Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாது என நினைக்கின்றேன்
 

ஒருவருக்கு இதுவும் விளங்கவில்லை என்றால்........

விளங்காதவர் போவார்.... விளங்க நினைப்பவன் வருவார்.... 😁

Link to post
Share on other sites
 • Replies 2.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சீமான், நான் இதுவரை அறிந்துவந்த தமிழக அரசியல்வாதிகளில் இன்னொருவனா? எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை? எதற்காக தமிழகமெங்கும் தலைவர் பெயரைச் சொல்

விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ?  ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம்  சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல

சீமான் என்றொரு காலம். ❤️❤️❤️ ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல் அவன். எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தில் நிற்கிறான். இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொட

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடி ஏற்றம் நாம் தமிழர் கட்சி

 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣 EPPOTHUM THAMIZHAN நின் எதிர்பார்ப்பு எல்லாம் எமது பக்க தவறை பற்றி பேச கூடாது அடுத்தவனை திட்டி தீர்க்க வேண்டும் என்பதே.


விசுகு உங்களிடம் கேட்ட கேள்விக்கு தகப்பனார் ஒரு பெரும் குடிகாரர் அதனால்  நாம் அழிந்தோம்   இன்றும்  எனது  தகப்பனாரின் தவறுகளை எழுதி அழுது புலம்பிக்கொண்டு மட்டும்  இருந்தால் நீங்கள் எனக்கு என்ன சொல்வீர்கள்?என்னைப்பற்றி  என்ன  நினைப்பீர்கள்?
இவர் யாழ்பாணத்து முறைபடி தனது தகப்பனாரை பற்றி போலி பெருமை எல்லாம் பேசாமல் உண்மையை சொல்கிறாரே நேர்மையானவராக இருக்கிறார் இவர் தனது தகப்பனால் எவ்வளவு தூரம் பாதிக்கபட்டிருப்பார் என்று நான் நினைப்பேன்.

 குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர் என்று மட்டும்தான் என்னால் நினைக்க முடியும் உங்களைப்பற்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்னவாக பேசுகின்றான் இந்த பையன்👍👍👏

இப்படியொரு விழிப்புணர்வு பட்டி தொட்டியெங்கும் வருவதற்கு சீமனுக்கு தலை வணங்குகின்றேன்  🙏

சீமானின் வளர்ப்பு இளைஞர்களிடம் கருத்தில் விளக்கப் பேச்சு இருக்கும் நாம் தமிழர் கட்சி! தமிழ் திருநாடு

 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மறதி மக்களின் இயல்பு அதை நினைவுப் படுத்துவது நாம் வேலை நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

சின்னக்கருப்பன்

.

spacer.png

விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே.

அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று  திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன்

 

 

இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால்,  அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.
1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை  
2. ஆங்கில பள்ளிகள் எத்தனை இருக்கிறதோ அதனை விட அதிகமாக தமிழ் மொழி பள்ளிகள் திறக்கப்படும்.
3. பயிற்றுமொழி தமிழ், கட்டாய பாட மொழி ஆங்கிலம். உலக மொழிகள் அனைத்தும் விருப்பமொழி. விரும்பினால் படிக்கலாம்.  இந்தி, உருது, ஜெர்மன் எல்லாம் விருப்பமொழி
4. தமிழ் மொழி படிப்பதற்கு காரணம் இனம் வாழ.
5. கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசக்கல்வி.
6. வேளாண்மை தமிழ் தேசிய தொழிலாக மாற்றுவார்கள்.
7. கல்வி வேலைவாய்ப்பு கிராமத்துக்கு கொண்டு செல்வார். அதனால் வேளாண்மையில் இருக்கும் விவசாயிகள் கிராமத்திலேயே இருக்க வேண்டும்.
8. வேர்வை உப்புப்பூர்க்க ஒருவன் உழைத்தால்தான் ஒருவேளை சோறு என்று சட்டம் போடப்படும்.
9. எல்லா படித்த இளைஞர்களையும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
10. எல்லா நிலங்களையும் ஒத்திக்கு வாங்கி அதில் எல்லா படித்த இளைஞர்களை ஈடுபடுத்தி பண்ணை நிலத்தில் உழைக்க செயல்படுத்துவார்
11. ஆடுமாடு மேய்த்தல் அரசுப்பணி. (டென்மார்க் வெறும் ஆடுமாடுதான் மேய்க்கிறது என்று கூறுகிறார்)
12. ஆந்திரா, அமெரிக்கா என்று ஆடுமாடுகளை ஏற்றுமதி செய்வார்.
13. ஆடுமாடு மேய்த்தலை மேம்படுத்தினால், பட்டுப்பூச்சி வளர்த்தல், மீன் வளர்த்தல், கோழி வளர்த்தல், விவசாயம் செய்தல் ஆகியவை முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
14. துபாயில் ஆடுமாடு மேய்ப்பதற்கு பதிலாக தமிழ்நாட்டில் ஆடுமாடு மேய்க்க அரசுப்பணி வழங்குவார்.
15. பாலில் நெய், பால்கோவா உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வார்.

இன்னொரு வீடியோவில், விவசாயத்தை அரசுவேலையாக மாற்றப்படும் என்று சீமான் கூறும் பேச்சு

 

 


சீமானின் பேச்சுக்கள் போல பல வாட்ஸப் செய்திகளை தினந்தோறும் நான் பார்க்கிறேன். அதுவும் முக்கியமாக படித்த இளைஞர்களும்,  தமிழ்நாட்டில் படித்துவிட்டு பிறகு பல வேறு நாடுகளில் வேலை செய்பவர்கள் கூட இது போன்ற தகவல்களை, பரிமாறிகொள்கிறார்கள்.

சீமான் எந்த அளவுக்கு படித்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. வீராவேசமாக பேசுபவர்களிடம் தமிழர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களுமே மயங்கிவிடுகிறார்கள். அவர்கள் உரத்து கத்தும்போது, அவர்கள் உண்மையை சொல்லுவதால்தான் அவர்கள் கோபத்துடம் பேசுகிறார்கள் என்று உள்ளார நினைத்துவிடுகிறார்கள். இந்த மனித  பலவீனத்தை பல அரசியல்வாதிகள் உபயோகப்படுத்துகொண்டுவிடுகிறார்கள்.

டென்மார்க்கின் முக்கிய தொழிலே ஆடுமாடு மேய்த்தல்தான் என்று சொல்லுகிறார் சீமான். அது தவறு.

டென்மார்க்கில் விவசாயம் சார்ந்த தொழில்கள், டென்மார்க்கின் வருமானத்தில் சுமார் 2 சதவீதமே பங்கு வகிக்கின்றன.

விக்கி இவ்வாறு கூறுகிறது.
By 2017 services contributed circa 75% of GDP, manufacturing about 15% and agriculture less than 2%.[125]
2017இல் சர்வீஸ் 75 சதவீத வருமானத்தையும், தொழில்துறை 15 சதவீதத்தையும் விவசாயம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே டென்மார்க் பொருளாதாரத்தின் பங்காக இருக்கிறது.

ஆனால் சீமான் போன்றவர்களுக்கும் சீமானின் உரைவீச்சில் மயங்குபவர்களுக்கும் ஏன் சர்வீஸஸில் 75 சதவீத வருமானம் வருகிறதே, இது என்ன? என்று தெரியாது.

விவசாயம் சார்ந்து ஒரு வாதத்தை வைப்பது எளிது. எதற்கு புல்லட் ரயிலை போடுகிறாய்? புல்லட் ரயிலையா தின்னப்போகிறாய் என்று கேட்பது ஒரு மடையனின் கேள்வி.

