Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
 • Replies 2.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சீமான், நான் இதுவரை அறிந்துவந்த தமிழக அரசியல்வாதிகளில் இன்னொருவனா? எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை? எதற்காக தமிழகமெங்கும் தலைவர் பெயரைச் சொல்

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம்  சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல

சீமான் என்றொரு காலம். ❤️❤️❤️ ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல் அவன். எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தில் நிற்கிறான். இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொட

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

 

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் நடப்புக்கல்வியாண்டுக்கான முதல் பருவக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமெனவும், செலுத்தத் தவறிய மாணவர்கள் 200 முதல் 500 வரை தண்டம் செலுத்த வேண்டுமெனவும் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 6 முதல் பதிவேட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கல்வி நிலையம் போலல்லாது, கடனை வசூல் செய்யும் நிறுவனம் போல் மிரட்டும் தொனியில் அரசு நடத்தும் பல்கலைக்கழகமே செயல்படுவதென்பது கல்வி வியாபாரமயமாக்கப்பட்டுள்ளதையே வெளிக்காட்டுகிறது.

கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலில் உலகிலேயே இந்தியா மூன்றாம் இடத்திலும், இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுப் பரவலால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் போடப்பட்டுள்ள தொடர் ஊரடங்கால் நாடு முழுமைக்கும் தொழில்நிறுவனங்கள் முடங்கி வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் சிறு, குறு தொழில் முனைவோர், கைத்தொழில் செய்வோர், அன்றாடம் கூலிவேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, வருமானமின்மை, மருத்துவச்செலவு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருந்துயரில் சிக்கித் தவிக்கின்றனர். நியாய விலைக் கடைகளில் அனைத்து உணவுப்பொருட்களும் இலவசமாக வழங்கினால்தான் அடித்தட்டு உழைக்கும் ஏழை மக்கள் உயிர்வாழ முடியும் என்ற சூழ்நிலையில் கல்விக்கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005ன் படி 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ, பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், 2019-20 ஆம் ஆண்டிற்கான கட்டணத்தில் ஏதேனும் செலுத்தப்பட வேண்டிய தொகை இருந்தால் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், ஏதேனும் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்குத் தண்டம் வசூலிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கடந்த 21.04.2020 அன்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், உடனடியாகக் கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது குறித்து மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பல்கலைகழகத்தரப்பில் எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

ஏற்கனவே, இப்பேரிடர் காலத்தில் கைவிடப்பட்ட தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலித்தது மாணவர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகளுக்கே மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினைச் செலவிட வேண்டியுள்ள நிலையில் மேலும் ஆய்வகக் கட்டணம், இணையக் கட்டணம், ,கணினிக் கட்டணம், விளையாட்டுக்கட்டணம் என மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் சேர்த்துக் கட்டணம் வசூலிப்பது என்பது கட்டாயக் கட்டணக் கொள்ளையேயன்றி வேறில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கல்விக்கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையும் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருப்பது மாணவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினால் குடும்ப வறுமையைப் போக்க நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அவர்களைக் கல்விக்கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது கட்டாய இடைநிற்றலுக்கு வழிவகுத்து அவர்களை உயர்கல்வியை விட்டே அப்புறப்படுத்தும் சமூக அநீதியாகும்.

ஆகவே, தமிழக அரசு, கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெறச் செய்ய வேண்டும் எனவும், இரண்டு ஆண்டிற்குக் கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதில் எவ்விதத் தடையும் ஏற்படாமலிருக்க அவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு உதவித்தொகையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-that-anna-university-should-stop-forcing-students-to-pay-education-fee-during-covid-19-lockdown/

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் – தமிழ் மீட்சிப் பாசறை

தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும்  தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் – தமிழ் மீட்சிப் பாசறை | நாம் தமிழர் கட்சி

தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது . இதுவரை ஓராண்டாக இருந்துவந்த இந்தப் பட்டயப் பயிற்சி இப்போது இரண்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது;  2000 உரூபாயாக இருந்த மாத உதவித்தொகையினை 5000 உரூபாயாக மாற்றியதும், ஆண்டிற்கு 8 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பயிற்சினை 20 மாணவர்களுக்கென உயர்த்தியுள்ளதும் வரவேற்கதக்கதே.

