• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

2 hours ago, goshan_che said:

தான் அப்படி கேட்கவே இல்லை என்கிறாரே?

கேள்வி கேட்பவர் மணிசெந்தில் என்பவர். கவிதை எழுதுபவர். சீமானுக்கு மிக நெருக்கமானவர். அடிதடி பேர்வழி கிடையாது. கூட்டத்தை பார்த்ததும் ‘ஆமாம் அப்பிடித்தான் சொன்னேன்’ என்றா சொல்வார் மார்வாடி?! 🤔 

தமிழகத்தின் நிலை உண்மையில் படு மோசம். தமிழ் மக்கள் அந்த நிலத்தை  விட்டு அகலும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, goshan_che said:

தமிழ்தேசிய அரசியல், தமிழ் அடையாளம் இவற்றில் எனக்கு ஒரு முரணும் இல்லை. ஆனால் பிழைப்பு தேடி வந்தவர்களை இம்சித்துத்தான் இவை அடையப்படும் என நான் நினைக்கவில்லை. அப்படித்தான் அடையவேண்டும் என்றால் எனக்குத் தேவையும் இல்லை.

மன்னிக்கவும் சே,

உங்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

எல்லாவற்றையும் பேரன்புடன், அமைதியாக , வரவேற்கும் சைவ தமிழர் பண்புதான் எங்களின் அழிவிற்கு காரணமென நான் நம்புகிறேன். 

சைவ சமயம் தனது சுயத்தை இழந்து நலிவுறுவதற்கான காரணமும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கின்ற சகலவற்றிலும் நன்மையை காணும் பண்புதான்.

எல்லா இனங்களும் எல்லா சமயங்களும் ஒரே  சமன்பாட்டை , ஒரே கொள்கையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப் படுத்தினால் உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ளலாம் . இல்லாவிடின் தொடர்ச்சியாக இழப்பை நாம்தான் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, இசைக்கலைஞன் said:

கேள்வி கேட்பவர் மணிசெந்தில் என்பவர். கவிதை எழுதுபவர். சீமானுக்கு மிக நெருக்கமானவர். அடிதடி பேர்வழி கிடையாது. கூட்டத்தை பார்த்ததும் ‘ஆமாம் அப்பிடித்தான் சொன்னேன்’ என்றா சொல்வார் மார்வாடி?! 🤔 

தமிழகத்தின் நிலை உண்மையில் படு மோசம். தமிழ் மக்கள் அந்த நிலத்தை  விட்டு அகலும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

கொஞ்சம் ஒரு கற்பனை இசை.

கனடாவில் நீங்கள் ஒரு வியாபாரம் நடத்துகிறீர்கள். ஒரு வெள்ளையின பெண்ணும் சிறுமியான மகளும் வருகிறார்கள் உங்கள் கடைக்கு. உங்கள் நிரந்த வாடிக்கையாளர்கள்தான். ஏற்கனவே இவர்களுக்கு நீங்கள் கடனுக்கு 100 டாலர் மட்டில் பொருட்கள் வித்துள்ளீர்கள். இன்னும் ஒரு 20 டாலர் பெறுமதியான பொருட்களை கடனில் கேட்க நீங்கள் இல்லை என மறுக்கிறீகள்.

அவர் வெளியே போய் ஒரு கூட்டம் skinheads கூட்டிவர, அவர்கள் உங்களை சுற்றிவளைத்து, இவர் ஒரு வெள்ளைகார சிறுமி மீது கைவைத்தார் என அபாண்டமாக பழிபோடுகிறார்கள் என வைப்போம். வீடியோவும் எடுக்கிறார்கள்.

அப்போ நீங்கள் இல்லை என மறுக்கிறீகள். இது அபாண்டம் என்கிறீகள்.

அதே வீடியோவை நீங்கள் ஒரு கருத்தாளராக பார்க்க நேரும் போது என்ன எழுதுவீர்கள்?

கூட்டத்தை பார்த்ததும் ‘ஆமாம் அப்பிடித்தான் செய்தேன்’ என்றா சொல்வார் 

என்றா எழுதுவீர்கள்? 

நியாயத்தை நீங்கள் அணுகும் முறை மிகவும் விசித்திரமாக உள்ளது. குற்றம் சுமத்துபவர்தான் ஆதாரத்தை காட்ட வேண்டும். “கூட்டத்தில் யார்தான் குற்றத்தை ஓப்புக்கொள்வான்” என்ற ரீதியில் அணுகினால், குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் தேவையில்லை. கூட்டத்தை கூட்டி அபாண்டமாக குற்றம் சொன்னாலே போதும் என்றல்லவா ஆகிவிடும்.

ரவுடிக் கும்பலின் தலைவர் கவிதை எழுதுபவர் என்பதெல்லாம் தேவையற்ற பேச்சு. ஹிட்லரிடம் இல்லாத அழகியல் உணர்சியா? பாசிஸிட்டுகளும் மனிதர்கள்தானே, அவர்களுக்கும் கவிதை, இன்பியல் எல்லாமும் வரும்.

மிகவும் கெளரவமான, சாமன்யமாக தென்பட்ட எத்தனை பேரை நாஜிசம் பாசிஸ்டாக மாற்றியது என்பதை கண்டால், ஒரு கவிஞர் ஏன் கட்டை பஞ்சாயத்து ரவுடியானார் என்பதை விளங்க கஸ்டமாய் இராது.

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, Kapithan said:

மன்னிக்கவும் சே,

உங்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

எல்லாவற்றையும் பேரன்புடன், அமைதியாக , வரவேற்கும் சைவ தமிழர் பண்புதான் எங்களின் அழிவிற்கு காரணமென நான் நம்புகிறேன். 

சைவ சமயம் தனது சுயத்தை இழந்து நலிவுறுவதற்கான காரணமும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கின்ற சகலவற்றிலும் நன்மையை காணும் பண்புதான்.