ஆனால் இது ஏன் கேட்கப்படுகிறது? அது ஏன் விரும்பப்படுகிறது? அது ஏன் ஆஹா என்று கைதட்ட வைக்கிறது என்பது இப்போது முக்கியமான கேள்வி.

அதனைத்தான் இங்கே பேசப்போகிறேன்.

புல்லட் ரயிலை சாப்பிட முடியாது. ஆனால் புல்லட் ரயில் போன்ற விஷயங்கள் ராஜஸ்தானில் விளையும் பொருட்களை தமிழகத்துக்கு அலுங்காமல் நலுங்காமல் கொண்டு வர வைக்கமுடியும். அதே புல்லட் ரயில், ஸ்ரீரங்கத்தில் உற்பத்தியாகும் மல்லிகையை அது வாடுவதற்குள் ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று விற்க வைக்க முடியும்.

ஆறுவழிச்சாலையை எதிர்க்கும் மடையர்களுக்கும் இதுதான் பதில். விவசாயம் செய்துவிட்டு அதனை விற்க கொண்டு செல்லவில்லை என்றால் செய்த விவசாயம் பாழ். எடுத்துச்செல்ல வேகமான தெரு இல்லை என்றால்,  உற்பத்தியான பாலை தொழுவத்தில்தான் கொட்ட வேண்டும். கன்னியாகுமரியில்  உற்பத்தியான பாலை டெல்லியில் விற்கவேண்டுமென்றால்,  logistics என்றால் என்னவென்று புரியவேண்டும்.  அதனை MBA பட்டப்படிப்பில் படிக்கிறார்கள். supply chain management என்றால் என்னவென்று புரியவேண்டும். உற்பத்தி செய்துவிட்டால் மட்டும் போதாது. அதனை சேமிக்கவும், அதனை வினியோகிக்கவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதனை பதனப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

பிரச்னை என்னவென்றால், தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் இன்னமும் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள்.

ஆனால் வெகுவேகமாக விவசாய துறை வளர்ந்து வருகிறது. இதனால் முன்பு பத்து ஏக்கரில் உற்பத்தியான விவசாய பொருட்களை இன்று ஒரு ஏக்கரிலேயே உற்பத்தி செய்யமுடிகிறது. ஏராளமான பொருள் சந்தைக்கு வரும்போது உற்பத்தி செய்த பொருளின் விலை குறைகிறது.  

ஏன் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதன் அடிப்படை காரணம் இதுதான்.

உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை பார்ப்போம்.
 ஆயிரம் பேருக்கு உணவு  உற்பத்தி செய்ய 900 பேர்கள் உழைத்துகொண்டிருந்தார்கள் என்று வைத்துகொள்வோம். மீத 100 பேர்கள் விவசாயம் சம்பந்தமான இதர தொழில்கள், அதாவது ஏர் கலப்பை செய்வது, துணி துவைப்பது, போன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள் என்று வைத்துகொள்வோம்.
அப்படியானால் அப்போது இந்த 900 பேர்கள் உற்பத்தி செய்துதான் அந்த ஆயிரம் பேரும் சாப்பிட முடியும். இந்த விவசாயிகள் மீத 100 பேர்கள் விவசாயம் இல்லாத தொழிலை செய்யும்போது அவர்களுக்கு கூலி என்பது இவர்கள் உற்பத்தி செய்வதில் அதிகமாக மிஞ்சுவதையே கொடுக்க இயலும்.

இதனை ஏறத்தாழ கொல்லைப்புறத்து விவசாயம் எனலாம். கொல்லைப்புறத்தில் விளைவதை வீட்டில் சாப்பிட்டு மிச்சமாக மிக கொஞ்சமே மிஞ்சும். அதுவே இந்த 100 பேர்களுக்கு உணவாக அவர்கள் செய்யும் உழைப்புக்கு கூலியாக செல்லும்.

இதுவே உற்பத்தி அதிகரிக்கிறது என்று வைத்துகொள்வோம். ஆயிரம் பேருக்கான உணவை வெறும் 50 பேர்களே உற்பத்தி செய்துவிடமுடியும் என்று வைத்துகொள்வோம். இப்போது 950 பேர்கள் என்ன வேலை செய்தாலும் அவர்களுக்கான உணவை இந்த 50 பேர்களே கொடுத்துவிட முடியும். இப்போது மீத 950 பேர்கள் என்ன வேலை செய்வார்கள்? அவர்களாலும் உணவு உற்பத்தி செய்யமுடியும் அல்லவா? அவர்களும் உற்பத்தி செய்வார்கள். அப்போது ஏராளமான உணவு உற்பத்தியாகும்.  ஒரு பொருள் மிக அதிகமாக இருந்தால், அதன் விலை குறையும். டன் டன்னாக தக்காளி உற்பத்தியானால் தக்காளியின் விலை கடுமையாக குறையும் அல்லவா?  வருடம் முழுவதும் உழைத்து உற்பத்தி செய்த விவசாயி அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பார்க்கவியலாது.

spacer.png

இந்த வரைபடத்தில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி எவ்வாறு அதிகரித்துவருகிறது என்பதை காட்டுகிறது.
https://ourworldindata.org/crop-yields
மேலும் சில வரைபடங்களை இதில் காணலாம்.

இதில் தெரிவது என்ன?
விவசாய தொழில்நுட்பம் வளர வளர,  அதிக உற்பத்தி செய்யும் தாவரங்களையும் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க, உற்பத்தி வெகுவேகமாக அதிகரிக்கிறது. இதனாலேயே உலகத்தில் முன்பு தலைவிரித்தாடிய பஞ்சங்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதுமட்டுமல்ல, அரிசி போன்ற உணவு தாவரங்களின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. (சீமான் போன்றவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி கொடுத்தார்கள், இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கவளம் கூட வாங்கமுடியாது என்று சொல்லலாம். அதை புரியவைக்க நான் பொருளாதார படிப்பு நடத்த வேண்டும் )

உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க, பொருள்களில் விலை குறைகிறது. இதனால் உற்பத்தி செய்த விவசாயி அதன் மூலம் வருமானம் பெற்று வசதியாக வாழ முடியாமல் ஆகிறது.

இதற்கு விடை என்ன?

விவசாயத்தை சார்ந்து மக்கள் இருப்பது குறைக்கப்பட வேண்டும்.

மற்ற தொழில்கள் விரிவடைய வேண்டும். விவசாயத்தை சார்ந்து மக்கள் இருப்பது குறைய குறைய ஒரு விவசாயி பெறும் வருமானம் அதிகரிக்கும். ஏனெனில், மிதமிஞ்சிய உற்பத்தி இருக்காது. மிதமிஞ்சிய உற்பத்தி இருந்தாலும் அந்த உற்பத்தியை விற்று கிடைக்கும் பணம் குறைவான விவசாயிகளுக்கே செல்லும். அந்த குறைவான விவசாயிகள் வளமையான வருமானம் பெறுவார்கள்.

உதாரணமாக 100 பேர், 1000 ரூபாய் பெருமானமுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தால், அது ஆளுக்கு 10 ரூபாயாக பிரியும்.  ஆனால் 10 பேர் 1000 ரூபாய் பெருமானமுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தால், அது ஆளுக்கு 100 ரூபாயாக பிரியும்.  இதனைத்தான் சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகமான ஆட்களை விவசாயத்துக்குள் தள்ளுவது என்பது முழு தமிழ்நாட்டையுமே ஓட்டாண்டியாக்கும் வேலை.   இன்று தேவை விவசாயத்தை நம்பி இருப்பவர்களை விவசாயத்திலிருந்து எடுத்து அவர்களுக்கு மாற்று தொழில்களை தருவது.

