Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

உங்களுக்கு உண்மையான விடயம்தெரியாமல் பேசுகிறீர்கள் 
அவர்கள் இங்கு வாழ்கிறார்களே தவிர தமிழர்களாக வாழவில்லை 
இப்போது 300 வீதம் ஒதுக்கீடு கேட்டு நிற்கிறார்கள்.

நீங்கள் சுவிஸில் சுவிஸ் நாட்டு சட்டதிட்டங்களுக்குள் உட்பட்டு வாழுவது வேறு 
சுவிஸில் தமிழர்களுக்கு 30 வீதம் இட  ஒதுக்கீடு கேட்பது வேறு 

48 minutes ago, goshan_che said:

இன்னொரு திரியில் நான் பதிந்த கருத்தை (கவிதை?) தலைப்பு பொருத்தம் கருதி இங்கே மீள் பதிவு செய்கிறேன்.

பாலா, 

பிறப்பால் நீ  தெலுங்கன்

உணர்வால் தீந்  தமிழன் 

தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை

உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை
 
எம் உரிமை கானங்களை உணர்ந்து பாடியவன் நீ 

எம் யுத்த ரணங்களுக்கு எல்லாம் மருந்தும் ஆனவன் நீ 

யாவரும் கேளிர் என வாழ்ந்து காட்டியவன் நீ 

அதனால்தான் உனக்கு உலகின் அத்தனை மூலையும் ஊராகிப் போனது 

போய்வா தமிழ் திரையிசையின் தலை மகனே
 
தமிழா,
 
உனக்கு இப்போ கிடைக்கிறது அரச மரியாதை 

ஆனால் தமிழ்  இருக்கும் வரை உனக்கு கிடைக்கும் இராஜ மரியாதை .

கீழே இருப்பது 

இரெண்டாம் உலக யுத்ததின் பின் ஜேர்மானியரான பாதிரியார் மார்டின் நீம்லெர் எழுதிய உரைவடிவிலான மன்னிப்பு கவிதையின் ஆங்கில வடிவம்.

இதை மொழி பெயர்த்து வீரியம் இழக்க செய்ய விரும்பாதபடியால் அப்படியே பதிகிறேன்.

First they came for the socialists, and I did not speak out—
     Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—
     Because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—
     Because I was not a Jew
.

Then they came for me—and there was no one left to speak for me.

மிக அருமையான ஒன்றை பதிந்தீர்கள் 
தமிழர்கள் இப்படித்தான் அழிக்க படுவார்கள் என்பது கடந்தகாலம் 
அழிக்க பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 

என்ன கொஞ்சம் வித்தியாசம் 
மதம் 
சாதி 
பிரதேசம் 
கட்சி 
என்று பிரித்து பிரித்து அடிப்பார்கள் 

உங்களுக்கு அடிவிழும்வரை இப்படித்தான் விசிலடித்துக்கொண்டு இருப்பீர்கள் 

2 hours ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

இதை சீமான் எங்கே வேண்டாம் என்கிறார்?
நீங்கள்தான் இப்போ புதுக்கதை பேசுகிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கன்றுகள் நடுதல் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி! தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெறிக்கவிடும் சீமானின் தங்கைகள்||நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை உயிரற்ற உடல்கள்... தலைவர் நினைந்திருந்தால் சிங்களத்தில் முக்கால் வாசி உயிர்களை காவு வாங்கியிருக்கலாம், தலைவரின் உயரிய நோக்கு, சிந்தனை & போர் தர்மம் , தார்மீகமாக போரிட்டார்

Link to comment
Share on other sites

உங்களிற்கு சீமானை பிடிக்குமா? எனக்கு இவர் நம்மளை வைத்து அரசியல் செய்கிறாரோ என்ற ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு உண்மையான விடயம்தெரியாமல் பேசுகிறீர்கள் 
அவர்கள் இங்கு வாழ்கிறார்களே தவிர தமிழர்களாக வாழவில்லை 
இப்போது 300 வீதம் ஒதுக்கீடு கேட்டு நிற்கிறார்கள்.

