Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

திமுக அனுதாபியும், கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி விடயத்தை முதலில் டிவிட்டரில் போட்டு உடைத்தவருமான சவுக்கு சங்கரின் பேட்டி.

 

 இவ‌ர் ஆத‌ரிக்கும் திமுக்கா க‌ட்சியில் அன்மைக் கால‌மாய் எவ‌ள‌வு பிர‌ச்ச‌னைக‌ள் , எத்த‌னை பேர் க‌ட்சியை விட்டு வில‌கினார்க‌ள் , அத‌ ப‌ற்றி முக‌ நூலில் ப‌திவு போடா ச‌வுக்குச‌ங்க‌ருக்கு திரானி  இருக்கா 😁😀

Link to post
Share on other sites
 • Replies 3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சீமான், நான் இதுவரை அறிந்துவந்த தமிழக அரசியல்வாதிகளில் இன்னொருவனா? எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை? எதற்காக தமிழகமெங்கும் தலைவர் பெயரைச் சொல்

சீமான் என்றொரு காலம். ❤️❤️❤️ ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல் அவன். எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தில் நிற்கிறான். இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொட

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம்  சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

திமுக அனுதாபியும், கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி விடயத்தை முதலில் டிவிட்டரில் போட்டு உடைத்தவருமான சவுக்கு சங்கரின் பேட்டி.

 

https://youtu.be/C3VRBeHSwoI 

இதையும் கொஞ்ச‌ம் பாருங்கோ கோசான் அண்ணா 😁😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

என்ர‌ ப‌திவை வ‌டிவாய் வாசியுங்கோ , நான் இந்த‌ திரியில் ராஜிவ் காந்தி பொய் சொல்லுகிறார் என்று ஒரு போதும் எழுத‌ வில்லை எழுதின‌ ஆதார‌ம் இருந்தா காட்டுங்கோ ,

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ பொய்யை தான் எழுதி இருந்தேன் , உண்மையை சொல்ல‌ப் போனால் 2013ம் ஆண்டில் இருந்து என‌க்கு க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தை பிடிக்காது , 

யூடுப்பில் முக‌ நூலில் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு ஆத‌ர‌வாய் யார் எழுதின‌ம் என்று பாருங்கோ எல்லாம் ம‌ற்ற‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் , 

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்திட‌ம் நேர்மை இருந்து இருந்தா இவ‌ள‌வு பிர‌ச்ச‌னை வ‌ந்து இருக்காது , க‌ட்சியில் எத்த‌னையோ மூத்த‌வ‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் இட‌த்தில் வெளிப்ப‌டையாய் எல்லாத்தை சொல்லி இருந்தால் பிர‌ச்ச‌னை முடிவுக்கு வ‌ந்து இருக்கும் ,
 

1. பலர் கதைத்தும் சீமான் இறங்கி வரவில்லை என்கிறாரே கல்யாணசுந்தரம்?

2. இப்போ உங்கள் பார்வையில் ரஜீவ்காந்தி நல்லவரா அல்லது துரோகியா?

14 minutes ago, பையன்26 said:

 இவ‌ர் ஆத‌ரிக்கும் திமுக்கா க‌ட்சியில் அன்மைக் கால‌மாய் எவ‌ள‌வு பிர‌ச்ச‌னைக‌ள் , எத்த‌னை பேர் க‌ட்சியை விட்டு வில‌கினார்க‌ள் , அத‌ ப‌ற்றி முக‌ நூலில் ப‌திவு போடா ச‌வுக்குச‌ங்க‌ருக்கு திரானி  இருக்கா 😁😀

இதுதானே அரசியல். மாறி மாறி வாருவது🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

https://youtu.be/C3VRBeHSwoI 

இதையும் கொஞ்ச‌ம் பாருங்கோ கோசான் அண்ணா 😁😀

பாத்திட்டன். அதுசரி இந்த தம்பி யார்பக்கம் இப்ப? முந்தநாள் ரெண்டு பக்கமும் மனம் நோகாமல் ஒரு வீடியோ போட்டார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

1. பலர் கதைத்தும் சீமான் இறங்கி வரவில்லை என்கிறாரே கல்யாணசுந்தரம்?

2. இப்போ உங்கள் பார்வையில் ரஜீவ்காந்தி நல்லவரா அல்லது துரோகியா?

அந்த‌ ப‌ல‌ர் யார் , செந்திலுக்கு எத‌ன் அடிப்டையில் பேட்டி குடுத்தார் , அண்ண‌ன் சீமானுக்கு அருகில் இருப்ப‌வ‌ர்க‌ள் புரித‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளா , ப‌ல‌ர் மூல‌ம் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு அண்ண‌ன் சீமான் சொல்லியும் அண்ண‌ன் சீமானின் பெய‌ருக்கு க‌ல‌ங்க‌ம் ஏற்ப‌டுத்திய‌து யார் ,

பிர‌ச்ச‌னையின் முத‌ல் ஆர‌ம்ப‌மே புல‌ம்பெய‌ர் அமைப்புக‌ளிட‌ம் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி மிக‌ கேவ‌ல‌மாக‌ க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் சொன்ன‌து ,

இர‌ண்டாவ‌து க‌ட்சியில் இருந்து நீக்கின‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து க‌ட்சிக்குள் குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ணின‌து ,

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தோடு ப‌ய‌ணித்த‌ அண்ண‌ன் க‌ல்யான‌சுந்த‌ர‌த்தின் உண்மை முக‌த்தை வெளி காட்டி இருக்கிறார் , க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு துணிவு இருந்தால் அவ‌ரின் சாவ‌லுக்கு த‌யார் என்று சொல்ல‌ட்டும் பாப்போம் , 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் என் மச்சானுடைய கருத்தை அறிய ஆவல் 
 

9 hours ago, goshan_che said:

1. காவடி ஒப்பீடு உங்களை போன்ற கருத்தாளருக்கு இல்லை. 

2. கேவலம் கெட்ட திராவிட கட்சிகளே, குறிப்பாக கருணாநிதி எனும் மகா சுயநலமியே பிஜேபி யை உள்ளே கொணர்ந்து தமிழ் நாட்டிலும் பிஜெபிக்கு சீட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஆனால் அப்போதும் கூட்டணி கட்சி கூட்டு இல்லாவிட்டால் இயலாது என்ற நிலையே இருந்தது. ஆனால் சீமான், தமிழ் நாட்டில் 2/5 மக்களை தமிழரல்லாதார் ஆக்கி -அவர்களுக்கு “இந்து” என்பதை தவிர வேறு அடையாள அரசியல் இல்லை என ஆக்கி, பிஜேபி பக்கம் சாய்க்கிறார் ( மேலே இசை கூட ஒத்து கொண்ட விசயம் இது). இது பிஜேபிக்கு தமிழ் நாட்டில் ஒரு நிரந்தர - கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தும்.

3. இதனால் - பிராந்திய கட்சியுடன்  கூட்டணி சேர்ந்தால்தான் பிஜேபியால் வெல்ல முடியும் என்ற நிலை மாறி, பிஜேபியுடம் சேர்ந்தால்தான் யாரும் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இதுதான் தாமரை வளரும் முதல்படி.

4. பீகார், மஹராஸ்டிரா இன்னும் பல இடங்களில் இப்படிதான் தாமரை மலர்ந்தது.

5. ஆகவே வெளி தோற்றத்துகு சீமான் பிஜேபி எதிர்பு அரசியல் செய்தாலும் -உண்மையில் அவர் செய்வது பிஜேபியை தமிழ் நாட்டில் தனித்த சக்தியாக நிலை நிறுத்துவதே.

6. தமிழ் தேசிய அரசியல் - உண்மையிலேயே இந்த வெற்றிடத்தை (ஸ்டாலின், உதய நிதி போன்ற பிஸ்கோத்துகள், இம்சை அரசன்கள் தலைமையில் திமுக இருக்கும் காலம்) தமிழ் தேசிய (நெடுமாறன் ஐயா பாணி) அரசியலை கொண்டு நிரப்ப இது ஒரு பொன்னான வாய்ப்பே. ஆனால் தந்திரமாக இந்த வாய்ப்பையும் சீமானை கொண்டு அடைக்கிறார்கள்.

7. என் 6 படிகள் - இதை விளங்குபவர் அறிவாறி மற்றையவர் மூடர் என்பதல்ல. ஒரு பெரும் அசகாய சூரர், இதுவரை தமிழர் ஏற்படுத்திய அதி உன்னதமான தலைமை - கடைசிவரை கேபி என்ற நபரை விளங்கி கொள்ளவே இல்லை அல்லவா? அப்படி சிலதை பெரும் சூரர்களும் தவறவிடுவார்கள். நான் கூட சரி என்று 100% கூற முடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து நான் சீமானை கணித்தது இப்படியே. உண்மையான தமிழ் தேசியவாதிகளின் தொடர் வெளியேற்றம் என் கணிப்பை மேலும் உறுதியாக்கிறது.

8. என் கணிப்பு பிழை என்றால் சந்தோசம். என் கணிப்பு சரி என்றால் I told you so என்று அன்று வந்து சொல்வதில் எனக்கு ஒரு சந்தோசமும் இல்லை.

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

 

அவர் 2009 க்கு முதலில் இருந்தே டக்லசின் ஆதரவாளர் ...சுகன் என்ற பெயரில் அவர் அன்று புலிகளுக்கு எதிராய் எழுதிய கருத்துக்கள் இதே யாழில் கொட்டி கிடக்குது ...மனிதர்கள் மாறுவது வளமை தானே 
 

8 hours ago, Nathamuni said:

கோசன்,

உங்கள் நீண்ட கட்டுரைக்கு நன்றியும், பாராட்டுக்களும்...

ஆனால் எனக்கு புரியாத விடயம், ஏன் இந்திய அரசியல் குறித்து நமக்கு பாடம் நடத்துகிறீர்கள்?

சீமானின் கட்சி அப்படி நடந்து கொள்ளும், இப்படி நடந்து கொள்ளும்.... பிஜேபி உள்ளே வரும் என்பது போன்ற உள்வீட்டு அரசியல் குறித்த விளக்கம் நமக்கு எதுக்கு என்கிறேன்?  

மாறாக, உங்கள் நேரத்தினை, எமது அரசியலுக்கு, அதில் உள்ள சிக்கல்களை விளக்க பயன்படுத்தலாமே.

நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் உதவியே வேண்டாம் என்று. பிச்சை வேண்டாம், நாயை பிடி.

