• Similar Content

  • By இசைக்கலைஞன்
   சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
    
    
  • By இசைக்கலைஞன்
   5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்
   கே.கே.மகேஷ்
   Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.
   எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?
   நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.
   ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?
   சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?
   திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?
   எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.
   அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?
   சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?
   மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?
   கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!
   http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece#comments
  • By இசைக்கலைஞன்
   சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு
   2017-01-0800:04:59

   சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

   மறைந்த ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது வளர்மதி சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். 2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா மறைந்ததையடுத்து, சசிகலாவின் தீவிர ஆதரவாளராக வளர்மதி செயல்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் வளர்மதி அளித்த பேட்டியில் கூட, “ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு சசிகலாதான் காரணம்” என்று கூறினார். அந்த அளவுக்கு சசிகலாவின் ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டார்.

   சசிகலாவும் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை தன் பக்கம் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுக் கொண்டபிறகு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவருக்கு முதல் முதலாக பெரிய அளவிலான பதவி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒரு அமைச்சருக்கு உள்ள அந்தஸ்து வளர்மதிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
   http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270960
   **கல்வி வளம்பெற சிறப்பான முடிவு** 
  • By இசைக்கலைஞன்
   இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயிலில் பார்வையாளராகப் பயணித்த மு.க. ஸ்டாலின் பயணி ஒருவரை "செல்லமாக" அறைந்த விடயம் யாவரும் அறிந்ததே.
    
   ஆனால் அன்று அறை வாங்கியவர் பின்பு இவ்வாறு மாற்றிப் பேசுகிறார்.
    
  • By இசைக்கலைஞன்
   1) மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற திருச்சி மாநாட்டுக்குப் பின்னர், சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி தந்தி தொலைக்காட்சிக்காக.
   * மாற்று அரசியல் புரட்சி என்பது என்ன?
   * சகிப்புத் தன்மை கொண்டவன் காலப்போக்கில் அடிமையாகிறான்.
   * சாதி மதப் பிளவுகளைக் கடந்து தமிழர் என்கிற வட்டத்துக்குள் மக்களை இணைத்துவிடமுடியுமா?
   * தமிழர் என்று யாரையெல்லாம் வரைய்றை செய்யலாம்?
   * தகப்பனையும், தலைவனையும் (கருணாநிதி, ஜெயா) இன்னொரு இனத்தில் இருந்து கடன் வாங்க முடியாது.
   * மாற்று இனத்தாருக்கு தமிழகத்தில் சேவை செய்யும் உரிமை மட்டுமே உண்டு. ஆளும் உரிமை அவர்களுக்கு இல்லை.
   * மாற்று இனத்தவர்கள் தமிழர் அரசியலோடு இணைந்து பயணப்பட வேண்டியவர்கள்.
   * இந்து, கிறீஸ்தவம், இஸ்லாம் எல்லாமுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங்கள்.
   * எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது; எனது வலி புரியாதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது.
   * தாய்மொழியில் பெயரைக்கூட தாங்காத இனம் எப்படி வாழும்?
   * மாற்று அரசியல் கட்சியாக உருவாகி வர இருந்த வாய்ப்புகளை தவறவிட்டவர் அண்ணன் வைகோ அவர்கள்.
   * கலைஞர் ஒரு தமிழரா? கலைஞரை நாங்கள் தெலுங்கர் என்று சொல்லவில்லை. ஆந்திராக்காரர்களே சொல்கிறார்கள்.
   *
   (தொடரும்)
   2) கும்மிடிப்பூண்டியில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தில்..
   * லஞ்சம் ஊழலற்ற அரசு 2016 இல் அமைய வேண்டும்.
   * கல்வி, மருத்துவம், சாலை வசதி, சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வசதி அனைவருக்கும் இலவசம். ஏனைய இலவசங்கள் ஒழிக்கப்படும்.
    
    
   (தொடரும்.)