இன்று சென்னையில் கார் உற்பத்தியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு எல்லாரையும் விவசாயத்துக்கு அனுப்பினால், அவர்களுக்கு முதலில் நிலம் எங்கே இருக்கிறது?

இவரது இன்னொரு கருத்து கம்யூனிஸ்டுகளிடமிருந்து கடன் வாங்கப்பட்டது.
நிலங்களை மக்களிடமிருந்து ஒத்திக்கு எடுத்து (கம்யூனிஸ அரசாங்கத்தில் எல்லா நிலங்களும் மக்களுக்கே சொந்தம் என்ற பெயரில் எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தமாகும்.)  எல்லா படித்தவர்களையும் இழுத்து வந்து அவர்களை விவசாயிகளாக கூட்டுப்பண்ணையில் ஈடுபடுத்தப் போகிறேன் என்று சொல்லுகிறார்.

கூட்டுப்பண்ணை முறையை எந்த நாட்டில் அறிமுகப்படுத்தினாலும் மிகப்பெரும் தோல்வி அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல, சீனா, ரஷ்யா, கம்போடியா போன்ற நாடுகளில் பெரும் பஞ்சத்தையும் பேரழிவையும் இந்த மடத்தனமான யோசனை உருவாக்கியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் யாருக்குமே வரலாறு தெரியாது. அவர்களுக்கு அண்ணாவின் சொற்பொழிவும், பெரியாரின் இனவெறியும், சீமானின் அறிவுஜீவித்தனமுமே போதுமானது.  

இந்த கூட்டுப்பண்ணை மடத்தனத்தோடு சீமான் சொன்ன இன்னொரு விஷயத்தையும் இந்த சீன, ரஷிய, கம்போடிய சர்வாதிகாரிகள் செய்தார்கள். அதாவது, படித்தவர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் எல்லாரையும் வலுக்கட்டாயமாக பிடித்து வந்து பண்ணைகளில் வேலை செய்ய வைத்தார்கள். உடல் உழைப்பை கற்றுத்தருகிறார்களாம். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய உழைப்பால் உற்பத்தியை பெருக்கமுடியவில்லை. பெரும் பட்டினி பஞ்சத்தில் பல கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். உக்ரைன் பஞ்சம், கம்போடிய பஞ்சம், சீன பஞ்சம் என்று சற்றே தேடினால் இந்த கம்யூனிஸ மாயைகள் விலகும்.

ஏன் சீமான் உளறுகிறார்? அவர் உளறுகிறார் என்று ஏன் எலிய தமிழ் பில்லைகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை?
இதனால்தான் தமிழ்நாட்டு கல்விமுறையை பற்றி பேச வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டு கல்விமுறை தரத்தை ஆங்கிலத்தில் சொன்னால், race to the bottom என்று சொல்லலாம்.

காமராஜர் முதற்கொண்டு பலரும் கல்வியை பரந்துபட்டதாக ஆக்கி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள். அதில் குறையேதுமில்லை.

பிரச்னை கல்வியின் தரம்.

எழுதப்படிக்க தெரிவது ஒன்றே குறிக்கோள் என்றால், தமிழ்நாட்டில் கல்விமுறையை பாராட்டலாம். ஆனால் இன்றைய நவீன உலகத்துக்கு எழுதப்படிக்க தெரிவது ஒரு பொருட்டே அல்ல.

தமிழ்நாட்டில் கல்வி முறையும் கல்வியின் தரமும் மிக மிக கேவலமாக இருக்கிறது.  கர்னாடகாவில் ஒரு ஆறாம் வகுப்பில் படிப்பவனின் தரம் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பின் தரமாக இருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டின் கல்வியின் தரத்தை இதர இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுவதை விட்டுவிட்டு உலக நாடுகளின் கல்வித்தரத்தோடு ஒப்பிட வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு பொதுதேர்வும் வைப்பதற்கு கடினமான எதிர்ப்பு இருக்கிறது.
தேர்வே எழுதாமல் பாஸ் அறிவித்தால் அந்த முதலமைச்சர் மிகச்சிறந்த முதலமைச்சர் ஆகிவிடுகிறார்.
எதிர்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலினும் அவரது புத்திரரான உதயநிதி ஸ்டாலினும் , தேர்வுக்கு பணம் கட்டவில்லை என்றாலும் அவர்களை பாஸ் செய்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அடிச்சி விடுகிறார்கள்.

அதையே சீமானும் அடிக்கடி சொல்லுகிறார். எலிய தமில்பில்லைகள் எவ்வளவு சோதனைகளை தாங்கவேண்டும் என்று நினைத்தால் எனக்கு இப்பவே அடிவயிறு கலங்குகிறது.

சரி, தேர்வு வைக்க வேண்டாம். எந்த அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ப்பீர்கள்?

நீட் தேர்வை எழுதி பாஸ் செய்ய முடியாத ஒரு மாணவர், எந்த அடிப்படையில் மருத்துவ துறையில் ஐந்து வருடம் கடினமாக படித்து புரிந்துகொண்டு தேர்வு எழுதி மருத்துவராக ஆகமுடியும் என்று இவர்கள் கருதுகிறார்கள்?

அனிதா என்னும் மாணவி இந்த கல்வி தந்தைகளில் ஒருவர்  நடத்திய ஒரு தனியார் பள்ளியில் படித்து ”நூற்றுக்கு நூறு” வாங்கியும் நீட் தேர்வில் தோல்வியுற்றியிருந்தார். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதில் குற்றவாளிகள்,  அவரது மரணத்துக்கு காரணமான அந்த தனியார் பள்ளியும், அப்படிப்பட்ட கேவலமான ஒரு கல்வியை கொடுத்த தமிழக அரசுமே அன்றி நீட் தேர்வை கொண்டுவந்த அரசாங்கம் அல்ல.

இன்றைக்கு நீட் தேர்வு எதனால் எதிர்க்கப்படுகிறது? இங்கே கல்வித்தந்தைகள் தனியார் மருத்துவ கல்லூரிகள் நடத்துகிறார்கள். அதில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் குறைந்தது 120 மதிப்பெண் பெற்றவர்தான் சேரமுடியும் என்று கொண்டுவந்ததால், பல கோடிரூபாய்களை பணக்காரர்களிடமிருந்து பெற்று அவர்களது உருப்படாத குழந்தைகளுக்கு மருத்துவம் படிக்க வைக்கும் பிஸினஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த கல்வித்தந்தைகளும் அந்த கல்வித்தந்தைகளின் நண்பர்களும் நடத்தும் தொலைக்காட்சிகளில் ஊடகவியலாளர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டு, நீட் தேர்வால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று பிதற்றுகிறார்கள். பார்ப்பவர்கள் மனம் பதைக்கும் படி ஊளையிடுகிறார்கள்.

 இப்போது சீமானின் முதல் ஐந்து புள்ளிகளை பேசுவோம்.

இன்றைக்கு இருக்கும் ஆங்கிலப்பள்ளிகளை எல்லாம் மூடாமல் (!) தமிழ் பள்ளிகளை திறக்கப்போவதாக சொல்லுகிறார்.
ஏனெனில் அவருக்கே தெரியும். இன்று ஆங்கிலப்பள்ளிகளை மூடுவேன் என்று சொன்னால், அந்தகூட்டம் கலைந்துவிடும். ஆங்கிலத்தை எதிர்த்தால் அவருக்கு படியளக்கும் பெரிசுகள் சட்டையை கோர்த்து கேள்வி கேட்கும்.