மிக அருமையான ஒன்றை பதிந்தீர்கள் 
தமிழர்கள் இப்படித்தான் அழிக்க படுவார்கள் என்பது கடந்தகாலம் 
அழிக்க பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 

என்ன கொஞ்சம் வித்தியாசம் 
மதம் 
சாதி 
பிரதேசம் 
கட்சி 
என்று பிரித்து பிரித்து அடிப்பார்கள் 

உங்களுக்கு அடிவிழும்வரை இப்படித்தான் விசிலடித்துக்கொண்டு இருப்பீர்கள் 

இதை சீமான் எங்கே வேண்டாம் என்கிறார்?
நீங்கள்தான் இப்போ புதுக்கதை பேசுகிறீர்கள் 

மருதர்,

வர வர நீங்கள் ஏன் இப்படி ஆகிறீர்கள்? ஒரு திரியில் பதிந்ததை - சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கே வந்து மீண்டும் பதிகிறீர்கள்?

திரிக்கு திரி காவுதல் கூடாது என்ற விதி மீறலை விடுங்கள், இது உங்களுகே சின்ன பிள்ளைதனமாக தெரியவில்லையா?

அந்த திரியில் கூட உங்கள் பதிவை பார்த்து விட்டு கடந்துதான் போனேன். அதை மறுபடியும் இங்கே பதிகிறீர்கள். 

சரி நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

தமிழ் மட்டுமே தெரிந்த இலட்சோப இலட்சம் தமிழர்களை, சாதியை மட்டும் வைத்து தரம் பிரித்து சீமான் செய்யும் அரசியலும் நீங்கள் சொன்னபடி தமிழரை கட்டம் கடி அடிக்கும் வகையில் ஒன்றுதான். 

2010 வரை தெலுங்கு வம்சா வழிக்கு இட ஒதுக்கீடு கேட்கபட்டதா? 

இல்லையே? ஏன்

சீமானும், தெலுங்கு சாதி சங்கங்களும் ஒரு கத்தரிகோலின் இரு கரங்கள். 

இவர் நீ தமிழன் இல்லை என்பார்.

உடனே அவர்கள் அப்போ எமக்கு ஒதுக்கீடு தா என்பார்கள்.

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

இருவரின் இலக்கும் 2/5 பங்கு தமிழகத்தவரை தமிழர் இல்லை என்றாக்கி தமிழர் விரோதிகளாக, தமிழ் தேசிய விரோதிகளக மாற்றுவது. 

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

உங்களிற்கு சீமானை பிடிக்குமா? எனக்கு இவர் நம்மளை வைத்து அரசியல் செய்கிறாரோ என்ற ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

நம்மால் கிடைப்பதை விட அதிகமாகவே கொடுத்து, இழுத்துக்கொள்ள, திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தயாராயுள்ள அளவுக்கு வளர்ந்து நிக்கிறார்.

1 hour ago, goshan_che said:

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

விடாத தலை அபூர்வமா ஒருத்தர் வந்து சிக்கிட்டார், வச்சு செய் தல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

இலங்கை தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரித்தது ஜேஆர் ஜெயவர்த்தனா. கூட்டணியில் இருந்து அஷ்ரபினை கழட்டி, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது அவர். அதிலிருந்து தான், தமிழ் பேசும் மக்கள், தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரிந்தார்கள். 

அதுவரை, இயக்ககங்களிலும் இஸலாமியர்கள் சேர்ந்து போரிட்டார்கள்.

இந்த வரலாறு இருக்கும் போது, எங்கிருந்து பொன்னம்பலம் செய்தார் அன்று அடித்து விடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

பாஸ் அமித்ஷா சீமானை ஒரு புறமாயும், தெலுங்கு சாதி சங்கங்களை ஒரு புறமாயும் இறக்கி தமிழகத்தில் வேற்றுமையை வளர்க்கிறார் - இப்படி வெளியில் எதிரெதிராக அடித்துக்கு கொள்ளும் இரு பகுதியை ஒரே பொது நோக்குக்காக மறைமுகமாக களமிறக்குவது எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை?