நமது ஊரில், இளவயது உள்ள அனைவருக்கும் உள்ள கனவு வெளிநாடு வருவது.

இந்த நிலை தொடர்ந்தால், இறக்கும் வயதுபோனார் பிணங்களை தூக்கி போட சிங்களம் தான் வரும். அதன் பின் தமிழர் இல்லாத நாட்டில், ஈழம் எதுக்கு என்கிற கேள்வி எழுமே?

முதலில், நமது இளைஞர்களின் மனதை மாத்தி, என்ட்டர்ப்ரூனேர்ஸ் ஆக மாத்தக்கூடிய வழிவகைகளில் நமது சக்தியை பயன்படுத்த வேண்டும்.

அதுக்கு, ஒரு திரியினை திறந்து, உங்கள் திறமையினை அதில் காட்டுங்கள். நாமும் பேராதரவு தருவதுடன், பங்களிப்போம்.

அதனை விடுத்து, இந்த அரைக்காசுக்கு பெறுமதி இல்லாத விடயத்தில், முழு சக்தியினை விரயம் செய்யாதீர்கள் என்று, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீ என்ன எனக்கு சொல்வது என்றால்.... உங்கள் இஷடம்..

நீங்களும் அதைத் தானே செய்கிறீர்கள் ...இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பின்னால் தொடர்வதை  விட்டு விட்டு ஈழத்தில் உங்களுக்கு பிடித்த அரசியல்வாதியை பலப்படுத்தலாம் அல்லவா? 
 

3 hours ago, பையன்26 said:

என்ன‌ நாதா ( முத‌ல்வ‌னின் கேள்வியை நீங்க‌ளே அவ‌ர் இட‌ம் திருப்ப‌ கேக்கிறீங்க‌ள் ) ந‌ல்ல‌வ‌ரா கெட்ட‌வ‌ரா என்று /

என்னை கேட்டால் முத‌ல்வ‌ன் ந‌ல்ல‌வ‌ர் என்று தான் சொல்லுவேன் ,

முத‌ல்வ‌ன் போன‌ நூற்றாண்டில் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி இருப்பார் என்று ப‌ல‌ வாட்டி யோசிச்சு இருக்கிறேன் , (குறுக்கால‌ போவான் ) தான் முத‌ல்வ‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதுகிறார் என்ற‌ சிறு ச‌ந்தேக‌ம் 😁😀

ஹாஹா குறுக்ஸ் இதைக் கேட்டால் தற்கொலை செய்வார்😂 
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

பாத்திட்டன். அதுசரி இந்த தம்பி யார்பக்கம் இப்ப? முந்தநாள் ரெண்டு பக்கமும் மனம் நோகாமல் ஒரு வீடியோ போட்டார்.

அவ‌ர் எப்ப‌வும் அண்ண‌ன் சீமானோடு தான் , என‌க்கு தோழ‌ர் விக்கியின் நேர்மை பொறுமை அன்பு இவை அனைத்தும் பிடிக்கும் , 

2016  தேர்த‌லில்  க‌ட்சிக்கு இர‌வு ப‌க‌ல் பாராம‌ல் க‌டின‌மாய் உழைத்த‌வ‌ர் , 

விக்கி அள‌வுக்கு க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்காக‌ வேர்வை சிந்த‌ல‌ , 

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் இவ‌ள‌வு அசிங்க‌மும் செய்தா பிற‌க்கு நான் இப்ப‌வும் க‌ட்சிக்கு ஆத‌ர‌வு கொடுக்க‌ தாயார் என்று சொல்லுவ‌து உண்மையில் கேலி கூத்தாய் இருக்கு ,


( உதார‌ண‌த்துக்கு ) இனி அண்ண‌ன் சீமானை இன்னொரு ஊட‌க‌ம் பேட்டி எடுக்க‌ , அதுக்கு க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் மீண்டும் அடி ம‌ன‌சில் ந‌ஞ்சை வைத்து கொண்டு வெளியில் ந‌ல்ல‌வ‌ன் போல் பேட்டி குடுக்க‌ , தேவை இல்லா குழ‌ப்ப‌ங்க‌ள் தான் வ‌ரும் , அண்ண‌ன் சீமான் இதுவ‌ரை மெள‌வுன‌மாய் இருந்த‌ மாதிரி இனியும் இருந்தா க‌ல்யாண‌சுந்த‌ர‌ விவ‌கார‌ம் அய்நாத‌ன் விவ‌கார‌ம் போல் கால‌ப் போக்கில் காணாம‌ல் போயிடும் , அண்ண‌ன் சீமான் அத‌ திற‌ம் ப‌ட‌ கையாள்வார் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொள்கைப்பிடிப்பு கட்சி அல்லது அமைப்பு பலமடைவதை பல சக்திகளும் கலவரத்தோடு அணுகுவது புதிதல்ல. 

எமது தேசிய தலைவர் கூட ஆரம்பம் தொட்டு எத்தனையோ சவால்களை சந்தித்தே வந்துள்ளார். 

ஆனால்.. இன்று எமது தமிழினம் பல்வேறு புற அழுத்தங்களால்.. சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில்.. பலமான கட்சி மற்றும் அமைப்பு ஒன்றின் இருப்பே அந்த இனத்தின் சிதைவை தடுத்து நிறுத்த உதவும்.

அது ஈழக் களமாகட்டும்.. தமிழகமாகட்டும்.. மலேசியா ஆகட்டும்.. புலம்பெயர் நாடுகளாகட்டும்.. நாம் தமிழராக தமிழர்கள் ஒருங்கிணைவதே அவர்களுக்குப் பலம். தமிழ் தேசிய இருப்பு எழுச்சி ஒன்றே தமிழர்களுக்கான சனநாயகக் கவசமாக இருக்க முடியும்.

எம்மில் சிலர் எப்பவுமே.. பிளவுகளுக்கு.. துரோகங்களுக்கு துணைபோவர்களாகவும்.. பிளவுகளால் சுய இன்புறுபவர்களாகவும்.. சுய இலாபம் தேடுபவர்களாகவும் இருப்பதை காக்கவன்னியன் காலத்தில் இருந்தென்ன அதற்கு முன்பிருந்தே காண்கிறோம்.

ஜேசு நாதரையும் கூட இருந்தவன் தான் காட்டிக்கொடுக்கிறான்.. 

ஈழத்தில்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மணிவண்ணனை வைத்து பிளவு.. தமிழகத்தில்.... கல்யாண சுந்திரம்.. ராஜீவ் காந்தியை வைச்சு.. நாம் தமிழருக்குள் பிளவு.. இப்படியான தோற்றப்பாடுகள் மூலம்.. தமிழ் தேசிய அரசியலை பிராந்தியத்தில் சிதைப்பதை நன்கு திட்டமிட்டு சில சக்திகள் திராவிடக் கும்பல்களின் உதவியோடும்.. சமூக வலை பித்தர்களின் ஆதரவோடும் நடைமுறைப்படுத்த முனைகிறார்கள்.

நாம் தமிழர் கட்சிக்குள் எத்தனையோ பிடுங்குப்பாடுகள் உருவாக்கப்பட்டும்.. அந்தக் கட்சியில் இருந்து இதோ 100 கணக்கில் தம்மோடு வந்து சேரினம் என்று கருணாநிதி காலத்திலேயே தி மு க கணக்குக் காட்டிய போதும்.. அந்தக் கட்சியை சிதைக்க முடியவில்லை.. திராவிடக் கும்பல்களால்.. காரணம்.. கட்சி அல்ல.. நாம் தமிழர்.. தமிழ் தேசியத்தின் கொள்கையில்.. உறுதியாக இருப்பது தான்.

கல்யாண சுந்தரம் போனால்.. இன்னொரு கல்யாண ராமன் வருவான்.. ராஜீவ் காந்தி போனால்... இன்னொரு திலீபன் வருவான்.. அது பிரச்சனையே அல்ல.. நாம் தமிழ் கட்சி அதன் தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக இருப்பது மட்டுமே அதன் தனித்துவ இன அடையாள இருப்புக்கு மிக அவசியம். 

மற்றும்படி.. இப்படியான குழப்பங்கள்.. பிளவுகள்.. என்பது அரசியல் புரியாத மக்களுக்கு ஏதோ கட்சியின் முடிவாகக் காட்டப்படலாம்.. ஆனால்.. இதனால்.. திராவிடக் கும்பல்கள் நிச்சயம் பெரிய பயனடைய முடியாது. மாறாக நாம் தமிழரையும் தமிழ் தேசியக் கொள்கையையும் பலப்படுத்துவதே நிகழும்.

அதற்கு சாட்சி.. இந்தக் காணொளி.. சீமான் செய்ய வேண்டியதை இன்று அவர் வளர்த்த தம்பிகளே செய்ய முடியுது என்றால்.. அதுதான் தமிழ் தேசியக் கொள்கையின் பலம்.. அதை எவரும் சிதைக்க முடியாது.

எனவே.. அடுத்தவர்களின் தேவைக்காக எமக்குள் பிளவுகளை புடுங்குப்பாடுகளை ஊக்குவிக்காமல்.. எல்லோரும் ஒற்றுமையாக.. கொண்ட கொள்கைக்கு உண்மையாக செயற்படுவதே அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு.. ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.. தமிழினத்தின் விடிவுக்கு உதவ முடியும்.

 

Edited by nedukkalapoovan
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

****

On 9/9/2020 at 20:38, பையன்26 said:

அந்த‌ ப‌ல‌ர் யார் , செந்திலுக்கு எத‌ன் அடிப்டையில் பேட்டி குடுத்தார் , அண்ண‌ன் சீமானுக்கு அருகில் இருப்ப‌வ‌ர்க‌ள் புரித‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளா , ப‌ல‌ர் மூல‌ம் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு அண்ண‌ன் சீமான் சொல்லியும் அண்ண‌ன் சீமானின் பெய‌ருக்கு க‌ல‌ங்க‌ம் ஏற்ப‌டுத்திய‌து யார் ,

பிர‌ச்ச‌னையின் முத‌ல் ஆர‌ம்ப‌மே புல‌ம்பெய‌ர் அமைப்புக‌ளிட‌ம் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி மிக‌ கேவ‌ல‌மாக‌ க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் சொன்ன‌து ,

இர‌ண்டாவ‌து க‌ட்சியில் இருந்து நீக்கின‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து க‌ட்சிக்குள் குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ணின‌து ,

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தோடு ப‌ய‌ணித்த‌ அண்ண‌ன் க‌ல்யான‌சுந்த‌ர‌த்தின் உண்மை முக‌த்தை வெளி காட்டி இருக்கிறார் , க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு துணிவு இருந்தால் அவ‌ரின் சாவ‌லுக்கு த‌யார் என்று சொல்ல‌ட்டும் பாப்போம் , 

கல்யாணசுந்தரம் இப்படி பேசியதற்கு ஒலிபதிவு ( போன் உரையாடலை ஒலிபதிவு) ஆதாரம் ஏதும் உண்டா?