 அவர் சொல்லுவதெல்லாம், ஆங்கிலப்பள்ளிக்கு போகாதவர்களை  தமிழை படிக்க வைப்பேன், ஏனெனில் ”தமிழ் இனம் வாழ” என்கிறார்.
ஆங்கிலப்பள்ளிகளை விட சிறப்பாக தமிழ் பள்ளிகளை நடத்தப்போவதாகவும் சொல்லுகிறார்.

ஆங்கிலம் கட்டாயப்பாடம், ஆனால் இந்தி மற்ற மொழிகள் கற்றுகொள்ள உதவி செய்வேன் என்கிறார். ஆமாம் இது ஏறத்தாழ இன்று மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் மும்மொழி கொள்கைதான்.

சீமான் நேரடியாக அந்த மும்மொழி கொள்கையை வரவேற்றுவிடலாம்.

https://en.wikipedia.org/wiki/National_Education_Policy_2020

பிரச்னை பள்ளிகள் அல்ல. பிரச்னை கல்லூரிகள். பிரச்னை பல்கலைக்கழகங்கள்.

தொழில்நுட்பம் , மருத்துவம், உயர்கல்வி, அறிவியலில் பிஹெச்டி எந்த மொழிகளில் செய்யப்படுகிறது என்பதுதான்.

சீமான் போன்றவர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல், எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி உளறுவதற்கும், அதற்கு விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டுவதும் காரணம், உயர் கல்வி ஆங்கிலத்துக்கு சென்றதுதான்.

தமிழ் வளர்ப்பதாக பீலா விடும் திராவிட அரசியலின் கடந்த 60 வருட ஆட்சியில் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டுமே தமிழில் பொறியியல் சொல்லித்தரப்படுகிறது.  அதுவும் சமீபத்தில்தான்.

உயர்கல்வி தமிழில் இருந்தால், அந்த கல்வியை கற்றவர்களுக்கு படித்ததை பேச அதுவும் தமிழில் பேச பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகள் வருகின்றன. அந்த கல்வி, செவிவழியாகவே பல கோடி பேரை சென்றடைகிறது.  விவசாய பொருளாதாரம், நியூட்ரினோ அறிவியல், சப்ளை செயின் மேனேஜ்மண்ட் ஆகியவை எப்படியாகிலும் எல்லா தமிழர்களையும் ஒரு அடிப்படை அறிவுக்கு கொண்டு வந்திருக்கும். அவர்கள் அதனை படிக்கவில்லை என்றாலும் தமிழில் அவை பேசப்படும் பொருள்களாக ஆகியிருக்கும்.

ஆனால், உயர்கல்வி என்பது ஆங்கிலத்தில் மட்டுமே என்று ஆகிவிட்டதால், எந்த ஒரு உயர்கல்வியில் கற்ற விசயமும் பேசப்படும்போது அது தானாக ஆங்கிலத்தில் உரையாடப்படுகிறது. ஏனெனில் அந்த பொருளாதார சிக்கல்களை விளக்கும் வார்த்தைகளும், அறிவியலுக்கான வார்த்தைகளும் அதன் சொற்கட்டமைப்புகளும் தமிழில் வரவே இல்லை. அதனால் தமிழ் சவலைக்குழந்தையாக ஆகி, திமுகவின் வெற்று கூச்சலுக்கான, இந்தி போன்ற மொழிகளின் மீது வெறுப்பை தூண்டவும், அதன் மூலம் மக்களை கொந்தளிப்பு நிலையில் வைக்கவுமான விஷயமாக ஆகிவிடுகிறது.

இன்னொரு விஷயமும் இருக்கிறது.
ஆங்கிலம் என்பது அன்னிய மொழி. அன்னிய மொழி என்பதை ஆங்கிலேயர்களின் மொழி என்பதால் சொல்லவில்லை. அன்னிய மொழி என்பது, அதன் வார்த்தை கட்டமைப்புகளும், அதன் இலக்கணமும், அதன் சொற்களும் மக்களுக்கு அன்னியமானவை.  ஆகவே நீங்கள் பொருளாதாரத்தை ஆங்கிலத்தில் கற்றுகொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு ஆங்கில மொழியை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை ஆங்கிலத்தில் படிக்கும்போது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியும். அது இங்கிலாந்து நாட்டில் இருப்பவர்களுக்குத்தான் எளிதில் சாத்தியமானது.

ஆனால் இந்தி,  கன்னடம், மலையாளம் போன்றவை நமக்கு அன்னிய மொழிகள் அல்ல. அவற்றின் இலக்கணம் , அவற்றின் சொற்கட்டமைப்புகள், வார்த்தைகள் போன்றவை மிகவும் நெருங்கியவை.  இதனால்தான் தமிழர் ஒருவருக்கு இந்தி கற்றுகொள்வது மிக மிக எளிது. ஆனால் ஆங்கிலம் கற்றுகொள்வது மிக மிக கடினம்.

இந்தியாவிலிருந்து அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக நான் இதனைத்தான் காண்கிறேன்.

இதனை ரிச்சர்ட் பெயின்மன் தன்னுடைய நூலில் குறிக்கிறார்.

பிரேசில் சென்றிருந்தபோது அங்கே மாணவர்கள் தங்களுடைய பிராந்திய மொழியான  போர்ச்சுகீஸ் மொழியில் கற்காமல், ஆங்கிலத்தில் கற்பதையும், அது அவர்களை வெறுமே மனப்பாடம் செய்யும் மடையர்களாக ஆக்கியிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

இன்று வளர்ச்சியடைந்த எந்த நாட்டை எடுத்துகொண்டாலும், அவர்கள் தங்களுடைய பிராந்திய மொழியிலேயே (பிராந்திய மொழி, தாய்மொழி அல்ல) உயர்கல்வியை கற்றுத்தருவதை பார்க்கலாம்.  அமெரிக்கர்கள் ஆங்கிலத்திலும், ஜெர்மானியர்கள் ஜெர்மன் மொழியிலும்,  பிரான்ஸ் பிரெஞ்சிலும், இத்தாலியில் இத்தாலி மொழியிலும் கற்றுத்தருகிறார்கள், படிக்கிறார்கள்.  சீனாவில் சீன மொழி மண்டாரின் மொழியில்தான் உயர்கல்வி நடக்கிறது. ஜப்பானில் ஜப்பான் மொழியில்தான் உயர்கல்வி நடக்கிறது. கொரியாவில் கொரிய மொழியில்தான் உயர்கல்வி.  ரஷியாவில் ரஷ்ய மொழியில்தான் உயர்கல்வி.

இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் மிகப்பெரும் தோல்வி அடைந்து கிடந்தபோது செல்வங்கள் ஏதுமின்றி ஏழையானார்கள். அடிப்படை வசதிகள் செய்யவும், உணவுக்கும் கூட பணமில்லை. ஆனால், அவர்கள் தங்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி முழுநேர வேலையாக முக்கியமான அனைத்து அறிவியல் தொழில்நுட்ப புத்தகங்களையும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். தற்போதைய சாப்பாட்டைவிட, எதிர்கால ஜப்பான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது.