ஆனால், இப்பயிற்சியில் சேர்வதற்கு உரிய தகுதியாக இதுவரை முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் மற்றும் சமற்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு முதல் முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சேரலாம் என்று அறிவிப்பு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது;  இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இது  இந்தத் துறையில் தமிழ், வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களை அப்புறப்படுத்தி  ஆங்கில வழியில் பயின்ற அறிவியல், பொறியியல் படித்தவர்களைப் படிப்படியாகப் புகுத்தும் திட்டமிட்ட சதிச் செயலாகும்.

பொறியியல் படித்தவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் போதிய பயிற்சி மற்றும் புலமை இருக்காது என்பதால், அவர்களால் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளைச் சரியாக மேற்கொள்ள முடியாது. எனவே அவர்களுக்காக இந்த ஆண்டுமுதல் ஆங்கிலத்திலும் பயிற்சி நடைபெறும் என அறிவித்து, ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாகத் திட்டமிட்டுத் திணித்திருக்கிறது தமிழக தொல்லியல்துறை. இதற்காகவே 1973 முதல் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் என்றிருந்ததை இந்த ஆண்டு வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பில் தொல்லியல் நிறுவனம் என்று பெயர் மாற்றிவிட்டனர்.

ஏற்கனவே தமிழகத் தொல்லியல் துறை வெளியீடுகளில் சில, தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் துறையில் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வெளியிடுவதை எப்படி ஏற்க முடியும்? இப்போதே இப்படி என்றால் ஆங்கிலவழி வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகும். எப்படி அரசுப் பள்ளியில் ஆங்கில வழியும் உண்டு என்று கூறிய பின் பல பள்ளிகளில் முற்றிலுமாக தமிழ்வழி காணாமல் போய்விட்டதோ அதுபோலவே எதிர்காலத்தில் தமிழகத் தொல்லியதுறையினை விட்டே தமிழ் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிற நிலை உருவாகும்.

தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் குறிப்பிட்ட சில சிறப்புத் துறைகளில் தமிழகத் தொல்லியல் துறையும் ஒன்று. தமிழில் முதுகலைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் முதுகலை பட்டயப் பயிற்சிப் வகுப்பில் சேர்ந்து பயிற்சிப்பெற்று வேலைவாய்ப்பினை பெற்றுவந்தனர். வரலாறு, தொல்லியல் துறையில் முதுகலை பெற்றவர்களும் சேரலாம் என்றபோதும் அதிலும் தமிழ்வழியில் படித்துப் பட்டம்பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மற்ற துறைகளைப் போலல்லாது தமிழகத் தொல்லியல் துறை என்பது தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும், தமிழ் வழியில் படித்து வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கும் மிக முதன்மையானத் துறையாகும்.
ஏனேனில் தொல்லியல் துறையின் பிரிவுகளாக உள்ள ஓலைச்சுவடிகள், கல்வெட்டடுகள், செப்பேடுகள், நாணயங்கள், மெய்கீர்த்திகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும், வரலாற்று ஆவணமாக உள்ள தொல்தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதற்கும் தமிழ்மொழியில் புலமை பெற்றிருப்பது என்பது மிக மிக அடிப்படையானதாகும்.
வரலாற்றுக்கான பல அடிப்படைச் சான்றுகளில் மொழி முதன்மையான சான்று. தமிழ் மொழி மட்டுமன்று, எந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதோ அந்தப் பகுதி மொழியின் இலக்கியம், இலக்கணம்  மற்றும் உள்ளடக்கங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு என்பது  அடிப்படைத்
தேவையானது. அதுவும் தமிழில் கட்டாயத் தேவை என்பதைக் கடந்த கால ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. காரணம் தமிழ் நாட்டில் மட்டுமே தமிழ் இலக்கியம் சொல்கின்ற செய்திகள் “தொல்லியலில்” காணக் கிடைக்கின்றன. பிற உலக மொழி இலக்கியங்களின் பொருண்மைத் தொடக்கம் தொன்மத்தாலேயே அமைகின்றன. தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மட்டுமே மக்கள் வாழ்வியலை விளக்குவதாக அமைகிறது. எனவே தமிழ் நாட்டின் தொல்லியல் ஆய்வில் தமிழ்மொழி “தனிப் பெரும்” இடத்தைப் பெறுகிறது.