Edited by நியானி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

ஒரு கொள்கைப்பிடிப்பு கட்சி அல்லது அமைப்பு பலமடைவதை பல சக்திகளும் கலவரத்தோடு அணுகுவது புதிதல்ல. 

எமது தேசிய தலைவர் கூட ஆரம்பம் தொட்டு எத்தனையோ சவால்களை சந்தித்தே வந்துள்ளார். 

ஆனால்.. இன்று எமது தமிழினம் பல்வேறு புற அழுத்தங்களால்.. சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில்.. பலமான கட்சி மற்றும் அமைப்பு ஒன்றின் இருப்பே அந்த இனத்தின் சிதைவதை தடுத்து நிறுத்த உதவும்.

அது ஈழக் களமாகட்டும்.. தமிழகமாகட்டும்.. மலேசியா ஆகட்டும்.. புலம்பெயர் நாடுகளாகட்டும்.. நாம் தமிழராக தமிழர்கள் ஒருங்கிணைவதே அவர்களுக்குப் பலம். தமிழ் தேசிய இருப்பு எழுச்சி ஒன்றே தமிழர்களுக்கான சனநாயகக் கவசமாக இருக்க முடியும்.

எம்மில் சிலர் எப்பவுமே.. பிளவுகளுக்கு.. துரோகங்களுக்கு துணைபோவர்களாகவும்.. பிளவுகளால் சுய இன்புறுபவர்களாகவும்.. சுய இலாபம் தேடுபவர்களாகவும் இருப்பதை காக்கவன்னியன் காலத்தில் இருந்தென்ன அதற்கு முன்பிருந்தே காண்கிறோம்.

ஜேசு நாதரையும் கூட இருந்தவன் தான் காட்டிக்கொடுக்கிறான்.. 

ஈழத்தில்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மணிவண்ணனை வைத்து பிளவு.. தமிழகத்தில்.... கல்யாண சுந்திரம்.. ராஜீவ் காந்தியை வைச்சு.. நாம் தமிழருக்குள் பிளவு.. இப்படியான தோற்றப்பாடுகள் மூலம்.. தமிழ் தேசிய அரசியலை பிராந்தியத்தில் சிதைப்பதை நன்கு திட்டமிட்டு சில சக்திகள் திராவிடக் கும்பல்களின் உதவியோடும்.. சமூக வலை பித்தர்களின் ஆதரவோடும் நடைமுறைப்படுத்த முனைகிறார்கள்.

நாம் தமிழர் கட்சிக்குள் எத்தனையோ பிடுங்குப்பாடுகள் உருவாக்கப்பட்டும்.. அந்தக் கட்சியில் இருந்து இதோ 100 கணக்கில் தம்மோடு வந்து சேரினம் என்று கருணாநிதி காலத்திலேயே தி மு க கணக்குக் காட்டிய போதும்.. அந்தக் கட்சியை சிதைக்க முடியவில்லை.. திராவிடக் கும்பல்களால்.. காரணம்.. கட்சி அல்ல.. நாம் தமிழர்.. தமிழ் தேசியத்தின் கொள்கையில்.. உறுதியாக இருப்பது தான்.

கல்யாண சுந்தரம் போனால்.. இன்னொரு கல்யாண ராமன் வருவான்.. ராஜீவ் காந்தி போனால்... இன்னொரு திலீபன் வருவான்.. அது பிரச்சனையே அல்ல.. நாம் தமிழ் கட்சி அதன் தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக இருப்பது மட்டுமே அதன் தனித்துவ இன அடையாள இருப்புக்கு மிக அவசியம். 

மற்றும்படி.. இப்படியான குழப்பங்கள்.. பிளவுகள்.. என்பது அரசியல் புரியாத மக்களுக்கு ஏதோ கட்சியின் முடிவாகக் காட்டப்படலாம்.. ஆனால்.. இதனால்.. திராவிடக் கும்பல்கள் நிச்சயம் பெரிய பயனடைய முடியாது. மாறாக நாம் தமிழரையும் தமிழ் தேசியக் கொள்கையையும் பலப்படுத்துவதே நிகழும்.

அதற்கு சாட்சி.. இந்தக் காணொளி.. சீமான் செய்ய வேண்டியதை இன்று அவர் வளர்த்த தம்பிகளே செய்ய முடியுது என்றால்.. அதுதான் தமிழ் தேசியக் கொள்கையின் பலம்.. அதை எவரும் சிதைக்க முடியாது.

எனவே.. அடுத்தவர்களின் தேவைக்காக எமக்குள் பிளவுகளை புடுங்குப்பாடுகளை ஊக்குவிக்காமல்.. எல்லோரும் ஒற்றுமையாக.. கொண்ட கொள்கைக்கு உண்மையாக செயற்படுவதே அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு.. ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.. தமிழினத்தின் விடிவுக்கு உதவ முடியும்.

 

ராஜிவ் காந்தி எல்லாம் விவாத‌த்தில் க‌ல‌ந்து கொண்டு சுத‌ப்பி அடிச்ச‌து தான் உண்மை , க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ராஜிவ் காந்திய‌ விட‌ எதிர் அணியை கேள்வி கேட்டு ம‌டக்க‌ கூடிய‌வ‌ர் , ஆனால் இடும்பாவனம் கார்த்திக் இவ‌ர்க‌ள் இருவ‌ரை விட‌ துணிவோடு திமிரோ உண்மையை உர‌க்க‌ சொல்ல‌க் கூடிய‌வ‌ர் எதிர் அணிய‌ விவாத‌த்த‌ விட்டே ஓட‌ செய்த‌வ‌ர் ,

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தை ராஜிவ்காந்தியை விட‌ , இனி வ‌ரும் தொலைக் காட்சி விவாத‌த்தில் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் , அண்ண‌ன் சீமான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுக்காம‌ இர‌ண்டு ச‌தி செய்யும் கும்ப‌ல‌ தொட‌ர்ந்து விவாத‌த்துக்கு அனுப்பிய‌து அண்ண‌ன் சீமான் செய்த‌ மிக‌ப் பெரும் த‌வ‌று ச‌கோத‌ரா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

இந்த நேரத்தில் என் மச்சானுடைய கருத்தை அறிய ஆவல் 
 

அவர் 2009 க்கு முதலில் இருந்தே டக்லசின் ஆதரவாளர் ...சுகன் என்ற பெயரில் அவர் அன்று புலிகளுக்கு எதிராய் எழுதிய கருத்துக்கள் இதே யாழில் கொட்டி கிடக்குது ...மனிதர்கள் மாறுவது வளமை தானே 
 

நீங்களும் அதைத் தானே செய்கிறீர்கள் ...இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பின்னால் தொடர்வதை  விட்டு விட்டு ஈழத்தில் உங்களுக்கு பிடித்த அரசியல்வாதியை பலப்படுத்தலாம் அல்லவா? 
 

ஹாஹா குறுக்ஸ் இதைக் கேட்டால் தற்கொலை செய்வார்😂 
 

1. சுகன் அவரா என எனக்கு தெரியாது. ஆனால் சண்டமாருதன் என்ற பெயரிலேயே டக்லசின் அரசியலுகு ஆதரவாக எழுதியவர் என நல்ல நியாபகம். 1991 இல் இருந்து கொள்கை முடிவாக தமிழ் தேசிய அரசியல் ஒரு மாயை என முடிவெடுத்து இன்று வரை செயல்படுபவர் டக்லஸ். ஒரு காலம் டக்லசை ஆதரித்த அதே ஒருவரால் எப்படி இப்போ 180 பாகை எதிரான சீமானின் அரசியலை ஆதரிக்கவும் முடிகிறது? அவரின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
 

2. நாதம்- அவர் சீமான் பஜனை செய்வார். தப்புதப்பா சீமான் சொன்னதை வைத்து வரலாற்று புனைவை வெளியிடுவார். நாம் ஏன் என்று கேட்டால் “ஐயோ கோசான் தேவையில்லாமல் தமிழக/இந்திய அரசியலை அவித்து கொட்டுறான் என்பார்🤣

3. அவருக்கு இலங்கையில் பிடித்த தலைவர் கருணா. ஆள் எலெக்சன்ல வெல்லேலெ எண்டு கவலை. நாங்கெல்லாம் சிங்களவனோட இப்ப இருக்கிறமாரியே “ஐக்கியமா” போய் ஒண்ணுகிருக்கணுமாம். ஆனால் அப்படி பேசுறதானும் தமிழ் தேசியவாதியாம். காலக்கொடுமை.

4 முன்னர் நான் தான் குறுக்ஸ் எண்டு நீங்கள் கண்டுபிடிச்சது என்னாச்சு அக்காச்சி?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 21:22, goshan_che said:

***

கல்யாணசுந்தரம் இப்படி பேசியதற்கு ஒலிபதிவு ( போன் உரையாடலை ஒலிபதிவு) ஆதாரம் ஏதும் உண்டா?

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ஏன் த‌ள்ளி வைக்க‌ப் ப‌ட்டார் கால‌ம் ப‌தில் சொல்லும் அப்போது நான் எழுதின‌துக்கு விடை அதில் இருந்து தெரிந்து கொள்ள‌லாம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

***

Quote

கல்யாணசுந்தரம் இப்படி பேசியதற்கு ஒலிபதிவு ( போன் உரையாடலை ஒலிபதிவு) ஆதாரம் ஏதும் உண்டா?

கலியாணசுந்தரம், கட்சில இருக்கிறார், இல்லை..... நாளை அவர் மன்னிப்பு கோரலாம், தலைமை மன்னிக்கலாம்..... வைகோவினை போலவே, அவரும் எச்சியை துடைச்சுப்போட்டு வந்து அரசியல் பேசலாம். 

உங்களுக்கு நாம் தமிழர் அரசியல் தானே பிரச்சனை.... கட்சிக்குள் உள்ள, உள்வீட்டு பிரச்சினைக்குள் என்ன கவலை? 