இன்று ஜப்பானிலிருந்து வெளிவரும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் ஜப்பானிய மொழி கல்விதான் இருக்கிறதே தவிர ஆங்கில கல்வி அல்ல. சொல்லப்போனால் அங்கே இருக்கும் பெரும்பாலான ஜப்பானிய அறிவியலாளர்களுக்கும் பொறியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஆங்கில மொழியே தெரியாது. ஆனால் அவர்கள் குருட்டுத்தனமாக மொழிவெறி பிடித்தும் அலையவில்லை. ஆக்ஸிஜன் என்பதை ஆக்ஸிஜன் என்றே எழுதிகொண்டார்கள். கார்பண்டை ஆக்ஸைடை கரியமிலவாயு என்றும்  தமிழ் வெறியர்கள் அதனை ஆக்சிசன் என்று எழுதித்தள்ளி, சுய புளகாங்கிதம் அடைந்து தமிழை காப்பாற்றிவிட்டோம் என்று நிம்மதியாக தூங்க போயிருப்பார்கள். இவர்களுக்கு ஜ ஷ, ஸ ஹவை தமிழ் படுத்தினாலே தமிழை காப்பாற்றிவிட்டதாக கருதிவிடுகிறார்கள் (ஆனால் என்னவோ ஸ்டாலின் ஸ்டாலினாகத்தான் இவர்கள் எழுத்தில் இருக்கிறார். சுடாலின் ஆகவில்லை)

இன்றைய தேவை என்று நான் கருதுவது இதுதான்.
1. அனைத்து ஆங்கில, இந்தி மொழி வழி கல்வி முறையும் தமிழ்நாட்டிலிருந்து அறவே நீக்கப்பட்டு, தமிழுக்கு, அதாவது பிராந்திய மொழிக்கு, அனைத்து பள்ளிகளும் மாற்றப்படவேண்டும். ஆங்கில வழி கல்வி அறவே ஒழிக்கப்படவேண்டும்.
2. அனைத்து கல்வியும், கல்லூரி கல்வி, முதுநிலை கல்வி, பிஹெச்டி ஆகிய அனைத்தும் குறிப்பிட்ட வருடத்துக்குள் தமிழுக்கு மாற்றப்பட வேண்டும்.
3. இந்தியும் ஆங்கிலமும் கட்டாயமற்ற மொழியாக கற்றுத்தரப் படவேண்டும். அதாவது அதில் பாஸ் பெயில் என்று இல்லாமல் பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டும்.
4. தாய்மொழி கற்றுகொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமே அன்றி, உருது மீடியம், தெலுங்கு மீடியம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும்.
5. இதுவே அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும்.  உதாரணமாக கர்னாடகத்தில் கன்னடமொழியே பிரதானமாக உயர்கல்விக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

அப்படி நடந்தால், வேறு வழியின்றி, தனியாரும் அரசும், தமிழில் உயர்கல்வி நூல்களை மொழிபெயர்க்க நிர்பந்திக்கப்படும். அது முதல்முறையாக செய்யப்படும்போது கண்றாவி மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கும். ஆனால், தொடர்ந்து மூன்றாவது நான்காவது முறை மொழிபெயர்க்கப்படும்போது தமிழ் அந்த அறிவியல், தொழில்நுட்ப வார்த்தைகளை ஸ்வீகரித்துகொள்ள ஆரம்பிக்கும். (அப்படி ஏதும் நடந்தால், ஷ,ஸ,ஜ, ஹ போன்ற எழுத்துக்களை நீக்கிவிட்டு தமிழ் எழுதும் மட வெறியர்களை தயவு செய்து நாடுகடத்திவிட வேண்டுமாய் மன்றாடி கேட்டுகொள்கிறேன்)

இது சாதிக்கப்பட்டால், இன்னும் 20 வருடங்களுக்குள் அறிவியல், தொழில்நுட்பத்தில் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் சிறந்துவிளங்கும்.

இதன் மீது விவாதத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இணைப்புகளின் பகுதிEffective Speech of seeman (2019) என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்Effective Speech of seeman (2019)நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும் – சீமான் என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும் – சீமான்

 

http://puthu.thinnai.com/?p=40867

 

 

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிருபன் அய்யா,

எங்க இருந்து இதுகளை எடுத்துக் கொண்டு வருகிறீயளோ தெரியவில்லை.

இந்த தளத்தினை நோர்டோன் பிளாக் பண்ணுது.

Safe Web Report for:
puthu.thinnai.computhu.thinnai.com
icoWarning
WARNING
Norton Rating
Safeweb Share
The Norton rating is a result of NortonLifeLock's automated analysis system. Learn more.
The opinions of our users are reflected separately in the community rating on the right.

Community Reviews (0)
Threat Report
This is a known dangerous web page. It is highly recommended that you do NOT visit this page.


Click here to submit dispute

Safe Web Report for:

icoWarning
 
WARNING
 

Norton Rating

Safeweb Share
 
The Norton rating is a result of NortonLifeLock's automated analysis system. Learn more.
The opinions of our users are reflected separately in the community rating on the right.

Community Reviews (0)

Threat Report

This is a known dangerous web page. It is highly recommended that you do NOT visit this page.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

கிருபன் அய்யா,

எங்க இருந்து இதுகளை எடுத்துக் கொண்டு வருகிறீயளோ தெரியவில்லை.

இந்த தளத்தினை நோர்டோன் பிளாக் பண்ணுது

திண்ணை காலம் காலமாக இருக்கும் ஒரு தளம். நோர்ரொனுக்கு இன்னுமா காசு கொடுக்கின்றீர்கள்!

கட்டுரையில் சொல்லப்பட்டதை வாசித்தேன். நாம் தமிழர் அரசியல் ஆச்சே என்பதால் இணைத்திருக்கின்றேன். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

திண்ணை காலம் காலமாக இருக்கும் ஒரு தளம். நோர்ரொனுக்கு இன்னுமா காசு கொடுக்கின்றீர்கள்!

கட்டுரையில் சொல்லப்பட்டதை வாசித்தேன். நாம் தமிழர் அரசியல் ஆச்சே என்பதால் இணைத்திருக்கின்றேன். 

இந்த கட்டுரையின் ஒரே ஒரு விசயம்  பத்தி பேசலாம். மீதி, ஒரு சோறு பதம் என்கிற கதைதான்.

1. எடப்பாடி படித்தது 5ம் வகுப்பு. கருணாநிதி, எம்ஜிஆர், காமராஜர் அப்படி லெவல் தான்.

2. டென்மார்க் குறித்து பேசலாம். தமிழகத்தின் கிராமப்புற, தெருவோர இன்னும் சொல்லப்போனால் நகர்புறத்தில் பெருமளவு மக்களுக்கு சர்விஸ் இண்டஸ்ட்ரி என்றால் என்னவென்று புரியுமா?

3. 2% மட்டுமே விவசாயம் என்கிறார். ஆனால் அந்த இரண்டு வீதம் மக்களும், மிக உயர் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் விவசாயிகள். நாட்டின் 63% நிலப்பகுதி இவர்களால் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது . உலகில், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மிக அதிக அளவு நிலம் விவாசாயத்துக்கு பயன்படுத்த்தப்படுவது டென்மார்க்கில் தான்.

4. இதனால், தன்னிறைவு அடைந்ததுடன், ஏற்றுமதி செய்யுமளவுக்கு உயர்ந்து இருக்கிறது அந்தநாடு. முக்கிய விவசாய பொருட்கள், ஆடு, மாடு, கோழி, பன்றி. உயர் தொழிநுட்பம், இயந்திர பாவனை காரணமாக, 2% மக்களே விவசாயத்துக்கு போதும். மீதமானோர் வேறு வேலைகளில்.