எல்லா இனங்களும் எல்லா சமயங்களும் ஒரே  சமன்பாட்டை , ஒரே கொள்கையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப் படுத்தினால் உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ளலாம் . இல்லாவிடின் தொடர்ச்சியாக இழப்பை நாம்தான் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

இதில் காயப்பட ஏதுமில்லை கப்பித்தான்.

சைவ சமயம் எமது மதமே இல்லை என்பதுடன் யாதும் ஊரே என்று சொன்ன பூங்குன்றனார் ஒரு சைவன் என்பதற்கும் ஒரு ஆதாரமுமில்லை.

சைவசமயம் பல இன, மத அழிப்புகளை செய்தே உள்ளது. சங்கிலியன் மன்னாரில் வெட்டிச் சாய்த்த 600 தமிழ் கிறீஸ்தவர்கள் உட்பட.

தமிழர்கள் தேசியம் இழந்து போனதற்கு காரணம் - நாமும், எமது இறையியலும், எமது மன்னர்களும் பிராமணியதிடம் வீழ்ந்ததே. 

அடுத்தது நமது ஒற்றுமையீனம் - 1300 களில் மீளெளுச்சி பெற்ற பாண்டியப் பேரரசு, சகோதரகள் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மோதிக்கொள்வதால் வீழ, சுந்தரபாண்டியன் சார்பாக தலையிட்ட டெல்லி சுல்தான் வசமாகிறது மதுரை.

பின்னர் ரவிவர்மன் ஒரு தடவை முழுத்தமிழ் நாட்டையும் சேர முடியின் கீழ் கொணர்ந்த போதும் அடுத்து வந்த விஜய நகரப் படை எடுப்பில் நாயக்கர் வசமகிறது தமிழ்நாடு.

பின்னர் மராட்டியர் நாயக்கரை வீழ்த்த சில பகுதிகள் அவர்கள் வசமாகிறது. முடிவில் எல்லாருக்கும் ஆங்கிலேயர் ஆப்படிக்கிறார்கள். 

இதில் எமது நல்ல மனத்தால் நாம் தோற்ற இடங்கள் எவை? ஏதுமில்லை.

இப்படி நாம் இழந்த தேசியத்தை மீட்கவேண்டும் என்றாலும் அதை 1300 இல் இருந்த நிலைக்கு மீட்க முடியாது. 700 வருடங்களாக தமிழ்நாட்டில் வாழ்பவர்களை, தமிழனாகவே ஆகிவிட்டவர்களை போய் நீ தமிழன் இல்லை, எனக்கு மட்டுமே ஆளும் உரிமை உள்ளது என சொல்ல முடியாது. 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

நியாயத்தை நீங்கள் அணுகும் முறை மிகவும் விசித்திரமாக உள்ளது. குற்றம் சுமத்துபவர்தான் ஆதாரத்தை காட்ட வேண்டும். “கூட்டத்தில் யார்தான் குற்றத்தை ஓப்புக்கொள்வான்” என்ற ரீதியில் அணுகினால், குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் தேவையில்லை. கூட்டத்தை கூட்டி அபாண்டமாக குற்றம் சொன்னாலே போதும் என்றல்லவா ஆகிவிடும்

கோசான் தமிழ்நாடென்றபடியால் கேட்டுப் போட்டாவது விட்டார்கள்.வேறு மாநிலத்தில் இப்படி ஒரு தமிழனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்.

கொஞ்சகாலம் முதல் கர்னாடகத்தில் வயது வேறுபாடின்றி தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக அடித்து துவைத்தெடுத்த காணொளிகளை நீங்கள் பார்க்கவில்லையா?ரொம்ப வேதனையாகவும் தமிழ்நாட்டு தமிழர் மேல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று எரிச்சலாகவும் இருந்தது.

எனவே இந்தளவில் முடிந்ததையிட்டு சந்தோசப்படுவோம்.

நீங்கள் மேலே கூறியவை எல்லாமே சரி.ஆனால் மற்றைய மாநிலங்களில் தமிழர்களை பாடாய் படுத்துகிறார்களே?

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

கோசன்.. சட்டம் இயங்கும் இடத்தையும் (கனடா) சட்டம் இயங்காத இடத்தினையும் (இந்தியா) ஒப்பீடு செய்கிறீர்கள்..! அது சரியல்ல!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தமிழகத்தின் இன்றைய நிலை!!

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழகத்தின் இன்றைய நிலை!!

இதிலுள்ல உண்மையும் அதன் பின்னாலுள்ள பேராபத்தயும் எத்தனைபேர் புரிந்துகொள்கின்றனர் ?

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

இதில் காயப்பட ஏதுமில்லை கப்பித்தான்.

சைவ சமயம் எமது மதமே இல்லை என்பதுடன் யாதும் ஊரே என்று சொன்ன பூங்குன்றனார் ஒரு சைவன் என்பதற்கும் ஒரு ஆதாரமுமில்லை.

சைவசமயம் பல இன, மத அழிப்புகளை செய்தே உள்ளது. சங்கிலியன் மன்னாரில் வெட்டிச் சாய்த்த 600 தமிழ் கிறீஸ்தவர்கள் உட்பட.

தமிழர்கள் தேசியம் இழந்து போனதற்கு காரணம் - நாமும், எமது இறையியலும், எமது மன்னர்களும் பிராமணியதிடம் வீழ்ந்ததே. 

அடுத்தது நமது ஒற்றுமையீனம் - 1300 களில் மீளெளுச்சி பெற்ற பாண்டியப் பேரரசு, சகோதரகள் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மோதிக்கொள்வதால் வீழ, சுந்தரபாண்டியன் சார்பாக தலையிட்ட டெல்லி சுல்தான் வசமாகிறது மதுரை.

பின்னர் ரவிவர்மன் ஒரு தடவை முழுத்தமிழ் நாட்டையும் சேர முடியின் கீழ் கொணர்ந்த போதும் அடுத்து வந்த விஜய நகரப் படை எடுப்பில் நாயக்கர் வசமகிறது தமிழ்நாடு.