மேலும் தொல்லியலுக்குள் புதை விடங்கள், மரபுச் சின்னங்கள், அகழாய்வு செய்யும் நிலையிலான வாழ்விடங்கள் போன்றவையும் அமைந்துள்ளன. உலகத்திலேயே ஆகப் பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளன. அவற்றை அறிந்துகொள்வதற்குத் தமிழ் மொழி, இலக்கிய, மற்றும்  தமிழ்நாட்டு வரலாற்று அறிவென்பது முதன்மைத் தேவை. அது மட்டுமன்றித் தொல்லியல் துறையின் ஒரு பிரிவான சுவடிக்கு யாப்பிலக்கண அறிவுடன் கூடிய இலக்கியம் படித்தவர்கள் தேவை. இவை எல்லாம் அறிவியலிலோ, பொறியியலிலோ இடம் பெறாது. எனவே தமிழகத் தொல்லியல்துறையின் உயிர்நாடியாக விளங்குவது தமிழ்மொழியே.

மேலும் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் சில பணி நிலைக்கான தேர்வில் இந்நிறுவனத்தில் பயின்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏனென்றால் பிற நிறுவனங்களின் படிப்பில் தமிழ்நாட்டு தொல்லியல் குறித்த பகுதி மிகமிகக் குறைவே. எனவே தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அந்தப்படிப்புகள் போதுமானதாக இராது. உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலேயே கல்வெட்டுக்கள் அதிக அளவில் உள்ளது என்பதால் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை தனித்து இயங்க வேண்டிய நிலை இருக்கிறது, எனவே சிறப்புக் கருதி நல்ல நோக்கத்தில் அது கட்டாயமாக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம் , பன்முகத்தன்மை என்ற பெயரில் அறிவியல் மற்றும் பொறியியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையில் சேர்ப்பது மிகமிகத் தவறான முடிவாகும். அறிவியல் தொழில் நுட்பம் தேவை என்றால், இதுவரை ஓராண்டாக இருந்த படிப்பை இரண்டாண்டாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது களப்பணிகளைப் பயிற்சியில் இணைத்தது போல்,  தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அறிவியல் திறன்நுட்ப பயிற்சிகளையும் பாடத்திட்டமாக இணைப்பதே சரியானதாக இருக்கும். அதைவிடுத்து அறிவியல், பொறியியல் படித்தவர்களுக்கு இசைவளிப்பது பொறுத்தமானதன்று.

ஏற்கனவே தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துவக் கல்லூரியில், தமிழ்ப் படித்தவர்களுக்கென இருந்துவந்த சிறப்பு வழியை முற்றிலுமாக ஒழித்து, அறிவியல் படித்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது போன்று, தொல்லியல் துறையிலும் பொறியியல், அறிவியல் படித்தவர்களை நுழைத்தால் தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்கள் ஒரங்கட்டப்படுவார்கள். இந்த நிலை உருவானால் தமிழே படிக்காமல் ஆங்கில வழியில் படித்து விட்டு அறிவியல், பொறியியல் படித்தவர்கள் உள்ளே வந்து தமிழை இரண்டாம் நிலைக்குத்தள்ள வாய்ப்பு மிகஅதிகம்.