5. சீமான் சொல்ல வருவது, விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததுடன், ஏற்றுமதியும் செய்யும் நிலையில், அந்த நா(ட்)டு (விவசாயிகள்) உள்ள(து)னர் என்பதை. 

6. சீமான் சொல்வது, நிலம், வளம், ஆள் இருந்தும் ஏன் ஆந்திராவில் இருந்து ஆட்டு இறைச்சியும், பாலும் வரவேண்டும் என்று?

7. இனொரு விசயம் முக்கியமாக நீட் தேர்வினை கட்டுரை ஆதரிக்கின்றது. "மிழர் ஒருவருக்கு இந்தி கற்றுகொள்வது மிக மிக எளிது. ஆனால் ஆங்கிலம் கற்றுகொள்வது மிக மிக கடினம்", என்று வேறு போதிக்கிறது. 😁

இதனையே மாத்தி சொல்லி பார்த்தேன், கிருபன் ஐயா:  "தமிழர் ஒருவருக்கு சிங்களம் கற்றுகொள்வது மிக மிக எளிது. ஆனால் ஆங்கிலம் கற்றுகொள்வது மிக மிக கடினம்", சிரிப்பு, சிரிப்பா வருது...

இதுக்கு மேலே என்ன சொல்ல இருக்கிறது. இது சங்கிகள் ஆதரவு தளம் இல்லாமல் வேறென்ன? கடைசீல கிருபன் நம்மள சங்கீ ஆக்க பார்க்கிறாரோ?

தயவு செய்து இந்த தமிழ் நாட்டு அலப்பறைகளை இங்கே கொட்டாதீர்கள் என்று சொன்னால் கேட்க்கிறீர்கள் இல்லை. சீமான் உங்களுக்கு பிடிக்காமல் இருப்பது வேறு. அதுக்காக, சங்கிகள் பிரசங்கம் நாமும் பெற வேண்டும் என்று நீங்கள் கருதுவது வேறு.

இன்னும் பல அலம்பரைகளை சுட்டிக் காட்டிட  முடியும். நேரமில்லை.

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

தயவு செய்து இந்த தமிழ் நாட்டு அலப்பறைகளை இங்கே கொட்டாதீர்கள் என்று சொன்னால் கேட்க்கிறீர்கள் இல்லை.

தமிழ் நாட்டில் இருந்து வரும் சீமானின் மோசமான அலப்பறைகளை கொட்டாமல் விட்டாலே போதும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் நாட்டில் இருந்து வரும் சீமானின் மோசமான அலப்பறைகளை கொட்டாமல் விட்டாலே போதும்.

 

21 minutes ago, Justin said:

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

2 hours ago, கிருபன் said:

கட்டுரையில் சொல்லப்பட்டதை வாசித்தேன். நாம் தமிழர் அரசியல் ஆச்சே என்பதால் இணைத்திருக்கின்றேன். 

Smiley Face Big Smile Clipart - Full Size Clipart (#1524932) - PinClipart

No Comments !!!

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

மோகனே எதுவும் பேசவில்லை. தாங்கள் ஏன் கொதிக்கிறேள்?

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் நாட்டில் இருந்து வரும் சீமானின் மோசமான அலப்பறைகளை கொட்டாமல் விட்டாலே போதும்.

உங்களுக்கு பிடித்தது எங்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதே போல் எங்களுக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
இது நியதி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மோகனே எதுவும் பேசவில்லை. தாங்கள் ஏன் கொதிக்கிறேள்?

நீங்கள் மோகனை நேரே சந்தித்திருந்தால் ஏன் அவர் பேசுவதில்லை என்று புரியலாம்!

ஆனால், ஏனைய தமிழ் நாட்டு குப்பைகளை இணைத்த போது நாதம் கொதித்ததற்கே இந்தப் பதில்! மற்றபடி திரி இருக்க வேண்டும், பூட்டும் படி  விரும்பும் பாசிசம் என்னிடம் இருந்து வராது!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

.இன்னும் பல அலம்பரைகளை சுட்டிக் காட்டிட  முடியும். நேரமில்லை.

நாதர்! சீமானின் ஈழகொள்கையை தவிர்த்து பார்த்தால் சர்வதேச நாடுகளில் முன்னேறி வரும் பசுமைவாத கட்சிகளின் கொள்கையே தவிர வேறொன்றுமில்லை. இந்திய பத்திரிகைகளில் எப்படி வேண்டுமானாலும் எருதுவார்கள். திண்ணை ஊடகத்திற்கு கொஞ்ச பணம் அனுப்பி சீமானுக்கு சார்பாக எழுதச்சொல்லுங்கள். புராணகாலத்திலிருந்து எழுதி சான்றுகளுடன் புகழ்வார்கள். அதையும் இங்கே இணைத்து அழகு பார்ப்பார்கள் இந்த கூட்டங்கள்.

நியாயங்கள் சாவதில்லை.அது  ஈழத்தில் இன்று தெரிகின்றதல்லவா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

நீங்கள் மோகனை நேரே சந்தித்திருந்தால் ஏன் அவர் பேசுவதில்லை என்று புரியலாம்!

ஆனால், ஏனைய தமிழ் நாட்டு குப்பைகளை இணைத்த போது நாதம் கொதித்ததற்கே இந்தப் பதில்! மற்றபடி திரி இருக்க வேண்டும், பூட்டும் படி  விரும்பும் பாசிசம் என்னிடம் இருந்து வராது!

மோகனினை நான் நேரில் சந்தித்தாலும் அவர் மன நிலையை அறியும் திறமை என்னிடம் இல்லை.

2009க்கு முன்னர் இருவகையான தமிழ் இணையத்தளங்கள் இருந்தன.
ஒன்று புலிகள் சார்ந்த ஈழவிடுதலை இணையத்தளங்கள்.
இரண்டு விடுதலைப்புலிகளை மட்டும் எதிர்க்கும் இணையத்தளங்கள்.
2009க்கு பின்னர்  புலிகள் சார்ந்த இணையத்தளங்கள் மேலும் செய்வதறியாது மூடப்பட்டன. அல்லது விடுதலைப்புலிகள் மீதான தடைகளால் முடப்பட்டன.ஆனால் விடுதலைப்புலிகளை எதிர்க்க மட்டும் வந்த இணையத்தளங்கள் சொல்லியே மூடினார்கள். அதாவது நாங்கள் வந்த வேலை முடிந்து விட்டது. இனி எமக்கு வேலை இல்லையென்று.....
ஜஸ்டின் நான் எழுதிய தமிழ் புரிகின்றதா? அல்லது நான் எழுதியது புரிகின்றதா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, Justin said:

இந்த திரியே மோகனின்  செலவில் நா.த என்ற தமிழருக்கு கொள்ளிக்கட்டையான ஒரு கட்சி செய்யும் ஓசிப் பிரச்சாரமாக இருக்க, ஏன் நாதம் கிருபனைத் திட்டிறேர்?

