கி கொண்டு இருக்கிறார் பிரகலதா!

யார் இந்த பிரகலதா!

இவர்தான் நாம் தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி வேட்பாளர்! தன் கட்சி வேட்பாளர்களை சும்மா தேர்ந்தெடுப்பாரா என்ன சீமான்? எப்படி வடசென்னை வேட்பாளர் காளியம்மாளோ அதுபோலவே போர்க்குணம் நிறைந்த வேட்பாளர்!திருமதி பிரகலதா ராம் எம்.ஏ எம்.எட் படித்திருக்கிறார். கொஞ்ச காலம் பேராசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். இது இவருடைய தனிப்பட்ட பொதுவான தகவல்தான். ஆனால் யாருமே அறியாத, மறைக்கப்பட்ட ஒரு விஷயம் உள்ளது

சிறை சென்றவர்

அது என்னவென்றால், சேலம் 8 வழிச்சாலை என்ற கார்ப்பரேட் அறிவிப்பு வந்தபோது, விவசாயிகள் உருக்குலைந்தனர். அப்போது முதன்முதலில் போராட்டம் நடத்தியதுடன், அதற்காக சிறை சென்றவர்தான் இந்த பிரகலதா!

சாணி அள்ளுகிறார்

இவரை பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்தபோதுதான் பிரகலதா அவருடைய வீட்டில் வேலை பார்ப்பதுபோன்ற ஒரு வீடியோ இருந்தது. அவரது குடும்பம் விவசாய குடும்பம் போல தெரிகிறது. வீட்டில் மாடு வளர்க்கிறார்கள். அந்த மாட்டு தொழுவத்தைதான், இவர் சாணி அள்ளி, பெருக்கி துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

கேள்விகள்

இந்த வீடியோவுக்கு பின்புறம் சீமான் குரல் ஒலிக்கிறது. வழக்கம்போல நாக்கை பிடுங்கி கொள்கிற அளவுக்கு கேள்வி கேட்கிறார் சீமான். அதில் அவர் பேசிய ஒரு சில வார்த்தைகள் இது: சோறு எவன் போடுவான்? விவசாயம்தான் இனி நமக்கு அரசாங்க பணி.. எல்லாரும் ஐஏஎஸ் ஆயிட்டா எப்படி? ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபீசர்ன்னா பசிக்காதா ராஜா?

சோறு எவன் போடுவான்?

யதார்த்தத்துக்கு வாங்கடா... வேளாண்மையை கைவிட்டிட்டீங்களே.. உலகம் ஒருநாள் சோத்துக்கு கையேந்தும்..

சாராயம்

டாஸ்மாக்குல சாராயம் ஊத்தி குடுக்கறவன் கவர்ன்மென்ட் எம்பிளாயிடா.. ஆனா உலகத்துக்கே சோறு போடற எங்க ஆத்தாளும் அப்பனும் கவர்மென்ட் எம்ப்ளாயி ஆக கூடாதா? பைத்தியக்கார பயலுகளே.. ஒரு காலம் வருது.. விவசாயத்துக்கு ஓய்வூதியம் தர்றோம் 60 வயசுக்குமேல! விவசாயத்தை அரசு பணியாக்கறோம் என்று கர்ஜித்து கொண்டே போகிறார்.

தாலி அறுது

பிரகலதா விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரித்தவாறே சொல்கிறார் விழுப்புரம் பகுதியில பார்த்தீங்கன்னா, நிறைய பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். நாங்க ஓட்டு கேட்டு போனா எங்ககிட்ட பெண்கள் சொல்றது, மதுவால எங்க தாலி அறுது.. ஏதாச்சும் பண்ணுங்க, இதுவரைக்கும் எந்த தலைவரும் இதுக்கு ஒரு முடிவு கட்டல என்பதுதான். களத்தில் இறங்கி போராடியது போதும்.. காசுக்கு ஓட்டு தந்தது போதும்.. கையில் அதிகாரம் இருந்தால்தான் நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் பேசி செல்கிறார் பிரகலதா!