மேலும் பொறியியல் மற்றும் அறிவியல் படித்தவர்களுக்கென இயந்திரவியல், மின்னணுவியல், கட்டிடவியல், கணிணித்துறை, தொழிநுட்பத்துறை, வாகனவியல், வணிகத்துறை, விமானம், விண்வெளி  உள்ளிட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொல்லியல் படித்தவர்களுக்கு இதைவிட்டால் வேறுதுறைகளில் பணிவாய்ப்பு இல்லை. ஏற்கனவே தொல்லியல் படித்தவர்களை வரலாற்றுத் துறையில்கூடப் பணிநியமனம் செய்யத் தடை இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்குப் பேரிடியாய் அமையும். எனவே தொல்லியல் துறை இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு  பன்னிரெண்டாம் வகுப்பில் குறிப்பிட்ட சில பாடங்களைக் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என்ற நிலை இருப்பதுபோல் தொல்லியல் துறையிலும் அதைசார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருந்த அந்த விதியினை எவ்வித மாற்றமும் செய்யாமல் இனியும் தொடர வேண்டும்.

தொல்லியல்துறை என்பது வரலாற்றை ஆய்வுசெய்து ஆவணப்படுத்தும் இடம். இதில் தவறு நடப்பது ஓர் இன அழிப்பிற்குச் சமமானதாகும். தொல்லியல் ஆய்விற்குத் தேவைப்படும் மிகச்சிறிய பகுதியான அறிவியல், பொறியியல் பாடங்களை இணைப்புப் பாடமாக வைத்துக் கொள்ளலாமே தவிர அவற்றைத் தகுதிக்கான முதன்மை பாடமாக வைத்தல் ஆய்வு முடிவுகளும், விளைவுகளும் தமிழுக்கும், தமிழக வரலாற்றுக்கும் எதிராகவே அமையவே வழிவகுக்கும்.

எனவே, தமிழகத் தொல்லியல் ஆய்விற்கு அடிப்படைத் தேவையான  தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையைவிட்டே  அப்புறப்படுத்தும் வஞ்சக நோக்கத்துடன் தமிழகத் தொல்லியத்துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் அதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துமெனவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் எனவும் எச்சரிக்கிறோம்.

naam-tamilar-katchi-tamil-metchi-pasarainaam-tamilar-katchi-tamil-metchi-pasarainaam-tamilar-katchi-tamil-metchi-pasarainaam-tamilar-katchi-tamil-metchi-pasarai

 Post Views: 99

 

 

https://www.naamtamilar.org/tn-archaeological-dept-should-stop-snatching-opportunities-that-are-meant-to-thamizh-graduates/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழில் ஆளுமையாக பேச கூடியவர் | நாம் தமிழர் கட்சி, தியாகத்தின் அடையாளம்|நடிகர் சௌந்தரராஜன் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சீமான் என்ன மலையாளியா ? 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்னாரி சர்பத்..

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
52 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்னாரி சர்பத்..

 

super

சேட்டனின் சேட்டைகளோ? 😁

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

 

இதிலே ஜெயலலிதாவை இலங்கைக்காரர் வரைந்திருக்கும் கார்டூனுக்காகவே மானம் ரோசமுள்ள நாடாக இந்தியா இருந்திருந்தால் அடித்து நொருக்கியிருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

 

 