ஐயா உங்கடை கருத்து படி  பார்த்தால் பல திரிகள் இழுத்து மூடவேண்டி வரும் .icq  காலத்தில் இருந்து இன்றைய வாட்ஸாப் யுகம்  வரை  நின்று பிடிப்பதுக்கு  காரணம் மோகனின் நடுநிலைமை ஒரு செய்தியை உண்மை பொய் அறிய உலகில் உள்ள தமிழர்கள் தேடிவந்து பார்க்கும் இணையம் இது ஆனந்த விகடன் கூட கருத்து கள  முயற்சி பண்ணி தோல்வி அடைந்த விடயம் காரணம் அவர்கள் ஒரு கட்சி சார்பான அரசியல் .உங்களுக்கு இந்த சீமான்  பிடிக்கவில்லையா உங்கள் சீமானின் தவறுகளை சுட்டி காட்டுங்கள் அது அழகு அதுக்காக எப்பவும் போல் ஆமைக்கறி மோதகம் வடை என்று போகாமல் அவரின் அரசியல் பிழைகளை சுட்டி காட்டுங்கள் அது இன்னும் அழகு . ராஜீவ்  காந்தி படுகொலையுடன் தமிழ்நாட்டில் ஈழ எழுச்சி இல்லாமல் போகும் என்றார்கள்  ஆனால் தமிழ்நாட்டில் புலிகளை தூக்கி எறிந்த கட்சி ஆடசி பீடம் எற முடியாமல் தவிக்கினம் காரணம் இந்த சீமான் புரிந்து கொள்ளுங்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

 

ஐயா உங்கடை கருத்து படி  பார்த்தால் பல திரிகள் இழுத்து மூடவேண்டி வரும் .icq  காலத்தில் இருந்து இன்றைய வாட்ஸாப் யுகம்  வரை  நின்று பிடிப்பதுக்கு  காரணம் மோகனின் நடுநிலைமை ஒரு செய்தியை உண்மை பொய் அறிய உலகில் உள்ள தமிழர்கள் தேடிவந்து பார்க்கும் இணையம் இது ஆனந்த விகடன் கூட கருத்து கள  முயற்சி பண்ணி தோல்வி அடைந்த விடயம் காரணம் அவர்கள் ஒரு கட்சி சார்பான அரசியல் .உங்களுக்கு இந்த சீமான்  பிடிக்கவில்லையா உங்கள் சீமானின் தவறுகளை சுட்டி காட்டுங்கள் அது அழகு அதுக்காக எப்பவும் போல் ஆமைக்கறி மோதகம் வடை என்று போகாமல் அவரின் அரசியல் பிழைகளை சுட்டி காட்டுங்கள் அது இன்னும் அழகு . ராஜீவ்  காந்தி படுகொலையுடன் தமிழ்நாட்டில் ஈழ எழுச்சி இல்லாமல் போகும் என்றார்கள்  ஆனால் தமிழ்நாட்டில் புலிகளை தூக்கி எறிந்த கட்சி ஆடசி பீடம் எற முடியாமல் தவிக்கினம் காரணம் இந்த சீமான் புரிந்து கொள்ளுங்கள் .

பெருமாள், 40 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருப்பதை முன்கூட்டியே சொல்லக் கூடியவர் நீங்கள், கண் முன்னே இருக்கும் கருத்தைப் பார்க்க மாட்டீர்களோ? எங்கே திரியைப் பூட்டச் சொல்கிறேன்? திரி இருக்க வேன்டுமென்று தானே சொல்லியிருக்கிறேன் கு.சா வுக்கு?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்!
இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்!

 

 

இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

இந்திய கலாச்சாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து பெரும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, அக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளைச் சேர்க்காது முற்றாகப் புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. வரலாற்று ஆய்வை நடத்துவதற்காக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் வெளியிட்ட 16 பேர் கொண்ட நிபுணர்குழு பட்டியலில் இவ்வாறான புறக்கணிப்புகள் நடந்தேறியிருப்பது தற்செயலானதல்ல. இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரும் சதி என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. அக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதன் மூலம் அது தெளிவாகிறது. இத்தோடு, மதச் சிறுபான்மையினர்களோ, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, பெண் ஆய்வறிஞர்களோ இடம்பெறவில்லை என்பதும் அதனை மெய்ப்பிக்கிறது. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 16 பேரில் 3 ஷர்மாக்கள், 2 சுக்லாக்கள், 1 சாஸ்திரி, 1 தீட்சித் மற்றும் 1 பாண்டே என 14 ஆரியப்பார்ப்பனர்கள் இடம்பெற்றுள்ளனர் எனும்போதே பாஜக அரசின் உள்நோக்கமும், சதிச்செயலும் தெளிவுபட விளங்குகிறது.

இந்தியா என்பது ஒற்றைத்தேசமல்ல. பல தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதைத்தான் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் முதல் உறுப்பு வரையறுக்கிறது. எனவே, குறிப்பிட்ட ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையோ அல்லது குறிப்பிட்ட ஒரு இனத்தவரையோ மட்டுமே கொண்டு இந்நாட்டின் வரலாற்றை எழுத முனைவதென்பது திட்டமிட்டு வரலாற்றைத் திரித்து எழுத வழிவகுக்கும் கொடுஞ்செயலின்றி வேறில்லை. குறிப்பாக இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளிலேயே கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் அதிகமான கல்வெட்டுகளையும் , அதேபோல ஓலைச்சுவடிகள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்று வாழ்விடங்கள், அரிக்கமேடு, கீழடி உள்ளிட்ட மிக மூத்த வரலாற்று தொல்லியல் களங்களையும் கொண்டுள்ள நிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், இந்தியாவின் வேறெந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்கு மூவாயிரம் ஆண்டுகாலப் பழமைமிக்க இலக்கண , இலக்கிய வளங்களுடைய நூல்களைக் கொண்ட மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது. வேற்று நாட்டவர்களெல்லாம் இந்திய துணைக்கண்டத்தின் மீது படையெடுத்து வந்த வரலாற்றுக்கிடையில், கடல் கடந்து அந்நியத் தேசங்கள் பலவற்றிற்கும் படையெடுத்துசென்று வென்ற வரலாறு தமிழர்களுக்கே உரித்தானது. தொழில்நுட்ப வசதி இல்லாத ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரியக் கப்பற்படையும், யானைப்படையும் தமிழர்களிடம் இருந்துள்ளது. எனவே, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்குடியான தமிழ்ப்பேரினத்தின் வரலாற்றை, தமிழ் மொழியின் தனித்துவமிக்கச் சிறப்பையும், அளப்பெரும் பெருமையையும், தமிழ் மண்ணின் செழுமைமிக்க மரபையும், பண்பாட்டையும் அறியாத, சிறிதும் தொடர்பற்ற ஒரு கூட்டம் வரலாற்றை எழுதுமாயின் அது தமிழர்களைச் சிறுமைப்படுத்தும் வரலாறாகவே அமையும். கீழடி வரலாற்றை மறைக்க முயன்றதுபோல, தமிழர்களின் பெருமைமிக்கத் தொல் வரலாறும் மூடி மறைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான திரிபு வரலாறு உட்புகுத்தப்படும். ஒரு நூற்றாண்டாகப் பெரிய அளவில் தொல்லியல் ஆய்வு செய்து நிறுவப்பட்ட சிந்துசமவெளி நாகரீகம் ஒரு தமிழர் நாகரீகம் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் அழிக்கப்படக்கூடும். மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் இம்மண்ணிற்கு அந்நியர்கள் எனும் தொல்லியல் முடிவுகள் இனி மாற்றி எழுதப்படும். அதற்காகவே உலகப் பிரமாணச் சங்கத்தின் தலைவராக உள்ள எம்.ஆர்.ஷர்மா, ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானத்தின் துணைவேந்தர் பி.என்.சாஸ்திரி, உள்ளிட்டப் பெரும்பாலான வடமொழிப் பேராசியர்களை வரலாற்று ஆய்வறிஞர் போர்வையில் இந்த நிபுணர் குழுவில் உள்நுழைத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வக்குடிகள், இந்நாடு ஆரியர்களுடையது, ஆரிய மதமே இந்நாட்டின் பூர்வீக மதம், ஆரிய வேத, புராண, இதிகாசங்கள் கூறும் பண்பாடே இந்தியாவின் பண்பாடு என்பதை நிறுவவே மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்தகையப் படுபாதகச்செயலை அரங்கேற்றியுள்ளது. அவ்வாறு நிறுவுவதன் மூலம் இந்து, இந்தி, இந்தியா என்ற பாஜகவின் மனுதர்மக் கோட்பாட்டினை இந்நாடு முழுவதும் கட்டமைத்து நாட்டிலுள்ள பலவகைப்பட்ட தேசிய இனங்களின் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வரலாறு, வழிபாடு ஆகியவற்றினை முற்றாகச் சிதைக்க முற்படுகிறது. இது தேசிய இனங்கள் மீது மத்தியில் ஆளும் மோடி அரசு நிகழ்த்தப்போகும் பண்பாட்டுப்படையெடுப்பு என்றால், மிகையல்ல. ஆரியமயமாக்கலுக்கு எதிரான மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக தேசிய இனங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் பெருங்கடமையாகிறது.