பின்னர் மராட்டியர் நாயக்கரை வீழ்த்த சில பகுதிகள் அவர்கள் வசமாகிறது. முடிவில் எல்லாருக்கும் ஆங்கிலேயர் ஆப்படிக்கிறார்கள். 

இதில் எமது நல்ல மனத்தால் நாம் தோற்ற இடங்கள் எவை? ஏதுமில்லை.

இப்படி நாம் இழந்த தேசியத்தை மீட்கவேண்டும் என்றாலும் அதை 1300 இல் இருந்த நிலைக்கு மீட்க முடியாது. 700 வருடங்களாக தமிழ்நாட்டில் வாழ்பவர்களை, தமிழனாகவே ஆகிவிட்டவர்களை போய் நீ தமிழன் இல்லை, எனக்கு மட்டுமே ஆளும் உரிமை உள்ளது என சொல்ல முடியாது. 

சே,

நான் கூறியது எமது பண்பாடு , கலை , கலாச்சாரம் தொடர்பாக. வரலாற்றிற்கு முந்திய காலம் தொடர்பாக நான் கூறவில்லை. 

ஆயிரம் வருடங்கள் கேரளாவில் வாழ்ந்த காரணத்திற்காக தன்னை மலையாளத்தானாக அடையாளப்படுத்தாத அல்லது தன்னை தமிழனாக அடையாளப்படுத்தும் ஒருவரை கேரளா ஏற்றுக்கொள்ளுமா அல்லது ஏற்றுக்கொள்ளல்  தகுமா ?

வெள்ளையனே வெளியேறு என்ற வாக்கியம் தவறு என்கிறீர்களா ?

Share this post

Link to post
Share on other sites

நாம் தமிழர் அரசியல் என்பது எந்த தனிப்பட்ட நபருக்கோ, அல்லது இனத்துக்கோ எதிரான அரசியல் அல்ல!

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, ஈழப்பிரியன் said:

கோசான் தமிழ்நாடென்றபடியால் கேட்டுப் போட்டாவது விட்டார்கள்.வேறு மாநிலத்தில் இப்படி ஒரு தமிழனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்.

கொஞ்சகாலம் முதல் கர்னாடகத்தில் வயது வேறுபாடின்றி தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக அடித்து துவைத்தெடுத்த காணொளிகளை நீங்கள் பார்க்கவில்லையா?ரொம்ப வேதனையாகவும் தமிழ்நாட்டு தமிழர் மேல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று எரிச்சலாகவும் இருந்தது.

எனவே இந்தளவில் முடிந்ததையிட்டு சந்தோசப்படுவோம்.

நீங்கள் மேலே கூறியவை எல்லாமே சரி.ஆனால் மற்றைய மாநிலங்களில் தமிழர்களை பாடாய் படுத்துகிறார்களே?

ஐயா,

நீங்கள் அந்த ஒரு வயசாளி லொறி டிரைவரை கர்நாடகாவில் அடித்ததை கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். இப்படி பலதடவைகள் மகாராஸ்டிராவிலும், கேரளாவிலும் நடந்தே உள்ளது.

அவர்கள் அப்படிச் செய்தபடியால் நாங்களும் அப்படிச் செய்வதே சரி என்கிறீர்களா?

அப்போ அந்த தனி மனிதனின் உரிமைக்கு, நியாயத்துக்கு மதிப்பே இல்லை. அவர் குற்றமற்றவர் எனத் தெரிந்தாலும், வெளி மாநிலங்களில் தமிழர்கள் இம்சிக்க பட்டதற்கும் இவருக்கும் அணுவளவும் சம்பந்தமே இல்லாதவிடத்தும் - வெளி மாநிலத்தான் என்ற ஒரு அடையாளம் போதும், இவரை இம்சிக்க.

மேலே குறிக்கப் பட்டதுக்கும், யூதர் மீதான வன்முறைக்கு ஹிட்லர் சொன்ன விளக்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையே?

இதுதானே பாசிச-இனவாதத்தின் வரைவிலக்கணம் ? பிறகு ஏன் நாம் தமிழர் பாசிஸ்டுகள், இனவாதிகள் இல்லை என வாதிடுகிறீகள்?

சிவசேனாவும், வாட்டாள் நாகராஜும் பாசிஸ்ட். அதுபோல சீமானும் என்று ஒத்துகொள்ள வேண்டியதுதானே?

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, இசைக்கலைஞன் said:

கோசன்.. சட்டம் இயங்கும் இடத்தையும் (கனடா) சட்டம் இயங்காத இடத்தினையும் (இந்தியா) ஒப்பீடு செய்கிறீர்கள்..! அது சரியல்ல!

சட்டம் இயங்குகிறதா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. 

ஒருவர் மீது கூட்டமாய் போய் குற்றம் சொன்னால்- அவர் அந்த குற்றத்தை மறுதலித்தால் - “யார்தான் செய்த குற்றத்தை ஓப்புக் கொள்வார்கள்” என்று தண்டனை வழங்குவது சரியா இல்லையா என்பதே கேள்வி.

இந்த கும்பலுக்கு தலைமை தாங்கிய அந்த நபர் - நியாயமா விசாரித்திருக்கலாமே? “இந்தாம்மா அவர் அப்படிச் சொல்லவே இல்லை என்கிறாரே, அதற்கு உன் பதில் என்ன?” என ஒரு தரம் கூடக் கேட்கவில்லையே?

குற்றம் சாட்டியவர்கள் நாம்தமிழர், குற்றம் விசாரிப்பவர் நாம் தமிழர், சூழ நின்று மிரட்டுபவர் நாம் தமிழர்.

இதைத்தான் ரவுடி ராஜ்யம் (குண்டா ராஜ்) என்பார்கள்.