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

நீட் எனும் கொடுங்கோன்மைத் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயிராயுதம் ஏந்தித் தன்னுயிரை ஈந்து எதிர்ப்புணர்வைப் பற்ற வைத்த கல்வியுரிமைப்போராளி தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று. மூன்றாண்டுகளைக் கடந்தபோதிலும் தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதீதத்தாக்கமும், அளப்பெரும் ரணமும் நெஞ்சுக்குள் இன்னும் ஆழமாய்ப் பொதிந்து கிடக்கிறது. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மருத்துவப் படிப்பிற்குரிய மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் அவளை நிராகரித்து தங்கை அனிதாவின் மருத்துவக்கனவையும், அவளது உயிரையும் காவு வாங்கியது நீட் எனும் சமூக நீதிக்கு எதிரான தேர்வுமுறை. அனிதாவைத் தொடர்ந்து பல தங்கைகளும், தம்பிகளும் இன்றுவரை அதற்குப் பலியாகி, அம்மரணங்கள் நீண்டு தொடர்கதையாய் மாறிவருவது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. கல்விக்காகப் பிஞ்சுப்பிள்ளைகள் கருகிச்சாகையில் நெஞ்சம் விம்மித்துடிக்கிறது. அவர்களைப் பறிகொடுத்த பேரிழப்பு தரும் ஆற்றாமையும், எதுவும் செய்ய இயலாமைச்சூழலினால் வரும் குற்றவுணர்ச்சியும் நெஞ்சம் முழுக்க வன்மமாக உரமேறிக்கிடக்கிறது. நீட் தேர்வு முறையை அகற்றக்கோரி இன்னும் போராடிக்கொண்டிருக்கையிலே, புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் மிகப்பெரும் மோசடிக் கல்விக்கொள்கையைக் கொண்டு வந்து பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை முற்று முழுதாக மத்தியப் பட்டியலுக்கு நகர்த்தும் வேலையைத் தொடங்கியிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. நவீன குலக்கல்வித் திட்டமான இப்புதிய கல்விக்கொள்கை செயற்படுத்தப்பட்டால் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நாற்றுகளான 20 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி, தங்கை அனிதாவைப் போன்று பல இளந்தளிர்களை அவர்களது கல்விக்கனவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடும் பேராபத்து உள்ளது. இச்சமூக அநீதி நிகழ்த்தப்பட்டால் இந்நாடு அறிவுலகில் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் என்பது உறுதி.

‘மாநிலத்தன்னாட்சி முழக்கம்’ என்பது அறிஞர் அண்ணாவின் உயில் என வர்ணிக்கப்பட்டது. அந்த அண்ணா தொடங்கிய கட்சியான திமுகவும், அவரைப் பெயரிலே தாங்கிய கட்சியான அதிமுகவும் கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்தும் அதனை மீட்டெடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்பாட்டையும் முன்வைக்காதது இரு கட்சிகளும் அண்ணாவுக்குப் செய்த பச்சைத்துரோகமாகும். மாநிலத்தன்னுரிமையும், தன்னாட்சியும் மீட்கப்பட்டுக் காக்கப்பட்டால்தான் இந்திய ஒன்றியத்தில் சங்கமித்து வாழும் தேசிய இனங்கள் பாதுகாப்பாக வாழ வாய்ப்பேற்படும். இந்தியாவின் அடையாளமாகக் காட்டப்படும் பன்மைத்துவம் பாதுகாக்கப்படும். மாறாக, மாநிலங்களின் உரிமைகள் யாவற்றையும் ஒவ்வொன்றாய் பறித்து, ஒற்றைமயப்படுத்தி அதிகாரக்குவிப்பிலும், எதேச்சதிகாரப்போக்கிலும் மத்தியில் ஆளும் அரசுகள் ஈடுபடும்போது அது இந்தியாவின் இறையாண்மைக்கே உலைவைக்கும் பேராபத்தாய் முடியும். இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் நலவாழ்வுக்கும் மாநிலங்களின் தன்னுரிமை நிலைநாட்டப்படுவதே உகந்ததாக இருக்கும்; உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.

அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி எனும் மகத்தான மானுட உரிமையை மீட்டெடுக்கக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டங்களும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. ஆகவே, கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர அரசியல் அழுத்தம் தந்து, அதனை மீட்டெடுக்க இந்நாளில் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/seeman-vows-to-bring-back-education-to-the-state-list-on-the-memorial-day-of-education-rights-activist-anita/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் ஆட்சிக்கு வந்ததும் உங்களையும் அதே மாதிரி செய்வேன் | சீமான் திட்டம் | அனிதா | நீட்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் | பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு தெளிவான பேச்சு - இந்த பையன் நல்ல பேச்சாளனாக வருவான்

சீமானின் மாணவனின் சிறப்பான கருத்தில் விளக்கம்! நாம் தமிழர் கட்சி | ஜேம்ஸ் JAMES

 

இளைஞர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு எப்போதும் இருக்கும். நாம் மட்டும் தான் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறோம்.
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
   ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
   ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
   கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
   இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
   இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!

   கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
   அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
   அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
   அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.
   “ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
   இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
   விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
   இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
   ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
   இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
   ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
   தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!
   இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
   இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
   எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!
   அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
   தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
   இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
   வாழ்க தமிழ்!
   வளர்க தமிழர்!!
   மலர்க தமிழீழம்!!!
   பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z
   படம்: நன்றி மாவீரம்.
  • By இசைக்கலைஞன்
   சுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃
    
  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   “ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.
   “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

   “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

   “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

   ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

   ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 

   ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

   அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 
    
   **********
   இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

   “லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

   “சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

   “நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

   வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

   “ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

   “ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன். 

   “தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”. 

   சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது. 

   ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர். 

   “உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம். 

   மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன். 

   கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன். 

   சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன். 

   ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை. 

   நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை. 

   மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?... 

   ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

   எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்! 

   என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…” - படித்து முடிப்பதற்குள், 

   “அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ். 

   “என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க, 

   “இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன். 

   “அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?” 

   “என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன், 

   “அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.
   ❀ ❀ ❀ ❀ ❀
   (நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக). 

   படம்: நன்றி ஓவியர் இளையராஜா  - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html
  • By இசைக்கலைஞன்
   சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
    
    
  • By இசைக்கலைஞன்
   5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்
   கே.கே.மகேஷ்
   Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.
   எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?
   நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.
   ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?
   சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?
   திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?
   எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.
   அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?
   சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?
   மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?
   கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!
   http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece#comments
 • Topics