ஆகவே, இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவினை உடனடியாகத் திரும்பப் பெற்று, புதிதாகக் குழு அமைத்து அக்குழுவில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள், பட்டியல் சமூகத்தவர், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்குமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு, வரலாற்றுச்சான்றுகள், தொல்லியல் முடிவுகள் அடிப்படையில் வரலாறு பதிவுசெய்யப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/naam-tamilar-seeman-condemns-union-govt-indian-historical-research-council/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பின்வாங்கிய ரஜினிகாந்த் : பின்னணி என்ன?

 

இலவச குடிநீர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

திண்ணை ஊடகத்திற்கு கொஞ்ச பணம் அனுப்பி சீமானுக்கு சார்பாக எழுதச்சொல்லுங்கள். புராணகாலத்திலிருந்து எழுதி சான்றுகளுடன் புகழ்வார்கள். அதையும் இங்கே இணைத்து அழகு பார்ப்பார்கள் இந்த கூட்டங்கள்.

தர்க்கரீதியாக விமர்சனம் வைப்பவர்களையும் காசுக்காக எழுதுபவர்கள் என்று  எதுவித ஆதாரமும் இல்லாமல் எழுதி விமர்சனத்தை முற்றாக மறுப்பதும் இங்கு தாராளமாக நடக்கின்றது. 

9 hours ago, Nathamuni said:

இதுக்கு மேலே என்ன சொல்ல இருக்கிறது. இது சங்கிகள் ஆதரவு தளம் இல்லாமல் வேறென்ன? கடைசீல கிருபன் நம்மள சங்கீ ஆக்க பார்க்கிறாரோ?

நான் உங்களை சங்கி ஆக்கவில்லை. சீமான் தனது வாக்கு வீதத்தை வைத்து பாஜகவுடன் ஒரு டீலுக்கு வந்து சேரும்போது நீங்களாகவே சங்கிகள் ஆவீர்கள்.

திண்ணை 2000 ஆம் ஆண்டில் இருந்து இயங்குகின்றது. தமிழக முக்கிய அரசியல் விமர்சகர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் குந்தியிருந்த இடம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

ஆகவே, இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவினை உடனடியாகத் திரும்பப் பெற்று, புதிதாகக் குழு அமைத்து அக்குழுவில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள், பட்டியல் சமூகத்தவர், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்குமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு, வரலாற்றுச்சான்றுகள், தொல்லியல் முடிவுகள் அடிப்படையில் வரலாறு பதிவுசெய்யப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/naam-tamilar-seeman-condemns-union-govt-indian-historical-research-council/

இப்படி நாம் தமிழர் கட்சியின் இணையத்தளத்தில் இருந்து ஒயாமல் ஒட்டுவதும், அவர்களின் வீடியோக்களை ஒட்டுவதும், விமர்சனங்களை மூர்க்கமாக எதிர்த்து கருத்துக்களை வைக்காமல் தடுப்பதும் இந்தத் திரியில் நடப்பதால்தான் இதனை நாம் தமிழர் பிரச்சாரத் திரி என்று நானும் சொல்கின்றேன். 

Edited by கிருபன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இப்படி நாம் தமிழர் கட்சியின் இணையத்தளத்தில் இருந்து ஒயாமல் ஒட்டுவதும், அவர்களின் வீடியோக்களை ஒட்டுவதும், விமர்சனங்களை மூர்க்கமாக எதிர்த்து கருத்துக்களை வைக்காமல் தடுப்பதும் இந்தத் திரியில் நடப்பதால்தான் இதனை நாம் தமிழர் பிரச்சாரத் திரி என்று நானும் சொல்கின்றேன். 

எல்லோரும் ஓ போட்டு கை தட்டிவிடுங்கள் நம்ம கிருபனுக்கு 👏👏👏

 நல்லா நொந்து போய்விட்டீர்களா

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

எல்லோரும் ஓ போட்டு கை தட்டிவிடுங்கள் நம்ம கிருபனுக்கு 👏👏👏

 நல்லா நொந்து போய்விட்டீர்களா

😂🤣

கருத்துக்கு பதில் எழுதத் தெரியாவிட்டால் இப்படியான பதில்கள்தான் உங்களிடம் இருந்து வரும் என்று தெரியும்😜 அதனால் நோக ஒன்றுமில்லை.😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

😂🤣

கருத்துக்கு பதில் எழுதத் தெரியாவிட்டால் இப்படியான பதில்கள்தான் உங்களிடம் இருந்து வரும் என்று தெரியும்😜 அதனால் நோக ஒன்றுமில்லை.😎

என்ன கருத்தை ஏதிர் பார்க்கின்றீர்கள். சொன்னால் எழுதிப்போடலாம் 😜

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
   ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
   ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
   கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
   இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
   இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!

   கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
   அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
   அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
   அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.
   “ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
   இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
   விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
   இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
   ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
   இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
   ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
   தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!
   இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
   இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
   எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!
   அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
   தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
   இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
   வாழ்க தமிழ்!
   வளர்க தமிழர்!!
   மலர்க தமிழீழம்!!!
   பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z
   படம்: நன்றி மாவீரம்.
  • By இசைக்கலைஞன்
   சுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃
    
  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   “ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.
   “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

   “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

   “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

   ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

   ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 

   ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

   அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 
    
   **********
   இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

   “லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

   “சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

   “நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

   வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

   “ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

   “ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன். 

   “தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”. 

   சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது. 

   ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர். 

   “உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம். 

   மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன். 

   கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன். 

   சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன். 

   ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை. 

   நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை. 

   மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?... 

   ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

   எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்! 

   என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…” - படித்து முடிப்பதற்குள், 

   “அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ். 

   “என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க, 

   “இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன். 

   “அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?” 

   “என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன், 

   “அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.
   ❀ ❀ ❀ ❀ ❀
   (நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக). 

   படம்: நன்றி ஓவியர் இளையராஜா  - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html
  • By இசைக்கலைஞன்
   சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
    
    
  • By இசைக்கலைஞன்
   5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்
   கே.கே.மகேஷ்
   Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.
   எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?
   நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.
   ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?
   சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?
   திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?
   எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.
   அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?
   சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?
   மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?
   கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!
   http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece#comments
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.