நல்லவேளையாக உங்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக இல்லை.

9 hours ago, Kapithan said:

சே,

நான் கூறியது எமது பண்பாடு , கலை , கலாச்சாரம் தொடர்பாக. வரலாற்றிற்கு முந்திய காலம் தொடர்பாக நான் கூறவில்லை. 

ஆயிரம் வருடங்கள் கேரளாவில் வாழ்ந்த காரணத்திற்காக தன்னை மலையாளத்தானாக அடையாளப்படுத்தாத அல்லது தன்னை தமிழனாக அடையாளப்படுத்தும் ஒருவரை கேரளா ஏற்றுக்கொள்ளுமா அல்லது ஏற்றுக்கொள்ளல்  தகுமா ?

வெள்ளையனே வெளியேறு என்ற வாக்கியம் தவறு என்கிறீர்களா ?

700 வருடங்கள் என்பது வரலாற்றுக்கு முந்திய காலமல்ல. 

1000 வருடங்களுக்கு முன்னர் மலையாளிகள் எல்லாருமே தமிழர்தான்.

நிரந்தரமாக குடியேறாமல் ( பெரும்பாலான வெள்ளையர் வேலை முடிந்ததும் நாடு திரும்பினர்) 4000 அதிகாரிகளை வைத்து 40 கோடி மக்களை கட்டி ஆண்ட வெள்ளையின அதிகார வர்க்கத்தை வெளியேறு என சொல்வதற்கும், 700 ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டில் வாழும் சாமன்ய மக்களை வெளியேறு என்பதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லையா?

Share this post

Link to post
Share on other sites

தவிரவும் “வெள்ளயனே வெளியேறு” என்பது பிழையான மொழிபெயர்ப்பு. வெள்ளையினத்தவரை வெளியேறும் படி யாரும் கேட்கவில்லை, பிரிடிஸ் அதிகாரிகளைத்தான் “quit India” என்றார்கள்.

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, goshan_che said:

தமிழகத்தில் நாம் தமிழர் செய்யும் அரசியலின் காபன் கொப்பியை இலங்கையின் அம்பேபிட்டி சுமண தேரர் செய்யுள் காணொளி. தமிழனால் மிரட்டப்படும் மார்வாடி. சிங்களவனால் மிரட்டபடும் தமிழன். என்பதை தவிர இரண்டு காணொளிகளுக்குமிடையே ஒரு வேறுபாடுமில்லை.

👍

13 hours ago, goshan_che said:

சைவ சமயம் எமது மதமே இல்லை என்பதுடன் யாதும் ஊரே என்று சொன்ன பூங்குன்றனார் ஒரு சைவன் என்பதற்கும் ஒரு ஆதாரமுமில்லை.

சைவசமயம் பல இன, மத அழிப்புகளை செய்தே உள்ளது. சங்கிலியன் மன்னாரில் வெட்டிச் சாய்த்த 600 தமிழ் கிறீஸ்தவர்கள் உட்பட.

👍

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

நீங்கள் அந்த ஒரு வயசாளி லொறி டிரைவரை கர்நாடகாவில் அடித்ததை கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். இப்படி பலதடவைகள் மகாராஸ்டிராவிலும், கேரளாவிலும் நடந்தே உள்ளது.

அவர்கள் அப்படிச் செய்தபடியால் நாங்களும் அப்படிச் செய்வதே சரி என்கிறீர்களா?

கோசான் அந்த சம்பவம் சரி என்று வாதாடவில்லை.மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இது பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

இலங்கைத் தமிழன் நிலைக்கு தமிழ்நாட்டு தமிழரும் வந்துவிடுவார்களோ என்று ஒரு பயமாகவும் இருக்கிறது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, goshan_che said:

தவிரவும் “வெள்ளயனே வெளியேறு” என்பது பிழையான மொழிபெயர்ப்பு. வெள்ளையினத்தவரை வெளியேறும் படி யாரும் கேட்கவில்லை, பிரிடிஸ் அதிகாரிகளைத்தான் “quit India” என்றார்கள்.

உங்கள் வாதம் பல நூறு ஆண்டுகள் தமிழகத்தில் பிற இனத்தவர் குடியிருக்கிறார்கள் என்பது. 

நான்கூறியது 300வ வருடங்கள் இந்தியாவை ஆண்ட வெள்ளையரை ஏன் விரட்டினீர்கள்  ?அவர்களை அப்படியே ஆள விட்டிருக்கலாமே என்று.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, goshan_che said:

சட்டம் இயங்குகிறதா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. 

ஒருவர் மீது கூட்டமாய் போய் குற்றம் சொன்னால்- அவர் அந்த குற்றத்தை மறுதலித்தால் - “யார்தான் செய்த குற்றத்தை ஓப்புக் கொள்வார்கள்” என்று தண்டனை வழங்குவது சரியா இல்லையா என்பதே கேள்வி.

இந்த கும்பலுக்கு தலைமை தாங்கிய அந்த நபர் - நியாயமா விசாரித்திருக்கலாமே? “இந்தாம்மா அவர் அப்படிச் சொல்லவே இல்லை என்கிறாரே, அதற்கு உன் பதில் என்ன?” என ஒரு தரம் கூடக் கேட்கவில்லையே?

குற்றம் சாட்டியவர்கள் நாம்தமிழர், குற்றம் விசாரிப்பவர் நாம் தமிழர், சூழ நின்று மிரட்டுபவர் நாம் தமிழர்.

இதைத்தான் ரவுடி ராஜ்யம் (குண்டா ராஜ்) என்பார்கள்.

நல்லவேளையாக உங்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக இல்லை.

700 வருடங்கள் என்பது வரலாற்றுக்கு முந்திய காலமல்ல. 

1000 வருடங்களுக்கு முன்னர் மலையாளிகள் எல்லாருமே தமிழர்தான்.

