• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

28/07/2020 ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் | கள்ளக்குறிச்சி சங்கராபுரம் | ஜேம்ஸ்

Share this post

Link to post
Share on other sites

நாம் தமிழர் கட்சி மீது அவதூறு / இனியும் சும்மா இருக்க மாட்டோம் / NTK / Vaalparai / Coimbatore

Share this post

Link to post
Share on other sites

சீமான் என்றொரு காலம்.
❤️❤️❤️

ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல்
அவன்.

எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தில் நிற்கிறான்.

இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொடுத்த விலை...

 அவன் தான். தன்னையே விலையாகக் கொடுத்து இந்த இடத்தில் இருக்கிறான்.

கடும் உழைப்பினால் அணுஅணுவாய் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு ஒரே சமயத்தில் சிற்பியாகவும், சிற்பமாகவும் அவனே
நிற்கிறான்.

ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்பாக இந்த இடத்தில்  அவன் நிற்பான் என  கண்டிப்பாக அவனே நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனாலும் உறுதியாக பத்தாண்டுகளாக நின்று கொண்டே இருக்கிறான். எவரிடத்திலும் கூட்டு இல்லை. தனித்து துணிவோடு சமரசம் இல்லாமல் சண்டை போடுகிறான்.

பத்தாண்டுகளுக்கு முன்னால் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே பயந்து ஒளிந்த காலம் ஒன்று இருந்தது. அவன்தான் அந்தக் காலத்தை தனி ஒருவனாக மாற்றினான்.
பிள்ளையார் ஊர்வலங்கள் நடைபெற்று காவி தேசமாய் போன ஒரு நிலத்தில் அவன் முருகனை முப்பாட்டன் என முழங்கினான். கால வீதியில் புறக்கணிக்கப்பட்ட அந்த முருகனைத்தான் இப்போது பிள்ளையாரை தூக்கி சுமந்த கரங்கள் கூட  தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. 

ஆம்... தூக்கிப் பிடித்தாகத்தான் வேண்டும். அந்த நிலையை அவன் உருவாக்கி விட்டான். தமிழ் பேசினாலே தரக்குறைவு என்று எண்ணி தலைகுனிந்த நிலத்திலே, தமிழ் பேசினால் தான் தலைநிமிர்வு என்று மாற்றினான். ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டார்கள்.. கொன்றுவிட்டார்கள்.. என்று பழித் தூற்றி, குற்ற உணர்வு கொள்ளச் செய்து எங்கள் உறவுகள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டபோது நாங்கள் வாய்மூடி மௌனமாக, கைக்கட்டி, வாய்ப் பொத்தி இருந்த ஒரு காலம் ஒன்று இருந்தது.

எங்கள் தலைவன் பிரபாகரன். யார் அந்த ராஜீவ் காந்தி..??  என்று கம்பீரமாக குரலெழுப்பி.. ஆமாம் இப்போது என்ன அதற்கு.. என அவன்தான் முதலாவதாக தலை நிமிர்ந்தான்.இன்று அவனைப் போல் தலைநிமிர்ந்த ஒரு தலைமுறையையே அவன் மிகுந்த திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறான். இனி தமிழ் மொழியைப் பற்றி, தமிழர் வரலாற்றைப் பற்றி, இழிவாகப் பேசினால் தமிழ்நாட்டில் வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறான்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, என்றெல்லாம் எங்கள் மண் அழிக்கப்படும் போதெல்லாம் அவன் மக்கள் மன்றங்களில் போராட்டமாய் வெடித்தான்.

ஐபிஎல் மைதானத்தில் புலிக் கொடி பறந்தது.எம்மை தாக்கிய சிங்களவனுக்கு இந்த நிலத்தில் அடி விழுந்தது. சிறைகள் குறித்தோ, வழக்குகள் குறித்தோ, அச்சப்படாத ஒரு புதிய தலைமுறை பிறந்தது.

இத்தனைக்கும் பின்னால் அவன் மட்டுமே காரணமாக  இருக்கிறான்.