இதை கோசானுக்கு தெரியும் படி ஆதாரம் வச்சா அமித்ஷா செய்வார்.

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நானும் அடிச்சு விடலாம்.... கப்ஸாக்களை...

ஆதாரபூர்வமாக பேசுங்கள்.... சும்மா உங்கள் ஊகங்களை  அடித்து விடாதீர்கள் தல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இலங்கை தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரித்தது ஜேஆர் ஜெயவர்த்தனா. கூட்டணியில் இருந்து அஷ்ரபினை கழட்டி, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது அவர். அதிலிருந்து தான், தமிழ் பேசும் மக்கள், தமிழராயும், முஸ்லிம்களாயும் பிரிந்தார்கள். 

அதுவரை, இயக்ககங்களிலும் இஸலாமியர்கள் சேர்ந்து போரிட்டார்கள்.

இந்த வரலாறு இருக்கும் போது, எங்கிருந்து பொன்னம்பலம் செய்தார் அன்று அடித்து விடுகிறீர்கள்?

பாஸ் முஸ்லீம் காங்கிரஸ்சுக்கு முதல் அஷ்ரபே கூட்டணியில் இருந்தவர்தான்.

ஆனால் முஸ்லீம்களை தனி இனமாக முன்னிறுத்தும் முனைப்பு, தமிழ் தலைவர்கள் தமிழருக்கு மட்டுமே, வாழைச்சேனையில் காகித பக்டரிறி போட்டாலும் வேலை முழுக்க தமிழருக்கே கொடுத்தார்கள் என்ற வகை பிரச்சாரமும், பதிதீன் முகமதை வெல்ல வையுங்கள் அவர் முஸ்லீம் வேலைவாய்ப்பை பெருக்குவார் என்பது ஜே ஆருக்கு முன்பே தொடங்கி விட்டது.

5 minutes ago, Nathamuni said:

சும்மா போங்க பாஸ் காமெடி பண்ணாம. 

நானும் அடிச்சு விடலாம்.... கப்ஸாக்களை...

ஆதாரபூர்வமாக பேசுங்கள்.... சும்மா உங்கள் ஊகங்களை  அடித்து விடாதீர்கள் தல...

என்ன செய்றது பாஸ் உலகில் திரைமறைவு அரசியலே நடப்பதில்லை. எல்லாரும் மேடையில் ஏறி பேசுவதுதான் அவர்களின் உண்மையான அரசியல் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏதோ ஆஸ்பத்திரி போய் வந்துள்ளாராம்.

விரைவில் நலம் பெற வாழ்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

என்ன செய்றது பாஸ் உலகில் திரைமறைவு அரசியலே நடப்பதில்லை. எல்லாரும் மேடையில் ஏறி பேசுவதுதான் அவர்களின் உண்மையான அரசியல் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

தல,

பொன்னர் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, மலையகத்தமிழர் வாக்குரிமை பறிப்பு. இது மிகவும் மோசமானது தான். அந்த நேரத்தில் தம்மை கை விட்டு விட்டார் என்பது இன்றும் உள்ள குற்றசாட்டு.

வேறு வகையில், அவர் தமிழ் பேசும் மக்களிடையே பிரச்சனைகளை உண்டாக்கினார் என்பது நீங்கள் சொல்லும் புது கதை.

ஜேஆர் என்ற குள்ள நரி தான், கூட்டணி தலைமைத்துவத்தில் இருந்து, தொண்டாவை முதலில் கழட்டி அமைச்சர் பதவி கொடுத்தார்.

பின்னர் அஷ்ரபினை கூட்டணியில் இருந்து கழட்டி, முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்க வைத்து, தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், இஸ்லாமியராயும் பிரிந்து மேய்ந்தார். அஷ்ரப் கூட அமைச்சரானார்.

இன்று.... தமிழரை ஒரு வழி பார்த்த சிங்களம், இஸ்லாமியரை... ஒரு வழி பார்க்க முனைகிறது. 

