Sign in to follow this  
nochchi

சட்டி(நிமிடக்கதை(யல்ல))

Recommended Posts

                                                                                                                       சட்டி (நிமிடக்கதை(யல்ல))

                                                                                                                                                                           

பூனகரியை அண்மித்த யுத்தம் கோரத்தாண்டவமாடியபோது அவளது ஊரும் இடம்பெயரலானது. கணவன் கடந்த ஆண்டு போர்முனையில் வித்தாகிவிட இருபிள்ளைகளோடு இடர்களைத்தாங்கித் தனது பிள்ளைகளுக்காக வாழ்ந்தவள் வினோதா. அமைதியிழந்த சூழலில் உணவோ நித்திரையோ இல்லாது மக்களோடு மக்களாக நகர்வதும் ஒதுங்குவதும் பின் இன்னொரு இடம் நோக்கி நகர்வதுமாய் இன்று புதுக்குடியிருப்பிலே. எங்கும் மரணமும் பட்டினியும். பணமிருந்தாலும் பசியாற வழியில்லை. சற்று ஓய்வாக இருக்க எண்ணினாலும் முடியாது. பிள்ளைகள் பசியால் துடிக்க என்ன செய்வதென அறியாது நின்றவளுக்கு, ரீஆர்ஓ கஞ்சி ஊத்துவதாகப் பேசிக்கொள்ளத் தனது பையிலேயிருந்த அலுமினியச் சட்டியை எடுத்துக்கொண்டு கஞ்சி ஊற்றும் இடம் நோக்கிப் போகிறாள் ஐந்தும் ஏழும் நிரம்பிய குழந்தைகளை கவனமாகப் பதுங்குகுழிக்குள் இருக்குமாறு கூறிவிட்டுச் செல்லும் தாயை ஒருவித மிரட்சியோடு அவள் செல்லும் திசையைப் பார்த்தாவறு பிஞ்சுகள். மிகச் சமீபமாகவும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசை. எதுவுமே அறியாத பாலகர்கள் குழியினுள் பதுங்கிக்கொள்கிறார்கள். சிலநொடிப்பொழுதுகளில் எங்கும் ஒரே அழுகுரலும் ஓலமும். குருதிதோய்ந்த நிலையில் வினோதா கொண்டுசென்ற சட்டி பதுங்குழி வாசலில் வந்து வீழ்கிறது. கஞ்சிகொடுத்த இடத்தில் பெரும் குழியாமே என்று பேசிகொண்டு சிலர் ஓடுகிறார்கள். தமது படைகள் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லையென்று கோத்தபாயா கூறியதாக, டைனமோச் சுழற்சியில் கேட்கும் பிபிசீ வானொலியில் செய்திபோகிறது.  

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, nochchi said:

கோத்தபாயா கூறியதாக, டைனமோச் சுழற்சியில் கேட்கும் பிபிசீ வானொலியில் செய்திபோகிறது.  

இது கதையல்ல நிஜம்.....எமது காலகட்டத்தில் நடந்தவை

Share this post


Link to post
Share on other sites
On 17.6.2017 at 0:56 PM, putthan said:

இது கதையல்ல நிஜம்.....எமது காலகட்டத்தில் நடந்தவை

ஆக்கத்தைப் படித்து ஊக்கம் தருவதற்கு நன்றிகள் புத்தரே!

Share this post


Link to post
Share on other sites

ஒரு நொடியும் உறைய வைக்கும்  திகிலான\ அனுபவம் அனுபவித்த மக்கள் நம் மக்கள் 

Share this post


Link to post
Share on other sites

சிறிய சம்பவாயினும் நச் சென்று எழுதியுள்ளீர்கள் நொச்சி ....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this