Edited by நியானி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 22:02, Nathamuni said:

***

கலியாணசுந்தரம், கட்சில இருக்கிறார், இல்லை..... நாளை அவர் மன்னிப்பு கோரலாம், தலைமை மன்னிக்கலாம்..... வைகோவினை போலவே, அவரும் எச்சியை துடைச்சுப்போட்டு வந்து அரசியல் பேசலாம். 

உங்களுக்கு நாம் தமிழர் அரசியல் தானே பிரச்சனை.... கட்சிக்குள் உள்ள, உள்வீட்டு பிரச்சினைக்குள் என்ன கவலை? 

1. ***

2. என்னை பொறுத்தவரை இது உட்கட்சி பிரச்சினை அல்ல. பிஜேபி-சீமான் கூட்டு சதி எனும் கொடி சுற்றி பிறக்கும் பிள்ளை தமிழ்தேசியம். இந்த கொடியை அறுத்து, சதியை முறியடித்து தமிழ் தேசியம் தன்னை தமிழகத்தில் பிரசவிக்க முயற்சிக்கும் காலம் இது. ஆகவேதான் என் கரிசனை.

Edited by நியானி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பின்னால் தொடர்வதை  விட்டு விட்டு ஈழத்தில் உங்களுக்கு பிடித்த அரசியல்வாதியை பலப்படுத்தலாம் அல்லவா? 

👍 இங்கு கருத்து எழுதும் பலருக்கு பயனுள்ள அறிவுரை.

 

1 hour ago, goshan_che said:

டக்லசை ஆதரித்த அதே ஒருவரால் எப்படி இப்போ 180 பாகை எதிரான சீமானின் அரசியலை ஆதரிக்கவும் முடிகிறது?

டக்லசை பிடிக்கவில்லை என்றால் அதற்காக இந்தியாவில் உள்ள சீமனை ஆதரிக்க வேண்டுமா :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. சுகன் அவரா என எனக்கு தெரியாது. ஆனால் சண்டமாருதன் என்ற பெயரிலேயே டக்லசின் அரசியலுகு ஆதரவாக எழுதியவர் என நல்ல நியாபகம். 1991 இல் இருந்து கொள்கை முடிவாக தமிழ் தேசிய அரசியல் ஒரு மாயை என முடிவெடுத்து இன்று வரை செயல்படுபவர் டக்லஸ். ஒரு காலம் டக்லசை ஆதரித்த அதே ஒருவரால் எப்படி இப்போ 180 பாகை எதிரான சீமானின் அரசியலை ஆதரிக்கவும் முடிகிறது? அவரின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
 

2. நாதம்- அவர் சீமான் பஜனை செய்வார். தப்புதப்பா சீமான் சொன்னதை வைத்து வரலாற்று புனைவை வெளியிடுவார். நாம் ஏன் என்று கேட்டால் “ஐயோ கோசான் தேவையில்லாமல் தமிழக/இந்திய அரசியலை அவித்து கொட்டுறான் என்பார்🤣

3. அவருக்கு இலங்கையில் பிடித்த தலைவர் கருணா. ஆள் எலெக்சன்ல வெல்லேலெ எண்டு கவலை. நாங்கெல்லாம் சிங்களவனோட இப்ப இருக்கிறமாரியே “ஐக்கியமா” போய் ஒண்ணுகிருக்கணுமாம். ஆனால் அப்படி பேசுறதானும் தமிழ் தேசியவாதியாம். காலக்கொடுமை.

4 முன்னர் நான் தான் குறுக்ஸ் எண்டு நீங்கள் கண்டுபிடிச்சது என்னாச்சு அக்காச்சி?

இப்பவும் நீங்கள் குறுக்ஸ் என்று சந்தேகம் இருக்கு🙂

நாதமின் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது ...ஆனால் உங்களை மாதிரி சீவியை நம்பி அங்கு மிச்சமிருக்கும் மக்களையும் உசுப்பேத்தி இல்லாமல் செய்ய அவர் முயற்சி செய்யவில்லை என்பதில் சிறு நிம்மதி 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2. நாதம்- அவர் சீமான் பஜனை செய்வார். தப்புதப்பா சீமான் சொன்னதை வைத்து வரலாற்று புனைவை வெளியிடுவார். நாம் ஏன் என்று கேட்டால் “ஐயோ கோசான் தேவையில்லாமல் தமிழக/இந்திய அரசியலை அவித்து கொட்டுறான் என்பார்🤣

3. அவருக்கு இலங்கையில் பிடித்த தலைவர் கருணா. ஆள் எலெக்சன்ல வெல்லேலெ எண்டு கவலை. நாங்கெல்லாம் சிங்களவனோட இப்ப இருக்கிறமாரியே “ஐக்கியமா” போய் ஒண்ணுகிருக்கணுமாம். ஆனால் அப்படி பேசுறதானும் தமிழ் தேசியவாதியாம். காலக்கொடுமை.

உங்கள் இஷ்டத்துக்கு அளந்து விடுகிறீர்கள்...

சீமான் பஜனை நான் பாடுகிறேன் சரி, சீமான் எதிர் பஜனை பாடுகிறேன் என்று அமித்சா வரை போய் அலம்பறை பண்ணுகிறீர்கள். உங்கள் வரலாற்று புனைவு பார்த்தோமே.... மெய்ம்மா பேகம் என்ற இந்திரா காந்தி... பெரோஸ் கான் என்ற பெரோஸ் காந்தி

கருணா எனக்கு பிடித்த தலைவரா? 

மகிந்தா தான் எனக்கு பிடித்த தலைவர் தல.... ஏனெனில் ..... னை எதிர்த்து அரசியல் செய்தால், பஜனை பாடினால் சில ஆதாயங்கள் உண்டு என்று தகவல் அனுப்பி இருப்பதால். 😁

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

உங்கள் இஷ்டத்துக்கு அளந்து விடுகிறீர்கள்...

சீமான் பஜனை நான் பாடுகிறேன் சரி, சீமான் எதிர் பஜனை பாடுகிறேன் என்று அமித்சா வரை போய் அலம்பறை பண்ணுகிறீர்கள்.

கருணா எனக்கு பிடித்த தலைவரா? 

மகிந்தா தான் எனக்கு பிடித்த தலைவர் தல.... ஏனெனில் ..... னை எதிர்த்து அரசியல் செய்தால், பஜனை பாடினால் சில ஆதாயங்கள் உண்டு என்று தனி மடலில் சொல்லி இருப்பதால். 😁

சரி விடுங்கள்நாதம்.

நீங்கள் “அந்தோணியாருக்கு பகிடியும் விளங்கேல்ல, வெற்றியும் விளங்கல்ல” என்டமாரி எழுதுவியள் என நான் முன்பே எதிர்பார்த்தது தான்🤣.

ஆனால் உங்களதும், ரதியினதும் அரசியல் நிலைப்பாடு ஒன்றுதான். அதாவது, இந்திய, சர்வதேச அழுத்தம் எதுவும் வேண்டாம், பேசாமால் இருக்கிறமாரி சிங்களவனோட வாழுவம். 

என்ன அவ கருணாவை முன்நிறுத்துறா நீங்கள் பொதுவாக சொல்கிறீர்கள்.

இந்த நிலையில் இருந்து பார்பதால்தான் உங்களால் சீமான் பற்றிய என் அந்தரிப்பை புரிய முடியவில்லை.

இது உங்கள் பார்வை. இப்படி சொல்வதால் நீங்கள் துரோகி என்றெல்லாம் நான் கூச்சல் இடப்போவதில்லை.

ஆனால் இந்த கொள்கை உள்ள நீங்கள் தயவுசெய்து உங்களை தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லாதீர்கள்.

உங்கள் அரசியல் நிலைப்பாடு தமிழ் தேசியத்துக்கு 100% எதிரானது.

16 minutes ago, ரதி said:

இப்பவும் நீங்கள் குறுக்ஸ் என்று சந்தேகம் இருக்கு🙂

நாதமின் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது ...ஆனால் உங்களை மாதிரி சீவியை நம்பி அங்கு மிச்சமிருக்கும் மக்களையும் உசுப்பேத்தி இல்லாமல் செய்ய அவர் முயற்சி செய்யவில்லை என்பதில் சிறு நிம்மதி 

இந்த சந்தேகம்தான் நான் யாழில் எழுதி சேர்த்த ஒரே சொத்து 🤣.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

சரி விடுங்கள்நாதம்.

நீங்கள் “அந்தோணியாருக்கு பகிடியும் விளங்கேல்ல, வெற்றியும் விளங்கல்ல” என்டமாரி எழுதுவியள் என நான் முன்பே எதிர்பார்த்தது தான்🤣.

ஆனால் உங்களதும், ரதியினதும் அரசியல் நிலைப்பாடு ஒன்றுதான். அதாவது, இந்திய, சர்வதேச அழுத்தம் எதுவும் வேண்டாம், பேசாமால் இருக்கிறமாரி சிங்களவனோட வாழுவம். 

என்ன அவ கருணாவை முன்நிறுத்துறா நீங்கள் பொதுவாக சொல்கிறீர்கள்.

இந்த நிலையில் இருந்து பார்பதால்தான் உங்களால் சீமான் பற்றிய என் அந்தரிப்பை புரிய முடியவில்லை.

இது உங்கள் பார்வை. இப்படி சொல்வதால் நீங்கள் துரோகி என்றெல்லாம் நான் கூச்சல் இடப்போவதில்லை.

ஆனால் இந்த கொள்கை உள்ள நீங்கள் தயவுசெய்து உங்களை தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லாதீர்கள்.

உங்கள் அலம்பறைக்கு, நான் யாருக்கோ வேடிக்கையாக தந்த பதிலை கொண்டு வந்து சீரியஸ் ஆக போடுவது.... பிறகு “அந்தோணியாருக்கு பகிடியும் விளங்கேல்ல, வெற்றியும் விளங்கல்ல” என்று அசடு வழிவது.... 

சர்வதேச அழுத்தம் வரும், எவ்வாறு வரும் என்று பல திரிகளில் எழுதி உள்ளேன்.

இந்தியாவால் அழிவு தான் வந்தது. இனியும் வரவும் வேண்டாம், அழிவும் வேண்டாம் என்று தானே சொல்கிறேன்.

இந்தியா 1987ல் ஒழுங்கு செய்த 13 அமைந்த தீர்வினை முழுமையாக அமுலாக்க அழுத்தம் தரவே முடியாமல் இவ்வளவு காலம் கடந்து விட்டது. 

இனியும் அது செய்கிறோம், இது புடுங்குகிறோம் என்று வரவும் வேணாம். நாமும் எதிர்பார்க்கவில்லை. 