நிரந்தரமாக குடியேறாமல் ( பெரும்பாலான வெள்ளையர் வேலை முடிந்ததும் நாடு திரும்பினர்) 4000 அதிகாரிகளை வைத்து 40 கோடி மக்களை கட்டி ஆண்ட வெள்ளையின அதிகார வர்க்கத்தை வெளியேறு என சொல்வதற்கும், 700 ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டில் வாழும் சாமன்ய மக்களை வெளியேறு என்பதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லையா?

தமிழகத்தைவிட்டு பிறரை வெளியேறும்படி யார் கூறினார்கள் ?

நான் தொடர்ச்சியாக அவதானித்ததில்

தமிழன் மட்டுமே அன்பு காட்ட வேண்டும்

தமிழன் மட்டுமே சட்டத்தை மதிக்கவேண்டும்

தமிழன் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டும்

தமிழன் மட்டுமே உலகிலுள்ள மனிதாபிமான சட்டங்கள் எல்லாவற்றையும் பின்பற்ற வேண்டும் என கூறுகிறீர்களே 

அது ஏன் ?

சட்டங்கள் எல்லாம் சகல உயிர்களுக்கும் பொத்வானதாகவல்லோ இருக்க வேண்டும் ?

உண்மையில் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறதென்று உங்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்துக்கொள்ள விரும்பவில்லயா ?

{அதெப்படி நான், நாம் தமிழர் அரசியல் இயக்கத்தை சேர்ந்தவன் என முடிவே எடுத்துவிட்டீர்கள். மூக்குச் சாத்திரம் பார்ப்பீர்களோ ?😀}

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kapithan said:

உங்கள் வாதம் பல நூறு ஆண்டுகள் தமிழகத்தில் பிற இனத்தவர் குடியிருக்கிறார்கள் என்பது. 

நான்கூறியது 300வ வருடங்கள் இந்தியாவை ஆண்ட வெள்ளையரை ஏன் விரட்டினீர்கள்  ?அவர்களை அப்படியே ஆள விட்டிருக்கலாமே என்று.

2 hours ago, Kapithan said:

உங்கள் வாதம் பல நூறு ஆண்டுகள் தமிழகத்தில் பிற இனத்தவர் குடியிருக்கிறார்கள் என்பது. 

நான்கூறியது 300வ வருடங்கள் இந்தியாவை ஆண்ட வெள்ளையரை ஏன் விரட்டினீர்கள்  ?அவர்களை அப்படியே ஆள விட்டிருக்கலாமே என்று.

1. 300 ஆண்டுகளாய் இந்தியாவில் வெள்ளளையார்கள் குடியேறவில்லை. வேலைக்கு வந்தார்கள், இருக்கும் மட்டும் ஜாலி பண்ணினார்கள்- தம் வசதிகேற்ப்ப சிம்லா, ஊட்டி போன்ற வாசஸ்தலங்களை அமைத்தார்கள் - ஓய்வு பெற்றதும் நாடு திரும்பி விட்டார்கள். ஆன்மீக நாட்டம் ஏற்பட்ட மிகச் சொற்பமானவர்களே தங்கினார்கள். இவர்களை 700 ஆண்டுகளுக்கு முன் வந்து பரம்பரை, பரம்பரையா தமிழ் மண்ணில் வாழ்ந்த மக்கட் கூட்டத்தோடு ஓப்பிட முடியாது. நாயக்கர்கள், முதலியார், செட்டியார், போல, ஸ்மித்தும், ஓ சலைவனும், ஜோன்சனும் இந்தியாவில் குடும்பம், குடும்பமாக வாழ்கிறார்களா என்ன?

 இவ்வளவு ஏன் 300 வருடங்களிற்கு முன் வந்து காணியை அபகரித்து குடியேறிய வெள்ளியினத்தவரைக்கூட மண்டேலா வெளியேறுமாறு கோரவில்லை. காணிகளை கூடப் பறிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை கூட ஜனநாயக வழியில் யார் வென்றாலும் சரி என்றே ஆக்கினார்.

தமிழ்நாட்டில் இந்த மக்களை வெளியேற்றுவது, அல்லது ஆளத்தகுதியற்றவர் ஆக்குவது - தென்னாபிரிகாவில் இருந்து வெள்ளையினத்தவரை வெளிஏற்றுவதற்கு சமன்.

2. உங்களை நான் நாம்தமிழரின் ஆள் என மூக்குச்சாத்திரம் பார்க்கவில்லை. நீங்கள்தான் இசையர்க்கு எறிந்த தொப்பியை பாய்ந்து விழுந்து போட்டுக் கொண்டுள்ளிர்கள் 😂

3. மனிதாபிமானம் எல்லா உயிர்க்கும் பொதுவானதே. தமிழர் மட்டும் கடைப்பிடியுங்கள் என்று நான் சொல்லவுமில்லை. ஆங்கிலேயர்களும், கண்டேடியரும், அமெரிக்கரும், ஐரோப்பியரும் சிங்களவர்கள், கன்னடர் போலவா இருக்கிறார்கள்? உலகில் பல இனக்குடிகள் மனிதாபிமான அடிப்படியிலேயே வாழ்கிறன. 

4. நாங்கள் தமிழர் விடயங்களை அலசுவதால், ஏதோ இந்த எதிர்பார்ப்புகள் தமிழரிற்கு மட்டுமே என்பதாக தெரிகிறது. நிச்சயமாக சண்டிகார்.கொம்மில் ஒரு கோசான் சிங்கும், மும்பாய்.கொம்மில் ஒரு கோசான்கரும், கொல்கொத்தா.கொம்மில் ஒரு கோசான் பனர்ஜியும் இப்படி எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் ஹிட்லரின் நாஜி யுகத்தில் கூட, ஜேர்மனியில் இப்படி எழுதியவர்கள் இருந்தார்கள்.