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamizhar-vizhpuram-candidate-pragalatha/articlecontent-pf366166-346313.html

டிஸ்கி:

செம்பு தற்ஸ்தமிழ் காங்கிரஸ் -- திமுக யால்ராவுக்கு என்னமோ ஆகி போச்சுது .. இன்று ஒரு நாளுக்காவது நல்ல புத்தி வந்தமைக்கு வாழ்த்துவம். .😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் நாளுக்கு நாள் வித்தியாசம்.. வேட்பாளர்களின் அணுகுமுறையோ அதைவிட அம்சம்!

ஒரு பக்கம் வடசென்னை காளியம்மாள், மற்றொரு பக்கம் திண்டுக்கல் மன்சூரலிகான் என இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருகிறார்கள்.

அதேபோல, கோவையை சேர்ந்த வேட்பாளர் கல்யாணசுந்தரமும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். புதுவித பிரச்சாரம் கோவை மக்களை கவர்ந்துள்ளது! கோவையில் சிபிஎம் வேட்பாளர் நடராஜன், பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்துதான் கல்யாண சுந்தரம் போட்டியிடுகிறார்.

சொத்து மதிப்பு

இவர் ஒரு அட்டவணை தயாரித்துள்ளார். அந்த அட்டவணையில் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் விவரங்களுடன் தன் சுய விவரங்களையும் அச்சிட்டு, இதனை பொதுமக்களிடம் வினியோகித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதில், வேட்பாளர்களின் பெயர், வயது, சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

வாத்தியார் தொழில்

அதாவது இருக்கும் 3 வேட்பாளர்களிலேயே வயது குறைந்தவர் கல்யாணசுந்தரம். நடராஜன் வயது 68, சிபி ராதாகிருஷ்ணன் வயது 61, கல்யாண சுந்தரம் வயதோ 36! மற்ற இருவரின் தொழில் முழு நேர அரசியல் என்றால் கல்யாண சுந்தரமோ வாத்தியார் தொழில் பார்க்கிறார். நடராஜன் மீது 4 கேஸ்களும், சிபி ராதா மீது 1 கடன் நிலுவை கேஸ் உள்ளதாக சொல்லி, அந்த வழக்கின் விவரங்களை தெரிவித்துள்ளார். ஆனால் கல்யாணசுந்தரத்தின் மீது ஒரு வழக்கும் இல்லை.

நடராஜன்

குடும்பத்தின் சொத்து மதிப்பு, சிபி ராதாவுக்கு 69 கோடியே 75 லட்சத்து 638 ரூபாய் உள்ளது. நடராஜனுக்கு 2 கோடியே 47 லட்சத்து 24 ஆயிரத்து 430 ரூபாய் உள்ளது. ஆனால் கல்யாண சுந்தரத்துக்கு 8 லட்சத்து 55ஆயிரத்து 082 ரூபாய் இருக்கிறது.

சிபி ராதாகிருஷ்ணன் இதுபோக கடன் பாக்கி பற்றின விவரமும் இந்த அட்டவணையில் உள்ளது. 32 லட்சத்து 34 ஆயிரத்து 168 ரூபாய் சிபிஎம் வேட்பாளருக்கும், 2 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் சிபி ராதாவுக்கும் கடன் இருக்கிறதாம். ஆனால் கல்யாண சுந்தரத்துக்கு எந்த கடன் பாக்கியும் இல்லை.

அக்மார்க் வேட்பாளர் ஆக.. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட சொத்து குறைவாக உள்ளதும், எந்த வழக்கும் இதுவரை இல்லாததும், முக்கியமாக தன் வாழ்க்கையில் கடனே இல்லாத ஒரு "அக்மார்க்" வேட்பாளராக நம்ம வாத்தியார் இருக்கிறார்! இந்த அட்டவணைதான் கோவை மக்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamizhar-party-coimbatore-candidate-kalyana-sundaram/articlecontent-pf366230-346334.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.