சாட்சிக்காரன் இந்தியாவை நம்பி நாசமறுவதிலும் பார்க்க, சண்டைக்காரன் சிங்களவனிடம் காலில் விழலாம் என்பதே எனது கருத்து.. 

இதனை அப்படியே தலைகீழாக மாத்தி அலம்பறை பண்ண வேண்டாம்.

எனது பதிவுகளை, உங்களுக்கு தகுந்தது போல மாத்தி, கருத்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் தமிழ் தேசிய வாதியோ, இல்லையோ, நீங்கள் இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.  

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

சரி விடுங்கள்நாதம்.

நீங்கள் “அந்தோணியாருக்கு பகிடியும் விளங்கேல்ல, வெற்றியும் விளங்கல்ல” என்டமாரி எழுதுவியள் என நான் முன்பே எதிர்பார்த்தது தான்🤣.

ஆனால் உங்களதும், ரதியினதும் அரசியல் நிலைப்பாடு ஒன்றுதான். அதாவது, இந்திய, சர்வதேச அழுத்தம் எதுவும் வேண்டாம், பேசாமால் இருக்கிறமாரி சிங்களவனோட வாழுவம். 

என்ன அவ கருணாவை முன்நிறுத்துறா நீங்கள் பொதுவாக சொல்கிறீர்கள்.

இந்த நிலையில் இருந்து பார்பதால்தான் உங்களால் சீமான் பற்றிய என் அந்தரிப்பை புரிய முடியவில்லை.

இது உங்கள் பார்வை. இப்படி சொல்வதால் நீங்கள் துரோகி என்றெல்லாம் நான் கூச்சல் இடப்போவதில்லை.

ஆனால் இந்த கொள்கை உள்ள நீங்கள் தயவுசெய்து உங்களை தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லாதீர்கள்.

உங்கள் அரசியல் நிலைப்பாடு தமிழ் தேசியத்துக்கு 100% எதிரானது.

இந்த சந்தேகம்தான் நான் யாழில் எழுதி சேர்த்த ஒரே சொத்து 🤣.

 

நீங்களென்ன தேசியத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளீர்களா?....மற்றவரை பார்த்து நீ தேசியவாதி இல்லை என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது ?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இசை சார் உங்களுக்கு இப்போது நன்றாக தெரிந்து இருக்கும் நா த கட்சி போய்க்கொண்டிருக்கும் பாதை , ஆரம்பத்தில் ஆதரவு கொடுக்கலாம் ஏதோ ஒரு நம்பிக்கையில் சரி ஆக இருப்பார்கள் என நினைத்து  அதில் தவறில்லை , மீண்டும் மீண்டும் தவறுகள் நடக்கும் பட்ஷத்தில் உங்களின் ஆதரவை மறு பரிசீலனை செய்வதில் தப்பில்லை. 
பாக்யராஜன் மீடியா ஒருங்கிணைப்பாளர் என்கிறார்கள் இது வரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கலந்தது இல்லை என்கிறார்கள். பிரச்சினை பாக்கியராஜனுக்கும் கல்யாணசுந்தரத்திற்குமே பாக்யராஜன் மணி செந்திலின் மைத்துனர் (சகோதரியின் கணவர் ) 
கல்யாண சுந்தரம் விஜய் டீ.வி விவாத அரங்கு மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகம் பின்னர் கடசியில் இணைந்தார்.. சீமானுடன் ஆரம்பகாலத்தில் இருந்தே பயணிக்கிறார் அவரை இடையில் வந்தவர் என்கிறார்கள். 

 

#####################################################################

கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி இருவரும் வெறும் மேடை பேச்சாளர்கள் - சீமான் !!!
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சீமான் அவர்களின் கனிவான கவனத்திற்காக... 👇👇👇
- நீங்கள் பெரியார் திராவிட கழகத்தில் மேடை பேச்சாளாராக இருந்த 2006 காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழக மாநில துணை தலைவர் மற்றும் இளைஞரணி தலைவராக இருந்தவர் 'ஆளுமைமிக்க' பேராசிரியர் கல்யாணசுந்தரம்... !!!
- நீங்கள் திரைப்பட இயக்குனராக இருந்து கொண்டு, தமிழ் திரையுலகம் நடத்திய கூட்ட மேடைகளில் பேச்சாளராக பேசிக்கொண்டு இருந்த 2006 காலகட்டத்தில்... மாணவர் அமைப்பை கட்டமைத்து தமிழீழ பிரச்சாரங்களை முன்னெடுத்தவர்... 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், சிவகங்கை தொகுதியில் அந்த சமயம் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தை எதிர்த்து...அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல்...வீதியெங்கும் பிரச்சாரம் செய்தவர் 'ஆளுமைமிக்க' வழக்கறிஞர் ராஜீவ் காந்தி...
 
############################################################################
கொண்ட கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியில் நடக்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டிய பேராசிரியர் திரு ச.கல்யாணசுந்தரம் அவர்களை வெளியேற்ற திட்டமிட்ட 'லெட்டர் பேடு குழுவினர்'... கடந்த இரண்டு நாட்களாக, அவர் நிதி வாங்கி ஏமாற்றியவர் என்று போலியாக பரப்புரை செய்து கொண்டு இருப்பதை காண முடிகிறது...
கல்யாணசுந்தரம் அவர்களின் நேர்மை மீது எடுத்துக்காட்டுகளாக எத்தனையோ உதாரணங்களை சொல்லமுடியும், அந்த வகையில் ஐரோப்பாவில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்...
கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக ஐரோப்பாவின் பிரான்ஸ் நாட்டில் நாம் தமிழர் கிளை துவங்குவதற்காக, அந்த சமயத்தில் ஜெர்மனியில் தங்கியிருந்த கல்யாணசுந்தரம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். பொதுவாக ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் தமிழர்கள் எண்ணிக்கையும் அடர்த்தியும் அதிகம், அதிலும் லா சப்பல் என்ற இடத்தில் தமிழ் உறவுகள் அதிகளவில் வசித்துவருகின்றார்கள். இந்த பகுதிக்கு அருகே நடந்தபடியால் அன்றைய தின நிகழ்வில் பங்கேற்க எண்ணிலடங்கா மக்கள் அந்த அரங்கத்தினுள் கூடி இருந்தனர். நிகழ்வு தொடங்கிய சில மணித்துளியில் கல்யாணசுந்தரம் பேச ஆரம்பித்தவுடன், வர ஆரம்பித்த பலரும் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்று கொண்டு அவரது பேச்சை ரசித்ததாக... அப்போது அந்த அரங்கில் இருந்து எங்கள் முகநூல் பக்கங்களின் வாயிலாக நேரலை போட்டுக்கொண்டிருந்த எங்கள் நண்பர் சொன்னார்.
அது தேர்தல் சமயம் என்பதால் கட்சிக்கு உதவி செய்ய அங்கிருந்த மேசையின் ஒரு பக்கத்தில் ஒரு அட்டைப்பெட்டியை வைத்து 'நாம் தமிழர் தேர்தல் நிதி' என்று காகிதத்தில் எழுதி, மற்றொரு பக்கத்தில் இன்னொரு அட்டை பெட்டியை வைத்து 'கல்யாணசுந்தரம் தொகுதி நன்கொடை' என்றும் எழுதி வைத்திருந்தனர். அந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் கல்யாணசுந்தரம் என்பதால், அந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் இந்த நிதி கோரும் ஏற்பாட்டை செய்திருந்தார்கள். நிகழ்வு தொடங்கி கல்யாணசுந்தரம் பேச ஆரம்பிப்பதற்குள், அவரது பெயர் போட்டு எழுதி வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டி நிறைந்துவிட்டது !!! அவர் பேசி முடித்து நிகவலும் முடிந்த பிறகும் கூட, மற்றொரு அட்டைப்பெட்டி பாதிக்கு மேல் கூட நிரம்பாமல் அப்படியே இருந்தது !
இதை மேடையில் இருந்த போதிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த கல்யாணசுந்தரம், இறுதியாக மக்கள் களைந்து அரங்கிலிருந்து வெளியேறும் முன்பு ஒலிவாங்கியை பிடித்து... "உங்கள் அன்புக்கு நன்றி... இப்படி இரண்டு தனித்தனி பெட்டிகள் வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை ! இது ஒட்டுமொத்த கட்சியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு, ஆதலால் இரண்டு பெட்டியையும் ஒரே பெட்டியாக்கி ஊருக்கு சென்று நேரடியாக சீமானிடம் கொடுக்கின்றேன்"... என்று சொல்லிவிட்டு, அங்கேயே மக்கள் முன்னிலையில் எண்ணி...எவ்வளவு யூரோக்கள் கிடைத்திருக்கின்றது என்பதையும், அதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் இத்தனை இருக்கின்றது என்று அறிவித்து, சில தினங்களில் இந்த தொகை உங்கள் சார்பாக நான் சீமானிடம் நேரடியாக கொடுத்துவிட்டு தகவல் தெரிவிக்கின்றேன் என்று அறிவித்தார் ! அரங்கில் இருந்த அத்துனை பேருக்கும் ஆச்சர்யம் ! பலரும் பெரும் மகிழ்ச்சியுடன் எழுந்து வந்து கல்யாணசுந்தரத்தை கட்டிப்பிடித்து, உங்கள் மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை நினைத்து பெருமையாக இருக்கின்றது என்று சொல்லி போட்டி போட்டுகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் என்று அங்கிருந்த எனது நண்பர்கள் பலரும் சொல்லி கேட்டதை இப்போது நினைத்தாலும் என்னையறியாமல் உள்ளம் சிலிர்க்கும்...
அந்த நிகழ்வில், தான் சொன்னபடி அந்த மொத்த தொகையயும் அடுத்த இரண்டாவது வாரத்தில் தான் ஊருக்கு சென்றவுடன் சீமானிடம் சென்று நடந்த எதையும் விரிவாக வெளிக் காட்டிக்கொள்ளாமல், அண்ணா இந்த தொகையை அங்குள்ள உறவுகள் நமக்கு தேர்தல் நிதியாக கொடுத்தார்கள் என்று சொல்லி கொடுத்திருக்கின்றார். அதற்கு சீமான் நல்லது என்று மட்டும் சொல்லிவிட்டு பணத்தை வாங்கிகொண்டுவிட்டு... தம்பி கட்சிக்கு யாரவது நிதி கொடுக்கும் போது, தனியாக உங்க தொகுதிக்கு நிதி வேண்டும் என்று கேட்காதீர்கள் ! உங்களை போன்ற சிலர் அப்படி செய்வதாகவும், அதனால் தலைமைக்கு யாருமே நிதி கொடுப்பதில்லை என்றும் 'லெட்டர் பேடு குழு' என்னிடம் புகாராக சொல்லி இருக்கின்றார்கள், இனிமேல் அதை சரி செய்து கொள்ளுங்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி பேராசிரியரை காயப்படுத்தியதை இதுவரை அவர் வெளியில் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார்... இந்த நேரத்தில் இதை அவரது அனுமதி இல்லாமல் பொது வெளியில் பகிர்வதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இருந்தாலும் இதை யாருமே வெளியே சொல்லாமல் போனால், அது தலைவன் வழியில் நிற்கும் ஒரு நேர்மையாளனை ஆதரித்ததற்கு நான் செய்யும் துரோகம் என்பதால் இன்று இதை பகிர்கின்றேன்...(fb)
அப்படிப்பட்ட கல்யாணசுந்தரத்தை, நாங்கள்தான் கட்சியின் தலைமை என்று சொல்லிக்கொண்டு 'லோகோ போட்ட லெட்டர் பேடுகள் கட்டுக்களை மட்டும் தங்களிடம் வைத்துக்கொண்டு திரியும் ஒரு குழு'... இன்று வேண்டுமென்றே பொய்யான கட்டுக்கதைகளை கிறுக்கி அதையும் பரப்ப சிறந்த அடிமைகள் தாங்கள் தேர்ந்தெடுத்தவைத்த மூடர்களை வைத்து பகிரச் செய்து கொண்டிருப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது !!!
# நிறை குடம் எப்போதும் நீர் தளும்பாது என்பதற்கு சிறந்த உதாரணம் நாங்கள் நேசிக்கும் தமிழ்த்தேசிய தூய்மைவாதி பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம்...
Edited by அபராஜிதன்
 • Like 1
Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:
14 hours ago, goshan_che said:

