Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

 கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி


Recommended Posts

 கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி

 

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்,ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - காங்., உள்ளிட்ட, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து, கூவத்துாரில் நடந்த குதிரை பேரம் தொடர்பாக, 'சிடி' ஆதாரத்துடன் முறையிட்டனர்.

'லஞ்சம் கொடுத்தே நம்பிக்கை ஓட்டெடுப்பில், பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, அ.தி.மு.க., ஆட்சியை உடனே கலைக்க வேண்டும்' என்றும், வலியுறுத்தினர்.

தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு, பிப்., 18ல், நம்பிக்கை ஓட்டு கோரியது. அதில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க் களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். அப்போது அவர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் தங்கம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

எனவே, 'சட்டசபையில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; சபாநாயகர் ஏற்கவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
 

 

ரூ.10 கோடி


இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன், தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பான வீடியோ காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சியில், 'முதல்வர் பழனிசாமி அரசு
நம்பிக்கை ஓட்டு கோரிய நேரத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஆறு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதிலும், சிலருக்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது' என, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கூறுவது இடம் பெற்றிருந்தது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் இந்தப் பேரம் குறித்து விவாதிக்க வேண்டும் என, மூன்று நாட்களாக, சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை காங்., தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபுபக்கர் ஆகியோர், நேற்று மாலை, கவர்னர் மாளிகை சென்றனர்.

கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, 'எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்துள்ளது உறுதியாகி உள்ளதால், நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.
 

 

சி.பி.ஐ., விசாரணை


கவர்னர் உடனான அரை மணி நேர சந்திப்புக்கு பின் வெளியே வந்த, ஸ்டாலின் கூறியதாவது:
குதிரை பேரத்தில் தான், இந்த ஆட்சி ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது என்பதை, 'டிவி'யில் வெளியான, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் பேட்டிகள் உறுதிப்படுத்தி உள்ளன. சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என, மூன்று நாட்களாக, கோரினோம்; சபாநாயகர் ஏற்காமல், 'ஆதாரம் கொடுங்கள்' என்றார்.

அதை ஏற்று, 'டிவி'யில் ஒளிபரப்பான காட்சிகள் அடங்கிய, 'சிடி'யை, அவரிடம் வழங்கி உள்ளோம். நாளை இந்த பிரச்னையை அவர் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், பேச தயாராக உள்ளோம்.கவர்னரை சந்தித்து நடந்த சம்பவங்களை விளக்கினோம். 'டிவி' காட்சிகள் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு போட வேண்டும்; சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, கோரினோம்.

குதிரை பேரம் மூலம், நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, ஓட்டெடுப்பை ரத்து செய்துவிட்டு, ஆட்சியை கலைக்க வேண்டும் என, வலியுறுத்தினோம்.அவரும் சட்ட ரீதியாக கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்; நடவடிக்கை எடுப்பார் என, நம்புகிறோம். நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளோம்; கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1792891

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • https://www.facebook.com/profile.php?id=100073156405565 சேரமானின் ஆவி வல்ல முனி என்னும் பெயரில்  மீண்டும் வருகிறது .......😀 நான் நலம் பையா. கிரிக்கற்றைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாமல் போட்டியில் பங்குபற்றுவது நல்லதல்ல. கடந்த தடவை போல கேலிக்கூத்தாக்கிவிடும். 😀 எனக்கு அந்த விளையாட்டைக் கண்டாலே பிடிக்காது.  தமித் தேசியம் என்பது வேறு அதை மறுப்பவர் எதிர்ப்பவர் வேறு. இரண்டுக்கும் முடிசிச்சுப் போடக்கூடாது. மறுப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களை கடந்து போகும் துணிவு இருந்தால் மறுக்கலாம். அல்லது மௌனமாக இருப்பது தான் சிறந்தது.
  • தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்! மின்னம்பலம்2021-10-20 தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தேசிய மொழியான இந்தியை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை சுட்டிக் காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல... நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்று தான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தனியார் உணவு வினியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘‘ இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை. தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும். ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணி இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தனிச் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாட்டை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தால்,‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். அதேபோல், 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை தவிர்த்த பிற பணிகள் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் இடை நிலைப் பணிகளில் 50% இடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் மொழி சார்ந்து அவமதிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.   https://minnambalam.com/politics/2021/10/20/17/pmk-ramadoss-says-job-should-be-allocate-to-only-tamil-people
  • மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ மின்னம்பலம்2021-10-20 மதிமுகவின் தலைமை கழக செயலாளராக  அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று பலர் மதிமுகவில் வலியுறுத்தி வந்த நிலையில்,  ‘வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த  தான், தனது கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும்’ என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார். ஆனால் மாவட்டச் செயலாளர்களின் தொடர் வற்புறுத்தல்களை அடுத்து  இதுகுறித்து விவாதிக்க இன்று (அக்டோபர் 20)  மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மாசெக்கள், அரசியல் ஆய்வு மையக் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ. இந்த கூட்டத்தின் முடிவில், ‘துரை வைகோ மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மதிமுகவின் சட்டப்படி இந்த பதவியில் அவரை நியமிக்க எனக்கு அதிகாரம் இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 106  பேர்களில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்” என்று அறிவித்தார் வைகோ. இன்று (அக்டோபர் 20) காலை 7 மணி பதிப்பில், துரை வைகோவுக்கு என்ன பதவி? இன்று மதிமுக மாசெக்கள் கூட்டம்  என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்,  “இளைஞரணிச் செயலாளராக துரை வைகோவை நியமிக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இளைஞரணி என்றால் அது கட்சியின் துணை அமைப்பாகிவிடும். எனவே ‘பேரன்ட் பாடி’எனப்படும் தலைமைக் கழகத்திலேயே புதிய பதவியை உருவாக்கி அதில் துரை வைகோவை அமர வைப்பது என்று சிலர் கூறுகிறார்கள். தலைமை நிலைய செயலாளர் போன்ற பதவி மதிமுகவில் உருவாக்கப்படலாம். அல்லது இப்போது இருக்கும் துணைப் பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவிக்கு துரை வைகோ நியமிக்கப்படலாம்”என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படியே துரை வைகோ தலைமை கழக செயலாளராக இன்று மாலை அறிவிக்கப்பட்டிருக்கிறார்.   https://minnambalam.com/politics/2021/10/20/30/mdmk-head-quarters-Secretary-durai-vaiko-elected 
  • நாளைக்கு பையன் ஜேர்மன் தாத்தாவுடன் ஐக்கியமாகச் சாத்தியம் இருக்கு😂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.