இது என்ன திரிப்பு  என்று எனக்கு புரியவில்லை 
தென்னாப்ரிக்காவுக்கு என்ன நோக்கில் ஆங்கிலேயர் சென்றார்களோ 
அதே நோக்கில்தான் மற்ற நாடுகளுக்கும் சென்றார்கள். சுபாஸ்சந்திரபோசின் இராணுவத்தை 
எதிர்க்க கூடிய நேரம் அது அல்ல என்பதாலும் ... 2ஆம் உலக போரினால் வந்த பொருளாதார 
வீழ்ச்சிக்கு இங்கிலாந்து உள்நாடே தாக்கு பிடிக்கமுடியாது தள்ளாடியதாலும்தான் ... பல நாடுகளில் இருந்த 
கொடியை இறக்கிக்கொண்டு சொந்த வேலை பார்க்க சென்றார்கள். தென்னாப்பிரிக்கா போல 
சுதந்திர போராட்டம் தோற்கடிக்க பட்டு அவர்கள் தட்டிக்கேட்க ஒரு கூட்டம் இந்தியாவிலும் இல்லாமல் போயிருந்தால் ..... இப்போதும் பல நிலங்களுக்கும் தோட்ட்ங்கள்க்கும் வெள்ளையர்கள்தான் முதலிகளாக இருந்து இருப்பார்கள்.  ஆப்ரிக்கர்களை பல கூறுகளாக பிரித்து உள்நாட்டு கலவரங்களை உருவாக்குவது அவர்களுக்கு இலகுவாக அமைந்து போனது ... இந்தியாவில் அது பெரிதாக எடுபடவில்லை அதுக்கு காரணம் 
இந்திய தேசிய விடுதலை எனும் பேரில்தான் இரு கோணத்திலும் சென்றுகொண்டு இருந்தது.

எதிரிகள் இருந்தால்  நாம் எப்பபோம் ஒரு தற்காப்பு உசார் நிலையிலேயே இருப்போம் 
ஆனால் ஒட்டுண்ணிகள் இருப்பில் ஒரு இனத்துக்கு அதிக அக்கறை தேவை அது இல்லாத காரணத்தால்தான் 
தமிழர்கள் இவ்வளவு அழிவையும் சந்தித்தார்கள். எமது மொழியே திட்டமிட்டு சம்ஸ்கிருத கலப்புக்கு உள்ளாகி இருக்கிறது. முருகன் ஸ்கந்தன்  சுப்பிரமணி ஆனது தற்செயலானது அல்ல மிகுந்த திட்டமிடலுடன் நடந்தது. ஒட்டுண்ணிகள் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பது இங்கு வாதமே இல்லை ......... இவ்ளவு காலமும் என்ன செய்தார்கள்  செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இங்கு வாதப்பொருள். 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, goshan_che said:

நீங்ககள் லட்சத்தில் ஒருவரைப் பற்றி கதைக்கிறீர்கள். நான் மிகுதி 99999 பெயரையும் கருத்திலெடுக்கிறேன்.

அதுசரி அமெரிக்கர், கனேடியர், ஆங்கிலேயர் மனிதபிமானம் உள்ளவர்களா ? சும்மா கதைக்க வேண்டாம் சே. சிரிப்பை நிறுத்த முடியவில்லை. விட்டால் ஹிற்லரும் முசோலினியும் அண்ன்னை திரேசாவும் ஒன்று என்பீர்கள் . அழியும் நிலையில்உள்ள  தமிழும் தமிழரும் போரடித்தான் ஆகவேண்டும். 

இசையர் மட்டும்தான் கருத்து கூறலாம் என்று  சட்டம் இல்லையே .எனது கருத்தை கூறினால் பெயின்ற் வாளியை தலையில் கவிழ்ப்பீர்களோ. ?

நடைமுறை சாத்தியமான ஒரு ஆலோசனை உங்களால் கூற முடியுமா ?

கற்பனை உலகில் நாங்கள் வாழ முடியாது சே. உங்களால் முடியுமென்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர். 

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Maruthankerny said:

இது என்ன திரிப்பு  என்று எனக்கு புரியவில்லை 
தென்னாப்ரிக்காவுக்கு என்ன நோக்கில் ஆங்கிலேயர் சென்றார்களோ 
அதே நோக்கில்தான் மற்ற நாடுகளுக்கும் சென்றார்கள். சுபாஸ்சந்திரபோசின் இராணுவத்தை 
எதிர்க்க கூடிய நேரம் அது அல்ல என்பதாலும் ... 2ஆம் உலக போரினால் வந்த பொருளாதார 
வீழ்ச்சிக்கு இங்கிலாந்து உள்நாடே தாக்கு பிடிக்கமுடியாது தள்ளாடியதாலும்தான் ... பல நாடுகளில் இருந்த 
கொடியை இறக்கிக்கொண்டு சொந்த வேலை பார்க்க சென்றார்கள். தென்னாப்பிரிக்கா போல 
சுதந்திர போராட்டம் தோற்கடிக்க பட்டு அவர்கள் தட்டிக்கேட்க ஒரு கூட்டம் இந்தியாவிலும் இல்லாமல் போயிருந்தால் ..... இப்போதும் பல நிலங்களுக்கும் தோட்ட்ங்கள்க்கும் வெள்ளையர்கள்தான் முதலிகளாக இருந்து இருப்பார்கள்.  ஆப்ரிக்கர்களை பல கூறுகளாக பிரித்து உள்நாட்டு கலவரங்களை உருவாக்குவது அவர்களுக்கு இலகுவாக அமைந்து போனது ... இந்தியாவில் அது பெரிதாக எடுபடவில்லை அதுக்கு காரணம் 
இந்திய தேசிய விடுதலை எனும் பேரில்தான் இரு கோணத்திலும் சென்றுகொண்டு இருந்தது.