பிகு: இது தனிபட்ட கேள்வி. 2009 முடிவில் டக்லஸ் பாதையே சரி என்பதாக நீங்கள் யாழில் எழுதிய நியாபகம். இல்லை என்றால் மன்னிகவும்.

2009 வரை புலிகள்

2009 டக்லஸ்

பின்னர் சீமான்

புலிகளின் தோல்விக்கு பின் நீங்கள் ஒரு political desperation இல் எந்த துரும்பையாவது பற்றி தமிழ் தேசியத்தை கரை சேர்க முயல்கிறீர்களா?

இந்த desperation ஆல் - துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. இதை உங்கள் மனதில் போடுவதே என் நோக்கம்.

 

அவர் 2009 க்கு முதலில் இருந்தே டக்லசின் ஆதரவாளர் ...சுகன் என்ற பெயரில் அவர் அன்று புலிகளுக்கு எதிராய் எழுதிய கருத்துக்கள் இதே யாழில் கொட்டி கிடக்குது ...மனிதர்கள் மாறுவது வளமை தானே 

உங்கள் கருத்துக்கு நன்றிகள். 

டக்லஸ் குறித்து மட்டுமில்லை, பத்மநாபா படுகொலை, கருணா பிளவுகள் குறித்தும் இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றம் குறித்தும் நிறைய கருத்துக்கள் மிக முரண்பாடோடு எழுதியுள்ளேன். இன விடுதலைப்போராட்டம் தேற்ற பின்னர் தேசீய எழுச்சி வீழ்ச்சி பெற்றதற்கான அக முரண்பாடுகளை திரும்பி பார்த்தலும் தேசீயத்தின் மீள் கட்டுமானத்திற்கு அவசியம் என்பது எனது நிலைப்பாடு. 

எந்த துருப்பையாவது பற்றி தமிழ்த்தேசீயத்தை கரைசேர்க்க முயல்கின்றீர்களா என்ற கேள்விக்கு 2010 ல் நடைபெற்ற கருத்தாடல் திரி ஒன்று கீழே உள்ளது. 

-போரால் வீழ்ந்த மக்ளை ஆற்றுதல், தடுப்பு முகாம்களில் இருந்தவர்கள் விடுதலை, அவர்களி; பாதுகாப்பு ஒரு காலத்தின் பிரதான தேவையாக இருக்கும் போது, நாடுகடந்த அரசு போன்ற முன்னெடுப்புகளுக்கு பதிலாக மனிதாபிமான உதவிக்கான அமைப்பே அவசியம் என்ற கருத்தை முன்வைத்தது. 

-போர்க்குற்றங்கள் என்னும் துருப்பை இழக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தது.

-பாதிக்கப்பட்ட மக்களை டக்லஸ் சைக்கிளில் சென்று சந்தித்து உதவிய போது அந்த இடத்தில் யார் இருந்திருக்க வேணும் இருக்க வேணும் என்பதை அடிப்படையாக வைத்தே டக்லஸ் சார்ந்த கருத்துக்கள்

-வடக்கில் இருந்து கருணாமீது எறியப்படும் கற்கள் கருணா ஒளிந்திருக்கும் கிழக்கு பிரதேசவாத கூடாரத்தை சேதப்படுத்தாமல் ஊடறுத்து கருணாவை மட்டும் தாக்குமா என்பதை பொறுத்துதான் கருணா சார்ந்த கருத்துக்கள். 

(இல்லாத பட்சத்தில் இதன் விழைவுகள் வடக்கு தேசீயம் கிழக்கு தேசீயம் இஸ்லாமிய தேசீயம்)

-போரில் முடிவில் சிங்களத்தின் கோரப்பிடியில் மக்கள் இருந்தபோது தேசீயம் பிரிவினைவாதம் பேசுவதே மனிதாபிமானத்துக்கு எதிரானது என்ற சூழ்நிலை சார்ந்து தேசீயத்துக்கு எதிரான நிலைப்பாடு

-என்னைப்பொறுத்தவரை தமிழ்த்தேசீயம் என்பது சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என பல ஓட்டைகள் உள்ள படகு. அதில் ஏறி பயணித்து அது முள்ளிவாய்க்காலில் கவிழ்ந்தபோதுதான் இந்த ஓட்டைகள் எவ்வளவு பெரியது என்பது தெரிந்தது. இந்த படகில் பயணிக்கும் போது அதை கவிழ்த்து விடும் நிலைப்பாடு இருக்கவில்லை. கவிழ்ந்த பின் ஓட்டைகள் குறித்து கதைக்காமல் விடவும் இல்லை. 2009 க்கு முன்னரும் பின்னருமான நிலைப்பாடு இதுதான். எந்த துரும்பையாவது பிடித்து கரைசேர்க்க முயன்றீர்களா என்றால் படகை சரிபண்ணலாம் என்பதுதான் பதில். இதை சரிசெய்வதும் ஒருவகையான கூட்டு உணர்வால் எழுச்சியால் சிந்தனை முறையால் தான் சாத்தியம். அதனால் எந்த ஒரு எழுச்சிப்போக்கையும் ஆதரிக்கும் நிலைப்பாடு உண்டு. 

-முன்னர் திராவிடக் கருத்தியலுக்கு ஆதரவான நிலைப்பாடு , கருத்தியலால் உருவாகும் அரசியல் அதிகாரம் எமக்கு எதிரானது என்ற அடிப்படையில் அதில் மாற்றம் உண்டு. 

ரதி

புலிகளின் போராட்ட காலத்தில் அதற்கு எதிரான எந்த கருத்தையும் பதிந்ததில்லை. 

ஜனவரி 2009 ல் தான் முதலில்
'துப்பாகி முனைகளால் இந்தப் போர் தனது இறுதி இலக்கை அடிய முடியாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை"  என்று எழுத ஆரம்பித்தேன். 

மனிதர்கள் மாறுவது வழமைதானே என்பதற்கு பதில் ஆம் என்பதுதான். எனது கருத்துக்கள்  காலம் சூழுலுக்கு ஏற்ப மாறிக்கொண்டுதான் இருக்கும். 

2009 க்கு முன்னரே டக்லஸ் ஆதரவாளர் என்பதற்கு, 1991 ராஜீவ் காந்தி துன்பியல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியாவில் இருந்து கடல் வளியாக மருந்துகள் வரத்தில்லை. தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப் பட்ட போராளிகள் அங்காங்கே குப்பி கடித்து மரணித்தார்கள். அங்கு மருத்துவத்துக்கும் செல்ல முடியாத நிலை. கடுமையான பொருளாதாரத் தடை. இவ்வாறான ஒரு சூழலில் ஈழமக்கள் ஜனனாயக் கட்சியின் ஆதரவோடு அவ்வப்போது தாண்டிக்குளம் தடைமுகாமை தாண்டி வந்த மருத்துவப் பொருள்கள் தேசீய விடுதலைப்போராட்டத்தில் காயமடைந்த பல போராளிகளின் உயிரை காப்பாற்றியது. சில போராளிகளுக்கு செயற்கை கால் பொருத்தக் கூடியவாறு இருந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் டக்லஸை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பக்கத்தில் உள்ள பன்றிக்கெய்த குளத்தில் கமம் செய்துகொண்டிருந்தேன். அப்போது இதைக் கேள்விப்பட்டேன்.

Quote

துரும்பென நினைத்து, முதலை வாலான சீமானை (டக்லசை பிடித்தது போல) பிடிக்கிறீர்களா?

சிறு புல்லும் பற்குத்த உதவும் என்பது அனுபவம். 

(திரிக்கு சம்மந்தம் இல்லாத பதிவை இடவேண்டியதாயிற்று)

 

 

 

 

_

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 
FB..
 