நமக்காவது அந்த நேரத்தில் இங்கே ஓடி வரக்கூடியதாக இருந்தது. இஸ்லாமியருக்கு, இன்றய உலக ஒழுங்கில் அதுவும் இல்லை.

ஆகவே, மீண்டும், தமிழ் பேசும் மக்களாக இணைவதை தவிர, இரு பகுதிக்கும், வேறு வழியும் இல்லை.
 
சிங்கம்,

நமக்கு ஒரு விசயம் புது விசயம் என்பதால் அது நடக்கவில்லை என்பதல்ல. பொன்னம்பலம் காலத்தில் முஸ்லீம்களை வேணும் என்றே புறக்கணித்தார் - இவர்களை நம்பி பயனில்லை எமக்கு ஒரு அமைச்சர் தேவை என்ற பிராச்சாரம் முஸ்லீம்கள் மத்தியில் நடந்தது -அதற்கு பொன்னரின் நடவடிக்கையும் வலு சேர்த்தது.

அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது.

இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம். 

அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது.

இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம். 

அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.

தல,

நீங்கள் சொல்வது வாக்கு அரசியல். பொன்னரும், முஸ்லீம் அரசியல் வாதிகளும் செய்ததும் அதுவே.

பிரித்து ஆளும்.... சூழ்ச்சியினை ஆளும் வர்க்கம் செய்வதே ஆபத்தானது. அதுவே ஜேஆர் செய்தது.

அதுவே நான் சொல்வது.  

பிரிட்டிஷ்காரன் அதை செய்தான். ஆனால் அவன் ஆளுவது காரணமாகவே செய்தான் அன்றி ஒரு குறித்த சமூகத்துக்கு நலன் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், தமது நலன்களுக்காக செய்தான்.

அதனையே, ஆளும் வர்க்கம், தான் சார்ந்த மக்களுக்காக செய்யும் போது, நாடு நாசமாக்கிப் போகும். இலங்கையும் போனது. 

சரி நான் கிளம்பப்போறன்.... சந்திப்போம்.

Link to comment
Share on other sites

43 minutes ago, Nathamuni said:

எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது?

நம்மால் கிடைப்பதை விட அதிகமாகவே கொடுத்து, இழுத்துக்கொள்ள, திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தயாராயுள்ள அளவுக்கு வளர்ந்து நிக்கிறார்.

தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nige said:

உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

தல,

நீங்கள் சொல்வது வாக்கு அரசியல். பொன்னரும், முஸ்லீம் அரசியல் வாதிகளும் செய்ததும் அதுவே.

பிரித்து ஆளும்.... சூழ்ச்சியினை ஆளும் வர்க்கம் செய்வதே ஆபத்தானது. அதுவே ஜேஆர் செய்தது.

அதுவே நான் சொல்வது.  

பிரிட்டிஷ்காரன் அதை செய்தான். ஆனால் அவன் ஆளுவது காரணமாகவே செய்தான் அன்றி ஒரு குறித்த சமூகத்துக்கு நலன் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், தமது நலன்களுக்காக செய்தான்.

அதனையே, ஆளும் வர்க்கம், தான் சார்ந்த மக்களுக்காக செய்யும் போது, நாடு நாசமாக்கிப் போகும். இலங்கையும் போனது. 

சரி நான் கிளம்பப்போறன்.... சந்திப்போம்.

பாஸ் வாக்கு வங்கி அரசியலுக்கு மேலாக, தமிழர் தலைவர்களை நம்ப முடியாது என முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என தமிழர்களையும் எண்ண வைக்கும் உத்தி ஜே ஆருக்கு முதலே தொடங்கி விட்டது.

சரி ஜேஆர் காலத்தில் தொடங்கியதோ, அதற்கு முதல் தொடங்கியதோ இப்படி ஒரு மறைமுக அரசியலை இலங்கை கொள்கை வகுபாளர் செய்தனர் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்தானே?

1. இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை தானே?