கம்பீரக் குரல் எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியே வா.."என அவன் சீறிய போது.. ஆதி வனத்தில் உறுமும் புலியைக் கண்டோம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்.. அவர் செய் கேட்டினிற்கும் அஞ்சுவதில்லை. மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை.. எனப் பாவலரேறுத் தமிழை அவன் முழங்கிய போது எதிரே எதிரியாக கூட யாரும் எஞ்சுவதில்லை.

எல்லாவித புயல், மழைகளுக்கும் நடுவே எதற்கும் அஞ்சாது , கொட்டும் மழையில் கலையாது கூட்டம் நடத்தி.. அனல் பறக்க செய்தான்.

இதுவரை இந்த தமிழர் நிலம் பார்த்திராத மனவுறுதியை அவன்தான் ஒரு வாழ்வியலாக எங்களுக்கு கற்பித்தான்..

பொங்கி ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே படகோட்டி பழகியவன் அவன். 

சாதாரண பத்தாண்டுகள் அல்ல. இதுவரை நடந்த சரித்திரத்தையே புரட்டிப்போட்ட அந்த கிராமத்து எளிய மனிதனின் அசாதாரண சாதனை நாட்கள் அவை..

❤️

இன்று உறுதியில்
அவன் ஒரு ராஜகோபுரமாய் நிமிர்ந்து நிற்கிறான்.

எப்போதாவது வீசுகின்ற காற்றில், உயர பறக்கின்ற அவதூற்று சருகுகள் கோபுர உச்சியினை தொட்டுவிட முயற்சிக்கின்றன.

ஆனால் கோபுரத்தின் சிகரமோ.. நம்பிக்கையின் வானத்தை தான் முத்தமிட்டு கொண்டு நிற்கிறது.

ஆம்.

சீமான் என்பவன் தனி மனிதனாக இருந்த காலம் முடிந்து போய்விட்டது.

அவன் ஒரு காலத்தை உருவாக்கிவிட்டான்.

அந்தக் காலமும் அவன் தான்.

இனி..களமும் அவன் தான்.

புழுதிக் காற்றினால் பூபாளம் பாடும்
புதிய விடியல் ஒன்றின் வெளிச்சப் பாய்ச்சலை தடுத்து விட முடியுமா என்ன..???

❤️

மணி செந்தில்.

 • Like 6

Share this post

Link to post
Share on other sites

சீமான், நான் இதுவரை அறிந்துவந்த தமிழக அரசியல்வாதிகளில் இன்னொருவனா? எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை? எதற்காக தமிழகமெங்கும் தலைவர் பெயரைச் சொல்லி முழக்கமிட்டு வருகிறான்? இவனது முகத்திலும், பேச்சிலும், கொப்பளிக்கும் கோபத்திலும் பொய்மை எங்காவது ஒளிந்திருக்கிறதா? தொய்வில்லாமல் தொடர்ந்து கதறுகிறானே? இவன் யார்? 

சீமானை அறிமுகம்செய்துகொண்ட நாட்களிலிருந்து அவனது பேச்சாற்றலும், உணர்வு பூர்வமான கர்ஜனைகளும் என்னைக் கவர்ந்தாலும்கூட, தமிழக அரசியல்வாதிகளிலிருந்தும் இவன் வேறுபட்டவன் எனும் எனக்குள் உருவாகிவந்த ஒரு சிறு நம்பிக்கைத் துளிரையும் வேண்டாவெறுப்பாக கிள்ளித் தூரவெறிந்து நடந்துவந்தேன். இடையிடையே புலம்பெயர் தமிழன் பணத்தில் கூவுகிறாண்டா கொய்யால என்று ஈழத்து "அறிவுஜீவிகள்" கூறும் பழிசொல்லுக்கு ஆளாக நேரிடலாம் எனும் பயமும், சினிமாத்தனமான தமிழக அரசியலினை நம்பக்கூடாதெனும் அனுபவமும் என்னை சீமானின் அரசியலில் இருந்து விலத்தியே வைத்திருந்தது. 