 • Posts

  • துமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா? துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்கு வெள்ளையடிக்கும் வகையில் கூறிவரும் கருத்துக்களை அப்படியே நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. துமிந்த சில்வா ஒரு கிரிமினல். பலரும் அறிந்த போதைப்பொருள் வியாபாரிகள். பட்டப்பகலில் படுகொலை செய்து தமது பண, அதிகார செல்வாக்கால் கூட விடுதலை பெற முடியாதபடி நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர். போதைப்பொருள் பணத்தில் பிரதான இனவாத ஊடகமொன்றை நடத்திவரும் குடும்பம் அவர்களின் குடும்பம். துமிந்தவை வெளியில் கொணர்வதற்காக ராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் அமர்த்த கடுமையாக உழைத்த ஊடகம் அது. கடந்த சில வருடங்களாக இனவாத பிக்குமாரையும், இனவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் துமிந்தவின் விடுததலைக்கு குரல் கொடுக்க வைப்பதற்காக ஏராளமாக செலவழித்தவர்கள். தற்போதும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கையெழுத்துக்காக தலா நாற்பது லட்சம் வீதம் வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியெல்லாம் இருக்க என்றெல்லாம் மனோ கணேசன் கூறுவது பசப்பு மட்டுமல்ல வேடிக்கையாக இருக்கிறது. மனோகணேசன் இப்பேர்பட்ட உத்தரவாதத்தை கொடுப்பார் என்று நாம் கொஞ்சமும் நம்பியிருக்கவில்லை. இன்னமும் வழக்குமின்றி, விசாரணையும் செய்யப்படாத நிலையில் துமிந்த சில்வாவை விட அதிக காலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், சந்தேகநபர்களும் உள்ளார்கள். ஆனால் மேன்முறையீட்டு  நீதிமன்றத்தாலும் சந்தேகமின்றி கொலைக்குற்றவாவாளியென மீளவும் உறுதி செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதில் இந்த அரசியல்வாதிகளுக்கு எந்தளவு அக்கறை வந்திருக்கிறது பாருங்கள்.  என்கிறார் மனோ கணேசன். துமிந்தவால் கொல்லப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது பாதுகாவலரும் கூட குடும்பஸ்தர்கள் தான். அவர்கள் இந்த சமூகத்தில் வாழ பாரத லக்ஸ்மனால் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தனது தந்தையின் கொலைக்காக நீதி கோரி போராடிய அவரது மகள் ஹிருனிகா பிரேமச்சந்திர; மனோ கணேசனுடன் ஜனநாயக அரசியல் கூட்டணியில் ஒன்றாக சேர்ந்து பயணித்து வருபவர். இனி சக தோழமை அரசியல் சகாவின் முகத்தில் தான் மனோ கணேசன் விழித்திட முடியுமா? இதை எல்லாவற்றையும் விட இலங்கையின் ஜனாதிபதிகள் தமது அரசியல் சுய லாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பது இப்போது ஒரு போக்காக மாறி வருகிறது. ஜே.ஆர். காலத்தில் அவரின் ஆதரவாளனான ஒரு பெரிய சண்டியனை விடுவித்தார். மிகச் சமீபத்தில் கூட மைத்திரிபால தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரரை விடுவித்தார். 20 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அத்தகைய அராஜக அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்கள் கூட கடக்கவில்லை. அதற்குள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் தனது ஆதரவாளனான கொலைக்குற்றவாளியை விடுவிக்க முற்படுகிறது. இதற்கு விலை போபவர்கள் யார் யார் என்பது பற்றி இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். மனோ கணேசன் அந்த பட்டியலில் எப்போது சேர்ந்தார். அதிகார நலன்களுக்காக நாட்டின் நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்வதை ஒரு வழிமுறையாகவே மேற்கொண்டு வருபவர்கள் ராஜபக்ச தரப்பு. அதில் மனோ கணேசன் எப்போது பங்காளியானார். மனோ கணேசன் மட்டுமல்ல இதற்கு துணைபோன அத்தனை எம்பிக்களும் நயவஞ்சகர்களே.      https://www.namathumalayagam.com/2020/10/blog-post.html
  • பெங்களூரை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது ஐ.பி.எல். தொடரின்  48 ஆவது லீக் ஆட்டம்  நேற்றைய தினம் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே அபுதாபியில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.  ஜோஸ் பிலிப் 33(24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9(14) ஓட்டங்களுடனும், டி வில்லியர்ஸ் 15(12) ஓட்டங்களுடனும், ஷிவம் டூப் 2(6) ஓட்டத்தையும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிலையில், 74(45) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் மொரிஸ் 4(2) ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வொஷிங்டன் சுந்தர் 10(6) ஓட்டங்களுடனும், குர்கீரத் சிங் 14(11) ஓட்டங்களையும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், போல்ட், ராகுல் சாஹர், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 165 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிகொக் 18(19) மற்றும் இஷான் கிஷன் 25(19) ஓட்டங்களையும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது.  இந்நிலையில் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார். மறுமுனையில் சவுரப் திவாரி 5(8) ஓட்டம், குருனால் பாண்டியா 10(10) ஓட்டம், ஹர்திக் பாண்டியா 17(15)ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும்  சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி 43 பந்துகளில் 79 ஓட்டங்களை குவித்தார்.  இறுதியாக 19.1 ஓவர்களில் 166 ஓட்டங்களை குவித்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   https://www.virakesari.lk/article/93183