2. இப்படி ஒரு மறைமுக அரசியல் நகர்வை அமித்ஷா சீமானை வைத்து செய்கிறார் எனும் என்னிடம் மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஆகா .... நீங்கள் இலங்கை பழைய அரசியலில் சொல்வதே, எனக்கு புது கதைகளாக இருக்கையில், பெரும் இந்திய தேசத்தின் அரசியலில் சொல்லும் கதைகள் நமபக்கூடிய வகையில் இல்லை.

சரி... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தானே. நீங்கள் சொன்ன மாதிரியே சீமான் நடந்தால்..... தல, அப்புறம் நீங்கள் தல இல்லை....

தெய்வம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மருதர்,

வர வர நீங்கள் ஏன் இப்படி ஆகிறீர்கள்? ஒரு திரியில் பதிந்ததை - சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கே வந்து மீண்டும் பதிகிறீர்கள்?

திரிக்கு திரி காவுதல் கூடாது என்ற விதி மீறலை விடுங்கள், இது உங்களுகே சின்ன பிள்ளைதனமாக தெரியவில்லையா?

அந்த திரியில் கூட உங்கள் பதிவை பார்த்து விட்டு கடந்துதான் போனேன். அதை மறுபடியும் இங்கே பதிகிறீர்கள். 

சரி நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

தமிழ் மட்டுமே தெரிந்த இலட்சோப இலட்சம் தமிழர்களை, சாதியை மட்டும் வைத்து தரம் பிரித்து சீமான் செய்யும் அரசியலும் நீங்கள் சொன்னபடி தமிழரை கட்டம் கடி அடிக்கும் வகையில் ஒன்றுதான். 

2010 வரை தெலுங்கு வம்சா வழிக்கு இட ஒதுக்கீடு கேட்கபட்டதா? 

இல்லையே? ஏன்

சீமானும், தெலுங்கு சாதி சங்கங்களும் ஒரு கத்தரிகோலின் இரு கரங்கள். 

இவர் நீ தமிழன் இல்லை என்பார்.

உடனே அவர்கள் அப்போ எமக்கு ஒதுக்கீடு தா என்பார்கள்.

இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான்.

இருவரின் இலக்கும் 2/5 பங்கு தமிழகத்தவரை தமிழர் இல்லை என்றாக்கி தமிழர் விரோதிகளாக, தமிழ் தேசிய விரோதிகளக மாற்றுவது. 

எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.

நீங்கள் எதோ ஒன்றை கற்பனையில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் 
நீங்கள் எந்த திரியை சொல்கிறீர்கள் என்பதே உண்மையில் எனக்கு தெரியவில்லை 

இங்கு சீமானை விலக்கி வைப்போம் 
அதை சீமான் பற்றிய திரியில் பேசுவோம் 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் நான் அதுக்கு எதிரிதான் 
சிலர் மேட்டுக்குடித்தனமாக சக கருத்தாளர்களை மறைமுகமாக தாக்கி 
எழுதுவதும் ஒரு மேட்டுக்குடி போன்ற நிலையை உருவாக்க முனைவதாலும் 
தான் எனது கருத்து அவ்வாறு எழுதினேன். அது தவிர நீங்கள் கூறும் எதுவும் என் மன நிலையில் இல்லை.

உங்களை ஏதும் தாக்கி எழுதுகிறேன் என்று எண்ணுகிறீர்களா என்று தெரியவில்லை?
ன்னான் எனது கருத்தை எழுதும்போது உங்கள் எண்ணமே எனக்கு இருக்கவில்லை. 

மற்றது புலிகள் மீது எதிர்க்கருத்து என்பது 
ஆதார அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு 
எழுந்த மாத்திரமாக எழுதுவதும் எதிர்க்கருத்து எழுதவேண்டி வருகிறது. 