ஆனால், இப்போது அப்படியில்லை. சீமான், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து பிரிக்க முடியாத முக்கிய சக்தி. இன்னொரு வகையில் சொன்னால், அவனே அதனை இன்று இயக்கும் உந்துசக்தியாக எனக்குப் படுகிறது. அவன் சொல்வதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் தொடர்பாக சீமானின் அனுபவங்கள் கூறும் செய்தி ஒன்றுதான், தமிழ்த் தேசிய இனத்தின் மீள் எழுச்சிக்கான முக்கிய கடமையொன்று சீமானிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீமான் பின்னால் திரளும் உணர்வெழுச்சியுடன் கூடிய இளையோர் கூட்டம் தமிழகத்தில் புதிய புரட்சியொன்றினை முன்னெடுக்கிறது. சாதாரண சினிமா இயக்குனந்தானே, ஓரிரு சின்னப் பையன்களை வைத்துக்கொண்டு கூவுகிறான் என்று எள்ளிநகையாடியவர்கள் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். அரசியல் ரீதியாகவும், இனரீதியாகவும் தமிழகத்து மக்களை தன்பால் கட்டியிழுக்கும் சீமான் எனும் சக்திக்கு மக்கள் ஆட்பட்டிருக்கின்றனர். சினிமாவுக்கும், பணத்திற்கும், வடி சாராயத்திற்கும் அடிமைப்பட்டிருந்த தமிழக இளையோர் இன்று சீமானின் பின்னால் அணிதிரள்வது சாதனையே.

சீமான் வெல்வது மொத்தத் தமிழ்த் தேசிய இனத்தினதும் தேவை, அவசியம். இங்கு கற்றவர்கள் என்றும், அதிமேதாவிகள் என்று கூவிக்கொண்டு வலம்வரும் இந்த கனவான்களின் கேலிகளுக்குப் பயந்திருந்தது போதும். இனிப்போதும், சீமான் தான் இனித் தமிழினத்தின் , தமிழ்த்தேசிய இனத்தின் உந்து சக்தியென்றால் அப்படியே ஆகட்டும். நானும் அவனுடன் இணைந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். 

என்னால் முடியாததை, நான் சொல்லவிரும்புவதை, அடக்கியிருக்கும் விடுதலைக்கான வேட்கையை இவன் பேசுகிறான். ஆகவே அவனை ஆதரிக்கவேண்டியது எனது கடமை.

சீமான் வெற்றியே தமிழ்த்தேசிய இனத்தில் அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும். 

வாழ்க தமிழ், வெல்க நாம் தமிழர்.
 
 • Like 5
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
40 minutes ago, ரஞ்சித் said:

வ‌ரவேற்க ப‌ட‌ வேண்டிய‌ க‌ருத்து ,
வாழ்த்துக்க‌ள் ர‌குநாத‌ன் அண்ணா , இணைந்தே ப‌ய‌ணிப்போம் 💪

வாழ்க‌ த‌மிழ் வெல்க‌ ஈழ‌ம் 🙏
வாழ்க‌ த‌மிழ் வெல்க‌ நாம் த‌மிழ‌ர் 🙏

Edited by பையன்26
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

20200729-094435.png

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ரஞ்சித் said:

சீமான் வெற்றியே தமிழ்த்தேசிய இனத்தில் அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும். 

வாழ்க தமிழ், வெல்க நாம் தமிழர்.
 
நல்ல கருத்து, தொடக்கத்தில் நானும் சாதாரன அரசியல்வாதியென விலகியே இருந்தேன், சீமான் தான் ஒரு விடிவெள்ளி. அவரின் நல்ல கொள்கைகளின் பின் பல இளைஞர்கள் திரள்கின்றானர்,

என்ன பழுசுகள் தான் முட்டுக்கட்டை, திரவிட கொள்கையில் இருப்பவர்கள். 