எதிரிகள் இருந்தால்  நாம் எப்பபோம் ஒரு தற்காப்பு உசார் நிலையிலேயே இருப்போம் 
ஆனால் ஒட்டுண்ணிகள் இருப்பில் ஒரு இனத்துக்கு அதிக அக்கறை தேவை அது இல்லாத காரணத்தால்தான் 
தமிழர்கள் இவ்வளவு அழிவையும் சந்தித்தார்கள். எமது மொழியே திட்டமிட்டு சம்ஸ்கிருத கலப்புக்கு உள்ளாகி இருக்கிறது. முருகன் ஸ்கந்தன்  சுப்பிரமணி ஆனது தற்செயலானது அல்ல மிகுந்த திட்டமிடலுடன் நடந்தது. ஒட்டுண்ணிகள் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பது இங்கு வாதமே இல்லை ......... இவ்ளவு காலமும் என்ன செய்தார்கள்  செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இங்கு வாதப்பொருள். 

மருதர்,

இது திரிப்பில்லை. 

தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சிம்பாப்வே,  நியூசிலாந்து இவற்றில் கைக்கொள்ளப்பட்ட காலனியமும்,

இந்தியா, இலங்கை, மலேசியா, ஏமன், எகிப்து, கென்யா போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட காலனியமும் வேறு வேறு வகையின.

காலனிய காலத்திலேயே இது கொள்கை முடிவாக அமுல்படுத்தப்பட்டது.

2ம் வகையில் தனியே ஆட்சி அதிகாரத்தை, லாபம்தரும் தொழில்களை (தேயிலை) மட்டுமே வெள்ளையினத்தவர் எடுத்துக் கொண்டனர். காணிகளை பிடித்து, வெள்ளையினத்தவரை குடியேறற்றவில்லை.

1ம் வகையில் காணிகளை அபகரித்து, மண்ணுக்குரியவர்களை விரட்டி அல்லது அழித்து - தம்மை அந்த மண்ணில் குடிகளாக பிரதியீடு செய்தார்கள்.

இதே போலத்தான் டெல்லி சுல்தானியத்தின் கைகளில் மதுரை வீழ்ந்த போது உருது பேசும் இஸ்லாமியர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவர்களின் வழிவந்தோரே ,  அவர்களால் மதம்மாற்றப்பட்டோரே, இன்றைய தமிழ்நாட்டு இஸ்லாமியர். காலப்போக்கில் உருது அழிந்து போய்விட, இஸ்லாத்தை மட்டும் அவர்கள் கெட்டியாக கைப்பற்ற - இப்போ அவர்களை சீமான் தமிழ் இஸ்லாமியர் என்கிறார்.

சீமானின் தமிழ்-பிராமணனரும் இஸ்லாமியருக்கு முன் வந்து இப்படிச் சேர்ந்தோரே.

அச்சொட்டாக இதைப்போலவே  நாயக்கர் படை எடுப்பின் போது தமிழ்நாட்டில் நடந்தது. தெலுங்கு பேசும் நாயக்க மன்னர் மட்டும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.   நாயக்க படைகளும், மக்களும் பெரும் எடுப்பில் வந்து, காணி பிடித்து, கிராமங்களை உருவாக்கி -குடியமர்ந்து - இப்போ 700 வருடங்களாக வாழ்கிறனர். 

ஆனால் இஸ்லாமியரை, பிராமணரை தமிழராக ஏற்கும் சீமான், நாயக்க சாதியினரை, பிள்ளைகளை, ஏனையோரை ஏற்க மறுக்கிறார்.

700 வருடங்களாக வாழ்ந்த மக்கள், வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார்.

அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்திய தந்தையின் மகன். நியூசிலாந்தின் பிரதமர் வேல்சில் பிறந்தவர். பிரித்தானியாவின் நிதியமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்து பேரூந்து ஓட்டியவரின் மகன், உள்துறை மந்திரி உகண்டாவில் இருந்து வந்த கடைக்காரரின் மகள். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் கமலாவின் தாய் தமிழ் நாட்டுக்காரர். இவ்வளவு ஏன், டிரம்பின் தாய் ஒரு ஸ்கொட்டிஸ் பெண்.

இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ஜனநாயகம். ஒருவனுக்கு குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை, இருந்தால் அல்லது குறைந்த பட்சம் அமெரிக்கா போல் நாட்டில் பிறந்திருந்தால் அந்த நபருக்கு ஆளும் உரிமையும் இருக்க வேண்டும்.

இல்லாமல் 700 வருடங்களுக்கு முன் நீங்கள் வந்தேறிகள் என ஒருவனது surname ஐ பார்த்து அவர் தேர்தலில் வென்று ஆளலாமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

அதற்க்கு நான் தயாரில்லை.

Share this post

Link to post
Share on other sites

குடியுரிமை சேட்டைகள்..👍

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

கப்பித்தான்,

1. இசையர் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால்,

“நல்லவேளையாக உங்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக இல்லை“

என நான் எழுதியதுக்கு மேலே தெளிவாக இசையை மேற்கோள் காட்டியே எழுதினேன். இசை நா.த ஆதரவாளர் என்பது தெரிந்ததே. வேறு எங்கும் நான் உங்களை நா.த ஆள் என்ற சாரம் பட எழுதியதே இல்லை. எனவே நீங்கள்தான் இசைக்கு வைத்த பெயிண்ட் வாளியை உங்கள் தலையில் தேவையில்லாமல் கவுழ்கிறீர்கள்.

2. அமெரிக்கர், கனேடியர், ப்ரித்தானியர், ஐரோப்பர் மனிதபிமனிகள் என நான் சொல்லவில்லை. ஆனால் புரொட்ன் நேசனாலே, பி என் பி, மேலும் பல வெள்ளையின அடிப்படைவாதிகளை அதிகார பலத்துக்கு வராது தடுக்கும் அளவுக்கு நல்லவர்கள். தமிழ்நாட்டிலும் அப்படித்தான், அதுதான் சீமான் 4% இல் இருந்து 2.5% கு போகிறார்.