பேராசிரியர் கல்யாணசுந்தரம் தன்னுடைய மனம் திறந்த பேட்டியை அளித்த பிறகே இதை எழுதுகிறேன்...
நாம்தமிழர் கட்சியில் வந்த காலம் தொட்டே பேராசியரிடம் நான் நட்பாக பழகி வந்தேன். உடன் பிறந்த சகோதரர்களை விட நெருங்கிய நட்பு அவரிடம் இருந்து வந்த்து.நேர்மையான செயல்பாடு ,,தேசியத்தலைவரின் தத்துவத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு,,ஒழுக்கம் இதுவே அவரை நெருங்கி நட்புக்கொள்ள செய்தது...அதை கடந்து நாம்தமிழர் கட்சியில் சேர்ந்து பயணித்த காரணத்தால் பறிபோன வேலை,,குடும்ப பிரிவு,,பொருளாதர இழப்பு போன்ற காரணங்களால் சுணங்கி விடாது களத்தில் நின்ற காரணத்தால் மற்றவர்களை விட பேராசிரியர் கல்யாணத்தின் மீது பற்றுதல் கூடியது...
நான் கட்சியை விட்டு விலகியப் பின் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகாலமாக அவரை சந்திக்காத நான் ?? தஞ்சை பெருவுடையார் கோவில் தமிழில் குடமுழுக்கு நிகழ்வை காண வந்த போதும் என்னை சந்திக்காது தவிர்த்துவிட்டு திருச்சியில் இருந்து அழைத்து ஐயா வந்தேன் அவசர வேலையாக போகிறேன் என்று போன போதும் எனக்கு வருத்தம் தான்... எப்போது தஞ்சைக்கு அருகே கூட்டம் என்றால்?? புறப்படும் போதே அழைத்து சொல்லிவிட்டு வருபவர் ?? இப்படி போய்விட்டார் என்ற வருத்தம் இருந்து வந்த்து...
நாம்தமிழர் கட்சியை விட்டு பேராசிரியர் கல்யாணசுந்தரமும் ,,வழக்கறிஞர் அறிவுச்செல்வன் அவர்கள் விலகியதற்கு நான் தான் காரணம் என்பதை போல ஒரு பிம்பத்தை தோற்றுவித்து தங்களின் துரோகங்களை தங்களுக்கு வசதியாக மறைக்க பார்க்கிறது ஹீமாயுன் ,,பாக்யா வகையராக்கள்.அண்ணன் நல்லதுரை கட்சியை விட்டு வெளியேற்ற நினைத்து அதன் திட்டங்களை செயல்படுத்த தொடங்கிய நேரத்தில் ?? தனக்காக தன் உயிரையும்,,அன்னை கல்லூரியையும் மீட்டு தந்தவர் அண்ணன் நல்லதுரை. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்காத போதும் ஹீமாயுனுக்காக அண்ணன் நல்லதுரையை சந்தித்து சூழலை விளக்கி என்னுடைய காரில் அண்ணன் நல்லதுரை அவர்களையும் ஹீமாயுனையும் அழைத்துக் கொண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் முன்பு உள்ள மைதானத்தில் இரவு நேர சந்திப்பை ஏற்பாடு செய்துகொடுத்து ஹீமாயுனுக்கான சிக்கலை தீர்த்து உயிர் பிச்சை கொடுத்தோம் காரணம் அவரை கொல்வதற்கு கூலிப்படைகள் தீவிரமாக சுற்றியதையும் அவருக்கு கல்லூரியில் நுழைய முடியாத நிலையில் மூன்று கார்களில் ஆட்களோடும்,,ஆயுதங்களோடும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று அழைத்து வந்தவன் நான் என்பதை கட்சிகார்ர்கள் அறிவார்கள்...
அப்படிபட்ட அண்ணன் நல்லதுரை அவர்களை நீக்க முடிவெடுத்து என்னை ஹீமாயுன் தன் வீட்டுக்கு அழைத்து சீமான் உன்னிடம் கேட்க சொல்கிறார் நல்லதுரை நீக்கினால் குகன்குமார் என்ன நிலையை எடுப்பான் என்று??தர்மசங்கடமான நிலையிலும் தீர்க்கமான முடிவோடு சொன்னேன் அண்ணன் நல்லதுரை இடத்தில் ஒரு நாயை மண்டலச் செயலாளராக நியமித்தாலும் அதன் கீழே வேலை செய்ய தயாராக இருப்பதாக கூறினேன்...மனதுக்கு வேதனையாக இருந்தாலும் கட்சி முடிவு என்பதால் கட்டுபட்டு வேலை செய்தோம்...
ஏன் இதை இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால் ?? நாம்தமிழர் வளர்ச்சியை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் நடுநிலையாளர்களுக்கும்,,உலகெங்கும் ஏதிலிகளாய் நிற்கும் புலம்பெயர்ந்த ஈழ உறவுகளுக்கும் இங்கு நடந்தது??,,நடப்பது?? என்ன என்பதை அறிய வேண்டும் என்பதற்காக...
இதே போல் ஒருநாள் ஹீமாயுன் என்னை வீட்டிற்கு அழைத்து வழக்கறிஞர் அறிவுச்செல்வன் ரொம்ப அண்ணனுக்கு ( சீமானுக்கு) குடைச்சல் கொடுக்குறான்.நிதி வரவு&செலவுகளில் தலையிடுகிறான்.என்று சொல்லி அறிவுச்செல்வனை கட்சியை விட்டு நீக்கினால் பேராசிரியர் கல்யாணம் என்ன முடிவெடுப்பார் என நைசா விசாரிடா என கேட்டுக்கொண்டார்.கொஞ்ச நேரத்தில் பாக்யா தொடர்புக்கு வந்து தல... ரொம்ப சிக்கலா இருக்கு நான் கல்யாணத்தை சந்திக்கனும் விமானத்தில் போயாவது பார்த்துட்டு வாறேன் கேட்டு சொல்லுங்க கட்சி உடையுற மாதிரி இருக்குனு சொன்னார்.ஹீமாயுன் மற்றும் பாக்யாவிற்கு நன்றாக தெரியும் ஐயா கல்யாணத்திடம் நெருங்கி பேசக்கூடியவர்களில் நானும் ஒருவனென்று.இது நடந்து நான்காண்டுகள் இருக்கும்....
நான் உடனே ஐயா கல்யாணத்தை தொடர்புக்கொண்ட போது தான் சென்னை வானூர்தி நிலையத்தில் இருப்பதாகவும் மும்பை கூட்டத்திற்கு போவதாகவும் சொன்னார்.நான் பாக்யா சொன்னதை கூறி உங்களை சந்திக்கனும் என்று சொல்றார் என அவர் சொன்னதை அப்படியே சொன்னேன்.பேராசிரியர் கல்யாணம் சொன்ன பதில் எனக்கு பசுமரத்து ஆணி போல பசுமையாக இருக்கிறது.... அண்ணனை தாண்டி நமக்கு என்ன அரசியல் இருக்குது ஐயா என்றார்// ஒரே ஒரு கூடுதல் செய்தி பேராசிரியர் கல்யாணசுந்தரமும் பாக்யாவும் எப்போதும் பேசிக்கொள்ளமாட்டார்கள்...
ஐயா கல்யாணசுந்தரத்தின் பேச்சை அப்படியே பதிவு செய்து பாக்யாவிடம் கொடுத்தேன் அதில் பாக்யாவை பற்றி மிக உயர்வாக சொன்னதை கேட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்ததை பதிவு செய்து ஐயா கல்யாணசுந்தரத்திற்கு அனுப்பினேன் இருவரும் சங்கடங்களை மறந்து நட்பு பாராட்ட தொடங்கினர்...
இவ்வாறு நான் பிரிந்து நின்றவர்களை சேர்த்துதான் பழக்கம் பிரிப்பது என் வேலையல்ல // அண்ணன் தம்பியாக பழகிய மணிசெந்திலும் ,,கல்யாணசுந்தரமும் பேசாமல் மனவருத்தத்தில் இருந்த போது இருவரையும் நான் தான் 2018 மாவீர்ர்நாள் திடலில் சேர்த்து வைத்தேன்..
ஒரு தத்துவத்தை ஏற்று பயணிக்கும் நாம் சண்டையிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.ஆனால் அவர்களோ ?? எப்படியாவது நேர்மையானவர்களை வெளியே தள்ளுவதில் குறியாக இருந்தனர்.நேர்மையானவர்கள்,,களத்தில் துணிவோடு நிற்ப்பவர்கள்,,மக்கள் செல்வாக்கு கொண்டோர்களை விரட்டி தனக்கான அடிமைகளை உருவாக்குவதில் தான் குறியாக இருந்தனர்.இந்த கட்சியின் அத்தனை பிரிவுகளுக்கும், சிக்கல்களுக்கும் ஹீமாயுனும்& பாக்யாவின் கூட்டு சதியே காரணம்.
ஒருநாளும் பேராசிரியர் கல்யாணம் கட்சியை உடைத்து தனி அமைப்பு காணப்போவதாக அவரும் சொன்னதில்லை.அவருக்கு அந்த ஆளுமை இருப்பதாக நான் நம்பியதில்லை.காரணம் யாரிடமும் அதிர்ந்து பேசாத?? எவருடைய அலைபேசி அழைப்பையும் எதில் ஏற்காத ?? எந்த சிக்கலை தீர்ப்பதற்கு உடனடி தீர்வை எடுக்காத ஐயா கல்யாணம் கட்சியை உடைத்து தனி அமைப்பு காண்பார் என்பதை நான் இப்போதும் நம்பவில்லை.சும்மா விட்டிருந்தா அந்த மனுசன் மேடை பேச்சாளராக,,பயணி வலையொளியில் தனக்கு தெரிந்த்தை பேசிவிட்டு செல்லும் சராசரி மனிதராக வாழ்ந்துவிட்டு போயிருப்பார்.காலம் மிக பொல்லாதது...தனக்கு வேண்டியதை தானே செய்துகொள்ளும்....
சிலர் கேட்கலாம் கட்சியை சல்லி,,சல்லியா உடைப்பேன் என்று சொன்னாயே என்று?? ஆமாம் சொன்னேன் ... ஒருவன் என்னை டாக் பண்ணி கட்சியை உடைக்கும் உன் எண்ணம் நிறைவேறியதானு கேட்டார் ?? ஆமாம் என்று சொன்னேன்...இதில் என்ன தவறு...
பொறுப்பை விட்டு நான் வெளியேறிய போது?? அவனெல்லாம் ஒரு ஆளா?? அவனை ஒதுக்கிட்டு வேலைய பாருங்கப்பானு சீமான் சொன்னாரே?? உங்கள் வாதப்படியே வைத்துக்கொள்வோம் 11 ஆண்டுகள் உங்கள் நிழலில் வளர்ந்தவர்களை எங்கோ இருக்குற நான் பிரிக்க முடியுமா?? படித்த ,,பண்பான,,தத்துவ புரிதல் உள்ள ,,தமிழ்தேசிய அரசியல் இம் மண்ணில் வேருண்ட உழைத்த ஆளுமைகள் பதினொன்றாம் வகுப்பை கூட முழுமையாக முடிக்காத தற்குறி என் பேச்சை கேட்பார்களா என ?? சிந்திக்க வேண்டாமா???
வழக்கறிஞர் இ.த. சீமான்,,மதுரை திருநாவுகரசு,,தேனி ஆனந்தன்,,தேனி அன்பழகன்,,வள்ளுவக்குமரன்,, ஹக்கீம்,,மேலூர் அருண்குமார் போன்றவர்கள் வண்டாரி தமிழ்மணியின் குடும்பத்திற்காக நீதி கேட்டு வெளியேறினார்கள்...அறைக்குள்ளே ஓடி வெற்றியின் பேச்சை கேட்டு சந்திக்க மறுத்த சீமான்??வெறுத்துப் போய் வெளியேறினார்கள்...இப்போது பேராசிரியரும் வழக்கறிஞர் அறிவுச்செல்வனும் உண்மையில் சதிகார ,,மதவெறி பிடித்த ஹீமாயுனின் சதியால் வெளியேற்றப்பட்டார்கள்...
எத்தனை,,எத்தனை உணர்வாளர்கள் காயடிக்கப்பட்டு ,,உதாசீனப்படுத்தி வெளியேற்றப்பட்டனர் பட்டியலை சொல்லவா??அண்ணன் நல்லதுரை,,அய்யநாதன் ,,மருத்துவர் பாரதிச்செல்வன்,, அன்வர் பாலசிங்கம்,,தென்காசி வழக்கறிஞர் அரச.சிவக்குமார் அண்ணன் புதுக்கோட்டை சத்யா,,வழக்கறிஞர் அரியலூர் முத்துக்குமார்,,அருண் ரங்கராசன்,பேராசிரியர் அருளினியன்,,அரசேந்திரன்,,சமுத்திரம் யுவராஜ்,,அண்ணன் டென்மார் சுமேஷ்,,ஆஸ்திரேலியா அரவிந்த குருசாமி,,வேலூர் தமிழ்ச்செல்வன்,,திருப்பூர் சுடலை,,பெ.மு.ஈஸ்வரன்,,திருவாரூர் கந்தன்,,தென்றல் சந்திரசேகரன்,,தங்கம் நிறைந்த செல்வம்,,சூனா செந்தில்,,ஒரத்தநாடு தரும பாலா,,பட்டுக்கோட்டை பழ சக்திவேல்,,செருவாவிடுதி சரவணன்,,பேராவூரணி தங்கராசு புவனேந்திரன்,,செய்யது அலி,,விருதுநகர் பாபு தங்கம்
இப்படி எத்தனை ஆளுமைகள் வெளியேற்றப்பட்டதற்கு முதல் காரணம் சீமானிம் பிடிவாத குணமும்,, சதிகார்ர்களின் அரசியல் சதியுமே முழுக்காரணம்...
இதை புரிந்து கொள்ளாமல் தங்களின் தவறுகளை மறைப்பதற்கு எங்கள் மீது பழியைப் போட்டு வசதியாக தப்பித்துக்கொள்ள எண்ணாதீர்...இதுவே எனது கடைசி விளக்கம். அப்படி நான் சொல்லி தான் கல்யாணசுந்தரமும் கட்சியை விட்டு விலகினார் என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே?? என் பலம் எனக்கே தெரியவில்லை போலும்...
இதை மடைமாற்ற கட்சிகார்ர்களை தூண்டிவிட்டு தண்ணீய போட்டு திட்ட சொல்வதும்,,அல்லக்கைளை ஏத்திவிட்டு வாடா ஆம்பளை மோதிபார்ப்போம் என சவால் விடுவது யாருக்குமே நல்லதல்ல..
 