காலம்மாறும் காட்சிகளும் மாறும்

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, உடையார் said:

என்ன பழுசுகள் தான் முட்டுக்கட்டை, திரவிட கொள்கையில் இருப்பவர்கள்

இவ‌ர்க‌ள் ப‌ட்டும் திருந்த‌வில்லை என்று தான்  அர்த்த‌ம் ,

2008ம் ஆண்டு இந்த‌ யாழ் க‌ள‌த்தில் எழுதினேன் , க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் என்று , அப்ப‌ யாழில் இருந்த‌ வ‌ய‌தாவ‌வ‌ர்க‌ள் என்னை கேலி செய்தார்க‌ள் , த‌ம்பி நீ சின்ன‌ப் பெடிய‌ன் , க‌ருணாநிதியின்  அர‌சிய‌ல் த‌ந்திர‌ம் எல்லாம் உன‌க்கு தெரியாது என்று என்னை கேலி செய்தார்க‌ள் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு யாழில் இருந்து ப‌ல‌ர் த‌லைம‌றைவாகி விட்டின‌ம் அல்ல‌து வேறு பெய‌ரில் இப்ப‌வும் எழுதின‌மோ தெரியாது , ஹா ஹா😁😀

அந்த‌ திரியின் த‌லைப்பு தெரிந்தா இந்த‌ திரியில் தேடிப்பிடித்து இணைத்து இருப்பேன் , திரியின் த‌லைப்பு ஞாவ‌க‌ம் இல்லை உடையார் அண்ணா ,

யாழில் அப்ப‌வும் என்னை கேலி செய்தார்க‌ள் , அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாய் இப்ப‌ எழுதுவ‌த‌னால் இப்ப‌வும் அதே ந‌க்க‌ல் நையாண்டிக‌ள் செய்யின‌ம் என்னை பார்த்து ,  

என்ர‌ வாழ்க்கையில் எவ‌ள‌வ‌த்தை பார்த்து விட்டேன் இந்த‌க் கேலி விம‌ர்ச‌ன‌ங்க‌ளை பார்த்து என்னால் சிரிப்ப‌தை த‌விற‌ வேறு ஒன்றும் செய்ய‌ முடியாது உடையார் அண்ணா ஹா ஹா , 😁

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

எதற்காக நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறோம்

நாம் தமிழர் கட்சி: காஞ்சிபுரம் கூரம் கேட் இஞ்சம்பாக்கம் பஞ்சாயத்து சுங்குவார்சத்திரம்
பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் கும்பகோணத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பணி புரிந்து வந்ததாகவும் இந்த நோய்த்தொற்று காலத்தில் அந்த பெண்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பியதாகவும் ஆனால் அந்த நிறுவனம் அதை அனுமதிக்க மறுத்து அந்த பெண்களை தொடர்ச்சியாக அங்கே அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவ தாகவும் தகவலை கூறினார்கள் எப்படியாவது நாம் தமிழர் கட்சி அதில் தலையிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்கள்

மாவட்ட பொறுப்பாளர்கள்
க. சந்திரசேகர்
நாம் தமிழர் கட்சி உறவுகள் 50 க்கும் மேற்பட்ட தம்பி தங்கைகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று கலந்து கொண்டு அந்த பெண்களை சொந்த ஊருக்கு E PASS எடுத்து அனுப்பி வைத்துள்ளனர்
 
Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

அச்சுறுத்தும் தமிழ் தேசியத்தின் எழுச்சி | Naam Tamilar Katchi | Seeman

Edited by உடையார்

Share this post

Link to post
Share on other sites
On 29/7/2020 at 13:54, ரஞ்சித் said:

சீமான், நான் இதுவரை அறிந்துவந்த தமிழக அரசியல்வாதிகளில் இன்னொருவனா? எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை? எதற்காக தமிழகமெங்கும் தலைவர் பெயரைச் சொல்லி முழக்கமிட்டு வருகிறான்? இவனது முகத்திலும், பேச்சிலும், கொப்பளிக்கும் கோபத்திலும் பொய்மை எங்காவது ஒளிந்திருக்கிறதா? தொய்வில்லாமல் தொடர்ந்து கதறுகிறானே? இவன் யார்? 