ஆயுதப்போராட்டத்துக்கு அப்போதைய இளைஞர்களை தள்ளியது அமிர்தலிங்கம் போன்றவர்கள்தான் 
பின்னாளில் இளைஞர்கள் தமது உயிரையே கொடுத்து போராடி கொண்டிருக்கும்போது 
மில்லர் திலீபன் போன்றவர்கள் தெரிந்தும் சாவை அணைத்துக்கொண்டு எம் கண்முன்னே 
சாகும்போது உங்கள் இரத்தம் சக தமிழனாக எவ்வாறு துடித்திருக்கும்? 
அதே ஆயுத போராட்டத்துக்கு ஆப்புவைக்கவும் பதவி ஆசை சொத்து சுகம் தேடியும் 
அந்த இளைஞர்களின் உயிரை கூட மதிக்காது எதிரியுடன் கூடி விடுதலை போராட்டத்துக்கு 
வில்லங்கம் செய்து அவர்கள் மூலம் சாவை தேடி அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரை எதிர்க்கருத்து உடையவர்களை சுட்டார்கள் என்று உருவாக்கி கொடுத்தது அந்த இன துரோகிகள்தான். 
இந்த துரோகிகளை அழிக்கவே எத்தனை உயிர்களை கொடுக்க வேண்டி இருந்தது?

நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை ஒரு புலிபோல கற்பனை செய்து என்றாலும் பார்த்ததுண்டா?
அவர்கள் இரவு பகல் வாழ்க்கையை பற்றி உணர்ந்ததுண்டா? 
அவ்வாறான ஒரு சூழலில் சும்மா வெறும்பழி மட்டும் எழுதும் அருவெறுப்புக்களை வெறுக்கிறேன் 
அதனால் இவற்றை எத்தனை திரி திறந்தாலும் .. அப்படியான வார்த்தைகள் வரும்போது 
எழுதியே ஆகவேண்டும். 

யாழ்களத்தின் துர்ரதிஸ்ட்ம் போல அப்ப அப்ப ஒரு பச்சோந்தி வந்து வந்து போகிறது 
நான் முன்பு ஒருநாள் திண்ணையில் உங்களுக்கு சொன்னதுபோல கடந்த வருடம் எல்ல்லோரும் சுமுகமாக இருந்தோம்  இப்போ மீண்டும் தனிமனித தாக்குதல் சக கருத்தாளரை அருவெறுக்க தக்க முறையில் அவமதித்து  எழுதுவது என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நிற்கிறோம் ஒரே ஒருவரின் வருகையால். 

(சீமான் பற்றிய எந்த கேள்விக்கும் பதில் எழுதவில்லை அதை சீமானின் திரியில் பாப்போம்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

சரி மருதர். கடந்து போவோம் 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nige said:

இது என் தனிப்பட்ட கருத்து. அதை நான் குறிப்பிட்டும் இருந்தேன்.இதை நீங்கள் எற்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதான பார்வை வேறுபடலாம். அவர்கள் வாழ்ந்த சூழலும் அனுபவித்த வலிகளும் இதற்கான காரணமாக கூட இருக்கலாம். அரசியல் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. சாதாரண ஒரு பாமரனாய் இது என் கருத்து..

சீமான் தனிய ஈழ அரசியலுடன் மட்டும் நிற்கவில்லையே? தமிழ்நாட்டு அரசியலைத்தானே அதிகம் முன்னிறுத்துகின்றார்.
அது சரி தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகள் ஈழப்பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது வராத கேள்வி ஏன் சீமான் மீது வருகின்றது?
விஜயகாந்த்  இன்னும் கூடுதலாக மேடைப்பேச்சுக்களில் ஈழப்பிரச்சனை பற்றி கதைத்திருக்கின்றார் அல்லவா அப்போது வராத கேள்வி???????? 

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.

பல விடயங்களிற்கு காரணம் இருப்பதில்லை. சிலரை பிடிப்பதற்கும் அல்லது பிடிக்காமல் போவதற்கும் பல நேரங்களில் காரணமே இருப்பதில்லை. நாம் கடந்து வந்த பாதையும் அது  தந்த கசப்பான அனுபவங்களும் , வலிகளும், ஏனோ அரசியல் வாதிகள் மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்பதோ அல்லது உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையோ இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.