Jump to content

கண்டிக்கக்கூட முன்வராத ஊடகங்களின் போக்கு ஆரோக்கியமானதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிக்கக்கூட முன்வராத ஊடகங்களின் போக்கு ஆரோக்கியமானதா?

உலகிலே கருத்தியற்றளத்தை நகர்த்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் காத்திரமானது.தமிழ்த் தேசிய அரசியலை நசுக்குவதற்கான முதற்படியாக சிங்கள மற்றும் (கி)இந்திய அரசுகளால் நூலகம் முதல் ஊடகங்கள்வரை தாக்கியழிக்கப்பட்ட பல சம்பவங்கள் எமதின வரலாற்றில் மாறாத வடுக்களாகப்பதிவாகியுள்ளது.

இன்று தொடர்பாடற்றுறையின் தகவற் பரிமாற்ற நுண்ணறிவு வளர்ச்சியானது, அச்சூடகங்களின் செழுமையையோ வாசகனின் கவனயீர்ப்பையோ முழுமையாகத் பெறாதபோதிலும்,  விரைவான இலகுவழி மின்னியற் குமுகாய ஊடகப்பரப்பை இலகுபடுத்தியுள்ளது. அதனைத் தமிழ்த்தேசியம் சார்ந்தும் பல்வேறு தரப்புகளும் பயன்படுத்தி வருகின்றமை கண்கூடு. இன்று மின்னியல் ஊடகங்கள் பல்கிப்பெருகித்  தமது சுயவளர்ச்சிமீதான கவனக்குவிப்பில் மட்டுமே குறியாக நிற்பதையும் அவதானிக்க முடிகிறது. தமிழ்தேசியம் தொடர்பாகப் பத்தோடு பதினொன்றாக ஒரு செய்தியாக இடம்பெறுவதோடு நகர்கின்றது. அதேவேளை தமிழ்தேசியத்தின் களமுனை மிகவும் உயிர்புடன் இருந்தகாலத்தில் தமிழ் தமிழ்த்தேசியம் என்று பேசிய செயற்பட்ட ஊடகங்கள் இன்று தனியாளுகைக்குட்பட்டு நிற்கின்றமையையும் காணமுடிகிறது. சில ஊடகங்கள் சிங்கள அரசோடு சமரசம் செய்துகொண்டு பட்டும்படாமலும் தொட்டுச்செல்லும் பிழைப்புவாதிகளாகவும் மாறியுள்ள சூழலே எம்கண்முன்னே விரிந்து விரவிக்கிடக்கிறது. இப்படியானதொரு சூழலில் தமிழ்தேசியத்தினது உண்மைநிலையை வெளிக்கொணரத் தமது சக்திக்கப்பாற்பட்டுச் செயற்படும் ஊடகங்கள்மீது சிறிலங்கா அரசு தாக்குதல் நடாத்திச் செயலிழப்பினை ஏற்படுத்திவருகின்றமையும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது.

அந்தவகையிலே அண்மையில் 'குறியீடு இணையத்தளம்மீது தாக்குதல் நடாத்திச் செயலிழப்பை ஏற்படுத்தியபோது அதனை மீண்டும் இயங்கவைத்து மூன்றுநாட்களில், மீண்டும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஒரு ஊடகத்தின்மீதான தாக்குதலை எந்தவொரு ஊடகமும் கண்டிக்க முன்வராமை எத்துணை ஆரோக்கியமானது என்ற வினாவை ஒரு வாசகனென்றவகையிலே கேட்கத்தோன்றுகிறது

.நொச்சி
யாழிணையம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.