சீமானை அறிமுகம்செய்துகொண்ட நாட்களிலிருந்து அவனது பேச்சாற்றலும், உணர்வு பூர்வமான கர்ஜனைகளும் என்னைக் கவர்ந்தாலும்கூட, தமிழக அரசியல்வாதிகளிலிருந்தும் இவன் வேறுபட்டவன் எனும் எனக்குள் உருவாகிவந்த ஒரு சிறு நம்பிக்கைத் துளிரையும் வேண்டாவெறுப்பாக கிள்ளித் தூரவெறிந்து நடந்துவந்தேன். இடையிடையே புலம்பெயர் தமிழன் பணத்தில் கூவுகிறாண்டா கொய்யால என்று ஈழத்து "அறிவுஜீவிகள்" கூறும் பழிசொல்லுக்கு ஆளாக நேரிடலாம் எனும் பயமும், சினிமாத்தனமான தமிழக அரசியலினை நம்பக்கூடாதெனும் அனுபவமும் என்னை சீமானின் அரசியலில் இருந்து விலத்தியே வைத்திருந்தது. 

ஆனால், இப்போது அப்படியில்லை. சீமான், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து பிரிக்க முடியாத முக்கிய சக்தி. இன்னொரு வகையில் சொன்னால், அவனே அதனை இன்று இயக்கும் உந்துசக்தியாக எனக்குப் படுகிறது. அவன் சொல்வதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் தொடர்பாக சீமானின் அனுபவங்கள் கூறும் செய்தி ஒன்றுதான், தமிழ்த் தேசிய இனத்தின் மீள் எழுச்சிக்கான முக்கிய கடமையொன்று சீமானிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீமான் பின்னால் திரளும் உணர்வெழுச்சியுடன் கூடிய இளையோர் கூட்டம் தமிழகத்தில் புதிய புரட்சியொன்றினை முன்னெடுக்கிறது. சாதாரண சினிமா இயக்குனந்தானே, ஓரிரு சின்னப் பையன்களை வைத்துக்கொண்டு கூவுகிறான் என்று எள்ளிநகையாடியவர்கள் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். அரசியல் ரீதியாகவும், இனரீதியாகவும் தமிழகத்து மக்களை தன்பால் கட்டியிழுக்கும் சீமான் எனும் சக்திக்கு மக்கள் ஆட்பட்டிருக்கின்றனர். சினிமாவுக்கும், பணத்திற்கும், வடி சாராயத்திற்கும் அடிமைப்பட்டிருந்த தமிழக இளையோர் இன்று சீமானின் பின்னால் அணிதிரள்வது சாதனையே.

சீமான் வெல்வது மொத்தத் தமிழ்த் தேசிய இனத்தினதும் தேவை, அவசியம். இங்கு கற்றவர்கள் என்றும், அதிமேதாவிகள் என்று கூவிக்கொண்டு வலம்வரும் இந்த கனவான்களின் கேலிகளுக்குப் பயந்திருந்தது போதும். இனிப்போதும், சீமான் தான் இனித் தமிழினத்தின் , தமிழ்த்தேசிய இனத்தின் உந்து சக்தியென்றால் அப்படியே ஆகட்டும். நானும் அவனுடன் இணைந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். 

என்னால் முடியாததை, நான் சொல்லவிரும்புவதை, அடக்கியிருக்கும் விடுதலைக்கான வேட்கையை இவன் பேசுகிறான். ஆகவே அவனை ஆதரிக்கவேண்டியது எனது கடமை.

சீமான் வெற்றியே தமிழ்த்தேசிய இனத்தில் அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும். 

வாழ்க தமிழ், வெல்க நாம் தமிழர்.
 
நன்றி ரகு

சில விடயங்களில் அமைதி  காப்பாதே தற்போதைய தேவை

தமிழகம் தமிழரின் கையில் வராது

தமிழர்க்கு விடிவில்லை

ஓரளவு கண்முன்னே அக்கனவு  தெரிகிறது

தமிழகத்தில் எதிலும் தமிழ்

எல்லாவற்றிலும்  தமிழர்கள்  எனும் நிலை  அபாரமாக  படரத்தொடங்கியுள்ளது

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, இசைக்கலைஞன் said:

நல்ல பதிவு

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.