3. ஹிட்லரும், முசோலினியும், திரேசாவும் ஒன்றல்ல. ஆனால் ஹிட்லரும், முசோலினியும், சம்பிக்கவும், ஞானசாரவும், டொமி ராபின்சனும், மாரி லெ பென்னும், சுமனே தேரரும், விமல் வீரவன்சவும், பால்தாக்ரேயும், வாட்டாள் நாகராஜும், சீமானும் ஒன்று.

Share this post

Link to post
Share on other sites
45 minutes ago, goshan_che said:

ல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

ஐரோப்பாவில் இருந்து வந்த வெள்ளையர்கள் வட அமெரிக்காவில் குடியேறி 300 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பூர்வகுடிகளை அழித்தும் ஓரங்கட்டியும் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிட்டார்கள். அபரிதமான வளர்ச்சியும்தான்.

ஆனால் கனிமவளத்துறையில் இருப்பதால் இரண்டு உதாரணங்களை சொல்ல வேண்டியது உள்ளது.

வட அமெரிக்காவில் கனிமங்களை அகழ்ந்து எடுக்கும்போது, சுற்றுச் சூழலை கருத்தில் கொள்ளவே இல்லை. உதாரணமாக, சயனைட் கலந்த செம்மணலை (தங்கத்தை பிரிப்பதற்கு சயனைடை பயன்படுத்துவார்கள்) ஏக்கர் கணக்கில் கொட்டி வைத்துள்ளார்கள். அது மழை நீரால் கழுவப்பட்டு நிலத்தடி நீரில் சேரும். இது அவரு உதாரணம் மட்டுமே.

அதே வெள்ளையர்களின் பூர்வ நிலமான இங்கிலாந்தின் யோர்க் பகுதியில் ஒரு பிரமாண்டமான கனிம அகழ்வு கட்டுமானம் நடைபெற்று வருகிறது. ஆனால் அதை நிலத்துக்கு கீழேதான் (underground) கட்ட வேண்டும் என சொல்லி விட்டார்கள். நிலத்துக்கு மேலே பச்சைப்பசேல் என புல் வெளிகள். இதுதான் குடியேற்ற மனப்பான்மைக்கும், பூர்வகுடி மனப்பான்மைக்கும் இடையில் உள்ள வேற்றுமைகள்.

பூர்வகுடி மனப்பான்மை = protectionism 
குடியேற்ற மனப்பான்மை = plundering 

இதையே தமிழகத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம். பல ஆயிரம் ஆண்டுகள் தப்பிப் பிழைத்த ந்திகளும், மலைகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன.

இறுதியாக, புலம் பெயர்ந்த மக்கள் அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவை புரியலாம். இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக முடியுமா என்பது கேள்விக்குறிதான். அது அங்குள்ள வெள்ளையரை முகம் சுழிக்க வைக்கும் என்பது எனது எண்ணம்.

”யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது. அதில் அர்த்தமும் உள்ளது..!” 😀

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, இசைக்கலைஞன் said:

மன்னிக வேண்டும்,

நீங்கள் கனிம அகழ்வு துறையில் இருந்தாலும், அது சம்பந்தமான அரசியலை நீங்கள் மிகவும் மேலோட்டமாக பார்கிறீர்கள்.

300 வருடமாக வட அமெரிக்காவில் வாழும் வெள்ளைக்கு இப்போ பூர்வீகம் ஏது? ஜேர்மனியில், யூகேயில், அயர்லாந்தில், ஸ்பெயினில் ஐரோப்பா முழுவதும் இருந்த வந்த மூதாதைகளின் கூட்டு கலவை அவர்கள்.

இதில் எந்த நாட்டுக்கும் அவர்களால் இப்போ திரும்ப முடியாது. பில் கிளிண்டன் ஐரிஸ் வம்சாவளி ஆனால் அயர்லாந்துக்கு சுற்றுலா வரவும் வீசா எடுத்துத்தான் வரவேண்டும்.

இப்படி இருக்கையில் இந்த வெள்ளைகளின் ஒரே “வீடு” வட அமேரிக்காதான். அந்த வீட்டை plundering செய்துவிட்டு அவர்கள் எங்கே போவார்கள் ?

கனிம அகழ்வில், ரசாயன ஆய்வில், உயிரியல், genetically modified foodஇல், அணு மிசக்தி ஆக்கத்தில் இப்படி பல விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் வட அமெரிக்காவில், குறிப்பாக யூஎஸ் சில் இல்லை. 

யூஎஸ் ஸ்தாபிக்கப் பட்ட போதே -அது ஒரு தனி மனித சுதந்திரத்தை மதிக்கும், அரசு கட்டுபாடுகள் மிகவும் கம்மியான ( small government, less regulation) நாடகவே தாபிக்கப் பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அரச தலையீடு, கட்டுப்பாடு அதிகம்.

பிள்ளைகளை பெற்றோர் பள்ளி நாட்களில் சுற்றுலா அழைத்துச் சென்றாலே வழக்குப் போடும் நாடு யூகே!

இந்த வித்தியாசங்களை வைத்து வெள்ளை இன அமேரிக்கர்கள் வேண்டும் என்றே தம்மினதும், தம் சந்ததியினதும் ஒரே வாழிடத்தை சூறையாடி, வாழத்தகுதியற்ற இடமாக ஆக்குகிறார்கள் என்பது - மிகவும் மேலோட்டமான பார்வை.

அடுத்த சந்ததி புலம்பெயர் சமுகத்து தமிழ் பிள்ளைகள் உலக அரசியலில் மிளிர்வார்கள் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

ஆனால் பால்தாக்ரே, சீமான், ஞானசார, மேரி லெபென் போல அவர்கள் இனவாத அரசியல் செய்யாமல், இடது , வலது என்று பொருளாதார கொள்கை அடிப்படையில் அரசியல் செய்வார்கள் என்பதே என் எதிர்பார்ப்பும், எதிர்வு கூறலும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.