குகன்குமார் தஞ்சை குகன்குமார்

 

FB
 
இராவணன் குடிலும்(நாம்தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம்)!! ராமசுப்புவின் (பாக்யா)40 லட்சமும்...
நாம்தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடில் வாங்குவதற்கு தன்னுடைய வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கட்சிக்காக அளப்பரிய தியாகத்தை பாக்யா என்கிற ராமசுப்பு செய்ததாக வாழும் கக்கன் சாட்டையார் தன் பிள்ளைகளின் மீது சத்தியம் செய்து பேசிய குரல் பதிவை வெளியிட்டிருந்தார்...
அது அத்தனையும் ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்,,பித்தளாட்டம். தலைமை அலுவகத்தின் உரிமையாளர் அந்த கட்டிடத்தை வைத்து மதுரவாயல் இந்தியன் வங்கியில் வாங்கியிருந்த கடன் தொகை 1கோடியே 80 லட்சம் கட்சிக்கு தலைமைக்கு இடம் வேண்டும் என்பதற்காக தற்போதைய அலுவலகத்திற்கு வாடகைக்கு முன் தொகையான 3 லட்சத்தை கொடுத்தது சீமான் அவர்கள்.அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கடன் தொல்லையால் விற்க முடிவெடுத்த போது ? அப்போது அலுவலகத்தில் வேலை செய்த அண்ணன் தங்கராசுவும் மற்றும் மதுரவாயல் தொகுதி பொறுப்பாளராக இருந்த அண்ணன் ஒருவரும் சேர்ந்து கடனாகவும்,,கைமாத்தாகவும் 30 லட்சத்தை ஏற்பாடு செய்து கட்டிட உரிமையாளரிடம் கொடுத்து குத்தகைக்கு அலுவலகத்தை எடுத்தனர்.
சில மாதங்களுக்கு பிறகும் வீட்டின் உரிமையாளருக்கு பணத்தேவை ஏற்பட்ட காரணத்தால் மீண்டும் பணம் கேட்டு நெருக்க?? கட்டிடத்தை கட்சிக்காக நிறந்தரமாக வாங்க முடிவெடுத்து கட்டிடத்தின் விலையாக 2 கோடியே 40 லட்சத்துக்கு பேசி மதுரவாயல் பொறுப்பாளர் அண்ணன் தன்னுடைய சொந்த முயற்ச்சியில் வட்டிக்கு 30 லட்சத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்.அமெரிக்காவில் இருக்கும் திரு.ரவி என்பவர் 50 லட்சமும் கொடுத்து வங்கியில் மொத்தம் செலுத்தப்பட்ட தொகை 1 கோடியே 10 லட்சம்...
இதற்கிடையில் பேசி முடிக்கப்பட்ட தொகை 2 கோடியே 40 லட்சத்தில் கொரணா முடக்கத்தை காரணம் காட்டி பேசிய தொகை குறைத்து ரூபாய் 1கோடியே 80 லட்சத்துக்கு முடித்து தருவதாக அமெரிக்க வாழ் ரவி அவர்களிடம் சொல்லப்பட்டது... இவர்கள் சொன்னது போல் குறைத்து அக்ரிமெண்ட் போடாத காரணத்தால் ரவி அவர்கள் பணத்தை அனுப்பவில்லை?? கட்சிக்காக பெரும் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்த மதுரவாயல் பொறுப்பாளரும் கட்சியை விட்டு விலகியதால் இந்த ராமசுப்பு வகையறாக்களால் பணத்தை திரட்டி குறித்த நேரத்தில் பணத்தை வங்கியிலும் கட்டவில்லை ?? கட்டிட உரிமையாளருக்கும் பணம் போகாத காரணத்தால் ?? கட்டிட உரிமையாளர் ஏற்கனவே இந்தியன் வங்கியில் உள்ள அடமானத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2 கோடியே 80 லட்சத்துக்கு மறு அடமானத்திற்கு வைத்துவிட்டார்...
இதற்கிடையே வீட்டின் உரிமையாளரிடம் கட்டிடத்திற்கு பணம் கொடுத்த அமெரிக்கா ரவி அவர்களுக்கும் மதுரவாயல் பொறுப்பாளர் அண்ணனுக்கும் தெரியாமல் பாக்யா என்கிற ராமசுப்பு தன்னுடைய தனி கணக்கில் ரூபாய் 16 லட்த்தை திரும்ப வாங்கி கொண்டார் என்பது 100% உண்மை...
ஏன்டா பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? நீங்களாடா?? வீட்டு பத்திரத்தை வச்சு 40 லட்சம் கொடுக்குற நாய்கள்...உங்களுக்கு எந்த பொய்யாவது சொல்லி காசு வாங்கிதான்டா பழக்கம் ? கொடுத்த பழக்கம் உங்க பரம்பரைக்கே இருந்த்து இல்லையே???
இது பொய்யுனு ஒருத்தனை வந்து பேச சொல்லு??
Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
   ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
   ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
   கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
   இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
   இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!

   கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
   அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
   அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
   அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.
   “ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
   இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
   விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
   இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
   ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
   இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
   ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
   தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!
   இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
   இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
   எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!
   அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
   தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
   இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
   வாழ்க தமிழ்!
   வளர்க தமிழர்!!
   மலர்க தமிழீழம்!!!
   பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z
   படம்: நன்றி மாவீரம்.
  • By இசைக்கலைஞன்
   சுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃
    
  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   “ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.
   “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

   “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

   “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

   ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

   ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 

   ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

   அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 
    
   **********
   இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

   “லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

   “சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

   “நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

   வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

   “ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

   “ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன். 

   “தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”. 

   சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது. 

   ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர். 

   “உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம். 

   மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன். 

   கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன். 

   சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன். 

   ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை. 

   நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை. 

   மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?... 

   ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

   எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்! 

   என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…” - படித்து முடிப்பதற்குள், 

   “அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ். 

   “என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க, 

   “இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன். 

   “அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?” 

   “என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன், 

   “அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.
   ❀ ❀ ❀ ❀ ❀
   (நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக). 

   படம்: நன்றி ஓவியர் இளையராஜா  - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html
  • By இசைக்கலைஞன்
   சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
    
    
  • By இசைக்கலைஞன்
   5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்
   கே.கே.மகேஷ்
   Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.
   எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?
   நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.
   ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?
   சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?
   திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?
   எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.
   அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?
   சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?
   மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?
   கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!
   http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece#comments
 • Topics

 • Posts

  • உலக முடிவு (World End)- நர்மி.  January 27, 2021 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன்,  பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc  juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை  பெரன்க் இப்படி எழுதியிருப்பார். ” அன்னையே ! நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்..? உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி  மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை. அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம்.  ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள். 3159.8 எக்டேர் பரப்பளவையும்  2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது.  பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன.  இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது.  உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது. ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும்  இருந்திருக்கலாம். புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற  நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium)  போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து  யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள். இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும். அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன். உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி. பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப  மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும். எதுவுமில்லாத  ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும்,  துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத்  தெரியாது .  அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு  அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம். வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள். எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும். நர்மி   http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/
  • சிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.