  • பிரான்ஸ், ஜேர்மனில் மீண்டும் முடக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் புதன்கிழமை தங்கள் நாடுகளை மீண்டும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளனர். பிரான்ஸ் பிரான்ஸில் முடக்கல் நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது.  இதன்போது மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அல்லது மருத்துவ காணரங்களுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரேன் தெரிவித்துள்ளார். உணவகங்கள், மதுபானசாலைகள் போன்ற அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும். எனினும் பாடசாலைகளும் தொழிற்சாலைகளும் திறந்திருக்கும். பிரான்சில் கொவிட்-19 நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திலிருந்து மிக உயர்ந்த மடத்தில் உள்ளன. செவ்வாயன்று 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடைாயளம் காணப்பட்டனர். பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 1,280,346 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 35,834 உயிரழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.   ஜேர்மனி ஐரோப்பாவின் பல பகுதிகளை விட ஜேர்மன் குறைந்த தொற்று வீதத்தைக் கொண்டிருந்தாலும், அண்மைய வாரங்களில் வைரஸ் பரவி வரும் வேகம் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் 16 மாநில தலைவர்களின் ஒப்புதலுடன் முடக்கல் விதிமுறைகளானது நவம்பர் 2 ஆம் திகதி அமுல்படுத்தப்படும் என்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா கூறியுள்ளார். இக் காலப் பகுதியில் பாடசாலைகள் திறந்திருக்கும், சுற்றுலா நடவடிக்கைகளானது நிறுத்தப்படும் சமூக தொடர்புகள் அதிகபட்சமாக 10 நபர்களை கொண்ட இரு வீடுகளுக்கு மட்டுப்படுத்தப்படும். மதுபானசாலைகள் மூடப்பட்டு உணவகங்களின் திறப்பு விகிதம் மட்டுப்படுத்தப்படும். டட்டு, மசாஜ் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஜேர்மனின் முடக்கல் நிலையை மறு பரிசீலனை செய்ய மேர்க்கெலும், மாநில தலைவர்களும் நவம்பர் 11 ஆம் திகதி காணொளி மூலம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானம் எடுப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனில் புதன்கிழமை 14,964 புதிய கொரோனா தொற்றாளர்களும், 85 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. ஜேர்மனின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 479,621 ஆகவும், உயிரழப்பு எண்ணிக்கை 10,218 ஆகவும் பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/93184
  • தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங்-பாக் கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முன்னர் பிறப்பிக்கப்பட்ட 17 ஆண்டுகால சிறைத் தண்டனையை தென் கொரியாவின் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சம்சுங் உள்ளிட்ட தென் கொரியாவின் பெரிய நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாக பெற்றமை, தனக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் பெருநிறுவன நிதியை மோசடி செய்தல் மற்றும் தென் கொரியாவின் உளவு அமைப்பின் உத்தியோகபூர்வ நிதியை தவறாக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு லீ மியுங்-பாக் கிற்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லீ மியுங்-பாக் 2008-2013 வரையான காலப் பகுதியில் ஜனாதிபதியாக இருக்கும் முன்னரும், பின்னரும் இந்த குற்றங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. லீக்கு ஆரம்பத்தில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பல மாதங்கள் கழித்து அவர் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் இந்த ஆண்டு பெப்ரவரியில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தென் கொரியாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்தது. இந் நிலையில் லீ யின் பிணை இரத்து தொடர்பான உத்தரவு தொடர்பில் முறையிட ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆறு நாட்ககளின் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார். 78 வயதான லீ, வணிக பின்னணியுடன் தென் கொரியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தார், ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதார உயர்வை அடையாளப்படுத்தினார்.  அவர் 1960 களின் நடுப்பகுதியில் ஹூண்டாய் குழுமத்தின் கட்டுமானப் பிரிவில் நுழைவு நிலை வேலையுடன் தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் ஹூண்டாய் குழுமத்தின் கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்ததற்கு முன்பு, தென் கொரியாவின் பொருளாதாரம் வெடிக்கும் வகையில் வளர்ந்த நேரத்தில் குழுவின் விரைவான உயர்வுக்கு வழிவகுத்தமையும் குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/93205  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.